லிபர் ஆஃபிஸ் தொடர்-பகுதி-3-லிபர் ஆஃபிஸ் பேஸில் ஒரு அட்டவணையை உருவாக்குதல்-தொடர்ச்சி

நடப்பு அட்டவணையை நகலெடுத்து ஒட்டுவதன்மூலம் ஒரு அட்டவணையை உருவாக்குதல்
நம்மிடம் பணியாளர்களின் செயல்கள் தொகுப்பாக இருப்பதாக கொள்வோம் அவற்றுள் ஒவ்வொரு வகை செயலிற்கும் ஆனதொரு அட்டவணையை உருவாக்குவதற்காக ஒவ்வொருமுறையும் முந்தைய தொடரில் கூறியவாறு ஒரு வழிகாட்டியின் உதவியால் உருவாக்குவதற்கு பதிலாக ஒரு அட்டவணையை மட்டும் ஒரு வழிகாட்டியின் உதவியால் உருவாக்கியபிறகு மற்ற அட்டவணைகளை அதிலிருந்து பின்வரும் வழிமுறைகளின்படி நகலெடுத்து ஒட்டுவதன் வாயிலாக உருவாக்குவது எளிதான செயலாகும்
1 திரையில் தரவுதளபலகத்தில் நாம் காணும் பொருட்களின் உருவப்படங்களில் அட்டவணையின் உருவபொத்தானை(table icon) மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக
2 உடன் விரியும் அட்டவணைகளின் உருவப்படங்களில் Employee Tasks என்ற அட்டவணையின் உருவபொத்தானை மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக
3 பின்னர் இதே அட்டவணையின் கீழ்பகுதியில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக
4 அதன்பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Pasteஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5 பின்னர் தோன்றும் Copy tableஎன்ற(படம்-1) சாளரத்தில் இந்த அட்டவணையின் பெயரை Employee Tasks 1 என்றவாறு மாற்றியபின் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.1
6 அதன்பின்னர் தோன்றிடும் Assign column என்ற( படம்-2)திரையில் >> என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
7.உடன்பழைய அட்டவணையின் புலங்கள் அனைத்தும் புதிய அட்டவணைக்கு போய்ச்சேரும் பின்னர்Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3.2
8 இந்நிலையில் பழைய அட்டவணையின் புலங்களின் வடிவமைப்புகளும் புதிய அட்டவணைக்கு அப்படியே வந்து சேர்ந்திருப்பதை காணலாம் தேவையெனில் அவைகளை மாற்றி யமைத்திடுக அதன்பின்னர் Createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய அட்டவணையொன்று நாம் மாற்றியமைத்தவாறு உருவாகிவிடும் இவ்வாறே தேவையான அட்டவணைகளை உருவாக்கிகொள்க
வடிவமைப்பு காட்சியின்மூலம் புதிய அட்டவணையொன்றை உருவாக்குதல்(Create Table in Design View )
புதிய அட்டவணையொன்றை இந்த வடிவமைப்பு காட்சியின்மூலம் உருவாக்குவது மிகசிறந்தமுன்னேறிய வழிமுறையாகும் இந்த வழிமுறையில் அட்டவணையின் குறிப்பிட்ட புலத்தின் வடிவமைப்பு விவரங்களை நேரடியாக உள்ளீடு செய்யஅனுமதிக்கின்றது இந்த வழிமுறைமூலம் Fuelஎன்ற அட்டவணையொன்றையும் FuelID, Date,Fuel Cost, Fuel Quantity, Odometer, PaymentType ஆகிய அதனுடைய புலங்களையும் உருவாக்குவதாக கொள்வோம்
இதில் Fuel Cost என்ற புலத்திற்கு நாணய வடிவமைப்பும் இருதசமபுள்ளியும், Fuel Quantity என்ற புலத்திற்கு எண்வடிவமைப்பும் மூன்றுதசமபுள்ளியும், Odometer என்ற புலத்திற்கு எண் வடிவமைப்பும் ஒருதசமபுள்ளியும் ,PaymentType என்ற புலத்திற்கு உரைவடிவமைப்பில் இருக்குமாறும் நேரடியாக அந்தந்த புலத்தின் பெயரையும் அதனுடைய வடிவமைப்பையும் அமைத்திடவேண்டும்
1.இதற்காக தரவுதளபலகத்தில் table icon என்பது தெரிவுசெய்யபட்டு அதனுடைய தொடர்ச்சியாக வலதுபுறபலகத்தில் Tasks என்பதன்கீழ் காணும் பட்டியலில் Create Table in Design View என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
2உடன்விரியும் Table Design என்ற திரையில் Field Name என்பதற்கு முதல் புலத்தின் பெயரான FuelID என்பதையும்Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Integer [INTEGER]என்பதையும் கீழ்பகுதிபலகத்திலுள்ளField properties என்பதன்Auto value என்பதை yes எனவும் மாற்றியமைத்திடுக
3 FuelID என்பதன் இடதுபுறத்திலுள்ள பச்சைவண்ண முக்கோணத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கி சூழ்நிலை பட்டியை தோன்றச்செய்க
4 அதிலுள்ள ( படம்-3)கட்டளைகளிலிருந்து Primary key என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த புலத்தினை தொடக்க திறவுகோளாக (Primary key) அமைத்தபின் Description என்பதில் இந்த புலத்தைபற்றிய விவரங்களை உள்ளீடுசெய்திடுக
இவ்வாறே Field Name என்பதற்கு மற்ற புலங்களின் பெயர் ஒவ்வொன்றையும் உள்ளீடுசெய்திடுக
இரண்டாவது புலமான Date என்பதனுடைய Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Date[DATE]என்பதையும் PaymentTypeஎன்ற புலத்தின்Field typeஎன்பதில் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Text [VARCHAR]என்பதையும் மற்ற புலங்களான Fuel Cost, Fuel Quantity, Odometer ஆகியமூன்றின் Field typeஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து Number [NUMERIC]என்பதையும் தெரிவுசெய்து அமைத்துகொள்க

3.4
Fuel Cost என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஐந்து என்றும் Decimal places என்பதற்கு இரண்டு என்றும் அமைத்திடுக இந்நிலையில் format example என்பதற்கருகில் உள்ள Format example என்ற முப்புள்ளி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்Field format என்ற உரையாடல்பெட்டியொன்று(படம்-4 )இயல்புநிலையில்format என்ற தாவியினுடைய பொத்தான்திரை திரையில் தோன்றிடும் அதில்category என்பதில் currency என்றும் format என்பதில் கீழிறங்கு பட்டியலிலிருந்துINR Tamil என்றும்Language என்பதில் கீழிறங்கு பட்டியலிலிருந்துTamil என்றும் தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அவ்வாறே Fuel Quantity என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஆறு என்றும் Decimal places என்பதற்கு மூன்று என்றும் அமைத்து மேலே Fuel Cost என்ற புலத்திற்கு மேற்கூறிய படிமுறைகளை பின்பற்றி மற்றவடிவமைப்பு விரங்களையும் அமைத்திடுக
Odometer என்ற புலத்தின் கீழ்பகுதியின் Field properties என்பதன் கீழ் LENGTH என்பதற்கருகில் ஐந்து என்றும் Decimal places என்பதற்கு ஒன்று என்றும் அமைத்து மேலே Fuel Cost என்ற புலத்திற்கு கூறிய படிமுறைகளை பின்பற்றி மற்றவடிவமைப்பு விரங்களை அமைத்திடுக இறுதியாக இந்த அட்டவணைக்கு Fuel என்றவாறு ஒருபெயரிட்டு சேமித்தபின் இந்த சாளரத்தினை File => Close=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிமூடிவிடுக
பட்டிபெட்டி(Listbox)வழிமுறையில் அட்டவணையொன்றை உருவாக்குதல்
ஒரே தகவல் ஆனது வெவ்வேறு வகையில் ஒவ்வொரு புலத்திலும் குறிப்பிடப்பட்டு அட்டவணைகளை உருவாக்குவதற்காக ஒவ்வொரு அட்டவணையின் முதல்புலம் தகவல்புலமாகவும் ID என்பது இரண்டாவது புலமாகவும் உருவாக்கவேண்டும் இதற்காக முன்பு கூறிய Create Table in Design View என்ற வழிமுறையின்படி உருவாக்கிய அட்டவணையில் Type ,PaymentID ஆகிய இருபுலங்களில் மட்டும் PaymentID என்ற புலத்தின் கீழ்பகுதி பலகத்திலுள்ளField properties என்பதன்Auto value என்பதை yesஎன மாற்றியமைத்தும்
இடது புறத்திலுள்ள பச்சைவண்ண முக்கோணத்தை தெரிவுசெய்து இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக.உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Primary key என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த புலத்தினை தொடக்க திறவுகோளாக அமைத்தபின் மற்றபண்பியல்பு விவரங்களை தேவையானவாறு அமைத்துகொள்க.பின்னர் Description என்பதில் இந்த புலத்தைபற்றிய விவரங்களை உள்ளீடுசெய்து இந்த அட்டவணைக்கு PaymentType என்றவாறு (படம்-5) ஒருபெயரிட்டு சேமித்திடுக. இதன்பின்னர் இந்த சாளரத்தினை File= > Close=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிமூடிவிடுக

3.5
இவ்வாறு பட்டிபெட்டி வழிமுறையில் உருவாக்கிய அட்டவணைக்கு என தனியானதொரு படிவ வடிவமைப்புத்தேவையில்லை நேரடியாக குறிப்பிட்ட புலத்தில் தரவுகளை உள்ளீடு செய்யமுடியும்
1இதற்காக தரவுதள சாளரத்தின் திரையில் நாம் காணும் பொருட்களின் உருவப்படங்களில் அட்டவணையின் உருவபொத்தானை(table icon) மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குக
2 உடன் விரியும் அட்டவணைகளின் உருவப்படங்களில் PaymentType என்ற அட்டவணையின் உருவபொத்தானை மட்டும் இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக
உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் openஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர்விரியும் திரையில் sk என முதல்புலத்தில் உள்ளீடுசெய்து tab என்றவிசையை விசைப்பலகையில் அழுத்துவதன் வாயிலாக இரண்டாவது புலத்திற்கு சென்று அங்கு kv என உள்ளீடுசெய்க
பின்னர் tab என்றவிசையை விசைப்பலகையில் அழுத்துவதன் வாயிலாக மூன்றாவது புலத்திற்கு சென்று அங்கு cash என உள்ளீடுசெய்து இதனை சேமித்து இந்த அட்டவணைசாளரத்தினை மூடிவிடுக
திரைக்காட்சியை உருவாக்குதல்
திரைkdகாட்சி என்பது ஒரு வினாமூலம் உருவாக்கபடுகின்றது இந்த திரைகாட்சி என்பது ஒரு அட்டவணையே ஆகும் தரவுதளத்தில் நம்மால் உருவாக்கபட்ட அட்டவணைகளிலிருந்து நாம் எழுப்பும் வினாவிற்கேற்ற அட்டவணையாக இந்த திரைகாட்சியை (படம்-6 )திரையில் காட்சியளிக்கசெய்வதாகும்

புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-26கவணிப்பாளரின் இடைமுகத்தை நடைமுறைபடுத்திடும் செயலினை பயன்படுத்தி பதிவுசெய்தல்

இது கவணித்தல் இடைமுகத்தை நம்முடையசெயல்இனத்தின் நடைமுறை-படுத்திடுவதற்கான-தாகும் தொடர்ந்து முதன்மை செயல்களில் கையாளுபவரின் வழிமுறையை அதனுடன் வைத்தபின் இந்த setOnClickListener என்பதை அழைத்திடலாம்
நம்முடைய பயன்பாடு ஒரு ஒற்றையான கட்டுப்பாட்டினை கவணிப்பாளர்வகையில் கொண்டிருந்தால் இந்த அனுகுமுறையானது மிகச்சிறந்ததாகும் அதற்குபதிலாக நிகழ்வு உருவாவதை பெறுகஎன்ற கட்டுபாட்டினை சரிபார்ப்பதற்காக நாம் மேலும்கட்டளை வரிகளைமீண்டும் செயற்படுத்திடவேண்டியிருக்கும் அதனால் பல கவணிப்பாளரின் கட்டுப்பாடுகள் மிகச்சரியாக செயல்படாமல் இருந்துவிடுகின்றன
பின்வருபவை மிகஎளிமையான படிமுறைகளாகும் தனியான கவணித்தல் இனத்தினை பதிவுசெய்வதற்கும் மேலும் சொடுக்குதல் நிகழ்வினை படிப்பதற்கும் அதனை தொடர்ந்து இவைகளை எவ்வாறு தனித்தனியாக பயன்படுத்தி கொள்வது என இந்த படிமுறைகள் காண்பிக்கின்றன இவ்வாறான நடைமுறையில் தேவைப்படும் எந்தவொரு நிகழ்வுகளின் வகைகளிலும் நம்முடைய கவணிப்பாளரை நடைமுறைபடுத்திடமுடியும்

பின்வருவது src/com.example.eventdemo/MainActivity.java.எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக்க முடியும்
package com.example.eventdemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.view.View;
import android.view.View.OnClickListener;
import android.widget.Button;
import android.widget.TextView;
public class MainActivity extends Activity implements OnClickListener {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
//— find both the buttons—
Button sButton = (Button) findViewById(R.id.button_s);
Button lButton = (Button) findViewById(R.id.button_l);
// — register click event with first button —
sButton.setOnClickListener(this);
// — register click event with second button —
lButton.setOnClickListener(this);
}
//— Implement the OnClickListener callback
public void onClick(View v) {
if(v.getId() == R.id.button_s)
{
// — find the text view —
TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size —
txtView.setTextSize(14);
return;
}
if(v.getId() == R.id.button_l)
{
// — find the text view —
TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size —
txtView.setTextSize(24);
return;
}
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “Event Demo”எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப் பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

இப்போதுSmall Font அல்லது Large Font ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை அல்லது இவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நம்முடைய அனைவருக்கும் வணக்கம் எனும்உரையானது அதற்கேற்ப மாறியமையும் ஏனெனில் பதிவுசெய்யப்பட்ட சொடுக்குதல் நிகழ்வினை கையாளுபவர் வழிமுறையில் ஒவ்வொரு சொடுக்குதல் நிகழ்வும்இதன்வாயிலாக அழைக்கப் படுகின்றது
கவணிப்பாளரின் இடைமுகத்தை நடைமுறைபடுத்திடும் செயலை பயன்படுத்தி பதிவுசெய்தல்
இது நம்முடைய கவணிப்பாளரை இடைமுகத்தை நடைமுறைபடுத்துதலின் செயல்இனமாகும் முதன்மை செயலில் நம்முடைய கையாளுபவரின் வழிமுறையை வைத்திடவேண்டும் பின்னர் setOnClickListener(this) என்பதை அழைத்திடவேண்டும் இந்த அனுகுமுறை மிகசிறப்பானதாகும் ஏனெனில் நம்முடைய பயன்பாடு கவணிப்பாளர் வகையை வேறுவகையில் ஒற்றையான கட்டுப்பாட்டாளரை மட்டும் கொண்டதாக இருக்கின்றது நாம் இந்நிகழ்வினை உருவாக்குவதை சரிபார்ப்பதற்கு நமக்கு மேலும் நிரல்தொடர் கட்டளையை கொண்டுவரவேண்டியிருக்கும் இரண்டாவதாக தருக்கத்தை கவணிப்பாளருக்கு கடத்தமுடியாது அதனால் பல்லடுக்கு கட்டுப்பாடு மிகச்சரியாக இயங்காது
பின்வருபவை மிகஎளிமையான படிமுறைகளாகும் கவணித்தல் இனத்தை பதிவு-செய்வதற்கும் சொடுக்குதல் நிகழ்வினை படிப்பதற்காகவெனவும் தனித்தனியாக எவ்வாறு பயன்படுத்தி கொள்வது எனவுமம் இந்த படிமுறைகள் காண்பிக்கின்றன

பின்வருவது filesrc/com.example.eventdemo/MainActivity.java. எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக்க முடியும
package com.example.eventdemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.TextView;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle saved InstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main); }
//— Implement the event handler for the first button.
public void doSmall(View v) {
// — find the text view — TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size —
txtView.setTextSize(14);
return;
}
//— Implement the event handler for the second button.
public void doLarge(View v) {
// — find the text view —
TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size – txtView.setTextSize(24);
return;
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும் . இங்கு நாம் இரு பொத்தான்களுக்கும் android:onClick=”methodName” என்பதை சேர்க்கவேண்டும், அந் நிகழ்வினை கையாளுபவரை சொடுக்குவதாக கொடுக்கப்பட்ட பெயர்வழிமுறையில் பதிவுசெய்யபடும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட “Event Demo”எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப் பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

இப்போதுSmall Font அல்லது Large Font ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை அல்லது இவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நம்முடைய அனைவருக்கும் வணக்கம் எனும்உரையானது அதற்கேற்ப மாறியமையும் ஏனெனில் பதிவுசெய்யப்பட்ட சொடுக்குதல் நிகழ்வினை கையாளுபவர் வழிமுறையில் ஒவ்வொரு சொடுக்குதல் நிகழ்வும் அழைக்கப் படுகின்றது
பயிற்சி
வெவ்வேறு நிகழ்வுகளின் வகைகளுக்காக வெவ்வேறு நிகழ்வுகளை கையாளுபவரை செயல்படுத்திட முயற்சிசெய்திடுக பின்னர் மிகச்சரியாக அவைகளுக்கிடையேயான வேறுபாட்டினை அறிந்து புரிந்து கொள்க நிகழ்வுகள்தொடர்பான பட்டியல் , பொருட்களை தெரிவுசெய்தல் ஆகியவை சிறிது வேறுபட்டிருக்கலாம் ஆனால் இவை மேலே விவரித்தவாறு அதே அடிப்படை கருத்தமைவில் செயல்படக்கூடியதாகும்

கூகுள் குரோம் எனும் இணையஉலாவியில்கூட வாட்ஸ் அப்பை பயன்படுத்திடமுடியும்

ப்ளூஸ்டாக் போன்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டரை கொண்டு விண்டோ இயங்கிடும் கணினியில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது பழைய கதையாகும் தற்போது கூகுள் குரோம் எனும் இணையஉலாவியில்கூட வாட்ஸ் அப்பை பயன்-படுத்திட-முடியும் என்ற தற்போதைய புதிய வசதியைபற்றி தெரிந்து பயன்படுத்தி கொள்க
இதற்காக ஆண்ட்ராய்டில் சமீபத்திய வாட்ஸ்அப் பதிப்பு நிறுவுகை செய்யப்பட்டுள்ளதா-வென்றும் ,நம்முடைய கணினியில் கூகுள்குரோம் இணைய-உலாவி எனும் பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்டுள்ளாதவென்றும் இணைய-இணைப்பு நம்முடைய கைபேசியிலும் கணினியிலும்உள்ளதா-வென்றும் சரிபார்த்து கொள்க பின்னர் கூகுள்குரோம் எனும் இணைய-உலாவியை செயல்படுத்தி முகவரியை உள்ளீடு செய்திடும் முகவரிபட்டையில் https://web.whatsapp.com என்றவாறு முகவரியை உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையைஅழுத்துக அவ்வாறே நம்முடைய கைபேசியின் ஆண்ட்ராய்டிலும் Menu > Whatsapp Webஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக வாட்ஸ் அப்பை திறந்து கொள்க அதன்பின்னர் நம்முடைய கணினியின் QR Codeஐயும் Whatsapp Web Client ஐயும் கைபேசியின் வாயிலாக வருடுதல்(Scan) செய்திடுக பின்னர் நம்முடைய கணினியின் https://web.whatsapp.com எனும் திரையில் மேலே வலதுபுற-மூலையில் உள்ள  Customize and Control Google Chrome.எனும் மூன்றுகோடுகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நம்முடைய இடம்சுட்டியை More tools என்ற பகுதிக்கு நகர்த்தி சென்று சொடுக்குக பின்னர்விரியும் பட்டியில் Create Application Shortcuts என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்மேல்மீட்புபட்டிஒன்று where you want to store it on Desktop or Start menu or both ஆகிய வாய்ப்புகளுடன் திரையில் தோன்றிடும் அவற்றுள் நாம் விரும்பும் வாய்ப்பினைமட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக
இதையேஇரண்டாவது வழிமுறையாக https://web.whatsapp.com எனும் தாவித்திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Pin Tab என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்இடதுபுறஓரம் இது இணைக்கப்பட்டுவிடும் அதனோடு இதற்கான செய்திபட்டியொன்றும் திரையில் தோன்றிடும் இதன்பின்னர் நம்முடைய கணினியில் செயல்படும் கூகுள்குரோம் எனும் இணையஉலாவியிலும் இந்த வாட்ஸ்அப்பை பயன்படுத்தி கொள்ளலாம்

நம்முடைய ஆண்ட்ராய்டு கைபேசியில் கூகுள் கணக்கினை சேர்த்தல் நீக்கம்செய்தல்மாறுதல்செய்தல் எவ்வாறு

புதிய ஆண்ட்ராய்டு சாதனத்தினை கட்டமைவுசெய்திடும்போது பெரும்பாலானவர்கள் தங்களுடைய முதன்மையான கூகுள் அல்லது ஜிமெயில் கணக்கிணை கண்டிப்பாக பயன்படுத்திடுவார்கள் அவ்வாறில்லாமல்வேறு கணக்கிலும் கட்டமைவுசெய்திடமுடியும் முதலில் நம்முடைய கைபேசியில் Settings என்ற பகுதிக்கு செல்க பின்னர் அதில் Accounts என்ற தாவியின் திரைக்குசெல்க இந்த திரையின் தோற்றம் நம்முடைய கைபேசியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் அதில் social media, email & storage accounts போன்றவற்றின் பெயர்களுடன் கூடிய நம்முடைய கணக்கின் பட்டியில் விரியும் அந்த பட்டியலின் முடிவில் Add Account என்ற வாய்ப்பு இருப்பதைகாணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எந்தெந்த பகுதியில் புதிய கணக்கினை துவங்கலாம் என பட்டியலிடும் அவற்றுள் Google என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தபின்னர் நம்முடைய மின்னஞ்சல்முகவரி அல்லது கைபேசிஎண் கடவுச்சொற்களைஉள்ளீடு செய்து கொள்க அதைவிட Create new account என்ற வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குதல்செய்து புதிய ஜிமெயில் கணக்கினையும் துவங்கலாம்
இதன்பின்னர் Google எனும் தாவியின்திரையைதோன்றிடசெய்தால் முன்பு போலவே நம்முடைய அனைத்து கணக்கு விவரங்களையும் பட்டியலாக காண்பிக்கும் வேறுபுதிய கணக்கிற்கு மாறுதல்செய்திடுவதற்காக கைபேசியில் Settings என்ற பகுதிக்கும்பின்னர் அதில்Google எனும் தாவியின்திரைக்கும்செல்க Search & Now எனும் தாவியின் திரையை தேடிபிடித்து அந்த திரைக்கு செல்கஅதில் Accounts & Privacyஎனும் தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல்செய்திடுக பின்னர் விரியும் Accounts & Privacyஎனும் தாவியின்திரையில் Google Account என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் மேல்மீ்ட்பு பட்டியலின் வாயிலாக நம்முடைய கணக்கினை தெரிவுசெய்து கொள்க அல்லது Sign out எனும் வாய்ப்பினைசொடுக்குதல்செய்து வெளியேறுக

மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட்டிற்கு மாற்றான பயன்பாடுகள்

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட்டினை பயன்படுத்திவருவது அனைவரும் அறிந்த செய்தியே இதற்கு மாற்றாக இதே வசதிவாய்ப்புகளை கொண்ட கட்டற்ற பயன்பாடுகளும் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளன அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு
1. Simplenote இதுஒன்நோட்டிற்குமாற்றான ஒரு கட்டற்ற பயன்பாடாகும் இதனைhttps://simplenote.com என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
2. Evernote என்பதுமற்றொரு ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும்இது வாடிக்கையாளர் விரும்பியவாறு கட்டமைப்பை மாற்றியமைத்து கொள்ள அனுமதிக்கின்றது இதனைhttps://evernote.com/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
3 . Laverna என்பதுமூன்றாவதான ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதனை https://laverna.cc/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
4. Turtl என்பதுநான்காவதான ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது அனுமதியற்ற மற்றவர்கள்யாரும் இதனை அணுகாதவாறு பாதுகாப்பு வசதியை வழங்குகின்றது அதனோடு உருவப்படங்களையும் கையாளும் வசதியை வழங்குகின்றது இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதனை https://turtlapp.com/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
5. Google Keep என்பதுஒன்நோட்டிற்கு மாற்றான உருவப்படங்களிலும் உரையை உள்ளீடு செய்திடும் வசதியை அளிப்பதோடு அவைகளை எளிதாக கையாளும் வசதியை வழங்குகின்றது இதனை https://www.google.com/keep/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க

கூகுள்ஸீட்டின் விரிதாட்களுக்கிடையே தரவுகளைஎவ்வாறு இணைப்பது

இணையத்தின் கூகுளின் ஸீட் எனும் இணைய பயன்பாடானது ஏறக்குறைய மைக்ரோ ஸாப்டின் எக்செல்விரிதாள் போன்றதாகும் ஆயினும் இவைகளில் தனித்தனியாக மட்டுமே தரவுகளை நாம் அனைவரும் உள்ளீடு செய்து வருகின்றோம்
அதனோடு அவைகளுக்கிடையே IMPORTRANGE எனும் செயலியின் வாயிலாக இணைப்பு ஏற்படுத்தி நம்முடைய பணியை மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த செயலியானது ஒரு தாளின் தரவுகளை மற்றொரு விரிதாளிற்கு மாற்றிடுகின்றது
இந்த செயலியின் கட்டமைப்பு=IMPORTRANGE(“spreadsheet_key”, “range_string”) என்றவாறிருக்கும் இதிலுள்ள spreadsheet_key என்பது நாம் இணைக்க விரும்பும் தரவுகளிருக்கும் விரிதாளின் இணையமுகவரியாகும்
இதிலுள்ள range_string என்பது Sheet1!A1:D100 என்றவாறு நாம் இணைக்க விரும்பும் தரவுகளிருக்கும் விரிதாளின் பகுதியாகும்
மேலும் QUERYஎனும் செயலியை ImportRange என்பதுடன் =QUERY( ImportRange( “1ByTut9xooZdPIBF55gzQ0Cdi04owDTtLVc_gPGtOKY0”, “Sheet1!A1:O1000” ) , “select Col5 where Col2 = ‘இந்தியா'”) என்றவாறு குறிப்பிட்ட நிபந்தனையுடன் தரவுகளைவிரிதாட்களுக்கிடையே இணைப்பினை ஏற்படுத்திக பயன்படுத்தி கொள்ளமுடியும்

JQuery என்றால் என்ன ஏன்இதுஇவ்வளவு பிரபலமாக ஆகியுள்ளது

இணையத்தை உருவாக்கபவர்களுக்கும் மேம்படுத்துபவர்களுக்கும் எளிய கருவியாக இருப்பதே இந்தJquery ஆகும் மிகமுக்கியமாகஜாவா மொழியுடன் இணையத்தை வடிவமைத்திட விரும்புவோர்களின் குறிமுறைவரிகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்தல் பிழைகளை நீக்குதல் வடிவமைத்தலை கற்றல் ஆகிய பணிகளுக்கு இந்த Jquery இன் வரம்பற்ற சுயமாக கற்கும் வழிமுறைகள் பேருதவியாக விளங்குகின்றன
அடுத்ததாக இது மொஸில்லா ஓப்ரா குரோம் போன்ற எந்தவொரு இணையஉலாவியுடனும் ஒத்தியங்கிடும் தன்மைகொண்டது
மூன்றாவதாக இதனை பயன்படுத்த மிகஎளிமையானது
நான்காவதாக நம்முடைய கணினியில் இது செயல்படுவதற்காக மிககுறைந்த நினைவகமே போதுமானது
ஆனால் மிகவிரைவாக செயல்படக்கூடியது
ஆறாவதாக ஜாவாவை வெறும் அரைமணிநேரத்திலேயே கற்று நாமே சொந்தமாக குறிமுறைவரிகளை இதன் வாயிலாக எழுதவழிவகை செய்கின்றது
ஏழாவதாக எந்தவொரு பயன்பாட்டுடனும் பின்னணைப்பாக செய்து பயன்படுத்தி கொள்ளஇது அனுமதிக்கின்றது
இதில்sliders, date pickers, dialogue boxesபோன்ற கூடுதல் வசதிவாய்ப்புகள் தன்னகத்தே கொண்டுள்ளது என்பனபோன்ற காரணங்களினால் இந்த Jquery ஆனது நிரல்தொடராளர்களால் மிகவும் விரும்பப்படும் அளவிற்கு பிரபலமாக விளங்குகின்றது

நிரலாளர்கள் தங்களுடைய குறிமுறைவரிகள் மிகதிறனுடன் அமைந்திடு-வதற்காக கடைபிடிக்கவேண்டிய அடிப்படைக்கோட்பாடுகள்

பொதுவாக நிரலாளர்கள் அனைவரும் தாம் உருவாக்கிடும் குறிமுறைவரிகள் மிகத்திறனுடன் இருந்திடவேண்டும் என்றே விரும்புவார்கள் அதற்காக அவர்கள் பின்வரும் கோட்பாடுகளை தாம் குறிமுறைவரிகளை உருவாக்கிடும்போது கடைபிடித்திடுமாறு கோரப்படுகின்றார்கள்
1. உப்பிச கோட்பாடு துவக்ககாலத்தில் எந்தவொரு பயன்பாட்டிலும் கணினியின் சிபியூ ரேம் போன்றவைகளை கையாளுமாறு தம்முடைய குறிமுறைவரிகளை எழுத வேண்டியருந்தது ஆனால் தற்போது அவைகளை பற்றி கவலைபடத்தேவையில்லை அதற்கான துனைச்செயலியை தேவைப்படும்போது அழைத்து கொள்ளலாம் என வளர்ச்சி பெற்றுள்ளது அதேபோன்று எந்தவொரு பயன்பாட்டிலும் இதற்காகவென அதிக காலத்தையும் நினைவகத்தையும் வீணாக்காமல் ஏற்கனவே இருக்கின்ற செயலிகளை தேவைப்படும்போதுஅழைத்து பயன்படுத்தி கொள்கின்றவாறு குறிமுறைவரிகள் அமைத்திடுக
2.கெடுதலே சிறந்ததெனும்கோட்பாடு சிறியசிறிய பிரச்சினை எழும்போதுதான் அவைகளுக்கான தீர்வுகளும் உடனுக்குடன் கிடைக்கும் அதனால் எந்தஅளவு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோமோ அந்தஅளவிற்கு நம்முடைய பயன்பாடு மிகச்சசிறந்ததாக வெற்றிநடைபோடும்
3. படிப்படியான முன்னேற்ற கோட்பாடு இருசக்கரவாகணங்கள் அல்லது நான்கு சக்கரவாகணங்கள் எடுத்தவுடனேயே அதிவேகத்தை கடைபிடித்தால் உடனடியாக விபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும் அதனால் மிகமெதுவாக இயக்கத்தை துவங்கி ஓட்டத்தை படிப்படியாக உயர்த்தி கொண்டே செல்லும்போது அமைதியாக சரியாக ஓடுவதைபோன்று நம்முடைய குறிமுறைவரிகளை சின்னஞ்சிறிய பயன்பாடுகளில் ஆரம்பித்து உயர்த்தி கொண்டே சென்று பெரிய செயல்திட்டத்திற்கான பயன்பாட்டினை உருவாக்கிடவேண்டும்
4. எந்தவொரு சூழலையும் தாங்கிடும் கோட்பாடு நம்முடைய பயன்பாட்டு குறிமுறைவரிகளானது எந்தவொருஇக்கட்டான சூழலை எதிர்கொண்டாலும் அதனை வெற்றிகொண்டு செயல்படும் வண்ணம் வடிவமைத்திடவேண்டும்
5. பிழைநீக்கும் கோட்பாடு வழக்கமாக ஒரு பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை எளிதாக எழுதிவிடலாம் ஆனால் அந்த பயன்பாட்டினை செயல்படும்போதுஎழும் பிழைகளை தீர்வுசெய்வது என்பதே தீரக்கமுடியாத தலைவலியாகும் அதனால் இவ்வாறு பிழைஎதுவும் எழாமல் நம்முடைய குறிமுறைவரிகள் இருக்குமாறு அமைந்திடவேணடும்
6. தொன்னூறுக்கு தொன்னூறுஎனும்கோட்பாடு பொதுவாகநிரலாளர்கள் 90 சதவிகித பயன்பாட்டின் குறிமுறைவரிகளை விரைவாக மிககுறைந்தநேரத்தில்அதாவது 10 சதவிகிதநேரத்திற்குள் உருவாக்கிடுவார்கள் ஆனால் மிகுயுதியுள்ளன 10 சதவிகித குறிமுறைவரிகள் 90 சதவிகித நேரத்தை எடுத்து கொள்ளும் அவ்வாறில்லாமல் நேரத்தினை சமமாக கணக்கிட்டு பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை உருவாக்கிட பழகிடவேண்டும்

இப்போதும் சி எனும் கணினிமொழி எவ்வாறு நிலைத்து நிற்கின்றது

பைத்தான் ரூபி பிஹெச்பி, போன்ற பல்வேறு கணினிமொழிகள் தற்போது தோன்றி வளர்ந்து வந்தாலும் சிஎனும் கணினிமொழி தற்போதும் வழக்கொழிந்துபோகாமல் நிலைத்து இருக்கின்ற ஒரு கணினிமொழியாகும் அதுஎவ்வாறு சாத்தியமாகின்றது தற்போதைய கணினிமொழிகள் அனைத்தும் மேல்நிலைமொழிகள் ஆனால் சிமொழியானது கீழ்நிலைமொழியாகும் என வாதிடுவார்கள் ஆம் கீழ்நிலை மொழியாக இருப்பதால்தான் சிபியூ ரேம் போன்ற அடிப்படை கணினியின் உறுப்புகளை கையாளுவதற்கு அடுத்தஎந்தவொரு துனைச்செயலிகளின் துனையில்லாமல் அவைகளை தானே நேரடியாக கையாளும் திறன் கொண்டதாக விளங்குகின்றது இரண்டாவதாக புதியவர்கள் எந்தவொரு கணினிமொழியைமுதலில் கற்றுகொண்டபின்னர் அதனடிப்படையில் மிகுதி அனைத்து கணினிமொழிகளையும் எளிதாக கற்கலாம் என கூறுவார்கள் ஆயினும் தற்போதைய பைத்தான் மொழியை புதியதாக கற்பவர்கள் அதனடிப்படையில் மற்றகணினிமொழிகளை கற்க முனைந்தால் குழப்பம்தான் மிஞ்சும் ஆனால் இந்த சிஎனும் கணினிமொழியை புதியவர் ஒருவர் ஐயம் திரிபறகற்றுவிட்டால் அதனடிப்படையில் அனைத்து கணினிமொழிகளைமிகஎளிதாக கற்கமுடியும் தற்போதைய புதிய கணினிமொழிகள் அனைத்தும் துரித உணவகம் போன்றது நமக்கு தேவையானதை தயார்நிலையில் உடனடியாக அடைந்துவிடலாம் ஆனால் அதில் ஏதேனும் பிரச்சினை எனில்அதனை சரிசெய்துசுமுகாக செயல்படசெய்வதற்காக மற்றவர்களையே சார்ந்திருக்க வேண்டும் ஆனால் சிஎனும் கணினிமொழியானது நமக்குதேவையான உணவை நாமே முயன்று தயார்செய்திடுமாறு வழிகாட்டிடுகின்றது உடனடியாக துரித உணவகம் போன்று தேவையான பயன்பாடு கிடைக்கவில்லையென்றாலும் பிரச்சினையில்லாத சுத்தமான தூய்மையான உணவை நாமே தயார்செய்து பயன்படுத்திடுமாறு பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளலாம்
தற்போதைய புதிய கணினிமொழிகள் வியாபார பயன்பாடுகள் இணையபயன்பாடுகள் கைபேசி பயன்பாடுகல் தரவுகளை ஆய்வுசெய்தல் ஆகியவற்றினை மட்டும் உருவாக்கிடும் தன்மைகொண்டது இவ்வாறான பயன்பாடுகள் மட்டுமல்லாது லினக்ஸ் போன்ற இயக்க-முறைமையையும் சிபோன்ற புதிய கணினி மொழியையும் இந்த சிஎனும் கணினிமொழியால் மட்டுமே உருவாக்கிடமுடியும்தற்போதைய புதிய கணினிமொழிகளினால் குறைவான நபர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கும் ஆனால் சிஎனும் கணினிமொழியால் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் மேலேகூறிய காரணங்களின் அடிப்படையில் எப்போதும் நிலையான சிஎனும் கணினிமொழியை கற்று நம்முடைய வாழ்க்கையில் வெற்றிநடைபோடவும் வாருங்கள் இதற்கான இணைய முகவரி http://publications.gbdirect.co.uk/c_book/ ஆகும்

PDFfillerஎனும் பயன்பாட்டினை கொண்டு பிடிஎஃப் கோப்புகளை திருத்தம்செய்திடலாம்

பொதுவாக நாம் கையாளும் அனைத்துபிடிஎஃப் ஆவணங்களும் நம்பகமானதாகவும் கையடக்கமானதாகவும் சிறந்ததாகவும் விளங்கினாலும் அவற்றை உருவாக்குதல் அவற்றில் திருத்தம் செய்தல் முந்தைய ஆவணமாக மாற்றியமைத்தல் ஆகிய பணிகளை செயற்படுத்துவது மிகசிக்கலான சிரமமான செயலாக உள்ளது இதற்காக உதவவருவதுதான் இந்த PDFfillerஎனும் பயன்பாடாகும் இது பயன்படுத்த எளிதானது நம்முடைய பிடிஎஃப் ஆவணத்தைஇழுத்து கொண்டுவந்து இதில்விட்டால் (drag-n-drop போதும் அதனை தொடர்ந்து நாம் மற்ற ஆவணங்களைபோன்று திருத்தம் செய்திடும் பணியை எளிதாக மேற்கொள்ளலாம்.இதில் நாம் வழக்கமான எழுத்துபிழை சரிபார்த்தல் இலக்கணபிழை சரிபர்த்தல் கூடுதலாக உரையை சேர்த்தல் தேவையற்றதை நீக்கம்செய்தல் போன்ற பல்வேறு பணிகளைநம்முடைய வழக்கமான உரைபதிப்பானை போன்று எளிதாக செய்திடலாம் மேலும் கைவசமுள்ள பிடிஎஃப் ஆவணத்தை வேர்டு, எக்செல், பிபிடி, உரை ,உருவப்படம் போன்ற எந்தவொரு முந்தைய வடிவமைப்பிற்கும் மாற்றியமைத்திடலாம் இதிலுள்ள மாதிரி பலகத்தின் அடிப்படையில் எளிதாக புதியபிடிஎஃப் ஆவணத்தை உருவாக்கிடலாம் படிவங்களை உருவாக்கிடலாம் கணினிமட்டுமல்லாது கைபேசி திறன்பேசி போன்ற எந்தவொரு சாதனத்தின் வாயிலாக கூட இந்த பயன்பாட்டின் துனையுடன் பிடிஎஃப் ஆவணத்தை கையாளமுடியும் அதனோடுQR code இன் துனையுடன்ஆவணங்களை பகிர்ந்து கொள்ளலாம் இதனுடைய eSignஎனும் வசதியின் துனையுடன்பிடிஎஃப் ஆவணத்தில் நம்முடைய கையெழுத்தையும் சேர்த்து வழக்கான ஆவணம் போன்று இதனை மேம்படுத்தலாம் Facebook , LinkedIn,போன்ற சமூதாய வலைதளங்களில் கூட நம்முடைய பிடிஃப் ஆவணத்தினை இரண்டு காரணிகளின் பாதுகாப்பின் அடிப்படையில் பாதுகாப்பாக கையாளலாம் நம்முடைய ஆவணத்தை தேக்கிவைத்திடும் OneDrive, Dropbox, Google Drive and Box.net ஆகிய இணையபக்கங்களுடன் இந்த பயன்பாடு ஒருங்கிணைந்து செயல்படுகின்றது

Previous Older Entries