முப்பரிமான( 3D) உலக ,வரைபடங்களை உருவாக்குவதற்கான CesiumJSஎனும் திறமூலபயன்பாடு

CesiumJS என்பது உலகத்தரம் வாய்ந்த முப்பரிமான( 3D) உலக ,வரைபடங்களை உருவாக்குவதற்கான ஒரு திறமூல ஜாவாஸ்கிரிப்ட் நூலகமாகும். மின்வெளி முதல் திறன்மிகுநகரங்கள் வரை ட்ரோன்கள் வரை அனைத்து துறைகளிலும் உள்ள மேம்படுத்துநர்கள், இயக்கநேர உலகளாவிய தரவைப் பகிர்வதற்காக ஊடாடும் இணைய பயன்பாடுகளை உருவாக்க CesiumJS ஐப் பயன்படுத்தி கொள்கின்றனர். , CesiumJS வலுவான இயங்குநிலை ,பாரிய தரவுத் தொகுப்புகளுக்கான அளவிடுதலுக்காக திறந்த வடிவமைப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது . CesiumJS ஆனது Apache 2.0 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது ,,வணிக ரீதியான பயன்பாட்டிற்குகூட கட்டணமற்றது. 1,000,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களுடன், மில்லியன் கணக்கான பயனர்களைச் சென்றடையும் பயன்பாடுகளை இது வழங்குகிறது. இதனுடையஒத்துழைப்பு என்பது வெளிப்படைத்தன்மையில் வேரூன்றியுள்ளது என்றும், திறந்த சூழல் அமைப்பிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது
முக்கியவசதிவாய்ப்புகள்
இதனுடைய அல்லது வேறு மூலத்திலிருந்து முப்பரிமான ( 3D) கட்டமைப்புகளை ,பிற நிலையான வடிவங்களில் தாரையோட்டம் செய்திடுக
உயர் துல்லியமான WGS84 இல் காட்சிப்படுத்திடுக ,பகுப்பாய்வு செய்திடுக
மேசைக்கணினி அல்லது கைபேசி பயனர்களுடன் பகிர்ந்துகொள்க
WebGL க்கான இயக்க நேர பண்பு வடிவமான glTF ஐப் பயன்படுத்தி முப்பரிமான ( 3D) கட்டமைப்பு மாதிரிகளைக் காட்சிப்படுத்திடுக
திறந்த தரநிலைகள் ,தனிப்பயன் tiling செயல்திட்டங்களைப் பயன்படுத்தி தாரையோட்ட படங்கள் ,உலகளாவிய உருவில் வெளியிடுக
KML, GeoJSON ,CZML ஐ பதிவேற்றம் அல்லது பலவிதமான வசிதகளையும் வடிவவியலையும் வரைய API ஐப் பயன்படுத்திகொள்க.
இது MIT எனும்உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://bun.sh/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

துண்டுகளாக இரைந்துகிடக்கின்ற கானொளிகாட்சிகளை தொகுப்பதற்கு Editlyஎனும் கட்டறற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

இது Node.js ,ffmpeg ஆகியவற்றினைப் பயன்படுத்தி அறிவிப்புசெய்கின்ற NLE (கோடுசாராத கானொளியை தொகுப்பதற்கான) ஒரு கருவியும் ,வரைச் சட்டமுமாகும். துண்டுபடங்கள், முழுமையானபடங்கள், ஒலி ,தலைப்புகளின் தொகுப்பிலிருந்து, மென்மையான மாற்றங்கள் ,இசையுடனான மேலெழுதப்பட்ட கானொளியை எளிதாகவும் நிரலாக்க ரீதியாகவும் உருவாக்க இது அனுமதிக்கிறது.
இது துண்டுபடங்கள்அல்லது முழுமையானபடங்களின் தொகுப்பிலிருந்து கானொளியை விரைவாகச் சேர்ப்பதற்காக எளிய CLI ஐக் அல்லது அதன் நெகிழ்வான ஜாவாஸ்கிரிப்ட் APIயைப் பயன்படுத்திகொள்ளலாம்.
ffmpeg-concat ஆல் ஈர்க்கப்பட்ட இது மிகவும் விரைவாக செயல்படக்கூடியது ,அதிக நினைவகம் தேவையில்லை, ஏனெனில் இது தாரையாக்க தொகுத்தலைப் பயன்படுத்துகிறது. இது புதிய இயக்கநேர உள்ளடக்கத்தைச் சேர்ப்பதற்காக, மிகவும் நீட்டிக்கக்கூடியதாகவும், செருகக்கூடிய இடைமுகத்துடன் நிறைந்த வசதியடன் இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கியவசதிவாய்ப்புகள்
குறிமுறைவரிகளுடன் கானொளிகாட்சிகளை தொகுத்திடுக
வேடிக்கையான இயல்புநிலைகளுடன் கூடிய APIஇன்அறிவிப்பு
அழகியல் வண்ணங்கள் ,சீரற்ற விளைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட சீரற்ற வண்ணங்களைக் கொண்டு வண்ணமயமான கானொளிகாட்களை உருவாக்கிடுக
எந்த உள்ளீட்டு அளவையும் ஆதரிக்கிறது, எ.கா. 4K கானொளி ,DSLR புகைப்படங்கள்
எந்த பரிமாணங்களுக்கும் விகிதத்திற்கும் வெளியீடு செய்யலாம், எ.கா. Instagram இடுகை (1:1), Instagram கதை (9:16), YouTube (16:9) அல்லது நாம் விரும்பும் வேறு எந்த பரிமாணங்களும்.
உள்ளீட்டு விகிதமானது ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சட்டகஅளவு மாற்றப்பட்டாலும், உள்ளடக்கம் தானாக அளவிடப்பட்டு உள்ளடக்க எழுத்துகள் அதற்கேற்ப சரிசெய்யப்படுகிறது.
ஒவ்வொரு படத்துனுக்கின் கால அளவிலும் cutFrom/cutTo பகுதி நீளத்துடன் பொருந்த, தானாகவே கானொளிகாட்சிகளை வேகப்படுத்தவும் / வேகத்தைக் குறைக்கவும் செய்திடுக
கானொளிகாட்சிகள், படங்கள் அல்லது பின்னணியில் உரை ,வசனங்களை மேலடுக்குதல் செய்திடுக
தனிப்பயன் திரைகள் அல்லது இயக்கநேர மேலடுக்குகளுக்கான தனிப்பயன் HTML5 Canvas / Fabric.js JavaScript குறிமுறைவரிகளை ஏற்றுகொள்கிறது
ஆல்ஃபா அலைவரிசையுடன் வெளிப்படையான படங்களை அல்லது கானொளிகாட்சிகளை மேலடுக்குதல் செய்திடுக
படத்துனுக்குகளின் கால அளவு (B-roll) பகுதிகளுக்கு வெவ்வேறு துணை துனுக்குகளைக் காட்டுகின்றது
பல ஒலி ஆதாரங்களைஒதுக்கலாம்/கலக்கலாம்
பயன்பாட்டினை பயன்படுத்துமிடங்கள்
உரையின் மேலடுக்கில் படங்களின் தொகுப்பிலிருந்து படவில்லைகாட்சியை உருவாக்குதல்
விரைவான முன்மாதிரிகாட்சியை அல்லது விளம்பர கானொளிகாட்சியை உருவாக்குதல்
உதவி உரையுடன் கல்விகற்பிப்பதற்கான கானொளிகாட்சியை உருவாக்குதல்
செய்திகளை உருவாக்குதல்
அசைவூட்டுதல் செய்யப்பட்ட GIF ஐ உருவாக்குதல்
கானொளிகாட்சியை எந்த அளவு அல்லது சட்டவீதத்திற்கு மாற்றுதல் ,தானியங்கியாக எழுத்துகளை சரிசெய்தல்/வெட்டிநீக்குதலின் மூலம் (எ.கா. நீங்கள் கானொளிகாட்சியை எதற்காகவாவது பதிவேற்ற வேண்டும் ஆனால் குறிப்பிட்ட தளத்தில் கானொளிகாட்சி1337×1000 30fps ஆக இருக்க வேண்டும் என்றவாறுஇருந்தால்)

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/mifi/editlyஎனும் இணையதளமுகவரிக்கு செல்க

முனைமத்திற்கான Kitty எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

Kitty (Kitty என்பதை KiTTY என்ற பெயருடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்)என்பது ஒரு சக்திவாய்ந்த, குறுக்கு-தளGPU-அடிப்படையிலான முனைமத்திற்கான போன்மியாகும். இது GPU க்கு வரைவை பதிவேற்றம்செய்கிறது , உள்ளமைக்கப்பட்ட அடுக்கின் தளவமைப்புகள்,வரைகலை , ஒருங்குகுறி எழுத்துரு இணைப்பின் ஆதரவுடன் விரைவான, குறுக்கு-தள செயல்திறனுக்காக OpenGL ஐப் பயன்படுத்திகொள்கிறது.
வடிவமைப்பு தத்துவம்
இந்த கிட்டியானது திறன்மிக விசைப்பலகை பயனர்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. விசைப்பலகையுடனான அதன் முடிவிற்கேற்ப அதனுடைய அனைத்து கட்டுப்பாடுகளும் செயல்படுகின்றன (இருப்பினும் இது சுட்டியின் தொடர்புகளை முழுமையாக ஆதரிக்கிறது). அதன் உள்ளமைவுஆனது எளிமையான, நம்மால் திருத்தக்கூடிய, எளிதான மறுஉருவாக்கம் செய்வதற்கான ஒற்றைக் கோப்பாகும் ( கட்டுப் பாட்டில் உள்ளமைவைச் சேமிக்க விரும்புதல்).
கிட்டியில் உள்ள குறிமுறைவரிகள் எளியதாகவும், கூறுநிலையிலானதாகவும் , குறும்புகளை தடுக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது C (செயல்திறன் உணர்திறன் பகுதிகளுக்கு), Python (UI இன் எளிதான நீட்டிப்பு , நெகிழ்வுத்தன்மைக்கு), Go (கட்டளை வரி kittens இக்கு) ஆகிய கணினி மொழிகளின் கலவையில் எழுதப்பட்டுள்ளது. இது எந்தவொரு பெரிய,சிக்கலான UI கருவித்தொகுப்பைச் சார்ந்து அன்று, இது தன்னுடைய அனைத்து பணிகளையும் வழங்குவதற்காக OpenGL ஐ மட்டுமே பயன்படுத்திகொள்கிறது.
இறுதியாக, ஒருங்குகுறி, நிறம், தடிமனான/ சாய்வான எழுத்துருக்கள், உரை வடிவமைத்தல் போன்ற அனைத்து நவீன முனைமத்திற்கான வசதிவாய்ப்புகளை ஆதரிக்கின்ற வகையில் இந்த கிட்டியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எங்கும் கிடைக்காத வசதிகளுக்கும் ஆதரவைச் சேர்க்க, ஏற்கனவே உள்ள உரை வடிவமைப்பு (escape) குறிமுறைவரிகளை விரிவுபடுத்துகிறது. , வண்ணம் , பாணி (சுருள்) அடிக்கோடுகள் போன்றவை. கிட்டியின் வடிவமைப்பு இலக்குகளில் ஒன்று, இது எளிதாக நீட்டிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது, இதனால் எதிர்காலத்தில் சிறிய முயற்சியில் கூட நாம் விரும்புகின்றபுதிய வசதிகளைஇதில் சேர்க்க முடியும்.
தாவல்களும் சாளரங்களும்
கிட்டி பல நிரல்களை தாவல்களிலும் விண்டோக்களிலும் ஒழுங்கமைக்கும் திறன் கொண்டது. இதனுடைய அமைப்பின் உயர் நிலையில் OS சாளரத்தை கொண்டுள்ளது. ஒவ்வொரு OS சாளரமும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாவல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாவலும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட சாளரங்களைக் கொண்டுள்ளது. பல்லடுக்கு சாளர மேலாளரில் சாளரங்கள் ஒழுங்கமைக்கப்படுவது போல, கிட்டியின் சாளரங்களை பல வேறுபட்ட தளவமைப்புகளில் அமைத்திடலாம்.
தாவல்களுக்கும் சாளரங்களுக்குமான விசைப்பலகை கட்டுப்பாடுகள் (அனைத்தும் தனிப்பயனாக்கக்கூடியவை):
முதன்மையான முனைமத்திரையில் இருக்கும்போது மட்டுமே நகர்த்திடும் செயல்கள் செயல்படுகின்றன. மாற்றுத் திரை செயலில் இருக்கும்போது (எடுத்துக்காட்டாக editor போன்ற முழுத்திரை நிரலைப் பயன்படுத்தும் போது) முக்கிய நிகழ்வுகள் முனைமத்தில் இயங்கும் நிரலுக்கு மாற்றப்படும்.
கிட்டியை கட்டமைத்தல்
கிட்டியில் விசைப்பலகை குறுக்குவழிவிசைகள் என்பதுமுதல் வினாடிக்கு ஒரு வரைபட சட்டகம் தோன்றிடும் என்பது வரை அனைத்தும் கட்டமைக்கக் கூடியது,. உரை திருத்தியில் முழுமையாக கருத்துரையிடப்பட்ட மாதிரி கட்டமைப்பு கோப்பை திறக்க கிட்டியில் ctrl+shift+f2 என்றவாறு விசைகளை அழுத்திடுக.
ஒரு தளவமைப்பு என்பது உயர்மட்ட OS சாளரத்தில் உள்ள பல கிட்டியினுடைய சாளரங்களின் ஏற்பாடாகும். தளவமைப்பு அதன் அனைத்து சாளரங்களையும் தானாகவே நிர்வகிக்கிறது, அவற்றின் அளவை மாற்றுகிறது , தேவைக்கேற்ப நகர்த்துகிறது. ctrl+shift+enter என்றவாறு குறுக்குவழி விசைகளை பயன்படுத்தி புதிய சாளரத்தை உருவாக்கலாம்.
தற்போது, ஏழு தளவமைப்புகள் உள்ளன:
Fat — ஒன்று (அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாய்ப்பாக) சாளரங்கள் மேல் முழு அகலணில் காண்பிக்கப்படும், மீதமுள்ள சாளரங்கள் கீழே பக்கவாட்டில் காண்பிக்கப்படும்
Grid — அனைத்து சாளரங்களும் ஒருதொகுப்பில்( Grid) காட்டப்படும்
Horizontal — அனைத்து சாளரங்களும் கிடைமட்டமாக காண்பிக்கப்படும்
Splits — கிடைமட்டமான ,அல்லது செங்குத்தான என்ற பிரிப்பான்களைப( Splits) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தன்னிச்சையான வடிவங்களில் அமைக்கப்பட்ட சாளரங்கள்
Stack — ஒரு நேரத்தில் ஒரேயொரு பெரிதாக்கப்பட்ட சாளரம் மட்டுமே காண்பிக்கப்படும்
Tall — ஒன்று (அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வாய்ப்பாக ) சாளரங்கள் முழுமையான உயரத்தில் இடதுபுறத்தில் காண்பிக்கப்படும், மீதமுள்ள சாளரங்கள் ஒன்றாக சேர்து கீழே வலதுபுறத்தில் காண்பிக்கப்படும்
Vertical — அனைத்து சாளரங்களும் ஒன்றின் கீழே மற்றொன்றாக நெடுவரிசையில் காண்பிக்கப்படும்
முன்னிருப்பாக, அனைத்து தளவமைப்புகளும் இயக்கப்பட்டிருக்கும் நாம் விரும்பினால் ctrl+shift+l என்றவாறு விசைகளைப் பயன்படுத்தி தளவமைப்புகளுக்கு இடையில் மாறலாம். குறிப்பிட்ட தளவமைப்புகளைத் தேர்ந்தெடுக்க குறுக்குவழிவிசைகளையும் உருவாக்கலாம், மேலும் எந்த தளவமைப்பினை இயக்க விரும்புகின்றோம் என்பதை நாமே தேர்வு செய்யலாம், .
enabled_layouts இல் பட்டியலிடப்பட்ட முதல் தளவமைப்பு இயல்புநிலை தளவமைப்பாக மாறுகின்றது.
கி்ட்டி நீட்டிக்கப்படுதல்
கிட்டி ஆனது உரைநிரலிற்கான சக்திவாய்ந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நாம் விரும்பினால் புதிய kittens எனப்படும் சிறிய முனைமங்களுக்கன நிரலாக்கங்களை உருவாக்கலாம். கிட்டியில் புதிய வசதிகளைச் சேர்க்க இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம், எடுத்துக்காட்டாக, தொலைநிலையிலுள்ள கோப்புகளைத் திருத்துதல் அல்லது ஒருங்குறி எழுத்துகளை உள்ளிடுதல் ஆகிய பணிகள். கிட்டியின் சக்திவாய்ந்த வசதிகளை மேம்படுத்தும் நிரல்களை உருவாக்கலாம் அவற்றினை தேவையானவாறு பயன்படுத்தி கொள்ளலாம், எடுத்துக்காட்டாக, உருவப்படங்களை காண்பது அல்லது உருவப்பட ஆதரவுடன் கோப்புகளை வேறுபடுத்திகாண்பது.
சொந்த வாய்ப்புகளை செயல்படுத்திடுவதற்காக நம்முடைய சொந்த kittens எனப்படும் சிறிய புதிய முனைமங்களை உருவாக்கலாம்.
தொலைநிலைஇயக்கி
கிட்டி மிகவும் சக்திவாய்ந்த அமைப்பைக் கொண்டுள்ளது, இது SSH இல் கூட shell prompt இல் இருந்து அதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. நாம் விரும்பியவாறு வண்ணங்களை மாற்றலாம், எழுத்துருக்களை மாற்றலாம், புதிய சாளரங்களை, தாவல்களைத் திறக்கலாம், அவற்றின் தலைப்புகளை அமைக்கலாம், சாளர அமைப்பை மாற்றலாம், ஒரு சாளரத்திலிருந்து உரையைப் பெறலாம் மற்றொரு சாளரத்திற்கு உரையை அனுப்பலாம் என்பன போன்ற இதனுடைய சாத்தியக்கூறுகள் முடிவற்றவைகளாகும்.
தொடக்க அமர்வுகள்
அமர்வு கோப்பை உருவாக்கி, kitty –session எனும்கட்டளை வரி அல்லது kitty.conf இல் உள்ள startup_session எனும் வாய்ப்பைப் பயன்படுத்தி தாவல்கள், கிட்டி சாளர அமைப்பு, செயல்படும் அடைவு, தொடக்க நிரல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
எழுத்துரு கட்டுப்பாடு
கிட்டி மிகவும் நெகிழ்வான , சக்திவாய்ந்த எழுத்துரு தேர்வு வசதிகளைக் கொண்டுள்ளது. வழக்கமான, தடித்த, சாய்வு , தடிமனான+ சாய்வு எழுத்துருக் களுக்கான தனிப்பட்ட குழுக்களை தேவையானவாறு குறிப்பிடலாம். ஒருங்குகுறி எழுத்துகளின் குறிப்பிட்ட வரம்புகளுக்கு குறிப்பிட்ட எழுத்துரு குழுக்களைக் குறிப்பிடலாம். இது உரையின் வரைவின் மீது துல்லியமான கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது. தொகுப்பாக செய்யப்பட்ட எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், powerline போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கின்றது. .
பின்னிறுதி இடையகம்
பெரும்பாலான முனைமங்களைப் போன்றே, இதன்வரலாற்றைக் காண மீண்டும் நகர்த்தி செல்வதை கிட்டி ஆதரிக்கிறது. இதைச் செய்ய, விசைப்பலகை குறுக்குவழிவிசைகள் அல்லது சுட்டியின் நகர்த்துதலைப் பயன்படுத்தலாம். இருப்பினும், கிட்டிக்கு கூடுதலான, நேர்த்தியான வசதிகூட உள்ளது. சில நேரங்களில் பின்னிறுதி இடையகத்தை இன்னும் விரிவாக ஆராயலாம், சில உரையைத் தேடலாம் அல்லது பின்தொடரலாம் கட்டளையைத் தட்டச்சு செய்யும் போது கிடைமட்டமாகப் பார்வையிடலாம். ctrl+shift+h என்றவாறு குறுக்குவழிவிசைகளை அழுத்துவதன் மூலம் இதைச் செய்ய kitty நம்மை அனுமதிக்கிறது, இதுநமக்குப் பிடித்த இணையபக்கத்தின் நிரலில் பின்னிறுதி இடையகத்தை திறக்கின்றது (இயல்புநிலையாக இது குறைவாக இருக்கும்). வண்ணங்கள் , உரை வடிவமைப்பு பாதுகாக்கப்படுகிறது.
இது:விண்டோ, லினக்ஸ் , மேக் ஆகிய அனைத்திலும் செயல்படுகிறது யூனிக்ஸ் போன்ற இயங்குதளங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது.
இது கட்டற்றது கட்டணமற்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://sw.kovidgoyal.net/kitty/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

GPT4ALL எனும் கட்டற்ற கட்டணமற்ற அரட்டையறைபயன்பாடு

GPT4ALL என்பது இணையஇணைப்பில்லாத கணினியில் கூட நுகர்வோர் தர CPUகளில் செயல்படுகின்ற திறன்மிக்க தனிப்பயனாக்கப்பட்ட கட்டணமில்லாத பெரிய மொழி மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஆன ஒரு சூழல் அமைப்பாகும். இதனுடைய இலக்கானது எளிமையானது—அதாவது எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் சுதந்திரமாகப் பயன்படுத்தவும், விநியோகிக்கவும், உருவாக்கவும் கூடிய சிறந்த அறிவுறுத்தலுடன் ஒத்திசைவு செய்யப்பட்ட உதவியாளர் பாணி மொழி மாதிரியாக இருந்திட உதவுவதாகும்.
GPT4 All இன்திறன்கள்
GPT4all ரோமானியப் பேரரசின் சரிவை விவரிக்கிறது.உலகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது.மேலும் நாம் இதனிடம் எதை பற்றியும் GPT4All விடம் கேட்டு பதில் பெறமுடியும். GPT4all ஒரு கவிதை எழுதுகிறது. நீண்ட உரையை எழுத விரும்புகின்ற எவருக்கும் தனிப்பட்ட உதவியாளராக திகழ்கின்றது
இதன்உதவியுடன் மின்னஞ்சல்கள், ஆவணங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள் , நாடகங்கள் ஆகியவற்றை எளிதாக எழுதிடமுடியும்.
GPT4all ஆனது GIF விக்கிப்பீடியாவில் இருந்து ஏதேனுமொரு பத்தியின் தகவலைக் கூட சுருக்கமாகக் கூறுகிறது.
எந்தவொரு ஆவணங்களையும் எளிதாக புரிந்து கொள்கின்றது நம்முடைய சொந்த உரை ஆவணங்களை இதனிடம் வழங்கியவுடன் , அவற்றின் உள்ளடக்கங்களைப் பற்றிய சுருக்கமானவிவரங்களையும் பதில்களையும் இதன்மூலம் பெற்றிடமுடியும்.
GPT4all ஆனது பைதான் குறிமுறைவரிகளையும் எழுதிடுகின்றது.
இந்தபயன்பாட்டிலிருந்து நாம் விரும்பியவாறு எளிதான நிரலாக்கத் திற்கான குறிமுறைவரிகளின் பணிகளுக்கான வழிகாட்டுதலைப் பெற்றிடமுடியும். தற்போது குறிமுறைவரிகளின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
GPT4ALL முக்கியவசதிவாய்ப்புகள்
விளம்பரம் இல்லாதது: GPT4ALL எந்த வகையான வெளிப்புற விளம்பரத்தையும் கொண்டிருக்கவில்லை.
தனியுரிமை கவனம் கொண்டுள்ளது: GPT4ALL தனியுரிமைக்கு உகந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
குறிமுறைவரிகளைஎழுதிடும்திறன்: நமக்கு குறிப்பிட்ட கணினி மொழியில் குறிமுறைவரிகள் அல்லது நிரலாக்கத் திறன் இல்லாது இருந்தாலும் இதனை (GPT4ALL) கொண்டு ஒரு நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளை நாமே எழுதமுடியும்.
இலகுரகமானது: GPT4ALL ஒத்த பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான சாதன ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது.
உரையிலிருந்து உருவப்படமாக உருவாக்குதல்:GPT4ALL ஆனது AI மூலம் உரை உள்ளீட்டை மட்டும் பயன்படுத்தி உருவப்படத்தை உருவாக்குகிறது.
தானியிங்கியாக சந்தைபடுத்துதல்: GPT4ALL வாடிக்கையாளரின் பயனம் முழுவதும் தானியங்கி பணிப்பாய்வு மூலம் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் , செயல்பாடுகளை தானியங்கியாக செயல்படுத்த முடியும்.
இருண்ட பயன்முறை: GPT4ALL குறைந்த ஒளி நிலைகளில் வசதியான பயன்பாட்டிற்கு இருண்ட பயன்முறையை ஆதரிக்கிறது.
கவனச்சிதறல் இல்லாதது: GPT4ALL அதிகவனம் செலுத்த வேண்டிய போது கவனச்சிதறல் இல்லாத பயன்முறையைக் கொண்டுள்ளது.
AI எழுதுதல்: AI-ஆல்இயக்கப்பட்ட அரட்டையறைகளானவை இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்தபிறகு, இந்த நிறுவியின் கோப்பகத்தில் நாம் விரும்பும் குறிப்பிட்ட பயன்பாட்டைக் கண்டறிய முடியும். அதாவது GPT4Allக்கான கணினியின் உருவப்பொத்தானைக் காணமுடியும்.
குறிப்பு: விண்டோஇயக்கமுறைமைகளில்,இதனை நிறுவுகை செய்திடும்போது இது ஒரு பாதுகாப்பு புகாரை திரையில் காண்பிக்கக் கூடும். விண்டோவிற்கான சான்றிதழை தீவிரமாக அமைத்து வருவதால் இது உடனடியாக சரிசெய்யபட்டுவிடும்

:.GPT4All ஆவணங்கள்:மேசைக்கணினியில் இயங்கும் LLM ஐ எந்தவொரு குறிமுறைவரிகளின்அடிப்படையிலும் ஒருங்கிணைக்கலாம்.

.GPT4All Chat:மேசைக்கணினியில் LLMகளை இயக்குவதற்கான பல-தள அரட்டையறை இடைமுகங்களை கொண்டுள்ளது

. GPT4All பைத்தானில்:Python பிணைப்புகளை GPT4All கொண்டுள்ளது

.GPT4All Data lake:நன்கொடையளிக்கப்பட்ட GPT4ALL தொடர்புத் தரவுகளுக்கான ஒரு திறமூல தரவுத்தள ஏரியாக திகழ்கின்றது.

GPT4All மாதிரி என்பது 3GB – 8GB கோப்பு ஆகும், இதை பதிவிறக்கம் செய்து GPT4All இன் திறமூலச்சூழல் மென்பொருளில் செருகலாம்.
Nomic AI ஆனது இந்த மென்பொருள் சூழலை ஆதரிக்கிறது , பராமரிக்கிறது தரத்தையும் பாதுகாப்பையும் செயல்படுத்துகிறது, மேலும் எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் சொந்த பெரிய மொழி மாதிரிகளை எளிதாகப் பயிற்றுவிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கின்ற முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறது.
மாதிரி உலாவி
wizardlm-13b-v1.1-superhot-8k.ggmlv3.q4_0.bin
இது சிறந்த ஒட்டுமொத்த மாதிரியாக திகழ்கின்றது. அறிவுறுத்துதல் அடிப்படையிலானது. மிக நீண்ட பதில்களைத் தருகிறது. உயர்தரத் தரவை மட்டுமே கொண்டு நன்றாக ஒத்திசைவு செய்யப்பட்டது. இது மைக்ரோசாப்ட் , பீக்கிங் பல்கலைக்கழகம் ஆகியநிறுவனங்களால் நன்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதை வணிக ரீதியாக பயன்படுத்த முடியாது
GPT4All தரவுத்தொகுப்புகள்
நம்முடைய சொந்த தரவில் ஒரு சக்திவாய்ந்த அறிவுறுத்துதல்-ஒத்தியக்கம் செய்யப்பட்ட உதவியாளரைப் பயிற்றுவிக்க, உயர்தர பயிற்சியுடன் , அறிவுறுத்துகின்ற-சரிப்படுத்திடுகின்ற தரவுத் தொகுப்புகளை நிர்வகிக்க வேண்டும். LLM பயிற்சித் தரவை எளிதாக உருமாற்று வதற்கும், கையாளுவதற்கும் Atlas என்ற தளத்தை Nomic AI உருவாக்கியுள்ளது. Huggingface இல் சமீபத்திய திறமூல, Atlas-ஆல் கையாளப்பட்ட GPT4All தரவுத்தொகுப்பைக் காணலாம். சமீபத்திய தரவு பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்திடுக.
GPT4All திறமூல datalake
சக்திவாய்ந்த, பொது நோக்கத்திற்கான பெரிய மொழி மாதிரியை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு தரவுஆனவை மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். GPT4All சமூககுழுவானது GPT4All திறமூல datalakeஐ எதிர்கால GPT4All மாதிரி பயிற்சிகளுக்கான அறிவுறுத்துதல் , உதவி ஒத்திசைவு தரவை வழங்குவதற்கான ஒரு மேடையாக உருவாக்கியுள்ளது. இது ஒரு பெரிய மொழி மாதிரியைப் பயிற்று விக்கின்ற மக்களாட்சி செயல் முறைக்கு பங்களிக்க எவரையும் அனுமதிக்கிறது. GPT4All Datalakeஇற்கான அனைத்து தரவு பங்களிப்புகளும் அவற்றின் மூல Atlas-curated வடிவத்தில் திறமூலமாக இருக்கின்றது.
GPT4All Chat client ஐப் பயன்படுத்தி இதில் நாமும் பங்களிக்கலாம் , தொடக்கத்தில் தரவைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமெனில் ”opting-in” எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளமுடியும். இதுமுன்னிருப்பாக, அரட்டைஅறை வாடிக்கையாளரின் எந்தவொரு உரையாடல் வரலாற்றையும் நம்முடைய கணினியை விட்டு வெளியேற அனுமதிக்காது.
மேலும்விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்
https://gpt4all.io/index.html எனும் இணையதளமுகவரிக்கு செல்க

உருவாக்க செயற்கை நுண்ணறிவின் ((Generated AI)எதிர்காலமும் அதன் முன்னேற்றமும்

கடந்த பத்தாண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் AIஆனது நமது அன்றாட வாழ்வில் மிகவும் பரவலாக அத்தியாவசிய செயலாகிவிட்டது. ஆழ்கற்றல் (DL) அல்லது நவீன செயற்கை நரம்பியல் வலைபின்னல்கள், அதிக அளவிலான தரவுகள் கிடைப்பது DL மாதிரிகளைப் பயிற்று விப்பதற்கான சக்தியைக் கணக்கிடுதல் உள்ளிட்ட பல காரணிகளால் AI இன் பரவலான பயன்படுத்துலும் ஏற்றுக்கொள்ளுதலும் காரணமாக இருக்கலாம். அதனை தொடர்ந்து மிக சமீபத்தில், உருவாக்க(Generative) AI ஆனது பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, அளவிடக் கூடிய, செயல்திறன் மிகப் பெரிய கணினிமொழி மாதிரிகளை (LLMs) உருவாக்கியுள்ளன. மேலும்உருவாக்க AI ஆனது உரை, உருவப்படங்கள், கானொளிகாட்சிகள், நிரலாக்க குறிமுறைவரிகள் இசை ஆகியவற்றினை உருவாக்கவும் பயன்படுத்தப் படுகின்றது. உரை விளக்கங்களின் அடிப்படையில் உருவப்படங்களை உருவாக்கும் பல்வகை மாதிரிகள் உள்ளன (எ.கா., DALL·E) அதற்கு நேர்மாறாகவும், அத்தகைய கண்டுபிடிப்புகள் மிக விரைவாக வரவுள்ளன.
உருவாக்க AI இன் முன்னேற்றங்கள்
DL மாதிரியின் பயன்பாட்டில் ஒரு முக்கியமான திருப்புமுனையானது 2012 ஆம் ஆண்டு உருவப்படங்களை பல்வேறு குழுக்களாக வகைப் படுத்துவதற்காக நிரூபிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து DL மாதிரிகள் முன்னர் நிறுவுகை செய்யப்பட்ட அளவுகோல்களில் கணிசமாக மேம்படுத்தப்பட்ட உரையில், உரையாடலில் ஒத்த வகைப்பாட்டின் பணிகளுக்காக DL பயன்படுத்தப் பட்டது. இந்த மாதிரிகள் சிறப்புப் பணிகளுக்காகவெனப் பயிற்றுவிக்கப்பட்டன. மேலும் இவைஅதிநவீன செயல்திறனையும் வழங்கின. இவ்வாறான சூழலில்பரந்த அளவிலான வெளியீடுகளை உருவாக்க DL இன் பயன்பாடுஆனது AI ஆய்வாளர்களை கவர்ந்துள்ளது. உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adversarial Networks) இந்த திசையின் ஒரு மைல்கல்லாக, 2014 இல் செயல்படுத்தப் பட்டது, அங்கு மனித முகங்கள் , எண்களின் உண்மையான தோற்றப் படங்கள் உருவாக்கப்பட்டன. இது பிற களங்களில் உருவாக்க AIஇன் நுட்பங்களை உருவாக்கிடுவதற்காக மேலும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.
மொழியின் மாதிரியாக்கம் AIக்கு சவாலான பணியாக இருந்து வருகின்றது. மொழி மாதிரிகளின் குறிக்கோள், சொற்களின் வரிசையைக் கொண்டு அடுத்த சொல்லைக் கணிப்பதாகும். LLMகளுக்கு முன் பயிற்சி பெறுவதற்காக DL பயன்படுத்துவதை 2019 இல் நிரூபிக்கப்பட்டது . முன்கூட்டியே பயிற்சியளிக்க்கப்டட உருவாக்க உருமாற்றிகள் ( Generative pre-trained transformers (GPT)) என்பது ChatGPTஐ இயக்குகின்ற அடிப்படை தொழில் நுட்பமாகும். இந்த மாதிரிகள் வரைகலை செயல்படுத்திடுகின்ற அலகுகளின் (Graphics Processing Units (GPU)) அபரிமிதமான கணிப்பு சக்தியைச் செலவழிப் பதன் மூலம் பெரிய அளவிலான உரைவடிவிலான தரவில் பயிற்றுவிக்கப் பட்டுள்ளன. உரை சுருக்கம், கேள்வி பதில், குறிமுறை வரிகளின் உருவாக்கம் என்பன போன்ற பணிகளுக்கான GPT-3/GPT-4 இன் முடிவுகள் வியக்கத்தக்கதாக உள்ளன.
உருவாக்க AI மாதிரிகளுக்கான சவால்கள்
DL மாதிரிகளானவை பயிற்சி தரவிலிருந்து கற்றுக்கொள்கின்றன மேலும் தரவுகளில் குறிப்பிடப்படும் உலகின் பார்வையை பதிலியாக செயற்கை நரம்பியல் வலைபின்னல்களின் அளவுருக்களை அமைக்கின்றன. இந்த மாதிரிகள் பொதுவாக பாரம்பரிய இயந்திர கற்றல் (ML) மாதிரிகளை விட பெரிய அளவிலான பல ஒழுங்குமுறைகள் ஆகும். இந்த வலைபின்னல்களின் மாதிரிகளின் அளவு, பயிற்சிக்கான தரவுகளின் அளவு ஆகியவை சிறியதாக இருக்கும்போது சவாலாக மாறுகின்றன. பெரும்பாலான உண்மையான நடப்பு-உலகின் தரவுத் தொகுப்புகள் இனங்களில் ஏற்றத்தாழ்வு (வெளிப்படையாக இல்லாத) உள்ளார்ந்த சார்புகளைக் கொண்டிருக்கலாம். இந்த சவால்களை சமாளிக்க DL மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கான நுட்பங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இல்லையெனில், அவை பயிற்சியளிக்கின்ற தரவை மனப்பாடம் செய்ய வாய்ப்புள்ளது, இது மிகைப்பொருத்தம் (overfitting) என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் மாதிரிகளை காணாத தரவை பொதுமைப் படுத்தவோ அல்லது பக்கச்சார்பான முடிவுகளை வழங்கவோ முடியாது.
உருவாக்க AIஇன் மாதிரிகள் DL நுட்பங்களுக்கு உள்ளார்ந்த சவால்களுக்கு ஆளாகின்றன. கூடுதலாக, மாதிரிகளின் உருவாக்கும் தன்மை உருவாக்கப் பட்ட தரவுகளில் செயற்கையானஉண்மைகளை அறிமுகப் படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, AIஇன் உருவப்பட உருவாக்கங்கள் தமக்குள் போராடு கின்றன. அவை வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்ற உருவப் படங்களை உருவாக்கலாம், அவைகளுக்கு விளக்கம் அளிப்பது கடினமாக இருக்கும். இந்த சவால்களை சமாளிக்க பல அணுகுமுறைகள் முன்மொழியப் பட்டுள்ளன . தொடர்ச்சியான உரையில் அடுத்த சொல்லை கணிப்பதே மீப்பெரும் பணியாக இருக்கின்ற LLMகளுக்கும் இது பொருந்தும். அவை பயிற்றுவிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தவறான நிறைவுகளை உருவாக்கலாம் அல்லது தவறான பதில்களை வழங்கலாம். எனவே, பாதுகாப்பு அமைப்புகள், குறிப்பாக, மனிதர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, அவற்றை உறுதி செய்ய கவனமாக இருக்க வேண்டும் இது. புதுமையான பயன்பாடுகளுக்கு வழி வகுக்கிறது DL இன் துவக்ககால வெற்றியானது வகைப்பாடு போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக நிரூபிக்கப்பட்டது, அங்கு மாதிரிகள் ஆழ்ந்தும் குறுகியதாகவும் இருக்க பயிற்சியளிக்கப்பட்டது. மாறாக, உருவாக்க AIஇன் மாதிரிகள் பரந்து, இருக்கின்றன. DL இன் துவக்ககால பயன்பாடுகள் வணிகத் தேவைகளுக்காக இருந்துவந்தன. AI ஆய்வாளர்கள் இந்த அளவீடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்து வதன் மூலம் அதிக துல்லியத்தை வழங்கிடுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. புதியபாவணைகளை வடிவமைத்தல், ஆக்க பூர்வமாக எழுதுதல் ,புதிய கலையை உருவாக்குதல் போன்ற ஆக்கப் பூர்வமான துறைகளில் AI ஐப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்க AI என்பதை பயன் படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது. இது இதுவரை தொடாத உயர் திறனுடைய பகுதிகளில் AI இன் பரந்த பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்த சமூக குழுக்கள் AI இன் பயன்பாட்டிற்கு எவ்வாறு மாற்றியமைக்கப் படுகின்றன என்பதன் மூலம் ஆய்வின்வாயிலாக வழிநடத்தப்படும், மேலும் இது புதுமையான பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடும்.

ImHex எனும் கட்டற்ற கட்டணமற்ற கருவி

ImHex என்பது ஒரு ஹெக்ஸ் பதிப்பாளராகும், இது இரும தரவை அவற்றின் வடிவமைப்பை மாற்றியமைக்க, தகவல்களைப் பிரித்தெடுக்க அல்லது அவற்றில் உள்ள வட்டப்பட்டையின் மதிப்புகளைக் காண்பிக்க, குறிமுறை மொழிமாற்றியின் , பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு கருவியாகும். பெரும்பாலும் கட்டண பயன்பாடுகளில் மட்டுமே காணப்படுகின்ற பல மேம்பட்ட வசதிவாய்ப்புகளைக் கொண்டுள்ளதே இந்த ImHex இன் சிறப்பு அம்சமாகும். அவையாவையெனில் முற்றிலும் தனிப்பயனாக்கப் பட்ட இருமவார்ப்புரு, தரவில் உள்ள கட்டமைப்புகளை குறிமுறைமொழிமாற்றச் செய்து தனிப்படுத்துவதற்கான தோரனி மொழி, ஒரு வரைகலை முனைம அடிப்படையிலான தரவு செயலி, அவை காண்பிக்கப் படுவதற்கு முன் செயலாக்க மதிப்புகள், ஒரு பிரித்தெடுத்தல், diffing ஆதரவு, அடையாளக்குறிகள்,போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளாகும். அதே நேரத்தில்இந்த ImHex எனும் பயன்பாடானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPLv2 உரிமத்தின் கீழ் முற்றிலும் கட்டணமில்லாமலும் கட்டற்றதாகவும் வெளியிடப்பெற்றுள்ளது. ImHex எனும் பயன்பாடானது ஒரு முழு தனிப்பயனாக C++ போன்ற வடிவகணினிமொழியை உள்ளடக்கியது, இது கோப்பு வடிவங்களை எளிதாக முன்னிலைப்படுத்தவும், குறிமுறை மொழிமாறுதல் செய்யவும் , பகுப்பாய்வு செய்யவும் அனுமதிக்கிறது.
, பல பொதுவான நிரலாக்க மொழிகளுக்கான Copy-Bytes-As-Array , , ஹெக்ஸ் தேடல், அடையாளக்குறியிடுதல்கள், Goto, பெரிய கோப்பு ஆதரவு, மாறிகளின் நெடுவரிசை எண்ணிக்கை, தனிப்பயன் குறியாக்கங்கள் போன்ற பல்வேறுவசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது.
தோரணி மொழி முதன்மைவசதிகள்
ImHex ஒரு முழு தனிப்பயன் C++ போன்ற வடிவ கணினிமொழியை உள்ளடக்கியது, இது கோப்பு வடிவங்களை எளிதாக முன்னிலைப்படுத்தவும், குறிமுறை மொழிமாறுதல் செய்யவும் , பகுப்பாய்வு செய்யவும் அனுமதிக்கிறது.
IPS இணைப்புகளும், தரவு பதிவிறக்கமும்
தானாக வே 64இன் அடிப்படையிலான கோப்புகளைஇதன்மூலம் குறிமுறை மொழிமாறுதல் செய்து, IPS , IPS32 ஆகிய இணைப்புகளை நேரடியாகப் பயன்படுத்தலாம். ஒரு கோப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் உடனடியாக IPS , IPS32 ஆகியவற்றின் 32 அடிப்படையிலான தொகுப்புகளாக மீண்டும் பதிவேற்றம் செய்யதிடலாம்.
ஒருங்கிணைந்த பிரித்தெடுத்தலும் YARAஎன்பதன்மூலம் தொகுத்தலும்
வெவ்வேறு அறிவுறுத்தல் தொகுப்புகளின் மாறுபாட்டை பிரித்திடுக. x86 இல் இருந்து ARM Cortex-M விரல்நுனி குறிமுறைவரிகள் PowerPC இக்கு. பல உள்ளமைவு வாய்ப்புகள் உள்ளன. ஒருங்கிணைந்த YARA விதிகள் பாகுபடுத்தி நச்சுநிரல்களை பகுப்பாய்வு செய்வதற்கான சிறந்த வழிமுறையாகவும் திகழ்கின்றது.
தரவு பகுப்பாய்வி , அடையாளங்காட்டி
விரிவாக்கம்செய்யக்கூடிய கோப்பின் தந்திரமான இடைமுகம் மூலம் அறியப்பட்ட கோப்பு வகைகளை உடனடியாக அடையாளம் காணலாம். இரும விநியோகம் , செறிவளவு வரைபடங்கள் ஆகியவற்றின்மூலம் தரவை மேலும் பகுப்பாய்வு செய்யலாம்.
வரைகலை தரவு செயலி
இது காட்சி நிரலாக்க மொழியுடன் கூடிய தரவுச் செயலியை கொண்டுள்ளது அதனால் பயன்படுத்த எளிதான தரவுச் செயலி மூலம் தரவை முன்கூட்டியே செயலாக்கவும். உள்ளுணர்வுகூடிய, முனைமஅடிப்படையிலான இடைமு கத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவை குறிமுறை மொழிமாறுதல் செய்யவும், மாற்றவும் அல்லது எளிமைப்படுத்தவும் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளும் ,https://imhex.werwolv.net/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

நீண்டவிவரங்களை சுருக்கமாக ஆக்கிடஉதவிடுகின்ற Gist AIஎனும் கட்டற்ற கட்டணமற்ற கருவி

Gist AI என்பது இணையதளங்கள், வலையொளியின்(YouTube) கானொளி காட்சிகள் , PDFவடிவமைப்பு கோப்புகள் ஆகியவற்றிற்கான ChatGPT-ஆல் இயங்குகின்ற ஒரு கட்டற்ற கட்டணமற்ற கருவியாகும். இது அவை எல்லாவற்றையும் சுருக்கமாக ஆக்கிடுவதற்கான ஒரு AI இன் சுருக்கமாக ஆக்கிடும் கருவியாகும்!
அதாவது Gist AI என்பது ஒரு கட்டற்றகட்டணமற்ற சுருக்கமாக்கிடஉதவுகின்ற கருவியாகும் , இது எந்தவொரு இணையத்தள கட்டுரை, வலையொளியின் கானொளி காட்சி அல்லது PDF வடிவமைப்பு கோப்பு ஆகியவற்றிலிருந்தும் ஒரேயொரு சொடுக்குதலில் அதன்முக்கிய விவரங்களை மட்டும் பிரித்தெடுத்து சுருக்கி தருகின்றது. இது அவைகளை மிக இரத்தின சுருக்கமாக கூறுவதற்கான பின்புல கருவியாகும், மேலும் இது ஒரு உரை சுருக்கத்தை விட அதிக மதிப்புமிக்கது ஆகும்; இது நாம் விரும்பும் அனைத்து தேவைக்குமான ஒரேதீர்வாக அமைந்துள்ளது.
இன்னும் சிறப்பாக கூறவேண்டுமெனில், Gist AI ஆனது, ஒரு வலையொளியின் கானொளி காட்சியின், பயனுள்ளதொரு வலையொளியின்கானொளி காட்சியின் சுருக்கமான காட்சியாகச் செயல்படுகின்றது, நாம் அந்த கானொளிகாட்சியில் தெளிவு பெறுவதற்காக மூலத்தின் ஆழ்மட்டத்திற்குச் செல்ல அல்லது அந்தத் தருணத்திற்குள் செல்ல நம்மை அனுமதிக்கிறது.
Gist AI என்பது எளிதான , விரைவான உள்ளடக்கத்தினை ஒடுக்கி சுருக்கமாக்கு வதற்கான சிறந்ததொரு AI சுருக்கமாக்கிடும் கருவியாகும். இதுவிவரங்கள் அனைத்தையும் மிக குறைந்த நேரத்தில் சுருக்கமாக ஆக்கிவிடுகின்றது.
முக்கிய வசதிவாய்ப்புகள்:
நேரத்தை மிச்சப்படுத்துகிறது
இந்த சுருக்கமாகஆக்கிடும் கருவியானது கட்டுரைகள், வலையொளியின் கானொளி காட்சிகள், PDFவடிவமைப்பிலான கோப்புகள், கட்டுரைகள், இணையதளங்கள், வலைப்பதிவுகள், ஒப்பந்தங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சுயவிவரங்கள் போன்ற பலவற்றிலிருந்து முக்கிய கருத்துகளைமட்டும் மிகவிரைவாகப் பிரித்தெடுத்து மிகவும் இரத்தினச்சுருக்கமாக ஆக்கிதருகின்றது.
சுருக்கவிவரங்களின் மூலத்தை ஆழ்ந்து படிக்கலாம்
இதன்மூலம் இனி பஞ்சு போன்று பறப்பதுஅல்லது கவனச்சிதறல்கள் இல்லை!
வலையொளியின் கானொளிகாட்சிகளின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு பதிலாக கானொளிகாட்சியின் முக்கியப் பகுதிகளுக்குமட்டும் செல்க, சக்திவாய்ந்த வலையொளியின் கானொளிகாட்சிகளை சுருக்கமாகஆக்கிவிடுக, சுருக்கத்தைத் தவிர்த்து,வலையொளியின் கானொளிகாட்சிகளின் முக்கியமானசில பகுதிகளை மட்டும் காண முடியும்.
எந்தவொரு PDFகோப்பினையும் சுருக்கிஅமைத்திடலாம்
நம்பகமான PDFவடிவமைப்பு கோப்புகளின் சுருக்கமாக்கியாக, இந்தGist AI ஆனது இணையத்தில் நேரலையாக PDFவடிவமைப்பு கோப்புகளின் விவரங்களை சுருக்கமாக உருவாக்கிடுகின்றது, இதனை சாதனத்திலிருந்து பதிவேற்றப்பட்டவை அல்லது சுயவிவரங்களுக்கான சுருக்கமாக்கியாகவும் செயல்படுத்திடலாம். மேலும், இந்த கட்டணமற்ற PDF ஐ சுருக்கமாக்குதல் கருவியானது நாம் விரும்பும் PDFவடிவமைப்பு கோப்பில் குறிப்பிட்டஅளவு மட்டும் என்றவாறு அல்லது குறிப்பிட்ட அளவு பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டும் என்றவாறு சுருக்கமாக ஆக்குவதற்காக எந்தவொரு கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை.
Gist AI என்பது பல்வேறு ஆவணங்களுக்கான நம்முடைய go-toஇன் AI ஆவண சுருக்கமாக்கி கருவியாகும். ஆய்வுக் கட்டுரைகளாக இருந்தாலும் சரி, சுயவிவரமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான ஆவணமாக இருந்தாலும் சரி, Gist AI ஆனது அதனை மிகசுருக்கமாக ஆக்கிதருகின்றது.
எல்லாவற்றையும் சுருக்கமாக ஆக்கிடுவதற்கான ஒரு சுருக்கமாக்கி கருவி
நாம் ஏன் ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் ஒன்றுஎன்றவாறு பல்வேறு சுருக்கமாக்கிகளின் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்? இணையதளங்கள் முதல் வலையொளியின் கானொளிகாட்சிகள் வரை சிறிய ஆவணங்கள்முதல் நீண்ட PDFவடிவமைப்புகோப்புகள் வரை,அனைத்தையும் Gist AI ஆனது எல்லாவற்றையும் சுருக்கமாக ஆக்கிடதயாராக இருக்கின்றது.
எளியதோற்றத்துடன் பயன்படுத்த எளிதானது
இந்த இணையதள சுருக்கமாக்கி கருவிக்கு Chrome நீட்டிப்பு நிறுவுகை செயல் மட்டுமே தேவையாகும். உடன் அதனை தொடர்ந்து API இன் விசைகள் இல்லாமலேயே இந்த சுருக்கமாக்கியை பயன்படுத்திட துவங்கிடுக.
இது மிகவும் சிக்கலான இணையதளங்கள், நீண்ட PDFவடிவமைப்புகோப்புகள் அல்லது கானொளிகாட்சிகளிலிருந்தும் கூட மிகசுருக்கமான விவரங்களை எளிதாக சுருக்கமாகஆக்கஉருவாக்குகிறது. சிறந்த குறிப்பு சுருக்கமாக்கியாகவும் , AI இன் PDFவடிவமைப்பு கோப்பின் சுருக்கமாக்கியாக அறியப்படும், Gist AI ஆனது நீண்ட உள்ளடக்கத்தை குறுகிய,வாறும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவாறு் மாற்றுவதன் மூலம் நம்முடைய புரிந்துகொள்ளுதலை மேம்படுத்துகிறது.
தற்போது இந்தGist AI ஆனது பல்வேறு தொழில் வல்லுநர்களிடையே நம்பகமான தேர்வாக அமைகின்றது.பெருநிறுவனங்கள் , சட்ட ஆலோசனை நிறுவனங்கள் முதல் அரசாங்கங்கள் , மருத்துவமனைகள் வரை. அனைத்திற்கும உரையைச் சுருக்கமாகஆக்கிடும் இந்தப் பயன்பாடு, பெரிய ஆவணங்களை விரைவான மிகச்சிறியநுண்ணறிவுகளாகக் குவிப்பதில் அதன் செயல்திறனுக்காக தனித்து உயர்ந்து நிற்கிறது.
இதனை எவ்வாறு பயன்படுத்திடுவது
முதலில் Chrome இணைய அங்காடியிலிருந்து Gist AI எனும் நீட்டிப்பை (extension) பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக.
பின்னர் Gist AI நீட்டிப்பை கருவிப்பட்டியில் பொருத்திடுக
நாம் விரும்பும் இணையதளத்தினை, வலையொளியின் கானொளி காட்சியை அல்லது PDF வடிவமைப்புகோப்பினைத் திறந்து, அதைச் சுருக்கமாக ஆக்குவதற்காக இதனுடைய, நீட்டிப்பு (extension) எனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்திடுக
நம்முடைய கணினியில் சேமிக்கப்பட்டுள்ள PDFவடிவமைப்பு கோப்பை சுருக்கமாக, ஆக்க இதனுடைய PDF தாவலில் பதிவேற்றிடுக
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்தAI சுருக்கமாக்கியானது மற்றவைகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
மற்ற நீட்டிப்புகளைப் போன்றில்லாமல், Gist AI ஆனது – இணையதளங்கள், வலையொளியின்கானொளிகாட்சிகள், PDFவடிமைப்பு கோப்புகள். போன்ற நாம் விரும்பும் எல்லாவற்றையும் சுருக்கமாக ஆக்கிவிடுகின்றது இது கட்டணமற்றது சுருக்கமாக ஆக்கிடுவதற்காக அவைகளின் உள்ளடக்கத்தின் அளவு அல்லது நீளத்திற்கு எந்த தடையும் இல்லை. அதனோடு தேவையெனில் இந்த Gist AI இன் மூலம், சுருக்கவிவரங்களை கொண்டு அதன் மூலத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைஅறிந்துகொள்ளலாம் அல்லது வலையொளியின் கானொளி காட்சியின் குறிப்பிட்ட காட்சிக்குச் செல்லலாம். இது நீண்ட உள்ளடக்கத்தை சிறிய தொகுதிகளாகப் பிரிப்பதன் மூலம் நமக்கானபுரிதலை மேம்படுத்துகிறது.
AI இன் PDF சுருக்கமாக்கி எவ்வாறு செயல்படுகிறது?
Gist AI ஆனது ChatGPT AIஐப் பயன்படுத்தி நம்முடைய சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள PDFவடிமைப்புகோப்பு,அல்லது இணையத்தின் நேரலை PDFவடிமைப்பு கோப்பு, அதாவது எந்தவரு PDFவடிவமைப்பகோப்பினையும் சுருக்கமாக ஆக்கிக் கொள்ளலாம். இவ்வாறன எந்தவொரு PDFவடிமைப்பு கோப்பினையும் சுருக்கமாக ஆக்கிடுவதற்காக, Gist AI இன் நீட்டிப்பு (extension) எனும் உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்க. நம்முடைய சாதனத்தில் சேமிக்கப்பட்ட PDF வடிவமைப்பு கோப்பாக இருந்தால், அதை விரைவாகப் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
இணையதளங்கள் அல்லது வலையொளியின் கானொளிகாட்சிகளை சுருக்கமாகஆக்க இந்த கருவியை எவ்வாறு பயன்படுத்துவது?
இணையதளங்கள் அல்லது வலையொளியின் கானொளிகாட்சிகளை சுருக்கமாகஆக்கஇந்த கருவிப்பட்டியில் உள்ள Gist AIஇன் நீட்டிப்பு(extension) எனும் உருவப்பொத்தானை சொடுக்குல் செய்திடுக.
இந்த சுருக்கமாக்கியின் கட்டணமற்ற பதிப்பு கிடைக்குமா?
Gist AI என்பது முற்றிலும் கட்டணமற்ற AI சுருக்கமாக்கிகருவியாகும். இது எந்தவொரு இணையதளம், வலையொளியின் கானொளிகாட்சி, இணையத்தின் நேரலை PDFவடிமைப்புகோப்பினையும், அல்லது நம்முடைய சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள எந்தவொரு PDFவடிவமைப்பு கோப்பினையும் இதனை கொண்டு கட்டணமில்லாமல் சுருக்கமாக ஆக்கிக் கொள்ளலாம்.
புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் அல்லது நீண்ட ஆவணங்களைச் சுருக்கமாகச் ஆக்கிடும் வசதி உள்ளதா?
சுருக்கமாக ஆக்கிடுவதற்காக ஆவணங்கள் கானொளிகாட்சிகள் ஆகியவற்றின உள்ளடக்கத்தின் நீளஅளவிற்கு Gist AI ஆனது எந்தவொரு வரம்பினையும் விதிக்கவில்லை. எனவே நீண்ட புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் , ஆவணங்களை Gist AI உடன் சுருக்கமாக ஆக்கிக் கொள்ளலாம்.
Chrome இன் நீட்டிப்பு எந்த இணையதளத்திலிருந்தும் கட்டுரைகளைச் சுருக்கமாக ஆக்கமுடியுமா?
Gist AI என்பது ஒரு Chrome இன் நீட்டிப்பாகும், அதனால்இதனைகொண்டு அனைத்து இணைய தளங்களிலிருந்தும் கட்டுரைகளை கட்டணமில்லாமல் சுருக்கமாகஆக்கிக் கொள்ளலாம்.
இந்த சுருக்கமாக்கியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
Gist AI ஆனது பயனாளரின் தனியுரிமையை மதிக்கிறது ,எந்தவொரு பயனர் தரவையும் சேகரிக்காது. இது சுருக்கமாக்குவதற்கான உள்ளடக்கத்தை மட்டுமே படிக்கிறது , இந்த உள்ளடக்கத்தை சேமிக்காது. எனவே இதைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது.
வலையொளி(YouTube) கானொளிகாட்சிகளை ChatGPT சுருக்கமாகஆக்க முடியுமா?
ChatGPT மூலம் வலையொளியின் கானொளிகாட்சிகளை நேரடியாகச் சுருக்கமாக்க முடியாது, ஏனெனில் அது உரையை மட்டுமே செயலாக்க முடியும். எனவே Gist AI ஆனது வலையொளியின் கானொளிகாட்சியில் இருந்து படியெடுப்புகருவியால் பிரித்தெடுத்து, அதைச் சுருக்கமாக ChatGPT ஐப் பயன்படுத்த செய்கிறது.
AI-ஆல் இயங்குகின்ற PDF சுருக்கமாக்கியானது எவ்வாறு சுருக்கமாக்கிச் செயல்முறையை மேம்படுத்துகிறது?
AI-இயங்குகின்ற PDFவடிவமைப்பு சுருக்கமாக்கியானது, PDF வடிவமைப்பு கோப்பிலிருந்து மிக முக்கியமான தகவலை விரைவாகக் கண்டறிந்து பிரித்தெடுக்க மேம்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது கையேடு முறைகளைக் காட்டிலும் சுருக்கமாக்கிச் செயல்முறையை விரைவாகவும் துல்லியமாகவும் ஆக்குகிறது.
உள்ளடக்கம் திருடப்படவில்லை என்பதை சுருக்கமாக்கி எவ்வாறு உறுதி செய்கிறது?
Gist AI ஆனது சுருக்கமாக்கிடுவதற்காக, அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்கின்ற ChatGPTஐ பயன்படுத்துகிறது. ChatGPT அசல் விவரங்களை சுருக்கமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் அசல் உள்ளடக்கத்துடன் சாத்தியமான ஒற்றுமைகள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியமல்லவா.

மேலும் விவர்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.gistai.tech/எனும் இதனுடைய இணையதளமுகவரிக்கு செல்க.

gRPCஎனும் திறமூலதொலைநிலை செயல்முறை அழைப்பின் (Remote Procedure Call (RPC) ) கட்டமைப்பு

gRPC என்பது எந்தவொரு நவீன சூழலிலும் இயங்கக்கூடிய திறமூல உயர் செயல்திறனுடைய தொலைநிலை செயல்முறை அழைப்பின் (Remote Procedure Call (RPC) ) கட்டமைப்பாகும். இதன்மூலம்பணிச்சுமை சமநிலை படுத்துதல், தடமறிதல், பயனபாட்டின் நிலை சரிபார்ப்பு,ஏற்புறுதி ஆகியவற்றிற்கான செருகக்கூடிய ஆதரவுடன் தரவு மையங்களில் முழு சேவைகளையும் திறமையாக இணைக்க முடியும். சாதனங்கள், கைபேசி பயன்பாடுகள்,இணைய உலாவிகளை பின்புல சேவைகளுடன் இணைக்க விநியோகிக்கப்பட்ட கணிப்பானின் கடைசி பணிக்கும் இது பொருந்தும்.
இதை அற்புதமாக்கும் முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
மீச்சிறு சேவையாளர் பாணி கட்டமைப்பில் polyglotஇன் சேவைகளை திறம்பட இணைக்கிறது
கைபேசி சாதனங்கள், இணையஉலாவி வாடிக்கையாளர்களை பின்தள சேவைகளுடன் இணைக்கிறது
திறமையான வாடிக்கையாளர் நூலகங்களை உருவாக்குகின்றது
கம்பிவழி வலைபின்னல் இணைப்பில், எளிமையான சேவை வரையறை கட்டமைப்புடன் மிகவும் திறமையாகசெயல்படுகின்றது
யாரெல்லாம் இந்த gRPC ஐப் பயன்படுத்துகிறார்கள், ஏன் பயன்படுத்திடுகிறார்கள்?
பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய வணிக சூழலில் பல்வேறு சேவைகளை இணைக்க gRPC ஐப் பயன்படுத்துகின்றன. on-prem அல்லது மேககணினி சூழல்களில் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான சேவைகளுடன் ஒரு சில சேவைகளை இணைப்பதில் இருந்து பயன்பாட்டு மாறுபடும். துவக்ககால தத்தெடுப்பாளர்களில் சிலரின் விவரங்கள் பின்வருமாறு
Square,Netflix,CoreOS,Cockroach Labs ,Cisco logo,Juniper Networks
எளிய சேவை வரையறை: மரபொழுங்கு இடைநிலைநினைவகங்களைப் பயன்படுத்தி சேவையை வரையறுத்திடுக, ஒரு சக்திவாய்ந்த இருமஎண் நேரியலாக்குதலிற்கான கருவித்தொகுப்புடன் , மொழியை விரைவாகத் தொடங்குக வசதிவாய்ப்புகளின் உருவப்பொத்தானை அளவிடுக
இயக்க நேரத்தை, தேவ் சூழல்களை ஒரேயொரு கட்டளைவரியுடன் நிறுவுகைசெய்திடுக மேலும் தற்போதைய கட்டமைப்பைக் கொண்டு நொடிக்கு மில்லியன் கணக்கான RPC களுக்கு அளவிடுக
இது பல்வேறு மொழிகளிலும் பல்வேறுஇயங்குதளங்களிலும் செயல்படுகின்ற வசதிவாய்ப்புகளுக்கான உருவப்பொத்தானை கொண்டுள்ளது
இது பல்வேறு மொழிகளிலும் பல்வேறுஇயங்குதளங்களிலும் சேவைக்கான மொழிமரபுசார்ந்த வாடிக்கையாளர் சேவையாளர் எஞ்சியபகுதிகளை தானாக உருவாக்கிடுகின்றது
இரு திசை தாரையோட்டமும் ஒருங்கிணைந்த ஏற்புறுதி வசதிவாய்ப்பின் உருவப்பொத்தானை கொண்டுள்ளது,
இரு-திசை தாரையோட்டமும் HTTP/2-அடிப்படையிலான போக்குவரத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட செருகக்கூடிய ஏற்புறுதி கொண்டுள்ளது
எளிமையான சேவை வரையறை, விரைவாகவும் அளவிடக்கூடியதாகவும் தொடங்குகிறது, பல்வேறு மொழிகளிலும் இயங்குதளங்களிலும் செயல்படுகிறது, இதுபொதுமக்களின பயன்பாட்டிற்காக அப்பாச்சி V2.0 எனும் உரிமத்துடன் வெளியிடப்பெற்றுள்ளது ,
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://grpc.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Excel-இல் உரையை எளிதாகபல கிடைவரிசைகளாகப் பிரித்திடலாம்

பெரும்பாலும், எக்செல்லில்  தரவு நெடுவரிசைகளில் கட்டமைக்கப் பட்டிருக்கும்,மேலும் ஒரு கலணில் மட்டும் உள்ள உரையை கிடைவரிசை களாகப் பிரிக்காமல் பல நெடுவரிசைகளாகப் பிரிப்பது மிகவும் பொதுவான செயலாகும்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில், எக்செல்லில் ஒரு கலணில் மட்டும் உள்ள உரையை பல கிடைவரிசைகளாகப் பிரிக்க வேண்டியிருக்கலாம்.
அதாவது ஒரே கலணில் மட்டும் அமைந்திருக்கின்ற முகவரியை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு கிடைவரிசைகளில் ஒரே நெடுவரிசையில் அவற்றைப் பெற விரும்புவதாககொள்க.
அல்லது அவ்வாறுஒரே கலணில் மட்டும் அமைந்திருக்கின்ற முகவரியை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து அவற்றை வெவ்வேறு நெடுவரிசைகளில் ஒரே கிடைவரிசையில பெற விரும்புவதாக கொள்க.
அவ்வாறான சூழலில்இப்போது ஒரு கலணில் உள்ள உரையை விரைவாகப் பல கிடைவரிசைகளாக அல்லது நெடுவரிசைகளாகப் பிரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய சில எளிய சூத்திரங்களைையும் வழிமுறைகளையும் காண்போம் (பிரிப்பானைப்( delimiter ) பொறுத்து)
TEXTSPLIT எனும் செயலியைப் பயன்படுத்தி ஒரு கலணில் உள்ள உரையை கிடைவரிசைகளாகப் பிரித்தல்
Microsoft 365 (Windows அல்லது Mac) க்கு Excel அல்லது இணையஉலாவியின் Excelஐப் பயன்படுத்தினால், இந்த புதிய TEXTSPLIT எனும் செயலியைப் பயன்படுத்தமுடியும்.
TEXTSPLIT எனும் செயலியானது ஒரு கலணில் உள்ள உரையை கிடைவரிசைகள் அல்லது நெடுவரிசைகளாக குறிப்பிட்ட பிரிப்பானின் அடிப்படையில் பிரிக்கிறது.
இது Excel இல் உள்ள Text-to-Columns எனும் செயலியைப் போன்றே செயல்படுகிறது, ஆனால் இது ஒரு சூத்திரம் என்பதால், இது இன்னும் சிறப்பாக செயல்படுகின்றது.இந்தச் செயலியை பயன்படுத்தக்கூடிய சில எடுத்துகாட்டுகளைஇப்போது காண்போம்.
ஒரு (பிரிப்பானின்( delimiter )) அடிப்படையில் பிரித்தல்
கலண்எண் A2 இல் ஒரு முகவரி இருப்பதாக கொள்க, இந்த முகவரியின் வெவ்வேறு பகுதிகளை (அதாவது பெயர், தெருவின் பெயர், நகரம் ,மாநிலம்/ தபால் குறியீடுகளின் அடிப்படையில்) ஒரு நெடுவரிசையில் வெவ்வேறு பல்வேறு கிடைவரிசைகளாகப் பிரிக்க விரும்புவதாக கொள்க.
இதில், முகவரியின் வெவ்வேறு பகுதிகள் காற்புள்ளியால் பிரிக்கப்படுகின்றன, அதை தனித்தனிாக பிரிப்பதற்காக பிரிப்பானைப் பயன்படுத்துவோ்ம்.
கலணின் உள்ளடக்கத்தை தனித்தனி கிடைவரிசைகளாகப் பிரிக்கும் சூத்திரம் பின்வருமாறு:
=TEXTSPLIT(A2,,”, “)
மேலே கூறிய TEXTSPLITஎனும் செயலி மூன்று மதிப்புருக்களை கொண்டுள்ளது:
text- பிரிக்க விரும்பும் உரையைக் கொண்ட கலணின் (A2) குறிப்பை பயன்படுத்திய முதல் மதிப்புரு இதுவாகும்.
col_delimiter – இது இரண்டாவது மதிப்புருவாகும், இதில் பிரித்திடும் பணியானது தனித்தனி நெடுவரிசைகளாக நடக்கும். இதில், உரையை நெடுவரிசைகளுக்குப் பதிலாக கிடைவரிசைகளாகப் பிரிக்க விரும்புவதால், இந்த தருமதிப்பு காலியாக விடப்படுகின்றது.
[row_delimiter] – இது மூன்றாவது மதிப்புருவாகும், இதில் பிரிப்பானை(delimiter) குறிப்பிட வேண்டும், அதன் அடிப்படையில் உரை தனித்தனி கிடைவரிசை களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு காற்புள்ளிக்குப் பிறகும் முகவரி பிரிக்கப்பட வேண்டும் என்பதால், இங்கு “, ” எனும் காற்புள்ளிப் பிரிப்பானாகப் பயன்படுத்தப் படுகின்றது. இந்த பிரிப்பானானது(delimiter) இரட்டை மேற்கோள் குறிமுறை வரிகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
குறிப்பு: TEXTSPLIT எனும் செயலியில் மேலும் மூன்று வாய்ப்புகளுக்கான மதிப்புருக்கள் உள்ளன, இந்த எடுத்துக்காட்டில் நமக்கு அது தேவையில்லை.
மேலும், மேலே உள்ள எடுத்துக்காட்டில்,”, ” எனும் காற்புள்ளிப் பிரிப்பானாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (அதாவது, காற்புள்ளியைத் தொடர்ந்து ஒரு காலி இடைவெளி உள்ளது).
ஏனென்றால், முகவரியின் ஒவ்வொரு பகுதியும் காற்புள்ளியுடனும், அடுத்த பகுதி தொடங்கும் முன் ஒரு எழுத்திற்கான காலி இடைவெளியுடனும் இருக்கின்பறது. எழுத்திற்கான காலிஇடைவெளி இல்லாமல் காற்புள்ளி மட்டுமே இருந்தால், அதற்கேற்ப பிரிப்பானை(delimiter) மாற்றியமைத்திடலாம்.
மாற்றாக, அனைத்து வகையான சூழ்நிலைகளையும் கையாளுவதற்காக பின்வருமாறான சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்:
=TRIM(TEXTSPLIT(A2,,”,”))
இதில் TRIM எனும் செயலியானது எந்தவொரு கலணிலும் உள்ள சொற்றொடரில் முன்புறத்திலோ, பின்புறத்திலோ எழுத்துகளுக்கான காலி இடைவெளியே இல்லை என்பதை உறுதி செய்கிறது.
இரண்டு அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரிப்பான்களின்(delimiters) அடிப்படையில் பிரித்தல்
அவ்வாறான சூழ்நிலைகளையும் TEXTSPLIT எனும் செயலியானது கையாளும் திறன்மிக்கது.
எக்செல்லின் கலண்எண் A2 இல் முகவரி இருப்பதாக கொள்க , மேலும்இதில் இரு பிரிப்பான்கள்(delimiters) உள்ளன (ஒரு அடிக்கோடானது பெயரையும் முகவரியையும் பிரிக்கிறது, மேலும் ஒரு காற்புள்ளியானது முகவரியின் அனைத்து வெவ்வேறு கூறுகளையும் பிரிக்கிறது)
இந்நிலையில் கலணில் உள்ள உரையை கிடைவரிசைகளாகப் பிரிக்கும் போது, இரு பிரிப்பான்களை(delimiters) கருத்தில் கொள்கின்றவகையிலான ஒற்றை சூத்திரம் பின்வருமாறு:
=TRIM(TEXTSPLIT(A2,,{“,”,”-“}))
இதிலுள்ள TEXTSPLITஎனும் செயலியில் பின்வரும் மதிப்புருக்கள் உள்ளன:
text – இது நாம் பிரிக்க விரும்பும் கலணின் (A2) குறிப்பாகும்
col_delimiter – இது ஒரு நெடுவரிசை பிரிப்பான், ஆனால் உரையை நெடுவரிசைகளுக்குப் பதிலாக கிடைவரிசைகளாகப் பிரிக்க வேண்டும் என்பதால், இந்த மதிப்புரு காலியாக விடப்பட்டுள்ளது.
[row_delimiter] – இது மூன்றாவது மதிப்புருவாகும், இதில் பிரிப்பானை (delimiter)குறிப்பிட வேண்டும், அதன் அடிப்படையில் உரை தனித்தனி கிடைவரிசைகளாகப் பிரிக்கப்படும். முகவரியானது இருபிரிப்பான்களின் (delimiters) (அடிக்கோடு ,காற்புள்ளி) அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என்பதால், {“,”,”-“} என்றவாறு சேர்ந்த இரண்டு அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரிப்பான்களையும் சரிபார்த்திடுமாறு இதில் ம் கோரப்படுகிறது.
வரி முறிவுகளின்(Line Breaks)அடிப்படையில் பிரித்தல
கலணின் உள்ளடக்கத்தை கிடைவரிசைகளாகப் பிரிக்க விரும்பும் மற்றொரு சூழ்நிலை என்னவென்றால், கலணில் வரி முறிவுகள் இருக்கும்போது, ஒவ்வொரு வரியையும் தனித்தனி கலணில் ஒரு நெடுவரிசையில் பெற விரும்புவதாகும்.
கலண்எண் A2 இல் முகவரி உள்ளது, மேலும் இம்முகவரி பல வரி முறிவுகள் கொண்டுள்ளது.
ஒரே கலணில் வரி முறிவுகளுடன் கூடிய முகவரி
ஒரே கலணில் பல வரிகளைப் பெறுவதற்குப் பதிலாக, இந்த முகவரியின் உள்ளடக்கத்தைப் பிரிக்க விரும்புவதாககொள்க, இதன் மூலம் ஒவ்வொரு வரியையும் தனித்தனி கிடைவரிசையில் ஒரே நெடுவரிசையில் பெறுவதாக கொள்க.
TEXTSPLIT எனும் செயலியைப் பயன்படுத்தி இந்த செயலை மீண்டும் மிக விரைவாகச் செய்யலாம், அங்கு எப்படியாவது ஒரு வரி முறிப்பைப் பிரிப்பானாகப் பயன்படுத்த வேண்டும்.
அதை எவ்வாறு செய்வது?
வரிமுறிவை வழங்குகின்ற சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதை TEXTSPLIT செயலிக்குள் பிரிப்பானாகப் (delimiter) பயன்படுத்தலாம்.
அதற்கான சூத்திரம் பின்வருமாறு:
=TEXTSPLIT(A2,,CHAR(10))
இதில், CHAR(10) ஐ வரிபிரிப்பானாகப் பயன்படுத்தப் படுகின்றது, இதில் CHAR(10) ஆனது வரி முறிப்பு எழுத்தை வழங்குகின்றது.
ஒரு நெடுவரிசையில் பல கலண்களை கிடைவரிசைகளாகப் பிரித்தல்
ஒரு நெடுவரிசையில் பல கிடைவரிசைகளில் தரவு இருந்தால், ஒவ்வொரு கலணையும் பிரிக்க விரும்பினாலும், ஒரு நெடுவரிசையில் முடிவைப் பெறும் போது, TEXTSPLIT செயலியானது ஒரு ஆயுள்சேமிப்பாக செயலபடுகின்றது.
பல கலண்களில் தரவு இருக்கும்போது உரையை கிடைவரிசையாகப் பிரித்தமைத்தல்
A எனும் நெடுவரிசையில் உள்ள மூன்று கலண்களில் காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட பெயர்கள் உள்ளன, மேலும் இந்தப் பெயர்கள் அனைத்தையும் பிரிக்க விரும்புவதாகவும், ஒரே நெடுவரிசையில் தனித்தனியான கலண்களில் பெயர்களை தனித்தனியாக பெறுவதாகவும் கொள்க.
TEXTSPLIT எனும் செயலி இல்லாமல் இதைச் செய்வது ஒரு சிக்கலான சூத்திரமாக இருக்கக்கூடும், ஆனால் அது கடினமானதுஅன்று.
இதைச் செய்வதற்கான சூத்திரம் பின்வருமாறு:
=TRIM(TEXTSPLIT(TEXTJOIN(“,”,,A2:A4),,”,”))
இதிலுள்ள TEXTJOIN , TEXTSPLIT ஆகிய செயலிகள் முதலில் உரையை பிரிப்பானின் மூலம் பிரித்தபின்னர் ஒரே நெடுவரிசையில்அவற்றை இணைக்கின்றன
இந்த சூத்திரத்தின் தந்திரம் என்னவென்றால், வெவ்வேறு கலண்களில் உள்ள அனைத்து பெயர்களையும் இணைக்க TEXTJOIn எனும் செயலிப் பயன்படுத்து வதால், காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெயர்களின் ஒற்றை கிடைவரிசையைப் பெறுவோம்.
TEXTJOIN எனும் செயலியில், முதல் மதிப்புரு பிரிப்பானாகும் (delimiter) (இங்கு இது காற்புள்ளியாகும்) இது அனைத்து கலண்களின் உள்ளடக்கத்தையும் இணைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது.
இந்த கிடைவரிசை பின்னர் TEXTSPLIT செயலியில் பயன்படுத்தப்படுகிறது, இது காற்புள்ளியைப் பிரிப்பானாகப் பயன்படுத்தி பிரிக்கிறது.
எச்சரிக்கை: மைக்ரோசாப்ட் 365க்கான Excel இல் TEXTSPLIT என்பது ஒரு புதிய செயலியாகும் இதுபிற செயலிகளுடன் பின்னோக்கிய இணக்கத்தன்மையைக் கொண்டிருக்காது என்பதை நினைவில் கொள்க. எனவே, அதை பணிப் புத்தகத்தில் பயன்படுத்தி, Excel இன் பழைய பதிப்பைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அனுப்பினால், அவர்கள் பிழையைக் காண்பார்கள்.
Text-to-Columns பின்னர் இடமாற்றுதல் Transposeஎனும் வசதியைப் பயன்படுத்தி உரையை கிடைவரிசைகளாகப் பிரித்தல்
Excel இன் Microsoft 365பதிப்பைப் பயன்படுத்தவில்லை எனில், TEXTSPLIT எனும் செயலியை அணுக முடியாது.அவ்வாறான சூழலில் முதலில் உரையை நெடுவரிசைகளாகப் பிரித்து அதன் முடிவை மாற்றுவதற்கு உள்ளமைக்கப்பட்ட Text to Columns எனும் செயலியை நம்பியிருக்க வேண்டும்.
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போதுக் காண்போம்.
கலண்எண் A2 இல் ஒரு முகவரி உள்ளது, அதை பிரித்து (காற்புள்ளியை பிரிப்பானகப் பயன்படுத்தி) தனித்தனி கிடைவரிசைகளில் முடிவைப் பெற விரும்புவதாககொள்க.அவ்வாறான சூழலில்
நெடுவரிசைகளாகப் பிரிப்பதற்கு உரையின் முதல் நெடுவரிசையைப் பயன்படுத்துவதே முதல் படிமுறையாகும்.Text to Columns எனும் வசதியை பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்தி இதைச் செய்யலாம்:
முதலில் தரவு உள்ள கலணை (அல்லது கலண்களின் வரம்பின்அளவினை) தேர்ந்தெடுத்திடுக
முதலில்தரவு தாவலைக் சொடுக்குக
பின்னர் data எனும் தாவல்பொத்தானை சொடுக்குக
அதன்பின்னர் விரியும்data எனும்திரையில் Text to Columns எனும் உருவப்பொத்தானை சொடுக்குக (இது Data Tools எனும்குழுவில் உள்ளது)
பிறகு ribbonஇல் உள்ள Text to columns எனும் வாய்ப்பினை சொடுக்குக பின்னர்விரியும் ‘Convert Text to Columns Wizard’ என்பதில் Delimited எனும் வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்தபிறகு அதிலுள்ள next என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .
அதன்பின்னர் Delimited எனும் வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்து next என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .
இங்கு பிரிப்பானாக(delimiter) ‘காற்புள்ளியை’ தேர்ந்தெடுத்திடுக (மற்ற எல்லா வாய்ப்புகள் தேர்வுசெய்ததை நீக்கிவிடுக) தொடர்ந்து next என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .
அதனை தொடர்ந்து பிரிப்பானை(delimiter) தேர்ந்தெடுத்து next என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .
இதன் முடிவை பெற விரும்பும் இலக்கு கலணைத் தேர்ந்தெடுத்த, பின்னர் finish எனும்பொத்தானை சொடுக்குக. இந்த வழக்கில், நான் A4 ஐ இலக்குக் கலமாகத் தேர்ந்தெடுப்பேன்.
உடன் இலக்கு கலணில் அது தரவைப் பிரித்து காண்பிக்கின்றது, ஆனால் நாம்அதை கிடைவரிசைகளுக்குப் பதிலாக நெடுவரிசைகளில் பெற்றுள்ளோம்.
எனவே இப்போது இந்தத் தரவை மாற்றுவதற்கு transpose எனும்செயலியைப் பயன்படுத்திகொள்க.
இதைச் செய்வதற்கான படிமுறைகள் பின்வருமறு:
இடமாற்றம் செய்ய விரும்பும் கலண்களைத் தேர்ந்தெடுத்திடுக.
இந்த கலண்களை நகலெடுத்திடுக. குறுக்குவழி விசைகளானControl + C ஆகியவற்றினை பயன்படுத்தலாம் அல்லது தேர்வில் right-clickபின்னர் Copy நகலெடு என்பதைக் சொடுக்குக .
மாற்றியமைக்கப்பட்ட முடிவைப் பெற விரும்பும் இலக்குக் கலணிலேயே.
Paste Special எனும் வாய்ப்பின் மீது இடம்சுட்டியை மேலூர்தல்செய்க (மேலும் வாய்ப்புகளைக் காண்பிக்க அம்புக்குறி உருவப்பொத்தானில். transpose எனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக.
paste மதிப்பை transpose உருவப்பொத்தானாகக் சொடுக்குக
மேலே கூறியபடிமுறைகளைபின்பற்றினால் தரவு இடமாற்றம் செய்யப்பட்டு வழங்குகின்றது, பின்னர் நாம்விரும்பினால், உரையின் முடிவை நெடுவரிசைகளுக்கு நீக்கலாம்.
இதுசெயல்படும் போது, TEXTSPLIT எனும் செயலி முறையைப் போன்று நேர்த்தியாக இல்லை. இது இன்னும் பல படிமுறைகளை உள்ளடக்கியது, பின்வரும் வரம்புகளைக் கொண்டுள்ளது:
இந்த படிமுறைகளின் முடிவு தரவானது நிலையானது, TEXTSPLIT எனும்செயலி முறையைப் போன்றில்லாமல், இதன் விளைவாக மாறுகின்றவாறான. அசல் தரவை மாற்றினால், முடிவு புதுப்பிக்கப்படாது (TEXTSPLIT செயலியைப் பயன்படுத்துவதைபோன்று)
ஒரு பிரிப்பான்(delimiter) அடிப்படையில் மட்டுமே பிரிக்க முடியும், அதே சமயம் TEXTSPLIT செயலியின் மூலம், ஒன்றிற்கு மேற்பட்ட பல பிரிப்பான் களைப் (delimiters) பயன்படுத்தலாம்.
VBA(தனிப்பயன் செயலி)பயன்படுத்தி உரையை கிடைவரிசைகளாகப்பிரித்தல்
எக்செல் பதிப்பில் TEXTSPLIT எனும் செயலி இல்லையெனில், VBA ஐப் பயன்படுத்தி நம்முடைய சொந்த செயலியை உருவாக்குவது ஒரு மிகநல்ல தீர்வாக இருக்கும்.
இது பயனாளரால் வரையறுக்கப்பட்ட செயலி (UDF) என்றும் அழைக்கப்படுகிறது.
இது மிகவும் எளிமையானது, மேலும் இந்த செயலியை உருவாக்கியவுடன், பணித்தாளில் உள்ள வழக்கமானமற்ற செயலிகளைப் போன்றே இதை செயல்படுத்திப் பயன்பெறலாம்.
பின்வருமறான VBA குறிமுறைவரிகள் ஒரு கலணில் உள்ள உரையை கிடைவரிசைகளாகப் பிரிக்கின்ற செயலியை உருவாக்குகின்றது (குறிப்பிட்ட பிரிப்பானின் அடிப்படையில்).
Function SplitCellToRows(CellValue As Range, Delimiter As String)
Dim SplitValues() As String
‘Split the value by the specified delimiter into an array
SplitValues = Split(CellValue.Value, Delimiter)
‘Go thorugh each element of the array and remove any leading or trailing spaces
For i = LBound(SplitValues) To UBound(SplitValues)
SplitValues(i) = Trim(SplitValues(i))
Next i
‘Return the array
SplitCellToRows = WorksheetFunction.Transpose(SplitValues)
End Function
மேலே உள்ள செயலியானது (SplitCellToRows என அழைக்கப்படுகிறது) பின்வருமாறான இரு மதிப்புருக்களை கொண்டுள்ளது:
1.கிடைவரிசைகளாகப் பிரிக்க விரும்பும் உரையைக் கொண்ட கலணின் குறிப்பு
2.இரட்டை மேற்கோள்களில் பிரிப்பான்
உடன் இந்த குறிமுறைவரிகளை எங்கே வைத்து செயல்படுத்தி பயன்பெறுவது?என்ற கேள்வி நம்மனதில் எழும் நிற்க
இந்த குறிமுறைவரிகளை VB திருத்தியில் வைப்பதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
விசைப்பலகையில் ALT எனும் விசையை அழுத்தி பிடித்தகொண்ட, பின்னர் F11 எனும் விசையை அழுத்திடுக. உடன் VB Editor என்பதை திரையில் தோன்ற செய்கின்றது.இதற்கு மாற்றாக,Developerஎனும் தாவலின் திரைக்கு சென்றிடுக அதன்,ribbonஇல் உள்ள Visual Basic எனும் உருவப்பொத்தானை சொடுக்குக.
VB Editorஎனபதன் பட்டியில்உள்ள Insert எனும் வாய்ப்பை சொடுக்குதல் செய்த, பின்னர் Module என்பதைக் சொடுக்குக . இது ஒரு புதிய Moduleஐச் செருகப் போகிறது, அங்கு நாம் மேலே கூறிய தனிப்பயன் செயலியின் குறிமுறைவரிகளை நகலெடுத்து ஒட்டிடுக.
VB Editor புதிய Moduleஐச் செருகிடுக
மேலேகூறிய VBA குறிமுறைவரிகளை Module எனும் குறிமுறைவரிகளின் சாளரத்தில் நகலெடுத்து ஒட்டிடுக.
தொடர்ந்து கருவிப்பட்டியில் உள்ள Save எனும் உருவப்பொத்தானை சொடுக்குக(அல்லது Control + S ஆகிய விசைகளைஐப் பயன்படுத்திடுக)
குறிமுறவரிகளைச் சேமித்திடுதல்
பணித்தாளிற்குச் செல்ல VB Editorஐ மூடிடுக.
VB Editorஇல் நாம் இந்த குறிமுறைவரிகளை சேமித்து வைத்தவுடன், பணித்தாளிற்கு திரும்பிச் சென்று மற்ற வழக்கமான பணித்தாள் செயலியைப் போன்றே இந்த செயலியையும் செயல்படுத்தி பயன்பெறலாம்.
இந்த VBA தனிப்பயன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
வரிசையாகப் பிரிக்க விரும்பும் கலண்எண்A2 இல் முகவரியை
கலண்எண்A4 இல் முடிவைப் பெற, பின்வருமாறான சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்:
=SplitCellToRows(A2,”,”)
இது இரு மதிப்புருக்களைக் கொண்டுள்ளது:
A2 – இது முகவரியைக் கொண்ட கலணின் குறிப்பாகும்
“,” – இங்கு பிரிப்பானான கற்புள்ளியாக இருப்பதால், அதை இரட்டை மேற்கோள்குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.
VBA-உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தும் போது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பின்வருமாறு
இந்தச் செயலியைப் பிற்காலத்தில் மீண்டும் பயன்படுத்த விரும்பினால், மேக்ரோ-இயக்கப்பட்ட பணிப்புத்தக நீட்டிப்பு (.xlsm) மூலம் கோப்பைச் சேமிக்க வேண்டும்.
மற்ற பணித்தாள் செயலிகளைப் போன்றில்லாமல், vb உடன் உருவாக்கப்பட்ட பயனர் வரையறுக்கப்பட்ட செயலியானது (UDF) செயலியின் மதிப்புருக்கள் தொடர்பான எந்த தகவலையும் அல்லது உதவியையும் காண்பிக்காது. குறிப்பிட்ட செயலியானது எவ்வளவுமதிப்புருக்களை , எந்த வகையான மதிப்புருக்களை எடுத்துகொள்ளும் என்பதை நாமே முயன்று அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பணிப்புத்தகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்கள் தங்கள் VB பதிப்பானில் செயலியின்க் குறிமுறைவரிகளைச் சேர்க்கும் வரை, அவர்களின் கோப்பில் இந்த செயலியானது இயங்காது.
முடிவாக Microsoft 365 க்கு Excel ஐப் பயன்படுத்துகின்றோமெனில், TEXTSPLIT செயலியை தவிர வேறுஎதுவும் வேண்டியதில்லை,
TEXTSPLIT எனும் செயலிக்கான அணுகல் இல்லை எனில், அவ்வாறான சூழலில் Text to Columnsஎனும் வசதியைப் பயன்படுத்தலாம், பின்னர் transpose எனும் வசதியை பயன்படுத்தி முடிவை மாற்றலாம் அல்லது VBA ஐப் பயன்படுத்தி நம்முடைய சொந்த தனிப்பயன் செயலியை உருவாக்கலாம்.

பைதான்-2இற்கான eric எனும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்(IDE)

eric என்பது PyQt, QScintilla ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட பைதானிற்கான ஒருஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்(IDE) ஆகும்.இது ஏராளமானஅளவில் திறமூல திருத்திகள், ஒருங்கிணைக்கப்பட்ட (தொலைநிலை) பிழைத்திருத்தி, செயல்திட்ட மேலாண்மை வசதிகள், அலகு சோதனை, மறுசீரமைப்பு என்பன போன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை வழங்குகிறது.
எரிக் என்பது பைத்தானில் எழுதப்பட்ட முழுமையான வசதிவாய்ப்புகளை கொண்ட பைதானின் பதிப்பாளரும், திருத்தியும், IDEயும் ஆகும். இது அனைத்து தளங்களிலும் செயல்படுக்கூடியவகையிலான Qt UI கருவித்தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது, மிகவும் நெகிழ்வான Scintilla பதிப்பாளர் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்கிறது. இது தினசரி விரைவான ,பிழைநீக்கும் பதிப்பாளராகப் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பைதான் தொழில்முறை குறிமுறைவரிகளை வழங்கும் பல மேம்பட்ட வசதிகளை ஒருங்கிணைத்து ஒரு தொழில்முறை செயல்திட்ட மேலாண்மை கருவியாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. எரிக் ஒரு செருகுநிரல் அமைப்பை உள்ளடக்கியது, இது இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய செருகுநிரல்களுடன் IDE செயல்பாட்டை எளிதாக நீட்டிக்க அனுமதிக்கிறது.
தற்போதைய நிலையான பதிப்பு PyQt6 (Qt6 உடன்) , பைதான் 3 அடிப்படையில் eric7 ஆகும்.
முக்கியவசதிவாய்ப்புகள்
தொடரியல் சிறப்புவசதிகள், தன்னியக்க நிறைவு, அழைப்பு குறிப்புகள் கொண்ட பதிப்பாளராகும்
பைத்தானுக்கான உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பாளர்களை(தொடரியல், சிக்கல்கள், நடை,…)கொண்டுள்ளது
உள்ளமைக்கப்பட்ட ஆவணப் பார்வையாளர் ( இணைய உலாவி)
Mercurial, துனைபதிப்பிற்கான இடைமுகம் கொண்டுள்ளது
செருகுநிரல்களின் மூலம் விரிவாக்கம் செய்யக்கூடியது
இது (GPLv3)எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் ,https://eric-ide.python-projects.org/index.html எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

Previous Older Entries