Emacsஎனும் ஒரே பயன்பாட்டினை கொண்டு நம்முடைய தேவைக்கான அனைத்து செயல்களையும் செயல்படுத்திட முடியும்

கோப்பினை திருத்துதல் ,இணையத்தில் உலாவருதல் , மின்னஞ்சல்களை கையாளுதல், உருவப்படங்களை பதிப்பித்தல் ,இசையைகேட்டல் போன்ற செயல் ஒவ்வொன்றிற்கும் ஒரு பயன்பாடு என நம்முடைய தேவைகள் ஒவ்வொன்றிற்குமென ஏராளமான அளவில் பயன்பாடுகளின் உருவபொத்தான்களை நம்முடைய கணினியின் திரையில் நிரப்பி வைத்திருப்போம் . அவ்வாறான அனைத்து செயல்களுக்கும் Emacsஎனும் ஒரே பயன்பாட்டினை உருவபொத்தானை கொண்டு அவ்வாறான அனைத்து செயல்களையும் செயல்படுத்திட முடியும். இதுஒரு திறமூல பயன்பாடாகும்

இதில் உரைபதிப்பு செயல்களை மிகசுலபமாக செயல்படுத்திகொள்ளமுடியும் $emacsFileName.extஎன்றவாறான கட்டளை வரியை செயல்படுத்தி எந்தவகை கோப்பாக இருந்தாலும் இவ்வாறான பதிப்பு செயலினை செயல்படுத்திகொள்ளமுடியும்.

இதில் பதிப்பிக்கும் அல்லது திருத்தி கொண்டிருக்கும் அனைத்து கோப்புகளையும் தானாகவே பிற்காப்பு செய்துகொள்கின்றது (setq backup-directory-alist((“.” .” ~/.saves)))என்ற கட்டளைவரிமூலம் ஒரு கோப்பகத்தில் இவ்வாறான பிற்காப்பு கோப்பகளை சேமித்து கொள்ளலாம் .

பயனாளர் ஒருவர் ஜாவாஸ்கிரிப்ட் தவிர்த்து இணையஉலாவருவதற்கு இந்த இமேக்ஸ் உதவுகின்றது அதுமட்டுமின்றி ஜிமெயில் போன்ற மின்னஞ்சல்களையும் இந்த இமேக்ஸ் வாயிலாக கையாளமுடியும்

M-x image-diredஎன்ற கட்டளைவரி வாயிலாக உருவப்படங்களை திருத்துதல் செயலிற்காக கையாளமுடியும் தினமும் செய்திடும் பணிக்கான ToDo listகுறிப்பெழுதவதற்கானnotes keeping ஆகிய செயல்மட்டுமல்லாது ஆய்வுகட்டுரையை பதிப்பிக்கும் LaTeXபோன்றே ஆய்வுகட்டுரைகளையும் இதில் ஒருங்கிணைத்து உருவாக்குவதுமட்டுமல்லாது அவைகளை ப்பிடிஎஃப் வடிவமைப்பில் வெளியிடமுடியும் . இதில் மிகமுக்கிய செய்திகளை இரகசியமாக கடவுச்சொற்களுடன் பாதுகாத்து வைத்திடகூட முடியும்

இசைகளை இசைத்து மகிழவும் இந்த இமேக்ஸ் உதவுகின்றது அதுமட்டுமல்லாது தற்போதைய சமூகவலைதளமான முகநூல் போன்றவைகளை கூட இதன்மூலம் அனுகிடமுடியும் மேலும் M-x doctorஎன்ற கட்டளைவரிமூலம் மருத்துவ ஆலோசனைகளையும், M-x mpuzஎன்ற கட்டளைவரிமூலம் புதிர்களையும், M-x pongஎன்ற கட்டளைவரிமூலம் கணினி விளையாட்டுகளையும் இந்த இமேக்ஸில் பெறமுடியும் மொத்தத்தில் ஒரே கல்லில் பலமாங்காய் என்ற பழமொழியின்படி இது அனைத்து பயன்பாடுகளையும் இயக்கவல்ல தொரு இயக்கமுறைமை போன்று விளங்குகின்றது இதனைபற்றி மேலும் அறிந்துகொள்ளhttp://orgmaode.org/என்ற இணைய பக்கத்திற்கு செல்க.

கூகுள் பயன்பாட்டு இயந்திரம்(Google App Engine (GAE))

கணினியில் பயன்பாடுகளை உருவாக்கி மேம்படுத்துபவர்கள் தங்களால் உருவாக்கபட்ட பயன்பாடுகளை இயக்கி பரிசோதித்து பார்த்திட கூகுள் பயன்பாட்டு இயந்திரம்(Google App Engine (GAE))ஒரு சிறந்த பயிற்சி களமாக விளங்குகின்றது. இதுPublic platform as a serviceஆக விளங்குகின்றது

இந்தGAEஆனது 2008 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கபட்டுள்ளது இது பைத்தான் ஜாவா,கோ,ப்பிஹெச்ப்பி ஆகிய மொழிகளால் உருவாக்கபட்ட பயன்பாடுகளை பரிசோதித்து இயக்கிபார்த்திட அனுமதிக்கின்றது. அதுமட்டுமல்லாது ஜெவிஎம்,குளோஸர்,குரூவி,ஸ்கேலா, ரூபி, போன்ற மொழிகளில் உருவாக்கப்படும் பயன்பாடுகளையும் இதில் இயக்கி பரிசோதித்து பார்த்திடலாம் ஆகமொத்தம் அனைத்து பயன்பாடுகளும் சேர்த்து ஒரு ஜிபி வரை நினைவக இடவசதியை இதில் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏறத்தாழ ஐந்துமில்லியன் பார்வையாளர்கள் மாதமொன்றிற்கு இந்த பகுதிக்கு வந்து செல்வதாக புள்ளிவிவரம் கூறுகின்றது. இதில் http என்பதன்மூலமாக வரும் கோரிக்கை மட்டுமே அனுமதிக்கபடுகின்றது நம்முடைய கோரிக்கை முகவரியானது wwwஎன்பதாக யூஆர்எல் முகவரி தொடங்கவில்லை யெனில் இது ஆதரிக்காது.பைத்தான் மொழியில் உருவாக்கபட்டபயன்பாடுகளெனில்கலப்பற்ற பைத்தான் மொழியில் மட்டும் உருவாக்கபட்டதாக இருக்கவேண்டும் ஜாவா வில் உருவாக்கபட்ட பயன்பாடுகளெனில் ஜெஆர்ஈ செந்தர பதிப்பில் உருவாக்கியிருக்கவேண்டும் குறைந்த பட்சம் கோரிக்கையொன்றிற்கு இது 60 நொடிகள் எடுத்து கொள்கின்றது ஒரு பயன்பாட்டின் Image manipulation,Mail,Memcacheஎன்பனபோன்ற செயல்களையும் இது பயனாளர்களுக்காக உதவுகின்றது இதனுடைய மணற்பெட்டியானது பயனாளர்கள் மிகபாதுகாப்பாக நம்பகதன்மையுள்ள சூழலில் செயல்படுமாறு அனுமதிக்கின்றது.

கணினியின் மென்பொருள் உருவாக்குவதற்கான கணினிமொழிகள்

ஆரம்பத்தில் பேஸிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல் என்பன போன்ற மொழிகள் கணினியை பயன்படுத்துவரில் திறன்மிக்கவர்கள் உபயோகித்து வந்தனர் பின்னர் விசுவல் பேஸிக்,சி, சி++,சி##, ஜாவா என்றாகி பின்னர் கோ,ரூபி லிஸ்ப் பைத்தான் பியர்ல் எனவளர்ந்து தற்போது எர்லாங்க், ஸ்கேலா, குளோஸார்,குரூவி ,ஹேஸ்கல் என்பனபோன்ற மொழிகளாக வானாளாவ வளர்ந்து கொடிகட்டி பறக்கின்றன.

சமீபத்தில் சீலோன் எனும் மொழியை ரெட்ஹேட் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக செய்தியொன்று அறிவிப்பு செய்கின்றது இவ்வாறு நாளொரு மொழியும் பொழுதொரு வண்ணமாக தோன்றி வளர்ந்து வரும் இந்த மொழிகளில் எந்த மொழியினை தெரிவுசெய்து ஐயம்திரிபற கற்றறிந்து பின் நம்முடைய வாழ்வில் பயன்படுத்தி முன்னேறுவது என பெரிய கேள்விக்குறி நம்முன் எழுவது இயல்பானதே

இந்த கணினியின் மொழியை கற்றுக்கொள்வதற்காக நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குவோம் என முதலில் முடிவுசெய்க அதாவது மிகக்குறைந்த நேரம் எனில் மிகஎளிதான ஜாவா ,குரூவி போன்ற மொழிகளை கற்று கொள்க

நம்முடைய பணியின் பிரச்சினையை தீர்வு செய்வதற்காக வேண்டுமெனில் புரோலாக் என்பது வியாபார விதிமுறைகளை கட்டமைத்து காத்திட பயன்படுகின்றது

வித்தியாச மாக செயல்படவேண்டும் சாதிக்கவேண்டும் என்பவர்கள் ஆப்ஜெக்ட்டிவ் சி, சி## , குளோஸார் என்பன போன்ற மொழிகள் பயன்படுகின்றன அதனால் முதலில் நம்முடைய தேவை ,காலஅவகாசம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு அதற்கேற்றதொருமொழியை தெரிவுசெய்து பின் அதனை நன்றாக கற்று அதற்கு பின் அதனை பயன்படுத்தி நம்முடைய வாழ்வில் முன்னேறும் வழியை பின்பற்றிடுக

நம்முடைய செல்லிடத்து பேசிக்கான பயன்பாட்டினை நாமே உருவாக்கிட முடியும்

இணைய தள சேவையை பெறும் பயனாளர் ஒருவர் முன்பெல்லாம் ஏதேனும் ஒரு கணினியை கொண்டும் பின்னர் மடிக்கணினியைகொண்டும் அதன்பின்னர் கைக்கணினியை கொண்டும் தற்போது செல்லிடத்து பேசியை கொண்டும் அச்சவையைஅனுகமுடியும் என்ற நிலையில் இந்த செல்லிடத்து பேசியின் வழி இணைய பக்கத்தை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் மிக சிக்கலான செயலாக உள்ளது ஏனெனில் மிகச்சிறிய திரைக்குள் ஒரு இணைய பக்கத்தின் உள்ளடக்கங்கள் முழுவதையும் அதே தோற்றத்துடனும் செயல்களுடனும் கொண்டுவரவேண்டியுள்ளது மேலும் இதற்கான பயன்பாடுகளையும் அதன் இணைப்பு கருவிகளையும் இந்த செல்லிடத்து பேசியில் நிறுவுகை செய்திடாமல் செயல்படுமாறு செய்திடவேண்டும்.

அதுமட்டுமல்லாது செல்லிடத்து பேசியின் மற்ற பயன்களையும் ,செயல்களையும் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறும் அமைந்திருக்கவேண்டும் . மிகமுக்கியமாக அனைத்து தளங்களிலும் செயல்படுமாறும் இருக்கவேண்டும் இதனோடு தொடர்ந்து இதில் செயல்படும் பயன்பாடுகள் ஏனோதானோவென்றில்லாது மிகமேம்பட்ட சேவையை வழங்குவதாக அமையவேண்டும் என்பனபோன்ற எண்ணற்ற சிக்கல்களுடன் கட்டணமற்றதாக பயனாளர் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளதக்கவகையில் இருக்கவேண்டும் என்பனபோன்ற கட்டுபாடுகளை கடந்து பயனாளர் ஒருவருக்கு கைகொடுக்கவருவதே திறமூலபயன்பாடுகளாகும்

அவைகளுள் jQueryMobileஎன்ற திறமூல பயன்பாடு பயனாளருக்கு உதவஎப்போதும் தயாராக இருக்கின்றது இதனை http://jquerymobile.com/என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க

பேச்சை குறை செயலில் காண்பி என்ற மூதுமொழிபோன்று எழுத்தை குறை செயலை கூட்டு என்ற பொன்மொழிக்கேற்ப ஒரே பயன்பாடு அனைத்து வகை செல்லிடத்து பேசியிலும் செயல்படும் திறன்வாய்ந்த்தாக இந்த PhoneGapஇலிருந்துஉவாக்கிடமுடியும் இதனைhttp://phonegap.com/என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்கSenhatouchhttp://senha.com/

பொதுவான கணினி பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்

தவறுதலாக கணினியின் இயக்கமுறைமை கோப்புகளை நீக்கம் செய்துவிடுதல்அல்லது,கணினியின் இயக்கமுறைமைக்கு தேவையான கோப்புகளை மிகச்சரியாக நிறுவுகை செய்யாமல் விட்டுவிடுதல் ஆகிய செயல்களின் தொடர்ச்சியாக கணினியை தொடங்கும்போது ‘Oops! Couldn’t load the Operating System’என்றவாறு செய்தி கணினியினுடைய திரையில் பிரதிபலிப்பதை பார்த்து மிகஅனுபவம் வாய்ந்த பயனாளிகள் கூட உடன் கணினியின் இயக்கமுறைமையை மறுகட்டமைப்பு அல்லது வடிவமைப்பு செய்திடுகஎன ஆலோசனை கூறுவதை கேள்விபட்டிருக்கலாம்அவ்வாறே நாமும் நம்முடைய கணினியை இந்நிலையில் இயக்கமுறைமையை மறுகட்டமைப்பு செய்தால் நாம் இதுவரை அரும்பாடு பட்டு உருவாக்கிய பல்வேறு பயன்பாடுகளின் கோப்புகளையும் தரவுகளையும் இழக்கவேண்டிய சூழல் ஏற்படும் அதற்கு பதிலாக நாம் இதுவரை அரும்பாடு பட்டு உருவாக்கிய பல்வேறு பயன்பாடுகளின் கோப்புகளையும் தரவுகளையும் இழக்காமல் மீட்டிடவேண்டும் கணினியின் செயலும் சரியாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள் பின்வரும் ஆலோசனைகளை பின்பறிறிடுக என பரிந்துரைக்கபடுகின்றது

குறுவட்டு ,நெகிழ்வட்டுஅல்லது யூஎஸ்பிவாயிலான தேக்கும் சாதணத்தின் மூலம் மீட்டாக்க வட்டு சாதணத்தை அதாவது வன்தட்டின் வாயிலாக கணினியின் தொடக்க இயக்கத்தை செய்வதற்கு பதிலாக இந்த சாதணங்களின் வாயிலாக தொடங்குவதற்கு ஏதுவாக எப்போதும் இவைகளில் ஒன்றை தயார்நிலையில் வைத்து கொள்க

பொதுவாக நம்முடைய வன்தட்டிலுள்ள மதிப்புமிக்க தரவுகளை அவ்வப்போது பிற்காப்பு செய்து கொள்க ஏனெனில் நாம் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தவறுதலாக ஏதேனும் கோப்பினை அழித்து விட்டாலும் இந்த பிற்காப்பு நகலை கொண்டு நம்முடைய பணியை தொடர்ந்து செய்துமுடிக்கமுடியும்.

1நகலெடுத்து சேமித்தல் வழிமுறை

1.1கணினியின் இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடாமல் முதலில் மீட்டாக்க வட்டு சாதணங்களில் ஒன்றின் வாயிலாக கணினியின் இயக்கத்தை தொடங்கசெய்க

1.2பின் கோப்பு உலாவி பயன்பாட்டின் மூலம் கணினியில் உள்ள இயக்ககம் , கோப்பகம்,பாகப்பிரிவினைபகுதி ஆகியவற்றை திறந்துகொள்க

1.3அதன்பின்னர் யூஎஸ்பிவாயிலான தேக்கும் சாதணத்த பொருத்தி வன்தட்டிலுள்ள அனைத்தையும் நகலெடுத்து இதில் சேமித்து கொள்க.

2கோப்பு அமைவு உருவபடபிடப்பு (file system image)வழிமுறை

2.1கணினியின் இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடாமல் முதலில் மீட்டாக்க வட்டு சாதணங்களில் ஒன்றின் வாயிலாக கணினியின் இயக்கத்தை தொடங்கசெய்க

2.2.பின்னர் /dev/sda1, /dev/sda2 என்றவாறு பொதுவான வன்தட்டின் பாகப்பிரிவினை பகுதிகளுக்கும் /dev/sdb1/ ,dev/sdb2/ என்றவாறு யூஎஸ்பி சாதனங்களின் பாகப்பிரிவினை பகுதிகளுக்கும் பெயரிட்டு கொள்க.

2.3.அதன்பின்னர் மீட்டாக்கம் செய்யவிருக்கும் கோப்புகள் வீற்றிருக்கும் பாகப்பிரிவினை பகுதிகளை நீக்கம் செய்திடுக.

2.4பின்னர் தோன்றிடும் திரையில்

Sudo mount/dev/sda2/mnt

Sudogenisoimage -0 /media/myUSBDevice/sda2.iso/mnt

Sudo unmounts /dev/sda2

என்றவாறு கட்டளைகளின்மூலம் கோப்பு அமைவு உருவபடபிடப்பு (file system image) செய்துகொள்க.

3கோப்புகளை deleted அல்லதுdeleted forever என்ற செயலின் வாயிலாக,Shift+Delஅல்லது Empty Trash என்றவாறு தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்திருப்போம்.இந்நிலையில் ஒருகோப்பினை நகலெடுத்து ஒட்டிசேமிப்பதைவிட இந்த நீக்குதல் செயலானது எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் மிகவிரைவாக நடைபெறுவதை பார்த்திருக்கலாம் ஆயினும் இந்த செயலினால் நாம் உருவாக்கிய கோப்பு அதே இடத்திலேயே இருக்கும் ஆயினும் அதனை அனுகுவதற்கான இணைப்பு மட்டுமே இந்த செயலின்மூலம் நீக்குதல் செய்யபடுகின்றது என்ற இந்த அடிப்படை கருத்தமைவை கொண்டு photoRec,Foremost,Scalpelஆகிய பிரபலபமான மூன்று வழிகளில் அறவே நீக்கம் செய்யபட்ட கோப்புகளையும் மீட்டாக்கம் செய்திடமுடியும்

3.1கணினியின் இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடாமல் முதலில் மீட்டாக்க வட்டு சாதணங்களில் ஒன்றின் வாயிலாக கணினியின் இயக்கத்தை தொடங்கசெய்க

3.2. அதன்பின்னர் மீட்டாக்கம் செய்யவிருக்கும் கோப்புகள் வீற்றிருக்கும் பாகப்பிரிவினை பகுதிகளை நீக்கம் செய்திடுக

3.3 மீட்டாக்கம் செய்திட விழையும் சாதணத்தை பொருத்துக

3.4 பின்னர் தோன்றிடும் திரையில் Sudophotorecஎன்றவாறு கட்டளைகளையும்

அதன்பின்னர்

Sudochownvasanthkumar /media/myUSBDevice/recup* அல்லது

Sudochownvasanthkumar /media/myUSBDevice/recup*/*

குறிப்பு:இங்கு recup*என்பது recup_dir1, recup_dir2 … என்றும் recup*/*என்பது recup என்பதன்கீழுள்ள அனைத்து கோப்புகளையும் என்றும் புரிந்துகொள்க

என்றவாறு கட்டளைகளையும் செயல்படுத்துக.

4ஒருசில சமயத்தில் தவறுதலாக கொடுத்த கட்டளை வரிகளினால் கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது பயாஸானது நம்முடைய கணினியில் வன்தட்டே இல்லையென நம்மை பயமுறுத்திவிடும். அய்யய்யோ நம்முடைய வன்தட்டினை யாராவது திருடி கொண்டு போய்விட்டார்களா? அல்லது அவற்றில் உள்ள தரவுகள் முழுவது அழிந்து போய்விட்டதா?ன என நாமும் பயந்துவிடுவோம் .பயப்படவேண்டாம்.TestDisk எனும் கருவி இவ்வாறான நிலையை சமாளித்திட கைகொடுக்கின்றது

4.1கணினியின் இயக்கமுறைமையை நிறுவுகை செய்திடாமல் முதலில் மீட்டாக்க வட்டு சாதணங்களில் ஒன்றின் வாயிலாக கணினியின் இயக்கத்தை தொடங்கசெய்க

4.2 பின்னர் தோன்றிடும்திரையில்SudoTestDiskஎன்ற கட்டளைவரியை தட்டச்சு செய்து இயக்குக அதன்பின் திரையில் தோன்றிடும் அறிவுரைகளுக்கேற்ப செயல்படுக மிகச்சரியான வன்தட்டுதானா என்ரும் மிகச்சரியான பாகப்பிரிவின் பகுதிதானாஎன்றும் உறுதி படுத்தி கொள்க

4.3இந்நிலையில் searchஎன்ற கட்டளை இழந்த பாகப்பிரிவினையை தேடிபிடிக்கவும் Write to Disk என்ற கட்டளை மீட்டாக்க பாகப்பிரிவினையை சேமித்து வைத்திடவும் பயன்படுகின்றன.

பயன்பாட்டின் முழுதிறனை கொண்டுவருவதற்கான திறமூலகருவிகள்

எந்தவொரு பயன்பாடும் மிகமோசமாக செயல்படும் காரணம் என்னவென அறிந்துகொள்வது என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபட்டது போன்ற செயலாகும்  ஏனெனில் அந்த பயன்பாட்டினை பற்றிய விவரம் முழுமையாக நமக்கு தெரிந்திருக்கவேண்டும்  மேலும் அப்பயன்பாட்டினை பற்றிய குறிப்பை ஆய்வுசெய்வதற்கான கருவி நம்மிட இருக்கவேண்டும்  ஆகிய இரு கட்டுப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே நம்மால் ஒரு பயன்பாடு ஏன் மோசமாக செயல்படுகின்றது என அறிவிக்கமுடியும் எனினும் இவ்வாறான செயலிற்காக வியாபார மென்பொருட்கள் அதிக அனுமதி கட்டணத்துடன் தற்போது கிடைக்கின்றன அதாவது சுண்டைக்காய் கால்பணம் சுமைக்கூலி முக்கால்பணம் என்றவாறு பயன்பாட்டு மென்பொருளையும் கட்டணத்துடன் பெறுவது மட்டுமல்லாது  அது ஏன்சரியாக அதனுடைய முழு திறனுடன் செயல்படவில்லை என அறிந்துகொள்வதற்கான கருவியும் அதிககட்டணத்துடன் வாங்கி பயன்படுத்துவது என்பது அனைவராலும் முடியாத செயலாக உள்ளது அவ்வாறு அதிக கட்டணத்தை செலுத்தி வாங்கினாலும் உடனடியாக நிறுவி செயல்படுத்தி பயன்பெறமுடியாத அதற்கான கட்டுபாடுகள் என ஏராளமான இடர்பாடுகள் நாம் சந்திக்கவேண்டியுள்ளன. இதற்கு மாற்றாக எந்தவொரு பயன்பாடும் ஏன்மிகமோசமாக செயல்படுகின்றது அதனை எவ்வாறு சரிசெய்து அதனுடைய முழுதிறனை கொண்டுவருவது என அறிந்து அதற்கேற்ப நாம் செயல்படுவதற்காக கட்டணம் இல்லாத பின்வரும் திறமூலகருவிகள் பயன்படுகின்றன 1 jstack,jmap and jhat ,2.jvisual VM, 3.Eclips Memory Anlysis Too(MAT),4.IBMThread Anlyser

இவைகள்  குவியல்  புரிதிணிப்பு கருவிகளாகும் (heap and thread dump)அதாவது இவைகளுள் ஒருசில புரி திணிப்பை ஆய்வுசெய்யவும்thread dump anlysis)  ,நினைவக திணிப்பை ஆய்வு செய்யவும்(memory dump analysis)  பயன்படுகின்றன. இவைகளை ஒப்பீடு செய்து எது சிறந்தது என காண்பது மிகசிரமமான பணியாகும்   இருந்தபோதிலும் பெரும்பாலான கருவிகள் ஒரேமாதிரியான பணிகளை செய்கின்றன  அதனால் இதில் ஏதாவதுவொன்றை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்க  என பரிந்துரைக்க படுகின்றது.

ஒலிஒளி படத்தினை கையாளஉதவிடும் ffDiaporama எனும் திறமூல மென்பொருள்

  நம்மில் பெரும்பாலானோர் நினைவுபடங்களையும் ஒலிஒளிபடங்களையும்  திருத்தம் செய்திடவும் மேம்படுத்திடவும்  அதன்பின் அதனை பல்லூடகத்தின் மூலம் பார்வையிடவும் விரும்பும் நிலையில் அதனை செயற்படுத்திடும் நிறுவனத்திடம் அல்லது  கடைகளிலும் அல்லது அதற்கான வல்லுனரிடமும் கொடுத்து சரிசெய்து பெற்று திரையிட்டு பார்த்து மகிழ்ந்திடுவோம்.  துரதிஷ்டவசமாக அதே செயல்களை செய்கின்ற ffDiaporama எனும் திறமூல மென்பொருள் இருப்பது நம்மில் பெரும்பாலோனுருக்கும் தெரியாத செய்தியாகும்.  இதனை இயக்கி செயல்படுத்திடுவதற்காக ஒலிஒளிபடங்களை கையாளும் திறன்கொண்ட வல்லுனர் போன்ற நிபுனத்துவ  அறிவோ திறமையோ தேவையில்லை .அதற்கு பதிலாக பாமரனும் மிகசுலபமாக இதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உள்ளது    இது Windows, Linux, Mac OS X  Solaris போன்ற அனைத்து இயக்கமுறைமைகளிலும்  செயல்படும் திறன் வாய்ந்ததாகும். இது நிழற்படங்களையும் உருவபடங்களையும் ஒலிஒளிபடங்களையும் ஒலிஒளிபடங்களாக உருமாற்றிடும் திறன்மிக்கது.மேலும்  எந்த வகையான படப்பிடிப்பு சாதனங்களின் மூலம்  எடுக்கபடும் படங்களையும்  home cinema systems, smart phones , tablets ஆகியவற்றில் காணும் வகையில் இது உருமாற்றிடும் திறன்வாய்ந்தது.
1.
அதுமட்டுமின்றி இது ஏறத்தாழ Windows Live Movie Maker என்பது போன்றே  செயல்படுகின்றது . இதிலுள்ள Project  என்ற தாவியின் திரையிலுள்ள add files. projects, titles , edit  ஆகிய வாய்ப்புகளின் வாயிலாக ஒரு ஒலிஒளிபடத்தை காட்சியை நாம் விரும்பியவாறு மாறுதல் செய்து பதிப்பித்தல் செய்யலாம்.  அதன்பின் Render Video என்ற தாவியின் திரையிலுள்ள smart phones (Smart Phone, Apple, Nokia ,போன்ற கையடக்க சாதனங்கள்), Web (HTML , SWFஆகியவடிவமைப்பில் ,அல்லது   DailyMotion , YouTube ஆகிய இணையதளங்களில் ),  Multimedia Systems,  gaming consoles, ADSL Box , media players ஆகிய வாய்ப்புகளின் மூலம் நாம் விரும்பும் வடிவமைப்பில் இதன் வெளியீடு அமையுமாறு செய்யமுடியும். இந்த திறமூல மென்பொருள் பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் http://ffdiaporama.tuxfamily.org/?page_id=178 என்ற இணைய பக்கத்திற்கு செல்க..
ச.குப்பன்
http://www.skopenoffic.blogspot.in, http://www.vikupficwa.wordpress.com ஆகிய வலைபூக்களுக்கு சென்று தங்களின் மேலான கருத்துகளை வழங்கிடுக.

2 கடந்த பத்தாண்டுகளாக கணினியில் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டு என்பது பல்லாயிரகணக்கான மக்களின் பேராதரவுடன்  அகல்கற்றையின் வளர்ச்சியினால் வளர்ந்து வருகின்றது.  தற்போது ஏராளமானவர்கள் இந்த கணினியின்  விளையாட்டுகளில்  தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர்.அதிலும் இணையத்தின்மூலம் நேரடியாக விளையாட்டு என்பது மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது ஏனெனில் இணையத்தின்மூலம் நேரடியானகணினியின் விளையாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தில்தான் அல்லது இயக்கமுறைமையில்தான் செயல்படும் என்ற நிபந்தனையெதுவுமின்றி இதனை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இதற்காக தனியான முதலீடோ ,வன்பொருட்களோ அல்லது மென்பொருட்களோ தேவையில்லை. முன்பெல்லாம் கணினியில் விளையாட்டு மென்பொருளை உருவாக்குவதற்காக  இதற்கென தனியான தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவாக அமர்ந்து அதிக நேரம் உழைத்து  அதிக பொருட்செலவில் உருவாக்கவேண்டிய நிலை இருந்துவந்தது. தற்போது தனியொரு நபரே மிக்குறைந்த நேரத்தில் செலவேஇல்லாமல் மிகஎளிதாக இந்த கணினியின் விளையாட்டை உருவாக்கமுடியும் என்ற நிலைக்கு வளர்ந்துவிட்டது.
சமுதாய இணையபக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,இசை , ஒலிஒளிபடங்கள், விரைவான அசைவூட்டங்கள் என மிக முன்னேறிய நிலையில் இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளில் உள்ளன. இந்த கணினியின் இணையத்தின்மூலமான நேரடிவிளையாட்டுகளை மேம்படுத்துதலும் சந்தைபடுத்துதலும் மிகஎளிதான செயலாகிவிட்டது மேலும் இதற்கென தனியான வன்பொருள் எதுவும் தேவையில்லாததாகிவிட்டது.
அதுமட்டுமின்றி பல்வேறுகருவிகள்,தொழில்நுட்பங்கள்,தளங்கள்,போன்றவை இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காக தேவைப்படுகின்றன. ஆயினும் இவையனைத்தும் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒரு பாமரன்கூட மிகஎளிதாக இதனை உருவாக்கிடுவதற்கு அனுமதிக்கின்றது
மேலும் புதியபுதிய தளங்கள் ,கருவிகள் அவ்வப்போது அறிமுகமாகிக்கொண்டே உள்ளன. தனியானதொரு மென்பொருளில் உருவாக்கிடும் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளானது அனைத்து பயன்பாட்டுமென்பொருட்களுடனும ஒத்தியங்கிடுமாறு செய்திடவேண்டும்  இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதற்காகன செலவானது மிகஅதிகமாகும் ஆனால் இதனை சந்தைபடுத்திடும்போது அதனுடைய விற்பனைவிலையானது மிக்குறைவாக இருந்திடவேண்டும்  இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்கும் வழிமுறைகளும் அவ்வப்போது மாறிகொண்டே இருக்கின்றன. அனைத்து பயன்பாடுகளுடனும் மென்பொருட்களுடனும் ஒத்தியங்கசெய்தல் இணையபக்கத்தில் இதனைமேலேற்றிடும் நேரஅளவை மிக்குறைவாக இருக்குமாறு செய்தல் என்பனபோன்ற ஏராளமான காரணிகள் இந்த இணையத்தின்மூலமான நேரடி கணினியின் விளையாட்டுகளை உருவாக்குவதை தீர்மாணிக்கின்றன.
மேற்கூறிய அனைத்து காரணங்கள் ,காரணிகள் ஆகியவற்றை வெற்றிகொண்டு     இணையத்தின் மூலம் கணினியின் விளையாட்டுகளை உருவாக்கிடும்  மிகச்சிறந்த திறமூல மென்பொருள் கருவியாக  HTML5 என்பது விளங்குகின்றது. இது தனியுடமை மென்பொருளைவிட மிகசிறந்ததாக  விளங்குகின்றது. இது java scrips ,CSS3 Scripts ஆகிய இணையஉலாவியினுடைய மென்பொருட்களின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது அதிக செயல்திறனும் செயலியையும் கொண்டதாகவும் வெளியிலிருந்து வேறு மென்பொருட்கள்எதையும் சாராமலும்,Flash,Silverlight,Flex போன்றபயன்பாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் இந்த  HTML5 என்பது உள்ளது. இது எந்த தளத்திலும் செயல்படும் திறன்பெற்றது, அதிகஇடைமுகமும் மிகஎளிதாக பயன்படுத்த தக்கவகையிலும் உள்ளது. மூன்றாவது நபரின் மென்பொருள் எதனையும் இது சாராமல் செயல்படும் திறன்கொண்டது கையடக்கமானது, இருபரிமான முப்பரிமான வரைகளையுடன் செயல்படும்திறன் மிக்கது. குறைந்த அலைகற்றையை கொண்டு மிகக்குறைந்த காலஅவகாசத்தில் இணையபக்கத்தில் மேலேற்றிடும் திறனுள்ளது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும்வல்லமை கொண்டது. இயக்கநேரத்தில் நேரடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கின்றது இதனை பற்றி மேலும் அறிந்த கொள்ள http://www.mtic.cgmanifext.com/   என்ற இணையதள பக்கத்திற்கு செல்க

Previous Older Entries