எப்போதும் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை கணினியில் பயன்படுத்திடுக

1 அவாஸ் ஆண்ட்டிரவரைஸ் போன்ற செந்தரமான ஆண்ட்டிவைரஸை கணினியில் எப்போதும் செயல்படுமாறு வைத்திடுக

2 User Account Control என்பதன் வாயிலாக மட்டுமே கணினிக்குள் உள்நுழைவு செய்திடுக

3 விண்டோவில் ஏற்கனவே கட்டமைக்கபட்டு கிடைத்திடும்  Firewallஐ இயலுமைசெய்து செயலில் இருக்கமாறு சரிபார்த்திடுக

4 நம்முடைய கணினியில் ஜாவா நிறுவுபட்டிருந்தால் அதனை நீக்கிவிடுக ஏனெனில் ஜாவாவில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன

5 நாம் பயன்படுத்திடும் பயன்பாடுகளை அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்க

6 பதிவிறக்கம் செய்திடும் பயன்பாடுகளை நம்பகமான இணைய தளங்களிலிருந்து மட்டும் பதிவிறக்கம் செய்திடுக

7 Pirated and Cracked மென்பொருட்களை பயன்படுத்திடவேண்டாம்

8இணைய உலாவலின்போது Phishing and Social Engineeringஆகியவற்றிலிருந்த எச்சரிக்கையாக இருக்கவும்

9 பயன்படுத்திய பயனாளரின் பெயரையும் கடவுச்சொற்களையும்மற்ற இணைய பக்கங்களில்  பயன்படுத்திடவேண்டாம்

10  எண்கள்,எழுத்துகள் சிறப்பு குறியீடுகள் ஆகியவை சேர்ந்த  பாதுகாபபான வலுவான கடவுச்சொற்களை மட்டும் பயன்படுத்திடுக

பாதுகாப்பு அரண்களின் வாயிலாக தணிக்கை செய்யபட்டகோப்புகளை கூடபார்வையிட உதவிடும் திறமூல பயன்பாட்டு மென்பொருட்கள்

நாளுக்குநாள் அதிகரிக்கும் நம்மால் பயன்படுத்தபடும் இணையஇணைப்புகளினால் பொதுமக்களின் வொய் ஃபி பணியிடஇணைப்பு ஆகியவற்றிலிருந்து தணிக்கை செய்யப்படுதல் வடிகட்டப்படுதல் நாடுகளின்அளவில் வடிகட்டபடுதல் என்றவாறு பல்வேறு வகையிலும் தடைசெய்யபடுகின்றது  இருந்தாலும் இவ்வாறு தடைசெய்யபட்ட இணைய பக்கங்கள் இணையதேடலின்போது நமக்கு கிடைக்காமல் நம்மை அலைகழிக்க செய்கின்றன அதுமட்டுமல்லாது ஒருசில இணைய பக்கங்கள் நாம் உலாவரும்போது  இடையிடையே குறுக்கிட்டு நமக்கு தொந்திரவு வழங்கி கொண்டு இருக்கின்றன. ஆயினும் சீனநாட்டில் மிகபெரிய நெருப்பு சுவர் பாதுகாப்பு கவசத்தின் வாயிலாக  VPN  எனும் வெளிச்செல்லும் இணைப்பைகூட இடைமுகம் செய்து தணிக்கை செய்யபடுகின்றது இந்நிலையில் இவ்வாறான பாதுகாப்பு அரண்களுக்கிடையிலும் நாம் விரும்பும் இணைய பக்கத்தை பின்வரும் பயன்பாடுகளின் வாயிலாக திரையில் தோன்றசெய்து உள்நுழைவு செய்துகாணலாம்

Tor என்பது  தணிக்கை செய்யபடுதல் வடிகட்டபடுதல் நாடுகளின் அளவில் வடிகட்ட படுதலை தவிர்த்திடுகின்றது  அதனால் மிகமுக்கிய தரவுகளையும் மறையாக்கம் செய்யபடாத தரவுகளையும் இந்த முறையில்  கையாளவேண்டாம் என பரிந்துரைக்கபடுகின்றது

8.1

8.1

VPN  என்பது வெகுதூர இடங்களில் உள்ள கோப்புகளை கையாள பயன்படுகின்றது சீனா தற்போது இந்த VPN  எனும் அனைத்து வெளிச்செல்லும் இணைப்புகளைகூட இடைமுகம் செய்து தணிக்கை செய்கின்றது

 proxy ஐ கொண்டுதடைசெய்யபட்ட இணையபக்கங்களை காணலாம் மேலும் இணைய அடிப்படையிலானproxyஐ கொண்டு செயல்படுத்திடமுயற்சிசெய்திடுக.

SSHTunnelஇதுபொதுமக்களின் வொய் ஃபி பணியிடஇணைப்பு ஆகியவற்றிலிருந்து தணிக்கை செய்யபடுதல் தவிர்க்கின்றது இது விண்டோவில் PuTTY என்றவாறும்  மற்ற இயக்கமுறைமைகளில்  SSH கட்டளைகளையும்  செயல்படசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்

8.2

8.2

 மறையாக்கம் செய்யபட்ட சுருக்கி கட்டபட்டகோப்பாக எவ்வாறு உருவாக்குவது

  பொதுவாக சுருக்கபட்ட கோப்புகள் கடவுச்சொற்களுடன் உள்நுழைவு செய்திடுமாறு அமைத்திருப்பார்கள்  ஆயினும் இவை அவ்வளவு வலுவானது அன்று அதனால் AES-256 encryption என்பதன் துனையுடன்  மறையாக்கம் செய்து பயன்படுத்திடலாம்  Zip 2.0  எனும் பழைய மறையாக்கம் பாதுகாப்பானது அன்று AES encryption என்பது பாதுகாப்பானது பொதுவாக நாம் பயன்படுத்திடும் இயக்கமுறைமைகள்   Zip கோப்புகளை ஆதரிக்கின்றது ஆனால் இந்த   AES encryption எனும் செந்தரத்தை ஆதரிப்பதில்லை  Zip கோப்புகளுக்கு பதிலாக  7zஎன்பதை பயன்படுத்தினால் AES encryption செந்தரத்தை ஆதரிக்கின்றது ஆனாலும் இதுவும்  AES encryption செந்தரத்தை ஆதரிப்பதில்லை அதனால் வேறு எந்த பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும்என தேடிடும்போது  7-Zip எனும்திறமூல கட்டணமற்ற பயன்பாடு  AES encryption செந்தரத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாது மற்றவகையிலும் மிகபயனுள்ளதாக இருக்கின்றது விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில் 7-Zip => Add to archive => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து சுருக்கபட்ட கோப்பினை  பாதுகாப்பானதாக மாற்றியமைத்திடலாம் அல்லது 7-Zip பயன்பாட்டினை நேரடியாக செயல்படுத்தியும் விரும்பிடும் கோப்பினை மறையாக்கம் செய்திடமுடியும்

7

நம்பிக்கையற்ற போலியான செயலி கோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்திட

ஒருசில தீய நோக்கம் கொண்டவர்கள் .mp3என்பன போன்று போலியான கோப்பின் பின்னொட்டினை சிறப்பு யூனிக்கோடு எழுத்துருவைகொண்டு உருவாக்கி இந்த பின்னொட்டினை .3pm என்றவாறு மறுதலையாக அமையச்செய்து இந்த பயன்பாடு செயல்படாமல் இருக்குமாறு செய்திடுவார்கள் அதாவது Awesome Song uploaded by RCS.mp3 என்பதை Awesome Song uploaded by [U+202e]3pm.SCR என்றவாறு மாற்றிஅமைத்திருப்பார்கள்

பொதுவாக இயல்புநிலையில் விண்டோவில் கோப்பின் பின்னொட்டின் எழுத்துகளை திரையில் பிரதிபலிக்கசெய்திடாமல் மறைத்து வைத்திருப்பார்கள்  அதாவது image.jpg.exe என்பதை image.jpgஎன்றவாறு தோன்றிடுமாறு செய்திருப்பார்கள் அதனால்  போலியான கோப்புகளை கண்டுபிடித்திடமுடியாத நிலை ஏற்படும்

ஆயினும்  நம்பிக்கையுள்ள மிகச்சரியான செயலி கோப்புகள்எனில் இயல்புநிலை அமைவில் திரையில் மிகசரியான உருவதோற்றத்தில் அமைந்திருக்கும் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் மிகசரியாக செயல்படதுவங்கிடும்

6.1

6.1

விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில் Organize எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் பட்டியலில்   Folder and search options என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து திரையில் தோன்றிடசெய்தபின் அதில்  View  எனும் தாவியின் திரையில்  Hide extensions for known file typesஎன்பதன் தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்யபட்டிருந்தால் அதனை நீக்கம் செய்து okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

6.26.2

மேலும் பயன்பாடுகளை செயல்படுத்திடும் .exe என்ற பின்னொட்டுடன் கூடிய கோப்புகளை நம்பிக்கையுள்ள தளத்திலிருந்து மட்டும் பதிவிறக்கம்செய்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது  .exeமட்டுமல்லாது.bat, .cmd, .com, .lnk, .pif, .scr, .vb, .vbe, .vbs, .wsh ஆகிய பின்னோட்டுகளுடன் கூடிய கோப்புகளும் செயலிவகையானதே அதனால்  கோப்பின் பின்னொட்டினை பார்த்து அறிந்து அதனடிப்படையில் செயல்படசெய்திடுக

நம்முடைய தனியாள் கணினியில் ஆண்ட்ராய்டை செயல்படுமாறு செய்து இரட்டை இயக்கமுறைமையாக மாற்றியமைத்திடலாம்

சிலர் ஆண்ட்ராய்டு செயல்படும் ஒருசில பயன்பாடுகளை விண்டோ இயக்க முறைமையிலும் செயல்படுத்திடவிழைவார்கள்  ஆனால் உண்மையில் அவ்வாறு இவைகளை செயல்படுத்திடமுடியாது இந்நிலையில்  BlueStacks என்பது கைகொடுக்கின்றது

5.1

5.1

இதைவிட  Android Emulator என்பது சி்றந்த தீர்வாக அமைகின்றது  இதனை செயல்படுத்துவதற்காக கூகுளினுடைய Android SDK என்பதை பதிவிறக்கம் செய்து SDK Manager  என்பதை செயல்படசெய்க அதில்  Tools => Manage AVDs=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் New button என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Android Virtual Device (AVD) என்பதை நாம் விரும்பிய கட்டமைவில் உருவாக்குக அதன்பின்னர் இதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க. அதன் பின்னர்  Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படசெய்து இதனை நிறுவுகை செய்திடுக பின்னர்  விண்டோவிற்குள் ஆண்ட்ராய்டை இரட்டை இயக்கமுறைமையாக செயல்படசெய்து நாம் விரும்பம் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை செயற்படுத்தி பயன்பெறலாம்

5.2

5.2

PDF வகை கோப்பினை வரிசைபடுத்தி அடுக்கிவைத்திட

பொதுவாக நாம் அனைவரும் இணையபக்கங்களில் உலாவரும்போது அவ்வப்போது தென்படும் செய்திகளை கட்டுரைகளை ஏராளமான அளவில் பதிவிறக்கம் செய்ததால் நம்முடைய கணினியில் திருவிழாசந்தையில் நமக்கு தேவையான பொருளை தேடிபிடிப்பதில் ஏற்படும் சிரமத்தை  உருவாக்குகின்றன. அவற்றை கையாளும்போது ஏற்படும் சிரமத்தை போக்குவதற்காக பின்வருபவை உதவுகின்றன. பொதுவாக  நம்மால் பதிவிறக்கம் செய்திடும் கோப்புகளானது PDFஆக இல்லாமல் வேறுவகையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் Evernote, Pocket, Reading List ஆகியவை கைகொடுக்கின்றன.ஆனால் அவை PDFஆக இருந்தால் கையாளுவதில் சிரமம் இல்லை இருந்தபோதிலும்இந்த PDFஆக இருக்கும் கோப்பில் முக்கியமான தொழிலநுட்ப கட்டுரைகளின் தொகுப்பாக இருந்து அவற்றின் உள்ளடக்கங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சென்று படித்திட என்னசெய்வது என கோருபவர்கள்  Adobe Acrobat  எனும் PDF இன் படிப்பான் திரையின் மேல்பகுதியின் கட்டளைபட்டையில் உள்ள view=>comment=>Annotations=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  இந்த   PDF இன் படிப்பான் திரையின் வலதுபுற பலகத்தின் Annotations எனும் தலைப்பில் தோன்றிடும்  உருவ பொத்தான்களுள் Speech Bubble எனும் உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  தோன்றிடும்Speech Bubble எனும் உருவத்தை தேவையான உரைப்பகுதியில் வைத்து பிடித்து இருமுறை சொடுக்குக உடன் Sticky Note என விரியும் அதில் தேவையான குறிப்புகளை உள்ளீடு செய்து சேமித்துகொள்க இது ஒருஆவணத்தில் புத்தககுறிப்பு வைத்திருப்பதை போன்ற பயனை அளிக்கின்றது

16.05.2015-5

கணிதத்தை எளிதாக கற்க உதவும் Socraticஎனும் வலைதளம்

 தற்போதைய நமதுநாட்டிலுள்ள மேல்நிலைபள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு  இயற்பியல் இரசாயனவியல், உயிரியில் ,நுன்னுயிரியில், வகை நுன்கணிதம், தொகைநுன்கணிதம் போன்றபாடங்களை கற்பது என்பது வேப்பங்காயாக அல்லது பாகற்காயாக கசந்து ஒதுக்கிவிடும் தன்மையை அளிப்பவையாக இவை விளங்குகின்றன ஆயினும் இதனை தம்முடைய விருப்பபாடமாக தேர்ந்தெடுத்தவர்கள் பெறும் கஷ்டம் சொற்களால் சொல்லிமாளாது என்ற அளவிற்கு மிககடினமானதாக அமைந்துள்ளதாக மாணவர்கள் அனைவரும் ஒருமனதாக கூறுவார்கள் நிற்க இவ்வாறான மாணவர்களின் கடின நிலையை போக்கி வழக்கமான இயல்பான நிலைக்கு மாற்றிட கைகொடுக்கின்றது Socraticஎனும்  வலைதளம் இந்த தளத்தில் நமக்கு இந்த மேலே கூறியாவாறான பாடங்களில் ஏற்படும் எந்தவொரு சந்தேகத்தையும் தீர்வுசெய்கின்றது இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தபின்Activity, Questions,  Topics. ஆகியவற்றில் எதனை நாம் கோருகின்றோம் என தெரிவுசெய்தால் போதுமானதாகும் தொடர்புடைய கேள்வியை எழுப்பி தீர்வுகாணுதல் அல்லது தங்களுக்குள் விவாதித்து தீர்வுகாணுதல் ஆகிய பல்வேறு வழிமுறைகளில் தங்களுடைய பாடங்களில் எழும் கஷ்டங்களை நஷ்டங்களை பகிர்ந்து தீர்வு பெறலாம்   இதற்காக http://socratic.org/ எனும் இதனுடைய வலைதள பக்கத்திற்குள் உள்நுழைவு செய்திடும்போது எந்த பாடம் தொடர்பாக என பயனாளர்களின் பெயர் கடவுசொற்கள் மின்னஞ்சல் முகவரி ஆகியவிவரங்களுடன் பதிவுசெய்து கொள்ளவேண்டும் மேலும் Google, Facebook  ஆகிய கணக்கின்வாயிலாககூட இந்த தளத்தில் உள்நுழைவு செய்வதற்காக  இந்த தளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம்

16.05.2015-4

Previous Older Entries