நம்முடைய நிறுவனத்தை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் இணையபக்கத்தில் பதிவுசெய்து கொள்ளும் வழிமுறை

    முதலில்http://www.epfindia.gov.in /    என்ற வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு சென்று நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்து கொள்ளவேண்டும்

படம்-1

அதற்காக படம்-1-இல் உள்ளவாறு தோன்றிடும் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் முகப்பு பக்கத்தில் e-SEWA என்ற இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-2-ல் உள்ளவாறான Employee’s Provident Fund Organisation,India  Employers e-Sewa என்ற முகப்பு பக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அதில் 1.பயனாளர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்திசெய்வதற்கான கேள்விபதில் வடிவிலான  இணைய பக்கத்திற்கான FAQஎன்ற இணைப்பு,2.நாம் மாதந்தோறும் இணையத்தில் மேலேற்று வதற்கான தொழிலாளர்களின் விவரங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான ECRஎன்ற கோப்பு வடிவமைப்பை பெறுவதற்கான இணைப்பு ,

3.நம்முடைய  நிறுவனத்தை   வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின்  பதிவு செய்வதற்கான இணைப்பு ஆகியவை உள்ளன முதலில் இந்த மூன்றாவது இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2
உடன் படம்-3-ல் உள்ளவாறான இந்நிறுவனத்தினடையLogin  பக்கத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு புதியதாக நாம் பதிவுசெய்யவிருப்பதால் Registerஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-3

 பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய வருங்கால வைப்புநிதி அலுவலகம் உள்ள எல்லைபகுதியை Tamil Naduஎன்றவாறு அதற்கான Select state என்ற கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்து கொள்க

படம்-4

  அதன்பின்னர்  நம்முடைய வருங்கால வைப்புநிதி அலுவலகம் அமைந்துள்ள மண்டல அலுவலக எல்லை போன்றவிவர்களை குறிப்பிடுவதற்காக Search your establishment code here என்ற (படம்-4)இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் விரியும் (படம்-5) பட்டியலிலிருந்து மண்டல அலுவலகம் கோயம்புத்தூர் என்பதற்குCBஎன்பதையும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் திருச்சி என்பதற்கு TRYஎன்றும் தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5

அதன்பின்னர் நம்முடைய நிறுவனத்தை பதிவுசெய்தவதற்கான விவரங்களை கோரும் காலியான படிவம் ஒன்று திரையில் தோன்றிடும்

படம்-6

அதில் Enter your establishment codeஎன்பதற்கருகில் CB TRY ஆகியஇருபகுதியின் எண்கள் நாம் ஏற்கனவே தெரிவுசெய்துள்ளதால் தயாராக இருக்கும் அதனுடன் நமக்கு வழங்கபட்ட எண்ணை உள்ளீடு செய்து click here details என்ற பொத்ததானை தெரிவுசெய்து சொடுக்கினால் நம்முடைய நிறுவனத்தின் பெயர் மற்ற விவரங்கள் அதற்கான பகுதியில் பிரதிபலிக்கும் (படம்-6) இந்த படிவத்தில் கோரியுள்ள மற்ற விவரங்களை  மிகச்சரியாக உள்ளீடு செய்து முதலில் Click GET PINஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் பதிவுசெய்த செல்லிடத்து பேசியில் PIN ஆனது குறுஞ்செய்திவாயிலாக வந்து சேரும் பின்னர் I agreeஎன்பதன் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டுEnter authorised PINஎன்ற பகுதியில் நம்முடைய செல்லிடத்து பேசியில்  குறுஞ்செய்திவாயிலாகவந்து சேர்ந்த PIN எண்களை  உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
உடன் நம்முடைய நிறுவனம் பதிவுசெய்யபட்டு மீண்டும் நம்முடைய செல்லிடத்து பேசியில் தற்காலிகமான பயனாளர் பெயர், கடவுச்சொற்கள்  ஆகிய விரங்களுக்கான மற்றொரு குறுஞ்செய்தி  வந்து சேரும் இதனிடையPlease relogin here to continue further என்ற இணைப்புடன் தோன்றிடும்திரையில் அந்த இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம் -3-ல் உள்ளவாறான உள்நுழைவு திரை தோன்றிடும்  அதில் நமக்கு குறுஞ்செய்தி வாயிலாக கிடைக்கபெற்ற தற்காலிக  பயனாளர் பெயர், கடவுச்சொற்கள்  ஆகிய விரங்களை உள்ளீடு செய்து  login என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம் -7

  உடன் படம் -7-ல் உள்ளவாறான திரைதோன்றிடும் அதில்  வருங்கால வைப்புநிதி இணையபக்கதிற்கு உள்நுழைவுசெய்வதற்கான நாம்விரும்பும் பயனாளர் பெயர் கடவுசொற்கள் ஆகியவற்றை உள்ளீடுசெய்து Create Permanent Loginஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் இதை உறுதிசெய்வதற்கான மூன்றாவது குறுஞ்செய்தி யொன்று நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வந்து சேரும் இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றி நம்முடைய நிறுவனத்தை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் இணையபக்கத்தில் பதிவுசெய்து கொள்க

ஒரு நிறுவனத்தினை வரிமூலம் பிடித்தம் செய்வதற்காகTAN ஆக பதிவுசெய்யும் வழிமுறைகள்

  இந்தியாவில் தற்போது வரிமூலபிடித்தம் என்பது கட்டாயமாக்க பட்டுள்ளது வரிமூலம் பிடித்தம் செய்தால் மட்டும் போதாது அதனை காலத்தே அரசிற்கு செலுத்திடவேண்டும் பின்னர் அவ்விவரங்களை அறிக்கையையாக சமர்ப்பித்தபின் சம்பந்தபட்டவர்களுக்கு இந்த வரிமூலபிடித்தம் செய்ததற்கான சான்றிதழ் அளிக்க வேண்டியுள்ளது இவ்வாறு வரிமூலபிடித்தம் செய்யும் நிறுவனங்கள் இந் நடவடிக்கைக்காக முதலில் இணையத்தின் பதிவுசெய்து கொள்ளவேண்டும் அதற்காக

1.https://onlineservices.tin.nsdl.com/TIN/JSP/tds/RegisterTan.jsp என்றஇணையதளத்திற்கு செல்க

2.அங்கு இந்த TAN ஐ பதிவுசெய்வதற்கான விண்ணப்பத்தை பின்வரும் விரங்களை கொண்டு நேரடியாக பூர்த்திசெய்து Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வரிமூலம் பிடித்தம் செய்பவரின் விவரங்கள் (details of deductor/ collector )

2.1 முதலில் வரிமூலம் பிடித்தம் செய்பவரின் மிகச்சரியானபெயரை (deductor/ collector i.e. TAN Name ) உள்ளீடு செய்க

2.2பின்னர் வரிமூலம் பிடித்தம் செய்பவரின் வகையை (deductor/collector category ) அதற்கான கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்து கொள்க

2.3அதன்பின்னர் வரிமூலம் பிடித்தம் செய்பவரின் வருமான வரி பதிவெண்ணை (PAN of the deductor/collector ) குறிப்பிடுக இல்லையெனில் PANNOTREQD எனக்குறிப்பிடுக

2.4 பின்னர் வரிமூலம் பிடித்தம் செய்பவர் மத்திய அரசாக இருந்தால்(Central Government ) PAO Code, DDO Code ஆகிய புலங்களின் குறியீட்டு எண்களை கண்டிப்பாக குறிப்பிடுக

2.5அதன்பின்னர் வரிமூலம் பிடித்தம் செய்பவர் மத்திய அரசாக இல்லாதிருந்தால் PAO Codeஎன்ற புலத்தில் PAOCDNOTAVBL எனக்குறிப்பிடுக

2.6பின்னர் வரிமூலம் பிடித்தம் செய்பவர் மத்திய அரசாக இல்லாதிருந்தால்DDO Code என்ற புலத்தில்DDOCDNOTAVBL எனக்குறிப்பிடுக

2.7அதன்பின்னர் புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ்New Pension System (NPS). பதிவுபெற்ற மத்திய ஆவணகாப்பக முகமையாக (Central Record Keeping Agency (CRA)) இருந்தால் தமக்கு ஒதுக்கியுள்ள PAO பதிவெண்ணை குறிப்பிடுக

2.8அவ்வாறே புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் New Pension System (NPS). பதிவுபெற்ற மத்திய ஆவணகாப்பக முகமையாக (Central Record Keeping Agency (CRA)) இல்லாதிருந்தால் DDONOTAVBLஎனக் குறிப்பிடுக

படம்-1

வரிமூலம் பிடித்தம் செய்பவரின் தொடர்கொள்ளும் விவரங்கள் (contact details of deductor/collector )

3.1 பிறகு வரிமூலம் பிடித்தம் செய்பவரின் முழுமையான முகவரியை (complete address and contact details) குறிப்பிடுக

3.2 பின்னர் மின்னஞ்சல் முகவரியையும் தொலைபேசிஎண் அல்லது செல்லிடத்து பேசி எண்ணையும் குறிப்பிடுக (email id , telephone no. / mobile no )

3.3 கண்டிப்பாக ஒரு மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுக

3.4 வரிமூலம் பிடித்தம் செய்பவர் மத்திய மாநில அரசாக இல்லாதிருந்தால் கண்டிப்பாக தம்முடைய செல்லிடத்து பேசி எண்ணைகுறிப்பிடுக

3.5 பின்னர் இந்த வரிமூலம் பிடித்தம் செய்வதற்காண பொறுப்பான அலுவலரின் பெயரையும் அவரின் பதிவியின் பெயரையும் குறிப்பிடுக

படம்-2

அறிக்கை விவரங்கள்

4.1TINஇனுடையhttps://onlineservices.tin.nsdl.com/TIN/JSP/tds/linkto UnAuthorizedInput.jspஎன்றஇணையதளத்திற்குசென்றுTAN,TokenNumber(ProvisionalReceiptNumber)ஆகியவற்றைகுறிப்பிடுவதன்மூலம்முந்தையகாலாண்டுஅறிக்கையின்நிலையைஅறிந்துகொள்க

4.2அதன்பின்னர் வழக்கமான e-TDS / TCS –ன் காலாண்டு அறிக்கைகள் ஏதேனும் 01.04.2008 க்கு பிறகு TINஇனுடைய இணையதளத்தினால் ஏற்றுக் கொள்ள பட்டதாவென குறிப்பிடுக.

4.3.மிகமுக்கியமாக இந்த e-TD S / TCS –ன் காலாண்டு அறிக்கைகளின் மின் அறிக்கைகள் மட்டும் TINஇனுடைய இணையதளத்தினால் ஏற்றுக் கொள்ள பட்டதாவென குறிப்பிடுக 4.4 இந்த அறிக்கை விவரத்தை குறிப்பிடும்போது TINஇனுடைய இணையதளத்தினால் ஏற்றுக் கொள்ள பட்டe-TDS / TCS –ன் காலாண்டு அறிக்கைகளுக்கான தற்காலிக பெறுதல் எண் அல்லது கோப்பு ஏற்புகை பயன்பாட்டு விவரத்தை குறிப்பிடுக

படம்-3

TAN கணக்கு விவரங்கள்5.1 இந்த TAN கணக்கினை செயற்படுத்துவதற்கான பயனாளரின் சுட்டிஎண்அல்லது பெயரையும் (user ID) கடவுச்சொற்களையும் (password ) தெரிவுசெய்து கொள்க

5.2 இதில் குறிப்பிடும் கடவுச்சொற்களானது சிறியஎழுத்து ,பெரியஎழுத்து, எண்கள் ,சிறப்பு குறியீடுகள் ஆகியவை கலந்து இருக்குமாறு பார்த்து கொள்க

5.3 நமக்கு ஒதுக்கபட்ட இந்தபயனாளரின் சுட்டிஎண்அல்லது பெயரையும் (user ID) கடவுச்சொற்களையும் (password ) பத்திரமாக பாதுகாத்து வைத்திடுக

5.4.இந்த கடவுச்சொற்களை (password ) மறந்திடும்போது அதனை பழையபடி நினைபடுத்துவதற்கான பாதுகாப்பு கேள்வியையும் அதற்கான பதிலையும் தெரிவுசெய்துகொள்க

படம்-4

ஏற்புகை அல்லது TANபதிவண் உருவாகுதல்

6.1இந்த படிவத்தில் நட்சத்திர குறியீடு with asterisk (*). உள்ள புலங்களுக்கான விவரங்களை கண்டிப்பாக உள்ளீடு செய்க.

6.2இந்த படிவத்தில் கோரிய அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்தபின் submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஏதேனும் பிழையை சுட்டிகாட்டினால் அதனை சரிசெய்துமீண்டும் submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

6.3அனைத்தும் சரியாக இருக்கின்றது பிழைஏதும் இல்லையெனில் இதனை உறுதிசெய்துகொண்டு நாம்பூர்த்தி செய்த விவரபடிவம் திரையில் பிரதிபலிக்கும்

6.4இந்நிலையில் edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மேலும் விடுபட்ட விவரங்கள் ஏதேனுமிருப்பின் பூர்த்திசெய்து confirm என்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

6.4 அனைத்து விவரங்களும் மிகச்சரியாக இருந்தால் உடன் எழுத்துகளும் எண்களும் சேர்ந்த 12இலக்கஅளவிற்கு TAN பதிவெண் ஒன்று உருவாகிவிடும்அதனை உறுதிசெய்து கொள்ளும் ஏற்புகை எண் திரையில் பிரதிபலிக்கும்

6.5 இதனை பிற்காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக அந்த ஏற்புகை எண்ணையும் TAN பதிவெண்ணையும் அச்சிட்டு வைத்துகொள்க

 6.6 நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு இந்த TAN பதிவெண்ணை செயல்படுத்து வதற்கான மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கும் அதில் உள்ள இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக
6.7
பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய செல்லிடத்து பேசிக்கு ஒரு சரிபார்ப்பு குறியீட்டு எண் குறுஞ்செய்திமூலம் வந்து சேர்ந்திருக்கும் அதனை அதற்கான பகுதியில் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு 24 மணிநேரத்தில் நம்முடையTAN பதிவெண் செயல்பட ஆரம்பித்துவிடும்

படம்-5

.OpenKm எனும் மின் ஆவணங்களை நிருவகிக்கும் கருவி

எந்தவொரு நிறுவனத்திலும் மின் ஆவணங்களை நிருவகிப்பது என்பது மிக சிக்கலான செயலாகும் ஏனெனில் ஒருவர் எக்செல் கோப்பினையும் மற்றொருவர் அக்சஸ் கோப்பினையும் பிரிதொருவர் பவர் பாயின்ட் கோப்பினையும் மற்றொருவர் வேர்டு கோப்பினையும் பயன்படுத்தி வருவார்கள்

இவைகளுள் சிலர் எம்எஸ்ஆஃபிஸ்2003 பதிப்பிலும் வேறுசிலர் எம்எஸ்ஆஃபிஸ்2007 பதிப்பிலும் மற்றும் சிலர் எம்எஸ்ஆஃபிஸ் 2010 பதிப்பிலும் என இதனுடைய பல்வேறுவகையான பதிப்புகளிலும் இன்னும் சிலர் ஓப்பன் ஆஃபிஸ் என்றவாறு பல்வேறுவகையில் பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஆவணங்களின் பெயர் அவை இருக்கும் நினைவக இடம் அவைகளின் பதிப்பு எண் போன்றவைகளை நினைவில் இருத்தி கொண்டு இந்த மின் ஆவணங்களை நிருவகிப்பது என்பது மிகசிக்கலானதும் கடினமானதும் ஆன பணியாகும் இவ்வாறான நிலையில் OpenKMஎன்பது இணையத்தில் இந்த ஆவணங்களை நிருவகிப்பதற்கான மிகச்சிறந்த திறமூல கருவியாக விளங்குகின்றது இதனை இயக்கி பயன்படுத்திகொள்ள jBossஎன்ற இணையசேவையாளரை(web server) இது பயன்படுத்தி கொள்வதால் இதற்கென தனியான இணையசேவையாளர்(web server) எதுவும் நமக்குத் தேவையில்லை ஆயினும் JDK 1.6என்பது மட்டும் நம்முடைய கணினியில் நிறுவபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்கபின்னர் http://localhost:8080/OpenKM/என்ற முகவரியில் இதனை அனுகி run.sh -b 0.0.0.0என்ற வாறு கட்டளைகளை இயக்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்

இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தினை நாம் அனுகுவதற்கான இயல்புநிலை பயனாளர் OkmAdminபெயர் கடவுச்சொற்கள்admin ஆகும் இதனை பயன்படுத்தி இதில் உள்நுழைவு செய்தபின் நம்மை பற்றிய விவரங்களை இதனுடைய Administration என்ற தாவியினுடைய திரையில் profileஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்துசொடுக்கி உள்ளீடு செய்து நமக்கென தனியாக இடத்தை ஒதுக்கீடு செய்து கொள்க பின்னர் profileஎன்ற உருவ பொத்தானிற்கு அருகிலுள்ள usersஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் users list என்ற திரைக்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு add usersஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி புதிய பயனாளர் விவரங்களை users details என்ற பகுதியில் உள்ளீடு செய்து சேர்த்து கொள்க இவ்வாறு users list –ல் சேர்க்கும் ஒவ்வொரு பயனாளரும் என்னென்ன பணியினை செய்யமுடியும எனக்குறிப்பிடுவதற்கு Rolesஎன்ற பக்கத்தில் குறிப்பிடுக.

இதன் பின்னர் அனைத்து வகையான ஆவணங்களையும இந்த தளத்தில் மேலேற்றிய பின் ஏதேனுமொரு ஆவணத்தை தெரிவுசெய்து Security என்ற தாவியனுடைய திரைக்கு சென்று அதன் தனித்தன்மை அந்த ஆவணத்தை பயன்படுத்தும் பயனாளரினுடைய Roles ஆகியவற்றை அறிந்து தேவையானால் இந்த Rolesஐ மாற்றியமைத்து கொள்ளமுடியும் இதன்பின்னர் பயனாளர் தம்முடைய ஆவணத்தில் மாறுதல் ஏதேனும் செய்தால் admin மூலம் என்ன திருத்தம் எப்போது செய்யபட்டது என்பன போன்று அறிந்து கொள்ளமுடியும் ஒரேசமயத்தில் admin உம் பயனாளரும் ஒரே ஆவணத்தை பார்வையிட்டு சரிபார்த்து தேவையெனில் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யமுடியும் அதனை தொடர்ந்தும் அந்த ஆவணத்தின் பதிப்பையும் சரிபார்த்து நிருவகிக்கமுடியும் குறிப்பிட்ட ஆவணம் சரியாக உள்ளது பயனாளர் இதற்கு பிறகு திருத்தம் செய்யதேவையில்லை எனில் அதனை lockசெய்துவிடலாம்

இந்த OpenKmஆனது ஆவணங்களை நிருவகிப்பதற்கு மட்டுமன்று அந்த நிறுவனத்தி னுடைய workflow ,mails,chat போன்றவைகளையும் நிருவகிக்க துனைபுரிகின்றது

Sugar CRM எனும் வாடிக்கையாளர் மேலான்மை கருவி

எந்தவொரு நிறுவனமும் அது பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும்  வாடிக்கையாளர்களுடனும் பொதுமக்களுடனும் எப்போதும் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது இவ்வாறாக அந்நிறுவனத்துடன் எப்போதும் தொடர்புகொண்டிடும் வாடிக்கையாளர்களை, பொதுமக்களை நிருவகிப்பதையே Customer Relationship Managementஎன அழைப்பார்கள் இவ்வாறு ஒருநிறுவனத்தினுடைய  customer lists, support cases,sales rep profile  போன்றவைகளை நிருவகிப்பதற்கு  CRM என்ற மென்பொருள் பயன்படுகின்றது  இதற்காக ஏராளமான அனுமதிபெற்ற மென்பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும் திறமூலமென்பொருளும் நம்முடைய தேவைக்கேற்ற வசதிகளுடன் கிடைக்கின்றது

Sugar CRM என்பது இவ்வாறான  ஒரு திறமூலமென்பொருளாகும் இது Cloud அடிப்படையிலான CRM  தீர்வை பயனாளர்களுக்கு வழங்குகின்றது அதனால் எந்தவொரு நிறுவனமும் தம்முடைய தேவைக்கேற்ப இதனை மாற்றியமைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும்  அடிப்படையில் இது சிறியநிறுவனங்கள்முதல் நடுத்தர நிறுவனங்கள் வரை இதனை பயன்படுத்திகொள்ளலாம் நேரடியாகவும்,  Cloud மூலமாகவும் இதனை ஒரேசமயத்தில் செயல்படுத்தி கொள்ளமுடியும் இதில் சுமார் 250000 பேர் உறுப்பினராகவும் 25000 மேம்படுத்துநர்களாகவும் இணைந்துள்ளனர் அதுமட்டுமல்லாது 850 விரிவாக்கமும் இதிலுள்ளதால் நம்முடைய தேவைக்கேற்ற மிகச்சரியானதை தெரிவுசெய்து உலகில் எங்கிருந்தும் எப்போதும் இதனுடைய data center-ல் அல்லது வாடிக்கையாளரின் சொந்தdata center-ல் அல்லது   Cloud சேவை வழங்குபவரின்  data center-ல் Sugar CRM ஐ நிருவகித்து கொள்ளமுடியும்

ஆயினும் இந்த Sugar CRM  ஆனது நிருவகிப்பதற்கான சுதந்திரத்தை மிககுறைந்த ஆண்டு சந்தா அதாவது ஆண்டுஒன்றிற்கு 360 டாலர் என்ற செலவில் அனுமதிக் கின்றது  மேலும் இது 22 க்குமேற்பட்ட மொழிகளில், வரம்பற்ற APIஅழைப்பை, இலவச பிற்காப்பினை, 15 ஜிபி தேக்கும்  நினைவக இடத்தினை மற்றும்  பல சேவைகளையும் வழங்குகின்றது இதே வசதிகளை இந்த Sugar CRM -ல் http://goo.gl/juq4f.என்ற தளத்தில் அல்லது இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொணடு ஏழுநாட்கள் இலவசமாக பயன்படுத்தி பார்த்து  திருப்தியுற்றால் ஆண்டு சந்தாசெலுத்தி இந்த வசதிகளை இந்த Sugar CRM -ல் பெறலாம்

இந்த Sugar CRM -ஐ நம்முடைய கணினியில் நிறுவி இயக்கவேண்டுமெனில் LAMPஎனப்படும் Linux,Apache,MYSQL PHP  ஆகியவை நம்முடைய கணினியில் நிறுவபட்டிருக்கவேண்டும் அதன் பின்னர்http://goo.gl/nC/fZi.என்ற தளத்தில்  இந்த Sugar CRM -ஐ  பதிவிறக்கம் செய்து வழிகாட்டியின் உதவியுடன்  தரவுகளின் வகை பயனாளரின் பெயர் கடவுச்சொற்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு நிறுவிக்கொள்க  இந்த Sugar CRM -ல் பெரும்பாலான பயனாளின் கணக்குகளில் send email, create task,create note,lock call,shedule meeting போன்றவைகளுக்கான உருவ பொத்தான்கள் இருக்கும் அவைகளை சொடுக்குவதன் வாயிலாக தேவையான சேவையை பெறமுடியும்  இதிலுள்ள தரவுகள் LibreOffice.Calcஎன்ற பயன்பாட்டின் மூலமாக கூட கையாளமுடியும்

இந்த Sugar CRM -ல் End Users,Administrator,Group Users,Portal API Users ஆகிய நான்கு வகையில் பயன்பத்தி கொள்ளமுடியும் மேலும் இதில் தனிபட்ட மின்னஞ்சலை  கையாள்வது மட்டுமல்லாது ஜிமோயில் யாகூமெயில் போன்றவற்றையும் கையாளும் வசதியும்உள்ளது

இதனடிப்படையில் இந்த Sugar CRM -ஐ மிக குறைந்த செலவில் நம்முடைய நிறுவனத்திற்கு பயன்படுத்திடமுயன்றிடுவோம்

விண்டோ 8-ல் படத்தை(Pictures) கடவுச்சொற்களாக PIN Logon -இற்காக பயன்படுத்துதல்

இந்த  புதியவசதிகளை விண்டோ-8 கொண்டுள்ளது  இந்த வசதி இதற்கு முந்தைய பதிப்புகளான எக்ஸ்பி விஸ்டா விண்டோ 7 ஆகிய இயக்கமுறைமைகளில் இல்லை  இதில் அனுமதியற்றவர்கள் உள்நுழைவு செய்வதை தடுப்பதற்காக   1. வழக்கமான எக்ஸ்பி விஸ்டா விண்டோ 7 ஆகியவற்றில் உள்ளவாறு முதல் அடுக்கில் பயனாளர் கணக்கு மற்றும் கடவுச்சொற்களை உருவாக்குதல் 2.  உள்நுழைவு செய்வதற்கான   இரண்டாவது அடுக்கில் Pictures ஐ கடவுச்சொற்களாக  அமைத்தல் 3.உள்நுழைவு செய்வதற்கான மூன்றாவது அடுக்காக PIN Logon    அமைத்தல்  ஆகிய  மூன்று வழிமுறைகளை இது கொண்டுள்ளது

முதலில் charms bar விண் டோவை திறந்துகொள்க அதில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கணினியின் அமைவுதிரையை தோன்றசெய்க

அதில் இடதுபுற பலகத்தில் Users என்ற வாய்ப்பை  தெரிவுசெய்து சொடுக்கியபின் வலதுபுற பலகத்தில் இரண்டாவதாக உள்ள create a picture pass word என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் நடப்பு பயனாளரின் கடவுச்சொற்கள் பிரதிபலிக்கும்  அதன்பின்னர் Choose Picture என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக உடன் நம்முடைய கணினியின் நினைவகத்தில் சேகரித்து வைத்துள்ள படங்களை பட்டியலாக பிரதிபலிக்கும்  அவற்றுள் தேவையான நாம் விரும்பும் படத்தை தெரிவுசெய்துகொண்டு  Use This Picture என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக உடன்  நாம் தெரிவுசெய்த படத்தில் வட்டம் நேர்க்கோடு   அமைக்கவிருப்பமா எனகோரும் தேவையெனில் அமைத்துகொள்க

அவ்வளவுதான் இரண்டாவது அடுக்கில்Pictures ஐ கடவுச்சொற்களாக அமைக்கும் பணி முடிவடைந்தது

இதன்பின் மூன்றாவது அடுக்கில் PIN Logon   அமைத்தலுக்காக முதலில் charms bar விண்டோவை திறந்துகொள்க அதில் Settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கணினியின் அமைவுதிரையை தோன்றசெய்க

அதில் இடதுபுற பலகத்தில் Users என்ற வாய்ப்பை  தெரிவுசெய்து சொடுக்கியபின் வலதுபுற பலகத்தில் மூன்றாவதாக உள்ள create a PIN என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் நடப்பு பயனாளரின் கடவுச்சொற்கள் பிரதிபலிக்கும்

அதன்பின்னர் Enter PIN என்பதில் 4 இலக்க குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்க அவ்வாறே Confirm PIN  என்ற பகுதியில் அதே  4 இலக்க குறியீட்டு எண்ணை மீண்டும் உள்ளீடு செய்க இப்போது கணினியின் இயக்கத்தை நிறுத்தி மறுதொடக்கம் செய்தால் மூன்றடுக்கில் கணினிக்குள் உள்நுழைவு செய்யும் நிலை ஏற்படும்

ஜிமெயிலில் குப்பை மின்னஞ்சலை வடிகட்டுவதற்கான வழிமுறைகள்

பெரும்பாலான குப்பை மின்னஞ்சல்கள் வியாபார விளம்பரங்களும் பிஷ்ஷிங் தளங்களின் செய்திகளாகவும் மட்டுமே உள்ளன  பொதுவாக ஜிமெயிலில் இவ்வாறான குப்பை மின்னஞ்சல்கள் இதிலுள்ள தடுப்புசுவர் வழியாக வடிகட்டபட்டே கிடைக்கின்றன  அதையும் மீறி வருகின்ற இவ்வாறான குப்பை மின்னஞ்சல்களை நாமே  பின்வரும் வழிமுறைகளில் தானாக வடிகட்டிடுமாறு செய்யமுடியும்

ஜிமெயில் திரையில் மேலே வலதுபுறம்   Gear வடிவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியில்  Settings என்ற கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்குக

உடன் விரியும் Settings என்றதிரையில் Filters என்ற தாவியினுடைய பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தோன்றசெய்க   அதில்  Create a New Filter. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் Filter.  என்ற திரையில் Has the wordsஎன்பதன்  கீழ் in:Spam  என உள்ளீடு செய்து மற்ற புலங்களில் ஒன்றும் உள்ளீடு செய்திடவேண்டாம்  இதன் கீழ்பகுதியிலிருக்கும்  Create Filter with this Search என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் துனைபட்டியில்  OK என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும்  in:Spam  என்ற திரையில் Delete it என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க அவ்வாறே Create Filter க்கு அருகிலுள்ள Also Apply filter to என்ற தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்து கொண்டு  Create Filter என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் Your Filter was Created. என்ற செய்தி திரையில் தோன்றிடும்  இதன் பின்னர் குப்பை மின்னஞ்சல் எதுவும் நமக்கு வந்து சேராது தானாகவே அவை வடிகட்டபடும்

பாதுகாப்புடன் தேடுபொறியை பயன்படுத்துதல்

நம்முடைய கணினிக்குள் மால்வேர்களை நமக்கு தெரியாமல் அனுப்பி நம்முடைய சொந்த தகவல்களை நமக்கு தெரியாமல் அபகரித்து செல்வது நாம் அனைவரும் அறிந்ததே அதேபோன்று மற்றொரு வழியாக யாகூ, கூகிள் போன்ற   தேடுபொறிகளின்  வாயிலாக நாம் தேடும்போது கூட நம் முடைய சொந்த தகவல்களை அபகரித்திட வாய்ப்புள்ளது  எவ்வாறெனில் நாம் ஒவ்வொருமுறையும் இணையத்தில் இந்த தேடுபொறிவாயிலாக தேடிட உள்ளீடுசெய்யும் சொற்களை இவை தரவாக சேமித்துகொள்கின்றன பின்னர் நாம் செல்லும் தளங்கள் எந்த நேரத்தில் இந்த தேடுதலை செய்கின்றோம் என்பன போன்ற செய்திகளுடன்  நம்முடைய ஐபி முகவரியையும் சேர்த்த சேகரித்து தரவாக சேமித்து வைத்துகொள்கின்றன இவ்வாறாக சேகரிக்கபட்ட தரவுகளிலிருந்து  நாம் எதற்காகவெல்லாம் இணையத்தை பயன்படுத்து கின்றோம் நம்முடைய விருப்ப வெறுப்பு யாவை என யூகித்து கொள்கின்றது இது அடுத்த தனிநபரின் சொந்த வாழ்க்கையில் தலையிடுவது போன்றதல்லவா  இதனை தவிர்த்திட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக

 1.தேடுதல்பொறியில் உள்ள  கூகிள் டாக் .கூகிள் குரூப் என்பனபோன்ற  கூடுதல் வசதிகளை பயன்படுத்தி கொள்ள உள்நுழைவுசெய்வதற்காக நம்மை பற்றிய சொந்த தகவலை உள்ளீடு  செய்யவேண்டியுள்ளது அதனால் அவைகளை தவிர்ததிடுக முடிந்தவரை உள்நுழைவுசெய்வதற்கான பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் போன்றவைகளை இந்த கூடுதல் வசதிகளில் உள்ளீடு செய்து உள்நுழைவு செய்வதை தவிர்த்திடுக

 2.கூகிள் தேடுபொறிமூலம் தேடுவதை தவிர்த்திடுக ஏனெனில் இது நம்முடைய கணினியில் குக்கிகளை உருவாக்கி நம்மைபற்றிய தகவல்களை சேகரித்து கொள்கின்றது  கூகிள் தேடுபொறிமூலம் மட்டும் தேடுவதாக இருந்தால் பின்வருமாறு அமைவுசெய்து கொள்க

   இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனில்  Tools=> Internet options => privacy => sites => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் Address of the websitesஎன்பதில் www.google.com  என்ற முகவரியை உள்ளீடு செய்து Blockஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 ஃபயர் ஃபாக்ஸ் எனில் Tools=> options => privacy => exceptions => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில்www.google.com  என்ற முகவரியை உள்ளீடு செய்து Blockஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இதன்பின்னர் கூகிள்மூலம் இணையத்தில் உலாவந்தால் நம்முடைய கணினியில்  குக்கிகளை பதியமுடியாது

  3.தேடுபொறிகள் நம்மைபற்றிய விவரங்களை நம்முடைய ஐபி முகவரி மூலமாகவே பெறுகின்றன அதனால்  கேபிள் அல்லது டிஎஸ்எல்மோடம் வழியாக இணைய இணைப்பு பெறுபவராக இருந்தால்  அவ்வப்போது சிறிதுநேரம்   மோடத்தின் இயக்கத்தை நிறுத்தம் செய்து சிறிது நேரம் கழித்து மறுதொடக்கம் செய்க டயல் அப் இணைப்ப எனில் அவ்வப்போது இதனுடைய ஐபி முகவரி மாற்றியமைப்பதை உறுதி செய்து கொள்க

 4.தேடுபொறியை பயன்படுத்திடும்போது நம்முடைய பெயர் , முகவரி, கடன்அட்டை எண் போன்ற சொந்த தகவல்களை உள்ளீடு செய்து தேடுவதை உலாவருவதை தவிர்த்திடுக.

 5.நமக்கு இணைய இணைப்பினை வழங்கும் சேவைநிறுவனம்  தேடுபொறி வசதியை வழங்கினால் கண்டிப்பாக அதனை தவிர்த்திடுக ஏனெனில் அந்நிறுவனத்திற்கு நம்மை பற்றிய சொந்த தவலை ஏற்கனவே வழங்கியிருப்போம்

Previous Older Entries