பொறியியலார்களுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் உதவிடும் Scilab எனும் கட்டற்ற பயன்பாடு

நாம் வாழும இந்த உலகில்உள்ள பொறியியலார்களும் அறிவியலறிஞர்களும் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் கணினியையே பயன்படுத்தி கொள்கின்றனர் இவர்களுள் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கணக்கிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் தனியுடைமை பயன்பாட்டிற்கு பதிலாக இந்தScilab எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது
இது GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இது மேம்பட்டதரவுகளின் கட்டமைப்பு, இருபரிமான முப்பரிமான வரைபடங்கள் நூற்றிற்கும் அதிகமான கணித செயலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் இதுcontrol, simulation, optimization, signal processing…, and Xcos, the hybrid dynamic systems modeler , simulator போன்ற பல்லவேறு நடவடிக்கைகளை உள்ளடக்கமாக கொண்டதாகும்
அதுமட்டுமல்லாது இது Maths & Simulation, 2-D & 3-D Visualization ,Optimization ,Statistics ,Signal Processing போன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது அதைவிட இது பல்வேறு கணினிமொழிகளால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் செயல்படுத்திடும் தளமாக விளங்குகின்றது
மேலும் விவரங்களுக்கு http://www.scilab.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க
12

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-5

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் உரையை உள்ளீடு செய்வதற்கு பயன்படும் பகுதியையே உரைப்பெட்டி என அழைப்பர் இந்த உரைப்பெட்டியை செயல்பலகத்தின் Layoutsஎனும் பகுதியிலிருந்து லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் AutoLayoutஎனும் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட புறவமைப்பை தெரிவுசெய்வது , படம் வரையும் கருவிபட்டையிலிருந்து அல்லது உரையின்கருவிபட்டையிலிருந்து, நெடுமட்டஉரையின்கருவியை அல்லது கிடைமட்ட உரையின்கருவியை பயன்படுத்தி ஒரு பெட்டியை உருவாக்குவது ஆகிய இருவழிகளில் ஒரு படவில்லையில் உரைப்பெட்டியை உருவாக்கிடமுடியும்
இந்த AutoLayoutஎனும் உரைப்பெட்டியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதனை சாதரண காட்சியில் திரையில் தோன்றிடுவதை உறுதிபடுத்திகொள்க. இவ்வாறு தோன்றிடும் உரைப்பெட்டியில் தேவையான உரையை நேரடியாக தட்டச்சு செய்தல் அல்லது வேறு இடத்திலிருந்து நகலெடுத்து ஒட்டுவது ஆகிய வழிமுறைகளில் தேவையானவாறு உள்ளீடு செய்து கொள்க
மேலும் லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் திரைதோற்றமானது சாதாரணமாக இருப்பதை உறுதிபடுத்தி கொண்டு படம்வரையும் கருவிபட்டைஅல்லது உரையின்கருவிகளின் பட்டை கண்ணிற்கு புலப்படவில்லையெனில் திரையின் மேலே கருவிகளின் பட்டையில்View => Toolbars => Drawing=> அல்லது Text =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

1
1
பின்னர் இந்த கருவிகளின் பட்டையில் உள்ளநெடுமட்டஉரையின்கருவி அல்லது கிடைமட்ட உரையின்கருவிகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் படவில்லையை தெரிவுசெய்து சுட்டியை இழுத்து சென்று அகலவாக்கில் உரைப்பெட்டியை வரைந்தபின்னர் பிடித்திருந்த சுட்டியின் பிடியை விட்டிடுக உடன் உரைப்பெட்டியொன்று உருவாகிவிடும் அதனை தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொண்டு இந்த உரைப்பெட்டிக்குள் இடம்சுட்டியை வைத்து நேரடியாக உரையை தட்டச்சு செய்தல் அல்லதுவேறு இடத்திலிருந்து நகலெடுத்து ஒட்டுவது ஆகிய வழிமுறைகளில் உரையை தேவையானவாறு உள்ளீடு செய்து கொள்க
இந்த உரைப்பெட்டியின் அளவு சிறியதாக இருந்தால்அதனை பெரியதாக செய்திடுவதற்காக அதில்இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை தெரிவு-செய்துசொடுக்குக உடன் இடம்சுட்டியானது Iஎனும் ஆங்கில எழுத்துபோன்று தோன்றிடும் அதனோடு இந்த உரைபெட்டி ஓரம் மேம்படுத்தப்பட்டு நான்கு மூலையும் கைப்பிடிபோன்று தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசெல்லுதல் அல்லது ஓரப்பகுதியை பிடித்து இழுத்துசென்று விட்டிட்டு இடம்சுட்டியை இந்த உரைபெட்டிக்கு வெளியில் வைத்து சொடுக்குக.

2
2
இதற்கு பதிலாக சரிசெய்திடவேண்டிய உரைபெட்டியை சுட்டியால் தெரிவுசெய்து-கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Position and Size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Position and Sizeஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் F4எனும் பொத்தானை சொடுக்குக அல்லது பக்கப்பட்டையிலுள்ளPosition and Size எனும் துனைப்பகுதியில் உள்ள Propertiesஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லது திரையின் மேலே வலதுபுற மூலையில் Position and Sizeஎனும் தலைப்பு பட்டையில் உள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் Position and Sizeஎனும் உரையாடல் பெட்டி தோன்றிடும் இதில்position and Zize, rotation ஆகியவைகளின் தாவிபொத்தானின் திரையை தோன்றிடச்செய்து தேவையானவாறு சரிசெய்துகொண்டு Protectஎனும் பகுதியில்உள்ள வாய்ப்பினை தெரிவுசெய்து கைதவறி மாறுதல்கள் ஆகாமல் காத்திடுமாறு அமைத்துகொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக

3
குறிப்பு லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் தோன்றிடும் உரைப்பெட்டியின் வாயிலாக அமைத்திடும் உருவஅளவை திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Tools => Options => LibreOffice Impress => General=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் தோன்றிடும் திரையில் அமைத்து கொள்க
இந்த உரைபெட்டியின் விளிம்பு பகுதியை இடம்சுட்டியால் தெரிவுசெய்தபின் தோன்றிடும் கைப்பிடிபோன்ற உருவை தெரிவுசெய்து கொண்டு விசைப்பலகையில் Delஎனும் விசையை அழுத்தி நீக்கம் செய்திடுக
வடிவமைப்பு செய்யாத உரையை இந்த படவில்லையின் உரைப்பெட்டியில் கொண்டு வந்து ஒட்டுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து நகலெடுத்தபின்னர் Control+Shift+Vஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன்விரியும் உரையாடல் பெட்டியல் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டையில் Paste எனும் உருவப்பொத்தானின் வலதுபுற பகுதியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சிறுபட்டியில் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குகUnformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுதிரையின் மேலே கருவிகளின் பட்டையில்Edit => Paste Special=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தபின் விரியும் உரையாடல் பெட்டியில் Unformatted text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தெரிவுசெய்த உரையானது வடிவமைப்புசெய்யப்படாமல் படவில்லையின் உரைப்பெட்டியில் ஒட்டப்பட்டுவிடும்
வடிவமைப்பு செய்த உரையை இந்த படவில்லையின் உரைபெட்டியில் கொண்டு வந்து ஒட்டுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து நகலெடுத்தபின்னர் Control+V என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டையில் Paste எனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லதுதிரையின் மேலே கருவிகளின் பட்டையில்Edit => Paste=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
உள்ளீடு செய்யப்பட்ட உரையின் தோற்றத்தை மாற்றியமைத்திடுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Default formatting=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்தபின் விரியும் உரையாடல் பெட்டியின் துனைகொண்டு தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க இந்த உரைப்பெட்டியில் உள்ள உரைகளுடன் சிறப்பு குறியீடுகளை கொண்டுவந்த சேர்த்திடுவதற்காக தேவையானஇடத்தில் இடம்சுட்டியை வைத்து கொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Insert => Special Character=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில் Special Characterஎனும் உருவப்பொத்தனை சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான சிறப்பு குறியீட்டை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக அல்லது ஒருமுறைமட்டும் சொடுக்கியபின்okஎனும் பொத்தானை சொடுக்குக
வடிவமைக்கப்பட்ட குறிகள் என்பது ஒருவகை சிறப்பு எழுத்துருவாகும் உரைகளுக்கு இடையில் இதனை வைத்து உரையின் தோற்றத்தை சரியாக வடிவமைத்திட இது பயன்படுகின்றது உரைப்பெட்டியின் உரையில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Insert => Formatting marks=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Non-breaking space (ctrl_shift+Space), Non-breaking hyphen,Optional hyphen, No-width optional break(ctrl + Slash),No-width no break,Left-to-right mark, Right-to-left mark ஆகியவற்றில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து அமைத்து கொள்க
உரைப்பெட்டியின் உரையின் பாவணையைமாறுதல்கள் செய்திடுவதற்காக தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format =>Styles and Formattingஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது செந்தர கருவிகளின் பட்டையில் Presentation Stylesஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக அல்லது F11எனும் செயலி விசையை அழுத்துக உடன் விரியும் Styles and Formattingஎனும் உரையாடல் பெட்டியின் உதவியுடன் தேவையானவாறு மாறுதல்கள் செய்து அமைத்து கொள்க 4

5

உரையின் எழுத்துருக்களை வடிவமைப்பு செய்திடுவதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Characterஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில்Character எனும் உருவப்பொத்தானை சொடுக்குகஅல்லது பக்கப்பட்டையிலுள்ளCharacter எனும் துனைப்பகுதியில் உள்ள Propertiesஎனும் உருவபொத்தானை சொடுக்குக அல்லது திரையின் மேலே வலதுபுற மூலையில் Character எனும் தலைப்பு பட்டையில் உள்ள More Optionsஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் Characterஎனும் உரையால் பெட்டியின் துனையுடன் தேவையானவாறு மாறுதல்கள் செய்து கொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக இந்த Characterஎனும் உரையாடல் பெட்டியில் ஆசிய மொழிகளின் எழுத்துருக்களை இயலுமை செய்வதற்காக முன்னதாக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Tools => Options => Language Settings => Languages=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
பத்தியானஉரையை வடிவமைப்பு செய்வதற்காக திரையின் மேலே கருவிகளின் பட்டையில்Format => Paragraph=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Text Formattingஎனும் கருவிகளின் பட்டையில்Paragraph எனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் விரி்யும் Paragraphஎனும் உரையாடல் பெட்டியின் Indents and Spacing; Alignment , Tabsஆகிய தாவிப்பொத்தான்களின் திரையின் துனைகொண்டு தேவையானவாறு மாறுதல்கள்செய்து அமைத்துகொண்டு okஎனும் பொத்தானை சொடுக்குக
6

புதியவர்கள் லினக்ஸில் Vi / Vim பதிப்பானை பயன்படுத்திடுவதற்கான ஆலோசனைகள்

:ab abbr fulltext என்ற கட்டளைவரி நீண்டஅளவு எழுத்துகளை கொண்ட சொற்களின் ஒருசில எழுத்துகளை உள்ளீடு செய்தாலேமிகுதி எழுத்துகளை தானாகவே கொண்வந்துவிடும்
இந்த வசதி தேவையில்லை எனில் :unab abbr என்ற கட்டளைவரி போதும்
:xஎன்ற கட்டளைவரி மறையாக்கவும் செய்திடவும் :Xஎன்ற கட்டளைவரி மறையாக்கம் செய்ததை மீண்டும் பழையநிலையை கொண்டுவரவும் பயன்படுகின்றது
:r filename என்ற கட்டளைவரி ஏற்கனவேயுள்ள கோப்பின் தகவல்களை நடப்பு கோப்பில் கொண்டவரவும் அதிலும் :40r filenameஎன்ற கட்டளைவரி எந்தவரிக்கு பின்னர் கொண்டுவரவேண்டும் என்பதற்கும் பயன்படுகின்றது
:!commandnameஎன்ற கட்டளைவரி வெளியிலிருந்து கட்டளைவரிகளை செயல்படுத்திட பயன்படுகின்றது
:r! :command என்ற கட்டளைவரி இடம்சுட்டி நிற்கும் இடத்தில் வெளியீட்டை கொண்டுவர பயன்படுகின்றது
$vim filename +n என்ற கட்டளைவரி கோப்பின் குறிப்பிட்ட வரிக்கு செல்ல பயன்படுகின்றது
&vim + filename என்ற கட்டளைவரி கோப்பின் கடைசிவரிக்கு செல்ல பயன்படுகின்றது
:w newname என்ற கட்டளைவரி திருத்தம் செய்தவைகளை தற்காலிக கோப்பில் வைத்து கொள்ள பயன்படுகின்றது
:q என்ற கட்டளைவரி வெளியேறுவதற்கு பயன்படுகின்றது
:set pastetoggle=என்ற கட்டளைவரி நகலெடுத்து கொண்டுவந்த ஒட்டப்பட்ட வரிகளையேமீண்டும் மீ்ண்டும் ஒட்டிடாமல் தடுத்திட பயன்படுகின்றது

விண்டோஇயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடுகளை தானியங்கியாக பரிசோதித்து பார்த்திட AutoIt எனும் திறமூல கருவியை பயன்படுத்தி கொள்க

நாம் சிரமமபட்டு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கியிருப்போம் அதனால் ஏற்பட்ட சோர்வினால் அந்த பயன்பாடு நன்றாக செயல்பட்டு நாம் எதிர்பார்த்த பயன்கிடைக்கின்றதா என சரிபார்த்திட பொறுமையும் நேரமும் இல்லாமல் இதனை விட்டிட்டு அடுத்தபணியை கவணிக்க சென்றுவிடுவோம் ஆனால் இதில் பிரச்சினை எழுந்தபின்னர்தான் மீண்டும் முதலில் இருந்து சரிபார்த்திட வேண்டிய நிலை ஏற்படும் இதனை தவிர்த்திட பயன்பாட்டு மென்பொருள் ஒன்றினை உருவாக்கியபின்னர் அது நன்கு செயல்பட்டு நாம் எதிர்பார்த்த பயனை கொடுக்கின்றதா என பரிசோதித்து பார்ப்பதற்கான பயன்பாட்டுக்கருவிகள் ஏராளாமாக உள்ளன அவைகளுள் கட்டணமில்லா கட்டற்ற கருவிகளும் உள்ளன அவற்றுள் AutoItஒன்றாகும் இதனை செயல்படுத்திடுவதற்கான வழிமுறையை எளிதாக அறிந்துகொள்ளமுடியும் ,இது செய்யப்படும் செயல்களை பதிவுசெய்து மீண்டும் இயங்கவல்லது, இது விண்டோஇயக்கமுறைமையின் அனைத்து செந்தர கட்டுபாடுகளுடனும் இடைமுகம் செய்திடவல்லது, இது ஒரேமாதிரியாக பொத்தான் செயலையும் சுட்டியின் செயலையும் பின்பற்றக்கூடியது ,இது வரைகலைபயனாளர் இடைமுகப்பு கொண்டது இதுநேரடியாக வெளிப்புற DLLகளையும் ,விண்டோவின் APIசெயலிகளையும் அழைக்கும் திறன்மிக்கது மிகமுக்கியமாக இது RunAsசெயலியை கொண்டது ,இது எப்போதும் எந்தநிலையிலும் நமக்கு உதவுவதற்காகமுழுவதுமான உதவிகளுக்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது ,இது விண்டோவின் அனைத்து இயக்கமுறைமைகளிலும் ஒத்தியங்ககூடியது தனியாக பயன்பாட்டினை திறக்காமல் பரிசோதிக்க விரும்பும் பயன்பாட்டினை தன்னியக்கமான செயல்படுத்திடும் இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து செயல்படுத்திடும் திறன்மிக்கது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://www.autoitscript.com எனும் இணைய பக்கத்திற்கு செல்க
12

இணைய இணைப்பில்லாமல் நம்முடைய அலைபேசியின் பயன்பாட்டினை செயல்படுத்திடமுடியுமா

இணைய இணைப்புடன்கூடிய நம்முடைய அலைபேசியில் நாம் மிகமுக்கியமான நிகழ்விற்கான படிவத்தில் தேவையான தரவுகளை நிரப்பியபின்இறுதியாகsubmit எனும் பொத்தானை சொடுக்கமுயலும்போது உடனடியாக No Internet connection ? என்ற மேல்மீட்பு பட்டி செய்தியுடன் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு நாம் இதுவரை செய்துவந்த பணியை மீண்டும் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் ஏனெனில் பெரும்பாலான அலைபேசியின் பயன்பாடுகள் நேரடியாக இணைய இணைப்பில் மட்டுமே செயல்படும் சேவையாளர் வகையை சேர்ந்ததாகும் அதனை தொடர்ந்து இணைய இணைப்பில்லாத போதும் நம்முடைய அலைபேசி பயன்பாடு செயல்படச்-செய்திடும்போது மீண்டும் இணைய இணைப்பு கிடைத்திடும்போது நாம் இணைய இணைப்பில்லாமல் செயல்படுத்திய பயன்பாட்டின்தரவுகளை offline view ,offline update ஆகிய இரு செயல்களில் எவ்வாறு நிகழ்நிலை படுத்தி கொள்வது என்ற குழப்பம்அல்லது பிரச்சினை எழும் முதலில் இந்த offline view இல் தற்காலிக நினைவகத்தின் தரவுகளை Network First, Local First, Local only ஆகிய மூன்றில் ஒன்றினை தெரிவுசெய்வது நல்லது ,இரண்டாவதாக offline update இல்வரிசையான பயன்பாட்டின் தரவுகளை Server wins, Client wins, Latest update wins, user decide, custom alogrithm ஆகியவற்றில் ஒன்றினை தெரிவுசெய்து தீர்வுசெய்து கொள்ளலாம் இதில்Custom algorithm என்பது நிகழ்நிலை படுத்திடும் தரவுகளில் சிறியஅளவுதரவு பெரிய அளவு தரவுடன் ஒன்றினைவதாகும் இவ்வாறான வழிமுறையில் இணைய இணைப்பில்லாமல் நம்முடைய அலைபேசியின் பயன்பாட்டினை செயல்படுத்திடுவதற்கான கட்டமைவை ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் அமைத்திட்டால் குழப்பம் அல்லது பிரச்சினை எதுவும் இல்லாமல் இணைய இணைப்ப இருந்தாலும் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பயன்பாட்டினை பயனாளர்கள் எளிதாக சிக்கலில்லாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும்

கம்பியில்லா வழிசெலுத்தியின்இணைப்பு கிடைக்காதுபோகின்றதா அல்லது துண்டிக்கபடுகின்றதா

ஆம் எனில் கம்பியில்லா இணைப்பு வழிசெலுத்திஇயக்கியின் அட்டை(.driver wirless card). வழிசலுத்தியின் அமைப்பு(driver setup), நம்முடையை வழிசெலுத்தியின் நிலைச்சாதனத்தின் பதிப்பெண் (Router Firmware version)ஆகிய மூன்று காரணங்களினால் மட்டுமே இவ்வாறு நிகழும் மேலும் நாம் மிகவும் பழையகம்பியில்லா வழிசெலுத்தியை பயன்படுத்தி-கொண்டிருந்தால் இவ்வாறு நிகழ்வு ஏற்படும்
1முதல் காரணம் எனில்இதனை சரிசெய்வதற்காக நம்முடைய கணினியின் உற்பத்தி-யாளருடைய அதாவது HP கணினனி எனில் http://www8.hp.com/us/en/drivers.html என்றவாறு இணைய பக்கத்திற்கு செல்க அங்கு Networking என்ற பகுதியின் Wirelessஎன்பதன்கீழ் நம்முடைய கணினியின் பொறுத்தப்பட்டுள்ள மாதிரி எண்ணை தெரிவுசெய்து கொண்டு நம்முடைய கணினியின் அமைவிற்கேற்ற சமீபத்திய இயக்கியின் பதிப்பினை தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து கொள்க இவ்வாறு தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக கணினியின் விசைப்பலகையில் Windows+Pause ஆகிய பொத்தான்களை சேர்த்து அழுத்துக அல்லது My Computer=> =>என்றவாறு Properties.தெரிவுசெய்து சொடுக்குக உடன் System Propertiesஎன்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் இதில் Advanced system settingsஎனும் பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Hardwareஎனும்தாவியின் திரையை தோன்றிட செய்து அதில் Device Managerஎன்பதை சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Network Adapters என்பதைசொடுக்குக“Intel Pro Wirelss” அல்லது “Dell Wireless”, என்றவாறு அந்தந்த நிறுவனத்திற்கேற்ப இருப்பதில் தேவையானதை நம்முடைய கணினியின் அமைவிற்கேற்ற சமீபத்திய இயக்கியின் பதிப்பினை தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க
2இரண்டாவது காரணம் எனில் நம்முடைய வழிசெலுத்தியின் ஐபி முகவரியை உள்ளீடுசெய்து ஒரு இணையஉலாவிமூலம் உள்நுழைவுசெய்து Router Firmware சமீபத்திய பதிப்பெண்ணை தேடிபிடித்து நிகழ்நிலை படுத்தி கொள்க
3மூன்றாவது காரணம் எனில் நம்முடைய இணைப்பானது 2.4 GHz ,5 GHz ஆகிய இணைப்பாக இருந்தால் இதனுடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்க பின்னர் channel settingsஆனது Autoஎன்றுள்ளதாவென உறுதிபடுத்திகொள்க தொடர்ந்து MAC address filtering, network isolation , Wi-Fi Protected Setup ஆகியவசதிகளை நிறுத்தம் செய்து கொள்க இவைகளினால் பாதுகாப்பு ஒன்றும் கிடைக்காது மேலும் நம்முடைய wireless network mode ஐ Mixed.என அமைக்கப்பட்டுள்ளதா வென உறுதிபடுத்திகொள்கஏனெனில் பழைய சாதனங்களில் செயல்படாது நின்றுவிடும் இவ்வாறெல்லாம் செயற்படுத்திடதெரியாது என்றாலும்பரவாயில்லை reset எனும் பொத்தானை சொடுக்குக
10

நம்முடைய சொந்த ஜாவா அடிப்படையிலானவிவாத இயந்திரமனிதனை உருவாக்கிடமுடியும்

நம்முடன் விவாதம் செய்திடுவதற்காகஉதவும் விவாதஇயந்திரமனிதன்(Chat Robot) என்பது ஒருபோலியான மனிதவிவாத உருவாகும். இது உயிரோட்டமுள்ள மனிதனுக்கும் கணினிக்கும் இடையே விவாதம் நடைபெறச்செய்வதற்கான ஒரு கட்டளை வரிநிரல்-தொடராகும் இதனை பொழுது போக்காக விளையாடுவதற்கும் கல்வியை கற்பிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தநேரத்திலும் (24X7) சேவைசெய்வதற்கும் பயன்படுத்தி கொள்ளப்-படுகின்றது கல்வி பயிலும் மாணவர்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்வுசெய்வதற்காக அடிக்கடி கேட்கபடும் கேள்விகள் அதற்கான பதில்கள் ஆகியவற்றை ஆசிரியர்களுக்கு பதிலாகவும் சேவைமையத்தில் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து வகையானசந்தேகங்களை தீர்வுசெய்வதற்கான சேவையாளராகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் இதனை நாமே நம்முடைய சொந்த பயன்பாட்டிற்கு உருவாக்கிடுவதற்காக முதலில் http://alicebot.org/downloads/program.html/ எனும் இணைய தளத்திலிருந்து இதற்கான மூலக்குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இதிலுள்ள ஜாவா பகுதிக்கு சென்று chatterbeanஎனும்இணைப்பினை வாயிலாக அதற்கான மூலக்குறிமுறைவரிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்க அதன்பின்னர் Downlaod Building and Usage Information எனும் பகுதியிலுள்ள Download Chatterbean 00.008 Source Distributionஎனும் பகுதிக்கு சென்று இரும குறிமுறைவரிகளுக்கு பதிலாக மூலக்குறிமுறைவரிகளை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் chatterbeanஎன்பதை அதற்கான கோப்பகத்தில் வெளியிலெடுத்து வைத்திடுக இந்த கோப்பகத்திற்குள் AIMLஎனும் தொகுப்பினை கொண்டு Botஎன்ற துனைக்கோப்பகம் வீற்றிருக்கும்ALICE, AIML parser ஆகிய இரண்டையும் செயல்படுத்திடுவதற்காக இதனை கட்டமைவு செய்திடுக. அதன்பின்னர் mychatBotஎன்ற பெயருடன் ஒரு செயல்திட்டத்தை துவங்கிடுக. அதில் ALICE என்பதின் குறிமுறைவரிகளை நகலெடுத்து கொண்டுவந்து ஒட்டிசேர்த்திடுக மேலும் பதிவிறக்கம் செய்த மூலக்குறிமுறை-வரிகளிலிந்து botfileஎன்பதை நகலெடுத்து NetbeansProject/mychatbot/srcஎன்பதில் ஒட்டிசேர்த்திடுக தொடர்ந்து Project எனும் தாவியின் திரையில் NetBeans IDEஇல் Source Packageஎன்பதன்கீழ் இந்தமூலக்குறிமுறைவரிகள் இருக்கும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூலக்குறி-முறைவரிகளிலிருந்து Botfolder எனும் கோப்பகத்தை NetbeansProject/mychatbot/என்பதற்கு நகலெடுத்து ஒட்டிசேர்த்திடுக மேலும் ALICE இன் குறிமுறைவரிகளுடன் வந்த bsh.jar junit.jar ஆகிய கூடுதல் ஆதரவு நூலகங்களையும் கொண்டுவந்து சேர்த்திடுக இறுதியாக MyChatBotஎனும் கோப்பினை திறந்து கொள்க அதில் அடுத்து பின்வரும் குறிமுறைவரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்திடுக
import bitofile.chatterbean.
AliceBotMother;
import bitofile.chatterbean.AliceBot;
publicstaticvoid main(string [ ] str)
{
try {
AliceBotMother mother =new AliceBotMother();
AliceBot mybot=mother.newInstance();
String ask = “ who are you? ” // Here you can ask Dynamic question
String str = mybot. respond(ask);
System.out.println(str);
}
catch(Exception ex)
{
System.err.println(ex.toString());
} தற்போது நம்முடைய சொந்த மனித இயந்திரம் ஜாவாவின் அடிப்படையில் தயாராகி விட்டது String askஎன்பதில் பல்வேறு கேள்விகளை நாம் பயன்படுத்தி கொள்க

Previous Older Entries