ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-76 மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram) வரைதல்

ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவானது கணினி உதவியால் வரையப்படும் வரைபட வடிவமைப்பு CAD (computer-aided design),pro-e போன்றதன்று ஆனாலும் வரைகலை பயன்பாட்டினை போன்று இதில் ஒரு scale ஐ வரையமுடியும்  மேலும் இதன் உதவியால் ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரையமுடியும் ஆயினும் அதன் உண்மையான அமைப்பை பற்றிய விளக்கம் இங்கு கூறப்போவதில்லை இருந்த போதிலும் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவினுடைய வரைகலை தொழில்நுட்பத்தை பயன் படுத்தி எவ்வாறு ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரைவது என இப்போது காண்போம்

முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை மில்லிமீட்டர் ஆக வைத்து கொள்க.முதல் படிமுறையாக ஒரு மின்சுற்று வரைபடத்தின்(Logic Circuit Diagram) அடிப்படை உறுப்பான ஒரு அன்டு கேட் உருவ வரைபடத்தை வரைய விருக்கின்றோம்.

 படம்-76-1

 இதற்காக திரையின் மேலே இடதுபுற மூலையில்  இதன் Xஅச்சு 10மிமீ என்றும் Yஅச்சு 5மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு(படம்-76-1) ஒரு சதுரஉருவை வரைந்து கொள்க பின் அதன் இடதுபுறம் மேல்பகுதியில் ஒரு lead ஐ வரைந்து அதனைPosition and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  சரிசெய்து அமைத்துகொள்க   அவ்வாறே அதன் இடதுபுறம் கீழே   மற்றொரு lead ஐயும் வலதுபுறம் மேலே மூன்றாவாதாக  ஒரு lead ஐயும் வரைந்து அவைகளை  Position and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  கீழேஅட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு சரிசெய்து அமைத்துகொள்க

 

left (X/Y) [mm] right (X/Y) [mm] Input 1 (X/Y)[mm] Output (X/Y)[mm]
10/05/12 18 / 5 10 / 6.5 (right EP.) 18 / 6.5 (left EP.)

 

தற்போது இந்த அண்டு கேட் வரையும் பணி ஏறத்தாழ முடிவுற்றது இந்த  அண்டு   கேட்டை அடிப்படையாக கொண்டுதான் மற்ற கேட்டுகளை  இனி வரைய இருக்கின்றோம்

படம்-76-2

 அதனால் இந்த பயன்பாட்டுத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Edit => Duplicate => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Duplicate என்ற(படம்-76-2) உரையாடல் பெட்டியில்  முதலில் இதன் Xஅச்சு 0மிமீ என்றும் Yஅச்சு 15மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு  இரண்டாவது உருவபடத்தையும் பிறகு  Xஅச்சு 30மிமீ என்றும் Yஅச்சு 0மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு மூன்றாவது உருவபடத்தையும்  அவ்வாறே மற்றொரு வரிசை உருவபடத்தையும் படம்-76-3-ல் உள்ளவாறு நகலெடுத்துகொள்க

படம்-76-3

  இவைகளை நாட் கேட்டாக மாற்றியமைத்திடுவதற்காக இதனுடைய  lead ஐ தேவையானவாறு நகர்த்தி சரிசெய்து அமைத்து கொள்க மேலும்  இந்த lead -ல் சிறுவட்டத்தை 2மிமீ அளவில் வரைந்து கொள்க அதன்பின் இதனை தேவைப்படும் இடத்தில் ஒட்டிகொள்வதற்காக இந்த  2மிமீ அளவுள்ள  சிறுவட்டத்தை ஒட்டும் பலகையில்(Clipboard) நகலெடுத்து வைத்து கொள்க

இதன்பின் இந்த அண்டு கேட், ஆர் கேட் ஆகிய கேட்டுகளில் (&,≤ )என்பனபோன்ற தேவையான குறியீட்டை சேர்ப்பதற்கு  மேலே கட்டளை பட்டையில் Insert => Special Characters =>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில்  தேவையான குறியீட்டை தெரிவுசெய்து சொடுக்கி சேர்த்துகொள்க

இந்த கேட்டுகளில் உள்ள    leadகளை   கணக்கீடுகளின் மூலம் இணைப்பது மிகச்சரியாக பொருந்தியமையாது என்பதால் glue points-ன் உதவியுடன் கைகளால் இணைத்துகொள்க இதற்காக Snap to Gridஎன்ற கட்டளையை செயலிழக்க செய்து கொண்டு Snap to Object Points. என்பதை செயல்படச்செய்தால் glue points- ஐதிறந்து செயல்படுத்திடமுடியும்   மேலும் இந்த பணியை செய்வதற்காக கருவிபட்டையை பயன்படுத்தி  வரைபடத்தின் உருவை பெரியதாக மாற்றியமைத்துகொள்வது நல்லது

இந்த அண்டு கேட் ,ஆர் கேட் ,நண்டு கேட் ,நாட் கேட் என்பன போன்றவைகளை தனித்தனி வகைவாரியான குழுவாக உருவாக்கி கொண்டால் அதன்பின் அவைகளை கம்பி இணைப்புடன்  இணைத்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்  என பரிந்துரைக்கப் படுகின்றது   அல்லது இவைகளை உருவாக்கி ஒரு புரிந்துகொள்ளும் பெயருடன் Gallery-ல்   சேகரித்து சேமித்து வைத்துகொண்டபின் தேவையானபோது ஒரு வரைபடத்தில் நகலெடுத்து ஒட்டிகொள்ளமுடியும்

ஒரு Half adderஎன்பதை எவ்வாறு வரைவது என இப்போது காண்போம்  முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை சென்டிமீட்டர் ஆகவும் துனைஅளவு 4புள்ளி எனவும் அமைத்துகொள்க பின் grid, guiding lines,  associated snap functions ஆகியவைகளை செயலில் இருக்குமாறு வைத்து கொள்க

பிறகு முதல் பணியாக பின்வரும் அட்டவணையிலுள்ளவாறு a , b,என்ற இரு signal leads  களை வரைந்து கொள்க

  Start point Length
Signal wire a X = 2 cm / Y = 3.0 cm 5.5 cm
Signal wire b X = 3 cm / Y = 3.0 cm 5.5 cm

 

பின் A,Bஎன்ற படுக்கைவச கோடுகளுக்கிடையில் input leads  Y=4.0 cm என்றும் output leads Y=6.0 cm என்றும்  அதனுடைய நிலையை சரிசெய்து அமைத்துகொள்க

அதன்பின்இரு INVERTER  கேட்டுகளின் நிலையை input   Y=4.1 cm என்றும் output Y=6.1 cm என்றும் சூழ்நிலை பட்டியின்Edit guidinglineஎன்ற கட்டளையின் வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க இவை மிகச்சரியாக அமையX=5.0 cm (INVERTER gate) and X=8.0 cm(AND gate). என அமைத்துகொள்க  இதன்பின்  Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  INVERTER  கேட்டினைஇழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு INVERTER  கேட்டுகளை  படம் 76-4-ல் உள்ளவாறு பொருத்தி அமைத்துகொள்க

  படம் 76-4

  இந்த இன்வெர்ட்டர் கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்க குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்   உடன்input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்தி அமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க

அதன்பின் Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  அண்டு கேட்டினை இழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு அண்டு கேட்டுகளை  படம் 76-5-ல் உள்ளவாறு பொருத்துக

படம் 76-5

இந்த அண்டு கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்  உடன் input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்திஅமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க

பின் ஒரு நெடுக்கைவசகோடு X=11 cmஎன்ற அளவிலும்  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.5 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளிலும் வரைந்து கொள்க  அதன்பின் இந்த  C,Dஎன்ற படுக்கைவச கோடுகளை Y=5.35 cm, Y=7.35 cmஎன்ற அளவுகளுக்கு மாற்றியமைத்துகொள்க

பிறகு Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள   ஆர் மற்றும் மற்றொரு அண்டு கேட்டுகளை மூன்றாவது நெடுவரிசையாக இழுத்துவந்து படம் 76-6-ல் உள்ளவாறு பொருத்துக

படம் 76-6

பின் மேலிருக்கும் அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=7.0 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளில் வரைந்து கொள்க அவ்வாறே கீழிருக்கும்  அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  ,E,Fஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.0 cm and Y=5.5 cmஎன்ற அளவுகளில் படம் 76-7 ல் உள்ளவாறு வரைந்து கொள்க இந்த கோடுகளுக்கு ஏற்ப அண்டு கேட்டுகளை சரிசெய்து அமைத்தபின் இந்த கோடுகள் அனைத்தையும் நீக்கம்செய்துவிடுக.

படம் 76-7

இவ்வாறான படிமுறையை பின்பற்றி படம் 76-8-ல்உள்ளவாறு Half Adder logic diagram ,Full-adder logic diagram ஆகிய வரைபடங்களை CAD ,pro-e போன்ற பயன்பாடுகளைபோன்று ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும்  வரையமுடியும்


படம் 76-8

 ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உரையை அசைந்தாட செய்தல்

கருவிபட்டையிலுள்ள Tஎனும் ட்ராவில் உரையை எழுதுவதற்கான கருவியை தெரிவுசெய்து சொடுக்கியபின்படம்-76-9ல்உள்ளவாறு ஏதேனுமொரு உரையை தட்டச்சு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Edit styles என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோனறிடும் Graphic styles என்றஉரையாடல் பெட்டியில் text animation தாவியின் திரையை தோன்றசெய்து அதில் effect தேவையான செயலை தெரிவசெய்து கொண்டு   ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தட்டச்சு செய்த உரையானது நாம் தெரிவுசெய்த விருப்பத்திற்கேற்ப நகர்ந்து செல்வதை காணலாம்

 படம் 76-9

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003-தொடர்-பகுதி–51 அக்சஸ் இயங்கும் வேகத்தை அதிகபடுத்த

அக்சஸை வேகபடுத்த அதனுடைய அமைவை சரிசெய்து அமைப்பதுடன் நில்லாமல் இதனுடைய பொருட்களையும்(object) சரிசெய்து அமைத்திடவேண்டும்,இதற்காக முதலில் வலுவான அட்டவணையை உருவாக்குக: இந்த அட்டவணைகள் தரவுதளத்திற்கு பேருதவியாக இருந்தாலும் ஒரு சிலநேரங்களில் சரியாகவும் வேகமாகவும் செயல்படாது போய்விடுகிறது, அதனால் தரவுதளத்தின் அடிப்படையை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டுசரியான அட்டவணையை உருவாக்குக,

திறனுள்ள வரிசையை(index) உருவாக்குக:ஒற்றையான அல்லது பல புலங்களின்(fields) வரிசையை(index) உருவாக்குக,இதில் புலங்களுக்கிடையே (fields) எதுமுதலில் இருக்கவேண்டும் எது அதற்கடுத்தது என குழப்பமேதுமில்லாமல் வேறுபடுத்தி காட்டுக. இவ்வாறு சரியாக வரையறுத்தால் மட்டுமே விரும்பியவாறு தரவுகளை உடனடியாக தேடிப்பிடிக்க முடியும்,பின்னர் எந்த புலத்திற்கு(fields)  எந்த வரிசை(index) என முடிவு செய்து ஒதுக்கீடு செய்யமுடியும்,

பொதுவாக தரவுதளங்களில் இரண்டுவகையான தவறுகளை செய்வார்கள், 1,ஒரு சிலர் வரிசையையே(index)  பயன் படுத்தமாட்டார்கள் இதனால் தரவுதளத்தினை பயன் படுத்துவதன் மூலம் ஏற்படும்  பயன் எதுவும் கிடைக்காது,

2,வேறு சிலர் அதிகபட்ச வரிசையை(index)  பயன்படுத்தவார்கள்,இதனால் சேமிப்பதற்கு அதிக அளவு இடத்தையும்  மீட்டெடுப்பதற்கு அதிக நேரத்தையும் கணினி எடுத்துக்கொள்கின்றது,

அதனால் போதுமான அளவிற்கு பொருத்தமான வரிசையை(index)  உருவாக்கி பயன்படுத்துக

சுலபமான வினாவை(query) உருவாக்குக: மற்றெல்லாவற்றையும் விட மிகச்சரியான வினாவை(query)  வடிவமைக்காததே அக்சஸஸ் மெதுவாக இயங்குவதற்கு அடிப்படை காரணமாகும்,இந்த வினாதான்(query)  தரவுதளங்களை திரையில் பார்வையிட்டு சரிபார்க்க பேருதவி புரிகின்றது,

இதனை வேகப்படுத்த பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுக

1,அனைத்து புலங்களுக்கும்(fields)  மிகச்சரியான வரிசையை(index) நன்கு வடிவமைத்து கொள்க,

2,தேவையான இடங்களில் வரிசைக்கு(index) பதிலாக அடிப்படை திறவுகோளை (primary key) உருவாக்குக,

3,அளவிற்கதிகமான நெடுவரிசையை(column)பயன்படுத்தி குறைந்த தகவல்களை திரும்ப பெறும்படி அழைக்கவும்,

4,count (*) என்ற SQL கூற்றை count என்ற புலத்தின் பெயருக்கு பதிலாக பயன்படுத்துக,

5, வினாவிற்குள் வினா உருவாக்கிடும்போது கணக்கீட்டு புலத்தை தவிர்க்கவும்,

6,குழுக்களான தகவல்களை Group by என்பதை பயன்படுத்தி பெறுக,

7,DLookup மற்றும் DCount ஆகிய செயலிகளுக்கு பதிலாக அட்டவணை வினாவை பயன்படுத்துக,

8,எப்போதும் விபிஏவையே பயன்படுத்துக,இது முதன்முறைமட்டும் திரட்டுதல்(compile) செய்வதற்காக சிறிதுநேரம் எடுத்துகொள்ளும் பின்னர் வழக்கமான வேகத்துடன் செயல்படும்,

9,எப்போதும் வெவ்வேறு வழிகளில் வினாவை எழுத பழகிகொள்க,

அழகான அறிக்கை மற்றும் படிவங்களை உருவாக்குக:

இவைகளின் சிக்கல் தன்மையும் அளவையும் முடிந்தவரை குறைத்து பயன்படுத்துக

இதனை வேகப்படுத்த பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுக

1,கூடுமானவரை குறைந்த பொருட்களையே(object) பயன்படுத்துக

2,துனைபடிவங்களை உள்ளிணைப்பதை அறவே தவிர்த்திடுக,

3,எப்போதும் உரைபெட்டிக்கு பதிலாக பெயரொட்டியை(label) பயன்படுத்துக,

4,விபிஏ குறிமுறைகளை படிவ தகவமைவு(modules)களுக்கான செந்தர தகவமைவு(modules)களாக பயன்படுத்துக

5,கட்டுப்பாடுகளை ஒன்ருக்கொன்று மோதுவதுபோன்று இணைத்துவிடவேண்டாம்,

6,தொடர்புடைய குழுக்களின் கட்டுப்பாடுகளையே பயன்படுத்துக

அறிக்கை மற்றும் படிவங்களில் பிட்மேப் படங்களின் பயன்பாட்டை குறைத்தல்:

தரவுதளங்கலின் ஆவணங்களுக்கு இவை நல்ல தோற்றத்தை வழங்கினாலும் அக்சஸின் இயங்கும் வேகத்தை மெதுவாக்குகிறது,அதனால் பிட்மேப் படங்களை முடிந்தவரை குறைவாக பயன்படுத்துக,உருவப்படகட்டுப்பாடு  மற்றும் கட்டற்ற பொருட்களின்(object)சட்டம் ஆகிய இரண்டும் அக்சஸின் செயல்வேகத்தை அதிகப்படுத்துகின்றன,

பட்டியல்பெட்டி மற்றும் சேர்க்கைபெட்டி(combobox) ஆகியவற்றை பயன்படுத்துக:

இவைகளை அளவிற்கு அதிகமாகவும் இல்லாமல் மிகவும் குறைவாகவும் இல்லாமல் போதுமான அளவிற்குமட்டும் பயன்படுத்துக

1,பல பக்கங்களுடைய படிவத்தில் Row source ஐ அமைக்கவேண்டாம்,

2,எப்போதும் முதன் முதல் புலத்தைமட்டும்(field) வரிசைபடுத்துதல்(index) செய்திடுக,

3, சேர்க்கைபெட்டியில்(combobox) உள்ளAuto expand என்ற பண்பியல்பிற்குproperty  no என அமைத்திடுக,

4,உரைவகை தரவுகளுக்கு மறைத்து வைக்கபடாத நெடுவரிசையை அமைத்திடுக,

5,Record source மற்றும் Row source ஆகியவற்றிற்கு saved  என்ற வினாவை பயன்படுத்துக,

தகவமைவு(modules) களின் வேகத்தை அதிகபடுத்த:

இதற்காக படிவமாறிகளை பயன்படுத்துவதை விட  me என்ற திறவுச்சொல் மிகவேகமாக செயல்படுகிறது, அதனால் இவ்வாறான திறவுசொற்களை உங்களுடைய  தகவமைவு(modules)களில் அதிகஅளவு பயன்படுத்தி அக்சஸின் செயல்படு வேகத்தை அதிகபடுத்தி கொள்க,

பொருத்தமான தரவுகளின் வகைகளை பயன்படுத்துக:

அதற்கான அட்டவணை பின்வருமாறு

அட்டவணை-51-1

இன்டகர்/லாங்க் மிகவேகமாக செயல்படும்
சிங்கில் /டபுள் சிறிது குறைவான வேகத்தில் செயல்படும்
கரண்ஸி மெதுவாக செயல்படும்
வேரியன்ட் மிகமெதுவாக செயல்படும்

மிக விரைவான திரும்பதிரும்பசெயல்படுவதற்கான கட்டளைகளையே பயன்படுத்துக:

Select ஐ விட   For /Next என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

IFF() என்ற செயலியை விட If /Then/Else என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

If…then  ஐ விட not என்ற கூற்று மிக வேகமாக செயல்படும்

Trueஎன்பதை பயன்படுத்துவதை விட நேரடியான மாறிகளின் மதிப்பை பயன்படுத்துக,

கட்டுப்பாட்டு மாறிகளையே பயன்படுத்துக:

படிவத்தின் பெயரை பயன்படுத்துவதைவிட me என்ற கூற்றை பயன்படுத்துவது அக்சஸை மிகவேகமாக செயல்படவைக்கும் செயலாகும்

நிரல்தொடர்பட்டி – 51-1

Dim frm as Form

Set frm = Forms![frmsales]

Frm![dtmSaleDate] = something

Frm![dtmInvoiceDate] = something

Frm!frmSales]![IngzSalespersonId] = something

புலங்களின் மாறிகளையே பயன்படுத்துக:

மேலேகண்ட தொழில்நுட்பத்தை விபிஏகுறிமுறையின் Record set உடன் பணிபுரியும்போது புலங்களுடைய தரவுகளின் கணக்கீடுகளுக்கு பின்வருமாறு பயன்படுத்துக,

நிரல்தொடர்பட்டி – 51-2

Dim MyField as Field

….

Set MyField = tbl![order Total]

Do Until tbl.EDF

MyTotal + MyField

Loop

முடிவுகுறிமுறைகளையும் பயன்படுத்தாத மாறிகளையும் அறவே நீக்கிவிடுக:

முதலில் இவ்வாறான செயலானது நினைவக இடத்தை அதிகபடுத்த உதவுகிறது,

அதனால் அக்சஸின் செயல்வேகம் கூடுகிறது,

வலைபின்னலின் திறனை உயர்த்துக:

பகிர்வு வசதியை பயன்படுத்தும் வலைபின்னலின் தரவுதளத்தின் திறனை உயர்த்துவது நல்லது,

அக்சஸை தொகுத்தல் (decompile) செய்க:

இந்த செயல் விபிஏ மற்றும் தகவமைவு(modules)களை சேமிக்கவும் செயல்படுத்தவும் உதவுகிறது,

இதனை செயல்படுத்த விண்டோவின் startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் startஎன்ற பட்டியில் Runஎன்பதை தெரிவுசெய்க பின்னர் விரியும்Run என்ற உரையாடல்பெட்டியில் msacces/docompile என தவறில்லாமல் தட்டச்சுசெய்து (படம்-50-1) shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன் மூலம் செயல்படுத்துக,

படம்-50-1

மிகப்பெரிய தரவுதளங்களையும் வெற்றிகரமாக வேகமாக செயல்படுத்த:

1,பயன்பாடுகள் தயாராக இருக்கின்றது எனத்தெரியும்போது மட்டும் கணிணியை மறுதொடக்கம் செய்து செயல்படச்செய்க,

2,new acces என்ற தரவுதளத்தையும் அதன் பொருட்களையும்(object)  உருவாக்கி அக்சஸை மூடிவிடுக,

3.Decompile என்ற வாய்ப்பின் மூலம் shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன்  மூலம் செயல் படுத்துக,தரவுதள சாளரம் தோன்றியவுடன் அக்சஸை மூடிவிடுக,

4பின்னர் shift என்ற விசையை பிடித்து அழுத்துவதன்மூலம் அக்சஸை இயக்க ஆரம்பிக்கவும்

5,தரவுகளை திரட்டுதல் (compile) செய்க,

6,தரவுதளத்துடன் வேறு ஏதேனுமிருந்தால் பழுதுபார்த்து சுருக்கிகட்டிவிடுக

இவ்வாறான மேலே கூறிய ஆறு படிமுறைகளை பின்பற்றி உங்கள் பயன்பாடுகளை திறனுள்ளதாகவும் மிகவிரைவாக இயங்ககூடியதாகவும் தயார் செய்துகொள்க,

திறமூல இயக்கமுறைமையான லினக்ஸின் மிகப்பிரபலமானவைகள்

1,டெபியன்.இந்த டெபியனை அடிப்படையாக கொண்டு உபுண்டு(இது கோனோனிக்கல் என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளியிடபடுகின்றது இதனை பெறுவதற்கான இணையமுகவரி http://www.ubuntu.com/ ஆகும்), மெபிஸ் (இதனை பெறுவதற்கான இணையமுகவரிhttp://www.mepis.org/ஆகும்) போன்றவை லினக்ஸின் மிகபிரபலமான இயக்கமுறைமைகளாகும் இவை ஒவ்வொன்றும் ஒருசில தன்னார்வ நிறுவனங்களினால் தத்தெடுக்கபட்டு அவ்வப்போது இந்த இயக்கமுறைமைகளினுடைய மேம்படுத்தபட்ட படைப்புகளை வெளியிடபட்டு கொண்டேயிருக்கின்னறனர் மேலும் இவைகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்வுசெய்து தருமாறு தனியான குழுக்களும் செயல்படுகின்றன

75.7.1

   2,  RHELஇது  Red Hat Enterprise Linux என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளியிடபடுகின்றது மிகவும் திறன்வாய்ந்ததாகவும் ஏராளமான வசதிகளை வழங்குவதாகவும் இது விளங்குகின்றது இதனை பெறுவதற்கான இணையமுகவரிhttp://www.redhat.com/products/enterprise-linux/ஆகும்

3, பெடோரா இது தனியாள் கணினிக்கு மிகபொருத்தமானதாகவும் மிகசிறந்த செயல்பாடு உடையதாகவும் விளங்குகின்றது இது RHEL இற்கு இணையான வசதியை அளிக்கின்றது இதனை பெறுவதற்கான இணையமுகவரிhttp://fedoraproject.org/ ஆகும்

 75.7.2

4, மேஜீயா இது மேற்கூறிய அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமையைவிட மிகபிரபலமாக விளங்குகின்றது ஏனெனில் இதனை இயக்குவதற்கான அனைத்து வழிமுறைகளும் மிக எளியதாக இருக்கின்றது இதனை பெறுவதற்கான இணையமுகவரிhttp://www.mageia.org/en ஆகும்

5,மின்ட் லினக்ஸ் இதுGNOME 2.x  என்ற இடைமுகத்துடன் செயல்படுகின்றது மிகவும் திறன்வாய்ந்தது  லினக்ஸ் இயக்கமுறைமைகளில் தலைசிறந்ததாக விளங்குகின்றது பெரும்பாலானவர்களின் பேராதரவுடனும்  பயன்படுத்திடுமாறும் இது செயல்படுகின்றது இதனை பெறுவதற்கான இணையமுகவரிhttp://linuxmint.com/ ஆகும்

75.7.3

 8, பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆனது தம்முடைய நிறுவனத்திற்கு வருகின்ற வருமானம் குறையும்போது புதிய பதிப்பு என்றும் மேம்பட்ட பதிப்பென்றும் தம்முடைய மென்பொருட்களை வெளியீடு செய்து கொண்டே இருப்பார்கள் அவ்வாறான நிலையில் ஒருசில பதிப்புகள் வெளியீடு செய்தவுடன் ஆதரவேஇல்லாமல் முடங்கிபோவதும் ஒருசில மிகப்பிரபலமாக விளங்குவதும் உண்டு முடங்கி போனதற்கு உதாரணமாக விண்டோ விஸ்டா இயக்கமுறைமையையும் மிகப்பிரபலமாக மிக நீண்ட நாட்களாக பெருமாபாலானவர்களால் ஆதரிக்ககூடியதாக விண்டோ எக்ஸ்பியும் விளங்குகின்றன  தற்போது விண்டோ 7 இற்கு அடுத்தபடியாக விண்டோ 8 என்ற பதிப்பை அக்டோபர் 2012 -ல் வெளியிடவுள்ளனர்

இதில் விண்டோ8 ப்ரோ என்ற பதிப்பை மட்டும் வாடிக்கையாளர் விரும்பினால் தாம் கொள்முதல் செய்த    விண்டோ8 ப்ரோ என்ற இயக்கமுறைமையை விண்டோ 7 ஆகாவோ விண்டோ விஸ்டாவாகவோ மாற்றியமைத்துகொள்ளலாம் என At any time, you may replace an earlier version with Windows 8 Pro  என்ற வாசகத்தின் மூலம் அனுமதித்துள்ளனர் இவ்வாறான வசதி இதற்கு முந்தைய வெளியீடுகளில் வாடிக்கையாளரின் சொந்த முயற்சியில் மட்டுமே செயல்படுத்திடுமாறு அதாவது You must obtain the earlier version separately என்ற வாசகத்தின் மூலம் மறுக்கபட்டு வந்தது

முதன்முறையாக தற்போதுதான் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் வாடிக்கையாளர் விரும்பியவாறு முந்தைய வெளியீட்டிற்கு மாற்றியமைத்துகொள்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளது

இந்த விண்டோ8  பதிப்பில் பயாஸ் தொடக்கஇயக்கமானது இயல்புநிலையில்UEFI-mode (Unified Extensible Firmware Interface)  எனஇருக்கும் வாடிக்கையாளர் விரும்பினால் PC’s BIOS இனுடைய தொடக்கஇயக்கமானது legacy mode என மாற்றியமைத்து தாம் விரும்பும் இயக்கமுறைமையில் கணிணிசெயல்படுமாறு செய்திடமுடியும்

ஆயினும் இந்த இயக்கமுறைமையை  விண்டோ எக்ஸ்பிக்கு மாற்றி யமைத்து கொள்ளமுடியாது ஏனெனில் விண்டோ எக்ஸ்பிக்கான ஆதரவை 2014 இற்கு பிறகு இந்த நிறுவனம் அறவே நிறுத்தி கொள்ள விருக்கின்றது மேலும் இந்த நிறுவனம் விரைவில் வெளியிடவிருக்கும் எம் எஸ் ஆஃபிஸ் 2013 பதிப்பானதுவிண்டோ எக்ஸ்பியில் அறவே செயல்படாது

போலியான மின்னஞ்சலை தவிர்த்திடுக.

 

இதுபோன்ற மின்னஞ்சல்கள் யாகூவிலிருந்து அல்லது ஜிமெயிலிருந்து ஏதாவது நமக்கு வந்தது எனில் அதில்பின்வருமாறு உள்ள செய்தியை தொடர்ந்திருக்கும் முகவரியை பின்தொடர்ந்து சென்றால்

If you didn’t create this Gmail address and don’t recognize this email,
please visit:

https://accounts.google.com/AccountDisavow?adt=AOX8kirn_7fUKnJHrtdbaJMo0885CdpxkAxsreuYkMq9MAIn_yDAWZzbQsR_NiW8MQ

பின்வரும் இருவாய்ப்புகள் நம்மை தெரிவுசெய்திடுமாறு கோரும் முதல்வாய்ப்பானது ஏற்கனவே நம்முடைய மின்னஞ்சல் முகவரியுடன் நமக்குத்தெரியாமல் இணைப்பு ஏற்படுத்தி நம்மை காண்காணிக்கும் அமைவாகும்

1.No, I did not create this ID. Disconnect this account from the main account.

2. Yes. I created this ID.

அதனால் இவ்வாறு குப்பைச்செய்தி நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வந்தது எனில் நம்முடைய மின்னஞ்சலிற்கு வருகின்ற அல்லது நாம் அனுப்புகின்ற அனைத்து மின்னஞ்சல்களும் இந்த  போலியான துனை மின்னஞ்சல் முகவரியால் அபகரிக்கபடுகின்றன எனத்தெரிந்து கொள்க அதாவது நம்முடைய மின்னஞ்சல் முகவரியின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கபட்டு மிகமுக்கியமான தகவல்கள் நமக்குத்தெரியாமலேயே திருபடுகின்றன என்ற அர்த்தமாகும்

அதனால் இவ்வாறான போலியான மின்னஞ்சல் ஏதேனும் வராமலும் நம்முடைய சொந்த மிகமுக்கியமானதகவல்களும் திருடபடாமல் அபகரிக்கபடாமலும் இருந்திடவேண்டுமெனில் நம்முடைய மின்னஞ்சலிற்கு உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்களை எண்கள் பெரியஎழுத்துகள் சிறியஎழுத்துகள் சிறப்புக்குறியீடுகள் கொண்ட    மிகவலுவானதாக அவ்வப்போது மாற்றியமைத்துகொள்க

மிகவிரைவாக தரவுகளை மீட்டெடுத்திட உதவிடும் NextBreed என்ற மென்பொருள்

நம்மில் ஏராளமானவர்கள் அவ்வப்போது நாம் அரும்பாடுபட்டு தேடி  கணினியில் சேகரித்து வைத்திருந்த நம்முடைய தரவுகளை இழந்த  அனுபவம் பெற்றிருப்போம்  அவ்வாறான வர்களுக்கு உதவுவதற்காகவே NextBreed என்ற மென் பொருள் பயன்படுகின்றது  .

இந்த கருவியானது மிகமுன்னேறிய பல்வேறு வசதிகளுடன் Audio, Video, Ms Office filesஎன்பன போன்ற எந்தவகையிலும்

NTFS, FAT12, FAT16 , FAT32  என்பன போன்ற எந்தவகையான  அமைப்பில் இருந்தாலும்

Hard disk ,USB drives (Pen drives), Memory Cards, Camera Cards  என்பன போன்ற எந்தவகையான தரவுகளின் தேக்கிவைத்திடும் சாதனத்தில் இருந்தாலும்

System Crash ,Accidental file deletion ,Unplanned Format ,Partition damage or loss,Virus Infection,Files lost in USB/SD cards  என்பன போன்ற எந்தவொரு வகையில் தரவுகளின் இழப்பு ஏற்பட்டாலும்

JPEG,PNG,BMP,JIF,MP3, WAV, WMV, ASF  ,AVI, MP4, MPG,RMVB, .doc, xls, ppt ,dbx ,.mdb ,ZIP , RAR என்பன போன்ற எந்தவொரு வகை கோப்பாக இருந்தாலும் மீட்டெடுத்திடும் வசதியை நமக்கு இது  வழங்குகின்றது இது மிகவிரைவாக செயல்படக்கூடியதாகும் ,இதனை http://www.nextbreed.com/product.html என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க

இந்த  NextBreed என்ற மென் பொருளை நம்முடைய கணினியில் நிறுவியபின் இதனை செயல்படுத்தியவுடன்  தோன்றிடும் திரையில் 1.Deleted Recovery. ,2.Partition Recovery.,3. Format Recovery.,4.Raw Recovery  ஆகிய நான்கு வகைகளில் நாம்விரும்பும் வாய்ப்பை தெரிவுசெய்து அதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றி தரவுகளை மீட்டெடுத்திடமுடியும

உதாரணமாக என்ற முதல் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் எந்த இயக்ககத்தில் உள்ள கோப்புகள் என தெரிவுசெய்க உடன் நாம் தெரிவுசெய்த இயக்ககம் வருடபட்டு பட்டியலாக காணபிக்கும் அதில் எந்த கோப்பகத்திலுள்ள எந்த கோப்பு என தெரிவுசெய்க அதற்கு பதிலாக தேடிடும் வாய்ப்பின்மூலம் தேவையான கோப்பிருக்கும் இயக்ககத்தையும் கோப்பகத்தையும் தேடிபிடித்து தேவையான கோப்பினை தெரிவுசெய்து கொண்டRecover   என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக    பின் தோன்றிடும திரையில் நாம் மீட்டெடுக்கும் கோப்பினை தேக்கிவைக்குமிடத்தை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நீக்கம் செய்திருந்த கோப்பு மீட்டெடுக்கபட்டிருக்கும் இவ்வாறே மற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்தி நீக்கம் செய்யபட்ட தேவையான தரவுகளை மீ்ட்டெடுத்திடுக.

அவுட்லுக் எனும் – புதிய மின்னஞ்சல் வசதி

ஜிமெயில,யாகூமெயில் போன்று மைக்ரோசாப்ட் நிறுவனமானது சமீபத்தில் அவுட்லுக் என்ற பெயரில் www.outlook.com என்ற இணைய முகவரியில் புதிய மின்னஞ்சல்  வசதியை தொடங்கியுள்ளது . இந்த பெயர் எம்எஸ் ஆபிஸ் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்தது என்பதால் அவர்களை தக்கவைத்து கொள்வதற்காக இந்த மின்னஞ்சல் வசதியை வழங்கத்துவங்கியுள்ளனர் தொடக்கத்தில் இதனைபற்றி மக்களில் ஒரு சிலர் மிகபரபரப்பாக  பேசினார்கள் என்றாலும் இந்த சேவையின் அஞ்சல் பெட்டியின் தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு இருக்கும் இது நம்முடைய பயன்பாட்டிற்காக திரையில் அதிக காலிஇடம் வழங்குகின்றது மிகவேகமாக மின்னஞ்சல்கள் திரையில் நாம்காண்பதற்காக மேலேற்றம்இதில்  நடைபெறுகின்றது இதன் தோற்றம் மிக வித்தியாசமாக உள்ளது புதிய மின்னஞ்சலை கீழ்பகுதியில் அல்லது அருகில் வைத்து பார்த்து கொள்ளமுடிகின்றது   தொடக்கத்தில் ஹாட்மெயில் சேவையை நிறுத்தபடுவதாக செய்தி வெளியிடபட்டது இருந்தபோதிலும்இந்நிறுவனத்தின் ஹாட்மெயில் என்ற சேவையும் தற்போது தொடர்ந்து வழங்கபடுகின்றது

10 ஜிபி நினைவக வசதி இதில் வழங்கபடுகின்றது  மற்ற மின்னஞ்சல் சேவையிலிருந்து இந்தஅவுட்லுக் மின்னஞ்சல் சேவைக்கு எளிதாக மாறிக்கொள்ளும் வசதியும் அளிக்கபடுகின்றது  இரத்தினசுருக்கமாக கூறவேண்டுமெனில் பழையமொந்தையில் புதிய கள் வழங்கபடுகின்றது என்ற பழமொழியை நமக்கு இந்த சேவை நம்முடைய மனதில் தோன்றவைக்கின்றது

IMPS – Interbank Mobile Payment Service என்ற சேவையின் மூலம் தொடர்வண்டியின் சீட்டுகளை எளிதாக இணையத்தின் மூலம் பெறமுடியும்

இந்திய இரயில்வேயிற்கு சொந்தமான IRTC இணைய பக்கத்திற்கு சென்றுநமக்கு தேவையான தொடர்வண்டியின் சீட்டுகளை ஒதுக்கீடு செய்து அதனை உறுதிசெய்துகொள்வதற்கான கட்டணத்தொகை செலுத்துவதற்கான இணையபக்கத்திற்கு சென்றால் கட்டணத்தொகைமட்டும் பெற்றுகொண்டு நமக்கு தேவையான சீட்டுகளானது  ஒதுக்கீடு ஆகாமல் நின்றுவிடும் அல்லது  இவ்வாறான செயல் தவறாகிவிட்டது தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் என திரும்பவும் ஆரம்பத்திலிருந்து செயல்படுமாறான திரை தோன்றிடும் மறுபடியும் செய்த செயலையே செய்து நம்மை அப்படியே இடித்துவைத்த பிள்ளையார் போன்று உட்காரவைத்திடும்

மற்ற நிறுவனங்களில் அதாவது விமான பயனத்திற்கான சீட்டு ஒதுக்கீடு செய்வது  போன்ற செயல்களில் சரியாக நம்முடைய பணி முடிவடையும்போது இந்தIRTC இணைய பக்கத்தில் மட்டும் இவ்வாறான தொல்லை ஏற்படுவதற்கான காரணம் என்னவென ஆராய்ந்தால் இந்த IRTC இணைய பக்கத்தில்  குறிப்பிட்டத்தொகையை அதாவது வங்கிகளில் சேமிப்பு கணக்கு ஆரம்பிப்பது போன்று  நாம் விரும்பும் தொகையை இருப்பாக வைத்துகொண்டு நம்முடைய பெயரில் கணக்கு ஒன்றினை IRTC இணைய பக்கத்தில் தொடங்கினால் அதன்பின் நமக்குத்தேவையான தொடர்வண்டியின் சீட்டுகளை எளிதாக இணையத்தின் மூலம் பெறமுடியும் இவ்வாறான கணக்குகளை தொடர் வண்டியை பயன்படுத்திடும் கோடிக்கணக்கான  மக்கள் தொடங்கிடும்போது வட்டியில்லாத வைப்புத்தொகையானது இந்திய இரயில்வேயிற்கு ஏராளமாக கிடைக்கின்றது

75.3.1

இதற்கு  பதிலாக இந்திய ரிஸர்வு வங்கியால் அனுமதிக்கபட்ட National payment corporation of india எனும் இணைய வங்கியில்IMPS – Interbank Mobile Payment Service  என்ற சேவையின் மூலம்   தொடர்வண்டியின் சீட்டுகளை எளிதாக இணையத்தின் மூலம் பெறமுடியும் இதற்கான கட்டணம் ரூபாய் 5000 வரை ருபாய் 5 மட்டுமேயாகும்  மேலும் இந்த வங்கி சேவையின் மூலம் மற்ற வணிக வங்கிகளை போன்றே ஒரு கணக்கிலிருந்து நாம் விரும்பும் கணக்கிற்கு தொகையை பரிமாற்றம் செய்வது ,வேறுவங்கியின் கணக்கிற்கு மாற்றம் செய்வது ,வியாபாரம் தொடர்பான பொருள் அல்லது சேவைக்கான கட்டணத்தை செலுத்துவது என்பனபோன்ற செயல்களை செய்து கொள்ளமுடியும் இதுமட்டுமின்றி இந்த அனைத்து சேவைகளையும் ஒரு செல்லிடத்து பேசிமூலமாகவே செயல்படுத்திடமுடியும்

Previous Older Entries