நம்முடைய மூளைப்பகுதி எவ்வாறு செயல்படுகிறது

நம்முடைய மூளைப்பகுதி எவ்வாறு செயல்படுகிறது என நமக்கு இதுவரையில் எதுவும் தெரியவில்லை என அழுத்தம் திருத்தமாக பேராசிரியர் பீட்டர் ப்ரம்ஹர்ஸ் தெளிவுபடுத்துகிறார்.

மூளையின் சாம்பல் நிறப்பகுதியின் அடிப்படை நிகழ்வுகளின் சமிக்சைகளைகூட decoding மூலம் நம்மால் இனங்கான முடியவில்லை என்று மேலும் வலியுறுத்துகிறார்.

இவர் Munich-ல் உள்ள Max blank  உயிரியல் வேதியில கழகத்தின இயக்குநராக இருந்து வருகிறார், நம்முடைய மூளைப்பகுதியில் உள்ள சாம்பல் நிற செல்கள் துல்லியமாக எவ்வாறு பணியாற்றுகின்றன என அறிந்துகொள்வதே நமக்கு மிகப்பெரிய வெற்றியாகும் என அறிவிக்கிறார்,

இன்றைய சூழலில் இது சாத்தியமாக உள்ளதா எனில் அதுதான் இல்லை எங்கு ஆரம்பித்தாலும் முட்டுச்சந்து போன்று பாதை முடிவு பெற்றுவிடுகிறதேயொழிய தெளிவு ஏதும் கிடைக்கவில்லை. விஞ்ஞானிகள் தற்பொழுது இந்த ஆரம்ப தடைகளையெல்லாம் கடநது மூளையின் எண்ண அலைகளைப்(Sheer thought) பயன்படுத்தி கணினியில் அடிப்படை செயற்பாடுகளை கட்டுப்படுத்தி இடம் சுட்டியை திரைமுழுவதும நகர்த்தும் செயல் மூலம்  தம்முடைய திறமைகளை நிரூபித்துள்ளனர்

நம்முடைய மூளையில் எந்த பகுதி இதனை செய்கிறது என மனித மூளையும் இலக்க உலகும் ஒத்திசைவு செய்யப்பட்டு அளவிட்டு மின்னனு அமைவிற்கு பதிலீடு செய்து முடிவை அடைந்துள்ளனர்,

இதற்காக பெர்லினில் உள்ள Fraunhoer Computer Architecture and Software Technology  கழகத்தில் 128 சென்சார்கள் பொருத்தப்பட்ட குளிக்கும்போது தலையில் அணியும் தொப்பியை(Bathing cap) போன்ற சாதணத்தை பயன்படுத்தினர். மூளையானது ஒரு கணினியுடன் இடைமுகம் செய்யப்பட்டு(Brain Computer Interface ) மனித எண்ண அலைகளை கணினியை கட்டுப்படுத்தும் கட்டளையாக உருமாற்றுகின்றனர். இதனை 100 மணிநேர கடுமையான பயிற்சிக்கு பிறகு பரிசோதனையின் மூலம் கணினியின் இடம்சுட்டியை இடம்விட்டு சிறிதளவு நகர்த்தினர். இந்த துறையில் இன்றைய கால கட்டத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்து இந்த அமைவை மறு ஆக்கம் (Calibrating) செய்துள்ளனர். மிக முக்கிய அடிப்படை கட்டமைவுசெய்த பிறகு கணித்திரையினை  மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு பராமரித்து  எண்ண அலைகளை(Sheer thought) பயன்படுத்தி இடம்சுட்டியை அங்கும் இங்கும் மிகச்சுலபமாக நகர்த்துகின்றனர். ஏன் Shower cap போன்ற ஒளிப்பட விளையாட்டுகளை கூட எண்ண அலைகள் மூலம் இடம்சுட்டியை நகர்த்தி விளையாடுகின்றனர்.

தற்போது ஆரம்ப மின்சமிக்சைகளை மாற்றும் அளவு இவ்வாறானஅமைவால் பத்துமடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. படித்தறியும் செயலை இயக்கத்திற்கு மாற்றியமைக்கும் வழியை காண்பதுதான் அடுத்த தடையாகும். இப்போது கணினி புரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட வழியில் நாம் சிந்திக்க வேண்டும் என்பது  தேவையில்லாததாகிறது. அல்கரிதம்களை உருவாக்கி இதன் மூலம் பல்வேறு வகையான எண்ண அலைகளின் அமைப்பின் அர்த்தம் என்னவென்று கணினி தெரிந்து கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.

இந்தShowercap சாதனம்  நொடிக்கு 1000 மடங்கு வேகத்தில் மூளை பகுதியிலிருந்து மின்னழுத்த எலக்ட்ரான்கள் வழியாக சமிக்சைகள் பெறப்படுகிறது. இந்த மின்னழுத்தம் கணினிக்கு கடத்தப்பட்டு ஒரு சில நொடிகளில் மிகச்சிறு சமிக்சையாகத்தான் திரும்பப் பெறப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில் இடம்சுட்டியை நகர்த்துவதற்கு மட்டுமல்லாமல் கண்சிமிட்டுதல், சுவாசித்தல், தசைகளின் பிற இயக்கங்கள் போன்ற தானாகவே நடைபெறும் உயிர்ச்செயல்களை மூளை எவ்வாறு செயல்படுத்துகிறது என புரிந்து கொள்வதற்காக நூற்றுக்கு மேற்பட்ட சென்சார்களின் வழியாக விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

நரம்பியல் ஆய்வாளர்கள் செயற்கை அறிவு தேற்றத்தை நடைமுறைப் படுத்தும்போது கிடைக்கும் சமிக்கைகளை புரிந்துக்கொள்வதற்கு நரம்பின் இயற்கை வலைப்பின்னல் அடிப்படையில் செயல்படுத்துகின்றனர் உதாரணமாக இந்த சாதனங்களின் மூலம் வலதுகை, இடதுகை இயக்கங்களுக்கான நகர்வு சமிக்சைகளை ஒருங்கிணைக்க முடியும். அதன் பிறகு  இரண்டு கைகளை பயன்படுத்தி விசைப்பலகையில் 20 நிமிடத்திற்கு தட்டச்சு செய்வதை EEG  என்ற தரவு அடுக்கும் சாதனத்திலிருந்து செயலியை பயன்படுத்தி இடதுகை வலதுகை சமிக்சைக்கு ஏற்றவாறு இந்த தகவல்கள்சேகரிக்கப்பட்டு மேலும் செயல்பட பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. இந்த அளவிடுகள் மூலம் எவ்வாறு தசைகள்அடிப்படை சமிக்சைக்கு எற்றவாறு  செயல்படுகிறது என தெரிந்து கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் மூளையானது எந்த ஒரு தசையின் இயக்கத்திற்கும் 1/2 நொடி முன்பாகவே இயற்கையாக சமிக்கையை உற்பத்தி செய்வதன் மூலம் இடதுகையால் அல்லது வலதுகையால் எதனை இயக்குவது என முடிவு செய்து செயல்படுத்த முற்படுகிறது என அறிந்து கொண்டனர். இந்த வரைப்படங்களிலிருந்து அனைத்து சமிக்கைகளும் செரிபரல் கார்டக்ஸ் பகுதி வழியாக தான் கடத்துப்படுகிறது என்றும் இவைகளே நம் எண்ண அலைகளின் அடிப்படையாகும் எனவும் அறிந்து கொண்டனர். எண்ண அலைகளுக்குள் செல்வதற்கும் வரையரை உள்ளன. உதாரணமாக  தொலைபேசி எண்களை எண்ணுவதாக கொள்வோம். இந்த செயலுக்காக முளையில் ஒரு சமிக்சைகூட நம்மால் காண முடியவில்லை. இதனை மறறொரு செயல்முறை மூலம் வெற்றிகொள்ளப்பட்டது,  பல இசைக்குறியீடுகள். தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் மற்றசாதாரணமானவர்கள் முன்பும் இசைக்கப்பட்டன. எதிர்பார்த்தவாறு தொழிற்முறை இசைக்கலைஞர்கள் தங்களின் பயிற்சியாலும், அனுபவத்தாலும்  இந்த இசைக்குறியீடுகள் பெரிய அல்லது சிறிய அளவீடு என அங்கீகரித்தனர். நன்றாக செய்தனர். இருந்தபோதிலும் மூளையில உள்ள எண்ண அலைகள் வேறு ஒரு முடிவை அளித்தன. தொழில்முறை இசைக்கலைஞர்களைவிட சாதாரணமானவர்கள் இசைக்குறியீடுகளை மிகச்சிறப்பாக புரிந்துக்கொண்டு செயல்பட்டனர், இதனடிப்படையில் பார்க்கும்போது மூளையை பற்றியும் எண்ண அலைகள் பற்றியும் மேலும் அறிய வேண்டியது நிறைய உள்ளன.

மனிதனையும் கணினியும் ஊடாடும் தன்மையில் உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து மூளையின் மின் அசைவுகளின் தன்மையை மிகவேகமாக அறிந்துக் கொண்டனர், Mug shot என்பது பழைய முறையைவிட கணினி உருவ அங்ககீரித்தலில் பத்து மடங்கு கூடுதலாக பதிவாகிறது. இந்த பயன்பாட்டை பயன்படுத்தி விமான நிலையத்தில X-கதிர் மூலம் பொருட்கள் பரிசோதிக்கும் பணியை செய்ய முடியும். ஏதேனும் வித்தியாசமாக மனிதமூளை தெரிந்து கொண்டவுடன் மின்அசைவை தூண்டுகிறது.உடன் பெட்டியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனசரிபார்க்கமுடியும் , இது கணினி இடைமுக செயல் திட்டத்தின் கணினி விளையாட்டுகளில மிகசிறப்பாக செயல்படுகிறது. சிலின் பள்ளத்தாக்கில் இதற்கான தொடர்புடைய சாதனங்களை உருவாக்கி ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதே அடிப்படையில் EEG புரிந்து கொள்ளும் தலைக்கவசத்தை குழந்தைகளுக¢கு மருத்துவர்கள் கவன சிதறல் மற்றும் மற்ற நரம்பியல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். பேராசிரியர் முல்லர் இந்த ஙிசிமி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வியாபார கணினி விளையாட்டிற்காக பயன்படுத்துவதால் கணினியுடன் மனித மூளை ஊடாடுவது பற்றிய ஒன்றும் அறிந்து கொள்ள இயலாது அரைகுறையாக முடிந்துவிடும் என அறிவுறுத்துகிறார்.

மற்றொரு வகையில் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக செய்யப்படும் செயல்களுக்கு ரோபாட்டை கட்டுப்படுத்தும் செயல் திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஙிசிமி-யில் எண்ண அலைகள் கையை இயக்குகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட ரோபாட்டும் அப்படியே பின்பற்றி செயல்படுகிறது. இந்த அமைவில் எண்ண அலைகள் ரோபோட்டின் கட்டளைகளை கட்டுப்படுத்துகிறது.  முந்தைய குழாய் அமைவின் எலக்ட்ரான் மூலம் மூளையின் செயல்களை சார்ந்த புல உருவ அமைவை பயன்படுத்தி வருடும் இயந்திரத்தின் மூலம் நோயாளியின் மூளையை வருடுவது போன்று இங்கு நரம்பு இயக்கங்கள் அளவிடுவதற்கு பதிலாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டங்கள் கண்காணிக்கப்படுகிறது. எப்படியாயினும் இந்த அமைவு கையாளத்தக்க அளவிற்கு சிறியதாக உள்ளது.

முளையின் சமிக்சையின்படி கை நகர்ந்த இரண்டு நொடிகளுக்கு பிறகே ரோபாட்டின் கை நகருவதாக அனுபவம் காட்டுகிறது.இந்த அசிமோவை பயன்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளில் தானியங்கி உற்பத்திகளில் அதிகளவு செயல்களை கட்டுப்படுத்த முடியும் என பிஷீஸீபீணீ நிறுவனம் நம்புகிறது. ஆம் உண்மையில் நம்முடைய மனதில் உள்ள எண்ண அலைகளை வைத்தே நாம் பயனம் செய்யும் வாகனத்தை இயக்குவதற்கான செயலை செய்ய முடியும். இது மட்டுமல்லாது  இயக்க நேரத்தில் ஓட்டுபவர் சோர்வடைந்தால் இதன் மூலம் வாகனத்தை கைகளால் இயக்குவதற்கு பதிலாக எண்ண அலைகள் மூலம் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியும்.

நடப்பில் இருக்கும் Bathing cap  ஆனது ஒவ்வொரு முறையும் ஆய்வுசெய்யும்முன் தலைமுடியிலிருந்து Conductivity gel  முழுவதையும் சுத்தமாக்கியபிறகே பயன்படுத்த முடிகிறது. ஆனால் base ball cap-ல் இவ்வாறு செய்ய தேவையில்லை. இந்த shower Cap லிருந்து அடுத்த மாற்றுவழியாக நரம்பியல் துறையில் இப்போது மைக்ரோ சிப்பை மூளைப்பகுதியில் பதியன் செய்து அதன் மூலம் இந்த ஆய்வை செய்கின்றனர்.

25 வயது மாத்யூ நாகலே என்பவர் ஒரு நாற்காலி மீது அமைதியாக உட்கார வைக்கப்பட்டார். அவருடைய தலையின் மேல் தோலுடன் விரல் போன்ற துளைஅமைப்பின் கம்பி வழியாக இணைக்கப்பட்டது. அவருக்கு பக்கத்தில் ரோபாட் கை வைக்கப்பட்டிருந்தது. நான்கு சதுர மில்லிமீட்டர் சிப்புடன் 100க்கு மேற்பட்ட கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பானது இவருடைய மூளையின் கார்டக்ஸ் பகுதியுடன் கிரேனியத்தின் சிறிய துளை வழியாக இணைக்கப்பட்டு பத்திரமாக உட்காரும்படி அமைக்கப்பட்டது. மூளையின் நுழைவாயில் Brain gate  எனப்படும் இந்த கார்டக்ஸ் பகுதியில் சிறிய மோட்டார் வைத்து இயக்குவது போன்ற வன்பொருள் அமைப்பு குழுவான விரல் நகர்த்தும் செயல்பாடுகளுக்கு பதிலாக தடையற்ற மின்னியல் பரவும் தொடர்பு வழிமுறைபயன்படுத்தப்படுகிறது இவர் தன்னுடைய எண்ண அலைகளின் வலிமையால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரோபாட் கையை நகர்த்த முயன்று வெற்றிபெற்றுள்ளார். மூளை செயல்கள் ணிணிநி அடிப்படையில் இடைமுகம் செய்வதால் எந்த ஒரு பயனும் கிடைக்காததுடன் மூளைப்பகுதியும்பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அல்லது எந்த ஒரு பயனும் இல்லாத மூளைப்பகுதி பாதிக்கப்படும். மூளை சமிக்கைகளை படம் உருவம் தொழில்நுட்பத்தைவிட பேராசிரியர் பீட்டர் பிரம்ஹர்ஸ் மனித மூளைக்கும் கணினி இயக்க முறையை இணைக்கும் அடிப்படை இணைப்பை செல்தடமாக ஏற்படுத்தியுள்ளார்.இது ஙிசிமி-ன் நடைமுறை விளைவை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது.  மூளையின் சிறிய பகுதியின் சராசரி மதிப்பை சேகரிக்கும்போது உண்மையில் கண்ணுக்கு புலப்படாத சமிக்சைகளை கடத்தப்படுகிறது. மூளையின் செயல்பாடுகளுக்கு இணையான செயல்பாடுகளை ஒரு எலியினுடைய மூளையின் ஹிப்போ காம்பஸ் பகுதியில் சிறிய அடுக்கு எவ்வாறு செயற்படுகிது என்பதை செயல்முறை பயற்சியின்போது அறியப்பட்டது. அப்போது ஒருசெயலுக்கான தகவல் நிரந்தரமாக மூளையின் பகுதியில் பாதுகாப்பதற்கு முன்பு தற்காலிகமாக இந்த பகுதியில் தேக்கப்படுகிறது.  தரவுகளின் செயல்முறைகள் இந்த ஹிப்போகாம்பஸ் பகுதியில் தான் நடைபெறுகிறது என நம்பப்படுகிறது. இதுவே மனித மூளையின் செயலை அறிந்து கொள்ள உதவும் அடிப்படை திறவு கோளாகும்.

உருவப்படங்கள் மிக மெதுவான இயக்கத்தில் திரையில் மில்லி நொடிக்குள் என்ன நடைபெறுகிறது என காட்டுகின்றன. இவைகளை மூளையின் குறிப்பிட்ட பகுதியில் மின் சமிக்சையின் அறிகுறியாகும். பயன்படுத்தப்பட்ட எலியின் மூளை பகுதியில் நரம்பு செல்ஒன்றின் ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 16000க்கும் மேற்பட்ட டிரான்ஸிட்டர்கள் கோவையாக செல்லுக்குள் கட்டமைக்கப்பட்டது. இது அருகில் ஏற்படும் சமிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவுகிறது. செல்களின் சமிக்சைகளை அளவிட மட்டுமல்லாது தெரிவு செய்யப்பட்ட செயல்களை தூண்டும் அமைப்பாகவும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியின் திசுவை இக்கட்டளை வழிப்புள்ளியில் தனியாகஇயக்க முயலும்போது இருவேறு அமைவுகளை அடைவதற்கு சிலிகானின் எல்க்டரான் மின் சுமையை எடுத்து செல்லும் அமைப்பாகிறது. உயிருள்ள திரவு செல்களின் உள்பகுதியில் அயான் மின் சுமையை கடத்தும் பணியை செய்கிறது,இவ்வாறாக  நரம்பு செல்லுடன் சிப்பினை தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி கொண்டனர். இதே வேளையில் இருபுறமும் சமிக்கைகளை கடத்துகின்ற infineonஆல் நரம்புசிப்பு(neurochip) செயலை தூண்டுகின்ற உயிரிய இயற்பியல் தன்மையின் அடிப்படையில் அடுத்த படிநிலையாக உருவாக்கப்படுகிறது.,இப்போது மூளை அடுக்குகள் மற்றும் தொடர்புடைய உயிருள்ள திரவு செல் ஆகியவை பற்றிய ஆய்வு மிகத்தீவிரமாக இருந்தாலும் ஒரு ஆச்சரிய தகுந்த நடைமுறையை தெரிவிக்கின்றனர்.அதுதான் தகவல்களின் செயல்பாடுகள் மூளைப்பகுதியில் தனிப்பட்ட செல் அல்லது குழுவிற்குள் ஏற்படுகிறதா? என்ற கேள்வியாகும்,

அருகிலிருக்கும் திசுக்கள் உடனிணைந்து செயல்படுகிறதா அல்லது அதுவும் தன்னுடைய தனிப்பட்ட செயலை மட்டும் செய்கிறதா போன்ற பல கேள்விகளுக்கு விடைகான வேண்டிய சவால்கள் பல நம்முன் உள்ளன. இதற்கான பரிசோதனை நிகழ்ச்சிகள் சோர்வடைய செய்ய கூடியவை ஆனால் திட்டமிட்டவாறு தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான சாதனங்கள் நமக்கு இப்போது கிடைக்கின்றன என்பதே இப்போது ஒரு நல்ல செய்தியாகும்.

கணினியுடன் கம்பி வழியாக மூளை பகுதியை இணைப்பதால் உயிரியலின் அடிப்படை செயல்களை காண்பதற்கான இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை பயன்படுத்தி ஆய்வாளர்கள் வெவ்வேறு பகுதிகளின் பதில் செயல் என்னவாக இருக்கிறது என அறிந்து கொள்ள நரம்புசிப்பு(neuro chip) தூண்டிவிடுகின்றனர். மேலும் அதன் விளைவு என்னவாக இருக்கும் என அறிந்து கொண்டுள்ளார்கள். உதாரணமாக சந்தையில் வியாபார நிமித்தமாக ஒரு மருந்தை வெளியிடுவதற்கு முன்பு அந்த மருந்தின் தன்மை மூளையில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என நிரூபிக்க முயலும் ஆய்வாகும். ஆனால் இதில் சவால்கள் பல இருந்த போதும் செயற்கை கைகளால் இயக்கத்தை கட்டுப்படுத்த இந்த நியூரோசிப்பால் முடியும் என நிரூபித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் கண்ணால் காணும் காட்சிகளை மூளைக்கு  ரெடினா பகுதியை தூண்டிவிடப்பட்டு மின் சமிக்கைகளை எவ்வாறு ஒளி காட்சிகளாக கடத்துகிறது என அறிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதன் முதற்படியாக செயற்கையாக ரெடினா உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒளிப்பட காட்சிகளின் சமிக்சைகளை இலக்க முறை கணினிக்கு பதிலாக நியூரோ கணினிக்கு மனித மூளை செயல்படுவதை போன்று உருவாக்கப்பட்டு வருகிறது, இது க்வாண்டம் கணினியை விட மிக வேகமானது. இந்த ஆய்வுகளில் மனித மூளைக்கு இணையாக கணினியை மாற்றும் யோசனை ஏதும் இல்லை ஆயினும் தொழில்நுட்ப அளவில் அதனை ஒத்த Imitation  அளவில் உருவாக்கப்படுகிறது. இது இன்னும் அடுத்த 50 ஆண்டுகளில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கணினியின் அடுத்த தலைமுறை நியூரோ கணினி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நகைச்சுவை படக்கதை

நகைச்சுவை படக்கதை

படத்துடன் கூடிய நகைச்சுவை (comics ) புத்தகங்கள் அனைத்தும் அச்சிட்டவுடன் மிக விறுவிறுப்பாகவும் அதிகமாகவும் விற்பனை ஆக கூடியவை ஆகும். இவ்வகையான இணைய பக்கங்கள் (web comics ) கூட அனைவரும் மிக விருப்பமாக பார்க்க கூடியவை ஆகும்.

இந்த Web comics  முதன் முதலில் 1985ஆம் வருடம் இலக்க (Digital ) முறையில் வெளியிடப்பட்டு இன்று அசைவூட்டம் (animation) த்துடன்கூடிய படக்கதையாக King Blastit ALL (www.comicmation.com) என்பன போன்ற இணைய தளங்களாக வளர்ந்துள்ளது. புதியவர்களுக்கும் இவ்வாறான படக்கதைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டிட www.damonk.com என்பன போன்ற இணைய தளங்கள் உள்ளன.

toon disney போன்ற தொலைகாட்சிகளில் அசைவூட்டு நகைச்சுவை படக்கதைகள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவையாகவும் இருக்கின்றன

இந்த வகை நேரடியான web comicsகளை உங்கள் கணினியில் (DSP) இறக்குமதி செய்து கையில் எடுத்த செல்லக்கூடிய வகையில் இசை, உருவப்படம், விளையாட்டு போன்றவைகளாக உருமாற்றம் செய்து இவைகளை பயன்படுத்தலாம்.

இதனை இறக்குமதி செய்து உங்கள் கணினி நிறுவுவதற்காக

1)HTTrack www.httrack.com

2)Fast stone உருவக்காட்சி www.faststone.com

3)PSP sync பயன்பாடு ,IPSP www.ipsp.kaisakura.com அல்லது PSPwave www.nullriver.com/pspwave ஆகிய மூன்று மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. முதலிரண்டும் இலவசமாக இறக்குமதி செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மூன்றாவது பணம் கொடுத்து வாங்க வேண்டும் ஆயினும் இது இல்லாமலேயே கூட சமாளிக்க முடியும்.

HTTrack என்பது  offline ல் உலாவுவதற்கு பயன்படும் கருவியாகும். இதனுடைய இணையதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் நகலெடுத்து நம்முடைய இயக்ககத்தில் offline  காட்சியாக காண பயன்படுத்தி கொள்ளலாம். இது இணைய பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக உலாவி மூலம் தேடிப்பிடித்து கண்ணாடி போன்று பிரதிபலிக்க செய்கிறது.

மேலும் இது இப்போது பார்த்து கொண்டிருக்கும் பக்கத்துடன் ஏற்கனவே பார்த்த பக்கங்களையும் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்கிறது. இதன் மூலம் MP3, Zip போன்ற கோப்புகளையும் நகலெடுக்க முடியும்.

இரண்டாவதாக உள்ள மென்பொருள் விண்டோ அடிப்படையில் உருவத்தை ACD see போன்று காட்சியளிக்கிறது. உருவம் மற்றும் JPEG வடிவமைப்பையும் மாறுதல் செய்யவும் பயன்படுகிறது.

மூன்றாவதாக உள்ள மென்பொருள் DVD,RSPMP4 வடிவமைப்பாக encode செய்ய பயன்படுகிறது.

பெரும்பாலான நேரடி நகைச்சுவையுடன் படக்கதைகள் உருவங்களின் அடிப்படையான கோப்புகளாகும். முதலில் இவைகளை மொத்தமாக சம்பந்தப்பட்ட இணைய தளத்திலிருந்து நகலெடுத்து பின்னர் JPEG  வடிவமைப்பாக மாறுதல் செய்ய வேண்டும். அதன் பிறகு இவைகள் இறக்குமதி செய்ய வேண்டும்.

HTTrackஇடைமுகம் : இதனை இயக்கும்போது இரண்டு பலகங்கள் உள்ளன. இடப்பக்கம் நம்முடைய கணனியின் இயக்ககம் ஆகும். வலப்பக்கம் தேவையான இணையபக்கத்திலிருந்து நகலெடுக்க பயன்படும் வித்தகராகும் (wizard). இதில் உள்ள Next  என்ற பொத்தானை சொடுக்குக

படம் – 1

பின்னர் தோன்றும் பெட்டியில் உங்கள் செயல்திட்டத்திற்கு Skpsp என்றவாறு பெயரிடுக. செயல்திட்டத்தின் வகையாக Psp comics என உள்ளீடு செய்க. இதனை நம்முடைய கணினியின் base petty  என்ற இயக்ககத்தில் HTTrack நகலெடுக்கும் உருவப்படங்களாக சேமித்திடுக. பின்னர் Next  என்ற பொத்தானை சொடுக்குக. உடன் தோன்றும் பெட்டியில் உள்ள Action  என்பதில்  Download web site(s)  என்றும் நாம் நகலெடுக்கும் இணைய தளத்தின் URL  முகவரியையும் உள்ளீடு செய்து Next என்ற பொத்தானை சொடுக்குக.

இந்த பொருள் முழுவதும் தேடி உலாவியபிறகு தோன்றும் பெட்டியில் Set option  என்பதை சொடுக்குக. பின்னர் தோன்றும் பெட்டியில் Scan rules  என்ற பட்டி அட்டவணையை தெரிவு செய்க. உடன் தோன்றும் திரையில் gif, bmp, jpg போன்ற கோப்புகளை scan  செய்வதற்கான தேர்வு செய் பெட்டியை தெரிவு (tick) செய்க.

பின்னர் தோன்றும் பெட்டியில் உள்ள பட்டி அட்டவணையில் limits  என்பதை தெரிவு செய்க உடன் தோன்றும் திரையில் maximum mirroring depth என்பதில் 20 என்றும் maximum external depth  என்பதற்கு 3 என்றும் max transfer rate  என்பதற்கு 25000 என்றும் max connection/server  என்பதற்கு 10 என்றும் உள்ளீடு செய்க. அதன்பிறகு பட்டி அட்டவணையில் link என்பதை தெரிவு செய்க. Get non-Html files related to a link என்ற இரண்டாவது வாய்ப்பை இணைய பக்கத்தில் இருக்கும் அனைத்து உருவங்களையும் நகலெடுக்கும் செயலை உறுதி செய்வதற்காக தெரிவு செய்க.

பின்னர் build  என்ற பொத்தானை சொடுக்குக. உடன் Html in web/html, image/others in web/images  என்றவாறு  local structure  தட்டச்சு செய்து அமைத்திடுங்கள். உடன் இந்த பகுதியில் அனைத்து உருவப்படங்களும் சேகரித்து வைக்கப்படும்.

அதன் பின்னர் experts only என்ற பொத்தானை சொடுக்குக. தெரியும் திரையில் primary scan rule என்பதில்  store all files  என்றும் travel mode என்பதில்  can both go up & down  என்றும் global travel mode என்பதில்  stay in the same address   என்றும்  உள்ளீடு செய்க.

பின்னர் தோன்றும் திரையில் donot connect to providers  என்பதை தெரிவு செய்க. இதனால் இந்த HTTrack  இயங்க ஆரம்பிக்கும்பின்னர் Finish  பொத்தானை சொடுக்குக. உடன்  HTTrack  மென்பொருளை இணைய தளத்தில் உருவங்களை நகலெடுக்க ஆரம்பிக்கும். ஒவ்வொரு URL இணைப்பை மீண்டும் வழங்காது ஆனால் இதிலிருந்து artifact  இறக்குமதி செய்கிறது. நமக்கு உருவப்படங்கள் மட்டுமே தேவையென்பதால் அவைகளை மட்டும் தெரிவு செய்து பெரிய கோப்புகளில் உள்ள தேவையற்றவைகளை தவிர்த்துவிடுங்கள். இவைகளையும் சேர்த்து இறக்குமதி செய்யும்போது அதிக நேரத்தை எடுத்து கொள்கிறது. மேலும் இறக்குதி வேகத்தையும் குறைக்கிறது.

அதன் பின்னர் இறக்குமதியான அனைத்து உருவப்படங்களையும் ஒரே கோப்பகத்தில் (Folders ) சேகரித்து கொள்க.

PSP  ஆனது jpeg வடிவமைப்பை மட்டுமே ஏற்று கொள்கிறது. ஆனால் நாம் இறக்குமதி செய்த உருவப்படங்கள் gif, png, bmp  போன்ற வடிவமைப்பில் இருக்கின்றன. இவைகளை Jpeg யாக உருமாறற்ம் செய்ய fast stone image viewer (Fiv)  என்ற இரண்டாவது மென்பொருள் பயன்படுகிறது.

நாம் இறக்குமதி செய்த அனைத்து உருவப்படங்களையும் தெரிவு செய்து F3 விசையை தட்டுக. உடன் Batch image convert/renew wizard தோன்றும். இதில்output format என்பதற்கு  Jpeg images (*.jpg)என்பதை தெரிவு செய்க. அடுத்து தோன்றும் திரையில் Use advanced options  என்பதை தெரிவு செய்க. பின்னர் advanced option  என்பதை சொடுக்குக. பின்னர் resize  பொத்தானை சொடுக்குக. Percentage என்பதில் 50% என தெரிவு செய்க.

படம் – 2

பின்னர் start  பொத்தானை சொடுக்குக. உடன் கணிப்பொறியின் திரைக்கு ஏற்றவாறு உருவப்படத்தை jpeg  கோப்பாக உருமாற்றம் செய்து முடிவாக உருவங்கள் PSP  இறக்குமதி செய்ய தயாராக இருக்கின்றன.

IPSP அல்லது PSP wave  போன்ற மென்பொருள்களை பயன்படுத்தி இவ்வாறு இறக்குமதி செய்த கோப்புகளை sync செய்ய வேண்டும். இந்த வகையான மென்பொருள் இல்லாதிருந்தாலும் கவலையில்லை. /psp/photos/web comics/ என்றவாறு மடிப்பகத்தை உருவாக்கி அதில் இந்த உருவப்படங்களை நகலெடுத்து இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்து கொள்க. இறுதியாக இந்த கோப்பினை திறந்து பாருங்கள் web comics உருவப்படங்கள் மிக அழகாக திரையில் காட்சியளிக்கும்.

அ முதல் ஃ வரை கணிப்பொறி (புதியவர்களுக்கு)

அ முதல் ஃ வரை கணிப்பொறி (புதியவர்களுக்கு)

நம்முடைய வாழ்நாளின் மிகப்பெரிய விஞ்ஞான கண்டுப்பிடிப்பான கணினியின் துணையுடன் தகவல் தொழில்நுட்ப சகாப்ததிற்குள் தற்போது நாம்  நுழைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த கணினி கண்டுப்பிடிப்பின் ஆரம்பத்தில் பெரியவீடு போன்று மிகப்பெரிய அளவில் இருந்தது. படிப்படியாக குறைந்து கொண்டே வந்து இன்று கைக்கு அடக்கமாக கைக்கணினி (palm Computer) என்ற அளவிற்கு குறைந்துவிட்டது.

விற்பனை விலை கூட கைக்கு எட்டாத உயரத்தில் இருந்து இன்று சாதாரண மனிதர்கள் கூட ரூ.10000/-க்குள் ஒருகணினியை வாங்கி பயன்படுத்தலாம் என்ற நிலை வந்துவிட்டது.

இது கூட ஆரம்பத்தில் ஆய்வகத்தில் மட்டும்தான்பயன்பட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் இன்று நம்முடைய வீட்டு உபயோகத்திற்கு கூட பயன்படுத்தலாம் என்ற நிலையாகிவிட்டது.

இதனை இன்று இரயில்வே முன்பதிவு செய்ய, கல்வி நிறுவனத்தில் மாணாக்கரின் மதிப்பெண் பட்டியல் தயார் செய்ய, வானிலையை ஆய்வு செய்ய, திரைப்படங்கள் தயாரிக்க, மருத்துமனையில் நோயாளிகளை ஆய்வு செய்ய, ஏன் சாதாரண மளிகை கடை பட்டியல் அச்சிட என எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இவ்வாறு எண்ணற்ற வழிகளில் பயன்படும் இந்த கணினி என்றால்தான் என்ன? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

மிக விரைவாகவும், துல்லியமாகவும் உள்ளீடு செய்யும் தரவுகளை கையாளுகின்ற மின்னனு இயந்திரத்தை பொதுவாககணினி என அழைப்பர்.

இது நாம் உள்ளீடு செய்கின்ற தரவுகளை ஏற்று, தேக்கி வைத்து கொண்டு, அவைகளை ஆய்வு செய்து நம்முடைய கட்டளைக்கேற்ப அறிக்கையாக வெளியீடு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சாதாரண கணிப்பியை(Calculator)விட மிக விரைவாக செயல்படுகிறது. இது நகலிடுதல், நகர்த்துதல், ஒப்பீடு செய்தல், எண்கள் அல்லாத செயற்பாடுகள் செய்தல், எண்கள் மற்றும் குறிகளை கையாளுதல் போன்று பல்வேறு செயல்களை செய்கிறது. இந்த செயல்களை செயற்படுத்த கணினிக்குள் உள்ளீடு செய்யப்படும் கட்டளை வரிகளுக்கு நிரல்தொடர் (Program) என அழைப்பர்.

இந்த கணினியை 4 வகையாக உள்ளன:

1)      நுன்கணினி (Micro Computer) : மிகவும் மலிவானது, வீடுகள், பள்ளிகள், கடைகள் போன்ற இடங்களில் பயன்படுகிறது. PC-AT,IBM-PC ஆகியவை இந்த வகையை சார்ந்தது.

2) சிறிய கணினி (mini computer) : முதல் வகையைவிட விலை சிறிது அதிகம் இதன் வேகம் அதிகமாகும். சிறிய மேசை அளவிலிருந்து, சிறிய கோப்பு அடுக்கும் அலமாறி அளவிற்கு இருக்கின்றன. ஒரே சமயத்தில் பல்வேறு பயனாளர் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது. இரயில்வே முன்பதிவு செய்ய, இணைய தொடர்பு கொள்ள பயன்படுகிறது. எ.க IBM RISC SYSTEM BOX

3) முதன்மை பொறியமைவு கணினி(Mainframe Computer) : இது பேரளவு உற்பத்தி நிறுவனத்தில் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தி செயற்படுத்த பயன்படுகிறது. மிக விரைவாகவும், மிகத்திறமையுடன் செயல்படுகிறது, மின அதிக விலையில் கிடைக்கின்றது. எ.க IBM 30xx  வரிசை

4) மீப்பெருங்கணினி (Super Computer) : மிகப்பெரிய, மிக அதிவேகமான செயல்பாடுடையது மிக அதிக விலை உயர்ந்தது. அசாதாரண கனிப்பு சக்தி தேவைப்படும் நிறுவனங்களுக்கு பயன்படுவது. ஒரு கோடிகணக்கான செயல்களை ஒரு சில கணினி செய்கிறது. ஆய்வகங்களில் பயன்பகிறது. எ.க Param Super Computer

கணினியின் அமைப்பு

பொதுவாக கணினியின் அமைப்பை மூன்று முக்கிய வகையாக பிரிக்கலாம்.

உள்ளீட்டு பகுதி : இது கணினிக்குள் தரவுகளை உள்ளீடு செய்ய பயன்படும் பகுதி ஆகும் . நாம் உள்ளீடு செய்கின்ற தரவுகைள கணினிக்கு புரிகின்ற இயந்திர மொழியில் உருமாற்றம் செய்து உள் அனுப்புகின்ற பொறுப்பை இது வகிக்கின்றது.

மத்திய செயலகம் : இவ்வாறு உள்ளீட்டு சாதனங்கள் மூலம் பெறப்படும் தரவுகளை சேமித்து வைக்கவும், கணக்கீடுகள் செய்யவும், ஒப்பீடு செய்யவும் அதன் விளைவான இறுதி தகவல்களை வெளியீட்டு சாதனத்திற்கு அனுப்பி வைக்கவும் இது செய்கின்றது. இந்த பகுதி மேலும் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது

ALU     :     உள் வருகின்ற தரவுகளை அலசி ஆராய்ந்து கணக்கீடு செய்ய பயன்படுகிறது.

நினைவகம் :     தரவுகளும், நிரல் தொடர்களும் செயல்படுத்தும் முன்பு சேமித்து வைக்க பயன்படுகிறது. இது தனித்தனியாக, பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் எண்ணிடப்பட்டு குறிப்பிட்ட வீட்டில் வசிக்கும் நபரை அடையாளம் காண முகவரியை கையாள்வது போன்று இதுசெயல்படுகிறது.

கட்டுப்பாட்டு பகுதி    :     உள்/வெளி செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி உள் வருகின்ற தரவுகளை எங்கு எவ்வாறு சேமிப்பது, அதனை எவ்வாறு கையாள்வது, கணக்கீடு செய்வது, எவ்வாறு வெளியீடு செய்வது என்போன்ற செயல்களை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது.

வெளியீட்டு பகுதி :  கணினியின் இறுதி விளைவுகளான அறிக்கைகளை காண்பதற்கு மட்டும் எனில் திரையும்,   தொட்டுணர்வதற்கு ஏற்றவாறு எனில் வெளியிட அச்சுப்பொறியும் வெளியீட்டு சாதனங்கள் ஆகும்.

கணினியின் அமைப்பை இரண்டு வகையாக பிரிப்பர்:

1) வன்பொருள் (Hardware) :    பருநிலையில் உள்ள கைகளால் தொட்டு உணரக்கூடிய பொருட்கள் (Key board,monitor,CPU)

2)   மென்பொருள் (Software) : இவைகளை கைகளால் தொட்டு உணர முடியாது. ஆனால் இது இல்லாமல் கணினியின் இயக்கமே இல்லை எனலாம். இது ஒருகணினி என்ன செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என கட்டளை இடுகிறது. வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த ஒரு அமைப்பே கணினியாகும்.

1) அமைப்பு மென்பொருள் (System software) : கணிப்பொறியின் உள்ளீட்டு, வெளியீட்டு அமைப்பை கையாள பயன்படுகிறது. நம்முடைய கட்டளையை கணிப்பொறிக்கு புரியும்படி மொழி மாற்றம் செய்கின்றது. மொத்தத்தில் இது ஒரு கட்டிட மேற்பார்வையாளர் போன்று யார் யாருக்கு என்னென்ன வேலை கொடுத்து பணியை முடிக்க உத்திரவு இடுவது, பணியை சரியாக செய்கிறார்களா என மேற்பார்வையிடுவது. இறுதி விளைவு சரியாக இருக்கின்றதா என சரிபார்ப்பது போன்று ஆகும்.

2)பயன்பாட்டு மென்பொருள் (application Software) : நிறுவன கணக்கு வழக்குகளை கையாளும் எக்செல், கடிதம் எழுத பயன்படும் வேர்டு, படம் வரைய பயன்படும் பெயின்ட், இணையத்தில் உலாவ பயன்படும் எக்ஸ்ப்லோரர் போன்ற பயன்பாடுகள் இந்த வகையாகும்.

3)     பயன்பாட்டு பொருள் (Utilities) : அடுக்குதல், வரிசைப்படுத்துதல், இணைத்தல், வடிவமைத்தல் போன்றவைகளுக்கு பயன்படும் கருவிகள் இந்த வகையை சேர்ந்தது.

புதிய பாதுகாப்பான திறன் வாய்ந்த மறையாக்க வழிமுறைகள்

புதிய பாதுகாப்பான திறன் வாய்ந்த மறையாக்க வழிமுறைகள்

வரலாற்று காலந்தொட்டு அரசர்கள் தங்களுடைய போர்தளபதிகளுக்கு அனுப்பும் செய்திகளை எதிரிகளால் அபகரித்து கொள்ளாமல் இருப்பதற்காக அவற்றை சங்கேத சொற்களாக அனுப்பிவைத்தனர்.

இவ்வாறு போர்ப்படைகளுக்கு அனுப்பப்படும் செய்தியானது போரை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதன் உத்திகளாகஇருக்கும். இந்த போர்ப்படைகளுக்கான செய்திகளை அனுப்புவதற்கு மட்டுமன்றி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் அனுப்புகின்ற செய்திகளைகூட மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு சங்கேத சொற்களுடன் கலந்து அனுப்பும் பழக்கம் இப்போது கணினியுகத்திலும் மிகவும் அதிகரித்துள்ளது.  உலகமெங்கும் தன்னுடைய வலைகரங்களால் இணைத்துள்ள இணையத்தில் தங்களுடைய செய்திகளை,தரவுகளை, கோப்புகளை அனுப்பும்போது  பெறுபவரை தவிர  மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாதவாறு மிகவும் பாதுகாப்பாக அனுப்புவதையே மறையாக்கல் (encryption) என்பர், முதலில் அதிக அளவில் இந்த வழக்கத்தில் புழங்கும் சொற்களுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.

Crypto graphy :ஒரு செய்தியை சங்தேகுறிகளுடன் கலந்து அனுப்பிவைப்பார்கள், அதனை பெறுபவர் அந்த சங்கேத சொற்களை நீக்கிவிட்டு உன்மையான செய்தி என்னவென அறிந்து கொள்வதே மறைகுறியீட்டியல் (Crypto graphy )என்பர்.

Encryptian:  ஒரு கோப்பினை மறைகுறியீடாக்கி அதனுடன் ஒரு நுழைவுச் சொல்லையும் சேர்த்து அனுப்பினால் பெறுபவர் அதற்கான சரியான நுழைவு சொல்லை வழங்கினால் மட்டுமே அந்த கோப்பினை திறந்து  அவரால் செய்தியை படித்து அறியமுடியும்.

Cipher : அனுப்பப்படும் தகவல்கள்,செய்திகள் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவாறு மாற்றியமைத்தல் Transposition, பதிலாக மாற்றி யமைத்தால்subsitution என இரண்டுவகைகளில் அனுப்பபடும் உதாரனமாக முதலாம் வகையில் குப்பன் என்பதை பன்குப் என இடமாற்றியமைப்பது  Transpositionஆகும். இரண்டாம் வகையில்  கு=அ : ப்=க் : ப=க: ன்=ம்: என எழுத்துகளை ஒவ்வொன்றிற்கும் வேறொரு எழுத்தினை ஒதுக்கீடு செய்து அக்கம் என அமைத்துஅனுப்புவது. இதில் எந்தெந்த எழுத்து எதுஎதற்கு பதிலாக இருக்கும் எனஅனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே அறிந்திருப்பார்கள் இதிலிருந்து குப்பன் என்ற செய்தியை அறிந்துகொள்வது subsitution என்பர்,

Algorithem:  இது தருக்கமுறை கணிதத்தில் அதிகஅளவில் பயன்படுகிறது.  மிகமுக்கியமாக கணினியில் இதன் பயன்பாடு அதிகமாகும், “வானத்தில் மேகம் இருக்கும்போது  குளிர்ந்த காற்று வீசினால் மழை பொழிய ஆரம்பிக்கும்” என்றவாறு குறிப்பிட்ட நிபந்தனை சரியாக இருந்தால் மட்டும் குறிப்பிட்ட செயல் நடைபெறும் இல்லை எனில் நடைபெறாது என்பன போன்றதாகும்.

Key Stream: எண் ,எழுத்து ,சிறப்பு குறியீடுகள் ஆகியவை செய்திகளுடன் random  ஆக கலந்து அனுப்பப்படும், பெறுபவர் இவற்றை பிரித்து உண்மை செய்தியை அறிந்துகொள்வார்.

Brute force Attack:  எண் ,எழுத்து ,சிறப்பு குறியீடுகளுடன் கலந்து கிடைக்கப்பெறுகின்ற செய்திகளை பல்வேறு வழிகளில் முரட்டுத்தனமாக முயன்று இரகசிய நுழைவு சொற்களை உடைத்து இறுதியாக சரியான செய்தியை அறிவது ஆகும். இவ்வாறான மறைக்குறியீடாக்கல் செயல்கள் முன்பெல்லாம்  Enigma machine என்றவாறான இயந்திரங்களால் செயல்படுத்த பட்டது.  கணினியின் வருகைக்கு பிறகு மிகவலுவான சிக்கலான ஆனால் பாதுகாப்பான மறைகுறியீடாக்கல்  வழிமுறைபின்பற்றபடுகிறது.

மறைகுறியீடாக்கலின் வகை   பேரளவில் இதனை 1. ஒழுங்கான திறவுகோள் மறையாக்கல்(Symmetric Key encryption) என்றும்.2. ஒழுங்கற்ற திறவுகோள் மறையாக்கல் Asymmetric Key encryption என்றும் இரண்டு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

சாதாரணமாக உங்கள் நன்பருக்கு ஒரு கடிதத்தை அனுப்பவதாக கொள்வோம்.அவற்றின் செய்திகள் மற்றவர்களால் அறியாதவாறு இருக்க மறைகுறியீடாக்கல் நிரல்தொடர் கொண்டு மறையாக்கம் செய்து அதனுடன் ஒரு கடவுச்சொல் அல்லது திறவுச்சொல் அமைத்து அனுப்புவதாக கொள்வோம்,பெறுகின்ற உங்களது நன்பர் இதனுடைய கடவுச்சொல் அல்லது திறவுச்சொல்லை தெரிந்து வைத்திருப்பார் அதன் மூலம் கோப்பினை திறந்து  செய்தியை படித்தறிவார்

Symmetric Key encryption: இதில் அனுப்புபவரும் பெறுபவரும் ஒரே திறவுகோளை வைத்திருப்பார்கள் அல்லது இந்த திறவுகோளை அறிந்து கொள்ளும் சங்தேக செற்களை அறிந்து வைத்திருப்பார்கள் இந்த வழிமுறையை தனித்திறவுகோள் வழி முறை என்பார்கள். இதனை மேலும்1. Stream cipher 2.Block cipher. என இரு வகையாக பிரித்துள்ளனர்.

1.Steam Cipher செய்திகளை தொடர்ச்சியான சங்கேத எண்கள் மற்றும் எழுத்துகளால் கலந்து தரவுகள் தனித்தனி பிட்டுகளாக அனுப்படும். பெறுபவர் இவ்வாறு கலந்திருக்கும் தொடர்ச்சியான சங்கேத எண்களை பிரித்தெடுத்து செய்திகளைமட்டும் அறிந்துகொள்வார்.

இதில் self synchronizing stream cipher என்பது முக்கிய வகையாகும்.  இதில் தெடர்ச்சியான தனித்தனி பிட்களால் ஆனால் ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்குமாறு செய்திகளை அனுப்புவர்,இந்நிலையில் ஒரு பிட் corruption ஆகிவிட்டால் செய்தி முழுவதும் தவறாக டிகிரிப்ஷன் ஆகிவிடும்.

இந்த Steam Cipher-ல்   synchronizing Stream cipher என்பது மற்றொரு வகையாகும்,இதில் ஒவ்வொருபிட்டும் மற்றொன்றை சார்ந்திருக்காது ஆனால் இதில் ஒரே மாதிரியான key Stream பயன்படுகிறது.

Block cipher: இது Steam Cipher -க்கு மறுதலையாகும் இதில் தரவுகள் தனித்தனியான பிட்களுக்கு பதிலாக குழுக்களாக Batches ஆக பிரிக்கப்பட்டு அனுப்படும், பெறுபவர் ஒவ்வொருகுழுவாக மாற்றம் செய்து முழு செய்தியையும் அறிந்து கொள்வார்.இதன் வகைகள் பின்வருமாறு.

மின்னனுகுறியீட்டுபுத்தகம்(Electronic Code Book (ECB)): இது மிக சாதரணமாக இரகசிய திறவுகோளால் உரையை குழுவாக மறையாக்கம் செய்து அனுப்புவார்கள்.  இந்த வகையில் அனுப்படும் செய்திகளை  prute forceஆல் எளிதாக  அறிந்து கொள்வர்.

வளைவுக்குழுசங்கிலிதொடர்(Cyper Blog Chaining(CBC)): இதில் தனித்தனி குழுவாக மறையாக்கங்கள் அடுத்தடுத்து சங்கிலி போன்று தொடர்ச்சியாக இணைந்து முதல் குழுவின்  முடிவில் அடுத்த குழுவின் ஆரம்பம் இணைக்கப்பட்டு அனுப்படும்

வெளியீடுமீள்பெறுதல்(Output Feed Back(OFB):இதுவும் தனித்தனி பிட்களாக மறையாக்கம் செய்யப்பட்டிருக்கும் ஆனால் ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்காது.

தரவுமறையாக்க செந்தரம்(Date Encryption Standard(DES)இதில் மறையாக்கம் செய்யப்படும் செய்தி குழுக்கள் குறிப்பிட்ட அளவு 64 பிட் அல்லது 128 பிட் போன்று 64பிட்டின் மடங்குகளாக பிரிக்கப்பட்டு அனுப்படும்.

Flow fish இதில் 32 பிட் முதல் 448 பிட்டுகள் வரை இருக்கும்.  ஆனால் இது 64 பிட் கொண்ட DES க்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

Tofish: இது முந்தையதின் அடுத்த தலைமுறை மறையாக்க வழிமுறையாகும் இதில் 128 பிட்முதல் 250 பிட் வரையிருக்கும் இது பாதுகாப்பானது நெகிழ்வு தன்மையுடையது ஆகும்.

Asymmetric Key encryption :  இது ஒரு பொதுதிறவுகோள் வழி முறையாகும் இதில் இரண்டு தனித்தனி திறவுகோள்கள் உள்ளன. ஒன்று பொதுதிறவுகோள் பொதுவாக அனைவருக்கும் வழங்கப்படிருக்கும் மேலும் நிறுவனங்களின் தரவு தளங்கள் செந்தர மறையாக்கமாக இருக்கும்.  ஆனால் தனித்திறவுகோள்கள் பெறுபவரிடம் மட்டும் இருக்கும்.

இதன்படி செய்திகளை பொதுதிறவுகோளால் மறையாக்கம் செய்து அனுப்பப்படும் ,பெறுபவர் தான் வைத்திருக்கும் தனித்திறவுகோளால் டீகிரிப்ஷன் செய்து அந்த செய்தியை அறிந்து கொள்வார் இதில் செய்திகள் மிக பாதுகாப்பாக இருக்கும்.  பொதுவாக பொதுதிறவுகோளால் மறையாக்கம் செய்து செந்தர இலக்க கையெழுத்துடன் ஆவணங்களை அனுப்புவதை இந்தவகையாககுறிப்பிடலாம் இந்த ஆவணத்தினை பொதுதிறவுகோளிற்கு பொறுத்தமாக பெறுபவரின் தனித்திறவுகோள் அமைந்தால் மட்டுமே செய்திகளை ஏற்றுக்கொள்வார்கள்.

Hash function: இது ஒருவழிப்பாதை செயலாகும் இதனை மீண்டும் பழைய நிலைக்கு டீகிரிப்ட் செய்ய முடியாது. இது ஒரு அல்காரித்த்தை பயன்படுத்தி கோப்பினை உருவாக்குவதாகும்.  குறிப்பட்டவகை உரைகளை அல்காரிதம் மூலம் மறையாக்கம் செய்யப்படும்,பின்னர் டிஜிட்டல் ஃபிங்கர் பிரின்ட் பயன்படுத்தி கோப்பினை மறையாக்கம் செய்வார் இதனை வேறு ஒரு வழிமுறை பயன்படுத்தி டீகிரிப்ட் செய்து பெறுவர்.  ஏனெனில் இதன்மூலம் ஒரே மாதிரியான செயல்பாடு இருக்காது, இதனை message diagest Algorithem என அழைப்பார்கள்.

இவ்வாறான புதிய திறன் வாய்ந்த மறையாக்க வழிமுறைகள் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நேரத்தையும் உழைப்பையும் சேமிக்கின்றது.

விண்டோ எக்ஸ்பியை விண்டோ விஸ்டாவை போன்று தோன்றும்படி உருவாக்குதல்

விண்டோ எக்ஸ்பியை விண்டோ விஸ்டாவை போன்று தோன்றும்படி உருவாக்குதல்

புதிய வரவான விண்டோ விஸ்டாவிற்கு பெரும்பாலானவர்கள் மாறிவிட்டனர்ஆனாலும் ஒரு சிலர் பழகிய எக்ஸ்பியையும் விட முடியவில்லை விண்டோ விஸ்டாவை வாங்குவதற்கும் பணம் செலவிட மனம்வரவில்லை என தத்தளிப்பா£¢கள்,எல்லாம் சரி பார்¢ப்பவர்¢கள் இவர்கள்¢ பயன்படுத்துவதை விஸ்டா என நம்பும்படி செய்தாலாவது நன்றாக இருக்குமே, அதற்காக கீழ்காணும் படிமுறைகைள பின்பற்றி எக்ஸ்பியை விஸ்டாவை போன்றுதோன்றும்படி உருமாற்றமசெய்து கொள்ளுங்கள்.

1. இறக்குமதி செய்தல் முதலில் விஸ்டாவில் உள்ள பக்கப்பட்டை (side bar)  எக்ஸபியில்¢ உருவாக்குவோம்.அதற்காக http://www.desktop.sidebar.com <http://www.desktop.sidebar.com&gt; என்ற இணைய தளத்திற்கு சென்று இதற்கான கடைசியாக நிகழ்நிலை படுத்தப்பட்ட (sidebarb116.exe) -11MB அளவு உள்ள இலவச மென்பொருளை இதன் கோப்பினை இறக்குமதி செய்து (30 நிமிடம் ஆகும்)¢ கொள்ளுங்கள். பின்னர் இந்த கோப்பினை இருமுறை சொடுக்குக. உடன்இதனை உங்களின் கணிª¢பாறியில் நிறுவ ஆரம்பிக்கும்போது தோன்றும் உரையாடல் பெட்டியில்(dialog box) எங்கு நிறுவ வேண்டும் என முடிவு செய்து  next பொத்தானை சொடுக்குக. பின்னா¢ next, next, முடிவாக close  பொத்தானை சொடுக்கி நிறுவும் பணி நிறைவு செய்யுங்கள்.

2. சாளரத்திரையில் Start => All program => Desktop side bar => desktop side bar என்று தெரிவு செய்து சொடுக்கினால்  விஸ்டாவில் உள்ள பக்க பட்டை போன்று திரையில் தோன்றும். இவ்வாறு நாமாக இதனை கொண்டு வருவதற்கு பதிலாக கணினி இயங்க ஆரம்பிக்கும்போது தானாகவே கொண்டுவருவதற்காக திரையில் உள்ள Desktop side bar  என்ற இதன் உருவபொம்மையை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும்திரையில் Notification area பகுதியில் விருப்பத்தை தெரிவு செய்க.உடன் தோன்றும் உரையாடல் பெட்டியின்¢ தலைப்பில் உள்ள General section  என்பதை தெரிவு செய்க. அதன்பின்னர் தோன்றும் பகுதியில்  “run this process when window starts” என்பதை தெரிவு செய்க. பின்னா¢ கீழே உள்ள apply  பொத்தானை சொடுக்குக. அதன்பின்னர் show icon in notifications area என்ற பெட்டி தெரிவு (tick)  செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க.

3. தோற்றத்தை சரி செய்தல் : உரையாடல் பெட்டியில் skin என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியை (drop down menu)  விரிய செய்து அதில் தேவையானதை தெரிவு செய்து  preview என்ற பொத்தானை சொடுக்குக. எந்த பக்கத்தில் இந்த பட்டைகள் இருக்க வேண்டும் திரையின் பின்புல நிறங்கள் நன்கு தெரிகிறதா என்பது போன்ற விவரங்களை  சரிபார்¢த்து தெரிவு செய்து கொள்க.

4. அமைப்பை அமைவு செய்க : திரையில் நிறைய எண்ணிக்கையிலான பலகம் இயல்பு நிலையில் இருக்கின்ற நிலையில் தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்து தேவையில்லாதவற்றை  தவிர்¢க்க அவைகளை தெரிவு செய்து remove pane என்பதை சொடுக்குக. உடன் தேவையற்றவைகள் திரையிலிருந்து  நீக்கப்பட்டுவிடும். திரையில் இல்லாத தேவையானதை மட்டும் புதியதாக தோன்ற செய்ய பக்கப்பட்டையின் (திரையின் தலைப்பில் பச்சை நிறத்தில் உள்ளதை) சொடுக்குக. பின்னா¢ add panel என்ற வாய்ப்பை தெரிவு செய்து தயார்¢ நிலையில் இருக்கும் வாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து add என்ற பொத்தானை சொடுக்குக.

5. கூடுதல் பலகத்தை உருவாக்க : மேலும் கூடுதலாக பலகத்தை உருவாக்குவதற்கான  link more panel என்பதை சொடுக்குக. திரையின் மேல் பகுதியில் தோன்றும் show menu  என்பதில் plug in  என்பதை தெரிவு செய்து நாம் விரும்பும் பலகத்தை பட்டியலிருந்து அதற்கான தலைப்பை தேடி தெரிவு செய்து இறக்குமதி செய்து நிறுவிக் கொள்ளுங்கள். இதனை இடம்சுட்டியால் செரிவுசெய்து சுட்டியை இருமுறை சொடுக்கியவடன்  தானாகவே இந்த பலகங்கள் நிறுவப்பட்டு திரையில் தோன்ற ஆரம்பிக்கும்.

6. வாடிக்கையாளா¢ விரும்பியவாறு பலகத்தை உருவாக்க முன்கட்டப்பட்ட பலகங்களிலிருந்து தெரிவு செய்வதற்காக பலகத்தின் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. உடன் தோன்றும் கட்டளைபட்டியில் பண்பியல்புகள் properties என்பதை தெரிவு செய்க. பின்னர் தோன்றும் உரையாடல் பெட்டியில் general என்பதை சொடுக்குக. அதன்பின்னர் தோன்றும் உரையாடல் பெட்டியில் image folder அல்லது websites எனப்தை தெரிவு செய்து பிரதிபலிக்க செய்க. இவைகள் எவ்வளவு நேரத்திற்கு தோன்ற வேண்டும் என்ற வாய்ப்பை தெரிவு செய்க. Desktop தாவியை(tab) தெரிவு செய்து சொடுக்குக. Web pages குறிப்பிட்ட இடைவெளியில் தோன்ற செய்க.

7. செய்தி பெட்டி பலகம் : அதே வழிமுறையில் தோன்றும் உரையாடல்பெட்டியில் channel தாவியை(tab) பயன்படுத்துக. நடப்பு Rss Feeds பதிப்பித்தல் (edit) செய்வதற்காக. ஒவ்வொரு feedலும் எந்தெந்த தலைப்பில், எத்தனை  செய்திகள் தோன்ற வேண்டும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை இவைகள் நிகழ்நிலை(update) படுத்த வேண்டும்  என்பதை சரி செய்து கொள்க. எவ்வளவு நேரத்திற்கு எத்தனை தலைப்பு செய்திகள் எவ்வாறு தோன்ற வேண்டும் என்ற கூடுதல் வாய்ப்புகளையும் தெரிவு செய்து சரி செய்து கொள்க.

8. ஒருங்கிணைப்பு தாவி( Integration tab): யை தெரிவு செய்து அதில் integrate with internet explorer என்பதை தெரிவு (tick) செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்க. அவ்வப்போது Rss feed பலகத்தை பார்¢வையிடும்போதெல்லாம் “subscriber in desktop side bar” என்பது News Room  பகுதியில் சோ¢த்து கொள்ளும்படி தெரிவு (tick) செய்து கொள்க.

9. செயல்பாடு பட்டையை (Task bar) செயலிழக்க செய்வதற்காக: செயல்பாடு பட்டையின் மீது இடம்சுட்டியை கொணடு சென்று சொடுக்குக.பின்னர் Task bar ஐ பிடித்து கீழே திரையிலிருந்து மறையும்வரை இழுத்து சென்று  விடு¢க. New panel என்ற உரையாடல் பெட்டியில் system tray tool bar என்பதை தெரிவு செய்து add பொத்தானை சொடுக்குக

10.     திரையில் நிறைய பலகங்கள் இருப்பதை வரிசையாக அடுக்குவதற்காக. New panel உரையாடல் பெட்டியில் ஒன்றான group panel ஐ தெரிவு செய்து add பொத்தானை சொடுக்குக. பிறகு இவ்வாறு செய்ய விரும்பும் பலகங்களை ஒன்றன்பின் ஒன்றாக பிடித்து இழுத்து வந்து இதில் விடுக.

11. பெரும்பாலான பலகங்களுக்கு பக்க  பட்டை side bar என்ற வீட்டில் குடியிருந்தாலும் ஒரு சிலபலகங்கள் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக மிதக்க விரும்பும் அவ்வாறான பலகத்தை தெரிவு செய்த இடம்ட்டியை வலப்புறம் சொடுக்குக. உடன் தோன்றும் வாய்ப்புகளில் undock என்பதை தெரிவு செய்க. உடன் side barயிலிருந்து விலகி தனியாக திரையில் இந்த பலகம் மிதக்க ஆரம்பிக்கும்.

12. இவ்வாறு கட்டவிழ்த்து undock விட்ட பலகம் திரையின் மேல் பகுதியில் ஒளி மட்டும் ஊடு¢ருவக்கூடியதாக இருப்பதால் இவற்றில் உள்ள எழுத்துகளை படித்தறிய சிரமப்படுவோம் அதனை தவிர்க்க அதன்மீது இடம்சுட்டியை  கொண்டு சென்றவுடன் படித்தறிய கூடிய அளவிற்கு தெரிய ஆரம்பிக்கும். மேற்புறஇடதுமுலையில் சிவப்புநிறஉருவ பொம்மையை சொடுக்குக. உடன் தோன்றும் வாய்ப்புகளில் normal என்பதை தெரிவு செய்து உருவத்தின் அளவை சரி செய்து தேவையானஇடத்தில் இழுத்து சென்று விடுக.

13. பச்சை நிற side bar பொத்தானை சொடுக்குக. தோன்றும் வாய்ப்புகளில் appearance tab ஐ தெரிவு செய்க. அதில் கீழிறங்கு பட்டி மூலம் skin என்பதை தெரிவு செய்க. பின்னர்  edit பொத்தானை சொடுக்குக. தேவையானவாறு வண்ணம் எழுத்தின் அளவு, உருவத்தின் அளவு ஆகியவற்றை மாற்றி அமைத்து கொள்க.

நீட்டிக்கப்பட்ட வியாபார அறிக்கையின் மொழிExtensible Business Reporting Language (XBRL)

நீட்டிக்கப்பட்ட வியாபார அறிக்கையின் மொழி இதனை ஆங்கிலத்தில் Extensible Business Reporting Language (XBRL) என்றும் அழைப்பார்கள். இது ஒரு நீட்டிக்கப்பட்ட XML ஆகும்.XBRL என்பது நிறுவனத்தகவல்களை வரையறுப்பதற்காகவும் தரவுகளை ஒப்பிடுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும்.  www என்ற கூட்டமைப்பினர் உலகளாவிய இணைய தளத்தில் செந்தரப்படுத்துவதற்காக பிப்ரவரி 1998 இல் இது நிறுவபட்டு இயங்கி வருகின்றது.HTML ஐ உருவாக்கிய அதே கூட்டமைப்புதான் இதனையும் உருவாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்..

பெரும்பாலான வியாபார நிறுவனங்களால் வெளியிடப்படுகின்ற ஆண்டறிக்கைகள், நிதி நிலை அறிக்கைகள் நிலையானதொரு படிவத்தில் வெளியிடுகின்றன. இவைகளில் வழக்கொழிந்து போன முழுமையற்ற, துல்லியமற்ற தரவுகளையும் தகவல்களையும் இட்டு நிரப்புகின்றனர்.மேலும் இவைகள் செலவு அதிகமான கடினமான பண்புடைய அறிக்கை அமைப்பாகும். இதனை பார்க்கின்ற பயனாளர்கள்(stakeholders) அனைவரும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் அன்று அதனால் அவரவரும் தத்தமது கற்பனைக்கு தகுந்தவாறு இந்த அறிக்கையை பார்த்து புரிந்து கொள்வார்கள். அதனால் இவர்கள் தவறான முடிவெடுக்கும் நிலை ஏற்படுகிறது.

உதாரணமாக ஒரு மிகப்பெரிய நிறுவனம் தம்முடைய ஆண்டறிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் ஓய்வூதிய திட்டதிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என மிகச்சிறிய குறிப்பை கொடுத்துள்ளனர். இந்த குறிப்பை பார்ப்பவர்கள் யாரும் இதன் விவரத்தை உணர மாட்டார்கள்.

இந்த அறிக்கைகளை இப்போதைய கணிப்பொறி யுகத்தில் எக்செல் விரிதாளில் அல்லது மற்ற கருவிகள் மூலம் அளித்திருக்கின்றோமே என வாதிடுவார்கள்.

தத்தமது நிறுவனத்திலுள்ள மென்பொருள் மூலம் சமர்ப்பிக்கும் இவ்வறிக்கைகள் மற்றொரு மென்பொருளுடன் ஒத்து போகாதவையாகும். அவ்வாறே இவைகளை ஒத்து போகின்றவாறு செய்யவேண்டுமெனில்  இதற்காக மற்றொரு மறு திறவுகோலை உருவாக்க வேண்டும். அவ்வாறே செய்தாலும் அவை செலவு மிக்கதும், பிழை ஏற்படுவதும் ,தகவல்கள் ஏதேனும் விடுபட வாய்ப்புள்ளதும் ஆன செயலாகும்.

இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொள்முதல் , பொருள் பட்டியல் பரிமாற்றம், பணப்பரிவர்தனை போன்ற நடவடிக்கைகளில் இரு நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான மென்பொருள் இல்லாதபோது தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் அந்நிறுவனங்களின் நிதி நிலை தகவல்களும் ஐயத்திற்கு இடமாகிறது. அதுமட்டுமல்லாது ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ள முடியாத வெவ்வேறு மென் பொருளாக இருந்தால் பிரச்சனை இன்னும் பூதாகரமாகின்றது இதனை தவிர்ப்பதற்காக வெவ்வேறு நிறுவனங்களின் தகவல் தொடர்பிற்கும் நிதிநிலை தகவல்களை பரிமாறி கொள்வதற்கும் பொதுவானதொரு தகவல்தளம் common platform ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் நடப்பில் உள்ள XML மென்பொருளானது மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே  பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு நிறுவனமும் கூடுதலாக இடைவெளியை நிரப்புதவற்கான மென்பொருள் ஒன்றை நிறுவ வேண்டியுள்ளது. இது செலவு மிக்கதும் செந்தரமற்றதும் ஆகும்.

பயனாளர்களுக்கு மிகத்திறனுடனும், மிக விரைவாகவும் அதேசமயம் பார்த்தவுடன் அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதும்ஆனஒரு நிறுவனத்தின் அறிக்கை அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு அனைவரும் உணரக்கூடிய வழிமுறையாக இணையதளம் மூலம் வழங்க கூடிய அறிக்கையே இப்போதைய தேவையாகும்.

அவ்வாறான இணையதளம் மூலம் உருவாக்கப்பட்ட மொழிதான் இந்த XBRL ஆகும்.

கணிப்பொறி அ-வில்                கணிப்பொறி ஆ-வில்

பயன்படுத்தும் மென்பொருட்கள்        பயன்படுத்தும் மென்பொருட்கள்

Tally Tally
SAP SAP
ERP ERP
People Soft People Soft
Oracle Oracle

படத்தில் உள்ள மென்பொருட்கள் தற்போதைய கால கட்டத்தின் நடப்பில் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துபவையாகும். இந்த மென்பொருட்கள் ஒரு நிறுவனம் போன்றே மற்றொன்று வைத்திருக்காது. அதனால் ஒரே பொருளை உற்பத்தி செய்கின்ற இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை வைத்து ஒப்பிட்டு பார்த்து அதன் அடிப்படையில் இந்நிறுவனங்களில்  மேலும் முதலீடு செய்வதா வேண்டாமா என முடிவு செய்வது மிக சிரமமான பணியாகும்.

Tally XB

R

L

Tally
SAP SAP
ERP ERP
People Soft People Soft
Excel Excel

படத்தில் உள்ளவாறு XBRL ஐ பயன்படுத்தினால் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கனின் நிதி நிலை அறிக்கைகளை ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு செய்வது மிக சுலபமாக இருக்கும். இது பொதுவானதொரு கட்டமைவை கொண்டு வியாபார நிறுவனங்களின் அறிக்கைகளை பிரிதிபலிக்கின்றது

இதனை செந்தரப்படுத்துவதற்கு (Standardize) உலக அளவில் ஒரு கூட்டமைப்பை (Consortium) உருவாக்கியுள்ளனர். இதன் இணையதள முகவரி http://www.xbrl.org// ஆகும்.இதில் உலகில் உள்ள அனைத்து கணக்கியல் அமைப்புகளும் உறுப்பினராக உள்ளனர். தனிப்பட்ட வியாபார நிறுவனங்கள் கூட இதில் உறுப்பினராக உள்ளனர்.

அதே போன்று இந்திய அளவிலும் இதன் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இதன் இணையதள முகவரி. http://www.xbrl_india.org ஆகும். Tally solution மற்றும் Satyam Computer ஆகிய இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட இதில் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பு உலகளாவிய செந்தரப்படுத்தப்பட்ட அறிக்கைகளின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த XBRL இல் மூன்று உறுப்புகள் மிக முக்கியமானவையாகும்.

1)    குறிப்பீடு(specification)இதில் இலக்கணம்(Syntax),பெயர் இடைவெளி(name space),அமைப்பு முறை(Schema) ஆகியவை அடங்கியது.

2) அறிவியல் பூர்வ கணக்கியல் பயன்பாடு (taxanomies): இதில் Accounting standard( A.S),Inidan Accounting standard ( I.A.S) போன்றவை அடங்கியது

3) சமூக குழுவினர் (community) : இதில் கணக்கியல் வல்லுநர் (Accounting professional) பயனாளர்கள் (users)  ஆகியோர் அடங்கியது.

அனைத்து நிறுவனங்களும் இந்த XBRL  கூட்டமைப்பு வரையறுத்த பொது மொழியில் தத்மது நிறுவனத்தினுடைய தரவுகளை செந்தரமாக்கி அறிக்கைகள தயாரித்து வெளியிடும்போது சாதாரண பயனாளர்கள் கூட படித்தறிந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளை ஒப்பீடு செய்து நிறுவனங்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.

நிறுவனம் ஏதோ ஓரிடத்தில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் பரந்துபட்டு இருப்பார்கள். இவர்கள் அனைவரும் தாம் முதலீடு செய்த நிறுவனத்தின் நிதி நிலைமை நிறுவனத்தின் உறுதித்தன்மையை இந்த XBRL  கொண்டு மிக சுலபமாக இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளவும்,மேலும் முதலீடு செய்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கவும் முடியும்.

மேலும் இந்த XBRL ஆனது ஒரு பொது தளம் ஆகும். அதனால் இதனை எந்த வகையான கணிப்பொறியாயினும், எந்த மென்பொருளாக இருந்தாலும், பயன்படுத்துவது எளிது. எந்த ஒரு நிறுவனமும் தாம் பயன்படுத்தும் எந்த ஒரு மென்பொருளின் மூலம்  வழங்கும் நிதி நிலை தகவலானதுXBRL வடிவமைப்பில் இருக்கும்போது அப்படியே ஏற்க அனுமதிக்கிறது. இந்த அறிக்கையை படித்தறிய வேறு புதிய திறவு கோலும் தேவையில்லை, வேறு வடிவமைப்பில் மாற்ற வேண்டிய தேவையுமில்லை.

XBRL வடிவமைப்பில் தரவுகள் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தகவல்கள் மற்றொரு நிறுவனத்திற்கு அனுப்பும்போது அல்லது பெறும்போது மனித சக்தியே தேவையில்லாததாகிறது. ஒரு நிறுவனத்தின் கணிப்பொறி உருவாக்கிய இந்த தரவுகள் மற்றொரு நிறுவனத்தின் வேறொரு கணிப்பொறியின் மென்பொருள் மொழி மாற்றியை ஏதும் துணைக்கு பயன்படுத்தாமல் அப்படியே நேரடியாக ஏற்று கொள்கிறது.

கடைசியாக மைக்ரோ சாப்ஃட் நிறுவனம்கூட தமது நிதி நிலை அறிக்கைகளை இந்த XBRL இன் மூலமாகவே சமீபத்தில் வெளியிட்டள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-3 அட்டவணையில் தரவுகளை உள்ளீடு செய்தல்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-3 அட்டவணையில் தரவுகளை உள்ளீடு செய்தல்

தரவுகளானது நெடுவரிசை  கிடைவரிசையில் பிரதிபலிப்பதால் இந்த தரவு தாளானது அட்டவணை அல்லது விரிதாள் போன்றே தோன்றும்.

உருள்பட்டையை கீழாகவோ, மேலாகவோ நகர்த்துவதன் மூலம் திரையில் காணாத பதிவேடுகளை(Records) கிடைவரிசையில் காண முடியும். அவ்வாறே வலதுபுறம் அல்லது இடதுபுறம் உருள்பட்டையை நகர்த்தி காணாத புலங்களை (Fields) நெடுவரிசையில் காண முடியும்.

இந்த தரவு தாளில் மேல்புறம் அல்லது கீழ்புறம், வலப்புறம் அல்லது இடப்புறம் நகர்வதற்கான விசைப்பலகையின் இயக்கத்தைப்பற்றி காண்போம்(அட்டவணை3-1).

தேவையான பகுதி Key stroke
அடுத்த புலம்(Next field) Tab
முந்தைய புலம்  (previous field) Shift Tab
இப்போதைய பதிவேட்டின் முதல் புலம்(first field of current record) Home
இப்போதைய பதிவேட்டின் கடைசி புலம் (last field of current record) End
அடுத்த பதிவேடு(next record) Down Arrow ↓
முந்தைய பதிவேடு(previous record) Up Arrow ↑
முதல் பதிவேட்டின் முதல் புலம்(first field of first record) Ctrl + Home
கடைசி பதிவேட்டின் கடைசி புலம்(last field of last  record) Ctrl + End
ஓரு பக்கம் மேலே செல்ல (scroll up one page) Pgup
ஓரு பக்கம் கீழே செல்ல(scroll down one page) PgDn
குறிப்பிட்ட பதிவேட்டிற்கு செல்ல (go to record number) F5

அட்டவணை3-1

மேலும் வழி நடத்தும் பொத்தானை (Navigation Button)பற்றி இப்போது பார்ப்போம். தரவுதாளின் அடிப்புறத்தில் உள்ள பட்டிக்கு நிலைமைப் பட்டி (Status bar) என்பர். இதில் ஆறு இயக்கு விசை உள்ளன. படம் 1ல்உள்ளவாறு தோன்றும். இயக்குவரிசையில் இடப்புறம் உள்ள இரண்டு பொத்தான்களும், முதல் பதிவேடு,, முந்தைய பதிவேட்டிற்கு செல்வதற்கு உதவுவதாகும்.

வலப்புறம் உள்ள மூன்று பொத்தான்களும் அடுத்த பதிவேடு, கடைசி பதிவேடு,  புதிய பதிவேட்டிற்கு செல்ல உதவுவதாகும்.

பதிவேடு எண்(Record No) குறிப்பிடப்படும் பகுதியில் பதிவேட்டின் எண்ணை குறிப்பிட்டு நுழைவு விசையை (Enter key) தட்டியவுடன் அந்த குறிப்பிட்ட பதிவேட்டினை திரையில் காண முடியும்.


படம் – 1

தரவுத்தாளினை திறக்கும் வழி

கீழ்க்கண்ட படிநிலைகளை பின்பற்றுவதன்முலம் ஓரு தரவுத்தாளை திறக்க முடியும். அக்சஸ் 2000 என்ற சாளரத்தை திறந்து கொள்ளுங்கள். உடன் விரியும்  Getting Started  என்ற சாளரத்தில் தெரியும் Open  என்பதை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தெரியும் கோப்பில் நமக்கு தேவையான கோப்பினை மட்டும் தெரிவு செய்க. பின்னர் தோன்றும் அட்டவணையை தெரிவு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

தரவுகளை ள்ளீடுசெய்தல்

இவ்வாறு திறக்கப்பட்ட தரவுதாளில் முன்பே பதிவுகள் இருப்பின் அனைத்து பதிவேடுகளும் நம்மால் பார்க்க முடியும். முதல் பதிவேட்டில் இடம் சுட்டி பிரதிபலிக்கும். ஆனால் புதியதாக உருவாக்கப்பட்ட அட்டவணைகளில் அதன் கட்டமைப்பு மட்டுமே தோன்றும்.

நாம் உள்ளீடு செய்ய விரும்பும் தகவல்களை முதல் புலத்தில் உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை (Enter) தட்டியவுடன் அடுத்த புலத்திற்கு இடம் சுட்டி செல்லும். அதிலும் அதற்கான தகவல்களை உள்ளீடு செய்து  உள்ளீட்டு விசையை (Enter) தட்டுங்கள். இவ்வாறே நமக்கு தேவையான அனைத்து பதிவேடுகளின் தரவுகளையும் உள்ளீடு செய்யலாம்.

பதிவேடுகளை திருத்துதல்

ஏதாவது தவறாக தகவல்களை உள்ளீடு செய்திருப்பது தெரியவந்தால் உடன் இடம் சுட்டியை மேல்புறம் அல்லது கீழ்புறம், வலப்புறம் அல்லது இடப்புறம் நகரும் சாவியை தட்டி மாற்றம் செய்ய வேண்டிய புலத்தில் இடம் சுட்டியை நிறுத்தி தகவல்களை மாற்றம் செய்யலாம்.

புதிய பதிவேடுகளை சேர்த்தல்

கட்டளை சட்டத்தில்  உள்ள சேர்க்க (Insert) என்பதை தெரிவு செய்தவுடன் படம்-2-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் புதிய பதிவேடு(New Record) என்பதை சொடுக்குக.உடன் புதிய பதிவேடு ஒன்று திரையில் தோன்றும்.

படம் – 2

கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க (Edit) என்பதை தெரிவு செய்யவும். உடன் படம்-3-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Go to  என்பதை தெரிவு செய்க.பின்னர் விரியும் பட்டியில் புதிய பதிவேடு(New Record) என்பதை சொடுக்கியவுடன் புதிய பதிவேடு திரையில் தோன்றும்.

படம் – 3

கடைசி பதிவேட்டில் இடம்சுட்டியை நிறுத்தி கொண்டு கீழ்நோக்கும் அம்புக்குறி விசையை தட்டுவதன் மூலம் புதிய பதிவேட்டிற்கு செல்லலாம்.

படம் – 4

சில நேரங்களில் இப்போது தோன்றும் பதிவேட்டில் மேலும் தகவல்களை உள்ளீடு செய்வதற்கான இடம் பற்றாத நிலையில் நிறைய பதிவேடுகள் உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும் அப்போது கட்டளை சட்டத்தில் பதிவேடு(Record) என்பதை தெரிவு செய்க. உடன் படம்-4-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Data Entry  என்பதை தெரிவு செய்க.

பதிவேடுகளை நீக்குதல்

நீக்கம் செய்ய வேண்டிய பதிவேடுகளை தெரிவு செய்து உங்ப்ங்ற்ங் எனும் விசையை தட்டுக. அல்லது இடம் சுட்டியை பதிவேட்டில் வைத்து கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க (Edit) என்பதை தெரிவு செய்தவுடன் படம்-3-ல் உள்ளவாறு விரியும் பட்டியில்  Delete Record என்பதை தெரிவு செய்க.

படம் – 5

இவ்வாறு செய்யும்போது சிறு உரையாடல் பெட்டியொன்று படம் -5ல்உள்ளவாறு தோன்றும். அதில் தெரிவு செய்த பதிவேட்டினை நீக்கம் செய்ய வேண்டுமா என கேட்கும். yes/ no என்பதில் ஒன்றை தெரிவு செய்க.

நெடுவரிசையை சேர்த்தல், மாற்றுதல், நீக்குதல்

நெடுவரிசையை புதியதாக சேர்ப்பது மாறுதல் செய்வது நீக்குவது போன்ற செயல்களினால் ஒரு அட்டவணையில் வடிவமைப்பே மாறுகிறது. அதனால் இந்த அட்டவணையுடன் தொடர்புடைய வினா, படிவம், அறிக்கை ஆகியவை பாதிக்க ஏதுவாகும். அதனால் நாம் மிகவும் கவனத்துடன்இதனை செய்ய வேண்டும்.

1.     கட்டளை சட்டத்தில் பதிப்பிக்க (Edit) என்பதை தெரிவு செய்து நீக்கம் செய்ய வேண்டிய நெடுவரிசையை தெரிவு செய்தவுடன் படம்-3-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Delete Column  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

2.    கட்டளை சட்டத்தில் சேர்க்க(Insert) என்பதை தெரிவு செய்க உடன் படம்-2-ல் உள்ளவாறு விரியும் பட்டியில்  Column என்பதை தெரிவு செய்து சொடுக்குக.

3.   நெடுவரிசையின் தலைப்பை இடம்சுட்டியால் பிடிக்கவும் சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக.உடன் படம்-6-ல் உள்ளவாறு விரியும் குறுக்குவழி பட்டியில் தோன்றும்  கட்டளைகளில்  Delete Column   என்பதை தெரிவு செய்க.

இவ்வாறு செய்யும்போது சிறு உரையாடல் பெட்டியொன்று படம் -5ல்உள்ளவாறு தோன்றும். அதில் தெரிவு செய்த நெடுவரிசையை  நீக்கம் செய்ய வேண்டுமா என கேட்கும். yes/ no என்பதில் ஒன்றை தெரிவு செய்க.

படம் – 6

பதிவேடுகளை பாதுகாத்தல்

ஓரு பதிவேட்டின் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்தபின்னர்  கடைசி புலத்தில்  இடம்சுட்டியை இருத்திகொண்டு உள்ளீடு விசையை தட்டியவுடன் புதிய பதிவேடு ஒன்று திறக்கும் அப்போது பதிவு செய்த அனைத்து பதிவுகளிலும் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் பதிவுகள் பாதுகாக்கப்பட்டிருக்ம்,  இல்லையெனில் Error  செய்தி பிரதிபலிக்கும்.

தரவுகளின் வகைக்கேற்ப தானாகவே ஐற்புடையதாக்குதல்

தரவுதளம் தானாகவே ஓரு சில வகையான புலங்களில் தரவுகளை உள்ளீடு செய்தவுடன் இவை ஏற்கதகுந்ததா, இல்லையா என சோதித்து ஏற்கதகுந்தது எனில் ஏற்றுக்கொள்ளும். அவ்வாறான தரவுகளின் வகைகள்

1.     எண்கள்

2.    நாள்/நேரம்

3.    ஆம்/இல்லை(Yes/no) ஆகியனவாகும்.

இந்த மூன்று வகையான புலத்தில் வேறு வகையான தரவுகள் உள்ளீடு செய்தவுடன் உரையாடல் பெட்டியொன்று படம்-7-ல் உள்ளவாறு திரையில்  தோன்றும் அதில் இந்த தரவுகள் இந்த புலத்திற்கு ஏற்புடைத்து அன்று (Invalid ) என்ற செய்தியை கூறும்.

படம் – 7

பதிவேடுகளில் குறிப்பிட்ட பதிவை கண்டுபிடித்தல்

1)    கட்டளை சட்டத்தில் உள்ள பதிப்பிக்க (edit) என்பதை தெரிவு செய்தவுடன் படம்-3-ல் உள்ளவாறு தோன்றும் உரையாடல் பெட்டியில் கண்டுபிடி (Find) என்பதை தெரிவு செய்து கண்டுப்பிடிக்கலாம்.

2)    கருவிகள் சட்டத்தில் படம்-8-ல் உள்ளவாறு தோன்றும் இருகண்நோக்கி (binocular) உருவப்படத்தின் மீது இடம் சுட்டியை வைத்து சொடுக்குவதன் மூலம் கண்டுப்பிடிக்கலாம்.

3)      Ctrl+F விசைகளை சேர்த்து தட்டுவதன் மூலம் பதிவேடுகளிலுள்ள குறிப்பிட்ட பதிவினை காண முடியும் இவ்வாறு செய்தவுடன் தோன்றும் உரையாடல் பெட்டியில் அடுத்ததை கண்டுபிடிக்க Find Next  என்பதை தெரிவு செய்தால் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியதை கண்டுபிடித்துவிடும்.

4)     Cancel என்பதை தெரிவு செய்தால் படிவத்தை மூடிவிடும்

ருக்கின்ற பதிவை பதிலீடு செய்தல்

பதிலீடு செய்ய வேண்டிய புலத்தில் இடம் சுட்டியை வைத்து F2 செயலி விசையை தட்டுக. உடன் தோன்றும் பதிவை தேவையானவாறு மாறுதல் செய்க.

படம் – 8

மதிப்பினை பதிலீடு செய்ய :

படம் 3ல் உள்ளவாறு Edit  என்பதை தெரிவு செய்தபின்  தோன்றும் உரையாடல் பெட்டியில் கண்டுபிடி Find  என்பதை தெரிவு செய்க உடன்படம்-8-ல் உள்ளவாறு தோன்றும் Find and Replace என்ற சிறு பெட்டியில் தேவையானதை பதிலீடு செய்து Replace  என்பதை தெரிவு செய்க.பின்னர்Find What என்பதற்கு கண்டுபிடித்து மாற்றம் செய்ய வேண்டியதை உள்ளீடு செய்க. Look in என்பதற்கு அட்டவணையின் பெயரை சொடுக்கவும். Match  முழு புலத்தையும் அல்லது குறிப்பிட்ட பகுதியை மட்டுமா எனக் குறிப்பிடவும். Search என்பதற்கு  All என்பதை குறிப்பிடவும். அந்த குறிப்பிட்ட புலத்தில் உள்ள மதிப்பை என்னவாக மாற்றம் செய்ய விரும்புகிறோமோ அவ்வாறு மாற்றுவதற்கு Replace with என்பதில் ஊள்ளீடு செய்து Replace என்பதை சொடுக்குக மதிப்பை என்னவாக மாற்றம் செய்ய விரும்பினோமோ அவ்வாறே  மாறிவிடும். உடன் படம் -9-ல் உள்ளவாறு தோன்றும் சிறு பெட்டிDo you want to continue?  ஆம் (yes) எனில் தொடரும் இல்லை (No) என்றவுடன் தேடும் பணி முடிந்து விடும்.

Replace All என்பதை தெரிவு செய்தால் மாறுதல் செய்ய வேண்டிய அனைத்து    புலத்தினையும் கண்டுபிடித்து பதிலீடு செய்துவிடும்.

படம் – 9

அவ்வாறு தேடும்போது கிடைக்கவில்லையெனில்படம்-10-ல் உள்ளவாறு நீங்கள் தேடியது கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் தோன்றும் பெட்டியில் okஎன்ற பொத்தானை சொடுக்குக.

படம் – 10

பதிப்பிக்கும் தொழில்நுட்பங்கள்

பதிப்பிக்கும் செயல்கள் தட்டவேண்டிய விசை
சேர்க்கும் புள்ளியை புலத்திற்குள் கொண்டுவர வலது ஆம்புகுறி        →இடது ஆம்புக்குறி←
புதிய மதிப்பை சேர்க்க சேர்க்க வேண்டிய இடத்தை தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை சொடுக்குக
முழு புலத்தையும் தெரிவு செய்ய சார்பு சாவி F2 (அ) இருமுறைஇடம்சுட்டியை சொடுக்குக
இருக்கின்ற மதிப்பை புதிய மதிப்பாக பதிலீடு செய்ய தேவையான புலத்தினை தெரிவு செய்துபுதிய தரவுகளை உள்ளீடு செய்க.
முந்தைய பதிவேட்டில் உள் ள பதிவுகளை  பதிலீடு செய்ய Ctrl + ’ (ஓரு மேற்கோள் குறி) சேர்த்து அழுத்துக.
இப்போதைய மதிப்பை சேர்த்து இயல்பான மதிப்பாக பதிலீடு செய்ய Ctrl + Alt + Space Bar ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
Text Or Memo, புலத்தில் கோட்டினை சேர்க்க Ctrl + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
இப்போதைய பதிவேட்டினை பாதுகாக்க Shift + Enter ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக(அ) அடுத்த பதிவேட்டிற்கு இடம் சுட்டியை நகர்த்துக
இப்போதைய நாளினை சேர்க்க Ctrl + ; (அரைப்புள்ளி) ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
இப்போதைய நேரத்தை சேர்க்க Ctrl + :(முக்கால் புள்ளி)ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
புதிய பதிவை சேர்க்க Ctrl + +(கூடுதல் குறி)ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
தற்போதைய பதிவை நீக்க Ctrl + -(கழித்தல் குறி)ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
இருநிலை மாற்றி மதிப்பு   பொத்தான்சரிபார்க்கும் பட்டி Space Bar விசையை அழுத்துக
மாறுதல் செய்தததை நீக்க Esc விசையை அழுத்துக(அ) Undoபொத்தானை தெரிவு செய்க.

கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு புலத்தினை மாறுதல் செய்ய முடியாது :

1)    தானியங்கி எண் உள்ள புலத்தினை  ((Auto Number Field)) படம் 11ல் உள்ளவாறு  மாறுதல் செய்ய முடியாது

படம் – 11

2)    கணக்கீடு செய்யும் புலம் (Calculated Field)

3)    பூட்டிய (அ) முடக்கப்பட்ட மாற்றம் செய்ய முடியாத புலம் (Locked or disabled)

4)    பல செயல்களில் பயன்படுத்தப்பட்ட பதிவேட்டின் புலம்

முன் செயல் நீக்கும் செயலை பயன்படுத்துதல் :

1)படம் 2ல் உள்ளவாறு விரியும் பட்டியில் உள்ள பதிப்பிக்க (Edit) என்பதை தெரிவு செய்க. விரியும் பட்டியில் முன் செயல் நீக்க முடியாது (Can’t Undo) என்பதை தெரிவு செய்க இதனால் முன்பு செய்த செயலை நீக்கும் வழி தயாராக இருக்காது

2) Undo Typing என்பதை தெரிவு செய்தால் கடைசியாக உள்ளீடு செய்த பதிவுகள் நீக்கப்பட்டிருக்கும்.

3) Edit => Undo saved documents என்பதை தெரிவு செய்தால் Current Field/Record கடைசியாக பதிவு செய்த இப்போதைய புலத்தின் மதிப்பு அல்லது பதிவேட்டின் மதிப்புகள் நீக்கப்படும்.

4) Edit => Undo என்பதை தெரிவு செய்தால்  கடைசியாக பாதுகாக்கப்பட்ட பிறகு மாறுதல் செய்யப்பட்ட பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும்

புலவரிசையை மாறுதல் செய்தல் :

அட்டவணை வடிவமைப்பில் எவ்வாறு புலத்தினை வரிசைபடுத்தினோமோ அவ்வாறே ஓவ்வொரு தரவுதாளும் தோன்றும். அதனை மாறுதல் செய்ய விரும்பினால்

1)    எந்த நெடுவரிசையை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்க

2)    அதன் வரிசையில் இடம் சுட்டியை வைத்து அப்படியே சுட்டியின் பொத்தானை பிடித்து சொடுக்குக. உடன் முழு நெடுவரிசையும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்

3)    மீண்டும்  சுட்டியின் வலதுபுற பொத்தானை  சொடுக்குக. உடன்  சிறு பெட்டியொன்று அம்புக்குறியுடன் கீழே தோன்றும்

4)    அதனை அப்படியே இழுத்து வந்து தேவையான இடத்தில் வைத்து பொத்தானை விடுவிக்க. தேவையான இடத்தில் இப்போது நெடுவரிசை செருகப்பட்டிருக்கும்.

புலத்தின் கலத்தை மாற்றுதல் :

) நெடுவரிசையின் கலத்தை மாற்றுவதற்கு :

1)    மாறுதல் செய்ய வேண்டிய நெடுவரிசைக்கும் மற்ற நெடுவரிசைக்கும் இடையில் இடம் சுட்டியை வைத்துப்பிடிக்கவும்.  சரியான இடத்தில் வைத்ததும்  கோடு ஒன்று தோன்றும்.

2)    அகலத்தை குறைக்க வேண்டுமெனில் இடப்புறமும் அதிகரிக்க வேண்டுமெனில் வலப்புறமும் சுட்டியை பிடித்து இழுத்து சென்று விடவும். (அல்லது)

கட்டளை சட்டத்தில் உள்ள வடிவமைத்தல் Format என்பதை தெரிவு செய்க உடன் படம் 12-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Column width என்பதை தெரிவு செய்க

படம் – 12

உடன் சிறிய பெட்டியொன்று படம் 13ல் உள்ளவாறு தோன்றும். எவ்வளவு அளவு தேவையோ அதை Column width என்பதில் உள்ளீடு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக.

படம் – 13

ஆ) பதிவேட்டின் (கிடைவரிசை) உயரத்தை மாற்றுதல் :

1)    கிடைவரிசையின் முகப்பில் மாறுதல் செய்ய வேண்டிய வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையில் இடம் சுட்டியை வைத்து தோன்றும் சிறிய கோட்டினை தெரிவு செய்து சொடுக்குக.

2)    உயரத்தை குறைக்க வேண்டுமெனில் மேல்பக்கமும் அதிகரிக்க வேண்டுமெனில் கீழ்ப்பக்கமும் சுட்டியை பிடித்து இழுத்து சென்று விடவும். இப்போது தேவையான உயரம் கிடைவரிசையில் நமக்கு கிடைக்கும்.  (ஆல்லது)

தேவையான கிடைவரிசையை தெரிவு செய்து அதன் தலைப்பில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் படம் 12ல் உள்ளவாறு விரியும் குறுக்குவழிபட்டியில் Row Hight என்பதை தெரிவு செய்க.

உடன் படம் 14ல் உள்ளவாறு தோன்றும் பெட்டியில் தேவையான அளவை (Row Hight) என்பதில் உள்ளீடு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக.

படம் – 14

குறுக்கு கோடுகளை பிரதியிடுதல் :

கட்டளை சட்டத்தில் உள்ள Format என்பதை தெரிவு செய்க. உடன் படம் -12-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Data sheet என்பதை தெரிவு செய்க.

உடன் படம் -15-ல் உள்ளவாறு தோன்றும் Data Sheet Formatting என்ற சிறு பட்டியில் எது மாதிரியான குறுக்கு கோடுகள் எந்த இடத்தில் வேண்டுமோ அவ்விடத்தை தெரிவு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக. Cell Effect என்பதில் பட்டையாகவா? உயர்ந்தா? மறைந்தா என்பதிலொன்றை தெரிவு செய்க. Gridlines Shown என்பதில் நெடுவரிசையாகவா? கிடைவரிசையாகவா என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். குறுக்குக் கோடுகளில் தேவையான வண்ணத்தை தெரிவு செய்க. Border and Line Styles என்பதில் தேவையானதை தெரிவு செய்க. Direction என்பதில் இடமிருந்து வலமா? வலமிருந்து இடமா என்பதிலொன்றை தெரிவு  செய்க.

படம் – 15

எழுத்து வகையை மாற்றுதல் :

கட்டளை சட்டத்தில் உள்ள Format என்பதை தெரிவு செய்க. உடன் படம் 12ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் Fonts  என்பதை தெரிவு செய்க.

1)    உடன் Fonts என்ற உரையாடல் பெட்டி படம் 16-ல் உள்ளவாறு தோன்றும் அதில் உள்ள font   என்பதில் தேவையான எழுத்து வகையை தெரிவு செய்க

2)    Font Style என்பதில் Bold என்பதை தெரிவு செய்க

3)    Sizeஎன்பதில் 12 என்பதை தெரிவு செய்க

4)    Ok என்றபொத்தானை சொடுக்குக.

படம் – 16

நெடுவரிசையை மறையசெய்தல் மீண்டும் தோன்ற செய்தல் :

முதலில் மறையவேண்டிய நெடுவரிசையை தெரிவு செய்க.பின்னர் கட்டளைச் சட்டத்தில் உள்ள Format என்பதை தெரிவு செய்க உடன் படம் 12ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Hide Coloumn என்பதை தெரிவு செய்க. உடன் நெடுவரிசை மறைந்துவிடும். அவ்வாறே Unhide Coloumn என்பதை தெரிவு செய்தால் மீண்டும் நெடுவரிசை தோன்றும்.

நிலையாக நெடுவரிசையை தோன்றும்படி தெரிய செய்தல் :

ஒரு சில புலங்கள் நமக்கு தொடர்ந்து தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக புலத்தின் தலைப்பு நிலையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டுமெனில் அதனை தெரிவு செய்து கட்டளை சட்டத்தில் Format என்பதை தெரிவு செய்க. உடன் படம் 12-ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் Freeze Column என்பதை தெரிவு செய்க. மாற்ற வேண்டுமெனில்  Unfreeze Column என்பதை தெரிவு செய்க.

பதிவேட்டினை வரிசைப்படி வடிகட்டுதல் :

வரிசைப்படுத்துதல் :

கருவிகள் பெட்டியில் தோன்றும் வரிசை படுத்துதல் எனும் குறும்படத்தில் தோன்றும் கருவியை ஏறுமுகமாகவா அல்லது இறங்குமுகமாகவா என்பதி லொன்றை தெரிவு செய்து தேவையான (நெடுவரிசையை தெரிவு செய்து) சொடுக்குக. உடன் பதிவேடுகள் வரிசை படுத்தப்பட்டிருக்கும்.

பல்வேறு நெடுவரிசை சேர்த்து வரிசை படுத்த வேண்டுமெனில் தேவையான நெடுவரிசைகளை தெரிவு செய்து கருவிகள் சட்டத்தில் உள்ள ஏறுமுக வரிசை அல்லது இறங்குமுக வரிசை படுத்துதல் என்பதிலொன்றை தெரிவு செய்க. அனைத்து பதிவேடுகளும் வரிசை படுத்தப்பட்டிருக்கும்.

படம் – 17

கட்டளைச் சட்டத்தில் உள்ள Record என்பதை தெரிவு செய்க. படம் 17-ல் உள்ளவாறு விரியும் பட்டியில்  Sort  என்பதை தெரிவு செய்க. அதில் விரியும் Sort Ascending Order or Sort Descending Order என்பதில் ஒன்றை தெரிவு செய்க.

படம் – 18

பதிவேட்டினை வடிகட்டுதல்:

கட்டளைச் சட்டத்தில் உள்ள Records என்பதை தெரிவு செய்க உடன் படம் 18-ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் Filter  என்பதை தெரிவு செய்து உடன் விரியும் பட்டியில் Filter By Selection என்பதை தெரிவு செய்தால் நாம் தெரிவு செய்கின்ற விவரம் உள்ள பதிவேடுகள் பிரதிபலிக்கும். Filter Excluding Selection என்பதை தெரிவு செய்தால் நாம் தெரிவு செய்த விவரம் தவிர மற்றவை தெரியும். Filter By Form என்பதை தெரிவு செய்தால் உடன் படம் 19-ல் Filter By Form  என்ற படிவம் தோன்றும் முன்பு கூறியது போலவே தேவையான விவரம் உள்ள பதிவேடுகள் திரையில் பிரதிபலிக்கும்.

படம் -19

பதிவேட்டினை ச்சிடுதல் :

முதலில் அச்சிடப்படவேண்டிய பதிவேட்டினை தெரிவு செய்க பின்னர் கட்டளைச் சட்டத்தில் உள்ள File என்பதை தெரிவு செய்க. உடன் படம்-20-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் அச்சுக்கு முன்பு பக்கங்களை சரிசெய்வதற்காக Page setup  என்பதை தெரிவு செய்க.

படம் – 20

உடன் படம் 21ல் உள்ளவாறு விரியும் Page setup என்ற உரையாடல் பெட்டியில் Margins என்பதை தெரிவு செய்க. ஒரு பக்கத்தில் மேல்புறம் (top), கீழ்ப்புறம் (Bottom), இடப்புறம் (Left), வலப்புறம் (Right) எவ்வளவு இடம்  விட வேண்டும் என்பதை தெரிவு செய்து தலைப்பு Print Headings என்பதை தெரிவு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக

படம் – 21

ச்சிற்கு முன்காட்சி :

படம் 20ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் Print Preview என்பதை தெரிவு செய்க. உடன் படம் 22ல் உள்ளவாறு  தரவுதாளை அச்சுக்குமுன் அதன் அமைப்பு எப்படி அச்சிடும் என்பதை தன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் Select File Print Preview என்பதை தெரிவு செய்தால் ஒரு பக்கம் மட்டும் திரையில் தோன்றும் பல பக்கங்கள் தோன்ற வேண்டுமெனில் Select Multiple  Pages என்பதை தெரிவு செய்க.

படம் – 22

படம்-22-ல் தோன்றும் அச்சிற்கு முன் காட்சியில்  தேவையான பக்கங்களில் கீழ், மேல் வலம், இடப்புறங்களில் நாம் விரும்பியவாறு இருக்கும் காலி இடத்தை சரி செய்து சரியாக இருக்கின்றது என தெரிந்தவுடன் Close என்பதை தெரிவு செய்க. பின்பு தேவையான பக்கங்களை அச்சிடவும்.

மீண்டும் படம்20-ல் உள்ளவாறு தோன்றும் பட்டியில் print என்பதை தெரிவு செய்க. உடன் படம்23-ல் உள்ளவாறு print என்று தோன்றும் பெட்டியில் printer என்பதில் என்னவகை printer என்பதை உள்ளீடு செய்க. print range என்பதில் முழுவதும் தேவையா அல்லது பகுதி மட்டுமா என தெரிவு செய்க Copies  என்பதில் எத்தனை நகல்கள் வேண்டும் என தெரிவு செய்து Ok என்றபொத்தானை சொடுக்குக இவ்வாறுசெய்தவுடன் நாம் தெரிவு செய்தவாறு விவரங்களை அச்சுப்பொறி மூலம் அச்சிடலாம்.

படம் – 23

நன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்