பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-6-பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் விதிமுறைகளும் சொற்களும்-தொடர்ச்சி

பொதுவாக பயனாளர்களைப் பொருத்தவரையில் தரவுகளின் புலம் மிக முக்கியமானதாகும். பரிமாற்ற விவரங்கள், சொத்து விவரங்கள் போன்ற உண்மையான தரவுகள்அனைத்தும் இந்த புலங்களில்தான் சேமிக்கப்படுகின்றன. இந்த புலங்களில் ஹாஷ்ஆனது முந்தைய தொகுப்பின் ஹாஷ் மதிப்புகளை சேமிக்கின்றன (இது முந்தைய தொகுப்பிற்கான இணைப்பாக கருதுப்படும்), தொகுப்பு(block)கள் இந்த மதிப்புகளின் வாயிலாக இணைக்கப் படுகின்றன.

1
பிளாக்செயினில் தரவுகளின் விநியோகம்
பிளாக்செயினுக்குள் அதன் தனித்துவமான தரவுகளின் சேமிப்பக அமைப்பு இருக்கின்றது , பிளாக்செயினில் தரவுகளி்ன்விநியோகமானது வேறுபட்ட அணுகு-முறையைக் கொண்டுள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க. அவை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்ட வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் பின்பற்றுவதில்லை, மாறாக பியர் டு பியர்(P2P) மாதிரியைப் பின்பற்றுகின்றன.இதனுடைய P2P தரவுகளி்ன் விநியோக அணுகுமுறையே இந்த பிளாக்-செயினின் தடையற்ற தன்மைக்கு காரணமாகும் ; இதில் கட்டுப்படுத்துவதற்கான மைய அதிகார அமைப்பு எதுவும் இல்லை.

2
வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியைப் போலன்றி, இந்த பி 2 பி வலைபின்னலில் தரவுகளின் வலைபின்னலில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களின் முனைமங்களிலும் சேமிக்கப்-படுகின்றன. அனைத்து தனிப்பட்ட முனைமங்களிலும் முழு ‘தொகுப்புகளின்’ நகல்களும் சேமித்து வைக்கப்படுகின்றன, மேலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் அனைத்து முனைமங்களிலும் புதுப்பிக்கப்-படுகின்றன.
பொதுவாக , வாடிக்கையாளர் சேவையாளர் மாதிரியில் தரவுகளானவை ஒரு மைய கட்டுப்படுத்திடும் அமைப்பால் சரிபார்த்த பிறகுதான் அவை தரவுதளங்களில் சேமிக்கப்படு-வது வழக்கமான நடைமுறையாகும்; ஆனால் பி 2 பி வலைபின்னலில் அவ்வாறு தனியாக ஒரேமையத்தில் கட்டுபடுத்திடும் அமைப்பு எதுவும் இல்லை, அவ்வாறாயின் இந்த பி 2 பி வலை-பின்னலில் உள்ள தரவுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? என்ற கேள்வி நம்மனைவரின் முன் கண்டிப்பாக எழும் நிற்க இந்த பிளாக்செயின் வலைபின்னலின் ஒவ்வொரு முனைமமும் மற்ற முனைமங்களின் தரவுகளின் சரிபார்ப்பு மையமாக அனைத்து செயல்முறைகளும் ஒருமித்த வழிமுறைகளை பின்பற்றி செயல்படுகின்றன என்பதுதான் இந்த கேள்விக்கான பதிலாகும்
தொகுப்பு சரிபார்ப்பு (Block Validation)
நாம் மேலே விவரித்தபடி சொத்துகளும் அதன் பரிமாற்றங்களும் பிளாக்செயினில் இணைக்கப்பட்ட தொகுப்புகளாக சேமிக்கப்படுகின்றன. சரியான பரிமாற்றங்கள் மட்டுமே பிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாககூறுவதெனில், பிளாக்செயின் சரிபார்ப்பு என்பது தொகுப்பின் ஹாஷைக் கண்டுபிடிக்கும் செயல் முறையாகும். ஒரு பிளாக்செயினில், அனைத்து தொகுப்புகளும் சரிபார்ப்பு செய்தபிறகு மட்டுமே அதுபிளாக்செயினில் சேர்க்கப்படுகின்றன. பிளாக்செயினில் ஒவ்வொரு பரிமாற்றமும் நடைபெறும் போதெல்லாம் அது ஒரு தொகுப்பில் சேர்க்கப்படுகின்றன; சில நேரங்களில் ஒரு தொகுப்பிற்கு ஒரு பரிமாற்றமும் வேறுசில நேரங்களில் பல தொகுப்பிற்குள் பரிமாற்றங்களும் சேமிக்கப்படுகின்றன. இது தொகுப்பின் அளவு பிணையத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பரிமாற்றமானது தொகுப்பில் சேர்க்கப்படும்போது, அது சரியான தொகுப்பாக பிளாக்செயினில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அது ஒரு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தொகுப்பிற்கான ஹாஷ் மதிப்பை SHA256 போன்ற ஒருசில வழிமுறைகளைப் பயன்படுத்தி கணக்கிடலாம் .ஹாஷ் மதிப்பு ஒரு சில பண்புகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் மிகமுக்கிய செய்தி என்னவென்றால், ஹாஷ் மதிப்பானது எதிரெதிராக இல்லாமல் இருக்க வேண்டும், அதாவது இரண்டு தொகுப்புகள் ஒரே ஹாஷ் மதிப்பைக் கொண்டிருக்கக்-கூடாது. ஒவ்வொரு தொகுப்பினையும் சுட்டிகாட்டுவதற்கு ஹாஷ் மதிப்பைப் குறிப்பிடப்படுவதால், அது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, ஹாஷ் மதிப்புகள் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும்.அதாவது தொகுப்பு தரவுகளை ஹாஷ் மதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியாது
தொகுப்பு சரிபார்ப்பவர்கள் (Block Validators)
தொகுப்பு சரிபார்ப்பு செயல்பாட்டில் பங்கேற்கும் முனைமங்களே தொகுப்பு சரிபார்ப்பவர்கள் ஆவார்கள். சரிபார்ப்பவர்களின் முயற்சிக்கு ஏற்ற வெகுமதி அவர்களுக்கு அளிக்கப் படுகின்றது, (உண்மையில் அவர்கள் செலவழித்தசக்தியை கணக்கிட்டு அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றது). கிடைக்கக்கூடிய முனைமங்களில் இருந்து சரிபார்ப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வெவ்வேறு பிளாக்செயின் நெறிமுறைகள் வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவ்வாறான ஒரு சில நெறிமுறைகள் பின்வருமாறு
PoW என அழைக்கப்பெறும் பணிச்சான்று (Proof of Work)எனும் நெறிமுறை
இந்த PoW இல், சுரங்க சவால் ஒன்று இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காத்திருக்கின்றது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் (miners )அனைவரும் அடுத்த தொகுப்பினைச் சேர்க்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றார்கள். முதலில் தீர்வைக் கண்டுபிடிக்கும் சுரங்கத் தொழிலாளிக்கு ஒரு நிலையான வெகுமதி வழங்கப்படுகின்றது. உண்மையில், அதிக கணக்கீட்டு சக்தியைக் கொண்ட முனைமங்கள் பொதுவாக இந்த பந்தயத்தில் வெற்றிபெறுகின்றன. பிட்காயின்களில் இந்த PoW எனும் வழிமுறையே பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.
குறிப்பு நாம் வாழும் இந்த மண்ணிற்கு கீழேஉள்ள கனிமங்களை வெட்டியெடுத்திடுபவரை சுரங்க தொழிலாளி எனஅழைப்பதை போன்று இணையத்தில் பிளாக்செயினில் புதிய வளங்களை தேடிக் கொண்டுவருபவரை அவ்வாறே சுரங்க தொழிலாளி எனஅழைக்கப்படுகின்றது
PoS என அழைக்கபெறும் பங்கு ஆதாரம் (Proof of Stake)எனும் நெறிமுறை
இது PoW எனும் நெறிமுறைக்கு பொதுவான மாற்று நெறிமுறையாகும். இதில், எந்தவொரு கணினியிலும் அவர்கள் வைத்திருக்கும் நாணயங்களின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு செல்லுபடியாக்கிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்களை விட அதிக எண்ணிக்கையிலான நாணயங்களைக் கொண்ட முனைமங்கள் தேர்ந்தெடுக்கஇதில் அதிக வாய்ப்பு உள்ளன. இந்த PoS இல் வெகுமதியானது பரிமாற்ற கட்டணத்தின் வடிவத்தில் உள்ளது, இதில் சரிபார்ப்பவர்களுக்கு பணம் செலுத்துவதற்காக புதிய நாணயங்கள் உருவாக்கப்படுவதில்லை. தற்போது, பிளாக் காயின், NXT Peercoin ,Blackcoin ஆகியவை இந்த PoSநெறிமுறையைப் பயன்படுத்துகின்றன. Ethereumஆனது 2018 க்குள் இந்த நெறிமுறைக்கு மாறிகொள்வதற்காக திட்டமிட்டிருந்தது.
PoAஎன அழைக்கபெறும் செயல்பாட்டின் சான்று (Proof of Activity)எனும் நெறிமுறை
PoA என்பது PoS , PoW ஆகியவற்றில் உள்ள சில சிக்கல்களை சமாளிக்க அவ்விரண்டும் கலந்தவொரு கலவையான அணுகுமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெறிமுறையில், புதிய சுரங்கமானது PoW உடன் தொடங்குகின்றது தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்த செயல்முறையானது PoS ஆக மாறிவிடுகின்றது. தற்போது,இந்த செயல்பாட்டிற்கான ஆதாரத்தின் மாறுபாட்டைப் பயன்படுத்தும் ஒரே நாணயம் Decred ஆகும்.
PoETஎன அழைக்கபெறும் கழிந்தநேரத்தின்சான்று(Proof of Elapsed Time) எனும் நெறிமுறை
இந்த நெறிமுறையில், வலைபின்னலில் ஒருமித்த கருத்தை செயல்படுத்த லாட்டரி செயல்பாடுகளைப் பயன்படுத்துகின்றது. ஒரு தொகுப்பான முனைமங்களிலிருந்து தலைமையைக் கண்டுபிடிக்க லாட்டரி வழிமுறை பயன்படுத்தப்படுகின்றது. எனவே செல்லுபடியாக்கிகளின் குவியிலிலிருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Hyperledger, Sawtooth , பிளாக்செயின் போன்றவை இந்த PoET நெறிமுறையைப் பயன்படுத்துகின்றன.
PoBஎன அழைக்கப்பெறும்(Proof of Burn) நெறிமுறை
இந்த நெறிமுறையில், ஆர்வமுள்ள ஏற்பாளர்கள் தங்களுடைய நாணயங்களை மீட்கமுடியாத இடத்திற்கு அனுப்புவதன் மூலம் தங்களுடைய பங்கை அதிகரிக்கின்றார்கள் இதனால். சரிபார்ப்பவர்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், ஆனால் அதிக பங்கு உள்ளவர்கள் இதில் தேர்வு செய்ய அதிக நிகழ்தகவு உள்ளது. காலப்போக்கில் சம்பாதித்த பங்கு சிதைந்து, தொகுப்பிற்குள் தங்கள் பங்குகளை அதிகரிக்க அதிக நாணயத்தை எரிக்க (செலவழிக்க) வேண்டும். இந்த எரியும் (செலவழிக்கும்)பொறிமுறையின் ஆதாரத்தைப் பயன்படுத்தும் ஒரே நாணயம் slimcoin ஆகும்.
இந்நிலையில் மேலே கண்டுவந்தவைகளில் எந்த நெறிமுறை மிகவும் சிறந்தது என்று தெளிவாக கூற முடியாது. ஒவ்வொரு நெறிமுறைக்கும் அதன் சொந்த நன்மைகளும் தீமைகளும் உள்ளன. பொதுவாக ஒரு பிளாக்செயினில் அதிகபட்ச உற்பத்தித்திறனை அடைய பல்வேறு நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகின்றன என்பதே உண்மையான கள நிலவரமாகும்… தொடரும்

சுகரைசர் எனும் கற்றல் தளம் ஒருஅறிமுகம்

சுகரைசர் என்பது ஒரு இலவச / சுதந்திரமான கற்றல் தளமாகும் , இது ஆரம்பத்தில் OLPC எனும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருமடிக்கணினி எனும் திட்டத்திற்காக https://wiki.sugarlabs.org/ இன் கீழ் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. முடிந்தவரை பல குழந்தைகளுக்கும் கல்வி கற்பிப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் இந்த சுகரைசரில் குழந்தைகளுக்கானக் கற்பித்தல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த சுகரைசரை உலகெங்கிலும் நாளொன்றிற்கு சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இந்த சுகரைசர் வெளியீடானது ஒரு ஆச்சரியமளிக்கும் வகையிலான. இணையதொழில் நுட்பங்களின் உதவியுடன் எந்தவொரு சாதனத்திலும் பயன்படுத்த நம்மை அனுமதிக்கின்றது அதாவது இந்த சுகரைசரானது மேஜைக்கணினி , மடிக்கணினி ,கைக்கணினி ,ராஸ்பெர்ரி பை , ஆண்ட்ராய்டுகைபேசி , iOSகைபேசி, ஆகிய எந்தவொரு சாதனத்திலும் இயங்கும் திறன்மிக்கது:
இதனை எந்தவொரு லினக்ஸ்-இணக்கமான வன்பொருளிலும் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த சுகரைசரானது HTML5 , CSS3 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரைகலை இடைமுகப்பினை பிரதிபலிக்கின்றது.
நம்முடைய வீட்டில் பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட பழைய கணினியில்கூட இதனை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்வதற்கான ஒரு நல்ல தேர்வாக இது விளங்கு-கின்றது., அவ்வாறு நிறுவுகை செய்வதற்காக இதனுடைய இணையதளத்திலிருந்தும் முயற்சி செய்யலாம். இன்னும் சிறப்பாக, நம்முடைய Android டேப்லெட்டில் உள்ள Google Play ஸ்டோரிலிருந்து அல்லது ஆப்பிள் சாதனத்தில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இதுவிலை,குறைந்த டேப்லெட்டில் கூட நன்றாக செயல்படு-கின்றது. எனவே, நம்முடைய பழைய டேப்லெட்டை சுகரைசரை நிறுவிய பின் அதனை ஏதாவது ஒரு குழந்தைக்கு பரிசளித்தோம்எனி்ல் அது ஒரு மறக்கமுடியாத , பயனுள்ள பரிசாக இருக்கும் அல்லவா
லினக்ஸ், விண்டோஸ், மேக் , ஆகிய எந்தவொரு இயக்க முறைமையிலும் ஆண்ட்ராய்டு , iOS ஆகியவை செயல்படும் எந்தவொரு சாதனத்திலும் இதனை நிறுவகை செய்து பயன்படுத்தக்-கூடிய ஒரு குறுக்கு-தளப் பயன்பாடாக இது விளங்குகின்றது. அதுமட்டுமின்றி தற்போதைய அனைத்து வகையான நவீன இணைய உலாவிகளிலும் இயங்கும் ஒரு இணையபயன்பாடாகவும் இது திகழ்கின்றது .
இந்த சுகரைசர் இணையபயன்பாடு என்பது Chrome, Firefox, Safari , EDGE ஆகிய உலாவிகளின் சமீபத்திய பதிப்பைக் கொண்டு எந்த சாதனத்திலும் இயங்கும் ஒரு இணையபயன்பாடாகும்., இது இணையஇணைப்பில்லாமல் இயங்காது மேலும் ஒரு சுகரைசர் சேவையகத்திற்கு நிரந்தர பிணைய இணைப்பு தேவைப்படுகிறது.
ஒரு உள்ளூர் சேவையகமாக இந்த சுகரைசரைப் பயன்படுத்திகொள்ளவும் இது அனுமதிக்கின்றது, நாம் விரும்பினால் நமக்கான நம்முடைய சொந்த சுகரைசர் சேவையகத்தை நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக, சுகரைசர் சேவையக களஞ்சியத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றிடுக, மேலும் விவரங்களுக்கு https://sugarizer.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க

ஜாஸ்பர் சாஃப்ட் ஸ்டுடியோ எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்-

ஜாஸ்பர்சாஃப்ட் என்பது அறிக்கைகளை கையாளுவதற்கான மென்பொருளாகும். இது அறிக்கை வார்ப்புருக்களை வடிவமைக்கவும் இயக்கவும் உதவுகின்றது; அறிக்கை வினவல்களை உருவாக்குதல்; சிக்கலான வெளிப்பாடுகளை எழுதுதல்; 50இற்கும் மேற்பட்ட வகைகளாலான விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், தனிப்பயன் காட்சிப்படுத்தல் போன்ற தளவமைப்பு கூறுகளை இதன் வாயிலாக கையாளமுடியும். இது சக்திவாய்ந்த அறிக்கை பணிப்பாய்வுகளை உருவாக்குவதற்கான சேவையகத்தை ஒருங்கிணைக்கின்றது.
தரவுகளிலிருந்து எந்தவொரு சிக்கலான ஆவணங்களையும் உருவாக்கலாம். அறிக்கையின் உள்ளே அல்லது வெளியே வழிசெலுத்தலுடன் ஊடாடும் இயக்கநேர HTML இற்கு அச்சிட தயாராக இருக்கும் PDF கள். உயர்தர படவில்லைகாட்சிகள், RTF, வேர்ட், விரிதாள் ஆவணங்கள் அல்லது சாதாரணCSV, JSON அல்லது XML.போன்ற நம்முடைய எந்தவொரு விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவடிவமைப்புகளின் கோப்புகளை தனிப்பயன் வடிவமைப்பில் இதன் வாயிலாக உருவாக்குவது மிக எளிய செயலாகும்.
பல்வேறு வகையான , big data, CSV, Hibernate, Jaspersoft Domain, JavaBeans, JDBC, JSON, NoSQL, XML,அல்லது தனிப்பயன் தரவு மூலங்கள் ஆகியவற்றை இதன் வாயிலாக எளிதாக அணுகமுடியும் இதனை மற்ற பயன்பாடுகளுடன் கூடுதல் இணைப்பாகவும் தனிப்பட்ட பயன்பாடாகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும் , இது சமூகபதிப்பு ,தொழில்முறைபதிப்பு. ஆகிய இரண்டுவகைகளில் கிடைக்கின்றது: தொழில்முறை பதிப்பில் கூடுதல்வசதிகளாக, வரைபடங்கள், மேம்பட்ட HTML5 விளக்கப்படங்கள் ஆகியவை உள்ளன.
உட்பொதிக்கப்பட்ட அறிக்கைகளை முகப்புதிரையில் கொண்டுவந்து சேர்த்தபின். அவ்வாறான பயன்பாடுகளுக்குள் நமக்கு ஆழமான தரவு அனுபவங்களை இது வழங்குகின்றது.
தற்போது பெரும்பாலான மேம்படுத்துநர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் தரவுகளின் காட்சிப்படுத்தல்களை வடிவமைக்க இதனை பயன்படுத்திகொள்கிறார்கள்.
பயனாளர்கள் இதன் வாயிலாக பயன்பாடுகளிலிருந்து தேவையான பதில்களை எளிதாகப் பெறமுடியும் அதன் வாயிலாக வாடிக்கையாளரின் திருப்தியை அதிகரிக்கவும் நமமுடைய தயாரிப்பை மேம்படுத்திடவும் இது அனுமதிக்கின்றது
ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் பயன்பாடுகள் , வணிக செயல்முறைகளுக்குள் சரியான நேரத்தில், செயல்படக்கூடிய தரவுகளை உட்பொதிக்கக்கூடிய, செலவு குறைந்த அறிக்கைகளை பகுப்பாய்வு தளத்தின்வாயிலாக கொண்டு வருவதன் மூலம் சிறந்த முடிவுகளை விரைவாக எடுக்க இது உதவுகின்றது.
பயன்பாடுகள் அல்லது உள்கட்டமைப்பு சூழல்கள் எதுவாக இருந்தாலும் சரி. ஜாஸ்பர்சாஃப்டானது அளவிடக்கூடிய, தரநிலைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வு கட்டமைப்பினையும் எந்தவொரு சூழலிலும் எளிதில் பயன்படுத்த தேவையான நெகிழ்வுத்தன்மையை யும் வழங்குகிறது. அதன்வாயிலாக வணிகநடவடிக்கைகளில் சரியான நேரத்தில், மிகச்சரியாக முடிவெடுத்திட உதவுகின்றது மேலும் நிறுவனத்தை விரிவுபடுத்தக்கூடிய வணிக நுண்ணறிவு கருவிகளையும் இந்த ஜாஸ்பர்சாஃப்ட் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்குhttps://www.jaspersoft.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் வரைபடங்களில் மேம்பட்ட குரல் வழிகாட்டலை கூகிள் அறிமுகப்படுத்துகிறது-

கூகுள் ஆனது அதன் பிரபலமான கூகுள் மேப்ஸ் வழிசெலுத்தல் பயன்பாட்டில் பார்வையற்றோருக்கான புதிய அணுகல் வழிமுறையை தற்போது செயல்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவிருக்கின்றது.
இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் , இணையத்தில் கூட்டாண்மை குழு வணிக ஆய்வாளர் Wakana Sugiyama என்பவர் இவ்வாறான புதிய வசதிகளை பற்றி விளக்கமளித்துள்ளார், உலக பார்வை தினத்தை முன்னிட்டு இந்த வசதியை வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளர். தற்போது உலகில் ஏறத்தாழ 217 மில்லியன் மக்களுக்கு மிதமானது முதல் கடுமையானது வரையிள் பார்வைக் குறைபாடுகள் இருப்பதையும், உலகம் முழுவதும் பார்வையற்ற 36 மில்லியன் மக்கள் இருப்பதையும் மேற்கோள் காட்டி, கூகுள் மேப்ஸ் வழிசெலுத்தல் பயன்பாட்டைப் பயன்படுத்தி வசதியான நடைபயணங்களுக்கான விரிவான வாய்மொழி வழிகாட்டுதலையும் அறிவிப்புகளையும் இந்த புதிய வசதியானது செயல்படுத்தவிருக்கின்றது.
அறிமுகமில்லாத பாதைகளில் செல்லும்போது, குறிப்பாக பார்வையற்றவர்கள் தனியாக செல்லும்போது கூடுதல் நம்பிக்கையை அளிப்பதே இந்த வசதியின் குறிக்கோளாகும். பயனாளர்கள் சரியான பாதையில் செல்லும்போது, அடுத்ததாக எவ்வளவு தூரத்தில் திரும்புவேண்டும்,என இது எச்சரிக்கைசெய்கின்றது பரபரப்பான பாதைகளில் கடக்க வேண்டியநிலையில் இந்த வதியானது முன்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றது. இந்த பயன்பாடானது நாம் செல்லும் வழியில் எந்தஇடத்தில் திரும்பவேண்டும் என்ற வாய்மொழி அறிவிப்புகளையும் வழங்குகின்றது.
கூகுள் மேப்ஸின் நடைபயிற்சிக்கான குரல்வழி வழிசெலுத்தல் வசதியானது ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் சாதனங்களில் ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இதில் கூடுதல் மொழிகளுக்கான ஆதரவு “one the way”, என்பதில் பட்டியலுக்கு சரியான கால அட்டவணை எதுவும் இதுவரையில் கொடுக்கப்படவில்லை. இந்த புதிய வசதியை செயல்படுத்துவதற்காக:
முதலில் இதற்கான கூகுளின் வரைபடத்தைத் திறக்கவும்.
தொடர்ந்து அதன் அமைப்புகளைத் திறந்து “Navigation.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உடன் விரியும் பட்டியலின் கீழே “Walking options” எனும் தலைப்பிற்கு கீழே “”Detailed voice guidance,”” இயக்குவதற்கான விருப்பம் இருப்பதை காணலாம். அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படுத்தினால் போதுமானதாகும்

புதியCentOS 8எனும் லினக்ஸ் இயக்கமுறைமை ஒருஅறிமுகம்-

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு -ஜூலை 2014 வெளியிடப்பட்ட CentOS 7 எனும் லினக்ஸ் இயக்கமுறைமையின் பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டதொரு பெரிய வெளியீட்டை பயன்படுத்தி அனுபவித்தவர்கள் அடுத்தபதிப்பு எப்போதுவரும் என காத்திருந்தார்கள் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது இருந்த போதிலும் எதிர்பார்த்தபடி நிலையான, நம்பகமான முழு நேரத்தையும் பாதுகாப்பாக செயல்பட விரும்புவோர்களின் கனவான CentOS 8 எனும் புதிய சமூக பதிப்பு கடந்த மே 2019 இல் வெளியிடப்பட்டுள்ளது
இந்த புதிய சென்டோஸ் 8 எனும் பதிப்பில் புதிய வசதி வாப்புகள் ஏராளமாக உள்ளன.
தொகுப்புகளை நிறுவுவதற்கும் புதுப்பிப்பதற்கும் CentOS சற்று வித்தியாசமாக உள்ளது. இதனுடைய இயல்புநிலை தொகுப்பு நிருவாகி YUM இலிருந்து DNF க்கு இடம்பெயர்ந்துவிட்டார். இதிலும் ஒவ்வொன்றிற்கான கட்டளை அமைப்பு மிகவும் ஒத்திருக்கிறது, எனவே இது போன்ற கட்டளைவரிகளை இயக்குவதற்கு பதிலாக:
sudo yum install httpd
You’d issue the command:
sudo dnf install httpd
ஆகிய கட்டளை வரிகளை பயன்படுத்தி கொள்க .இந்நிலையில் DNF என்பது பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு https://www.techrepublic.com/article/how-to-use-the-dnf-package-manager/எனும் இணையதள பக்கத்திற்க செல்க
அடுத்து . CentOS 8 அதன் நிறுவன உடன்பிறப்பின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி உள்ளடக்க விநியோகத்தில் இரண்டு வழிமுறைகளை வழங்குகின்றது. இதற்கு பின்வரும் இரண்டு களஞ்சியங்கள் மட்டுமே தேவையானவையாகும்
1. BaseOS என்பது அடிப்படை OS உள்ளடக்கத்தை வழங்கும் களஞ்சியமாகும்.
2. AppStream என்பது சுதந்திரமான வாழ்க்கை சுழற்சிகளில் இருக்கும் மென்பொருளின் கூடுதல் பதிப்புகளை நிறுவ நம்மை அனுமதிக்கிறது, மேலும் இது CentOSஐ எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்து பராமரக்கின்றது.
புதிய திரையில் விசைப்பலகை , மிகவும் மேம்பட்ட GNOME பெட்டிகள், விரிவாக்கப்பட்ட சாதனங்களின் ஆதரவு ஆகிய வசதி வாய்ப்புகள் இதிலுள்ளன
ஏராளமான GNOME மென்பொருள் தொகுப்புகளுக்கான மேம்பாடுகள்இதில் உள்ளன
இதில் Wayland என்பது இயல்புநிலை காட்சி சேவையகமாகஉள்ளது (சிறந்த பாதுகாப்பு, மேம்பட்ட பலதிரை ஆதரவு, மேம்பட்ட அளவிடுதல் சிறந்த சாளர கையாளுதலுக்காக) இது ஒரு பெரிய வசதியாகும், இந்த CentOS 8 க்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஊக்கத்தை அளிக்கும். SSH வழியாக சேவையகத்துடன் இணைக்கும் பயனர்களின் அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்ய நிருவாகிக்கு cockpit-session-recording அனுமதிக்கின்றது. இந்த வசதியை கருத்தில் கொண்டு இணைய அடிப்படையிலான GUI Cockpit வழியாக பயன்படுத்திகொள்ள முடியும், , இது CentOS நிருவாகிகளுக்கு அவர்களின் சேவையகத்தில் நடக்கும் அனைத்தையும் கண்காணிக்க ஒரு உண்மையான வசதியாகவும் இருக்கின்றது

முயன்றால் ஒரு சிறந்தஆண்ட்ராய்டு பயன்பாட்டினை நாமேஉருவாக்கமுடியும்-

ஆண்ட்ராய்டு மேம்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கான முதல் படிமுறையாக ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவைப் பயன்படுத்தி அடிப்படை வசதிவாய்ப்புகளுடன் கூடிய புதிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினைநாமே உருவாக்குவதற்கான வழிமுறைகள பின்வருமாறு
இதற்காக ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் எளிய பயனாளர் இடைமுகமும் ஜாவா குறிமுறை-வரிகளில் ஒருசில குறிமுறைவரிகளும் போதுமானவைகளாகும், இதன்மூலம் ஆண்ட்ராய்டு மேம்படுத்துதல் செயல்களை மிகஎளிதாக துவங்கலாம். இதனுடைய அடிப்படை ஒப்புதலைப் பெற்ற பிறகு நிச்சயமாக அவ்வாறான பயன்பாட்டினை பல்வேறு வசதிகள் நிறைந்ததாக பின்னர் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
1. முதலில் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவைத் செயல்படுத்திடுக.
2. உடன் விரியும் திரையில், “Start a new Android Studio Project”என்பதைதெரிவுசெய்து சொடுக்குக.
3. அடுத்து தோன்றிடும் திரையில் இந்த பயன்பாட்டிற்கு “MyFirstProject” என்றவாறு ஒருபெயரிட்டு next எனும் பொத்தானை தெரிவுசெயது சொடுக்குக.
4. அடுத்து விரியும் திரையில் ஒன்றும் செய்யதேவையில்லை next எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக..
5.பின்னர் விரியும் திரையின் விருப்பங்களிலிருந்து Empty Activity template என்பதை தேர்ந்தெடுத்து கொண்டு next எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக..
6. தொடர்ந்து Finish எனும் பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக…
ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் எக்ஸ்எம்எல் கோப்பை மேம்படுத்துதல்
இப்போது res எனும் கோப்பகத்தில், தளவமைப்பு கோப்புறையில் உள்ள activity_main.xml கோப்பிற்கு சென்று பின்வரும் குறிமுறைவரிகளை எழுதுக
குறிப்பு இங்கே நாம் நம்முடைய முதல் செயல்திட்டத்தை உருவாக்குகின்றோம் என்பதை நினைவில் கொள்க, இதனால்“Hello World” , “Click Me” ஆகிய பொத்தான்களைக் காண்பிக்கும் திரையை முதலில் உருவாக்கிடுவோம்.
உரையில், தாவலில் பின்வரும் குறிமுறைவரிகளை நகலெடுக்கவும்.
பின்வரும் .xml கோப்பு MainActivity க்கான தளவமைப்பு கோப்பு. பயனாளர் இடைமுகங்கள் ஆகியவற்றை உருவாக்கவிருக்கின்றோம்.
இந்த கோப்பில் ஒரு உரை காட்சியும் ஒரு பொத்தானும் உள்ளன, இது இடதுபுற பலகத்தில் இருந்து இழுத்து சென்று விடுதல் வழிமுறை மூலம் வடிவமைப்பினை திரையில் கொண்டு வரலாம்.

MainActivity.java கோப்பினை புதுப்பித்தல்
ஜாவா கோப்பகத்தில், நம்முடையை package ல் உள்ள MainActivity.java கோப்பிற்குச் சென்று பின்வரும் குறிமுறைவரிகளை எழுதுக.
இங்கே பொத்தானுக்கு ஒரு ‘id’’ எனும் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது, பின்னர் Click Listener என்பது அமைக்கப்படுகின்றது. இந்த “Click Me” பொத்தானைக் சொடுக்குதல் செய்தால், குறுகிய செய்தி ஒன்று திரையில் காண்பிக்கும்
package com.example.soumyaagarwal.myfirstproject;
import android.support.v7.app.AppCompatActivity;
import android.os.Bundle;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.Toast;

public class MainActivityextends AppCompatActivity {
Button clickme;
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);

clickme= (Button)findViewById(R.id.button);
clickme.setOnClickListener(new View.OnClickListener() {
@Override
public void onClick(View v) {
Toast.makeText(MainActivity.this,
“The Button is clicked !”,
Toast.LENGTH_LONG).show();
}
});
}
}
இப்போது முதல் செயல்திட்டத்தை இயக்குக. ஏற்கனவே Genymotion emulator நிறுவியிருந்தாலும், உண்மையான சாதனங்களில் பயன்பாடுகளை இயக்குவது விரைவானசெயலாக அமையும். எனவே, நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்தை கணினியுடன் இணைத்து கருவிப்பட்டியில் உள்ள run எனும் விருப்பத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் தொடர்ந்து இதனோடு இணைத்த சாதனத்தைத் தேர்ந்தெடுத்து OK எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக . இப்போது, Gradle build பணி முடிவடையும் . அதன் பிறகு, ஆண்ட்ராய்டு சாதனத்தில் நம்முடைய முதல் பயன்பாடு செயல்படதுவங்குவதைக் காணலாம்.
“CLICK ME” எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால், உடன் குறுகிய செய்தி ஒன்று திரையில்தோன்றுவதை காணலாம்.

InvoiceLionஎனும் பயன்பாடு ஒரு அறிமுகம்-

இது எளிய சிறந்த விற்பணைப்பட்டியல்களை உருவாக்க உதவுகின்ற ஒருகட்டற்ற கருவி பயன்பாடாகும். இந்த InvoiceLion.எனும் பயன்பாடானது வேறு எந்தவொரு பயன்பாட்டினையும் விட சிறு வணிக உரிமையாளர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புகளை மிக குறைந்த விலையில் கிடைக்கசெய்கின்றது மேலும் இந்த பயன்பாடானது சிறு வணிக உரிமையாளர்களுக்கான சக்திவாய்ந்த, திறமையான திறமூல விலைப்பட்டியல் கருவியாக திகழ்கின்றது.
இது முழு மேககணினியின் அடிப்படையிலானது இதில் தரவுகள் மிக பாதுகாப்பாக சேமிக்கப்-படுகின்றன போதுமான இணைய இணைப்பு இருக்கும் வரை எந்த சாதனத்திலும் எங்கிருந்தும் இந்த கருவி பயன்பாட்டினை அணுகி பயன்படுத்தி கொள்ளலாம். பயணத்தின்போது கூட ஒரு சில விலைப்பட்டியலை உருவாக்க வேண்டுமா? கவலையே படவேண்டாம் எந்தவொரு பிரச்சினையும் குறுக்கிடாமல் இந்த InvoiceLion.எனும் பயன்பாட்டினை கொண்டு பயனத்தின்போதே எளிதாக விலைபட்டியலை உருவாக்கிகொள்ளமுடியும் இது முழுமையாக மிகத்திறனுடன் செயல்படக்கூடியது
இதிலுள்ள ஒருங்கிணைந்த நேர கண்காணிப்பு எனும் வசதியை கொண்டு அனைத்து நேரங்களையும் கண்காணிக்க அனுமதிக்கிறது, அதாவது ஒரு பொத்தானைக் சொடுக்குவதன் மூலம் ஒவ்வொரு பட்டியலையும் தயார் செய்த நேரத்தினை விலைப்பட்டியல் வரியாக கண்காணித்திடலாம்.
இந்த பயன்பாடானது அதிரடியாக இயக்கப்படும் முகப்புத்திரையைக் கொண்டுள்ளது: ஒன்று அல்லது இரண்டு சொடுக்குதல்களில் நாம் விரும்பும் எதையும் செய்ய முடியும். இது மிகபாதுகாப்பானது மிகச்சக்திவாய்ந்தது மிகத்திறனுடையது .இதில் பல்வேறு சக்திவாய்ந்த வார்ப்புருக்கள் நாம் பயன்படுத்திகொள்ள தயாராக இருக்கின்றன .ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக விலைப்பட்டியலை நாம் விரும்பியவாறு உருவாக்கமுடியும். வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வாடிக்கையாளருக்கான அனைத்து அறிவிக்கப்படாத பணிகளும் தானாகவே விலைப்பட்டியலில் தோன்றும். விலைப்பட்டியல் உருவாக்க ஒரு சில வினாடிகள் மட்டுமே ஆகும்.வாடிக்கையாளரிடம் விற்பணைக்கான பணம் பெற ஒரு சொடுக்குதலில் விலைப்பட்டியலை ஒரு PDF ஆக இணைக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்புவதும். நினைவூட்டல்களை அனுப்புவதும் எளிதானசெயலாகும்.
இந்த பயன்பாட்டில் விலைபட்டியலை நாம் விரும்பியவாறு மாற்றி வடிவமைக்கவும் அல்லது பயன்பாட்டின் சிறந்த இயல்புநிலை விலைபட்டியலை தெரிவுசெய்து கொள்ளவும் செய்யலாம்.
இதனை செயல்படுத்திடுவதற்காக முதலில் http://www.invoicelion.com எனும் தளத்திற்கு சென்று நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவக்குக இதனை பயன்படுத்தி கொள்வதற்காக ஆண்டு ஒன்றிற்கு 10 யூரோ டாலர் கட்டணமாக செலுத்திடவேண்டும்

Previous Older Entries