PicViewஎனும் கட்டற்ற பயன்பாடு

படக்காட்சி (PicView) என்பது Windows 10 அல்லது 11ஆகிய இயக்க முறைமைக்கான விரைவான திறமையான படக் காட்சியாளராகும், இது ஒரு தெளிவான சுருக்கமான பயனர் இடைமுகத்துடன் வருகிறது, தேவையில்லாத போது இந்த வசதியை மறைத்திடலாம்.
இது WEBP, GIF, SVG, PNG, JXL, HEIC, PSD போன்ற பல்வேறு படங்களின் கோப்பு வகைகளை ஆதரிக்கிறது.
கூடுதலாக, PicView ஆனது EXIF தரவு காட்சி, பட சுருக்கம், தொகுதி மறுஅளவாக்கம், காப்பகங்கள்/படக்காட்சி புத்தகங்களில் படங்களைப் பார்ப்பது, பட மாறுதல்கள், காட்சியகங்கள் ,என்பன போன்ற பல்வேறு வசதிகளையும் உள்ளடக்கியது.
இதுசுத்தமான, கட்டணமற்ற, விரைவாக செயல்படுகின்ற பயன்பாடாகும்இதில். அதிக UI இல்லை. எரிச்சலூட்டுகின்ற மேல்மீட்புபட்டிகள் இல்லை. இதுசிறிய , நிறுவுகைசெய்யக்கூடிய பதிப்புகளுடன் கிடைக்கிறது.
முக்கியவசதிவாய்ப்புகள்:
மங்காபடக்கதையை/சிரிப்புபடக்கதையை மனதில் கொண்டு உருளும் செயலி கட்டமைக்கப் பட்டுள்ளது. படத் தெளிவுத்திறனுக்கு ஏற்றவாறு சாளரத்தின் மாறும் அளவை மாற்றுகிறது, படங்களில் உலாவரும்போது EXIFதரவை விரைவாகக் காணவும், இடைமுகத்தை மறைக்கவும் முடியும், படத்தைக் காட்ட, Otimize Image எனும் பொத்தானைப் பயன்படுத்தி படங்களை இழப்பின்றி சுருக்கவும் கோப்பின் பெயர், தெளிவுத்திறன், படத்தின் அளவு ,இதரவசதி ஆகியவற்றைக் காண்பிக்கிறது. தலைப்புப் பட்டியில் உள்ள விகிதம் உள்ளுணர்வு அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி படக் கோப்புறையில் எளிதாக உலாவரலாம் அடிப்படைத் திருத்தம்: சுழற்றுதல், புரட்டுதல், வெட்டிஎறிதல், கோப்பு வகையை மாற்றுதல், கோப்புகள், கோப்புறைகள், இணையமுகவரிகள்(URL) , காப்பகங்கள் ஆகியவற்றிற்கான துனுக்குகளின் பிடிப்பாளர் ஆதரவிலிருந்து இழுத்து விடுதல்/ஒட்டுதல் வாய்ப்புடன் முழுத் திரை அல்லது கிடைமட்ட/சாளரம் கொண்ட தொகுப்பு கோப்பு வரலாறு கொண்டுள்ளது, எனவே இதில் நாம் நம்முடைய பணியை விட்ட இடத்திலிருந்து எளிதாக தொடரலாம்
தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகம் (இருண்ட அல்லது வெள்ளை தீம் இடையே தேர்வு செய்க, 12 வகைகளான அனுகுதல் வண்ணங்களுக்கு இடையே தேர்வு செய்க.)
ZIP, RAR, 7z, 7Zip, Iso, Cab, Wim, Tar, BZip2, RAR போன்ற காப்பகங்களில் உள்ள படங்களைப் பார்வையிடுக (நிறுவப்படுவதற்கு 7-Zip அல்லது WinRAR தேவை)
cbr, cb7, cbt, cbz, cb போன்ற படக்கதைக் புத்தகக் காப்பகங்களில் உள்ள படங்களைப் பார்வையிடுக
எதிர்மறை வண்ணங்கள், பழைய திரைப்பட விளைவுகள், பென்சில் ஸ்கெட்ச் போன்றவை உட்பட 27 வெவ்வேறு நிழல் விளைவுகள் (பட வடிப்பான்கள்).
படத்தை வால்பேப்பராக அமைக்கவும் (பட விளைவும் பயன்படுத்தப்படும்)
கோப்புகளை வரிசைப்படுத்துதல்: பெயர், கோப்பு அளவு, உருவாக்கப்பட்ட தேதி, கடைசியாக அணுகப்பட்டது, சமீபத்திய திருத்தம், கோப்பு நீட்டிப்பு, சீரற்றதாக
பின்வருமாறான பெரிய கோப்பு ஆதரவினை கொண்டது
.jpg .jpeg .jpe .png .bmp .tif .tiff .gif .ico .jfif .webp .jxl .jp2
.psd .psb .xcf .svg .svgz .heic, .heif .tga .dds .b64
.3fr .arw .cr2 .cr3 .crw .dcr .dng .erf .kdc .mdc .mef .mos .mrw .nef .nrw .orf .pef .raf .raw .rw2 .srf .x3f
.pgm .hdr .cut .exr .dib .emf .wmf .wpg .pcx .xbm .xpm .wbmp
இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://picview.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

அறிந்துகொள்கGwyddion எனும் தகவமைவு நிரலை

Gwyddion என்பது SPM ((scanning probe microscopy)) இன் தரவு காட்சிப் படுத்தலுக்கும் பகுப்பாய்வுக்குமான ஒரு தகவமைவு நிரலாகும். முதன்மையாக இது ஆய்வு நுண்ணோக்கி நுட்பங்களை (AFM, MFM, STM, SNOM/NSOM) வருடுதல் செய்வதன் மூலம் பெறப்பட்ட உயரப் புலங்களின் பகுப்பாய்விற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது மேலும் இது ஏராளமான SPM தரவு வடிவங்களை ஆதரிக்கிறது. இருப்பினும், இதனை பொது உயர புலத்திற்கும் (greyscale) பட செயலாக்கத் திற்கும் பயன்படுத்திகொள்ளலாம், எடுத்துக்காட்டாக உருவப்பட spectrophotometry இலிருந்து profilometryஇன் தரவு அல்லது தடிமனான வரைபடங்களின் பகுப்பாய்வினை கருத்தில் கொள்க.
Gwyddion ஆனது அனைத்து செந்தர புள்ளியியல் குணாதிசயங்கள், நிலைப் படுத்துதல் , தரவு திருத்தம், வடிகட்டி அல்லது grainஐ உருவாக்குகின்ற செயலிகள் உட்பட, அதிக எண்ணிக்கையிலான தரவு செயலாக்க செயலிகளை வழங்குகிறது. மேம்படுத்துநர்கள் செயலில் உள்ள SPM பயனர்கள் என்பதால், நிரலில் குறிப்பிட்ட, அசாதாரணமான, ஒற்றைப்படையான, சோதனை தரவு செயலாக்க முறைகள் உள்ளன – மேலும் அவை நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றன.Gwyddion என்பது GNU எனும் உரிமத்தின் கீழான கட்டற்ற கட்டணமற்ற மென்பொருள் ஆகும். மூன்றாம் தரப்பு தொகுப்புகள் உரைநிரல்களால் எளிதாக நீட்டிக்கக்கூடிய இருபரிமான(2D) தரவு செயலாக்கத்திற்கும் பகுப்பாய்வுக்குமான தகவமைவு நிரலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது கட்டற்ற கட்டணமற்ற மென்பொருளாக உள்ளது, அதனால் இது மேம்படுத்துநர்களுக்கும் பயனர்களுக்கும் மூலக் குறிமுறைவரிகளையும் வழங்குகிறது, இது அதன் தரவு செயலாக்க வழிமுறைகளின் சரிபார்ப்பினையும் மேலும் நிரல் மேம்பாடுகளையும் எளிதாக்குகிறது.Gwyddion பொதுவான கட்டமைப்புகளில் GNU/Linux, Microsoft Windows Mac OS X ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படுகின்ற திறன்மிக்கது. இதனுடைய அனைத்து அமைப்புகளையும் மென்பொருட்களின் மேம்படுத்துதலிற்கு பயன்படுத்திகொள்ளலாம். இது ஒரு நவீன வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக கொண்டு செல்லக்கூடிய Gtk+ கருவித்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது, இதனால் ஆதரிக்கப் படுகி்ன்ற அனைத்து அமைப்புகளிலும் இதுஒரேசீராக செயல்படக்கூடியது.
முக்கியவசதிவாய்ப்புகள்: 130 க்கும் மேற்பட்ட SPM கோப்பு வடிவங்களுக்கான ஆதரவு., அனைத்து செந்தர செயலிகள்: நிலைப்படுத்துதல், வடிவியல் மாற்றங்கள், புள்ளியியல் தன்மை, grain கண்டறிதல், FFT வடிகட்டுதல், தன்னிச்சையாக வடிவ முகமூடிகளின் கீழ் தரவை செயலாக்குதல்., அளவுத்திருத்தம், அளவியல் ஆதரவு., ஒற்றை புள்ளி நிறமாலை, தொகுதி தரவு ஆதரவு (கோப்பு வடிவங்களின் துணைக்குழுவிற்கு), செயற்கை மேற்பரப்புகளின் உருவாக்கம் , அளவீட்டு உருவகப்படுத்துதல். பைதான் 2 உரைநிரலின்.
அனைத்து சூத்திரங்கள், செயல்முறைகள் , வழிமுறைகள் பொதுவானவை திறமூலமானவை. பயனர் வழிகாட்டியின் எல்லைக்கு அப்பாற்பட்ட சிறந்த கணக்கீட்டு விவரங்களைப் படிக்க அல்லது ஒப்பிட விரும்பும் எவரும் இதனுடைய உண்மையான செயலாக்கத்தைப் படித்தறிந்துகொள்ளலாம்.
அனைத்து கணக்கீடுகளும் இரட்டை துல்லியத்தில் செய்யப்படுகின்றன, மேலும் Gwyddion சொந்ததரவுவடிவமைப்பு(.gwy) தரவை இரட்டை துல்லியத்திலும் சேமிக்கிறது. சாதாரண சூழ்நிலைகளில், வரையறுக்கப்பட்ட துல்லியம் அல்லது மதிப்புகளின் வரம்பு காரணமாக எந்த தகவலும் இழக்கப்படாது. Gwyddion தரவு வடிவம் தன்னிச்சையான எண்ணிக்கையிலான படங்கள், வரைபடங்கள், நிறமாலை அல்லது தொகுதி தரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
Gwyddion மிகவும் பொதுவான தொட்டுணரக்கூடிய அலகு அமைப்பைப் பயன்படுத்துகிறது, தொட்டுணரக்கூடிய அளவு தரவுகளின் வகைகளில் (, பக்கவாட்டு பரிமாணங்கள்) உள்ளமைக்கப்பட்ட வரம்புகள் எதுவும் இல்லை. சரிவுகளின் அலகுகள், பகுதிகள், தொகுதிகள் , பிற பெறப்பட்ட அளவுகள் சரியாக கணக்கிடப்படுகின்றன. இதில்SI அலகு அமைப்பு முடிந்தவரை பயன்படுத்தப்படுகிறது.
கருவிகளையும், பிற உரையாடல்களையும் அவற்றின் அளவுருக்களை நினைவில் கொள்கின்றன, ஒரு அமர்விற்குள் கருவி அழைப்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, அமர்வுகள் முழுவதும். Gwyddion சொந்தகோப்பு வடிவம் (.gwy) அனைத்து தரவு குறிப்பிட்ட அமைப்புகளைச் சேமிப்பதை ஆதரிக்கிறது: தவறான வண்ணத் தட்டு, முகமூடிகள், விளக்கக்காட்சிகள், தேர்வுகள், தொடர்புடைய முப்பரிமான(3D) காட்சி அளவுருக்கள், அந்தத் தரவோடு தொடர்புடைய வரைபடங்கள், அவற்றின் அமைப்புகள் போன்றவை.
பெரும்பாலான Gwyddion நூலக செயலிகளில் பைதான் இடைமுகமான pygwy இல் கிடைக்கின்றன. பைத்தானில் எழுதப்பட்ட கோப்பு , செயலாக்க தொகுதிகள் மூலம் Gwyddion நீட்டித்துக்கொள்ளலாம்.
Gwyddion ஆனது GNOME, XFce அல்லது KDE போன்ற கட்டணமற்ற மேசைக்கணினி சூழல்களுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எ.கா. பட்டியல்கள், கோப்பு வகை ஒருங்கிணைப்புகளும் தானியங்கு SPM கோப்பு சிறுபடம்.,மேசைக்கணனி சூழல்களுடன் சில ஒருங்கிணைப்பு உள்ளது, இருப்பினும் அத்தகைய அளவில் இல்லை.
பல செயலிகள் OpenMP இணையாக்கத்தை ஆதரிக்கின்றன,பல்புரி செயலாக்கத்தைப் பயன்படுத்தலாம். இது நிரலில் இயல்புநிலையாகும், மேலும் Gwyddion நூலகங்களைப் பயன்படுத்தும் போது இயக்கலாம்.
Gwyddion சுமார் 140 நுண்ணோக்கி , பட வடிவங்களை, அதாவது படிப்பதற்காக ஆதரிக்கிறது. பல வடிவங்களையும் எழுதலாம். ஆதரிக்கப்படும் கோப்பு வடிவங்களின் சமீபத்திய முழுமையான பட்டியல் பயனர் வழிகாட்டியில் உள்ளது.
முடிந்தவரை பல AFM, STM, …, profilometer, பொது உயரம்-புலம் வடிவங்களை ஆதரிக்கின்றது. இது நம்முடைய சொந்த வடிவத்தை ஆதரிக்கப்பட வேண்டுமெனில், கோப்பு வடிவ சூழ்நிலை விளக்கத்தைப் படித்தறிந்து அதன்படி செயல்படுக.
தரவு செயலாக்க திறன்கள் ஏற்றப்பட்ட தொகுதிகள் திறன்களைப் பொறுத்தது. தொகுப்பில் ஏற்கனவே சில தொகுதிகள் உள்ளன. இருப்பினும், மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் புதிய தரவு செயலாக்க தொகுதிகளை நிறுவுகை செய்வதன் மூலம் Gwyddion நிறுவுகையில் கூடுதல் தரவு செயலாக்க திறன்களை சேர்க்க முடியும்.
இதேபோல், நம்முடைய சொந்த தொகுதிகளை எழுதலாம், அவற்றை நம்முடைய Gwyddion நிறுவுகையில் பரிசோதித்து பின்னர் மற்ற Gwyddion பயனர்களுக்கு அனுப்பலாம்.
Gwyddion ஐ எவ்வாறு மேம்படுத்துவது என்பதை வேறு வழியைக் குறிக்கின்ற செருகுநிரல்களுக்கும் இதே கூற்றுகள் செல்லுபடியாகும். செருகுநிரல்களை எழுதுவது சற்று எளிதாக இருக்கின்றது (எடுத்துக்காட்டாக, எந்த நிரலாக்க மொழியையும் பயன்படுத்தலாம்). இருப்பினும், செருகுநிரல்களை எழுதும் போது ஏற்கனவே உள்ள Gwyddion தரவு செயலாக்க செயலிகளையும் widgetsஉம் பயன்படுத்த முடியாது.
libgwymodule ஆவணத்தின் ஒரு பகுதியாக தொகுதி , செருகுநிரல் எழுதுதல் பற்றிய ஆவணங்கள் உள்ளன, C/C++, Perl, Python, Ruby, Pascal ஆகிய கணினிமொழிகளில் உள்ள மாதிரி செருகுநிரல்கள் Gwyddion மூலக் குறிமுறைவரிகளுடன் நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன, மேலும் ஒரு தனித்தனிமாதிரியாகவும் உள்ளது. தொகுதியாகவும் கிடைக்கிறது.
உலாவியின் தொகுதி இணைய பதிப்பு இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது: இயக்கநேரபதிப்பு, விளக்கத்துடன் கூடிய மேலமீட்புபட்டிகள் (நவீன WWW உலாவி தேவை) , ஒரு சாதாரண விரிவாக்கப்பட்ட அட்டவணை யாகவும் கிடைக்கின்றது
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக (GPLv2) எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://gwyddion.net/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

எளிய திரைகாட்சிபதிவாளர் (Simple Screen Recorder)

எளிய திரைக்காட்சிபதிவாளர்(SimpleScreenRecorder) என்பது X11 , OpenGL ஆகியவற்றினை ஆதரிக்கின்ற லினக்ஸின் திரைக்காட்சிபதிவாளர் ஆகும். இது பயன்படுத்த எளிதானது, பல்வேறுவசதிகள் நிறைந்தது மேலும் Qt அடிப்படையிலான வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இதன்மூலம் முழுத் திரையையும் அல்லது அதன் பகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது OpenGL பயன்பாடுகளை நேரடியாகப் பதிவு செய்யலாம். அவ்வாறான செயலின்போது எந்த நேரத்திலும் பதிவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கலாம். இது பல்வேறு கோப்பு வடிவங்கள், மறைகுறியாக்கங்கள்(codecs) ஆகியவற்றினை ஆதரிக்கின்றது, மேலும் பலவற்றை இதில் சேர்ப்பது எளிது.
தற்போது இதுhttps://github.com/MaartenBaert/ssr – எனும் இணைய தளமுகவரியில் இதனுடைய குறிமுறைவரிகள் பராமரிக்கப்பட்டு வருகி்ன்றது. ஆனால் மிகவும் பிரபலமான லினக்ஸ் வெளியீடுக்களுக்காகவும் முன்பே தொகுக்கப்பட்டுள்ளது.
முக்கியவதிவாய்ப்புகள்
• வரைகலை பயனர் இடைமுகவசதிகொண்டது (Qt அடிப்படையிலானது).
• VLC , ffmpeg/avconv ஆகியவற்றினை விட விரைவாக செயல்படக்கூடியது.
• இதுமுழுத் திரையையும் அல்லது அதன் பகுதியையும் பதிவுசெய்கிறது அல்லது OpenGL பயன்பாடுகளை நேரடியாகப் பதிவுசெய்கிறது (இது விண்டோவின் Fraps போன்றது).
• ஒலி ,கானொளி ஆகியவற்றினை சரியாக ஒத்திசைக்கிறது (VLC, ffmpeg/avconv ஆகியவற்றுடன் பொதுவான சிக்கல் எதுவுமில்லாமல்).
• கணினி மிகவும் மெதுவாக செயல்படுவதாக இருந்தால் கானொளி காட்சியின் திரைகாட்சியின் வீதத்தைக் குறைக்கிறது (VLC போன்ற தற்காலிக நினைவகத்தினைப் பயன்படுத்துவதை விட).
• முழுமையாக பல்புரியாக்கப்பட்டது:: எந்த ஒரு கூறுகளிலும் சிறிய தாமதங்களானவை மற்ற கூறுகளை ஒருபோதும் தடுக்காது, இதன் விளைவாக மென்மையான கானொளிகாட்சி, பல செயலிகள் கொண்ட கணினிகளில் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளது.
• எந்த நேரத்திலும் பதிவை இடைநிறுத்தி மீண்டும் துவங்கிடலாம் (பொத்தானை சொடுக்குவதன் மூலம் அல்லது தூண்டுவிசையைஅழுத்துவதன் மூலம்).
• பதிவு செய்யும் போது அதற்கான புள்ளிவிவரங்களைக் காட்டுகிறது (கோப்பின் அளவு, பிட் வீதம், மொத்த பதிவு நேரம், உண்மையான திரைகாட்சி வீதம், …).
• பதிவுசெய்திடும்போது ஒரு மாதிரிக்காட்சியைக் காம்பிக்க முடியும், என்பதால் சில அமைப்பு தவறாக இருப்பதைக் கண்டுபிடிக்க மட்டும் என எதையாவது பதிவு செய்வதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
• இது குறியாக்கத்திற்காக libav/ffmpeg நூலகங்களைப் பயன்படுத்துகிறது, எனவே இது பல்வேறு மறைகுறியாக்கங்கள்(codecs), கோப்பு வடிவங்களை ஆதரிக்கிறது (மேலும் சேர்ப்பது அற்பமானது).
• இதில்நேரலை வெள்ளோட்டத்தையும் செய்யலாம் (பரிசோதனையாக).
• விவேகமான இயல்புநிலை அமைப்புகளை கொண்டுள்ளதால் நாம் விரும்பவில்லை எனில் எதையும் மாற்ற வேண்டியதில்லை.
• ஏறக்குறைய அனைத்திற்கும் உதவிக்குறிப்புகள் உள்ளன: எந்தவொரு செயல்பாடும் என்ன செய்கிறது என்பதைக் கண்டறிய ஆவணங்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக GPL3 எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.maartenbaert.be/simplescreenrecorder/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

கடவுச்சொற்களின்பாதுகாப்பிற்குTofu என்பதை பயன்படுத்திகொள்க

  
Tofu என்பது ISC உரிமத்தின் கீழான கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும். GitHub இல் இதனை மதிப்பாய்வு செய்வதற்கும், நாம்விரும்பினால் மாற்றம் செய்வ தற்கும் இதனுடைய மூலக் குறிமுறைவரிகள் கிடைக்கின்றன. .நம்முடைய இணையதள கணக்குகளைப் பாதுகாக்க Tofu எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடானது ஒரு முறைமட்டுமான கடவுச்சொற்களை உருவாக்குகிறது. Google, Facebook, Dropbox, Amazon , GitHub போன்ற அனைத்து இணையதள சேவைகளில்  உள்நுழைவுசெய்திடும்போது இந்தக் கடவுச் சொற்கள் நம்முடைய இயல்பான கடவுச்சொல்லுடன் பயன்படுத்திகொள்ளலாம்.
HOTP , TOTP ஆகிய தருக்கப்படிமுறைகளைப் பயன்படுத்தி இரு காரணிகளின் அங்கீகாரத்தை வழங்குகின்ற அனைத்து சேவைகளிலும் Tofu செயல்படுகிறது. இதற்கு வலைபின்னல் அல்லது கைபேசி இணைப்பு தேவையில்லை  விமானப் பயன்முறையிலும் பயன்படுத்தலாம்.
முக்கியவசதிவாய்ப்புகள்
     • வருடுதல்:  நம்முடைய கணக்கைத் தானாகச் சேர்க்க, இதனை வழங்குபவர் வழங்குகின்ற QR குறியீட்டை வருடுதல் செய்திடுக.
     • தேடுதல்: இதன்மூலம் நாம் தேடிடும் கணக்கை விரைவாகக் கண்டறிய, நம்முடைய கணக்குகளை அதனுடைய பெயரால் தேடிடுக.
     • இணக்கத்தன்மை: SHA1, SHA256 , SHA512 ஆகிய தருக்கப்படிமுறைகளைப் பயன்படுத்தி 6 அல்லது 8 இலக்கங்களைக் கொண்ட கணக்கிடுதல் அடிப்படையி லானதும் , நேர அடிப்படையிலானதுமான ஒருமுறை கடவுச்சொற்களுக்கான ஆதரவு கொண்டது.
     • இணையஇணைப்புதேவையில்லாதது: வலைபின்னல் அல்லது கைபேசி இணைப்பு தேவையில்லை ,விமானப் பயன்முறையில் பயன்படுத்தலாம்.
     • பாதுகாப்பு:  கணக்கு விவரங்கள் அனைத்தும் iOS திறவுகோள் சங்கலியில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகி்ன்றது.
இதனை பயன்படுத்திகொள்ளும்போது அடிக்கடி எழும் சந்தேக கேள்வி களுக்கான பதில்கள்
எனது ஐபோனுக்கான அனுகலை நான் இழந்தால் எனது கணக்கினை எவ்வாறு அனுகுவது?
இரண்டு காரணிகளின் அங்கீகாரத்தை ஆதரிக்கின்ற இணைய சேவைகள் பொதுவாக அமைவு செயல்பாட்டின் போது பிறகாப்புப்பிரதி அல்லது மீட்பு குறியீடுகள் என அழைக்கப்படும்.  ஐபோனுக்கான அனுகலை இழந்தால், டோஃபு உருவாக்கிய ஒருமுறை கடவுச்சொற்களுக்குப் பதிலாக இந்தக் குறியீடுகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பாதுகாப்பாக எங்காவது சேமிக்க காகிதத்தில் அச்சிட்டு கொள்ளுமாறும் அல்லது Password போன்ற கடவுச்சொல் நிர்வாகியில் சேமித்துகொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகின்றது.
இரண்டாம் நிலை பாதுகாப்பாக, டோஃபுவில் உள்ள கணக்குகள் iOS காப்புப்பிரதிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனில் இவற்றை மீட்டெடுக்க, ஐடியூன்ஸ்  என்பதை பயன்படுத்தி பிறிகாப்புப்பிரதிகள் செய்யப்பட வேண்டும், மேலும் கடவுச்சொல் பாதுகாக்கப்பட வேண்டும். iCloud பிற்காப்புப்பிரதியிலிருந்து மீட்டமைக்கும்போது, டோஃபுவின் கணக்குகள் புதிய ஐபோனுக்கு மாறாது. இது iOS திறவுகோள்சங்கிலியில் கணக்குகளைச் சேமிக்கின்ற எல்லா பயன்பாடுகளுக்கும் பொருந்தும்.
எனது கணக்குகளை புதிய ஐபோனுக்கு எப்படி நகர்த்துவது?
 டோஃபு கணக்குகளை புதிய ஐபோனுக்கு நகர்த்துவதற்கான ஒரே தானியங்கி வழி, ஐடியூன்ஸ் செய்யப்பட்ட பழைய ஐபோனின் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட பிற்காப்புப்பிரதியை மீட்டெடுப்பதாகும். புதிய ஐபோனில் டோஃபுவைப் பயன்படுத்தி புதிய QR குறியீடுகளை வருடுதல் செய்து, நம்முடைய ஒவ்வொரு கணக்குக்கும் இரு-காரணிகளின் அங்கீகாரத்தை கைமுறையாக செயலிழக்கச் செய்து, மீண்டும் செயல்படுத்தவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்  https://tofuauth.com/  எனும் இணையதள முகவரிக்கு செல்க

Agena எனும் கட்டற்ற கணினிமொழி

Agena என்பது அறிவியல், உரைநிரல் போன்ற பல பயன்பாடுகளில் பயன்படுத்தி கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுலபமான கற்றல் செயல்முறைக்கான நிரலாக்க மொழியாகும். நம்முடைய கருத்துகளை விரைவாக செயல்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் இது Agena நமக்கு அதற்கான வசதி வாய்ப்புகளை வழங்குகிறது: விரைவான உண்மையான சிக்கலான எண்கணிதம், திறமையான உரை செயலாக்கம், வரைகலை, நெகிழ்வான தரவு கட்டமைப்புகள், அறிவார்ந்த நடைமுறைகள், எளிய தொகுப்பு மேலாண்மை போன்ற பல பயனர் சூழல்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. இதனை Windows, Mac OS X, Linux, OS/2, DOS, Solaris , Raspberry Pi ஆகியவற்றில் பயன்படுத்தி கொள்வதற்காகவென அவைகளுக்கான நிறுவிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்டோஸ் 7 இல் இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது இதனுடைய தொடரியல்ஆனது Maple, Lua SQL ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கூறுகளுடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட Algol 68 ஐ ஒத்திருக்கிறது. இதுAgenaEdit எனப்படும் எளிய பதிப்பாளருடன், தொடரியல்-மேம்படுத்தி காண்பிக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட சூழலைக் கொண்டுள்ளது. பிரேசிலின் PUC-Rio இல் உருவாக்கப்பட்ட பிரபலமான பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற திறமூல நிரலாக்க மொழியான Lua இன் ANSI C மூலக் குறிமுறைவரிகளின் அடிப்படையாகக் கொண்டது அஜெனா என்பது இரவில் வானத்தில் பத்தாவது பிரகாசமான நட்சத்திரம் என்பதே Agena. என்ற பெயரின் அர்த்தமாகும், மேலும் 1960 களில் நாசாவின் ஜெமினி பயணங்களின் போது பயன்படுத்தப்பட்ட ஆளில்லா இலக்கு வாகனத்தின் பெயரும் இதுதான். முக்கிய வசதிவாய்ப்புகள்: மொழிபெயர்ப்பாளர், செயல்முறை நிரலாக்கம், உண்மையான & சிக்கலான எண்கணிதம், எண்கள், புள்ளியியல், வகையீட்டுநுண்கணிதம், நேரியல் இயற்கணிதம், உரை செயலாக்கம், வரைகலை, எளிய தொகுப்பு மேலாண்மை, கட்டளை வரி ஆகிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் இது கொண்டுள்ளது இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லாமல் கட்டற்றதாக (GPLv2) எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://agena.sourceforge.net எனும் இணையதள முகவரிக்கு செல்க

பிற்காப்பு செய்திடுவதற்கான Resticஎனும் கட்டற்ற பயன்பாடு

Restic என்பது ஒரு பிற்காப்பு நிரலாகும்,.Restic என்பது கோப்புகளை காப்புப் பிரதி எடுக்கக்கூடிய நவீன பிற்காப்பு நிரலாகும் இது பயன்படுத்த எளிதானது, விரைவாக செயல்படக்கூடியது, பாதுகாப்பானது, திறமையானது. இது பிற்காப்புகள் செய்திடுகின்ற செயலை விரைவாகவும் உராய்வு இல்லாத வகையிலும் ஆக்குகிறது, எனவே நமக்குத் தேவைப்பட்டால் ஒவ்வொரு நாளும் நம்முடைய கோப்புகளை இதன்மூலம் பிற்காப்பு நகலை எடுக்கலாம். உள்ளூர் அடைவு, sftp சேவையகம் (SSH வழியாக), HTTP REST சேவையாளர் (நெறிமுறை ஓய்வு சேவையகம்), OpenStack Swift, போன்ற பலவற்றில் உள்ளடங்கலாகவும், பிற்காப்புப்பிரதிகளை சொந்தமாக சேமிப்பதற்கான பின்புலதளங்களையும் இது ஆதரிக்கிறது. இது தரவின் இரகசியத்தன்மை ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த மறைகுறியாக்க வியலையும் பயன்படுத்தி கொள்கிறது: இது Linux, BSD, Mac, Windows ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலுமிலிருந்தும் சுதந்திர -புரவலர், நேரடிய இணைய சேவைகள் உட்பட பல்வேறு சேமிப்பக வகைகளுக்கு எளிதாக, ஒரு சேவையாளர் அல்லது சிக்கலான அமைப்பு இல்லாமல் இயக்க முடியும் என்று ஒரு இயங்கக்கூடிய பிற்காப்புப் பயன்பாடாகும்.
இது திறம்பட, காப்புப் பிரதி எடுக்கும் கோப்புகளில் உண்மையில் மாற்றப்பட்ட பகுதிகளை மட்டுமே மாற்றுகின்றது
பாதுகாப்பாக, செயலியின் ஒவ்வொரு பகுதியிலும் மறைகுறி யாக்கவியலை கவனமாகப் பயன்படுத்துவதன் மூலம் சரிபார்க்க, தேவைப்படும் போது கோப்புகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்காக உதவுகிறது
இது restic பயன்படுத்த முற்றிலும் கட்டணமற்றது முற்றிலும் திறமூலமாகும்
இது விண்டோ, மேக், லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளையும், ஆதரிக்கிறது.
இணக்கத்தன்மை
பிற்காப்புகளுக்கான பின்னோக்கு இணக்கத்தன்மை முக்கியமானது, இதனால் இதில் பயனர்கள் சேமித்த தரவை எப்போதும்மீட்டெடுக்க முடியும். எனவே எந்த பதிப்புகள் இணக்கமாக உள்ளன என்பதை தெளிவாக வரையறுக்க இது சொற்பொருள் பதிப்பைப் பின்பற்றுகிறது. இதில் உள்ள களஞ்சியம், தரவு கட்டமைப்புகள் சொற்பொருள் பதிப்பு என்ற பொருளில் “பொது API” என்று கருதப்படுகிறது.
பதிப்பு 1.0.0 வெளியிடப்பட்டதும், ஒரு பெரிய பதிப்பில் உள்ள அனைத்து களஞ்சியங்களின் பின்னோக்கு இணக்கத்தன்மையை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது; முக்கிய பதிப்பை அதிகரிக்காத வரை, தரவைப் படித்து மீட்டெடுக்க முடியும். அனைத்து முந்தைய பதிப்புகளுக்கும் முற்றிலும் பின்னோக்க நிலையில் இருக்க முயற்சி செய்கின்றது.
ஆரம்ப மேம்பாட்டின் போது (1.0.0 க்கு முந்தைய பதிப்புகள்), பராமரிப்பாளர்கள் மேம்படுத்துநர்கள் பின்னோக்கிய இணக்கத்தன்மை, நிலைத்தன்மையை வைத்திருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்திட்டனர், இருப்பினும் பதிப்பை அதிகரிக்காமல் மாற்றங்கள் இருக்கலாம்.
முக்கிய வசதிவாய்ப்புகள்: விரைவான , எளிதான தரவு பிற்காப்பு , தரவு மறுசீரமைப்பு சரிபார்ப்பு , பின்னேக்கு இணக்கத்தன்மை , தரவைப் பாதுகாப்பதற்கான மறைகுறியாக்கம் , பிற்காப்புகளை சொந்தமாக சேமிப்பதற்கான பின்புலதள ஆதரவு ஆகிய வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது
இது BSD உரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப் பெற்றுள்ளது ,மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://restic.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Minsky எனும் கட்டற்ற பயன்பாடு

Minsky எனும் கட்டற்ற  பயன்பாடானது கணினி இயக்கவியலையும் பணவியல் மாதிரியையும் நமக்குகட்டுப் படியாகக்கூடிய வகையில் கொண்டு வருகின்றது. வரைதலிற்கான பணப்பையில் (Matlab's Simulink, Vensim, Stella,போன்றவை) பாய்வு விளக்கப்படங்களைப் பயன்படுத்தி மாதிரிகள் வரையறுக்கப்படுகின்றன. 
   இதனுடைய தனித்துவமான வசதி "Godley Table" ஆகும், இது இரட்டை பதிவியல்கணக்குப் பராமரிப்பைப் பயன்படுத்தி stock-flowஇன் நிலையான மாதிரியான நிதி ஓட்ட பட்டியலை எளிதாக உருவாக்குகிறது.
   இது கணினி இயக்கவியலில் "math-like" என்பது போன்ற இடைமுகத்துடன், கணிதத்தை நிரூபிப்பதிலும்  சிறந்து விளங்குகின்றது.
   இதனுடைய வளர்ச்சிக்கு பிரண்ட்ஸ் பிராவிடன்ட் அறக்கட்டளை நிதியளிக்கிறது. இந்த நிதியுதவி தொடரும் போது புதுப்பிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படும் (விவரங்களுக்கு https://www.patreon.com/posts/friends-provides-30880108 எனும் இணையதளமுகவரியில்  பார்வையிடுக). இதனுடைய https://www.patreon.com/hpcoder/ எனும் இணையதளமுகவரியில் உள்ள மின்ஸ்கியின் Patreon இன் பக்கத்திற்கு (ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் $1) பதிவு செய்திடுக
   . இது SourceForge வசதி செய்யாத பயனர் சமூகத்தை உருவாக்குகிறது.
   முழு மாற்றங்களும் https://minsky.sourceforge.io/changelog.htm எனும் இணையதள முகவரியில் காட்டப்பட்டுள்ளன: 
   இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்
         Vensim ,Simulink போன்ற வரைகலை மாதிரி சூழல் கொண்டுள்ளது
        நிதி ஓட்டபட்டியலின் மாதிரியாக செய்வதற்கான Godley எனும் அட்டவணையின் தனித்துவமான வசதிகொண்டது
        வரைபடஅட்டையில் பதிக்கப்பட்ட இயக்கநேர வரைபடங்கள்
        பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் விளைவுகளை ஆராய செயல்படும்போதே உருவகப்படுத்துதலையும் அளவுருக்களையும் மாற்றியமைத்திடுக.
        கணினி யில்ODE தீர்வினை வழங்குகின்றது
        XML, LaTeX, SVG என அமைப்பின் பதிவேற்ற வசதிகொண்டுள்ளத
        இது (GPLv3) எனும் அனுமதியின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறமூல  பயன்பாடாக கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.profstevekeen.com/minsky/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

தொலைதூர மேசைக்கணினியும் உதவி தீர்வுமான Dayon எனும் கட்டறபயன்பாடு

Dayon! என்பது ஒரு திறமூல தொலைதூர மேசைக்கணினியும் உதவி தீர்வும் ஆகும். இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக பதிவுஎதுவும் செய்யத் தேவையில்லை இது தனிப்பட்டபயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணமற்றது! இது தொலைதூர கணினியை பயன்படுத்தி கொள்ளவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற திறமூல குறுக்கு-தளம் (JAVA) தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கும் தொலைநிலை மேசைக்கணினி உதவியாளர் தீர்வுகளைப் போலவே உள்ளது. ஆனால் இது மதிப்புமிக்கதாக இருக்கின்ற கூடுதலான சில வசதிவாய்ப்புகளைக் கொண்டுள்ளது இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது – ஒன்று உதவியாளர் (assistant) மற்றொன்று உதவிசெய்தல்(assisted) . இரண்டும் ஒரே தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. விண்டோவிற்கான விரைவான வெளியீட்டு பதிப்புகளாக, அவை தனிப்பட்ட binaries கோப்புகளாகவும் பல்வேறு லினக்ஸ் விநியோகங்களுக்கான துனுக்காகவும் கிடைக்கின்றன.
எளிதான கட்டமைப்பு:இது(Dayon) கணினி உலகில் மிகவும் புதியவர் களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்வதற்காக வென தங்களுடைய கணினியில் வலைபின்னல் எதனைையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை (அதாவது, ஃபயர்வால் அமைப்பு இல்லை, திசைவி உள்ளமைவு இல்லை, NAT அமைப்பு இல்லை). இதில் கண்காணிப்பு கணினியுடன் இணைக்கும் வாடிக்கையாளராக அங்கு செயல்படுகிறது.
குறைந்த வலைபின்னல் அலைவரிசை : இது(Dayon) இணையத்தில் நிகழ்நேர அனுபவத்தை வழங்கும் வலைபின்னல் பயன்பாட்டைக் குறைக்க சுருக்கப்பட்ட தற்காலிகமாகச் சேமிக்கப்பட்ட சாம்பல் (256 நிலைகள் வரை) படங்களை அனுப்புகிறது. வெவ்வேறு பட்டிகள், உருவப்பொத்தான்கள் , கணினி அமைப்பைக் கண்டறிதல் போன்றவற்றைக் கண்காணிக்கவும் விளக்கவும் அந்தப் படங்கள் போதுமானவை…
முக்கியவசதிவாய்ப்புகள் : எளிதான அமைப்பு (உதவி பக்கத்தில் திசைவி அல்லது பிணைய கட்டமைப்பு தேவையில்லை) உள்ளுணர்வு, பன்மொழி பயனர் இடைமுகம் (de, en, es, fr, it, ru, tr, zh) ஒரு தொகுப்பில் உதவி , உதவி செயல்பாடு பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட தொடர்பு (TLS) மிக குறைந்த அலைவரிசைகளையுடைய குறுக்குதள கட்டணமற்ற திறமூல பயன்பாடாகும்
விரைவான தொடக்கம்: https://retgal.github.io/Dayon/quickstart.html எனும் இணையமுகவரியில் விரைவான துவக்கத்தினை பற்றி அறிந்து கொள்ளலாம் பொதுவாக, உதவியாளர் ஸ்கைப், கைபேசி, பிடித்த IM அல்லது விரும்பும் கருவியைப் பயன்படுத்தி உதவியாளர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். பின்னர் இது தன்னுடைய செயலை தொடங்குகிறது! கணினித் திரையில் நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது. இந்த ஆவணத்தில், திரைகாட்சி பயன்பாட்டின் ஆங்கில உள்ளூர்மயமாக்கலைக் காட்டுகிறது. பயன்பாடு முற்றிலும் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் , ரஷ்ய ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட பயனர் மொழி மேலே கூறியவை எதுவுமில்லை என்றால், அது மீண்டும் ஆங்கிலத்திற்கு வந்துசேர்ந்துவிடும்.
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPLv3)எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்பெற்றுள்ளது.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://retgal.github.io/Dayon/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Lite XLஎனும் இலகுரக உரை பதிப்பாளர்

Lite XL என்பது பெரும்பாலும் லுவா எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட இலகுரக உரை பதிப்பாளராகும் – இது நடைமுறையில், அழகான, சிறிய விரைவான செயல்பாடு ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, முடிந்தவரை எளிமையாக செயல்படுத்தப்படுகிறது; இதனை மாற்றுவதற்கும் நீட்டிப்பதற்கும் எளிதானது அல்லது எதையும் செய்யாமல் பயன்படுத்தவும் முடியும். இது விண்டோ, லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமையில் செயல் படுகின்ற கணினியில் உயர்தர டிபிஐ காட்சிகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது மேலும் இது மேக் இயக்கமுறைமையில் ரெட்டினா காட்சிகளை ஆதரிக்கிறது. இதில் நமக்குத்தேவையான கூடுதல் செயல்பாடுகளை செருகுநிரல்கள் மூலம் சேர்க்கலாம்.
இது ஒரு உரை திருத்தியாகவும் ,குறிமுறைவரிகளின் திருத்தியாகவும் ,IDE ஆகவும் செயல்படுகின்ற திறன்மிக்கது இது Mac ,Windows ,Linuxஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்க குறுக்குகதள பயன்பாடாக திகழ்கின்றது
இது தற்போது 3MB அளவில் இருக்கின்றது 10MB ரேம் (குறைவாக இருக்கலாம்). மின்னனு/ இணையகாட்சி சம்பந்தப்படவில்லை. இதனுடைய முழு செயலும் லுவா எனும் முப்பரிமான வரைதல் பொறியில் இயங்குகிறது.
இது நீட்டிக்கக்கூடியது
இந்த திருத்தியானது இயல்பாகவே குறைந்த அளவாக இருந்தாலும், நமக்கு கூடுதல் வசதி தேவையெனில் லுவா எனும் கணினிமொழியைப் பயன்படுத்தி நீட்டித்துகொள்ளக்கூடியது. உண்மையில்,இதில் கூடுதலான பல்வேறு வசதிவாய்ப்புகள் செருகுநிரல்களால் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, VSC போன்ற நுண்ணறிவு வாய்ப்பினைகூட கொண்டுள்ளது
இது சிறந்த எழுத்துரு முப்பரிமானகாட்சி வரைதல் வசதி கொண்டது
இது எந்த அளவிலான திரையிலும் நன்றாக திரைகாட்சி அமைந்திடுமாறான திறன்மிக்கது. மேலும் இதில் hinting and antialiasing.,Multi-cursor editing என்பன போன்ற வேறு சில கூடுதல் வாய்ப்புகளும் உள்ளமைக்கக்கூடியவைகளாக உள்ளன
இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://lite-xl.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

scrcpy எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

நாம் வேறொரு மொழியை படித்திடவிரும்புகின்றோம் எனில் அதற்காக: scrcpy எனும் இந்த கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடானது USB அல்லது TCP/IP வழியாக இணைக்கப்பட்ட Android சாதனங்களின் காட்சி கட்டுப்பாட்டை வழங்குகிறது. இதற்கு எந்த வழிசெலுத்தி அணுகலும் தேவையில்லை. இது GNU/Linux, Windows , macOSஆகிய இயக்க முறைமைகளில் நன்றாக செயல் படுகிறது. இது பின்வருவனவற்றில் அதிககவனம் செலுத்துகிறது: சொந்தமான, சாதனத் திரையை மட்டும் காட்டுகிறது, 30~120fps, சாதனத்தைப் பொறுத்து செயல்திறன்அமைகின்றது 1920×1080 அல்லது அதற்கு மேல்இது உள்ளது
குறைந்த தாமதம்: 35~70ms ஆகும்
குறைந்த தொடக்க நேரம்: முதல் படத்தைக் காட்ட ~1 வினாடிமட்டுமே
ஊடுருவாத தன்மை: சாதனத்தில் எதுவும் நிறுவுகைசெய்திட தேவையில்லை
இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக நமக்கான கணக்கு எதுவும் துவங்கத் தேவையில்லை, விளம்பரங்கள் எதுவும்இல்லை, இணைய இணைப்பு தேவையில்லை. இதுஒரு கட்டணமற்ற கட்டற்ற மென்பொருளாகும். சாதனத்தின் திரை அணைக்கப்பட்ட நிலையில்பிரதிபலித்தல் .இருதிசைகளிலும் நகலெடுத்து ஒட்டிடுதல். சாதனத் திரை இணையவிளையாட்டாக (V4L2) (லினக்ஸில்). விசைப்பலகை உருவகப்படுத்துதல் (HID) (லினக்ஸில்) ஆகிய வசதிகளை கொண்டது.இது எவ்வாறு செயல்படுகிறது?
பயன்பாடுஆனது சாதனத்தில் ஒரு சேவையகத்தை இயக்குகிறது. வாடிக்கையாளர் சேவையாளர் ஒரு adb சுரங்கப்பாதை வழியாக ஒரு மேலுறை வழியாக தொடர்பு கொள்கின்றன. சேவையகம் சாதனத் திரையின் H.264 கானொளிகாட்சியை தொடரோட்டம் செய்கிறது. வாடிக்கையாளரின் கானொளிகாட்சியின் திரைகாட்சிகளை (frames) மறையாக்கம் செய்து அவற்றைக் காண்பிக்கின்றது. வாடிக்கையாளரின் உள்ளீடு (விசைப்பலகை.சுட்டி) நிகழ்வுகளைப் படம்பிடித்து, அவற்றை சேவையகத்திற்கு அனுப்புகிறது, அது அவற்றை சாதனத்தில் செலுத்துகிறது.இது செயல்படுவதற்கு Android சாதனத்திற்கு குறைந்தபட்சம் API 21 (Android 5.0) தேவை யாகும். சாதனத்தில் (களில்) adb பிழைத்திருத்தத்தை இயக்குவதை உறுதிசெய்திடுக.சில சாதனங்களில், விசைப்பலகை சுட்டியைப் பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்த கூடுதல் வாய்ப்பினையும் இயக்கிடுக. மேலும் விவரங்களுக்கு
https://github.com/Genymobile/scrcpy எனும் இணையதள முகவரிக்கு செல்க

Previous Older Entries