கீயூப்ஸ் எனும் புதிய பாதுகாப்பான இயக்கமுறைமை

இது ஒரு பகுதியான (compartments)மேம்பட்ட பாதுகாப்புமிகுந்த இயக்கமுறைமையாகும் இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இயக்கமுறைமையாகும் இதனை மிகஎளிதாக நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம் விண்டோ ஓஎஸ்எக்ஸ் போன்ற பிரபலமான இயக்கமுறைமைகள் அனைத்தும் முன்கூட்டியே நிறுவுகைசெய்யபட்ட மற்ற பயன்பாடுகளை சார்ந்து இயங்குபவையாக உள்ளன. உதாரணமாக இதில் முன்கூட்டியே நிறுவுகை செய்யபட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வாயிலாக நாம் விரும்புவதை பதிவிறக்கம் செய்திடும்போது அதனோடு கூடவே தீய நச்சுநிரலும் ஒட்டிகொண்டு நம்முடைய கணினியில் பதிவிறக்கம் ஆவது மட்டுமல்லாமல் அவை தானாகவே இயங்கத்துவங்கி நம்முடைய கணினியின் இயக்கத்தை முடக்கிவிடும் ஏனெனில் இவைகளை தடுத்திடும் அல்லது வடிவட்டிடும் திறன்மேம்படுத்தபட்டு நிகழ்நிலை படுத்தாமல் உள்ளது ஆனால் இந்த பதிய கீயூப் இயக்கமுறைமையானது இயக்கமுறைமை அளவிலேயே பாதுகாப்பினை வலுவானதாக ஆக்கி அதிகபாதுகாப்புத்திறனுடன் விளங்குகின்றது. அதனால் இதனை பாதுகாப்பினை சார்ந்த இயக்கமுறைமை என அழைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பயனாளர் விரும்பியவாறு புதிய பாதுகாப்பினை வரையறை செய்து கொள்ளலாம் தனிநபர் ஒருவர் இணைய வங்கியை கையாளுதல்,பொருட்களை கொள்முதல் செய்தல், தனிப்பட்ட பணிகளை செய்தல் ஆகிய செயல்களை இந்த இயக்கமுறைமையின் மெய்நிகர் கணினி பயன்பாட்டின் வாயி்லாக தனித்தனி தொகுதியாக(compartment system) ஒன்றுக்கொன்று இடைஞ்சல் எதுவமில்லாமல் மிகஎளிதாக மேற்கொள்ளமுடியும் .

10

இதிலுள்ள Domoஎன்பது மேஜைக்கணினி மேலாளராக உள்நுழைவு செயல்களனைத்தையும் கையாளும் திறனுடன் செயல்படுகின்றது இதனை செயல்படுத்திடுவதற்காக Start=>SystemTools=>Konsole=> என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்திடுக வரைகளை இடைமுகப்புடன் கூடிய Qubes Manager என்பதை கொண்டு மெய்நிகர்கணினி பயன்பாடுகள் மெய்நிகர் மாதிரி படிமங்கள் ஆகியவற்றினை கையாளமுடியும் இதனை செயல்படுத்தி கொள்வதற்காக Sart==>SystemTools=>QubsMAnager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக இந்த இயக்கமுறைமையின் திரையில் Syntax:Qvm-run -a <domain> “<app name> {arguments}” என்றவாற கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக எந்தவொரு பயன்பாட்டினையும் அதன் பெயரை உள்ளீடு செய்து செயல்பட செய்திடுக தொகுதிகளுக்கிடையேகோப்புகளை நகலெடுத்து ஒட்டுதல் ,இயக்கநேர நினைவகத்தை நிருவகித்தல் போன்றபணிகளை இந்த கியூப் இயக்கமுறைமையில் செயல்படுத்திடமுடியும் மேலும் விவரங்களுக்கு https://www.qubes-os.org/getting-started/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

பென்சில் எனும் வரைகலை இடைமுகப்பு கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

  இதுவரைபடங்களை விரைவாக வரைவதற்கு உதவும் ஒருசிறந்த வரைகலை இடைமுகப்பு கட்டற்ற பயன்பாடாகும் இது அனைத்து இயக்கமுறைமைகளில் மட்டுமல்லாது ஃபயர் ஃபாக்ஸின் கூடுதல் இணைப்பானாக செயல்படும் திறன்கொண்டதாகும் .இதனைhttp://pencil.evolus.vn/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இதன் முகப்புதிரையானது வரைவதற்கான பணிஇடம், வரைவதற்கான கருவிகள், பல்வேறு உறுப்புகளடங்கிய மிதக்கும் பலகம் ஆகிய இணைந்து மிகஎளிமையானதாக உள்ளது நாம் படம்வரைவதற்காக பயன்படுத்துவதற்கான ஏராளமான பொருட்களும் இதில் தயாரக உள்ளன, பயனாளர்கள் Group,Style,Arrangements போன்ற கட்டளைகளை பயன்படுத்தி தாம் வரையும் படத்தினை மெருகூட்டலாம் மேலும் தேவையெனில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து அதிலுள்ள இதைவிட கூடுதலான கட்டளைகளை கொண்டு படத்தின் தோற்றத்தினை மேம்படுத்தி கொள்ளலாம் . இந்த பயன்பாடானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயக்கமுறைமைகளிலும் மிக அருமையாக செயல்படும் திறன்கொண்டதாகும் இதில் ஏராளமான அளவில் மாதிரிகள் உள்ளன அவைகளிலிருந்து தமக்குத்தேவையானதை தெரிவுசெய்து மேம்படுத்தி கொள்லலாம். மேலும் தேவையெனில் Tools=>Install new collection=>Selectlocation of download=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படங்களின் தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து அவைகளிலிருந்து நாம் விரும்புவதை தெரிவுசெய்து மேம்படுத்தி கொள்ளலாம். ஐஓஎஸ் பயன்பாடுகளையும் இணைய பயன்பாடுகளையும் இதிலுள்ள மாதிரிபடிமங்களிலிருந்து வடிவமைப்பு செய்துகொள்ளமுடியும். SVG,PNG,PDF,ODT போன்ற பல்வேறு வடிவமைப்புகளில் இதனுடைய கோப்பினை பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும் . புதியவர்கள் தாமே சுயமாக முயன்று சிறந்த பயன்பாடுகளி்ன் உருவாக்குநர்களாக இதன்மூலம் வளரமுடியும் மேலும் தகவல்களுக்கும் விவரங்களுக்கும் http://pencil.evolvus.vn/ எனும் இணைய பக்கத்திற்கு சென்று அறிந்து இந்த பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க .

9

எக்செல்லில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான ஆலோசனைகள்

எக்செல் எனும் பயன்பாடானது தரவுகளை கையாளச்செய்து நாம் விரும்பும் வகையில் அதன் வெளியீடுகளை வழங்குவதில் மிகச்சிறந்த கருவியாக உள்ளது. இவ்வாறான தரவுகளை ஒரு எக்செல்தாளிற்குள் எவ்வாறு உள்ளீடு செய்வது என இப்போதுகாண்போம்

1 எக்செல்தாளிற்குள் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு எப்போதும் படிவங்களையே பயன்படுத்திகொள்க இதற்காக விரைவு அனுகுதல் கருவிபட்டையை(Quick Access Toolbar) பயன்படுத்திகொள்க முதலில் Quick Access Toolbar என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Customize quick Access Toolbar என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்All Commands எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதன்கீழ் விரியும் பட்டியில் Form என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த படிவபகுதியில்add எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Data Forms எனும் உருவபொத்தான் ஆனது இந்த விரைவு அனுகுதல் கருவிபட்டையில் அமர்ந்துவிடும் அதன்பின்னர் தரவுகளை உள்ளீடு செய்வதற்கான நெடுவரிசை கிடைவரிசை கலண்களை இந்த விரைவு அனுகுதல் கருவிகளின்பட்டையிலுள்ளநாம் உருவாக்கிய Data Forms எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மேல்மீ்ட்பு படிவமாக திரையில் மிதக்கும் அதில் நாம் விரும்பியதரவுகளை உள்ளீடு செய்துகொண்டு உள்ளீடட்டு விசையை அழுத்துக

2 இவ்வாறு எக்செல் தாளில் பின்ன எண்களை உள்ளீடு செய்திடும்போது புள்ளிக்கு பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் எண்கள் இருக்குமாறு செய்திடுவதற்காக அதாவது மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்திடும்போது அவை புள்ளிக்கு பிறகு இரண்டு மட்டும் இருக்குவேண்டும் எனவிரும்புவோம் இந்நிலையில் திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Options=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக பின்னர்விரியும் Excel Options எனும் உரையாடல்பெட்டியில்Advancedஎனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் அதன்கீழ் விரியும் வாய்ப்புகளில் Automatically Insert a decimal point” என்பதை தெரிவுசெய்து கொண்டு அதன்அருகில் புள்ளிக்கு பிறகு இருக்கவேண்டிய எண்கள் இரண்டு என தெரிவுசெய்துகொள்க தரவுகளை உள்ளீடு செய்திடும் பணிமுடிவடைந்ததும் இந்த வாய்பினை தெரிவுசெய்யாது விட்டிடலாம்

3 எண்களை குறிப்பிடும்போது 7th,, 2nd, 3rd 1stஎன்றவாறு குறிப்பிடுவதற்காக =A1&IF(OR(VALUE(RIGHT(A1,2))={11,12,13}),”th”,IF(OR(VALUE(RIGHT(A1))={1,2,3}),CHOOSE(RIGHT(A1),”st”,”nd”,”rd”),”th”))

என்றவாறு வாய்ப்பாடுகளை அமைத்துகொள்க

4 தற்போது நாம் பணிபரிந்துகொண்டிருக்கும் கலண்களுக்கு மேல் உள்ள கலணை அல்லது நெடுவரிசையை நகலெடுத்து ஒட்டிடவிரும்பும்போது Ctrl + D. ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் அவைகளில் உள்ள தரவுகள் மட்டுமல்லாது வாய்ப்பாடுகளும் வடிவமைப்புகளும் சேர்த்து நகலெடுத்துகொள்ளும் பிறகு தேவையான இடத்தில் இதனை ஒட்டிகொள்க

5 எக்செல்தாளில் தரவுகளை உள்ளீடு செய்திடும்போது இந்த தரவுகள் எந்த நாளில் உள்ளீடு செய்யப்டடது என அறிந்துகொள்வதற்காக நடப்பு நாளினை உள்ளீடு செய்திடவிழைவோம் அப்போது Ctrl + ; ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக நேரத்தினை உள்ளீடு செய்திட Ctrl + Shift + :ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. நாம் எக்செல்தாளினை பயன்படுத்தும் போதெல்லாம் நாளும் நேரமும் பதிவு ஆவதற்காக TODAY(), NOW() ஆகிய இரு செயலியை பயன்படுத்தி கொள்க

6 ஒன்றிற்கு மேற்பட்ட கலண்களை தெரிவுசெய்திடும்போது Ctrl + Enter ஆகிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் செயலில் இருக்கும் கலண்களின் உள்ளடக்கமானது அதாவது அதிலுள்ள வாய்ப்பாடானது மற்ற கலண்களிலும் உள்ளிணைக்கப்பட்டு தெரிவுசெய்திடுவதற்காக தயாராகிவிடும்

7 நெடுவரிசைகளில் ஒரேமாதிரியாகஎண்களை அமைத்திடுவதற்காக முதலிரு கலண்களில் மட்டும் தரவுகளை உள்ளீடு செய்துகொண்டு Alt + Down கிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக

8 நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பணிக்கோப்பில் ஒரு பணித்தாளிலிருந்து மற்றொரு பணித்தாளிற்க விரைவாக மாறிச்செல்வதற்காக Ctrl + Pg Up/Pg Dn கிய இரு விசைகளை சேர்த்து அழுத்துக

மேலும் எக்செல்தொடர்பான ஆலோசனைக்கு http:/easyexcell.org/ எனும் தளத்திற்கு செல்க

லேப்டாப், டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஐபேடில் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சலை கையாளலாம்,விளையாட்டுகளை விளையாடலாம் இசைகளை கேட்டு மகிழலாம் மின்புத்தகங்களை படித்திடலாம்

டேப்ளெட்களிலும் இவ்வாறே செய்திடலாம்.ஆயினும் டேப்ளெட்களில் கையடக்க பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்திடமுடியும்

ஆனால் லேப்டாப்பில் வழக்கமான மேஜைக்கணியில் பயன்படுத்தபடும் Microsoft Office, Photoshop , complex video editing என்பனபோன்ற அனைத்து பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்பெறமுடியும்

விண்டோ டேப்ளெட்டில் மட்டும் Surface Pro 4 என்பன போன்ற வழக்கமான பயன்பாடுகளை லேப்டாப்போன்று செயல்படச்செய்து பயன்பெறமுடியும்

விண்டோ பயன்பாடுகளை விண்டோ டேப்ளெட்டிலும் லேப்டாப்பிலும் மேஜைக்கணினிபோன்ற செயல்படசெய்து பயன்பெறமுடியும்

அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் ஆகியவற்றின் பயன்பாடுகளை லேப்டாப்பில் செயல்படுத்தி பயன்பெறமுடியும்

வழக்கமான டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் யூஎஸ்பி வாயில்கள் இல்லை அதனால் சுட்டியை அல்லது மற்ற கையடக்க நினைவகத்தை இவைகளில் இணைத்து பயன்படுத்திடமுடியாது

ஆனால் லேப்டாப்பில் இவைகளை இணைத்து வழக்கமான மேஜைகணினி போன்ற ப.யன்படுத்தி கொள்ளமுடியும்

மேலும் டேப்ளெட்,ஐபேடு ஆகியவற்றில் ஒரேசீரான இணைய இணைப்பினை மட்டுமே கையாளமுடியும்

மிகைவேக இணைய இணைப்பு எனில் லேப்டாப்தான் சிறந்ததாகும்

விண்டோ 7 இயக்கமுறைமையில் செயல்படும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டில் வெவ்வேறு இணையதளங்களை எவ்வாறு பார்வையிடுவது?

பொதுவாக அனைத்து இணைய உலாவிகளிலும் அவைகளிலுள்ள தாவிபொத்தான்களின் வாயிலாக தனித்தனியான நாம் விரும்பும் இணைய பக்கங்களை புதிய சாளரத்தை திறக்காமலேயே பயன்படுத்திகொள்ளும் வசதி நீண்டநாட்களாக உள்ளது அதனை நடைமுறையில் IE எனும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியில் செயல்படுத்திகொள்வதற்காக முதலில் IE எனும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவிபயன்பாட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துசெயல்படுத்திடுக பின்னர் அதனுடைய திரையின் மேல்பகுதியில் வலதுபுறமூலையில் உள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அதன் பின்னர் விரியும் இந்த பயன்பாட்டில் செயலில் இருக்கும் பல்வேறு செயலிகள் பட்டியலாக தோன்றிடும் அவற்றுள் INTERNET OPTIONS.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக அதன்பின்னர் விரியும் வாய்ப்பு சாளரத்தில் TABS எனும்பகுதியிலுள்ள SETTINGS.என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியானது நாம் புதிய தாவிபொத்தானை தெரிவுசெய்து திறப்பதற்கு அனுமதித்திடும் இதன்பின்னர் நம்முடைய IE எனும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவிபயன்பாட்டில் மேல்பகுதியில் உள்ள X என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தவுடன் புதிய இணைய பக்கத்தை திறந்து உலாவரமுடியும்

என்னுடைய ஐபேடினை மேம்படுத்தியபிறகு யாகூமின்னஞ்சல் சேவையை தொடர்புகொள்ள முடியவில்லையே என்னசெய்வது?

முதலில் http://mail.yahoo.com என்ற தளத்திற்கு சென்று நம்முடைய யாகூ மின்னஞ்சல் சேவையின் கணக்கிற்கு உளநுழைவு செய்க அடுத்ததாக நம்முடைய ஐபேடில் Settings => Mail=>, என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி நம்முடைய ஐபேடின் நடப்பில் இருக்கும் மின்னஞ்சல் கணக்கினை சரிபார்த்திடுக அதில் Yahoo! account எனும் பகுதிக்கு சென்று Delete Account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடு்க்குதல் செய்து நம்முடைய ஐபேடில் மட்டும் தற்காலிகமாக யாகூமின்னஞ்சல் கணக்கினை நீக்கம் செய்துகொள்க உடன் எச்சரிக்கை செய்தியொன்று திரையில் தோன்றிடும் அதனை அமோதித்திடுக. பின்னர் Add Accountஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடு்க்குதல் செய்தபின்னர்விரியும் திரையில் மீண்டும் Yahoo!என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேர்த்து கொள்க உடன்விரியும் மேல்மீ்ட்பு திரையில் நம்முடைய முழுப்பெயர் நம்முடைய சரியான யாகூவின் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொற்கள் ஆகியவற்றை உள்ளீடு செய்துகொண்டு Next எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடு்க்குதல் செய்தபின்னர் விரியும் திரையில் இவை சரியானதென ஆமோதித்திடுக அடுத்து தோன்றிடும் திரையில் யாகூவின் வேறு சேவைகள் நமக்கு தேவையெனில் சேர்த்துகொள்க இறுதியாக Saveஎனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த அமைவை சேமித்துகொள்க.

இதன்பின்னர் நம்முடைய ஐபேடில் யாகூ மின்னஞ்சலை எளிதாக திறந்து நம்முடைய வழக்கமான பணியை ஆற்றலாம்.

உள்நுழைவு செய்வதற்காக பாதுகாப்பானவலுவான கடவுச்சொற்களை எவ்வாறு உருவாக்குவது?

 நம்மில் பெரும்பாலானோர் கடவுச்சொற்களை உருவாக்குதல் என்றவுடன் சோம்பேறிதனமாக யாரும் எளிதில் யூகிக்கும்படியான  எண்களால் 12345என்றும்,  எழுத்துகளால் abcd,password, welcome, qwertyuiop, asdfghjkl, zxcvbnm, என்றவாறும் உருவாக்கிகொள்வார்கள் 2015 ஆம் ஆண்டில் அமைக்கபட்டிருந்த கடவுச்சொற்களை ஆய்வு செய்ததில்  பெரும்பாலானவர்கள் கடவுச்சொற்களை இவ்வாறாகவே அபத்தமாக அமைத்திருப்பதுதெரியவந்துள்ளது  இவ்வாறான கடவுச்சொற்கள் பாதுகாப்பானவை அல்ல   பொதுவாக கடவுச்சொற்களானது குறைந்த பட்சம் பன்னிரண்டு எழுத்துகளால் கட்டமைக்கபட்டிருக்கவேண்டும் அவைகள்பெரிய எழுத்துகளும் சிறிய எழுத்துகளும் கலந்து உருவாக்கபட்டிருக்கவேண்டும் மேலும் குறைந்தது ஒரு சிறப்புக்குறியீடும், ஒரு எண்ணும் இதில் கலந்துஇருக்கவேண்டும்  எழுத்துகள் எனில்   நம்முடைய நினைவில் வைத்துகொள்வதற்கு எளிதான நமக்கு பிடித்தமான கவிதைகளில் உள்ள சொற்களின் முதலெழுத்தாகவும்  உதாரணமாக Rain rain go away come again another day என்ற கவிதைகளின் வரிகளிலுள்ள சொற்களின் முதலெழுத்துகளால் Rrgacaad என்றவாறும் , சிறப்புக்குறியீடுகளுக்கு புன்னகை , வருத்தம் போன்ற உணர்வுகளை குறிக்கும் என்பன :- ( போன்ற குறியீடுகளையும் ,எண்களுக்காக நம்முடைய பிறந்த ஆண்டு அல்லது நாம் முதன்முதல் பள்ளியில் சேர்ந்த ஆண்டு அல்லது கல்லூரியில் சேர்ந்த ஆண்டு 1978என்றவாறும் சேர்த்து அமைத்துகொண்டால்  நாம் உருவாக்கிய நம்முடைய கடவுச்சொற்களானது  Rrgacaad😦1978 என்றவாறு நாம் எளிதில் நினைவில் கொள்வதாகவும்  வலுவானதாக அமைந்திருக்கும் மேலும் http://blog.kaspersky.com/password-check/ , https://haveibeenpwned.com/  ஆகிய தளங்களுக்கு சென்று   நாம் உருவாக்கிய நம்முடைய கடவுச்சொற்களைின்  வலுத்தன்மையை சரிபார்த்து கொள்க

Previous Older Entries