கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ,ஐபோன் பயனாளர்களுக்கான விரைவு அலுவலக பயன்பாடு

கூகுள் நிறுவனமானது ஆஃபிஸ் பயன்பாடுகளையும் விரைவு அலுவலக பயன்பாட்டினையும்  ஐபேடுபயனாளர்களுக்காக வெளியிட்டபின்னர் தற்போது  ஆண்ட்ராய்டு ,ஐபோன் போன்ற பயனாளர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை வெளியிட்டுள்ளது.இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை முன்பு வேறுநிறுவன வெளியீட்டை வாங்கி தம்முடைய பயனாளர்கள் பயன்படுத்திகொள்ளுமாறு அனுமதித்திருந்தது.

இந்தவிரைவு அலுவலக பயன்பாட்டினை முதலில் வியாபார பயன்பாட்டிற்காகவே அனுமதிக்கபட்டது ஆனால் இந்த வியாபார பயன்பாட்டாளர்கள் தம்முடைய தனியாள் கணினியில் அதிக வசதிகள் நிறைந்த கூகுள் டாக் என்ற பயன்பாட்டிற்கு பதிலாக வழக்கமான அலுவலக பயன்பாட்டினையே விரும்பினார்கள்.அதனால் அவர்களையும் தம்முடைய நிறுவனபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஒரு பயனாளர் இந்த விரைவு அலுவலக பயன்பாட்டினை கொண்டு புதிய வேர்டு கோப்பு ஒன்றினை உருவாக்கவும் ஏற்கனவேஇருக்கும் வேர்டு கோப்புகளை  மாறுதல் செய்துகொள்ளவும அவ்வாறே எக்செல் கோப்பினை உருவாக்கவும் மாறுதல் செய்துகொள்ளவும் ,பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் கோப்பினை உருவாக்கிடவும் மாறுதல் செய்துகொள்ளவும் இறுதியாக கூகுள் கோப்பகத்தில் சேமித்து கொள்ளவும் முடியும்.

 இது இவ்வாறான வழக்கமான அலுவலக பயன்பாட்டின் பணிகளுடன் கோப்புகளை எங்கிருந்தும் தேடிபிடித்திடவும் செய்கின்றது. மேலும் இது Shared with me,starred, Recent ஆகிய  துனைகோப்பகத்தில் இந்த கோப்புகளை பகிர்ந்துகொள்ளவும் காணவும்  அனுமதிக்கின்றது

92.2.1

92.2.1

கியூஃபார்ம் எனும் திறமூல பயன்பாடு

தரவுதளங்களில் உள்ளீடு செய்திடும் தரவுகள் சரியாக அமைந்துள்ளனவா என்று எவ்வாறு நாம்  சரிபார்ப்பது என நாம் திகைத்து நிற்கும்போது QForms என்பது நமக்கு கைகொடுக்கின்றது. அதாவதுvikupficwa@yahoo.co.in என்பது மிகச்சரியான மின்னஞ்சல் முகவரிதானா? என்பதை சரிபார்த்திட இதிலுள்ள Form_Validateஎன்ற செயலி பயன்படுகின்றதுஇதற்காக இதிலுள்ள QserverAction,QAjaxAction ஆகியசெயல்களை ஒவ்வொருமுறையும் இந்த செயலியானது இதற்காக செயல்படுத்திகொள்கின்றது.  இந்த Form_Validateஎன்ற செயலிக்காக அனைத்து  சரிபார்ப்பு குறியீடுகள் அனைத்தையும் நாம் எழுதவேண்டிய அவசியமில்லை இதற்காக QTexBox, என்ற பகுதியில் நேரடியாக  MaxLEngth,MinLength,Rquired ஆகிய பண்பியல்புகளை மட்டும் அமைத்துவிட்டால் போதுமானதாகும்.

92.3.1

92.3.1

அதற்கடுத்ததாக இணையபயன்பாட்டின்Customer Relationship Management(CRM) என்ற பயன்பாட்டில் குழுவான கட்டுபாடுகளைQControl என்றவசதிமூலம்  நிருவகிப்பதில் இந்தQForms என்பது பயன்படுகின்றது இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள http://goo.gl/gFxGp/ என்ற இணையமுகவரிக்கு செல்க

தரவுதளத்தின் நிகழ்வுநேர அடிபபடையான PHPநிகழ்வுநேர கட்டுபாட்டினை QCubed பார்த்துகொள்கின்றது. இந்தQCubed ஆனது Forms state என்பதை சேவையாளரின் தரப்பில் கையாளுவதற்கு எளிதாக இருப்பதற்காக இதனை முதலில் சேமித்து கொள்கின்றது பின்வரும் மிகமுக்கியமான வாய்ப்புகளை இதற்காக Qcubed ஆனது பயன்படுத்தி கொள்கின்றது

92.3.2

92.3.2.

1 QformstateHandlerஇந்த வசதிமூலம் சேவையாளரின் தரபபில் அதிக நினைவகத்தை எடுத்துகொள்ளாமல் .

2 Forms state என்பதை தற்காலிகமாக சேமித்துகொள்கின்றது.

3 QsessionFormStateHandlerஇதன்மூலம் பயனாளரின் நிகழ்வுநேரநிலையில் சேமித்து கொள்வதால் உடனடியாக பயனாளர் திறந்து பயன்படுத்திடமுடியும்,

4 QfileformstateHandler இதன்மூலம் தனித்தனி கோப்பாக சேவையாளரின் நினைவக்ததில் சேமித்துகொள்கின்றது ,

5 QdbBackedformstateHandler இதன்மூலம் நிகழ்வுகளை அட்டவணையாக பின்காப்பு செய்துகொள்கின்றது அதனால் மிகவிரைவாக செயல்படுத்திட செய்கின்றது

தரவுகளை Cross Site Scripting(XSS) என்ற வசதிமூலம் அபகரிப்பாளர்கள் அபகரித்திட அல்லது திருடிகொள்ளமுடியும் இதனை தவிர்த்திட  இந்த Qcubed ஆனது crossScriptiongஇனுடைய அதனதன் பண்பியல்புகளை QcrossScripting::Deny,  QcrossScriptiong::HTMLPurifier என்றவாறு அமைத்து விட்டால் போதும்  தரவுகள் பாதுகாப்பாக   பராமரித்திடுகின்றது.
92.3.3

92.3.3

மின்இணைப்பு ஆலோசனைகள்

 தற்போது சந்தையில் கிடைத்திடும் பெரும்பாலான கணினிகள் 24பின்களின் மின்இணைப்பு மதர்போர்டாகவே உள்ளன ஆயினும் சிலநேரங்களில் 20 பின்களின் மின்இணைப்பாக இருந்தால் என்ன செய்வதுஎன தடுமாறவேண்டாம் அவ்வாறு 20 பின்களின் மின்இணைப்பாக இருக்கும்போது மதர்போர்டின் 24பின்களின் மின்இணைப்பில் நான்கினை (இந்த நான்கையும் பிரித்துவிடுமாறே அமைத்து வெளியிடபட்டுவருகின்றது) பிரித்துவிட்டு மிகுதி 20 பின்களுடன் மின்இணைப்பு கொடுத்தால் போதுமானது உடன் இந்த மின்இணைப்பானது வழக்கமாக செயல்படும்.

92.4.1

92.4.1

சிலநேரங்களில் மின்விநியோக அமைப்பு இவ்வாறு இந்த கூடுதலான நான்கினையும் பிரித்திட அனுமதிக்காத சூழ்நிலையில்

முதல்வழிமுறையாக  24 பின்களுக்கும் 20 பின்களுக்கும் ஆன இணைப்பினை வழங்கிடும் அடாப்டரை வாங்கி பயன்படுத்தி கொள்க

இரண்டாவது வழிமுறையாக24 பின்மின்இணைப்பிணை 20 பின்களின் இணைப்பானுடனுடன் நேரடியாக இணைத்திடுக இந்த இரண்டாவது வழிமுறை தவிர்க்க படுடவேண்டும் இது நம்முடைய கணினியினுடைய மதர்போர்டை வீணாக்கிவிடும்

மூன்றாவது வழிமுறையாக இந்த கட்டுரையில் முதலில் சொன்னவாறு கூடுதலாக உள்ள நான்கு பின்களை பிரித்துவிட்டு 20 பின்களை மட்டும் இணைப்பு ஏற்படுத்தி கொள்க.

புதியவர்களுக்கு- கணினியானது செயல்படாமல் நின்றுவிடுவது ஏன்?

1கணினியின் எந்தவொரு தரவுகளும் கோப்பாக உருவாக்கி சேமித்து வைக்கபடும். அவ்வாறான அந்த கோப்பு இருக்குமிடத்தின் அனைத்து தகவல்களும் System Registry என்ற பகுதியில் சேமித்துவைக்கபடுகின்றது இந்த பதிவுபகுதி(System Registry ) அழிந்துவிட்டாலும்

2 நம்மால் உருவாக்கபடும் கோப்புகள் காலி நினைவகம் இருக்கும் இடமெல்லாம்  ஆங்காங்கே  பரவலாக சேமித்து வைத்துவிடும் அதனால் பிறகு அந்தவிவரங்களை தேடி சேகரித்திடும்போது வெவ்வேறு இடங்களில் தேடும்போது சிலவிரங்கள் கிடைக்காதபோதும்

3  நச்சுநிரல்களால் நம்முடைய கணினி பாதிப்படையும்போதும்

4 நாம் உருவாக்கும்கோப்பு அல்லது செயல்படுத்தும் பயன்பாட்டிற்கு போதுமான காலிநினைவகம் இல்லாதபோதும்

5 கணினி செயல்படும் போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்கான அமைவு செயல்படாதபோதும்

நம்முடைய கணினியானது செயல்படாமல் நின்றுவிடுகின்றது  இவ்வாறான ப

பாதிப்பில்லாமல் இருப்பதற்காக

முதல் வகை பாதிப்பை  பதிவுபகுதியை(System Registry) மீட்டெடுப்பதற்கான தனி அல்லது சிறப்புவகை பயன்பாடுகளை பயன்படுத்தி சரிசெய்து கொள்க

இரண்டாவது வகையான பாதிப்புஏற்படாமல் இருப்பதற்கு நம்முடைய இயக்கமுறைமையில் இதற்கென சிறப்புவகை பயன்பாடான disk defragmentation என்பதை பயன்படுத்தி அவ்வப்போது வன்தட்டில் பரவிகிடக்கும் தரவுகளை கூட்டி சேகரித்து  கொள்க

மூன்றாவது வகை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சிறந்த நச்சுநிரல் எதிர்ப்பு பயன்பாட்டினை வாங்கி பயன்படுத்தி கொள்க

நான்காவது பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கூடுதலான வெளியிலிருந்து பயன்படுத்தி கொள்ளும் வன்தட்டினை பயன்படுத்திகொள்க

ஐந்தாவாது பதிப்பு நம்முடைய கணினியில் ஏற்படாமல் தவிர்க்க நாம் கணினியை பயன்படுத்திடும்   அறையில் நல்ல குளிர்விப்பானை அமைத்துகொள்க

ட்விட்டரின்மூலம் நம்முடைய வியாபாரத்தை வளர்ச்சி பெறச்செய்வது எவ்வாறு?

92.6.1

92.6.1

1நம்முடைய வியாபார இணைய முகவரியானது அனைவராலும் மிகளிதாக நினைவு கூரத்தக்க வகையில் அமைத்திடுக

2  நம்முடைய முகப்பு பக்கத்தினை பயன்படுத்தி நம்முடைய வியாபார வளர்ச்சியை உறுதிபடுத்தி கொள்வதற்கான வசதியை இந்த ட்விட்டர் எனும் சமூகவலைதளம் அனுமதிக்கின்றது இந்த வசதியை முழுமையாக பயன்படுத்தி மிகச்சரியான முக்கியமான திறவுசொற்கள் நம்முடைய முகப்பு பக்கத்தினை அனைவரும் வந்து சேருவதற்கு ஏற்றவாறு  பார்த்து கொள்க

3  நம்முடைய இணைய பக்கம்,வலைபூ,மின்னஞ்சல்முகவரி  ஆகியவற்றின் இணைப்புகள் மிகச்சரியாக இருக்குமாறு நம்முடைய ட்விட்டர் எனும் சமூகவலைதள கணக்கு அமையுமாறு செய்துகொள்க

4 அனைவரும் காலஅளவுஇன்றி ட்விட்டர்எனும் சமூக வலைதளத்தில் மூழ்கி விடுவதுதான் இந்த ட்விட்டர் தளத்தின்  மிகமுக்கிய குறைபாடாகும்  அவ்வாறில்லாமல் நம்முடைய ட்விட்டர் கணக்கினை பின்தொடர்பவர்களை மட்டும் வேறுஎங்கும் சென்றுவிடாமல் நம்முடைய வியாபார தளத்திற்கு கொண்டுவந்து சேருமாறு நம்முடைய ட்விட்டர் வலைதள பயன்பாட்டின் காலஅளவை கட்டுபடுத்திகொள்க

5 இந்த ட்விட்டர் சமூகவலைதளத்தில் ஏராளமான கருவிகள் நம்முடைய கணக்கின் அனைத்து செயல்களையும் தானியங்கியாக  நடைபெற உதவினாலும் அவையனைத்தும் ஆரம்பத்தில் மிகச்சரியாக செயல்படும் பின்னர் போகப்போக தானியங்கியான செயல் படிப்படியாக நடைபெறாது நின்றுவிடும்  அதனால் அவ்வப்போது சரியாக செயல்படுகின்றதாவென அவைகளை செயற்படுத்தி பார்த்து கொள்க அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து இவ்வாறான கருவிகளை அவ்வப்போது சரியாக செயல்படுமாறு சரிபார்த்து கொள்க

கணி்னியினுடைய ரேம் வேகத்தை உயர்த்திட(அதிகரித்திட)

எம் எஸ் வேர்டு  பயன்பாட்டினை செயல்படுத்தி் அதில் மிகப்பெரிய கோப்பினை திறந்து கொள்க.

பிறகு CTRL+SHIFT+ESC என்றவாறு விசைப்பலகையிலுள்ள மூன்று விசைகளையும் சேர்த்து  அழுத்துக உடன் தோன்றிடும் Windows Task Manager என்ற உரையாடல் பெட்டியில் Processes என்ற தாவியின் திரையை தோன்றசெய்க. அதில் Mem Usage என்ற பகுதியில் நினைவகத்தில் தற்போது செயலில் உள்ள பயன்பாடுகளின்  பட்டியலை ஏறுவரிசையில் அடுக்கிடுக.அவ்வரிசையில் WINWORD.EXE என்ற  செயலக கோப்பு   தலைப்பில் இருப்பதை காணலாம்

இதன்பிறகு எம் எஸ் வேர்டு  பயன்பாட்டின் திரைக்கு வந்து இந்த பயன்பாட்டின் சாளரத்தை மட்டும் திரையின் மேலே வலதுபுறமாக உள்ள minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize)

பிறகு Windows Task Manager என்ற உரையாடல் பெட்டியில் Processes என்ற தாவியின் திரையில் உள்ளMem Usage என்ற பகுதியில் நினைவகத்தில் தற்போது செயலில் உள்ள பயன்பாடுகளின்  பட்டியலை  பார்வையிடுக தற்போது WINWORD.EXE என்ற  செயலக கோப்பு   தலைப்பில் இருக்காது அப்படியே அதனுடைய கீழ்பகுதிக்கு வந்தால் அங்கு பட்டியலின் கடைசியாக இருப்பதை  காணலாம் அதன் ரேம் பயன்பாட்டுஅளவு 0 ஆக இருப்பதை காணலாம்

இவ்வாறு திரையில் திறந்து வைத்து நாம் பயன்படுத்தாத பயன்பாடுகளின் சாளரங்களையும் அந்தந்த பயன்பாடுகளின் சாளரத்தில் திரையின் மேலே வலதுபுறமாக உள்ள minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize) சிறியதாக குறைத்துகொள்க  இவ்வாறு செய்வதால் நம்முடைய  கணினியினுடைய ரேமின் செயல்வேகம் அதிகரிக்கும் பல்வேறு செயல்களை ஒரேசமயத்தில் செயல்படுத்திடும் தற்போதைய இயக்கமுறைமைகளில் செயல்படாத பயன்பாடுகளை இவ்வாறு minimize என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சிறியதாக்குக(minimize) சிறியதாக்கிடும்போது அந்த பயன்பாட்டிற்கு தேவையான ரேமை 0 நிலையில் வைத்துகொண்டு மெய்நிகர் நினைவகம் போன்ற பகுதியில் அதனை எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்த தக்க வகையில் வைத்திருக்கின்றது  அதனால்   ரேமின் காலிநினைவகம் அதிகமாகி அதன் செயல் வேகம் அதிகரிக்கின்றது

ஜீமெயிலில் நம்முடைய உருவபடத்தை பின்புலமாக அமைக்கமுடியும்

இதற்காக ஜிமெயிலை திறந்து கொண்டு மேலே இடதுபுறமூலையிலிருக்கும்  முதலில் settings=> என்ற கருவியையும் பின்னர் விரியும் சிறுபட்டியில் themes=> என்றவாறு கட்டளையையும்  தெரிவுசெய்து சொடுக்குக

92.8.1

92.8.1

உடன் விரியும்  திரையில் நகரும் பெட்டியை நகர்த்தி சென்று Custom Themes என்பதன்கீழ் உள்ள light அல்லது dark ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க உடன் ஏதேனுமொரு நம்முடைய படத்தை தெரிவுசெய்யும்படி  select your background image  என்றவாறு கோரும் திரையில் நம்முடைய உருவபடம் மின்னஞ்சலில் தயாராக இருந்தால்my photos என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நம்முடைய உருவபடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு select என்ற கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் நம்முடைய உருவபடம் ஜிமெயிலின் பின்புலமாக   இருப்பதை காணலாம்

 

Previous Older Entries