தவறுதலாக நீக்கம் செய்துவிட்ட கோப்புகளை மீ்டடாக்கம் செய்திட

14

விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினிகளில் நாம் தவறுதலாக ஏதேனும் கோப்புகளை நீக்கம் செய்தவிட்டால் உடன் Recycle Bin எனும் குப்பை கூடையான பகுதிக்கு சென்று அங்குள்ள  நாம் நீக்கம் செய்த கோப்பினை மீட்டாக்கம் செய்துவிடலாம்   ஆனால் இந்த     Recycle Bin எனும் உருவபொத்தானை திரையில் இல்லையெனில் எவ்வாறு தவறுதலாக அழித்தகோப்பினை மீட்டாக்கம் செய்வது  Recycle Bin எனும் உருவபொத்தானை திரையில் தோன்றிட செய்திடவேண்டும் இதற்காக முதலில் இந்த  விண்டோதிரையின் கீழே இடதுபுறமூலையில் உள்ள தொடக்க பட்டியின் வாயிலாக கட்டுபாட்டு பலகத்திற்கு செல்க அதில்  Personalizationஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்  விரியும் திரையில்   Change Desktop Iconsஎன்ற வாய்ப்பினை  தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  Desktop Icons settings எனும் உரையாடல் பெட்டியில் Recycle Bin எனும் வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து இயலுமை செய்து கொண்டு முதலில் Apply எனும் பொத்தானையும் Ok எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அமைத்திடுக

விண்டோ10 இயக்கமுறைமைக்கு மாறுவதால் நாம் தற்போது பயன்படுத்திவரும் என்னென்ன வய்ப்புகளை இழக்கநேரிடும்

தற்போது விண்டோ7 இயக்கமுறைமையில் பயன்படுத்திவரும்  Media Center எனும் பயன்பாடு விண்டோ 10 இயக்கமுறைமையில் இல்லை

அவ்வாறே விண்டோ7 இயக்கமுறைமையில் உள்ள Desktop Gadgets எனும் வசதியும் விண்டோ10 இயக்கமுறைமையில் இல்லை

கூடுதலாக ம்முடைய பிள்ளைகள் பொழுதுபோக்கிற்காக  பயன்படுத்திடும் விண்டோ7 இயக்கமுறைமையில் முன்கூட்டியே நிறுவுகை செய்யபட்டு வரும் Solitaire, Minesweeper,  Hearts games ஆகிய பயன்பாடுகள்  விண்டோ10 இயக்க முறைமையில் இல்லை

மேலும் விண்டோ7 இயக்கமுறைமையில் உள்ள யூஎஸ்பி வாயில் வழியாக வெளிப்புற குறுவட்டு நெகிழ்வட்டுகளை பயன்படுத்திகொள்ளும் வசதியும்  விண்டோ10 இயக்கமுறைமையில் இல்லை

அதுமட்டுமல்லாது விண்டோ7 இயக்கமுறைமையில் உள்ள Windows Live Essentials, உறுப்பான OneDrive app  எனும் பயன்பாடுகூட விண்டோ10 இயக்கமுறைமையில் இல்லை

இதுமட்டுமின்றி விண்டோ7 இயக்கமுறைமையில் உள்ஒளிஒலி படங்களை பார்த்து மகிழ்வதற்கான  DVD Playback வசதியும் விண்டோ10 இயக்கமுறைமையில் இல்லை

கணினியின் நினைவக அட்டையை பற்றி அறிந்துகொள்வோம்

தற்போது நாம் அனைவரும் இருபரிமான, முப்பரிமான உருவபட கோப்புகளை நம்முடைய கணினியில் கையாளுகின்றோம் அதனால் மிகச்சரியான கணினியின் நினைவக அட்டையை பயன்படுத்தினால் நம்முடைய பணி எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும் இந்த பணி்க்காக பொருத்தமற்ற அட்டையெனில் கணினியின் செயல்வேகம் மிகமெதுவாகிவிடும் இந்த உருவபடங்களை கையாளும் கணினியின் அட்டையானது   நம்முடைய படப்பிடிப்பு கருவி கோப்பு பரிமாற்றவேகம் தேக்கும் திறன் ஆகிய காரணிகளின் அடிப்படையில் கணினியின் செயல்வேகத்தை கட்டுபடுத்திடுகின்றது   அதிலும் விலைகுறைவான மலிவுவிலை நினைவக அட்டையானது நம்பகத்தன்மையற்ற மிகமெதுவாக செயல்படும் திறனும் மிககுறைந்தஅளவே தேக்கிடும் திறனையும் கொண்டதாக அமைகின்றது .நூற்றுகணக்கான உற்பத்தியாளர்கள் இந்த கணினியின் நினைவக அட்டையை   SDஅட்டையின் செந்தரத்திற்கு உருவாக்கி மேம்படுத்தி வெளியீடுகின்றனர் அவற்றுள் Secure Digital (SD) card , Micro SD card ,Eye-fi card ,Compact flash card ஆகிய நான்கும் மிகபிரபலமானவையாகும் இவைகளை நம்முடைய படப்பிடிப்பு கருவியில் பொருத்தி படப்பிடிப்பு செய்தபின் கணினியில் பொருத்தி நாம் விரும்பியவாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் இந்த SDஅட்டைகள் பெரும்பாலான டிஜிட்டல் படப்பிடிப்பு கருவிகளில் பயன்படுத்தி கொள்ள படுகின்றது தொடர்ந்து இந்த SDஅட்டைகளை 64ஜிபிதிறன்கொண்ட SDHC என சுருக்கமாக அழைக்கபடும் SD (‘High Capacity’) என்றும் ,2 டெராபைட் திறன்கொண்ட SDXC என சுருக்கமாக அழைக்கபடும் SD (‘Xtra capacity’)என்றும் இரண்டு வகையாக வகைபடுத்தலாம்

இதுமட்டுமலலாது தற்போது 2 ஜிபி திறன்கொண்ட மைக்ரோ எஸ்டி கார்டும் மிகபிரபலமானவையாகும்

இந்த அட்டைகளில் 32 GIGS , Class 10 rating எனகுறிப்பிட்டிருப்ப து எதற்கு என சிலருக்கு கேள்வியெழலாம்   இந்த அட்டைகளிலிருந்து கணினிக்கும் கணினியிலிருந்து அட்டைக்கும் கோப்புகளை பரிமாற்றம் செய்திடும் வேகத்தின் அளவை பொறுத்து இந்த ரேட்டிங்கை நிர்ணயம் செய்வார்கள். இந்த அட்டைகளை அதிக ரேட்டிங் இருந்தால் கோப்புகளின் பரிமாற்றவேகம் விரைவானதாக இருக்கும் என்ற செய்தியை நினைவில் கொள்க

தேவையற்ற குப்பையான கோப்புகளை நீக்கம் செய்து காலிநினைவகத்தை அதிகரித்திட

பின்வரும் மென்பொருட்கள் நம்முடைய கணினியிலுள்ள தேவையற்ற உரைகோப்புகள், ,ஒலிஒளிபடகோப்புகள்,,இசைகோப்புகள் என்பன போன்ற குப்பையான கோப்புகளையும் நகல்கோப்புகளையும் அறவே நீக்கம் செய்வதில் பேருதவியாக உள்ளன.

உருவப்பட நகல்களை கண்டுபிடிப்பான் ( Duplicate Photo Finder)எனும் மென்பொருள் இதனை கொண்டு மிகவிரைவாக நம்முடைய கணினியைவருடதல் செய்து அனைத்து உருவபட நகல்களையும் தேடிகண்டுபிடித்திடும் .இதுமிகமுன்னேறிய அல்காரித தேடிடும் தன்மைகொண்டது  அதனால் கணினியில் உருவபட நகல்களை தேடிகண்டுபிடித்திடும் பணி மிக எளிதாகவும் திறனுடனும் செயல்படுத்திட முடிகின்றது இந்த மென்பொருளானது வாடிக்கையாளர் விரும்பியவாறான அளவுகோலையும் ஒப்பீடையும் கொண்டு தேடிகண்டுபிடித்திடுமாறு மாற்றி யமைத்துகொள்ள அனுமதிக்கின்றது இது JPEG,TIFF,BMP,PNG,GIF  ஆகிய வடிவமைப்பு உருவபடங்களை தேடிகண்டு பிடித்திடுகின்றது மேலும்  கணினியில் ஒவ்வொரு பைட் ஆக தேடிகண்டுபிடித்திடும் வழிமுறையின் துனைகொண்டு மெதுவாக ஆனால் மிகதுல்லியமாக இந்த பணியை செய்திடுகின்றது இதனை http://www.easyduplicatefinder.com/duplicate-photo-finder.html  எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்க

இசைநகல்களை கண்டுபிடிப்பான்(Duplicate MP3 Finder)எனும் மென்பொருள் இதனை கொண்டு   அதே பெயரில்அல்லது அதே பணிபியல்புகளில் உள்ள இசைநகல்களை மிகஎளிதாக தேடிகண்டு பிடித்துவிடலாம்  MP3, WAV, AIFF, AAC,என்பனபோன்ற விரிவாக்க வடிவமைப்பு கொண்ட இசைகோப்புகளை இது மிகசுலபமாக தேடிகண்டு பிடித்திடுகின்றது  மேலும் CSV or HTML  ஆகிய பதிவேற்ற வாய்ப்பு கோப்புகளையும் தேடிகண்டுபிடித்திடுகின்றது இதனை  http://www.easyduplicatefinder.com/mp3-duplicate-finder.html எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி  கொள்க

நகல்கோப்புகளை கண்டுபிடிப்பான் Duplicate File Finderஎனும் மென்பொருள் இதனை கொண்டு மேலேகூறிய வகையல்லாத Adobe Acrobat files, compressed and other archive files,MS Office files,Outlook PST files, photo files, video files,Web files என்பனபோன்ற மற்றஅனைத்து வகையான கோப்புகளையும் தேடிகண்டுபிடித்திடலாம்  இதனை  http://www.easyduplicatefinder.com/duplicatefilecleaner.html எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்க

இந்த மூன்றுவகையான கருவிகளை கொண்டு நம்முடைய கணினியின் மதிப்புமிக்க காலி நினைவகத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நகல்கோப்புகளை தேடிகண்டுபிடித்து நீக்கம் செய்து கொள்க

ஜாவா தொகுப்புகளைகொண்டு தரவுகளை கட்டமைவு செய்வது எளிதானசெயலகும்

தற்போதை கணினியின் இணைய இணைப்பினால் எங்கும் எதிலும் தரவுகளே அடிப்படையாக உள்ளன உதாரணமாக எந்தவொரு இணைய தள பக்கத்திற்கும் உள்நுழைவு செய்திடவேண்டுமென விரும்பினாலும் அதற்காக பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகிய அடிப்படையான தரவுகள் தேவையாகும்  கூகுள் அமோஸான் , ஃபிளிப்கார்ட், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற இணையதளங்கள் அனைத்தும் பேரளவு தரவுகளின் கட்டமைவுகளிலேயே செயல்படுகின்றன அவ்வாறான தரவுகள் பின்வரும் வகைகளான கட்டமைவில் மட்டுமே  பராமரிக்கபடுகின்றன

1.Arrays இந்தவகையில் நிலையான அளவு தரவுகள் வரிசையாகIndexஐ பயன்படுத்தி தொகுக்கபடுகினறது

2.Stack இந்த வகையில் LIFO என சுருக்கமாக Last in First outஎன்ற  வழிமுறைபடி தரவுகள் கடைசியாக தொகுக்கபட்டது முதலில் முதலில் தொகுக்கபட்டது கடைசியில் என்பதன் அடிப்படையில் தொகுக்கபடுகின்றது

3 Queue இந்த வகையில்FIFOஎன சுருக்கமாக L First in First outஎன்ற  வழிமுறைபடி தரவுகள் முதலில்  தொகுக்கபட்டது முதலில் கடைசியாக தொகுக்கபட்டது கடைசி என்பதன் அடிப்படையில் தொகுக்கபடுகின்றது

4 Tree இந்த வகையில் முதலில் ஒருமரத்தில் முதலில் வேர் ,பின்னர் அடிமரம், அதன்பின்னர் கிளை ,பிறகு இறுதியாக இலை என்பதைபோன்று தொகுதியான முனைமங்கள் தொகுப்புகளாக தேக்கிவைத்து பராமரிக்கபடுகின்றன

5Array List Classஇயக்கநேர தரவுகள் இந்தவகையில் பராமரிக்கபடுகின்றது

6LinkedListClass இந்த வகையில் List , Stack ,Queue ஆகிய மூன்றுவகையாக கலந்து தரவுகள் பராமரிக்கபடுகின்றன மேலும் விவரங்களுக்கு http://docs.oracle.com/javase/tutorial/collections/intra/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

அப்பாச்சியின் கேஸேன்டிராஎனும் தரவுதளம்

8

NoSQL என சுருக்கமாக அழைக்கபடும் Not only SQL எனும் தரவுதளமானது தொடர்பு தரவுதளங்களில் பயன்படுத்தபடும் வழிமுறைக்கு வித்தியாசமாக தரவுகளை தேக்கிவைத்திடவும் மீட்டாக்கம் செய்வதற்கும்உதவும் ஒருஅடிப்படை  தொழில்நுடபமாகும் எனவிக்கிபீடியா இதனை பற்றிய விவரங்களாக கூறுகின்றது இந்த   NoSQL Database ஆனது Key-valye Database, Document Database, Column oriented Database, Graph Databse ஆகிய நான்கு முக்கிய வகையை அடிப்படையாக கொண்டதாகும் மேலும் Apache Cassandraஎன்பது கட்டற்றNoSQL Database ஆகும்   சேவையாளர்களுக்கு இடையேயும் , தரவுமையங்களுக்கிடையேயும், மேககணினிகளுக்கிடையேயும் பேரளவு தரவுகளை கையாளுவதற்காகவே இந்த அப்பாச்சியின் கேஸேன்டிரா உருவாக்கபட்டதாகும் . இந்த அப்பாச்சியின் கேஸேன்டிராவின் அடிப்படையிலேயே தற்போது நாம் பயன்படுத்திவரும் ட்விட்டர் ,கிளவுட்கிக், சிஸ்காம், ரெட்டிட் போன்ற இணைய தளங்கள் செயல்படுகின்றன என்ற செய்தியை மனதில் கொள்க. இது பல்வேறு முனைமங்களை வலைபின்னல் முழுக்க கொண்டுள்ளன ஆயினும் தலைமை முனைமம் என்று எதுவும்  இதில் இல்லை .இதில் அனைத்து முனைமங்களும் ஒருசிலநேரங்களில் சேவை முனைமமாகவும் மற்றொரு நேரத்தில் தலைமை முனைமமாகவும் வாடிக்கையாளர் கோரும் செயல்களை உடனுக்குடன் நிறைவேற்றுகின்றன

இது நீண்ட நிலைத்த தன்மை கொண்டது மேலும் எந்தவொரு தரவிற்கும் நகல்தரவை கொண்டது தானாகவே மறுஆக்கம் செய்துகொள்கின்ற தன்மைகொண்டது  என்பனபோன்ற எண்ணற்ற பயன்களை இது அடிப்படையாக கொண்டது அதிக அளவு தரவுகளை மிகஅதிவேகமாக செயல்படுத்திட முனையும்போதும்  நிலைத்த தரவுகளை கொண்டதொரு பணிசெய்வதற்கும் புவியியல் சார்ந்தஅனைத்து பகுதிகளிலும் ஒரேசமயத்தில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்  என்ற நிலையிலும்இந்த  அப்பாச்சியின் கேஸேன்டிரா பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு http://planetcassandra.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

எஸ்கியூஎல்லில் பயன்படுத்தபடும் தரவுதளத்தினுடைய தரவுகளின் வகைகளின் பயன்பாடு யாது?

 எஸ்கியூஎல்என்பது  தொடர்பு தரவுதளமேலாண்மைக்கானதொரு செந்தர மொழியாகும்  மைஎஸ்கியூஎல், எம்எஸ் அக்சஸ்,ஆரக்கிள் டேட்டாபேஸ், சைபேஸ்,போஸ்ட்கிரஸ் போன்றவைகளின் சேவையாளர்கள்  அனைவரும் இந்த எஸ்கியூஎல்எனும் செந்தர மொழியையே தங்களின் அன்றாட பணிக்கு அடிப்படையாக பயன்படுத்தி கொள்கின்றனர் இந்த எஷ்கியூஎல்லில் பல்வேறு வகையான தரவுகளின்  வகைகள் பயன்படுத்தி கொள்ளபடுகின்றன அவற்றூள் மிகமுக்கியமாக  Decimal, Float4,Int2, Numeric, Serial ஆகிய எண்வகை , Char,Varcahr, Text, Char(n)ஆகிய எழுத்துவகை, Timestamp,Interval, Date, Time ஆகிய நாள்அல்லது நேரவகை , trueஅல்லது False, yesஅல்லது noஆகிய பூலியன் வகை , Polygon,Circle, Path, Line, Point, Lseg ,Box ஆகிய ஜியோமெட்ரிக் வகை   என்பன போன்ற  தரவுகளின் வகைகள் இதில் பயன்படுத்தி கொள்ளபடுகின்றன எஸ்கியூஎல்எனும் செந்தர மொழியில் பராமரிக்கபடும் இவ்வாறான தரவுகளின் அடிப்படையில் மட்டுமே மைஎஸ்கியூஎல், எம்எஸ் அக்சஸ்,ஆரக்கிள் டேட்டாபேஸ், சைபேஸ்,போஸ்ட்கிரஸ் போன்ற தரவுதளங்களில் தரவுகள் கையாளபடுகின்றன என்ற செய்தியை மனதில் கொள்க  மேலும்விவரங்களுக்கு http://www.wql.tutorial.net/ எனும் வலைதளத்திற்கு செல்க.

1

Previous Older Entries