செல்லினியம் எனும்கட்டற்ற மென்பொருள் பரிசோதிக்கும் கருவி

பொதுவாக எந்தவொருமென்பொருள் பரிசோதிக்கும் கருவியும் எந்தவொரு புதிய மென்பொருளையும் அலசிஆராய்ந்து நம்முடைய தேவைக்கேற்ப குறிப்பிட்ட மென்பொருள் உள்ளதாவென சரிபார்க்கின்றன மேலும் மென்பொருட்களில் பிழைஇருந்தால் அதனைசுட்டிகாட்டுதல் ,விடுபட்டநம்முடைய தேவைகளை சுட்டிகாட்டுதல் ஆகிய பணிகளையும் செய்கின்றன அதுமட்டுமல்லாது மென்பொருளில் உள்ள பிழைகளை நீக்கம் செய்தல் ,சரிபார்த்தல் ,ஏற்புகை செய்தல் ஆகிய பணிகளையும் செய்கின்றன இவ்வாறான மென்பொருள் சரிபார்ப்பு பணியானது நாமேமுயன்று ஒவ்வொரு சோதனையாக சரிபார்த்தல் தானியங்கியாக சரிபார்த்தல் ஆகியஇருவழிகளில் செய்யமுடியும் பெரும்பாலும் தானியங்கியாக சரிபார்த்தலையே அனைத்துநிரலாளர்களும் விரும்புவார்கள் இவ்வாறான மென்பொருட்களை சரிபார்த்து பரிசோதிப்பதில் செல்லினியம் மிகச்சிறந்த கருவியாக உள்ளது இது இணையபயன்பாட்டு மென்பொருளையும்பரிசோதிக்க உதவுகின்றது இதில் சரிபார்ப்பு பணிமுடிந்தபின்னர் எந்தெந்தஇடத்தில் பிழைஏற்பட்டது என ப்ளேபேக் செய்து பார்த்திடும் வசதியை வழங்குகின்றது இந்த செல்லினியம் மென்பொருளானது 1.ஐடிஈசூழலில் இணையபக்கங்களை பரிசோதிப்பதற்கான செல்லினியம்ஐடிஈ, 2.இணையச்சேவையாளரை நம்முடைய கணினியிலிருந்தே பரிசோதித்து பார்த்திடசெல்லினியம்ஆர்சி, 3.இயக்கமுறைமைநிலையில் இணையஉலாவியை சரிபார்த்திட செல்லினியம் வெப்ட்ரைவர், 4 வெகுதூரத்திலிருக்கும் இணையசேவையாளரையும் அதன் மையசெயல்களையும் பரிசோதித்திட செல்லினியம்கிரிட் ஆகிய நான்குவகையான உள்ளுறுப்புகளை அந்தந்த பணிகளுக்கென தனித்தனியாக கொண்டுள்ளது இந்த செல்லினியம் எனும் மென்பொருளை http://seleniumhq.org/download/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட செயல்படுத்தியவுடன் இணையஉலாவியானது செல்லினியம் ஐடிஈயை நிறுவுகை செய்திடவாஎனகோரும் ஆம் என ஆமோதித்திடுக உடன் தானாகவே இந்த கருவியின்மென்பொருள் பதிவிறக்கம் செய்யபட்டு நிறுவுகை செய்துவிடும் பின்னர் இணையஉலாவியின் செயலை நிறுத்தம் செய்து மறுபடியும் செயல்படசெய்திடுக அதன்பின்னர் தோன்றிடும் இணையஉலாவியின் திரையில் செல்லினியம்ஐடிஈ பக்கத்தை தோன்றிடசெய்க அதில் தேடிடும்பகுதியில் சரிபார்த்திடவிழையும் மென்பொருளை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பும் மென்பொருளை சரிபார்த்து அதன்விவரங்களை திரையில் காண்பிக்கும்

2

நிரலாளர்கள் அனைவரும் விரும்பும் கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் கருவிகள்

1 பொதுவாக அனைத்து நிரலாளர்களும்  எளிதாக கையாளகூடிய குறிமுறை திருத்தியாகவும் பிழைதிருத்தியாகவும் மொழிமாற்றியாகவும்  விளங்கும் பயன்பாட்டு கருவிகளையே விரும்புவார்கள் அதுவும்  ஐடிஈ சூழலானது நிரலாளர்களின்  தேவையை நிறைவுசெய்வதற்கான ஏராளமான வசதிவாய்ப்புகளை வழங்குகின்றது அதனால் இந்த ஐடிஈ சூழலில் செயல்படும் கட்டற்ற இணைய பக்கங்களை உருவாக்கிடும் பயன்பாட்டு கருவிகளையே நிரலாளர்கள் அனைவரும் விரும்புவார்கள் அவ்வாறானவைகளில் மிகபிரபலமானகருவிகள் பின்வருமாறு

1.1.எக்லிப்ஸ் இது ஒரு கட்டற்ற கருவிமென்பொருளாகும் இணைய செயல் திட்டத்தையும் பயன்பாடுகளையும் உருவாக்கஉதவிடும் கருவியாக விளங்குகின்றது பெரும்பாலான நிரலாளர்கள் பணியக உரைதிருத்திக்கு பதிலாக ஐடிஈ சூழலையே விரும்புவார்கள் அதனால் இந்த கருவியில் விரிவாக்கவரைசட்டம், இயக்கநேர கட்டமைவு செய்வதற்காகவும் பகிர்வதற்காவுமான வசதி மென்பொருள்வாழ்நாள்முழுவதையும் நிருவகிக்கும் திறன்  ஆகிய பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும்  இந்த  எக்லிப்ஸில் உள்ளது

1.2.அப்டானாஸ்டுடியோ இணைய பக்கத்தை  ஐடிஈசூழலில் உருவாக்கிடஉதவிடும் மற்றொரு சிறந்த கருவியாகும்  இது தனிப்பட்ட பயன்பாடடு கருவியாகவும் எக்லிப்ஸின் துனைசார்ந்து செயல்படும் துனை்ககருவியாகவும் கிடைக்கின்றது இது ஜாவாஸ்கிரப்ட், ஹெச்டிஎம்எல்,டோம், சிஎஸ்எஸ் ஆகியவற்றைஆதரிக்ககூடியதாக உள்ளது

1.3.ஜூம்லா இதுஒரு சிறந்த உள்ளடக்க மேலான்மை அமைவாக விளங்குகின்றது  அதன் வாயிலாக இணைய பயன்பாடுகளையும் இணைய பக்கங்களையும் உருவாக்க அனுமதிக்கின்றது. இது என்தவொரு இணைய பக்கத்திலுமுள்ள  உருவபடங்கள் உரை இசை, ஒலிஒளி படம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாக கையாளும் திறனை வழங்குகின்றது இது நிறுமங்கள் தங்களின் மின்னஞ்சல்செய்திகளை வெளியிடவும்மின்ணிகத்தை கையாளவும்நேரடியாக அரசிற்கு அனுப்பும் விண்ணப்பங்களை கையாளவும் உதவும்கருவியாக பயன்படுகின்றது இது ஜிப்பிஎல் 2.0 அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது

1.3.பளூஃபிஷ்  இது இணையபக்கங்களை உருவாக்கும் நிரலாளர்களுக்கு உதவும் ஒருமுழுமையான கருவியாக விளங்குகின்றது இது அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்தது இது ஜிஎன்யூ அனுமதியின் அடிபபடையில் வெளியிடபட்டுள்ளது  இது ஹெச்டிஎம்எல்,, சிஎஸ்எஸ் போன்றவற்றை ஆதரிக்ககூடியதாக உள்ளது

1.4 .கம்ப்போஸர்  இதுஒருஎளிய பயன்பாட்டு கருவியாகவிளங்கினாலும் மேம்பட்ட அனைத்து வசதிகளையும் வழங்கிடும் வல்லமைகொண்டது இது ப்பிஹெச்ப்பி, ரூபிஆன்ரெயில், ஜாவாஸ்கிரிப்ட் பைத்தான் சிஎஸ்எஸ் ஆகியவற்றை ஆதரிக்ககூடியதாக விளங்குகின்றது

1.5.கிளவுட்9 இது ஒரு கட்டற்ற நேரடியான ஐடிஈசூழலில் செயல்டும் 40 இற்குஅதிகமான கட்டளைநிரல்தொடர்களை ஆதரிக்கும் திறன்மிக்க கருவியாக விளங்குகின்றது  இது நிரலாளர்கள் உடனடியாக குறிமுறைஎழுதஉதவும் வசதியை வழங்குகின்றது

1.6.நெட்பீன்ஸ் இது ஜாவாமொழியின்வாயிலாக உருவாக்கபட்டமறஅ்ரு ஐடிஈசூழலில் செயல்படும் கட்டற்றகருவியாகும் இது குழுவானநிரல் தொடர்கூறு தொகுதிகளை கையாள அனுமதிக்கின்றது இது ஜாவாவில் உருவாக்கபட்டாலும் ஐடிஈ சூழலையும் கையாளும் திறன்கொண்டதாகவும் அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்திறன்மிக்கதாகவும்விளங்குகின்றது

1.7.ப்ரேக்கெட்ஸ் இது ஹெச்டிஎம்எல்,ஜாவாஸ்கிரிப்ட் சிஎஸ்எஸ் ஆகியவற்றால் இணைய பயன்பாட்டிற்காக உருவாக்கபட்ட கட்டற்ற பயன்பாட்டு கருவியாகும் இது எம்ஐட்டி அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இதுஅனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது விரைவானதிருத்தசூழல் நேரடியாக திரையில் காட்சியாக காணும் வசதி விரைவு ஆவணங்களை உருவாக்கிடுதல் ஆகிய வசதிகளை கொண்டது

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-30-லிபர் ஆஃபிஸில் வரைகலையை  பயன்படுத்துதல்-தொடர்ச்சி

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் உரைகளுள்ள ஆவணத்தில் ஏதேனுமொரு படங்களை உள்ளிணைப்பு செய்தால் உடன் அதனை உரைகளுக்கு இடையே எவ்வாறு மிகச்சரியாக அமர்ந்திடுமாறு செய்வது என்ற கேள்விஎழும்  இவ்வாறான பணி அதிக காலவிரையத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். உரைகளை கையாளுவதற்காக உருவாக்கபட்ட உரைபயன்பாட்டில் உருவபடங்களை கையாளுமாறு செய்தால் அதற்கான கட்டுபாட்டின் அடிப்படையில் மட்டுமே இந்த செயலை செய்திடமுடியும் அதனால் லிபர் ஆஃபிஸ் ஆவணத்தின் உரைகளுக்கு இடையே உருவபடங்களை மிகச்சரியாக அமைத்திடுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றன

1.

1

 பொதுவாக  ஒரு உரையுள்ள லிபர் ஆஃபிஸ் ஆவணத்தில் படங்களை

  1. கற்பனையான நெடுவரிசை அச்சில்
  2. நெடுவரிசையும் கிடைவரிசையும் சந்திக்கும் குறிப்பிட்ட புள்ளியில்

3.கொக்கி(anchor)போன்ற புள்ளியில்

4.உரையானது படங்களை சுற்றி மடங்கியமையுமாறு செய்தல்

ஆகிய நான்குவகையான அமைவுகளில் மிச்சரியாக அமையச்செய்யலாம்

இந்த அமைவுகளை வரைகலையின் தன்மைக்கேற்ப

1.மேலே கட்டளைபட்டையிலுள்ள Formatஎனும் கட்டளை பட்டியலின் Alignment, Arrange, Wrap, and Anchorஆகிய கட்டளைகளின் வாயிலாக

2.படங்களின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்தவுடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியின்(context menu) வாயிலாக

3.OLE Objectஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள வாய்ப்புகளின் வாயிலாக

4.மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Picture =>என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துவதன் மூலம் அல்லது வரிசைஎண் 2 இல்குறிப்பிடபட்ட பட்டியில் Picture எனும் கட்டளையை மட்டும் செயல்படுத்துவதன்மூலம் தோன்றிடும் Picture எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக

5.மேலே கட்டளைபட்டையிலுள்ள  Format => Object => Position and Size=> என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துவதன் மூலம் அல்லது வரிசைஎண் 2 இல்குறிப்பிடபட்ட பட்டியில் Position and Sizeஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் தோன்றிடும் Position and Size எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக

ஆகியபல்வேறு வழிகளில் அனுகிடமுடியும் .

  மேலும் சூழ்நிலை பட்டியின் Arrange எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் சிறுபட்டியிலுள்ள Bring to Front,Bring Forward, Send Backward, Send to Back, To Background/To Foreground ஆகிய கட்டளைகளின் வாயிலாக இந்த படங்களை உரைகளுக்கு இடையே திரையில் தோன்றிட  செய்யமுடியும்.

அதுமட்டுமின்றி சூழ்நிலை பட்டியின் Anchor எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் சிறுபட்டியிலுள்ள To Page ,To Paragraph,To Character, As Character, To Frame ஆகிய கட்டளைகளின் வாயிலாக இந்த வரைகலையை உரைகளுக்கிடையே கட்டிவைக்கமுடியும்

2.

2

 மேலேகூறியவாறு வரைகலையை உரைகளுக்கு இடையே கட்டிவைத்த பின்னர்   Position and Size எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக அல்லது சூழ்நிலை பட்டியின் Alignment எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் சிறுபட்டியிலுள்ள Left,Centered,Right,,Base as Top,Base in Middle,Base as Bottom ஆகிய கட்டளைகளின் வாயிலாக இந்த படங்களை உரைகளுக்கிடையே மிகச்சரியாக அமைந்திடுமாறு செய்திடமுடியும்

 அதுமட்டுமல்லாது வரைகலையை Position and Size எனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக அல்லது சூழ்நிலை பட்டியின் Wrap எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் சிறுபட்டியிலுள்ள No Wrap,Page Wrap or Optimal Page Wrap,Wrap through In Background, Contour,  ஆகிய கட்டளைகளின் வாயிலாக இந்த படங்களைச் சுற்றி உரைகளை வளைந்து ஒடுங்கி அமையுமாறு செய்திடமுடியும்

இவ்வாறு படங்களை சுற்றி உரைவளைந்து அமையுமாறு செய்தவுடன் லிபர் ஆஃபிஸ் ரைட்டரானது தானாகவே  Contour என்பதை உருவாக்கி கொள்கின்றது  இதனை தொடர்ந்து மேலே கட்டளைபட்டையிலுள்ள  Format => Wrap => Edit Contour=>என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துவதன் மூலம் அல்லது  சூழ்நிலை பட்டியின் Edit Contour எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் திரையில் விரியும்   Contour எனும் உரையாடல் பெட்டியின்  Rectangle,Ellipse, Polygon, and AutoContour ஆகிய நான்கு கருவிகளின் வாயிலாக இதனை திருத்தம் செய்திடமுடியும்

3.

3

 லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் படங்களையும், அட்டவணைகளையும்அல்லது வேறு எந்தவொரு பொருட்களையும் உள்ளிணைத்தவுடன்  அதற்கான தலைப்பு பெயர் 1.தானாக, 2.Captionஎனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக , 3.நாமேமுயன்று நம்முடைய கைகளால்   உருவாகுமாறு செய்திடமுடியும்

முதல் வழிமுறையாக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளை பட்டையில் Tools=> Options=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Optionsஎனும் உரையாடல் பெட்டியில் LibreOffice Writerஎன்பதற்கருகிலிருக்கும் கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் AutoCaptionஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் AutoCaptionஎனும் வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து உள்ளிணைக்கபடும் படங்களுக்கு தானாகவே தலைப்பினை உருவாகிடுமாறு செய்திடமுடியும்

 இதற்கு பதிலாக  இரண்டாவது வழிமுறையாக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளை பட்டையில் Insert => Caption=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்  Captionஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Captionஎனும்  உரையாடல் பெட்டியில்  தலைப்பு பெயரை உள்ளீடு செய்து OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

4

4

  மூன்றாவது வழிமுறையாக தேவையான படத்தை தனி பத்தியாகவும் தலைப்பை தனிப்பத்தியாகவும் உருவாக்குக அதன்பின்னர் தலைப்பு பத்தியில் இடம்சுட்டியை வைத்து  கொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளை பட்டையில் Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  விசைப்பலகையிலுள்ள Ctrl + F2  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் விரியும் திரையில் Variablesஎனும் தாவியின்பக்கத்தை தோன்றிட செய்திடுக அதில் Number range என்பதையும் Figureஎன்பதில் கீழிறங்கு பட்டியலி்ல் Arabic (1 2 3)என்பதையும் தெரிவுசெய்து கொண்டு Insertஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து  சேர்த்திடுக

அடுத்ததாக இந்த லிபர் ஆஃபிஸ் ரைட்டர்  ஆவணத்தில்  hotspotsஎன அழைக்கபடும் உருவபடதின் இணைப்பு முகவரியை லிபர் ஆஃபிஸில் உருவாக்கியபின் குறிப்பிட்ட உருவபடத்தை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தொடர்புடைய இணையபக்கம் அல்லது கணினியிலுள்ள இதர கோப்புகளை அல்லது இதே ஆவணத்தின் தொடர்புடைய பக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் இதனை பல்வேறு உருவஅளவுகளில் லிபர் ஆஃபிஸில் உருவாக்கிடமுடியும்  இவ்வாறு   இணைப்பை லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்திலுள்ள ஒரு உருவபடத்தில் உருவாக்குவதற்காக தேவையான உருவபடத்தை தெரிவுசெய்துகொண்டு  லிபர்  ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளை பட்டையில் Edit => ImageMap=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் ImageMap எனும் உரையாடல் பெட்டியில்   தேவையான இணைப்புமுகவரி விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு முதலில் Applyஎனும் பொத்தானையும் பின்னர்save எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க

 5

5

பொதுவாக எந்தவொரு நிறுவனமும் படங்களால், எழுத்துகளால் படமும் எழுத்தும் சேர்ந்த  சின்னத்தை தங்களுடைய  கடிதங்களில்  அந்த நிறுவனத்தை அடையாள படுத்துவதற்காக குறிப்பிடுவதையே லோகோ என அழைப்பார்கள். இவ்வாறான நிறுவனத்தின் லோகோ போன்ற உருவபடங்களை முதலில் நம்முடைய கணினியிலுள்ள படங்களின் தொகுப்பாக(Gallery) சேகரித்து சேமித்து வைத்து கொண்டால் பின்னர் தேவையானபோது இதனை லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தில் உள்ளிணைத்து கொள்ளமுடி.யும்   தேவையில்லையெனில் இந்த தொகுப்பிலிருந்து நீக்கம் செய்துவிடமுடியும்  இந்த  படங்களின் தொகுப்பு( இருக்குமிடத்தை Tools => Options => LibreOffice= > Paths=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்வாயிலாக குறிப்பிடமுடியும்

மேலும்  இதனை லிபர் ஆஃபிஸில் உருவாக்குவதற்காக  Logoஎனும் கருவிகளின் பட்டை உதவுகின்றது இந்த லோகோ எனும் கருவிபட்டையை திரையில் கொண்டு வருவதற்காக லிபர்  ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளை பட்டையில் View= > Toolbars => Logo=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Logoஎனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்றிடும்  இதனை பயன்படுத்தி காலியான ஆவணத்தில் நாம் விரும்பியவாறு லோகோவை லிபர் ரைட்டர் திரையில் உருவாக்கி சேமித்து வைத்து கொண்ட பின்னர்   கடிததொடர்பிற்கு அவ்வப்போது இதனை பயன் படுத்தி கொள்ளலாம்

6

6

Document Cloud எனும் வசதியை பயன்படுத்தி நம்முடைய அலுவலகத்தை தாட்களையே பயன்படுத்திடாத அலுவலகமாகமாற்றியமைத்துகொள்ளமுடியும்

 தற்போதைய நம்முடைய அலுவலகங்களில் அனைத்து செயலிற்கும் தாட்களையே பயன்படுத்தி கொண்டுவருகின்றோம்  இந்த தாட்களை உருவாக்குவதற்காக ஏராளமானமரங்களை  வெட்டி இயற்கை வளங்களையே வீணாக்குகின்றோம் இவ்வாறான கருத்தினை கூறியவுடன் இந்த தாட்களே இல்லாமல் நம்முடைய அலுவலக பணிகளை நடைமுறைபடுத்த முடியுமா ? எனும் கேள்வி நம்முடைய அனைவரின் மனதிலும் எழும் ஆம் வருங்கால அலுவலகங்களில் தாட்களே இல்லாத அலுவலக செயல்நடைமுறைக்கு வரவிருக்கின்றது அதன் முதன் படிமுறையாக அடோப்நிறுவனம் ஆண்டொன்றிற்கு 156முதல்,180 டாலர் வரை ஆண்டு கட்டணத்துடன் இவ்வாறான சேவையை Document Cloud என்பதன் வாயிலாக வழங்குகின்றது   அடோப்நிறுவனத்தின் இந்த Document Cloud எனும் சேவையில் Acrobat DC,esignservices, Mobile Link,Send&Trackஆகிய பணிகளாக தனித்தனியாக பிரி்த்து தம்முடைய சேவையை வழங்குகின்றனர்

 இதில்உள்ள  Acrobat DC என்பது தொடுதிரை வசதியுடன்கூடிய ப்பிடிஎஃப் கருவியாகும் இது தாட்களாளான  ஆவணங்களை  திருத்தம் செய்து பயன்படுத்தும்வசதியுடன்கூடிய  உருவபடமின்ஆவண  கோப்பாக உருமாற்றம் செய்துமின்கையெழுத்தை உள்ளிணைத்திடும் வசதியை வழங்கிடுமாறு இது செயல்படுகின்றது     esignservices எனும் சேவையானது அவ்வாறு மின்ஆவண  கோப்பாக உருமாற்றபட்ட ஆவணங்களில் நம்முடைய கையழுத்தை மின்கையெழுத்தாக உள்ளிணைக்கும்  வசதியை வழங்குகின்றது  Mobile Link எனும் சேவைவாயிலாக பயனாளர் இந்த ஆவணங்களை தங்களுடைய கணினி அல்லது மடிக்கணினி அல்லது கைக்கணினி அல்லது கையடக்கவருடி அல்லது படபிடப்பு கருவி ஆகியவற்றின் வாயிலாக இந்த மின் ஆவணத்தை கையாளும் வசதியை வழங்குகின்றது  ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூட இந்த வசதியை  செயல்பட செய்திடமுடியும் Send&Track எனும் வசதியின் வாயிலாக மின்ஆவணங்களை திருத்தம் செய்து சரிசெய்தபின் இதன்மூலம் குறிப்பிட்ட நபருக்கு அல்லது பகுதிக்கு அனுப்பிவைத்திடவும் அவ்வாறு அனுப்பிவைத்ததை தேடிபிடித்திடவும் செய்திடமுடியும்   வாருங்கள் நாமும் அடோப் நிறுவனத்தின் இந்த Document Cloud எனும் வசதியை பயன்படுத்தி தாட்களையே பயன்படுத்தாத அலுவலகமாக நம்முடைய அலுவலகத்தை மாற்றியமைத்துகொள்வோம்

10

எந்தவொரு மனிதனையும் மிக உணர்ச்சி வசப்படக்கூடியவரா இல்லையா என அறிந்து கொள்ள hsperson எனும் தளம்உதவுகின்றது

நாம் மிக அதிகஅளவு உணர்ச்சிவசப்படக்கூடியவரா அல்லது நம்முடைய பிள்ளைகள் அதிக உணரச்சி வசப்படக்கூடியவர்களாவென சரிபார்த்திட http://hsperson.com/test/highly-sensitive-test/ எனும் இணையதளம் பயன்படுகின்றது   இதில் மிகஎளிய சிறுபரிசோதனை தேர்வு உள்ளது அதாவது இதனுடைய இணைய பக்கத்தில் முப்பது எண்ணிக்கையிலுள்ள வினாக்கள் தேர்வுசெய்பெட்டியுடன் உள்ளன பொதுவாக இவையனைத்தும் நம்முடைய மனநிலையை பிரதிபலிக்ககூடியவை  அவற்றுள் அதாவது அந்த கேள்விகளில் நம்முடைய மனதில் உணருவதற்கேற்ப ஆம் அல்லது இல்லையென நாம் ஏற்றுகொள்ளகூடியவைகளை அதற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்திடுக இல்லையெனில் தெரிவுசெய்யாதுவிட்டிடுக  இறுதியாக நாம் தெரிவுசெய்ததற்கேற்ற மதிப்பெண் திரையில் காண்பிக்கும் இந்த மதிப்பெண்களில் 14 உம் அதற்குமேலும் நம்முடைய மதிப்பெண்ணாக இருந்தால் நாம் கண்டிப்பாக மிக உணர்ச்சி வசப்படக்கூடியவர் என அறிந்துகொள்க இவ்வாறே நம்முடைய பிள்ளைகளின் மனநிலையையும் இந்த தளத்தில் அறி்ந்து கொள்ளலாம்

மனநோய் மருத்தவ ஆய்விற்கு கூட இந்த கேள்விகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த தளத்தில் கேள்விகள் அனைத்தும் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அனுமதிபெற்றபின்னரே  மனநோய் மருத்துவஆய்விற்கு பயன்படுத்தபடவேண்டும்

9

 

யாகூ மின்னஞ்சலை கைபேசிஎண்வாயிலாக பாதுகாப்பாக பயன்படுத்திகொள்க

8

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்கள் அதிலும் யாகூவில் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்கள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை   இனிமேல் நினைவில் வைத்துகொள்ள தேவையில்லை அதாவது ஒவ்வொருமுறை நாம் யாகூ மின்னஞ்சல் இணைய பக்கத்திற்குள்உள்நுழைவு செய்திடவிழையும்போதும் நாம் பதிவுசெய்துள்ள நம்முடைய கைபேசிக்கு குறுந்தகவல்வாயிலாக இந்நிறுவனம் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களை நமக்கு அனுப்பிவைத்திடும் அந்தஒருமுறைமட்டும் அதனை பயன்படுத்தி யாகூமின்னஞ்சலில் உள்நுழைவு செய்திடுக அடுத்தமுறை உள்நுழைவு செய்திடும்போதும் இதே வழிமுறைய பின்பற்றிடுக.இந்த வாய்ப்பினை எவ்வாறு கட்டமைவு செய்வது என இப்போது காணபோம்   யாகூமின்னஞ்சலில் நம்முடைய கணக்கின் பக்கத்திற்கு செல்க அங்கு திரையின் மேலே வலதுபுறமூலையில் உள்ள நம்முடைய மின்னஞ்சல் கணக்கின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சிறுபட்டியலில் Account Security என்ற வாய்ப்பினை தெரிவுசெய்த சொடுக்குக பின்னர் விரியும் திரையில் on-demand passwords என்பதன்கீழ் உள்ள Get started எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர் விரியும் on-demand passwords எனும் திரையில் நம்முடைய கைபேசியின் எண்களை குறிப்பிடுக உடன் மாதிரிக்காக உரைசெய்தி நம்முடைய கைபேசிக்கு வந்துசேரும் பின்னர்   on-demand passwords செய்தியை இயலுமை செய்திடுக இந்த வழிமுறையில் ஆண்ட்ராய்டு மின்னஞ்சல் அவுட்லுக் ஐஓஎஸ்மின்னஞ்சல் ஆகியவை செயல்படாது என்ற செய்தியை மனதில் கொள்க இதன்பின்னர் ஒவ்வொருமுறை யாகூமின்னஞ்சல் கணக்கிற்குள் உள்நுழைவு செய்திடும்போதும் பயனாளர் பெயரை உள்ளீடு செய்தவுடன் நம்முடைய கைபேசி்ககு வந்துசேரும் குறுஞ்செய்தியிலுள்ள கடவுச்சொற்களின் துணைகொண்டு உள்நுழைவு செய்திடுக இந்த வசதி தேவையில்லைஎன எண்ணிடும்போது யாகூமின்னஞ்சலில் நம்முடைய கணக்கின் பக்கத்திற்கு செல்க அங்கு திரையின் மேலே வலதுபுறமூலையில் உள்ள நம்முடைய மின்னஞ்சல் கணக்கின் பெயரை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் சிறுபட்டியலில் Account Security என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் on-demand passwords என்பதன் அருகிலுள்ள இருநிலை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் இந்த வசதியை நிறுத்தும் செய்துகொள்க .

விண்டோ7 இயக்கமுறைமையை Wimஎனும் பயன்பாட்டின் உதவியால்கையடக்க யூஎஸ்பி சாதனத்திலிருந்து இயக்கதொடங்கலாம்

கணினியில் விண்டோ7 இயக்கமுறைமையை நிறுவுகை செய்யாமலேயே கையடக்க யூஎஸ்பி சாதனத்தில் விண்டோ7 இயக்கமுறைமையை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்   இதற்காக நம்முடைய கையடக்க யூஎஸ்பி சாதனத்தில் மெய்நிகர் வன்தட்டினை உருவாக்கிடவேண்டும் இதனை செயல்படுத்துவதற்காக முதலில் PWBOOTஎன்ற பயன்பாட்டினைபதிவிறக்கம் செய்துகொள்க அடுத்ததாக விண்டோ7 இயக்கமுறைமை கோப்பகள் உள்ள குறுவட்டிலிருந்து Wimஎனும் கோப்பினை மட்டும் நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் PWBOOTஎன்ற வழிகாட்டி வித்தகர் பயன்பாட்டினை செயல்படுத்துக உடன் தோன்றிடும் PWBOOTஎன்ற வழிகாட்டியின் திரையில் நாம் விணேடோ7ஐ நம்முடைய கையடக்க யூஎஸ்பி சாதனத்தில் நிறுவுகை செய்யபோவதாக நம்முடைய விருப்பத்தை தெரிவித்திடுக அடுத்து தோன்றிடும் PWBOOTஎன்ற வழிகாட்டியின் திரையில் windowinstallation image கோப்பு தேவையென குறிப்பிடும் அதற்கு நாம் பதிவிறக்கம் செய்துவைத்துள்ள Wimஎனும் கோப்பினை குறிப்பிடுக தொடர்ந்துEnable Boot from USBஎனும் தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்திடுக அடுத்து தோன்றிடும் PWBOOTஎன்ற வழிகாட்டியின் திரையில் எங்கு விண்டோ7 இயக்கமுறைமையை நிறுவுகை செய்யபோகின்றோம் என அதாவது கையடக்க யூஎஸ்பி சாதனத்தை குறிப்பிடுக தொடர்ந்து இதில் மெய்நிகர் வன்தட்டினை உருவாக்கிடும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக அதன்பின்னர் உருவக கோப்பின் அளவை நம்முடைய கையடக்க யூஎஸ்பி சாதனத்திற்கேற்ப குறிப்பிடுக அதனை தொடர்ந்து இணைப்பு வழியையும் குறிப்பிடுக இங்கு நம்முடைய கையடக்க யூஎஸ்பி சாதனத்தின் அளவிற்குள் இருக்குமாறு உருவக கோப்பின் அளவை குறிப்பிடவேண்டும் என்ற தகவலை மனதில் கொள்க இறுதியாக update BootCode எனும் தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்திடுக பின்னர் Overwrite Existing BCDstore எனும் தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்/யாதுவிட்டிடுக அடுத்தடுத்து தோன்றிடும் திரைகளில் கையடக்க யூஎஸ்பி சாதனத்தில் மெய்நிகர் வன்தட்டினை நிறுவுகை செய்தல் அதில் விண்டோ7 உருவக கோப்பினை நிறுவுகை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் இந்த பணிமுடிவுற்றதாகவும் காண்பிக்கும் அடுத்து கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக அப்போது கையடக்க யூஎஸ்பி சாதனத்திலிருந்து தொடங்குவதாக குறிப்பிட்டவுடன் விண்டோ7 இயக்கமுறைமையானது கையடக்க யூஎஸ்பி சாதனத்திலிருந்து இயங்க தொடங்கிவிடும்

வளாக பிணையத்தை (LAN)சிறப்பாக கையாள உதவிடும்கருவிகள்

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய அனைத்து அலுவலகபணிகளையும் கணினிவாயிலாகவே  செயல்படுத்தி கொள்கின்றன ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளும்அனைத்து கணினிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக வளாகபிணையத்தை(LAN) பயன்படுத்தி கொள்ளபடுகின்றன இவ்வாறான வளாக பிணையத்தின் (LAN)செயலை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கையாள பல்வேறு பயன்பாட்டு கருவிகள் உள்ளன அவைகளுள் Nmap, Wireshark, Spiceworks, mReteNG, ClamAVand Immunet ஆகியன மிகமுன்னனியில் உள்ளன

6.1  Nmap என்பது நிர்வாகியாகவும் பயனாளராகவும் வளாகபிணையத்தை வருடி எவையெவை வளாக பிணையத்தில் இணைக்கபட்டுள்ளன  பிணையத்திலுள்ள சேவைவாயில்களின் முகவரி அவைகளின் செந்தரபாதுகாப்பு ,இயல்புநிலை சேவை வாயில் எவை என்பனபோன்ற பல்வேறு பணிகளை செய்திட உதவுகின்றன .மேலும்  விவரங்களை அறிந்துகொள்ள   https://www.nmap.org/ என்ற இணைய தளத்திற்கு செல்க

6

6.2  Wireshark  வளாக பிணையத்தில் எழும் தரவுகளின் போக்குவரத்தை கட்டுபடுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் சமாளித்திட இது பயன்படுகின்றது  இது தரவுகளை வடிகட்டுதல் ஆய்வுசெய்தல் வழிமுறையை பின்பற்றுதல் போன்ற பல்வேறு செயல்களையும் செய்யவல்லது

6.3 Spiceworks வளாக பிணையத்தை நிருவாகியால் கட்டுபடு்த்திடவும் வளாக பிணையத்தில் இணைந்துள்ள சாதனங்களை பட்டியலிடவும்  செல்லிடத்து பேசிகளின் வாயிலாக கையாளவும் இது உதவுகின்றது

6.4 mReteNG இதுவளாக பிணையத்தின் நிருவாகியால் வரும்பபடும் பழைய PuTTY யை அடிப்படையாக கொண்டு செயல்படும் திறன்மிக்கது copy and paste வசதியை அளிப்பதன் வாயிலாக கூடுதலான மென்பொருட்கள்எழுதுவதை தவிர்க்கின்றது

6.5  ClamAVand Immunet   எதிர்நச்சுநிரல்களை பற்றி வரையறுப்பதை தவிர்த்திடுவதற்காக அவ்வப்போது பயன்பாட்டு மென்பொருட்களை நிகழ்நிலை படுத்த தேவையில்லை, மேலும் வளாக பிணையத்திற்குள் வருகின்ற மின்னஞ்சல்களை வடிகட்டி சரிபார்த்திடவும் அவைகளில் நச்சுநிரல் உள்ளதாவென உறுதிசெய்திடவும் வளாக பிணையத்தின் தரவுகளின் போக்குவரத்தில் நச்சுநிரல்  ஏதேனும் இருக்கின்றதாவெனவும் ஆய்வுசெய்து பாதுகாப்பு செய்திட இது பயன்படுகின்றது

கடவுச்சொற்களைநினைவில்கொள்ள  உதவும் கீபாஸ் எனும் கருவிபயன்பாடு

கணினியையும் இணையத்தையும்  பயன்படுத்துபவர்கள் மிகபெரிய தலைவலியாக இருப்பது இவைகளில்உள்நுழைவு  செய்வதற்காக பயன்படுத்தபடும் கடவுச்சொற்களை நினைவில் வைத்து கொள்வதுதான் ஏனெனில் கடவுச்சொற்களில் பெரியஎழுத்து, சிறியஎழுத்து, சிறப்பு குறியீடு, எண்கள் ஆகியன கலந்துஇருக்கவேண்டும்  கடவுச்சொற்களானது குறிப்பிட்ட நீளம் குறைதபட்ச  இருக்கவேண்டும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் இந்த கடவுச்சொற்களை மாற்றியமைத்துகொண்டே இருக்கவேண்டும்ஒரே கடவுச்சொல்லை அனைத்து செயலிற்கும் பயன்படுத்த கூடாது ஒவ்வொன்றிற்கும் ஒரு கடவுச்சொல்என அதிகஅளவில் கடவுச்சொற்களை  நினைவில் வைத்து கொள்ளவேண்டும்  ஆகிய காரணங்களினால்  கடவுச்சொற்களை நினைவில் வைத்து கொள்வது மிகசவாலான பிரச்சினையாக உள்ளது  நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான கடவுச்சொற்கள் மட்டுமல்லாது தனிநபர்களின் பயன்பாட்டிற்கான கடவுச்சொற்களைவேறு நினைவில் வைத்துகொள்ளவேண்டும்  அதுமட்டுமல்லாது இதற்கான பின் எண்களைவேறு நினைவில் வைத்துகொள்ளவேண்டும்  இந்நிலையில் இவ்வாறான பல்வேறு கடவுச்சொற்களையும் கையாளஉதவுவதுதான் கீபாஸ் எனும்கருவியாகும் இனிமேல் ஏராளமானஅளவில் கடவுச்சொற்களை நம்முடைய நினைவில் வைத்து கொள்ளவேண்டும்  என்ற கவலையை விட்டொழியுங்கள் அதாவது ஒருவீட்டிலுள்ள அல்லது அலுவலகத்திலுள்ள பல்வேறு பூட்டுகளுக்குமான  திறவுகோள்களை ஒன்றாக ஒரு பெட்டிக்குள்வைத்து முதன்மை திறவுகோளை மட்டும் பத்திரமாக வைத்துகொண்டால் இதன்மூலம் இந்த பெட்டியை திறந்து பல்வேறு திறவுகொளை எடுத்து பயன்படுத்தி கொள்ளமுடியுமல்லவா அதேபோன்றே அனைத்து கடவுசொற்களையும் இந்த கீபாஸ் தரவுதளத்தில் மறையாக்கம் செய்து பாதுகாத்து வைத்துகொண்டு இதற்கானமுதன்மை கடவச்சொற்களைமட்டும் நினைவில் வைத்துகொண்டால் போதும்  அதன்வாயிலாக அனைத்து கடவுசொற்களையும் எடுத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது  ஐஃபோன்  ஐபேடு,ஆண்ட்ராய்டு செல்பேசி ஆகிய அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்திகொள்ளதக்கஅளவில் இந்த கீபாஸ் என்பது உள்ளது இதனை http://www.keepass.infor/download.html/ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

5

  தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படும் சிறந்த பத்து கட்டற்ற பாதுகாப்பு கருவிகள்

 தற்போதைய கணினியின் அபரிதமான வசதி வாய்ப்புகளின் வளர்ச்சியினை தொடர்ந்து இதில் கையாளப்படும் பல்வேறு வகையான தரவுகளுக்கு ஏராளமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அவ்வப்போது புதியபுதியதாக தோன்றிகொண்டே உள்ளன அவ்வாறான அச்சுறுத்தல்களை சமாளித்து பாதுகாப்பாக இருப்பதற்காக கட்டணத்துடன் கூடிய பாதுகாப்பு  பயன்பாட்டு மென்பொருட்கருவிகள் இணையத்தில் ஏராளமான அளவில் கிடைக்கின்றன  அதேபோன்று கட்டணமற்றதும் கட்டற்றதமான பாதுகாப்பு  பயன்பாட்டு மென்பொருட்கருவிகளும் இணையத்தில் ஏராளமான அளவில் கிடைக்கின்றன  அவைகளுள் சிறந்த பத்து பாதுகாப்பு கருவிகளை இப்போது காண்போம்

4.1 OSQuery இந்த கருவி முகநூல் தளத்தால் உருவாக்கபட்ட மிக எளிமையான பாதுகாப்பு கருவியாகும் இது கோப்புகளை கண்காணித்தல் வலைபின்னல்போக்குவரத்தை கட்டுபடுத்துதல் வன்பொருள் மாற்றத்தை கண்காணித்தல்  ஆகிய பல்வேறு செயல்களை செய்யவல்லது இது நிறுவனத்தின் சேவையாளர் கணினியை பாதுகாப்பாக செயல்படசெய்கின்றது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள http://www.osquery.io/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.2 SecurityOnion இது வலைபின்னலை கண்காணிக்கவும் இணையபக்கங்களில் உள்நுழைவு செய்வதை கண்காணிக்கவும் பயன்படும் கருவியாகும் இதுfull packet capture,network based, host based intrusion detection system  ஆகிய மூன்றுவகை செயலியை அடிப்படையாக கொண்டது இதுகையாளுவதற்கு மிகஎளிமையான கருவியாகும் மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   http://www.blog.securityonion.net/  என்ற இணைய தளத்திற்கு செல்க

4.3Skyline இது நம்முடைய கணினியின் கட்டமைப்பில் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு குறைபாடுகளையும்  கண்டுபிடித்து நிவர்த்தி செய்திடஉதவும் மிகச்சிறந்த கருவியாகும்  மேலும் இது நிகழ்நேர செயலின் கண்காணிப்பு கருவியாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது அதிக அளவுள்ள தரவுகளில் ஏற்படும் அனைத்துவகையான பாதுகாப்பு குறைபாடுகளையும் கண்டுபிடித்திட பயன்படுகின்றது  மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள  https://www.github.com/etsy/skyline/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.4. Google Rapid Response(GRR) இது அனைத்துவகையான இயக்கமுறைகளில் செயல்படும் திறன்மிக்கது இது முகவர்மூலம் வொகுதூரத்தில் உள்ள கட்டமைப்பில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வுசெய்துநிவர்த்திசெய்யும் திறன்கொண்டது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   https://www.github.com/google/grr/  என்ற இணைய தளத்திற்கு செல்க

4.5 OSSEC இது host based intrusion detection system என்பதன் அடிப்படையில் செயல்படக்கூடியது இது நிகழ்நேர செயலின் கண்காணிப்பு கருவியாக விளங்குகின்றது இது அனைத்துவகையான இயக்கமுறைகளில் செயல்படும் திறன்மிக்கதுமேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   http://www.ossec.net/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.6 Scumblr and Sketchy இது இணையத்தின் அடிப்படையில் செயல்படும் திறன்கொண்டது இதன்மூலம் குறிப்பிட்ட காலஇடைவெளியில் தேடுதல் ,ஆய்வுசெய்து சுட்டிகாட்டுதல், தொடர்ந்து அதனை சரிசெய்தல் என்ற அடிப்படையில் இது செயல்படுகின்றது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   https://www.github.com/netflix/scublr/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.7 RAPPOR இது கூகுள் தளத்தின் வாயிலாக மேம்படுத்தபட்ட பாதுகாப்பு கருவியாகும் இது தனிபட்டநபர்களின் கோப்புகளுக்கான பாதுகாப்பு கருவியாக விளங்குகின்றது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   https://www.github.com/google/rappor/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.8OpenVAS  இது கணினியின் பல்வேறுவகையான கட்டமைப்புகளின் மிகச்சிறந்த கருவியாகவும் வருடுவதன் வாயிலாக பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்திடகூடியதாகவும் உள்ளது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   http://www.opnvas.org/ என்ற இணைய தளத்திற்கு செல்க

4.9 Open SSH இது இணையபயன்பாடுகளில் ஏற்படும் கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவு செய்வதை கட்டுபடுத்துவது, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கட்டுபடுத்துவது ஆகிய செயல்களை செய்யவல்ல திறன்கொண்ட கருவியாக விளங்குகின்றது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   http://www.openssh.com/  என்ற இணைய தளத்திற்கு செல்க

4.10 MIDAS இதுவும் முகநூல் தளத்தால் மேம்படுத்தபட்ட கருவியாகும்.இதுவலைபின்னல், இணையம் ஆகியவற்றிற்கான சிறந்த பாதுகாப்பு கருவியாக விளங்குகின்றது மேலும் இதுபற்றிய விவரங்களை அறிந்துகொள்ள   https://www.github.com/etsy/MIDAS/ என்ற இணைய தளத்திற்கு செல்க

இவ்வாறான பாதுகாப்பு கருவிகள் ஏராளமான அளவில் இருந்தபோதும் பொதுவாக எப்போதும் நம்முடைய கணினியிலும் கட்டமைப்பிலும் ஃபயர் வால் ஆனது பாதுகாப்பு செயலில் உள்ளதாவென உறுதிபடுத்தி கொள்க  ஆண்ட்டி வைரைஸை எப்போதும் பயன்படுத்துக, பயன்பாட்டு மென்பொருட்களின்   புதிய சமீபத்திய நிகழ்நிலை படுத்தபட்ட பதிப்புளையே எப்போதும் பயன்படுத்துக.  நம்முடைய கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றிகொண்டே இருந்திடுக.

Previous Older Entries