இயந்திரகற்றலும்(Machine Learning),திறன்பேசியும் (Smartphone) ஒன்றிணைந்தால் மிக சிறந்த பயனை நாம் அடையமுடியம்

அது எவ்வாறு என்பதுதான் நம்மனைவரின் முன்உள்ள மிகப்பெரியகேள்வியாகும் இயந்திரகற்றல்(Machine Learning) என்பது கணினியை மனிதனை போன்று மேம்படுத்துவதாகும் திறன்பேசி (Smartphone) என்பது கையடக்க கருவியாகும் இவையிரண்டையும் ஒன்றிணைப்பது எவ்வாறு கவலையே படவேண்டாம் இதற்காக பின்வரும் இருவாய்ப்புகள் நமக்காக பயன்பட காத்திருக்கின்றன
1கைபேசிகளில் உள்ளிடுதல் வெளியிடுதல் மட்டும் செய்தல் தேவையான உள்ளீடுகளை மட்டும்கைபேசி வாயிலாக பெற்று இயந்திரகற்றல்(Machine Learning) இற்கான சேவையாளர் கணினிக்கு அனுப்பி முடிவுகளை கைபேசிவாயிலாக பெறுவது .
2 இயந்திரகற்றல்(Machine Learning) இற்கான சிறப்பு அமைவு இதற்கான கட்டமைப்பை கைபேசிகளிலேயே அமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்
இவையிரண்டிலும் நன்மையும் தீமையும் உண்டு பொதுவான குறைபாடுகளானவை
1.பேச்சொலியை அறி்ந்தேற்பு-செய்தல்,
2.உருவப்படங்களை அறி்ந்தேற்புசெய்தல்,
3.பொருட்களை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுதல்,
4. பயனாளர்களை அறி்ந்தேற்புசெய்தல்,
5. பேசும் மொழியை மொழிமாற்றம் செய்தல்
போன்றவைகளை சரிசெய்து மேம்படுத்தினால் போதும் திறன்பேசியையும் இயந்திரகற்றலிற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும்.
பின்வரும் இரு வரைச்சட்டங்கள் திறன்பேசிகளில் இயந்திர கற்றலை வலுப்படுத்துகின்றன
1. TensorFlow முதலில் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை இதற்கான தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க அவ்வாறே TensorFlowஎன்பதை
https://githup.com/tensorflow/ எனும்இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க தொடர்ந்து
allprojects {
repositories {
jcenter()
}
}
depedencies {
compile ‘org.tensorflow:tensorflow-android:+’
}
எனும் குறிமுறைவரிகளை கொண்டு tensorflowஐஆண்ட்ராய்டு பயன்பாடாக சேர்த்து கொண்டு செயல்படுத்திடுக.மேலும் செயல்முறை விளக்கபயன்பாடுகளை(Demo) பதிவிறக்கம் செய்து செயல்படுத்திபார்த்து அறிந்து கொள்க அல்லது முழுவிளக்கம் வேண்டு- மெனில் https://codelabs.developers.google.com/codelabs/tensorflow-forpoets-2-tflite/#0. என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொண்டு பயன்படுத்திடுக
2. Bender இதுஒரு நவீண இயந்திரகற்றலின் வரைச்சட்டமாகும் இது ஐஓஎஸ் பயன்பாடுகளிலும் இயற்கையான வலைபின்னலுடன் செயல்படும் தன்மைகொண்டது இதனை 1.நடப்பிலுள்ளTensorFlowஎன்பதை பயன்படுத்தியும் செயல்படுத்திடலாம்.
2. Metal PerformanceShaders(MPS) ஐ பயன்படுத்தி வரைகலைசெயலகமாக பயன்படுத்தி கொள்ளலாம் 3.நேரடியாக Benderஐ பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு https:github.com/xmartlabs/Bender/ என்ற இணையதளத்திற்குசெல்க.

Apache Mahout எனும் கட்டற்ற இயந்திரகற்றலிற்கானவரைச்சட்டம் அறிமுகம்

தற்போது ஏராளமான இயந்திரகற்றலிற்கான நூலகங்கள் நாம் பயன்படுத்த தயாராக உள்ளன அவைகளுள் அப்பாச்சி மஹூட்ஆனது மிகப்பிரபலமானதாகும் ஏனெனில் மற்ற அனைத்தும் ஆய்வு சார்பாகமட்டுமே உள்ளன இந்தApache Mahout ஆனது ஆய்விற்கு மட்டுமல்லாது பயன்பாட்டிற்கும் ஏற்றதாகவிளங்குகின்றது மற்றவைகளில்ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் அரிதாக கிடைக்கின்றன ஆனால் Apache Mahout இல் ஆவணங்களும் எடுத்துகாட்டுகளும் ஏராளமாக கிடைக்கின்றன. மற்றவைகளை-விட அதிக விரிவாக்கத்-தன்மை கொண்டது.முன்கூட்டியே வகைபடுத்தப்பட்டது நாம் கோரியாவாறு வகைபடுத்தி வடிகட்டுகின்றது k-meansபோன்ற ஒரேதன்மை கொண்ட தொகுதியாக செய்திடுகின்றது
இது ஹடூப்புடன் மிகவலுவாக கட்டப்பட்டு செயல்படுகின்றது பயனாளர்கள் அதிக அளவிலான தகவல்களைகொண்டு இதனை பயன்படுத்திகொள்ள இது எப்போதும் தயாராக இருக்கின்றது வெக்டார் மேட்ரிக்ஸ் நூலகங்களுடன் உள்ளிணைந்தே கிடைக்கின்றது ஏராளமான தன்னார்வாளர்கள் இதனை செயல்படுத்திடும்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்வுசெய்து சுமுகமாக செயல்படுவதற்காக உதவதயாராக இருக்கின்றனர் ஃபேஸ்புக், ட்விட்டர் லிங்காடின் போன்ற மிகப்பெரியஜாம்பவான்களான சமூதாய வலைபின்னல்-களி்ன் பின்புல சேவையாக இதனை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மேலும் விவரங்களுக்கு https://mahout.apache.org/என்ற இணைய பக்கத்திற்கு சென்றறி்ந்து கொள்க

Decoratorsஐ பயன்படுத்தி பைத்தான் குறிமுறைவரிகளை மேம்படுத்தி கொள்க

பைத்தான் நிரலாளர்கள் பலரும் இந்த Decorators ஐ பயன்படுத்திடுகின்றனர் ஆனால் அதனை பயன்படுத்திடுவதால் என்ன இறுதி விளைவு ஏற்படும் எனஒருசிலர் மட்டுமே புரிந்து கொண்டு அதற்குதக்கவாறு பயன்படுத்திடுகின்றனர் மற்றஅனைவரும் வழக்கம்-போன்று பயன்படுத்துவதுதானே என அதன் இறுதி விளைவுகளைபற்றி தெரிந்து கொள்ளாமலேயே பயன்படுத்தி கொள்கின்றனர் பெரும்பாலும் இந்த Decorators என்பதின் பொதுவான @decorator syntax. சேர்த்து பயன்படுத்தப்படுகின்றது வழக்கம்போன்ற நம்முடைய முதன்முதல் நிரல்தொடரை பைத்தானில் எவ்வாறு உருவாக்குகின்றனர் எனஇப்போது காண்போம்
def get_அனைவருக்கும்_வணக்கம்_function(punctuation):
“””Returns a அனைவருக்கும்,வணக்கம் function, with or without punctuation.”””
def அனைவருக்கும்_வணக்கம்():
print(“அனைவருக்கும்_வணக்கம்”)
def அனைவருக்கும்_வணக்கம்_punctuated():
print(“அனைவருக்கும் வணக்கம்!”)
if punctuation:
return அனைவருக்கும்_வணக்கம்_punctuated
else:
return அனைவருக்கும்_வணக்கம்
if __name__ == ‘__main__’:
ready_to_call = get_அனைவருக்கும்_வணக்கம்_function(punctuation=True)
ready_to_call()
# “அனைவருக்கும்வணக்கம்!” is printed
இந்த துனுக்கு குறிமுறைவரிகளில் get_அனைவருக்கும்_வணக்கம்_function எனும் செயலியானது ஒரு செயலியை திருப்புகின்றது.பின்னர் இந்த திருப்பபட்ட செயலியானது முதலில் அதற்கான செயல்ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்பின்னர் அழைக்கப்-படுகின்றது இவ்வாறான நெகிழ்வுதன்மையின் வாயிலாக செயலிகளை பயன்படுத்திக் கொள்ளவும் உருமாற்றுதல் செய்திடவும் திறவுகோலாக இந்த Decoratorsஇன் செயல்கள் அமைகின்றன அடுத்து ஒரு எடுத்துகாட்டினை காண்போம்
import datetime
import time
from app_config import log
def log_performance(func):
def wrapper():
datetime_now = datetime.datetime.now()
log.debug(f”Function {func.__name__} being called at {datetime_now}”)
start_time = time.time()
func()
log.debug(f”Took {time.time() – start_time} seconds”)
return wrapper
@log_performance
def calculate_squares():
for i in range(10_000_000):
i_squared = i**2
if __name__ == ‘__main__’:
calculate_squares()
மேலே கானும் துனுக்கு குறிமுறைவரிகளில் log_performancedecorator என்பதை ஒரு செயலிக்குள் பயன்படுத்திடுகின்றோம் இது எண்களில் வர்க்கமூலங்களை 0 முதல் 10000000வரை கணக்கீடுசெய்கின்றது இதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்
$ python decorator_test.py
Function calculate_squares being called at 2018-08-23 12:39:02.112904
Took 2.5019338130950928 seconds
decorator என்பது நம்முடைய குறிமுறைவரிகளில் நெகிழ்வானதும் பராமரிக்க எளிதானதாகவும் செய்ய ஒரு சிறந்த வழியாகஅமைகின்றது. செயல்பாடுகளை இயக்கநேரத்தில் இது சரிபார்ப்பு செய்திடுகின்றது பிழைத்திருத்தவும் செய்வதற்கும் இது பயன்படுகின்றது தனிப்பயன்decoratorஐ நம்முடைய குறிமுறைவரிகளில் எழுதுவது மிகஎளிது, மூன்றாம் தரப்பு குறியீட்டைப் புரிந்துகொள்வதும், ஏற்கனவே எழுதப்பட்ட decoratorஐ புரிந்துகொண்டும் பயன்படுத்தி கொள்க
குறிப்பு இங்குஇந்த python decorator ஐ பற்றி முழுமையாக விளக்கமுற்பட்டால் அதிக பக்கங்களுக்கு நீளும் என்பதால் இரண்டு எடுத்துகாட்டுகளை மட்டும் வழங்கியுள்ளேன் மேலும் விவரங்களுக்கு https://www.learnpython.org/en/Decorators/ எனும் இணைய பக்கத்திற்கு சென்றறிந்து பயன்படுத்தி கொள்க.

மெமோஜி போன்று கூகுளின் ஜிபோர்டில் மினிஎனும் ஸ்டிக்கரையும் பயன்படுத்தி கொள்க

இயல்புநிலை செய்தி பயன்பாடுகளில் மெமோஜியின் மேம்படுத்தப்பட்ட கூகுளின் ஜிபோர்டில் வாடிக்கையாளர் விரும்பியவாறு உருவாக்கிடும் ஸ்டிக்கராக மினி எனும் பயன்பாடு உள்ளது எந்தவொரு பயன்பாடுகளிலும் இந்த Gboardஇனுடைய new Minisஐ பயன்படுத்தி கொள்ளமுடியும் மிகமுக்கியமாக நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பிடும்-போது அதனோடு ஸ்டிக்கர்களை சேர்த்து அனுப்புவதற்காக இதனை பயன்படுத்தி-கொள்ளலாம் மிகமுக்கியமாக மெமோஜியை போன்றே இதையும் பயன்படுத்தி கொள்ளமுடியும்
இதற்காக ஜிபோர்டினை ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்து நம்முடைய அடிப்படை விசைப்பலகையாக அமைத்து கொள்க தொடர்ந்து இடைவெளிபட்டைக்கு இடதுபுறமுள்ள Emoji எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் திரையில் stickers எனும் உருவபொத்தானை தெரிவுசெய்திடுக அதனை தொடர்ந்து miniஎனும் உருவப்பொத்தானின் திரைக்கு செல்க அதில் Createஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்தேவையான selfieபடத்தை உருவாக்கிடுக அதன்பின்னர் கூகுளின் செயற்கை அறிவு அதில் செயல்படும்வரை காத்திருக்கவும் இந்த miniஎனும் தாவியின் திரையில் “Bold” , “Sweet” ஆகிய இரண்டில் ஒன்றிலுள்ள ஏராளமான வாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொள்க அதன்பின்னர் Stickersதாவியின் திரையில் நம்முடைய புதிய miniஐ தேடிபிடித்திடுக தொடர்ந்து நம்முடைய தானியங்கியாக உருவாகிய ஸ்டிக்கரை தெரிவு செய்து நம்முடைய நண்பர்களுக்கு அனுப்பிவைத்திடுக

அனைத்து தளங்களிலும்செயல்படும் கைபேசி பயன்பாடுகளை விரைவாக உருவாக்க உதவிடும் Ionicஎனும்வரைச்சட்டம்

இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்படும் கைபேசி பயன்பாடுகளை விரைவாக உருவாக்க உதவிடும்SDK வரைச்சட்டமாகும் HTML, CSS,Javascricpt ஆகிய இணைய தொழில் நுட்பத்துடன் பயனாளர் இடைமுகத்துடன் கூடிய கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்காக ஏராளமான கருவிகளையும் சேவைகளையும் தன்னகத்தே கொண்டதொரு வரைச்சட்டமாக இது விளங்குகின்றது உருவாக்குநர்களின் எளிய நண்பனாக விளங்குகின்றது ஒரே குறிமுறைவரிகளை கொண்டு ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகியன செயல்படும் எந்தவொரு கைபேசிக்கும் ஏற்றவாறான பயன்பாடுகளைஉருவாக்கிட இதுஅனுமதிக்கின்றது இது AngualrJSஉடன் இணைந்து இருப்பதால் மிகத்திறனுடைய கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவது எளிதாகஇருக்கின்றது இது அனைத்து மொழிகளையும் ஆதரிக்கின்றது இதுCordovaஉடன் இணைந்து செயல்படுவதால் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகியன செயல்படும் எந்தவொரு கைபேசிக்கும் ஏற்றவாறான உருவாக்கிய பயன்பாடுகளை சரியாக செயல்படுகின்றதாவென பரிசோதித்திடுகின்றது இதில் Cordova கூடுதல் இணைப்பாக விளங்குவதால் கைபேசியின் கேமரா, இடஅமைவு பேட்டரி, உள்நுழைவு அனுகுதல் போன்ற வசதிகளை பயன்படுத்தி கொள்ள இயலுமை செய்கின்றது மேலும் விவரங்களுக்கு https://ionicframework.com/ என்ற இணையதளத்திற்கு செல்க

மின்புத்தகங்களை கையாள காலிபர் எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்ளலாம்


காலிபர் என்பது மின்புத்தகங்களை கொண்டு பேரளவு மின்-நூலகமாக பராமரிப்பவர்களுக்காக உதவிடும் ஒரு கட்டற்றபயன்பாடாகும்
இது 31அக்டோபர்2006 இல் தன்னுடைய முதல் பயனத்தை துவங்கி இன்று 200 இற்குமேற்பட்ட நாடுகளிலும் பல்வேறுமொழிகளிலும் இலட்சகணக்கானோர் பயன்படுத்திகொள்ளும்வண்ணம் கட்டற்றபயன்பாடாக உருமாறி வளர்ந்து வந்துள்ளது
மின்புத்தகம் எந்த வடிவமைப்பில் இருந்தாலும் இதன்மூலம் சுலபமாக கையாளமுடியும் மேலும் மின்புத்தகத்தின் தலைப்பு,ஆசிரியர், வெளியிட்ட நாள் ,மின்- நூலகத்தில் சேர்த்தநாள்,புத்தகத்தின் அளவு ,அதன் விலை என்பன போன்ற எந்த வகையிலும் மின்புத்தங்களை தொகுத்திட இது அனுமதிக்கின்றது
குறிப்பிட்ட மின்-புத்தகத்தை பற்றிய சுருக்கமான விவரத்தை எளிதில் அடையாளம் காண உருவாக்கிகொள்ளும் வசதியும் ,ஏதனும் ஒரு குறிச்சொல்லை கொண்டு எந்த மின்-புத்தகத்தில் அதுஇருக்கின்றது என தேடிபிடித்திடும் கூடுதலான மேம்பட்ட தேடுதல் வசதியும் இதில்உள்ளது
இணையத்தின் மூலம் நடப்பில் இருக்கும் விவரங்களை அல்லது ISBNதகவல்களை உயர்மட்ட தரவுகளை கொண்டு தேவையான மின்-புத்தகங்களை தேடிபிடித்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் இது உதவுகின்றது
இதிலுள்ள இதனுடைய உருமாற்றும் பொறியானது மின்புத்தகம் எந்த வடிவமைப்பில் இருந்தாலும் அதிலுள்ள எழுத்துருக்கள் எந்த வடிவில் அல்லது அளவில் இருந்தாலும் மிகஎளிதாக நாம் படிப்பதற்கேற்ப புத்தகத்தின் உள்ளடக்கங்களை அப்படியே உருமாற்றி வழங்குகின்றது
அதுமட்டுமல்லாது பயனாளர் எந்தவகை சாதனங்களை வைத்திருந்தாலும் அதிலிருந்த படியே மின்புத்தகங்களை படித்திட விரும்பினால் அதற்கேற்ப மிகபொருத்தமாக மின்புத்தகத்தின் உருவமைப்பை தானாகவே உருமாற்றி வழங்குகின்றது.
தற்போது உலகில் இணையத்தின் வாயிலாக வெளியிடபடும் The New York Times ,The Wall Street Journal ,The Economist ,Time ,Newsweek ,The Guardianஎன்பன போன்ற அனைத்து மின்-செய்திகளையும் முழுமையாக அதனுடைய செய்தியோடைவழியாக தானாகவே பெற்று நாம் படித்திடும் வண்ணம் அவ்வப்போது நமக்கு இது வழங்குகின்றது
மின்-புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணையை காணுதல்,பக்க அடையாளத்தை தேடிபிடித்தல் , மேற்கோள் செய்தல், நகலெடுத்தல், எழுத்துருவை உள்பொதியசெய்தல் அல்லது வாடிக்கையாளர் விரும்பியவாறு மின்புத்தகத்தை பயன்படுத்திடவும் இது அனுமதிக்கின்றது
smartphone, Kindle என்பனபோன்ற எந்தவகை சதானத்திலிருந்தும் இதிலுள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்டுள்ள தேடுபொறியை கொண்டு இணையத்தில் உலாவந்து நாம் விரும்பும் தலைப்பிலுள்ள மின்புத்தகத்தினை இதன்மூலம் தேடி சேகரித்துகொள்ள முடியும்

இது விண்டோ ,லினக்ஸ், மேக்ஸ் போன்ற எந்த வகை இயக்கமுறைமையிலும் செயல்படக்கூடியது
இதன் முகப்புசாளரத்தில் முதன்மை கருவிபட்டை ,மின்புத்தகத்தின் வகைபலகம், மின்புத்தகங்களை பட்டியலிடும் பலகம், மின்புத்தகத்தை முன்காட்சியாக காணும் பலகம் என இதன் முதன்மை சாளரம் பிரிக்கபட்டுள்ளது குறிப்பிட்ட மின்புத்தகத்தினை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது முதன்மை கருவிபட்டையிலுள்ள view என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குதல் வாயிலாக நாம் விரும்பும் மின்-புத்தகத்தினை திறந்து படிக்கமுடியும்
இதன் முதன்மை கருவிபட்டையிலுள்ள start content server என்ற கருவியை தெரிவுசெய்து சொடுக்குதலின் மூலம் Http://localhost:8080/ என்பன போன்ற வாயிலை உருவாக்கி அதன் வழியாக வளாகபிணையத்தில் மின்புத்தகங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியும் இதில்உள்ளது
இதனை பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் இதனை பதிவிறக்கம் செய்திடவும்
http://calibre-ebook.com/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க.

நன்றி கணியம் இணைய இதழ்

Bluefishஎனும் கட்டற்ற உரைபதிப்பு பயன்பாடு

Bluefishஎனும் கட்டற்ற உரைபதிப்பு பயன் பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட உதவிடும் விரிவாக்க செயலை அனுமதிக்கின்றது. மேலும் புதிய மொழிகளையும் ,புதியவசதிவாய்ப்புகளையும் சேர்த்து கொள்ள இது அனுமதிக்கின்றது .தற்போது Bluefish2.2.4 எனும் இதனுடைய புதிய பதிப்பு விண்டோவில் செயல்படுமாறு வெளியிடபட்டுள்ளது


1
இது விண்டோ ,மேக் ,லினக்ஸ் போன்ற எந்தவொரு இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறும் , ஒரேஉரைபதிப்பானானது குறியீட்டு மொழி (Markup Language)போன்ற பல்வேறு மொழிகளிலும் செயல்படும் வண்ணம் மிகத்திறன்வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது
மிகப்பெரிய கோப்புகளையும் ,ஒரே சமயத்தில் ஏராளமான அளவிலான கோப்புகளை திறந்து கையாளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டிருந்தாலும் இதனுடைய கோப்பின் அளவு 4.2 எம்பி ஆகும்.
இது மிகப்பிரபலமான கட்டளைவரித்தொடர் மொழிகளான(Programming language) சி ,சி++ ஜாவா, போன்றவைகளையும் ,குறியீட்டு மொழிகளான (Markup Language) ஹெச்டிஎம்எல்5, கோல்டு பியூஷன் மார்க்அப் லாங்குவேஜ் ஆகியவைகளையும் ,உரைநிரல் மொழிகளான(Scripting language)பியெர்ல், பைதான் ,ரூபி ,விபி ஸ்கிரிப்பட், ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ் , சீன ,ஜப்பானிய மொழி போன்ற பதினேழு மொழிகளுக்குள் மொழிமாற்றம் செய்திடும் திறன்மிகுந்தது ஆகும் இது இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஒதுக்கீடு செய்வதிலும் சேவையாளர் பணியிலும் மிகசிறப்பாக செயல்படுகின்றது

2
இதில் வழக்கமான உரைபதிபபான்களில் உள்ளவறு கட்டளைபட்டை, கருவிகளின் பட்டை, குறிப்பிட்ட செயலுக்கு உடன் தாவிசெல்வதற்கான தாவிபட்டை, கோப்பினை தேடிபிடிப்பதாற்கான தேடுபொறி , உரைகளை திருத்திடஉதவிடும் பதிப்புதிரை என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது .திரையின் கீழ்பகுதியிலும் வழக்கமான நிலைபட்டை, கட்டளைவரிகளின் வெளியீட்டு பகுதி ஆகியவை உள்ளன. இதன் திரைவடிவமைப்பானது வாடிக்கையாளர் விரும்பியவாறு குறிப்பிட்ட பகுதி அல்லது பலகம் திரையில் தோன்றவேண்டுமெனில் தோன்றசெய்யவும் குறிப்பிட்ட பகுதி மறையசெய்யவேண்டுமெனில் அவ்வாறே மறையசெய்யவும் அனுமதிக்கின்றது
நம்மால் அடிக்கடி பயன்படுத்தபடும் கட்டளைகளை விரைவாக அனுகுவதற்கேற்ப அவைகளை முதன்மையான இடத்தில் வைத்து கொள்ளுமாறு அனுமதிக்கின்றது. இதனுடைய திரையின் இடதுபுற பலகத்தில் கோப்பினை தேடிபிடிப்பதாற்கான (file browser)என்றவசதி, சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) சேர்ப்பதற்கான வசதி,பக்க அடையாளக் குறியிடும் (bookmark)வசதி ,எழுத்து அமைவு பட(Character map)வசதி ஆகியவை இதில் கிடைக்கின்றன

திரையின் இடதுபுற பலகத்தில் உள்ள கோப்பினை தேடிபிடிப்பதற்கான (file browser)வசதியின்மூலம் கோப்பினை புதியதாக உருவாக்குதல், ஏற்கனவே உள்ள கோப்பினை பெயர்மாற்றம் செய்தல், நிரந்தரமாக நீக்கம் செய்திடுதல் என்பனபோன்ற பல்வேறு பணிகளை வழக்கமான உரைபதிப்பானில் செய்வதைபோன்று செயல்படுத்தலாம் ஒருகுறிப்பிட்ட செயல்திட்ட பணிக்காக பல்வேறு குறிமுறைகளைஅல்லது குறிப்பிட்ட குறிமுறையை அடிப்படையாக கொண்ட தனித்தனி கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அல்லது தொகுதியாக உருவாக்கிட இது அனுமதிக்கின்றது வடிகட்டுதல்,காலியான வரிகளை நீக்கம் செய்தல் ,டாஸ் கட்டளை வரிகளை யுனிக்ஸ் கட்டளை வரியாக உருமாற்றம் செய்தல், திரும்ப திரும்பவரும் வரிகளை நீக்கம் செய்தல், குறிமுறைகளை வாடிக்கையாளர் விரும்பவண்ணம் வடிவமைப்பை அழகுபடுத்தி செம்மைபடுத்துதல், கோப்பினை பதிப்பித்தலுக்கான கட்டளை வரிகளை சேர்த்தல் என்பன போன்ற வழக்கமான பல்வேறு உரைபதிப்பு செயல்களை இதில் செய்திடமுடியும் .பல்வேறு கோப்புகளை ஒரேசமயத்தில் திறந்து பணிபுரியும் போது ஒரு குழுவான குறிமுறைகள் மற்ற கோப்புகளிலும் உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதி இதில் உள்ளது இந்த உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதியின்மூலம் குறிப்பிட்ட உரைத்தொகுப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த உரைபதிப்பான் ஆனது அடையாளக் குறியீடு (bookmark) செய்து கொள்ள அனுமதிக்கின்றது இணைய பக்கங்களை உருவாக்கிடும் போது எழுதப்படும் ஏராளமான கட்டளை வரிகளில் உள்ள செயல் தட்டங்களில எழுத்துபிழைகளை சரிசெய்யஉதவும்Spell check எனும் வசதி இதில் உள்ளது .
ஜாவா, ஹெச்டிஎம்எல்5 ,விபி ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளின் கட்டளை வரிகளை சிறுசிறு குறிமுறைகளாக (snippets of code) தனித்தனி தொகுதியாக பிரித்து வைத்துகொள்ளும் வசதி இதில் உள்ளதால் குறிப்பிட்ட குறிமுறைகளின் வரியானது எந்த மொழியில் எழுதபட்டுள்ளது என குழம்பி தவிக்காமல் தெளிவுபடுத்த இது உதவுகின்றது
மிகப்பெரிய செயற்திட்டங்களில் பல்வேறுகோப்புகளை உருவாக்கவேண்டிய நேரங்களில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும் தேடிபிடித்து திறப்பதற்கு மிகச்சிரமமாக உள்ள நிலையில் இடதுபுறபலகத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Open Advanced என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் கோப்புகள் அமைப்பின் வகைவாரியாக (.css, .java, .html)திரையில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையில் உள்ள கோப்புகளில் நாம்விரும்பும்கோப்பினை திறந்து கொள்ளமுடியும் இதே வழிமுறையில் துனைகோப்பகத்தில் உள்ள கோப்புகளையும் தேடிபிடித்து திறந்து கொள்ளமுடியும்
குறிப்பிட்ட தவறான சொல்லை அல்லது சொற்றொடரை திருத்தம் செய்து சரியான சொல்லை அல்லது சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான find and replaceஎனும் வசதி இதில் உள்ளது
இலக்கண பிழைகளையும், எழுத்துபிழைகளயும் சுட்டிகாட்டிடும் வசதி சொல்லை அல்லது சொற்றொடரை தட்டச்சு செய்திடும்போது மிகுதி எழுத்துகளை தானாகவே நிரப்பி கொள்ளும் வசதி ,உரையாடல் பெட்டி வழிகாட்டி உரையாடல் பெட்டி போன்றவைகளை தோன்றசெய்தல் என்பனபோன்ற வழக்கமான உரைபதிப்பானின் அனைத்து செயல்களையும் செய்யும் திறன் கொண்டதாகும் இதனைபற்றி மேலும் அறிந்து கொள்ள http://bluefish.openoffice.nl/index.html என்ற இணைய தளத்திற்கு செல்க

நன்றி கணியம் மின்னிதழ்

Previous Older Entries