கணினி தொழில்நுட்ப வல்லுனரை அழைக்காமல் நாமே சரிசெய்து கொள்வதுஎவ்வாறு ?

ஒருசில குறும்புகாரர்கள் பொழுதுபோக்காக எப்போதும் மற்றவர்களுக்கு ஏதாவது தொந்திரவு கொடுத்து கொண்டே இருப்பார்கள் அதனால் துஷ்டனை கண்டால் தூரவிலகு என்ற பழமொழிக்கு ஏற்ப நாமும் அவ்வாறானவர்களை கண்டவுடன் காததூரம் ஓடிவிடுவோம்.

அவ்வாறே நடைமுறையில் நாமெல்லோரும் கணினியை பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் உடனேய கணினி தொழில்நுட்ப வல்லுனரை அழையுங்கள் என தத்தமது பணியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிடுவோம்.

ஆயினும் அவ்வாறான சிறுசிறு தொந்தரவுகளைகூட சரிசெய்வதற்காகவென கணினி தொழில்நுட்ப வல்லுனரை அழைக்காமல் நாமே சரிசெய்து கொள்வது நல்லது. நம்முடைய கையே நமக்கு உதவி என எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை சார்ந்திருக்கமால் சுயசார்பாக இருப்பது நல்லது என ஆன்றோர்களால் பரிந்துரைக்கபடுகின்றது.

அவ்வாறான சுயசார்பு தன்மையை அடைவதற்காக திறமூல மென்பொருட்களில் ட்ரபுள் மேக்கர்(trouble maker) எனும் கருவி பயன்படுகின்றது அதாவது இதனை நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்தினால் தானியங்கியாக இது நம்முடைய கணினியில் ஏதோவொரு பிரச்சினை உருவாகியுள்ளதாக அதற்கான செய்தியை திரையில்பிரதிபலிக்க செய்யும் உடன் அதனை மற்ற யாருடைய உதவியுமின்றி நாமே முயன்று சரிசெய்திடும் பயிற்சியை இது நமக்கு வழங்குகின்றது..

1தற்போதைய கணினி இயங்க துவங்கியவுடன் வழக்கமான வரைகலை முகப்பு திரைக்கு செல்லாமல் கருப்பு வெள்ளையான கட்டளை திரைக்கு சென்றுவிடுதல், 2இனிட் டேப் எனும் கோப்பு இல்லை என எச்சரி்த்தல், 3மூல இயக்ககத்தின் மூலம் உள்நுழைவு செய்யமுடியவில்லை என்ற செய்திவாயிலாக நம்மை எச்சரித்தல், 4 இனிட்ரேடு எனும் கோப்பு இல்லை என நம்மிடம கைவிரித்தல், 5மூல இயக்ககத்தின்வாயிலாக உள்நுழைவு செய்யாமல் நின்றுவிடுவது ,6 வலைபின்னல் இணைப்பு எதுவுமில்லை என நம்மை மிரட்டுவது.7, எஃப்டிப்பி என்பது செயல்படவில்லை என்றும் 8எஸ்எஸ்ஹெச் செயல்படவில்லை என்றும் நம்மை பயமுறுத்துவது என்பனபோன்ற பதினாறு வகையில் கணினியின் வெவ்வேறு வகையான பிரச்சிணையை இந்த மென்பொருள் உருவாக்கி நாமே முயன்று அதற்கான தீர்வு காண்பதற்கான பயிற்சியை வழங்குகின்றது இதனை நன்கு செயற்படுத்தி நாமே முயன்று தீர்வுகண்டோமெனில் கணினியில் எழும் சிறுசிறு பிரச்சினைகளுக்கெல்லாம் கணினி தொழில்நுட்பவல்லுனரின் உதவியில்லாமலேயே நாமே தைரியமாக கணினியில் எழும் எந்தவொரு பிரச்சினையையும சமாளிக்கும் திறனை இது நமக்கு வழங்குகின்றது

இதனை http://sourceforge.net/projects/trouble-maker/files/என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவி செயல்படுத்தி நம்முடைய கணினியில் எழும் பிரச்சினைகளை களையும் அதனை தீர்வுசெய்வதற்கான திறனையும் வளர்த்து கொள்க http://trouble-maker.sourceforge.net/doc.html/என்ற தளம் இதனை எவ்வாறு நிறுவி செயல்படுத்துவது என்ற ஆலோசனையை நமக்கு வழங்குகின்றது.3.1

ஐவெரிலாக் எனும் போலிசெய்கருவி(simulator)

மின்னனு பொறியாளரா் ஒருவர்  ஒருங்கிணைந்த மின்சுற்றில் ஆயிரகணக்கான ட்ரான்ஸிஸ்டர்கள் ஒரேயொரு ஒற்றையான சிப்புக்குள் அமைந்திடுமாறு உருவாக்கிடும்போது நடைமுறையில் அதன் செயல் எவ்வாறு இருக்கும் என அறி்ந்து கொள்வதற்காக வன்பொருள் விவரமொழி(Hardware Descripting Language (HDL)) என்பது பயன்படுத்தபடுகின்றது .அதுவும் போதுமானதாக இல்லாதபோது கூடுதலாக தருக்க ஒத்திசைவு கருவியும்(logic synthesis tool  சேர்ந்தால் மட்டுமே மிகச்சரியாக அறிந்துகொள்ளமுடியும் என்ற தற்போதைய நிலையில் ஐவெரிலாக்  எனும் போலிசெய்கருவி(simulator)  மிகசிறந்த மாற்றாக அமைகின்றது அதாவது முதலில் மின்சுற்று எவ்வாறு இருக்கவேண்டும் என வடிவமைப்பு செய்திடவேண்டும் அதன்பின் அதன் பின்புலம், அதன் கட்டமைவு எவ்வாற அமையவேண்டும் என கருத்தில் கொண்டு உருவாக்கிட வேண்டும்

2.1

  இவைகளை உருவாக்கும் செயலை சாதாரண மென்பொருள் உருவாக்குவதை போன்ற பணியன்று என்பதை மனதில் கொள்க  வன்பொருள் எவ்வளவு இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும் அவைகளுக்கிடையேயான சமிக்சைகள் எவ்வளவு நேரத்தில் எதைசார்ந்து எந்த வரிசையில் அமையவேண்டும் என்பன போன்ற  செய்திகளை கருத்தில் கொண்டு இந்த   HDL அமைகின்றது  இதனை தொடர்ந்து தற்போது மிகைவேக ஒருங்கிணைந்த மின்சுற்றுவன்பொருள் விவரமொழியாக நிரலாக்க மொழியாக தருக்க மின்சுற்றினை விவரிக்க (Very High Speed Integrated Circuit Hardware Description Language(VHDL) வளர்ந்துவருகின்றது. அவ்வாறான சூழலை கையாள வந்ததுதான் இந்த ஐவெரிலாக் எனும் போலிசெய்கருவியாகும்(simulator)  .இது விண்டோ லினக்ஸ், மேக் போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது.  இது ஒரு ஜிஎன்யூ  பொதுஅனுமதி பெற்ற திறமூல கருவியாகும் . இதனை http://www.iverilog.com/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது http://www.iveilog.com, என்ற இணைய பக்கத்திற்கு சென்று நேரடியாக பயன்படுத்தி கொள்ளமுடியும்   அதுமட்டுமின்றி எனக்கு சிமொழியில் மட்டுமே நிரல்தொடர் எழுதி பழக்கம்  மற்ற மொழிகளில் பழக்கமில்லை என தடுமாறிடும்போது கவலையே படவேண்டாம்  http://www.c-to-verilog.com  என்ற இணைய பக்கத்திற்கு சென்று சிமொழியில் நாம் எழுதிய நிரலாக்கத்தை VHDL இக்கு தேவையானவாறு மாற்றியமைத்து கொள்ளமுடியும்

2.2

ஆண்ட்ராய்டு தளத்தில் செயல்படும் பயன்பாடுகளை பற்றி அறிந்துகொள்வோம்

1.1ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் தளத்தில் இணைய உலாவியாக டால்பின் (Dolphin)எனும் பயன்பாடு பேருதவியாக இருக்கின்றது இந்த  டால்பின் (Dolphin)எனும் இணைய உலாவியானது மிகத்திறனுடனும் மிக வேகமாகவும் செயல்படுகின்றது.இதன்மூலம் இணையத்தில் நாம்விரும்பும் பக்கத்தை அந்த பக்கத்தின் பெயரை தட்டச்சு செய்யாமல் நம்முடைய குரலொலி மூலமாகவே தேடிபிடித்து திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது அதுமட்டுமின்றி புதிய தாவியின் திரையை  திறக்க செய்தல், திறந்த தாவியின் திரையை மூடச்செய்தல் போன்ற பணிகளை கூட  நம்முடைய குரலொலி மூலம் செயல்படுமாறு செய்யமுடியும். அவ்வாறு குரலொலியெல்லாம் வேண்டாம்  எனில் நம்முடைய கைவிரல்களினால் தொடுதிரை வசதியை பயன்படுத்தி நாம் விரும்பியவாறு இணையத்தில் தேடுதல் , புதிய தாவியின் திரையை  திறக்க செய்தல், திறந்த தாவியின் திரையை மூடச்செய்தல் போன்ற பணிகளை செயல்படுத்திடமுடியும். மேலும் ஃபயர் ஃபாக்ஸ் ,குரோம், ஆப்ரா, இண்டெர்நெட்எக்ஸ்ப்ளோரர் என்பன போன்ற இணைய உலாவிபோன்றே இந்த டால்பின் இணைய உலாவியின் திரைதோற்றம் அமைந்துள்ளது.   அதுமட்டுமின்றி ட்விட்டர் ,ஃபஸ்புக்,அமோஸான், யூட்யூப், விக்கி ஆகிய இணைய பக்கங்களின் தகவல்களையும் உடனடியாக இதன்மூலம் பெறமுடியும் .

1.2  ரைட்டர் ,ஸ்பிரட்ஸீட் என்பன போன்ற அலுவலக பயன்பாடுகளுக்காக குயிக்கோ ஆஃபிஸ் (quickooffice) எனும் பயன்பாடு இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படுகின்றது  இதன்மூலம் எம்எஸ் அலுவலகபயன்பாட்டு கோப்புகளான வேர்டு ,எக்செல், பவர்பாயின்ட் போன்றவைகளை உருவாக்கிடவும் கூடுதலாக ப்பிடிஎஃப் கோப்புகளை திறந்து படிக்கவும் செய்கின்றது. கிங்ஸ்ஸாப்ட் ஆஃபிஸ்(kingsoft office) ஆலிவ் ஆஃபிஸ்(Olive Office) ஆகிய அலுவலக பயன்பாடுகள் கூட இதில் தயாராக உள்ளன இவைகளின் மூலம் எந்தவகை அலுவலக கோப்பாக இருந்தாலும் அதனை  திறந்து கையாண்டு சேமித்திடும் திறனை நமக்கு வழங்குகின்றது.

1.3  குறிப்பெழுதுதல், செய்யவேண்டிய பணிகளை பட்டியலிடுதல்  கோப்புகளை இணைத்து அனுப்புதல், குறிப்பிட்ட நேரத்தில் நாம் செய்யவேண்டிய பணிகளை  நினைவூட்டுதல் என்பனபோன்ற என்னற்ற செயல்களை வகைபடுத்தி  பட்டியலிட்டு செயல்படுத்திட வொண்டர் லிஸ்ட்(wunder list) எனும் பயன்பாடு  உதவுகின்றது

1.4 வெளியிட பணிக்காக அலுவலகத்தை விட்டு வேறுஎங்கோ வெகுதூரத்திற்கு நாம் சென்றிருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபருடன் நம்முடைய அலுவலகத்தில் நம்மால் கலந்துரையாட முடியவில்லையே என கவலைபடாமல் நேரடியாகத்தான் கலந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமின்றி இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்கைப் (Skype)எனும் பயன்பாட்டின் உதவியுடன்  நேருக்குநேர்  கலந்துரையாடல் செய்து முக்கிய கூட்டங்களை நடத்தி அதன்மூலம் அன்றாட பணிகளை செயல்படுத்திட    தொய்வில்லாமல் செயல்படுத்தமுடியும்

1.5 இதுமட்டுமின்றி மிககுழப்பமான மனநிலை அல்லது மிகசிரமமான பணியை செய்துமுடித்தவுடன் மனதை ஆற்றுபடுத்தி ஜார்விஸ்(jarvis) எனும் செயற்கை நினைவக பயன்பாட்டினை கொண்டு  சிரிப்புகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குகள் என்பன போன்றவை நம்முடைய மனதை திசைதிருப்ப உதவுகின்றன

1.6 k-9 mail  என்பது நம்முடைய ஜிமெயில் யாகூமெயில் ,ரீடிஃப் மெயில் போன்ற மின்னஞ்சல்களை கையாள பயன்படும் எம்எஸ் அவுட்லுக் போன்று இது செயல்படுகின்றது.இவ்வாறான பயன்பாடுகளின்வாயிலாக ஸ்மார்ட் போன்  டேப்லெட் ஆகியவை நம்முடைய மடிக்கணினிக்கு மாற்றாக அமைகின்றது

தரவுகளை சேமித்து வைப்பதற்கு உதவிடும் ஓப்பன் ஃபைலர் எனும் தளம்

தரவுகளை சேமித்து வைப்பதற்கு தற்போது நாம் பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து பயன்படுத்தி வருகின்றோம் அவ்வாறான வழிமுறைகளில் Network attached Storage என்பதை சுருக்கமாக NAS என அழைக்கபடும் தரவுகளின் வழிமுறையும் ஒன்றாகும் இந்த வழிமுறையில் Openfiler என்ற திறமூல தேக்கிவைக்கும் நிருவாக இயக்கமுறைமையானது மிகச்சிறந்ததாக விளங்குகின்றது   இது ஒரு பொதுஅனுமதிபெற்ற i386/AMD64ஆகிய தளங்களில் இயங்கும் திறன்கொண்ட Xen,VMware,QEMU ஆகிய சூழலிலும் செயல்திறன்மிக்கதாக உள்ளது  இதுX86_64 என்ற கட்டமைப்பில் நிறுவுவதற்கு தேவையான iSO  கோப்ப்பாகவும் பதிப்பு எண் 2.3 ஆகவும் http://www.openfiler.com/community/download/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்வதற்கு தயாராக உள்ளது . இது லினக்ஸ் 2.6 கெர்னலை  அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது இது.SATA,SAS,SCI FC ஆகிய சாதனங்களுடன் இணைந்து செயல்படுமாறும்  iSCSI,AOE,FCOEஆகிய சாதனங்களை சார்ந்து இயங்கிடுமாறு திறன் கொண்டதாக உள்ளது மேலும் இது   RAID0 முதல் RAID6 மற்றும் RAID 10  ஆகிய தரவுகளை தேக்கும் வழிமுறைகளை  அதரிக்கின்றது Point in Time Copy Volumeஎன்ற கருத்தமைவிற்கேற்ப இயக்கநேரத்தில் தனக்கு தேவையான காலி நினைவகத்தை தானாகவே ஒதுக்கீடு செய்துகொள்கின்றது மேலும் இது XFX, ext3,JFS, ஆகிய கோப்பு அமைவுகளை ஆதரிக்கின்றது  இது செயல்பட  64 பிட்  அளவு கொண்ட 1.6 கிலோகர்ஸ் திறன் கொண்ட செயலியும்,512 எம்பி ரேமும் 10 ஜிபி காலி நினைவகம் கொண்ட வன்தட்டும்  தேவையாகும் இதனை எவ்வாறு நிறுவி செயல்படுத்துவதுஎன மேலும்  அறிந்து கொள்வதற்கு http://www.openfiler.com/learn/how-to/textbased-installation/  என்ற தளத்திற்கு செல்க

9.1

உரைதொகுப்பினை மிகஎளிதாக மின்நூலாக உருமாற்றம் செய்யலாம்

ஒரு உரைதொகுப்பினை மின்நூலாக  உருமாற்றம் செய்வதற்கு 1.LibreOffice Writer, 2. லிபர் ஆஃபிஸினுடைய கூடுதல் வசதியான Writer2ePub plugin ,3..epub reader ( FBReader அல்லது Calibre என்பன போன்றவை) ஆகிய மூன்றும் தேவையானவையாகும்

 8.1

முதலில் மின்நூலாக மாற்ற விரும்பும் உரைத்தொகுப்பை லிபர் ஆஃபிஸில் திறந்துகொண்டு F11 என்ற செயலி விசையை அழுத்துக உடன் படத்திலுள்ளவாறு விரியும்  . Styles and Formatting எனும் பலகத்தின் மூலம்  பகுதிகளின் தலைப்பை  Heading 1. என்றும் துனைத்தலைப்புகளை Heading 2 என்றும் உட்தலைப்புகளை Heading 3 என்றும்  வகைபடுத்தி ஒதுக்கீடு செய்து கொள்க பொதுவாக Heading 9 வரை லிபர் ஆஃபிஸில் வகைபடுத்தமுடியும் ஆயினும் Heading 3 வரை மட்டுமே மின்நூலிற்கு அங்கீகரிக்குமாதலால் அதுவரைமட்டும் உள்ளடக்கங்களை வகைபடுத்திகொள்க.மிகுதி உள்ளடக்கங்களை  Body text என வகைபடுத்தி கொள்க தேவையற்ற இடைவெளி பத்தி இடைவெளி போன்றவைகளை Monospace text என்றவாறும் முக்கிய குறியீடுகளை Extended quotations என்றவாறும்  வகைபடுத்தி வைத்திடுக மிகச்சரியாக ஒரேமாதிரியான எழுத்துருக்கள் உள்ளதாவென சரிபார்த்து கொள்க வேறு ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அவைகளையும் செய்து கொள்க   அதன்பின்னர் Ctrl+F10  என்றவாறு சுருக்குவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் line break,  carriage returnபோன்றவைகளால் ஏற்படும்  nonprinting characters  திரையில் தோன்றிடும்  அவைகளையும் நீக்கம் செய்துகொள்க  பின்னர் http://extensions.services.openoffice.org/en/project/Writer2ePub   என்ற இணைய பக்கத்திலிருந்து  Writer2ePub எனும்  லிபர் ஆஃபிஸின் கூடுதல் வசதியை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. உடன் இந்த கூடுதல் வசதியானது தனியானதொரு கருவிபட்டையாக லிபர் ஆஃபிஸின் திரையில் தேன்றும்  அதிலுள்ள மூன்று பொத்தான்களில் நீலவண்ண பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக   உடன் மின்நூலிற்கு தேவையான ஐ சரிசெய்து அமைத்து கொள்கின்றது அதனோடு  An author’s name The book’s title The book’s language போன்றவைகளின் விவரங்களையும்  நம்மிடம் கேட்டு அதனையும் தேவையான இடத்தில் அமைத்துகொள்கின்றது  அதனோடு கூடவே முகப்பு அட்டையை  வழங்கினால் அல்லது இயல்நிலையில் கோப்பின் முதல் பக்கத்தில்உள்ள உருவபடத்தை மின்நூலிற்கு முகப்பு அட்டையாக மாற்றி யமைத்துகொள்கின்றது அனைத்தும் திருப்தியாக உள்ளது எனில் OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக பச்சைவண்ண பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய உரைஆவணமானது மின்நூலாக உருமாற்றமாகி நாம் விரும்பும் கோப்பகத்தில் சென்றமர்ந்துவிடும்  FBReader, EPUBReader ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இந்த மின்நூலை திறந்து படிக்கமுடியும் மற்றவர்களுக்கும் இம்மின்நூலை பகிர்ந்து கொள்ளமுடியும்

Webinpaint எனும் திறமூல மென்பொருள் சேவை

செலவுஅதிகம் பிடிக்கும் அடோப் போட்டோ ஷாப் என்ற பயன்பாட்டினுடைய Content-Aware எனும் வாய்ப்பின் வாயிலாக படங்களில் உள்ள தேவையற்ற water marks ,date stamps ,objects ,புள்ளிகள்,கோடுகள் ,உருவங்கள் போன்றவைகளை நீக்கம் செய்து  நன்கு மெருகூட்டி பார்ப்பவர்களை கவருமாறு செய்திடுவோம் அதற்கு பதிலாக  இணையத்தின் மூலம் நேரடியாக பயன்படுத்திகொள்ள தயாராக இருக்கும் Webinpaint  எனும் திறமூல மென்பொருள் சேவையை பயன்படுத்தி கொள்க

107.7

107.1

முதல் படத்தில் நடுவிலுள்ள சிறு பந்தினை  இந்த பயன்பாட்டின் Inpaintஎனும் கருவி பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதனை நீக்கம் செய்து மூன்றாவது படத்திலுள்ளவாறு வழக்கமான படம்போன்று செய்து ஒருசில நிமிடநேரத்தில் சேமித்திடலாம்

அவ்வாறே பழைய புகை படத்திலுள்ள scratches, spots , tears  போன்றவைகளை கூட இதனுடைய Inpaintஎனும் பொத்தானின் உதவியால்  நீக்கம் செய்து ஆங்காங்கு ஒருசில ஒப்பனைகளை செய்து புதிய படமாக உருமாற்றிடமுடியும் ஏன் உருவபடத்தின் முகத்தில் உள்ள வேனல் கட்டிகள் தோலின்மீதுள்ள தழும்புகள் போன்றவைகளை  இதனுடைய Marker அல்லது Magic Wantஎனும் கருவியின் உதவியால்  நீக்கம் செய்தபின் ஒருசில ஒப்பனைகளை செய்து புதிய படமாக உருமாற்றிடமுடியும்

107.7.2

பொதுவான ஆலோசனைகள்

  6.1  தவறுதலாக நீக்கம் செய்த கோப்பினை மீண்டும் கொண்டுவர CTRL + Z ஆகிய சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துக  குரோம் அல்லது ஃபயர் ஃபாக்ஸ் எனில் CTRL + SHIFT + T ஆகிய சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துக

6.2  நாம் நடப்பில் பயன்படுத்தும் பயன்பாட்டினை நிறுத்தம் செய்து மூடிவிட மேலே வலதுபுறமூலையில் உள்ள X என்ற பொத்தானை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குவதைவிட  CTRL + W ஆகிய சுருக்கு விசைகளை அல்லது ALT + F4 ஆகிய சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துக

6.3 இணைய உலாவலின் போது குறிப்பிட்ட  இணைய முகவரியின் முடிவெழுத்துகள் .com என வருவதற்கு CTRL +  Enter என்றவாறும் .net என வருவதற்கு CTRL + Shift + Enter என்றவாறும் சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துக

6.4 உலாவியின் எங்கிருந்தாலும் மிகச்சரியான முகவரிக்கு தாவிச்சென்றிட  CTRL + L என்றவாறு அல்லது  ALT + D   என்றவாறு சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது F6என்ற செயலிவிசையை அழுத்துக

6 .5 நாம் நம்முடைய கணினியில் God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}. என்ற பெயரில் புதியதாக ஒரு கோப்பகத்தை  C இயக்ககத்தில் உருவாக்கி கொண்டவுடன்  ஒரு கட்டுபாட்டு பலகம் போன்ற இதனுடைய உருவபடம் மாறியமையும்  உடன் இதன்மூலம் எந்தவகையான அமைப்பையும் மாற்றியமைக்கமுடியும்

6.6 WinDirStat (Windows Directory Statistics)எனும் கருவியை கொண்டு நம்முடைய கணினியில் பெரிய அளவு உள்ள அல்லது அதிக நினைவக இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டுள்ள தேவையற்ற கோப்பகம்   அல்லது கோப்புகள் எவையென அறிந்து  அவைகளை நீக்கம் செய்துகொண்டால் நம்முடைய கணினியின் செயல்வேகம் அதிகரித்திருப்பதை காணலாம்

6.7  CTRL + Shift + Vஎன்றவாறு சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் நகலெடுத்த இடத்திலுள்ள உரையை மட்டும் தேவையான இடத்தில்  ஒட்டச்செய்திடும் இதன்மூலம் விரைவாக ஒட்டுதல் நடைபெறுவதற்கும் தேவையற்றவை சேர்ந்து  ஒட்டபடுவது தவிர்க்கபடுகின்றது

6.8  நம்முடைய கணினியில் நாம் இல்லாதபோது யாரோவொரு வழிபோக்கன் வந்தமர்ந்து கொண்டு நம்முடைய சமூகவலைதளபக்கமான ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் ஆகியவற்றில் நமக்கு பதிலாக அவருடைய  கருத்துகளை அல்லது செய்திகளை தூவிவிட்டு சென்றுவிடும் அபாய  வாய்ப்பு அதிகமுள்ளது அதனால் நாம்இல்லாதபோது  Windows + L என்றவாறு சுருக்கு விசைகளை சேர்த்து அழுத்தி நம்முடைய கணினியை பூட்டிவிட்டு செல்க பின்னர் கடவுச்சொற்களின் மூலம் நம்முடைய கணினிக்குள் உள்நுழைவுசெய்து வழக்கமான நம்முடைய பணியை ஆற்றிடுக

Previous Older Entries