JpGraphஎனும் கட்டற்றமென்பொருள் கட்டுகளின்மூலம் PHPஐ பயன்படுத்தி வரைபடத்தை உருவாக்கலாம்

2

JpGraphஎன்பது  கல்விக்கான இலவச மென்பொருளாகவும் வியாபாரத்திற்கானதாகவும் பயன்படும் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனை  http://jpgraph.net/download/  எனும் இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க பின்னர் 1.பின்வரும் கட்டளை வரிகளை உள்ளீடுசெய்து ஒருகோட்டுவரைபடத்தை உருவாக்கமுடியும்

require_once(‘jpgraph/src/jpgraph.php’);

require_once(‘jpgraph/src/jpgraph_line.php’);

 இந்த கட்டளைவரிகளின் வாயிலாக வரைபடம் வரைவதற்கான கோப்பு உருவாக்கபடுகின்றது

$graph = new Graph(300,400); // 300 is the width and 400 is the hight

$graph – > SetScale(‘intln’); // set the scale of the graph

 இந்த கட்டளைவரிகளின் வாயிலாக  அளவீடுகள் அமைக்கபடுகின்றன

$data = array(2,5,6,7,8); இந்த கட்டளைவரியின் வாயிலாக  வரைபடத்தின் ஐந்து புள்ளிகள் குறிக்கபடுகின்றன

$plot = new LinePlot($data); இந்த கட்டளைவரியின் வாயிலாக  கோடுவரைவதற்கு அடிப்படையாக தரவுகளை எடுத்துகொள்ள கட்டளையிடப்படுகின்றது

$graph – > Add($pplot); இந்த கட்டளைவரியின் வாயிலாக   stroke எனும் செயலியின் வாயிலாக வரைபடத்தில் Plot வரையபடுகின்றது

$graph- > stroke();  இந்த கட்டளைவரியில்  stroke எனும் செயலியின் வாயிலாக கோட்டு வரைபடத்தை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது

2.பின்வரும் கட்டளை வரிகளை உள்ளீடுசெய்து பட்டைவரைபடத்தை உருவாக்கமுடியும்

require_once(‘jpgraph/src/jpgraph.php’); // பட்டைபடம் வரைவதற்கான கோப்பினை உருவாக்குதல்

require_once(‘jpgraph/src/jpgraph_bar.php’); // வரைபடத்தை உருவாக்குதல்

$graph = new Graph(350,220); //பட்டை வரைபடத்தின் அகலத்தையும் உயரத்தையும் குறித்தல்

$graph – > SetScale(“textline”); // அளவீடுகள் அமைத்தல்

$data = array(10,12,30,60); // பட்டை வரைபடத்தை வரையத்தேவையான தரவுகள்

$barplot = new BarPlot($data); // புதிய பட்டை வரைபடத்தை வரைவதற்காக

$graph – > Add($barplot); //பட்டைவரபடத்தை தரவுகளின் அடிப்படையில் வரைவதற்காக

$graph – >(stroke(); // வரைபடத்தை திரையில் பிரதிபலிக்கசெய்வதற்காக

கணினியின் பயன்பாடுகளை செல்லிடத்துபேசியின்வாயிலாக நேரடியாக இடைமுகம் செய்து SignalR என்ற பயன்பாட்டின்மூலம் கட்டுபடுத்தலாம்

   நாம் அனைவரும் பயன்படுத்திடும் செல்லிடத்து பேசியில் தயார்நிலை தகவல்தொடர்பு, மிகவிரைவான இணையசேவை, சக்திவாய்ந்தசெயல், குறைந்தசெலவு  என்பனபோன்ற நவீண அறிவியல் பயன்பாடுகளை நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றோம்  அதன் தொடர்ச்சியாக தற்போது SignalR என்ற பயன்பாட்டின் உதவியால் நம்முடைய செல்லிடத்து பேசிவாயிலாக கணினியின் பயன்பாடுகளை கட்டுபடுத்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

இந்த  SignalR என்ற கணினி பயன்பாடானது ASP.NET அடிப்படையில் உருவாக்கபட்ட சேவையாளர் வாடிக்கையாளர் ஆகிய இருவழி கட்டற்ற பயன்பாடாகும்

 முதலில் இதனை http://www.asp.net/signalr/ எனும் இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் Tools=>Library Package Manager=> Package Manager Console => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி கட்டுகளை பிரித்து கொள்க.

 அதன்பின்னர்  Install-package Microsoft-Asp.Net.SignalR  என்றவாறு கட்டளைவரியின் வாயிலாக இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க .

 இதில் 1.Self-hosting in console application, 2.IIS-hosting, 3.Self-hosting in Windows Service ஆகிய  மூன்று வாய்ப்புகள் உள்ளன அவற்றுள் நமக்கு தேவையான வாய்ப்பினை மட்டும் செயற்படுத்தி பயன்பெறுக

இது மைக்ரோசாப்ட் லிவ், ஓப்பன்ஆத், கூகுள், ஃபேஸ்புக் ட்விட்டர்  ஆகியவற்றின் பாதுகாப்பினை கொண்டது ஜாவாஸ்கிரிப்ட் , .நெட், விண்டோஃபோன்,ஆண்ட்ராய்டு ஆகியவற்றை ஆதரிக்ககூடியது

மேலும் இது  சேவையாளர் வாடிக்கையாளர் ஆகிய இருவழி பயன்பாடு மட்டுமல்லாது இணையபக்கங்களை மேம்படுத்தவும் உதவுகின்றது

இது தொடுதிரை வாயிலாக தகவல்தொடர்பு கொள்வதையும் , ஆதரிக்ககூடியதாக உள்ளது தரவுகளை கடத்துவதற்காக web socket, serversent events, forever frame,long polling, ஆகியவற்றை கையாளுகின்றது

மேலும் விவரங்களுக்கு https://github.com/SignalR/SignalR/wiki/  எனும் தளத்திற்கு செல்க.

1

லிபர் ஆஃபிஸ் கால்க்-47 லிபர்ஆஃபிஸின் கால்க் அறிமுகம்

  தரவுகளை உள்ளீடு செய்து கணக்கீடு செய்யும் எம் எஸ் ஆஃபிஸ் எக்செல் போன்ற தொரு லிபர்ஆஃபிஸின் விரிதாள் தான் கால்க் ஆகும்.இதில் எண்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் அதன்விளைவான சில தரவுகள் நமக்குகிடைக்கும். அதற்குபதிலாக தரவுகளை இதில் உள்ளீடு செய்து what if போன்ற வாய்ப்பாடுகளை செயல்படுத்தி அதன் விளைவுகளையும் பெறமுடியும் ..

இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் பயன் பின்வருமாறு

1.இதிலுள்ள செயலி(function) மூலம் தரவுகளின் சிக்கலான கணக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்பாட்டை உருவாக்கிட முடியும்

2.தரவுதளத்தின்  அடிப்படை செயல்களான தேக்கிவைத்தல், வடிகட்டுதல், பிரிதிபலிக்கசெய்தல் போன்றவைகளை இதில் செயல்படுத்திடமுடியும்

3.பல்வேறுவகையான இயக்கநேர வரைபடங்களை மிக முக்கியமாக இருபரிமான வரைபடங்கள், முப்பரிமான வரைபடங்கள் ஆகியவற்றினை இதில் உருவாக்கிட முடியும்

4.LibreOffice.org Basic, Python,Bean Shell,  JavaScript என்பன போன்ற உயர்நிலை மொழிகளை ஆதரிக்கின்ற  திரும்பதிரும்ப செய்யப்படும் செயல்களை தானாகவே செயற்படுத்து வதற்காக உருவாக்கப்படும் மேக்ரோக்களை இதில் எளிதாக உருவாக்கி செயற்படுத்த முடியும்

5.எம் எஸ் ஆஃபிஸ் எக்செல்லின் விரிதாளை லிபர்ஆஃபிஸ் கால்க்கில்  திறந்து பணிபுரிந்த பின்னர் நாம்விரும்பும் வகை கோப்பாக சேமிக்கமுடியும்.

6.நாம் பணிபுரிந்து வரும் இதனுடைய விரிதாளினை HTML, CSV, PDF,  Post Script என்பன போன்ற வகை கோப்புகளாக இதிலிருந்து பதிவேற்றும் செய்யவும் அவ்வாறே அவைகளின் பல்வேறு வகையான கோப்புகளை இதில் பதிவிறக்கம் செய்யவும்  முடியும்

பொதுவாக ஒருவர் லிபர்ஆஃபிஸ் கால்க்கில் பணிபுரிவதற்காக விரிதாட்கள் பயன்படு கின்றன இவை தனித்தனியான பல்வேறு விரிதாட்களை கொண்டவையாகும் இந்த விரிதாள் ஒவ்வொன்றும் எண்ணற்ற  கலன்களை(Cells) ஏறத்தாழ சுமார் 1,048,576 கலன்களை கொண்டதாகும் இந்த கலன்கள் 65536 கிடை வரிசைகளையும்(Row)   1024நெடுவரிசைகளையும் (Column)  கொண்டு கட்டமைக்க பட்டவையாகும் ஒரு கலனின் முகவரியானது நெடுவரிசையின் எழுத்தும் கிடை வரிசையின் எண்ணும் சேர்ந்து அவ்விரண்டும்  குறுக்காக வெட்டும் புள்ளியின் பெயராகும்  உதாரணமாக a12  என்றால் a நெடுவரிசையில் 12 ஆவது கிடைவரிசையின்  குறுக்காக வெட்டிடும் புள்ளி என இதற்கு அர்த்தமாகும்.

1

படம் 47.1

 லிபர் ஆஃபிஸ் கால்க் இயங்கத்துவங்கியவுடன் இதனுடைய முதன்மை சாளரம் திரையில் தோன்றிடும்  படம் 47.1 ஆனது  ஒரு சாதாரணலிபர் ஆஃபிஸ் கால்க்கின் முகப்பு தோற்றமாகும்

குறிப்பு.இந்த கால்க்கின் முகப்பு பக்கத்தில் ஏதேனும் ஒரு பகுதி திரையில் தோன்றவில்லை எனில் உடன் திரையின்மேலேயுள்ள கட்டளைபட்டையிலிருந்து View => Status Bar =>என்றவாறு தேவையான கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தோன்றசெய்திடுக

 இதன் மேல்பகுதியின் தலைப்பில் இருப்பது தலைப்பு பட்டையாகும்(Title bar) அதாவது இதுதான் இந்த விரிதாளின் பெயராகும். புதியதாக ஒரு லிபர் ஆஃபிஸ் கால்க்கினை உருவாக்கி திரையில் தோன்ற செய்யும்போது untitled  X என இது இருக்கும் இதிலுள்ள Xக்கு பதில் நாம்விரும்பும் பெயரை உள்ளீடு செய்து சேமித்து கொள்ளலாம்

 இரண்டாவதாக இருப்பது file, Edit, view ,insert, format, tools, data ,window, help ஆகிய கட்டளை கள் அடங்கிய மற்ற லிபர்ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கட்டளைகளின் பட்டையாகும் (Menu bar).இதில் ஏதாவதொருகட்டளையை தெரிவுசெய்தால் தொடர்புடையு கட்டளைகளின் பட்டி திரையில் பிரதிபலிக்கும்

 இதற்கடுத்ததாக  இருப்பது செந்தர கருவிபட்டை (Standard toolbar)வடிவமைப்பு கருவி பட்டை(formatting Tool bar) வாய்ப்பாடு கருவிபட்டை(Formula tool bar) ஆகிய மூன்று கருவி பட்டைகள்(tool bars) உள்ளன. இவை சிலநேரங்களில் மேல்பகுதியில் கட்டபட்டிருக்கும் அல்லது சிலநேரங்களில் மிதக்கும் கருவிபட்டிகளாக இருக்கும். தேவையெனில் இவைகளை மிதக்கும் பட்டிகளாகவோ அல்லது கட்டப்பட்ட பட்டிகளாகவோ நாம் செய்துகொள்ளலாம்.

 முதலிரண்டும் மற்ற லிபர்ஆஃபிஸின் பயன்பாட்டை போன்றுள்ள கருவிபட்டைகள்(tool bars) ஆகும் .இதில் மூன்றாவதாக உள்ள வாய்ப்பாடு கருவிபட்டை யானது லிபர்ஆஃபிஸ் கால்க்கில் மட்டும் தரவுகளை கணக்கிட உதவும் வாய்ப்பாடுகளை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகின்றது இந்த கருவிபட்டைகளில் பல்வேறு கட்டளைகளின் குறும்படங்கள்(Icons) பயனாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு பயன்படுத்துவதற்கேதுவாக உள்ளன.இந்த கருவிபட்டியிலுள்ள கருவிகளின்மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்தால் உடன் தொடர்புடைய கருவிகளைபற்றிய விவரங்கள் சிறுஆலோசனை குறிப்பாக தோன்றிடும்.

2

படம்-47.2

  இந்த வாய்ப்பாடு கருவிபட்டையின் ((Formula Tools bar)(படம்-47.2)) இடதுபுறம் இருப்பது தற்போது  இடம் சுட்டி இருக்கும் கலனின் பெயரை சுட்டிகாட்டுகின்ற பெயர் பெட்டியாகும் (name box). வலதுபுற மையத்தில் இருப்பது செயலியை உருவாக்கிட உதவும் செயலிவழிகாட்டிஅல்லது வித்தகர்பெட்டி (Function wizard),தரவுகளின் மொத்தத்தை காணஉதவும் கூடுதல்(sum), எந்தவொரு கலனிற்கும் தேவையான வாய்ப்பாட்டை உள்ளீடு செய்ய உதவிடும் சமக்குறி பொத்தான் (equal button ) ஆகிய மூன்று உள்ளன.

  வலதுபுறத்தில் இருப்பது நாம் உள்ளீடு செய்யும் தரவுகளை ,வாய்ப்பாடுகளை திரையில் காண்பிக்கும் உள்ளீட்டு வரி(input line) ஆகும்.

 எதேனும் தரவுகளை ஒருகலனிற்குள் உள்ளீடு செய்ய ஆரம்பித்தவுடன்   கூடுதல்(sum) சமக்குறி பொத்தான்(equal button ) ஆகிய இரண்டும்   தேவையில்லை எனில் நீக்குதல்(Cancel)செய்யவும்  சரியாக இருக்கின்றது எனில் ஏற்பு (accept) செய்யவும் உதவகூடிய  ஆகிய இரு 2.1குறும்பட(Icon)பொத்தான்களாக உருமாறிவிடும்

  இந்த லிபர்ஆஃபிஸ் கால்க்கின் மையத்தில் இருப்பதுதான் நாம்பணிபுரியவிருக்கும் 1,048,576  கலன்களை கொண்ட விரிதாளாகும்

 ஒரு விரிதாளிலிருந்து மற்றொன்றிற்கு சென்றிட  கீழ்பகுதியிலுள்ள தாளின் தாவி (sheet tab)உதவுகின்றது.இந்த விரிதாளின்  பெயரை நாம் விரும்பியவாறு மாற்றி யமைத்திடலாம் அதற்காக திரையின் கீழே தேவையான தாளின் தாவிப்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்  Rename Sheetஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  உரையாடல் பெட்டியில் தேவையான பெயரை உள்ளீடு செய்துகொண்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இதே வழிமுறையில் நாம் பணிபுரியும் விரிதாளின் வண்ணத்தை கூட மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும்

 இதற்கும் கீழே நாம் பணிபுரியும் லிபர்ஆஃபிஸ் கால்க்கின்  தற்போதைய நிலையை காண உதவிடும் நிலைபட்டை(Status bar) இருக்கின்றது

3

படம்-47.3

  ஒரு நிலை பட்டையின் இடதுபுறத்தில் (படம்-47.3)தாளின் எண்,அந்த பக்கத்தின் பாவணை,உள்ளீட்டு நிலை ,தெரிவுசெய்யும் நிலை,சேமிக்கபடாத மாறுதல்கள் ஆகியவை அடங்கியுள்ளன

  ஒரு நிலை பட்டையின் வலதுபுறத்தில்(படம்-47.3) இலக்கமுறை கையொப்பம்  தெரிவு செய்யபட்ட கலன்களின் கூடுதல் காட்சியின்அளவை கட்டுபடுத்த உதவும் நகரும் பட்டை காட்சியின் அளவு ஆகியவை அடங்கியுள்ளன

விரிதாளினை(Spread sheet) ஆரம்பித்தல்

 லிபர்ஆஃபிஸின் துவக்க மையத்திலுள்ள இதற்கான 3.1 எனும் குறும்படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => New=> Spread sheet=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் விசை பலகையிலுள்ள Ctrl + N என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துதல், கருவிபட்டையில் உள்ள இதற்கான குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில்  புதிய காலியானதொரு விரிதாளினை(Spread sheet)  திரையில் பிரதிபலிக்க செய்யமுடியும்.

நடப்பிலுள்ள விரிதாளினை திறத்தல்

லிபர்ஆஃபிஸின் ஆரம்ப மையத்திலுள்ள இதற்கான 3.2திற (open)எனும் குறும்படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல், கட்டளைபட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல் ,விசைப் பலகையிலுள்ள Ctrl + o என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல் கருவிபட்டையில் உள்ள  திற (open)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் ஒரு விரிதாளினை(Spread sheet)  திரையில்  பிரதிபலிக்க செய்யமுடியும்.

  உரைக்கோப்பாக இருக்கும் தரவுகளின் கோப்பினை லிபர் ஆஃபிஸின் விரிதாளில் திறக்கமுடியும்  அவ்வாறான உரைகோப்பினை கட்டளை பட்டையிலுள்ள File => open => என்றவாறு கட்டளைகளை செற்படுத்துவதன் வாயிலாக  திறக்கும்போது படம் 47.4 இல் உள்ளவாறு உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில் நெடுவரிசைகளை மிகசரியாக அமைத்து ok என்ற பொத்தானை சொடுக்குக.உடன் உரைக்கோப்பானது விரிதாளின் கட்டமைப்புடன் திறந்துவிடும் பின்னர் வழக்கமான விரிதாளில் பணிபுரிவதை போன்று பணிபுரியமுடியும்.

 4

படம்-47.4

Comma-separated-values (CSV) filesஎனும் கோப்புகளை திறத்தல்

திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள File => Open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Openஎனும் உரையாடல் பெட்டியில் Text(CSV(*.csv)அல்லது (*.txt)) என்றவாறு இருக்கும் கோப்பின் வகையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Text Importஎனும் உரையாடல் பெட்டி(படம்-47.5) திரையில் தோன்றிடும் அதில் தேவையான வகையை தெரிவுசெய்து கொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த வகை கோப்பு விரிதாளில் நாம் பணிபுரிவதறக்காக திறக்கபட்டுவிடும்.

5

படம்-47.5

பணிபுரிந்த விரிதாளினை  சேமித்தல்

 திரையின் மேலேகட்டளை பட்டையிலுள்ள File => save => அல்லது File => Save As => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துதல், விசைபலகையிலுள்ள Ctrl + s என்றவாறு  விசைகளை சேர்த்து அழுத்துதல்,      கருவிபட்டையில் உள்ள  சேமிக்க (save)எனும் இதற்கான குறும் படத்தை(Icon) தெரிவு செய்து சொடுக்குதல் ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம் பணிபுரிந்த ஒரு விரிதாளினை(Spread sheet) சேமிக்க முடியும். அவ்வாறு செயற்படுத்தியவுடன்  save எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் இந்த லிபர் ஆஃபிஸ் தவிர வேறு வடிவமைப்புகளில் கோப்பினை சேமிப்பதாக தெரிவுசெய்திருந்தால் உடன் Confirm File Formatஎனும் சிறுஉரையாடல் பெட்டியொன்று படம்-47.6 திரையில் தோன்றிடும் அதில் தேவையானUse [xxx] Formatஅல்லது Use ODF Format ஆகிய வற்றில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க.

 6

படம்-47.6

மிகமுக்கியமாக Text CSV format (*.csv) எனும்வடிவமைப்பை தெரிவுசெய்திருந்தால் உடன்Export Text File எனும் உரையாடல் பெட்டியொன்று படம்-47.7 திரையில் தோன்றிடும் அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக

7

படம்-47.7

இந்நிலையில் தேவையெனில் நம்முடைய கோப்பினை கடவுச்சொற்களுடன் பாதுகாத்து சேமித்திடலாம்

குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே கால்க்கின் ஒவ்வொரு விரிதாள் கோப்பினையும் சேமித்து கொள்ளும்படி அமைக்கமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Options => Load/Save => General => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  உரையாடல் பெட்டியில் Save AutoRecovery information every. என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து இதில் இயல்புநிலையில் 15minutes  என்பதை ஏற்று okஎன்ற பொத்தானை சொடுக்குக.

எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமித்தல்

 ஒரு சிலர் எம்எஸ் ஆஃபிஸில் லிபர்ஆஃபிஸின் கட்டமைப்பிலுள்ள கோப்புகளை கையாளுவதற்கு தயங்குவார்கள்.அவ்வாறானவர்கள் இயல்புநிலையில் லிபர்ஆஃபிஸ் கால்க் கோப்புகளை எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் கோப்பாக சேமிக்குமாறு அமைத்திடலாம் அதற்காக Tools=> Options => Load/Save => Microsoft office=> என்றவாறு  கட்டளைகளை  செயற்படுத்துக  உடன் விரியும்  உரையாடல் பெட்டியில்  Excel to libre office.org calc /libre office calc to excel என்றதேர்வுசெய் பெட்டியை (படம்-47.8 )தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக

8

படம்-47.8

  நாம்விரும்பும் கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்லுதல்

குறிப்பிட்ட கலனிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்காகஇடம்சுட்டியை அக்குறிப்பிட்ட கலனில் வைத்து சொடுக்குதல்,  பெயர்பெட்டியில்(name box) குறிப்பிட்ட கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.,  F5 என்ற செயலிவிசையை அழுத்தியவுடன் தோன்றும் navigateஎன்ற பெட்டியில் படம்-4.9 கலனின் பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துதல்.ஆகியவற்றில் ஏதேனுமொரு வழியில் நாம்விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்  அம்புக்குறியை பயன்படுத்தியும் நாம் விரும்பும் கலனிற்கு செல்லமுடியும்

9

படம்-47.9

நாம் விரும்பும் விரிதாளிற்குஇடம்சுட்டியை கொண்டு செல்லுதல்

 குறிப்பிட்ட விரிதாளிற்கு இடம்சுட்டியை கொண்டு செல்வதற்கு Control+Page Down Control+Page upஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் இடம்சுட்டியை குறிப்பிட்ட தாளின் தாவியில் வைத்து சொடுக்குதல் அல்லது தேவையான தாவிபொத்தானை  சொடுக்குதல் (படம்-47.10) ஆகியவற்றின் வாயிலாக நாம்விரும்பும் விரிதாளிற்கு செல்லமுடியும்.

10

படம்-47.10

மேலும் விசைப்பலகையிலுள்ள அம்புக்குறிகளை மட்டும்அழுத்துதல் pgup ,pgdn ,Tab ,Shift, Enter ஆகிய விசைகளை தனித்தனியாக அழுத்துதல் அல்லது Ctrl Alt ஆகிய விசைகளுடன் சேர்த்து அழுத்துதல்   வாயிலாக விரிதாளில் நாம் விரும்பும் இடத்திற்கு  செல்லமுடியும்

அதுமட்டுமல்லாது இந்த உள்ளீட்டு விசையை Tools =>Options => LibreOffice Calc= > General=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திய உடன் தோன்றிடும் படம்-47.11 உரையாடல் பெட்டியின் வாயிலாக நாம் விரும்பியவாறான செயலை செய்திடுமாறு அமைத்திடமுடியும்

11

படம்-47.11

கலன்களை தேர்வு செய்தல்

தேவையான கலனில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் இடதுபுற பொத்தானை அழுத்தி பிடித்து கொண்டு இதனுடன்தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியானவை எனில் Shift விசையை அழுத்தி பிடித்து கொண்டு அம்புக்குறி விசையை அழுத்தி தெரிவுசெய்க

  தெரிவுசெய்ய விரும்பும் கலன்கள் தொடர்ச்சியற்றவை எனில் Ctrl  விசையை அழுத்தி பிடித்து கொண்டு தெரிவுசெய்ய விரும்பும் கலன் ஒவ்வொன்றாக இடம் சுட்டியை வைத்து தெரிவு செய்து  இறுதியாக   அழுத்தி பிடித்து வைத்திருந்த விசையை விட்டிடுக.

  இவ்வாறே நெடுவரிசையை அல்லது கிடைவரிசையும் அதனதன் தலைப்பை பிடித்து தெரிவுசெய்வதன் வாயிலாக தெரிவுசெய்து கொள்ளமுடியும்.

  Ctrl + A  ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துதல் அல்லது விரிதாளின் ஆரம்ப முனை பகுதியை (படம்-47.12)தெரிவுசெய்து சுட்டியை சொடுக்குதல் செய்வதன்வாயிலாக விரிதாள் முழுவதையும் தெரிவுசெய்யமுடியும்

12

படம்-47.12

இவ்வாறே ஒன்றுக்கு மேற்பட்ட விரிதாள்களை sheet tab ஐ தெரிவு செய்வதன் வாயிலாக தெரிவுசெய்துகொள்ளமுடியும்.

 தரவுகளை நகலெடுத்து ஒட்டுதல்

 இவ்வாறு தெரிவுசெய்தபின்னர்  Ctrl + C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் தெரிவுசெய்யபட்ட கலன்களில் உள்ள தரவுகள் நகலெடுக்கபட்டுவிடும்.

 பின்னர் தேவையான இடத்தில் இடம்சுட்டியை கொண்டுசென்று வைத்து Ctrl + v ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் நகலெடுக்கபட்ட தரவுகள் புதிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும்.

கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet)

சேர்த்தல் நாம் பணிபுரியும் இடத்தில் புதிய கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) சேர்த்திட விரும்புவோம் அந்நிலையில்மேலே கட்டளை பட்டையிலுள்ள Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக. உடன்விரியும் insert என்ற பட்டியில் Cells, Row, Column ,Sheet ஆகியகட்டளைகளில் தேவையான கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக. அல்லது தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Insert என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றும் (படம்-47-13) insert என்ற பெட்டியில் selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

         13

படம்-47-13

கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row) விரிதாளை(Sheet) நீக்குதல்

 நாம் பணிபுரியும் கலன்களை(Cells) நெடுவரிசையை(Column) கிடை வரிசையை(Row)  நீக்கம் செய்திட விரும்புவோம் அந்நிலையில் மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit என்ற கட்டளையை செயற்படுத்துக உடன் விரியும் Edit  என்ற கட்டளை பட்டியில் Delete cells என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது  தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Delete என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

 உடன் தோன்றும் Delete என்ற பெட்டியில் (படம்-47-14 )selection என்பதன் கீழுள்ள தேவையான தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.

 14

படம்-47-14

விரிதாளை(Sheet) நீக்குதல்  மறுபெயரிடுதல் (Rename) சேர்த்தல் (insert)

  தேவையான விரிதாளின் sheet tab -ல்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் நீக்குதல்  செய்வதற்கு Delete sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நீக்குதல் செயலை உறுதி செய்வதற்கான சிறுபெட்டியொன்று தோன்றும் ஏற்பதாயின் yes என்ற பொத்தானை சொடுக்குக.

  மறுபயரிடுவதற்கு rename sheet என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. sheet tab -ல் இடம்சுட்டி சென்று நிற்கும் தேவையான புதியபெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக . விரிதாளினை சேர்த்திட(Insert) insert sheet  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் insert sheet என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-47.15) தோன்றும் அதில் position என்பதன் கீழுள்ள தேவையான தேர்வு செய்பெட்டியை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

15

படம்-47.15

துவக்க நிலையாளர்களுக்கான லினக்ஸ் இயக்கமுறைமையின் கோப்பமைவு வழிகாட்டி

 பொதுவாக இயல்புநிலையில் லினக்ஸ் இயக்கமுறைமையானது  எதையும் கோப்பாகவே கருதுகின்றது  தரவுகள் நிரல்தொடர்கள் பயன்பாட்டுமென்பொருட்கள் வன்பொருள் சாதனங்கள் ஆகிய அனைத்தும் கோப்பாகவே கருதுகின்றது அதிலும் வன்பொருள் சாதனங்களான சுட்டி, விசைப்பலகை குறுவட்டுகளின் வாயில்கள்  ஆகியவைகூட கோப்பாகவே கருதுகின்றது  இந்த சாதனங்களை அனைத்தும் ஒரேமாதிரியான  கோப்புகளின் பெயர்களால் பராமரிக்கபடுகின்றன  இந்த சாதனங்களின் கோப்புகள் அனைத்தும்  /dev என்ற கோப்பகத்திற்குள் வைத்து பராமரிக்கபடுகின்றன இந்த சாதனங்களை உபுண்டு14.04 மேஜைக்கணினி இயக்கமுறையில் எவ்வாறு பாமரிக்கபடுகின்றன செயல்படுத்தபடுகின்றன இப்போது காண்போம்

சுட்டியை இயக்குதல் இதற்கான கோப்புகள்       /dev/psaux என்ற கோப்பகத்திற்குள்  இருக்கும்  முதலில் உபுண்டு14.04 மேஜைக்கணினி இயக்கமுறையின் முகப்புஅல்லது முனைம சாளரத்தை திறந்துகொள்க பின்னர்  sudo cat//dev/psaux என்றவாறு கட்டளைகளை  விசைப்பலைகயில்  தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக   அதன்பின்னர் விரியும் திரையில் நிருவாகியின் கடவுச்சொற்களை  உள்ளீடுசெய்துகொண்டு  உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் சிறிது நேரத்தில் சுட்டியானது செயல்பாட்டிற்கு வந்துவிடும் நாம் அதனை பயன்படுத்தி நம்முடைய வழக்கமான மற்ற செயலை செயற்படுத்தலாம்

இருமுகப்புஅல்லது முனைமங்களில் உள்ள சாதனங்களில் உள்ள கோப்புகளை செயற்படுமாறு செய்தல். இதற்காக இருமுகப்புஅல்லது முனைமங்களின் சாளரங்களை திறந்துகொள்க பின்னர் tty என்றவாறு கட்டளையை உள்ளீடு செய்து தொடர்புடைய சாதனங்களின்  கோப்பு பெயர்களை அறிந்து கொள்க உதாரணமாக dev/pts/2  ,  dev/pts/3 ஆகிய இரண்டும் குறிப்பிட்ட சாதனங்களின் பெயர்களாகும் எனக்கொள்க   பின்னர் முதல் முகப்பு சாளரத்திரையில் sudo cat> /dev/pts//3 என்றவாறு கட்டளைகளை  விசைப்பலைகயில்  தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக   அதன்பின்னர் விரியும் திரையில் நிருவாகியின் கடவுச்சொற்களை  உள்ளீடுசெய்துகொண்டு  உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் சிறிது நேரத்தில் முதல்முகப்பு பக்கத்தில் இரண்டாவது முகப்பு பக்கத்தின் பெயர்  தோன்றுவதை காணலாம் இவ்வாறே இரண்டாவது முகப்பு பக்கத்தில் முதல் முகப்பு பக்கத்தின் எனும் பெயரை ஒத்திசைவு செய்வதை செயற்படுத்தி காண்க

 கோப்பகளின் வகையை அறிந்துகொள்ளுதல்  லினக்ஸ் இயக்க முறைமையில் கோப்புகளின் பின்னொட்டினை வைத்து கோப்பின் வகையை அறிந்துகொள்ளாது அதற்கு பதிலாக கோப்பின் பயன்பாட்டினை வைத்தே கோப்பின் வகையை அறிந்துகொள்கின்றது  அதற்காக பின்வருமாறு கட்டளைகளை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

குறிப்பு பின்வருபவைகளில் முதல் வரிகள் கட்டளை வரியாகும் இரண்டாவது வரிகள் கோப்பகளின் வகையின் விளக்கங்களாகும்

file j.c

  j.c : C source, ASCII text

file index.jpeg

  index.jpeg : JPEG image data, JFIF stanard i.01

file  SysADM.pdf

   SysADM.pdf : pdf document, version 1.4

file SysADM.odp

   SysADM.dop : opendocument presendtation

file Infile

   Infile : symbolic link to ‘sqr.c’

file /dev/sda

   /dev/sda : block special

file /dev/tty1

   dev/tty1 : character special

-s எனும் வாய்ப்பினை கோப்பு கட்டளையை அவைகளுடயை சிறப்பு கோப்பகளை படித்தறிய பின்வருமாறு உள்ளீடு செய்து பயன்படுத்தி கொள்க

 file -s dev/sda

     dev/sda : x86 boot sector

 file -s  /dev/psaux

          dev/psaux : ISO-8859 text, with no line terminators

 Codename Oneஎனும் அனைத்து சாதனங்களிலும் செயல்படும் மென்பொருளை கொண்டு செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கி கொள்க

தற்போது நாமெல்லாம் நவீண வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்கும் தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில் வாழ்ந்து வருகின்றோம் கணினியும் இணையமும் சேர்ந்த அதிலும் அவைகளை கையாளுவதற்காக தனியான கணினியோ மடிக்கணினியோ தேவைப்படாத வெறும் செல்லிடத்து பேசிகளின் வாயிலாகவே நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிகொள்கின்ற புதிய தகவல்தொடர்பு காலச்சூழலில் வாழ்ந்துவருவது அனைவரும் அறிந்ததே  அதாவது மின்-வியாபாரம், மின் விலைபுள்ளி, மின்-கல்வி ,மின்-பயணச்சீட்டு ஒதுக்கீடுசெய்தல், மின்-வங்கி பரிமாற்றம், மின்-சமூக தொடர்ப என அனைத்து செயல்களும் நம்முடைய கைபேசி வாயிலாகவே செயல்படும் பயன்பாடுகளின்மூலம் செயல்படுத்தி பயனடைந்து வருகின்றோம்  இவ்வாறான கைபேசியில் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக ஏராளமான வரைச்சட்டங்களும்  இணைய தளங்களும் தயாராக தற்போது உள்ளன. மிகமுக்கியமாக R&D எனச்சுருக்கமாக கூறும் ஆராய்ச்சி மேம்பாடு குழுக்களை பல்வேறு நிறுவனங்கள் இதற்காகவே அமைத்து புதிய புதிய பயன்பாடுகளை  உருவாக்கி  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே உள்ளனர்  அவைகளுள்  Codename Oneஎனும் சுதந்திரமான திறமூலமென்பொருளானது( SaaSஎன சுருக்கமாக அழைக்கபடும்   (மென்பொருள் சேவை)(Software as a Service)க்காக) அனைத்து சாதனங்களிலும் செயல்படும் மென்பொருளை செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்குவதில் மிகப்பிரபலமாகவும் முதன்மையானதாகவும் உள்ளது இது ஜாவா மொழியின் அடிப்படையில் எந்தவொரு தளத்தின்மீதும் எந்தவொரு கைபேசி சாதனங்களிலும்செயல்படும்  வண்ணம் பயன்பாடுகளைஉருவாக்க உகந்த வகையில் உதவுகின்றது அதாவது   ஒரு கைபேசியில் செயல்படுமாறு உருவாக்கபட்ட பயன்பாட்டு குறிமுறைவரிகளானது மாறுதல்கள் எதுவும் செய்திடாமல் அனைத்து கைபேசி சாதனங்களிலும் அதே பயன்பாட்டின் செயலிகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்  தற்போது இந்த  Codename Oneஎனும்  திறமூல மென்பொருளை  32970 இக்கும் மேற்பட்ட மென்பொருள் மேம்பாட்டாளர்கள் வல்லுனர்கள் இதனை தத்தமது தேவைக்காக  பயன்படுத்தி கொண்டுள்ளனர் இதனை  எக்ளிப்ஸ்,நெட்பின்ஸ்   போன்ற எந்தவொரு ஜாவா அடிப்படையிலான சூழலிலும் நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்ளலாம் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்திடவும் https://codenameone.googlecode.com/svn/trunk/CodenameOne/repo/eclips/site.xml/   எனும் தளத்திற்கு செல்க.

2

மிகவிரைவாக இணைய பயன்பாடுகளை உருவாக்கிட Jade எனும் மாதிரிபலக மொழியை பயன்படுத்தி கொள்க

 Jade எனும் மாதிரிப்பலக மொழியானது இணையப்பக்கங்களையும் இணையப் பயன்பாடுகளையும் உருவாக்குவதில் மிகமுக்கிய மைல்கல்லாக விளங்குகின்றது நீங்கள் இதனை கற்று தேர்ந்து விட்டால் மனம்மாறி பழைய HTMLகுறிமுறை வரிகளை எழுதுவதற்காக  பின்னோக்கி செல்லமாட்டீர்கள் என்புது திண்ணம் தற்போது இணையத்தில் விக்கிபக்கங்கள் ,வலைபூக்களின் பதிப்பான்கள் போன்றவைகளின் அறிமுகத்தால் இந்த HTML ஐ பயிலாமலேயே கூட பயனாளர்கள் எல்லோரும் சொந்தமாக இணையப்பக்கங்களையும் இணையப் பயன்பாடுகளையும் உருவாக்கி வெளியிடுகின்ற திறன்கொண்டவர்களாகிவிட்டனர். ஆயினும் இந்த HTML இல் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களே இணைய பயன்பாடுகளை பக்கங்களையும் எளிதாக உருவாக்கிடமுடியம் என்ற தடையை இந்த Jade எனும் மாதிரிபலக மொழியானது தகர்த்துவிட்டது அதிலும் XML என்பது தேவை என்பதையும் தன்னுடைய வளர்ச்சிக்கு மற்றொரு தடைகல்லாக இல்லாமல் ஆக்கிவிட்டது

இந்த Jade எனும் மாதிரிப்பலக மொழியை பயன்படுத்தி நாம் எழுதவேண்டிய முதல் நிரல்தொடரானது பின்வரும் அட்டவணையின் முதல்நெடுவரிசையிலுள்ளவாறு இருக்கும் அதே குறிமுறை வரியானது HTML இல் இதே அட்டவணையின் இரண்டாவது நெடுவரிசையில் உள்ளவாறு இருக்கும்

Jade எனும் மாதிரிபலக மொழி

HTML குறிமுறைவரி

doctype html

html

titleHello,jade

body

h1 This is a heading

p This is a paragraph

<!DOCTYPE html>

<html>

<heead>

<title>Hello,jade</title>

</head>

<body>

<h1>This is a heading

<p>This is a paragraph

<body>

</html>

இந்த Jade எனும் மாதிரிப்பலக மொழியில் HTML இல் குறிப்பிடப்படும் தேவையற்ற குறியீடுகள் தவிர்க்கபட்டு மிகவிரைவாக நம்முடைய கட்டளை குறிமுறைவரிகளை மட்டும் எழுத அனுமதிக்கின்றது அதனால்  விரைவாக நிரல்தொடர்குறிமுறைவரிகளை எழுதிடமுடியும். என்பது திண்ணம்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள http://jade-lang.com/ எனும் இணைய. பக்கத்திற்கு செல்க

செல்லிடத்து பேசிகளின் ஆண்டராய்டு ஐஓஎஸ் போன்ற தளங்களில் செயல்படும் பயன்பாடுகளை எளிதாக உருவாக்கிட MoSync எனும் திறமூலமென்பொருளை பயன்படுத்திகொள்க

MoSync எனும் திறமூலமென்பொருளானது செல்லிடத்து பேசிகளின் ஆண்டராய்டு ஐஓஎஸ் போன்ற தளங்களில் செயல்படும் பயன்பாடுகளை எளிதாக உருவாக்கிட உதவிகின்றது.பொதுவாக இவ்வாறான பயன்பாடுகள் SDK இலிருந்து உருவாக்கபடுகின்றன அவைகளில் விரைவாகவும் சுதந்திரமாகவும் உருவாக்கிடும் இந்தMoSync எனும் திறமூலமென்பொருளானது எளிதாக உருவாக்கிடுவதில் முதன்மையான இடத்தில் உள்ளது இது சி, சி++,ஹெச்டிஎம்எல்5 ஆகிய கணினி மொழிகளை பயன்படுத்தி உருவாக்கபட்டது இது செல்லிடத்து பேசியின் இயக்கமுறைமைகளான ஐஓஸ், ஆண்ட்ராய்டு, விண்டோ ,சிம்பியன் ,லினக்ஸ் ஆகியவைகளில் செயல்படும் திறன்மிக்கது இதனோடு இணைக்கபட்டுள்ள படப்பிடிப்புகருவி போன்ற வன்பொருளை கையாளவும், முப்பரிமான வரைபடங்கள் போன்ற வரைகலை இடைமுகப்பை கையாளவும் ,மற்றெந்த சாதனங்களிலும் செயல்படும் திறனையும் இது தன்னகத்தே கொண்டது இதனை http://wwww.mosync.com/download/ , http://wwww.mosync.com/download/reload/ ஆகிய தளங்களிலிருந்து நமக்கு தேவையான பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க இந்த தளத்திற்கு சென்று மேலும் விவரங்களை அறிந்துகொண்டு இதனை உங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்க.

4

Previous Older Entries