விண்டோ 7 இயக்கமுறைமையை usb or pendrive வாயிலாக நிறுவுகை செய்யமுடியும்

 பொதுவாக தற்போது நடைமுறையில் உள்ள டிவிடியில் இருந்துதான் விண்டோ 7 ஐ நிறுவவேண்டும் என கட்டாயமில்லை usb or pendrive வாயிலாககூட விண்டோ 7 இயக்கமுறைமையை ஒரு கணினியில் நிறுவுகை செய்யமுடியும் இதற்காக

முதலில் 4 ஜிபி காலி நினைவகமுள்ள usb or pendrive அதற்கான வாயிலில் பொருத்தி கொள்க

பின்னர் விண்டோ 7 இயக்கமுறைமையை உள்ள டிவிடியை அதற்கான வாயிலில் பொருத்தி கொண்டு Command Prompt எனும் கருப்பு வெள்ளை திரையை திறந்து கொண்டு அதில் DISKPART எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

உடன் DISKPART எனும் தனியானதொரு சாளரம் தோன்றிடும் அதில் LIST DISK எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

உடன் தோன்றிடும் usb or pendrive இன் வட்டின் எண்ணை குறித்து கொண்டு நம்முடைய usb or pendrive இன் நெடுவரிசை அளவை சரிபார்த்து கொள்க

பிறகு SELECT DISK Y எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக இங்கு Y என்பது நாம் குறித்து வைத்துள்ள வட்டின் எண்ணாகும்

பின்னர் CLEAN எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக உடன் நம்முடைய usb or pendrive இல்ஏதேனும் தரவுகள் இருந்தால் அதனை நீக்கி சுத்தபடுத்தி காலியாக ஆக்கிவிடும்

அதன்பின்னர் CREATE PARTITION PRIMARY”. எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

பின்னர் SELECT PARTITION 1”. எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

அதன்பின்னர் ACTIVE” எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

பின்னர் FORMAT FS=FAT32 எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக சுமார் 10 நிமிடம் காத்திருக்கவும் அல்லது நம்முடைய usb or pendrive இன் நினைவக அளவிற்கேற்ற நேரம் வரை காத்திருக்கவும்

பிறகு ASSIGN எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக உடன் தானியங்கி சாளரம் தோன்றிடும் அதன் அடைவின் பெயர் G:\என்றவாறு இருக்கும் அந்த சாளரத்தை மூடிவிடுக

இதன்பின்னர் EXIT எனும் கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக

பின்னர் கட்டளைவரித்திரையில் xcopy F:*.* /s/e/f G: என்றவாறு கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக இங்கு Fஎன்பது நம்முடைய விண்டோ 7 இயக்கமுறைமை இருக்கும் டிவிடியின் அடைவின் பெயராகும் G: என்பது நம்முடைய usb or pendrive இன் பெயராகும்

இதன்பின்னர்boot.wim and install.wim ஆகிய கோப்புகள் நம்முடைய usb or pendrive இல் ஒட்டும் வரை காத்திருக்கவும்

இந்த பணிமுடியும் காத்திருந்தபின் del G:\sources\ei.cfg என்றவாறு கட்டளையை உள்ளீடு செய்து இயக்குக இதற்கு பிறகு விண்டோ 7 உள்ள நம்முடைய usb or pendrive ஐ பொருத்தி ஒரு கணினியில் setup.exe என்ற கட்டளையை இயக்கினால் போதும் வழக்கமான விண்டோ7 ஐ டிவிடியிலிருந்து நிறுவுகை செய்வதை போன்றே நிறுவுகை செய்யும் .

10-1படம்-10-1

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்?

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது என 80 சதவிகித வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன ஏனெனில்

9-1

 Unity vs. Modern UI அமைவில் startஎன்ற தனியானதொரு பொத்தான் இல்லாமல் கையடக்க சாதனங்களின் பாவணையில் எளிதாக இயங்கும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது

வாடிக்கையாளர் விரும்பிய வாறு KDE, Xfce, LXDE, GNOME 3 Shell, Cinnamon, and MATE.

போன்றவைகளை உபுண்டு 12.10 –இல் மாற்றியமைத்து கொள்ளமுடியும் மிகமுக்கியமாக மிகபிரபலமான Ubuntu Tweakஎன்பதை உபுண்டுவில் கொண்டுவரலாம் ஆனால் விண்டோ 8 ல் குறிப்பிட்ட வரையரைக்குள் மட்டுமே வாடிக்கையாளர் மாறுதல் செய்துகொள்ளமுடியும்

லினக்ஸில்மட்டும் இயங்கும் ஆயிரகணக்கான பயன்பாடுகளை உபுண்டுவில் கிடைக்கின்றன அதுமட்டுமல்லாது Wine or CodeWeaver’s CrossOver,ஆகியவற்றின் துனைகொண்டு விண்டோவில் இயங்கிடும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளும் எளிதாக நமக்கு கிடைக்கின்றன மேலும் இந்த பயன்பாடுகளால் பாதுகாப்பை நம்முடைய கணினிக்கு GNU Privacy Guard (GnuPGஎன்பது உறுதி படுத்துகின்றது விண்டோவில் அவ்வாறான வசதி இல்லை மேலும் பாதுகாப்பிற்கு தம்முடைய சொந்த முயற்சியில் வேறுநிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளவேண்டும்

விண்டோ 8 ஐ நிறுவ விரும்பும் கணினியில் PAE, NX, and SSE2போன்றவைகளை ஆதரிக்ககூடிய 1GHzஅல்லது அதைவிட வேகமான செயலியும் குறைந்தபட்சம் 1 ஜிபி ரேமும் 16 ஜிபி காலி நினைவகமும் விண்டோ 8 இன் 32-பிட்பதிப்பிற்கும், 2 ஜிபி ரேமும் 32 ஜிபி காலி நினைவகமும் விண்டோ 8 இன்64-பிட்பதிப்பிற்கும் Microsoft DirectX 9 உடன் ஒத்தியங்ககூடிய சாதனமானது WDDMஎன்ற இயக்கியுடன் இருக்கவேண்டும் ஆனால் உபுண்டு 12.10 இற்கு கணினியில் குறைந்தபட்சம் 512MBரேமும் 5 ஜிபி காலி நினைவகமும் மட்டும் போதுமானவயாகும்

உபுண்டு 12.10 –இல் Linux Security Modules (LSM)என்ற பாதுகாப்பு கவசம் இயல்புநிலையில் வழங்கபடுகின்றது மேலும் மிகமுன்னேறிய பாதுகாப்பு வளையமும் வழங்கபடுகின்றது
ஆனால் விண்டோ 8-இல் விண்டோ7 ஐவிட சிறிது கூடுதல் பாதுகாப்பு மட்டுமே வழங்கபட்டுள்ளது பொதுவாக ஹேக்கர் எனும் அபகரிப்போர் விண்டோவை மட்டுமே குறிவைத்து தாக்குகின்றனர் உபுண்டு லினக்ஸ் அன்று என்பதை நினைவில் கொள்க

விண்டோ8-இல், Active Directory serversஐ பயன்படுத்தி Active Directory administrative controls இற்காக வழங்குகின்றது உபுண்டுவானது Open or Centrify. ஆகியவற்றை உபுண்டு வாடிக்கையாளர்களுடன் இணைந்து Active Directory administrative controls இற்காக வழங்கபடுகின்றது மேலும கூடுதலாக Landscapeஎன்பதை dministrative controls இற்கான கருவியை வழங்குகின்றது

 உபுண்டு 12.10 –இல் OpenVPN,எனும் SSL/TLS என்பதின் அடிப்படையில் இயங்கிடும் virtual private network என்பது வழங்கபடுகின்றது ஆனால் விண்டோ8 –ல் virtual private network திறமூலமாக வழங்கபடவில்லை

இறுதியாக உபுண்டு 12.10 என்ற இயக்கமுறைமையானது விலையில்லாமல் கிடைக்கின்றது மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கொரு முறை புதிய பதிப்பு வெளியிடும்போது இலவசமாக மேம்படுத்தி புதுப்பித்து கொள்ளமுடியும ஆனால் விண்டோ 8 ஆனாது 199 டாலர் விலை கொடுத்து வாங்கவேண்டும் அதன்பின் இதனை 39 முதல் 69 டாலர் வரை செலவிட்டு அவ்வப்போது புதப்பித்து கொள்ளவேண்டும்

லினக்ஸை பற்றிய உண்மை செய்திகள்

8-1

1 Linus Torvalds.ஆல் எழுதபட்ட லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகளில் தற்போது உள்ளவைகளுள் 2 சதவிதம் தவிர மற்றையவை அதன்பின் மாற்றியமைக்க பட்டவையாகும்

இந்த லினக்ஸ் கெர்னலுக்கான கட்டளைவரிகள் அனைத்தும சி மொழியால் எழுதபட்டவையாகும்

வியாபார நோக்கத்திற்காக GNU / Linux ஆனது Yggdrasil என்பவரால் Lice-CD என்ற வடிவமைப்பில் 1992 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் வெளியிடபட்டது

இதனை நிருவகிக்கும் எளிதான தன்மை குறைந்த செலவு மற்ற எதையும் சாராமல் தனித்தியங்கும் தொழில் நுட்ப வசதி ஆகிய தன்மைகளால் கவரபட்டு Russia, Brazil and Venezuelaஆகிய நாடுகளும்இந்த லினக்ஸையே பயன்படுத்துகின்றனர்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Defense, Navy Submarine Fleet, Federal Aviation Administration ஆகிய அரசுத்துறைகள் அனைத்தும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன ஏன் இந்தியாவின் தமிழக அரசுகூட கல்விக்காக இந்த லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்துகின்றது

உலகின் 90 சதவிகித powerful supercomputersகளில் இந்த GNU / Linux இயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதிலும் குறிப்பாக top ten of supercomputers கள் இந்த GNU / Linux இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன அதுமட்டுமல்லாது இணைய இணைப்பு வழங்கிடும சேவையாளர்கள், இணைய தளங்களில் சேவையாளர்களாக செயல்படும கணினிகள் ஆகியவற்றில் 33.8 சதவிகிதம் GNU / Linux இயக்கமுறைமை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன

Japan’s bullet trains, traffic control, San Francisco, the New York Stock Exchange, CERN, many air traffic control systems or control of nuclear reactors of submarines and ships many nuclear war என்பன போன்ற மிக சிக்கான அமைப்புகள் அனைத்தும் இந்த GNU / Linux இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன

Intel, Google, IBM, AMD, Sun Microsystems, Dell, Asus, HP, Analog Devices, Oracle, Novell என்பன போன்ற மிகபிரபலமான நிறுவனங்கள் தங்களின் வெளியீடுகளில் இந்த GNU / Linux இயக்கமுறைமையை சேர்த்தே வெளியிடுகின்றன

Google, Cisco, Facebook, Twitter, Linkedபோன்ற நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய முதன்மையான இயக்கமுறைமையாக GNU / Linux இயக்கமுறைமையை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன

மடிக்கணினியை அறிதுயில் நிலையில் பராமரிக்கும் போது இணையஇணைப்பையும் தற்காலிகமாக நிறுத்தும் செய்து பழையநிலையில் மீண்டும் செயல்படுமாறு செய்யமுடியும்

7-1

படம்-7-1

மடிக்கணினியை இயங்குவதற்கான மின்சாரத்தை அதிலுள்ள மின்கலம் மூலமாகவே வழங்கபடுகின்றது நாம் மடிக்கணினியை பயன்படுத்தாத போது தானாகவே அனைத்து இயக்கங்களும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யபட்டு மடிக்கணினியானது அறிதுயில் நிலைக்கு சென்று மின்கலத்திலுள்ள மின்சாரத்தை சேமிக்குமாறு செய்யபட்டிருக்கும் மேலும் இந்நிலையில் மடிக்கணினியில் ஏதேனுமொரு விசையை அல்லது தொடுதிரையை அழுத்தியவுடன் மடிக்கணினியின் இயக்கமானது விழித்தெழுந்து பழைநிலையில் செயல்படுமாறு செய்யபட்டிருக்கும்

 ஆனால் அதே மடிக்கணினியில் கம்பியில்லா வழி இணைப்பில் இணைய இணைப்பு பெற்று செயல்பட்டுகொண்டிருக்கும்போது மடிக்கணினியானது அறிதுயில் நிலைக்கு செல்லும்போது கம்பியில்லா வழி இணைப்பில் இணைய இணைப்பு மட்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யபடாமல் செயலில் இருக்கும்

அதனால் மடிக்கணினியினுடைய மின்கலத்தின் மின்சாரம் விரைவாக காலியாகிவிடும் இதனை தவிர்த்து இந்த நிலையில் கம்பியில்லா வழி இணைப்பின் இணைய இணைப்பும் தற்காலிகமாக நிறுத்தம் செய்திடுவதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக

1 Start => என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் பட்டியலில் computer என்ற கட்டளையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Manage என்ற கட்டளையையும் அதன்பின் விரியும் திரையில் Continueஎன்ற கட்டளையையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் இடதுபுற பலகத்தில் System Tools என்ற தலைப்பின் கீழ் உள்ள Device Manager என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் திரையில் Network Adapters என்ற கட்டளையை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்கி அதில் மறைந்துள்ள கட்டளைகளை விரிவுபடுத்தி தோன்றசெய்க

பிறகு Network Adapters என்பதற்கருகிலுள்ள அம்புக்குறி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் நம்முடைய மடிக்கணினியின் வலைபின்னல் ஏற்பியின் (network adapter)பெயரின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Power Management என்ற தாவியின் திரையை தோன்றசெய்க

அதில் Allow என்ற சொல்லுடன் ஆரம்பிக்கும் இரு தேர்வுசெய்பெட்டியும் Only Allow என்ற சொல்லுடன் ஆரம்பிக்கும் மூன்றாவது தேர்வுசெய்பெட்டியும் தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்துவிட்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம்செய்திடுக இதன்பின் மடிக்கணினியை அறிதுயில் கொள்ளுமாறு செய்தால் இணைய இணைப்பு செயல் கூட தற்காலிகமாக நிறுத்தம்செய்யபட்டு பிறகு மடிக்கணினி செயல்படத்துவங்கும்போதுமட்டும் செயல்படும்.

இந்நிலையில் மீண்டும் மடிக்கணினி செயல்படத்துவங்கும்போது இணைய இணைப்பு செயல்படவில்லையெனில் பின்வரும் படிமுறையை பின்பற்றிடுக

Start => என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் பட்டியலில் Control Panel என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி Control Panel என்ற திரையை தோன்றசெய்க

பின்னர் Network and Internet => Network and Sharing Center => Change Adapter Settings =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும புதிய திரையில் நம்முடைய மடிக்கணினியினுடைய wireless network இணைப்பை தேடிபிடித்து அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Properties என்ற உரையாடல் பெட்டியில் Internet Protocol Version 6 (TCP/IPv6) என்ற வாய்ப்பை தேடிபிடித்து அது தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்தபின்OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பிறகு மடிக்கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம்செய்திடுக இதன்பின் மடிக்கணினியை அறிதுயில் கொள்ளுமாறு செய்தால் இணைய இணைப்பு செயல் கூட தற்காலிகமாக நிறுத்தம்செய்யபட்டு பிறகு மடிக்கணினி செயல்படத்துவங்கும்போது செயல்படும்.

7-2

படம்-7-2

இணைய உலாவலின்போது உதவும் KeePassஎனும்பயன்பாடு

இன்று மின்னஞ்சல்,குழுமின்னஞ்சல்,அரட்டை,விவாதம் , வங்கி சேவை, கடன்அட்டை இதர பயன்பாடுகள் என நாமனைவரும் எந்தவொரு செயலிற்கும் இணையத்தை பயன்படுத்தி கொண்டுள்ளோம் மேலும் ஏதனும் இணைய பக்கத்தில் நமக்குத்தேவையான சேவையை பெறவேண்டுமெனில் பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் மட்டுமே உள்நுழைவு செய்ய அனுமதிக்கும் நிலையுள்ளது அதனால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இணைய பக்கத்திலும் உள்நுழைவுசெய்வதற்கு என தனித்தனியான கடவுச்சொற்களை பயன்படுத்தி உள்நுழைவு செய்வது என்றால் அவ்வளவு கடவுச்சொற்களையும் நம்முடைய நினைவில் வைத்திருக்க முடியாது என நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரேயொரு கடவுச்சொற்களையே நாம் பயன்படுத்தும் அனைத்துஇணைய பக்க கணக்குகளுக்கும் பயன்படுத்திடும் நிலை தற்போது உள்ளது

 அதனால் அபகரிப்போர் சிரமம் பாராமல் சிறிது கடினமாக யூகித்தால் போதும் நம்முடைய அத்துனை இணைய கணக்கினையும் அபகரிக்கமுடியும்

மேலும் கம்பியில்லா இணைப்பு, வொய்ஃபி இணைப்பு என பாதுகாப்பற்ற இணைய இணைப்பை நாம் பெற்று பயன்படுத்தி வருவது மேலும் நம்முடைய தரவுகளுக்கு அபாயகரமான நிலை ஏற்படுகின்றது இதனை தவிர்த்து நாம் பயன்படுத்திடும் ஒவ்வொரு இணைய பக்க கணக்கிற்குள் நுழைவுசெய்யுமுன் KeePassஎன்ற பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவி இதனை இயக்கி பயன்படுத்தினால் புதியதான பாதுகாப்பான கடவுச்சொற்கள் தானாகவே உருவாகி மறையாக்கம் செய்யபட்டு(encription) அல்லது உருமாற்றபட்டு பாதுகாப்பாக வைத்துகொண்டு அதனை கொண்டு குறிப்பிட்ட இணையபக்க கணக்கிற்குள் நம்மை நுழைவுசெய்ய அனுமதிக்கின்றது இவ்வாறு கடவுச்சொற்களை உருவாக்குவது சிறிது காலஅவகாசம் ஆகும் எனினும் நம்முடைய இணைய பக்க கணக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது திண்ணம் இதனை http://www.worldstart.com/keepass-password-safe-ultimate-password-utility/என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும்

6.1

படம்-6.1

குறுக்குவழிவிசை வாயிலாக அனைத்து பயன்பாடுகளையும் இயக்கமுடியும்

ஏராளமான பயன்பாடுகளை நம்முடைய கணினியில் வைத்து பயன்படுத்தி வருகின்றோம் அவைகளை இயக்குவதற்காக Startஎன்ற பட்டியில் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான பெயரை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது திரையில் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது ஆகியவழிகளில் இயக்கி பயன்படுத்தி வருகின்றோம்

  இதனால் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட பயன்பாட்டினை தேடிபிடித்து இயக்குவதற்கு சிறிது காலஅவகாசம் ஆகின்றது இதற்கு பதிலாக ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் விசை.ப்பலகையில் ஒருசில விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அதனை இயங்கசெய்வது மிகஎளிதான செயலாகும்

 இந்த குறுக்குவழி விண்டோ எக்ஸ்பி விஸ்டா விண்டோ 7 ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படுத்தி கொள்ளமுடியும் இவ்வாறு குறுக்குவழிவிசையை அமைத்திட விரும்பும் பயன்பாட்டிற்கான உறவுபொத்தானின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் properties என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் Shortcutஎன்ற தாவியின் திரையை தோன்றசெய்க பின்னர் அதில் Shortcut Keyஎன்பதற்கருகில் CTRL+Shift or ALT+Shift or CTRL+ALTஆகிய மூன்றுவகையான இரு விசைகளின் சேர்க்கையுடன் மூன்றாவதாக எளிதில் குறிப்பிட்ட பயன்பாட்டினை நம்மால் நினைவுகூறத்தக்க விசை.யை தெரிவுசெய்து கொண்டு Applyஎன்ற பொத்தானையும் பின்னர் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் நாம் அமைத்த இந்த மூன்று விசைகளை மட்டும் சேர்த்து அழுத்துவதன் வாயிலாக குறிப்பிட்ட பயன்பாட்டினை எளிதாக இயக்கமுடியும் குறிப்பு இங்கு மூன்று விசைகளை சேர்த்து அழுத்துமாறு குறிப்பிடபட்டது ஏனெனில் விண்டோ இயக்கமுறைமையில் ஏற்கனவே இரண்டு விசைகளின் சேர்க்கையில் குறிப்பிட்ட செயல் நடைபெறமாறு ஒதுக்கபட்டுள்ளன அவைகளுடன் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காகவேயாகும்

4.1

படம்-4.1

எம்எஸ் ஆஃபிஸ் 365 எனும் பயன்பாடு

ஆஃபிஸ் 365 என்பது வேர்டு ,எக்செல் ,பவர்பாய்ன்ட், அவுட்லுக் ,ஒன்நோட் ஆகிய பயன்பாடுகள் அடங்கிய எம்எஸ் ஆஃபிஸை போன்று நேரடியாக இணையத்தின்மூலம் நமக்குத்தேவையான அலுவலக பணிகளை அதற்கான பயன்பாட்டு மென்பொருளை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்யாமலேயே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும் ஒரு கட்டண சேவையாகும்

தனியொருவர் மட்டுமுள்ள நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனம் வரை அதனதற்கான திட்டத்தின் மூலம் இந்த ஆஃபிஸ் 365ஐ பயன்படுத்திகொள்ள முடியும்

இந்த சேவையை பயன்படுத்திகொள்வதற்கு குறைந்த பட்சம் விண்டோஎக்ஸ்பி எஸ்பி3 இயக்கமுறைமை பதிப்பும், எம்எஸ் ஆஃபிஸ் 2007 பயன்பாடும் ,இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 இணைய உலாவி பதிப்பும் ,நம்முடைய கணினியில் இருக்கவேண்டும் .இதனை 88 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 17 வகையான நாணயங்களை கையாளும்திறனுடனும்,50 இற்கும் மேற்பட்ட மொழிகளிலும் செயல்படுமாறு இருக்கின்றது

இதனை பயன்படுத்திகொள்ள இதனுடைய இணையபக்கத்திற்கு சென்று நம்மை பற்றிய விவரத்தை பதிவுசெய்து கொள்ளவேண்டும் அதன்பின் நம்முடைய கணினிஇந்த ஆஃபிஸ்365 சேவை ஒத்தியங்குவதற்கேற்ப http://go.microsoft.com/fwlink/p/?LinkID=236920என்ற தளத்திலிருந்து தேவையான அமைவுகள் செய்துகொள்ளவேண்டும்

அதற்காக இந்த ஆஃபிஸ்365 இணைய பக்கத்தின் உள்நுழைவு செய்தவுடன் வலதுபுற பலகத்தில் Resources என்பதின் கீழுள்ள Downloads என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின் நம்முடைய கணினியிலுள்ள எம்எஸ் ஆஃபிஸை பயன்படுத்துவதற்கான Install Microsoft Office Professional Plus என்பதன்கீழ் நாம் பயன்படுத்திடும் மொழியையும் 32-bit or 64-bitபதிபபையும் தெரிவுசெய்து கொண்டு Install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே ஆஃபிஸ் 365 ஐ பயன்படுத்துவதற்கான Install Microsoft Lync,என்பதன்கீழ் நாம் பயன்படுத்திடும் மொழியையும் 32-bit or 64-bitபதிபபையும் தெரிவுசெய்து கொண்டு Install என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Set up and configure your Office desktop apps என்பதன்கீழ் உள்ளSet upஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் எம்எஸ் ஆஃபிஸ் 365 ஐ நம்முடைய கணினியில் பயன்படுத்துவதற்கான கருவிகள் நிறுவகை செய்ய தொடங்கும் அப்போது என்னென்ன அலுவலக பயன்பாடு நமக்கு தேவையஎன தெரிவுசெய்து கொண்டபின் Continueஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான சேவை ஒப்பந்த பக்கத்தில் I acceptஎன்ற வாய்ப்பிற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இதனை பயன்படுத்துவதற்கான வசதி நம்முடைய கணினியில் நிறுவபட்டுவிடும் இதன் பின் நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தி மறுத்தொடக்கம் செய்திடுக. பின்னர் நம்முடைய கணினியில் இதனை பயன்படுத்துவதற்கான குறுக்குவழி தொடக்க பொத்தான் Startஎன்ற பட்டியில் உருவாகிவிடும் அதனை தெரிவுசெய்து சொடுக்கி இதனை இயங்கசெய்து நம்முடைய பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை பயன்படுத்தி இந்த சேவையை எங்கிருந்தும் பயன்படுத்திகொள்ளமுடியும்

3-1

 

Previous Older Entries