கையடக்க பிடிஎஃப் கோப்புகளை உதவிடும் கட்டற்ற பயன்பாடுகள்

கையடக்க பிடிஎஃப் கோப்புகளை அடோப் அக்ரோபேட் எனும் தனியுடைமை பயன்பாட்டினை கொண்டு படிக்கலாம் அச்சிட்டு பெறலாம் ஆனால் அதனை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து மேம்படுத்திட அனுமதிக்காது அவ்வாறு நாம் திருத்தம் செய்திவிரும்பிடும்போது முதலில் அதனை பழையவேர்டு வடிவமைப்பிற்கு உரு மாற்றம் செய்து திருத்தம் செய்திடவேண்டும் அதன்பின்னர் லிபர்ஆஃபிஸ் போன்ற பயன்பாடுகளை கொண்டு பழையவாறு பிடிஎஃப் கோப்புகளாக உருமாற்றம் செய்திடவேண்டும் இதற்கு பதிலாக நேரடியாக பிடிஎஃப் கோப்புகளில் திருத்தம் செய்து மேம்படுத்திட PDFMetaEdit ,Xodo PDF Reader & Editor ,PDFEdit ,PDF-XChange viewer ,PDFTools ,PDFEscape ,Inkscape போன்றவை மிகச்சிறந்த கருவிகளாக நாம் பயன்படுத்தி கொள்வதற்கு தயாராக உள்ளன

எந்தவொரு துறையினருக்கும் பயன்படும் கட்டற்ற பயன்பாடுகள்

1ஒளிஒலி படங்களை பதிப்பித்தல் செய்வதற்காக நாம் Adobe Premiere, Windows Movie Marker, Pinnacle Studio ஆகிய தனியுடமை பயன்பாடுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம் இதற்கு பதிலாக இதே வசதிவாய்ப்புகளை கொண்ட திறமூலமென்பொருட்கள் உள்ளன அவைAvidemux, Blender,kDenlive,Cenelerra, openshot, pitivi ஆகியவையாகும்
2அதேபோன்று கல்வி கற்பதற்கும்ஆய்வுசெய்வதற்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக MATLAB எனும்தனியுடைமை பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்கின்றனர் இதற்கு மாற்றாக Scilab, SageMath, GNU Octave ஆகிய வை இதே வசதி வாய்ப்புகளை கொண்ட திறமூலமென்பொருட்களாகும்
3இயந்திர பொறியாளர் கட்டிடபொறியாளர் போன்றவர்களுக்கு உதவிடும் தொழிலக வடிவமைப்பிற்கு AutoCADஎனும் தனியுடமைமென்பொருள் மிகச்சிறந்ததாக வளங்குகின்றது இதற்கு மாற்றாக BRLCAD,FreeCAD,LibreCADஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன
4Photoshopஎன்ற பயன்பாடுமட்டுமே வரைகலை வடிவமைப்பில் மிகச்சிறந்த பயன்பாடு என நாமனைவரும் என்னுகின்றோம் இதற்கு மாற்றாக Publisher, QuarkXpress, InDesignபோன்றவைகள் வரைகலை வடிவமைப்பில் திறமூலமொன்பொருட்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன
5 WYSIWYGஉம் HTML/CSSஉம் சேர்ந்த இணையபக்கங்களை வடிவமைப்பு செய்வதற்காக Dreamweaverஅல்லது இதுபோன்ற தனியுரிமை பயன்பாட்டிற்கு மாற்றாக Aptana Studio ,BlueGriffon ,Seamonkey ,Bluefish போன்ற திறமூலமென்பொருட்களும் கிடைக்கின்றன
6வியாபார நிறுவனங்களின் உற்பத்தி திட்டமிடுதல் ,உவ்வாறு உற்பத்தி செய்த பொருட்களுக்கான விலை, கணக்குபதிவியில், நிதிநிருவாகம்,சம்பளபட்டியல் பராமரத்தல், கையிருப்புபொருட்களை கையாளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கும் Oracle ERP Microsoft Dynamics, SAP ERPஆகிய தனியுடமை கருவிகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன இவைகளுக்க மாற்றாக இதே பணிகளை ஆற்றுகின்ற நிறுவன வளங்களை திட்டமிடுதல்( Enterprise Resource Planning (ERP))திறமூல கருவிகளாக Odoo , ERPNext , Dolibarr , Opentaps ஆகியவை உள்ளன.
7 பொருட்களை வழங்குவோர் பொருட்களை கொள்முதல் செய்வோர் என ஏராளமான அளவில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் தங்களுடைய இவ்வாறானதொடர்பாளர்களை கையாளுவதற்காக வாடிக்கையாளர் தொடர்புநிருவாகி(customer relationship management (CRM))என்ற தனியுடைமை கருவிகளாக Salesforce, Hubspot, Zohoஆகியவைஉள்ளன இவைகளுக்கு மாற்றாக திறமூலமென்பொருட்கள் EspoCRM ,SuiteCRM ,Oro CRM ,CiviCRM ஆகியவை உள்ளன

புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-18

தானியங்கியானநிரப்புதல்உரைகாட்சி
தானியங்கியானநிரப்புதல்உரைகாட்சி என்பது பயனாளர் தட்டச்சு செய்திடும்போது தானாகவே அந்த சொல்லின் மிகுதி எழுத்துகளை நிரப்புவதற்கான பட்டியலை காண்பிக்கசெய்வதை தவிர மிகுதி அனைத்தும் உரையை திருத்தலை போன்றே ஒரு காட்சியாகும் இந்த ஆலோசனைகளின் பட்டியலானது ஒரு கீழிறங்கு பட்டியலாக பிரதிபலிக்கசெய்திடும் பயனாளர் இந்த பட்டியலிலிருந்து பொருத்தமானதை தெரிவுசெய்து திருத்துதல் பெட்டியின் எழுத்துகளை மாற்றியமைத்து கொள்ளமுடியும்
தானியங்கியானநிரப்புதல்உரைகாட்சியின் பண்புகூறுகள்
பின்வருவது தானியங்கியானநிரப்புதல்உரைகாட்சியின் கட்டுப்பாட்டிற்கு தொடர்புடைய மிகமுக்கிய பண்புக்கூறுகளாகும் .இந்த பண்புக்கூறுகளின் முழுபட்டியலையும் தொடர்புடைய வழிமுறைகளையும் ஆண்ட்ராய்டின் அலுவலகம் சார்ந்த இணைய பக்கங்களில் நாம் இதனை சரிபார்த்திடமுடியும் மேலும் இவைகளைஇயக்கநேரத்தில் மாற்றியமைப்பதற்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்
எடுத்துகாட்டு
கோட்டு புறவமைப்பையும் தானியங்கியாக உரைகாட்சியை நிரப்புதலையும் பயன்படுத்தி நம்முடைய சொந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குவது எவ்வாறு என காண்பிப்பதற்கான எளிய படிமுறைகளின் வாயிலாக நம்மை இந்த எடுத்துகாட்டு கொண்டுசெல்லும்

ஆண்ட்ராய்டின் முன்மாதிரியை துவக்குவதற்கு இந்த பயன்பாட்டினை இயக்குக அதனை தொடர்ந்து இந்த பயன்பாட்டில் செய்யப்பட்ட மாறுதல்களின் விளைவை சரிபார்த்திடுக

பின்வருவது src/com.example.guidemo3/MainActivity.java.எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக்க முடியும்
package com.example.guidemo3;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.widget.ArrayAdapter;
import android.widget.AutoCompleteTextView;
public class MainActivity extends Activity {
AutoCompleteTextView autocompletetextview;
String[] arr = { “MS SQL SERVER”, “MySQL”, “Oracle” };
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
autocompletetextview = (AutoCompleteTextView)
findViewById(R.id.autoCompleteTextView1);
ArrayAdapter adapter = new ArrayAdapter
(this,android.R.layout.select_dialog_item, arr);
autocompletetextview.setThreshold(1);
autocompletetextview.setAdapter(adapter);
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
/* Inflate the menu; this adds items to the action bar if it is present */ getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/layout/activity_main.xmஎனும் கோப்பின் உள்ளடக்கமாகும்

இந்த புதிய மாறிலிகளை வரையறுப்பதற்கு பின்வருவது res/values/strings.xmlஎன்பதன் உள்ளடக்கமாகும்

GUIDemo3
Settings
Example
showing AutoCompleteTextView

பின்வருவது AndroidManifest.xmlஎன்பதன் இயல்புநிலை உள்ளடக்கமாகும்

சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்டGUIDemo3 எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க Eclipseஇலிருந்து இந்த பயன்-பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிபட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Eclipseஆனது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்-பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

2

பின்வரும் திரையில “m”என்பதற்கு பிறகு AutoCompleteTextViewஎன்பதில் தோன்றிடும் காட்சியாகும்

3
பயிற்சி XMLஇன் புறவமைப்பு கோப்பின் நிரல்தொடரினை உருவாக்கிடும் நேரத்திலும் தானியங்கியாக உரைகாட்சியை நிரப்பிடும் பண்புக்கூறில் வித்தியாசமான காட்சியை காணவும் உணரவும் வித்தியாசமான பண்புக்கூறுகளுடன் மேலேகூறிய பயிற்சியை முயற்சித்திடுக என பரிந்துரை செய்யப்படுகின்றது அதனை திருத்தம் செய்திடுமாறும் எழுத்துருவின் வன்ணம் ,குழு உரையமைப்பு ஆகிய பல்வேறு வகையில் மாறுதல்கள் செய்து அதன் விளைவை சரிபார்த்திடுக ஒரே செயலிற்கு பல்வேறு தானியங்கியாக உரைகாட்சியை நிரப்பிடும் கட்டுப்பாடுகளுடன் மேலேகூறிய பயிற்சியை செய்து பார்த்திடமுடியும்

எல்லோருக்கும் உதவிடும் கட்டற்ற பயன்பாடுகளும் கருவிகளும்

1ஒளிஒலி படங்களை பதிப்பித்தல் செய்வதற்காக நாம் Adobe Premiere, Windows Movie Marker, Pinnacle Studio ஆகிய தனியுடமை பயன்பாடுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம் இதற்கு பதிலாக இதே வசதிவாய்ப்புகளை கொண்ட திறமூலமென்பொருட்கள் உள்ளன அவைAvidemux, Blender,kDenlive,Cenelerra, openshot, pitivi ஆகியவையாகும்
2அதேபோன்று கல்வி கற்பதற்கும்ஆய்வுசெய்வதற்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக MATLAB எனும்தனியுடைமை பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்கின்றனர் இதற்கு மாற்றாக Scilab, SageMath, GNU Octave ஆகிய வை இதே வசதி வாய்ப்புகளை கொண்ட திறமூலமென்பொருட்களாகும்
3இயந்திர பொறியாளர் கட்டிடபொறியாளர் போன்றவர்களுக்கு உதவிடும் தொழிலக வடிவமைப்பிற்கு AutoCADஎனும் தனியுடமைமென்பொருள் மிகச்சிறந்ததாக வளங்குகின்றது இதற்கு மாற்றாக BRLCAD,FreeCAD,LibreCADஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன
4Photoshopஎன்ற பயன்பாடுமட்டுமே வரைகலை வடிவமைப்பில் மிகச்சிறந்த பயன்பாடு என நாமனைவரும் என்னுகின்றோம் இதற்கு மாற்றாக Publisher, QuarkXpress, InDesignபோன்றவைகள் வரைகலை வடிவமைப்பில் திறமூலமொன்பொருட்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன
5 WYSIWYGஉம் HTML/CSSஉம் சேர்ந்த இணையபக்கங்களை வடிவமைப்பு செய்வதற்காக Dreamweaverஅல்லது இதுபோன்ற தனியுரிமை பயன்பாட்டிற்கு மாற்றாக Aptana Studio ,BlueGriffon ,Seamonkey ,Bluefish போன்ற திறமூலமென்பொருட்களும் கிடைக்கின்றன
6வியாபார நிறுவனங்களின் உற்பத்தி திட்டமிடுதல் ,உவ்வாறு உற்பத்தி செய்த பொருட்களுக்கான விலை, கணக்குபதிவியில், நிதிநிருவாகம்,சம்பளபட்டியல் பராமரத்தல், கையிருப்புபொருட்களை கையாளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கும் Oracle ERP Microsoft Dynamics, SAP ERPஆகிய தனியுடமை கருவிகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன இவைகளுக்க மாற்றாக இதே பணிகளை ஆற்றுகின்ற நிறுவன வளங்களை திட்டமிடுதல்( Enterprise Resource Planning (ERP))திறமூல கருவிகளாக Odoo , ERPNext , Dolibarr , Opentaps ஆகியவை உள்ளன.
7 பொருட்களை வழங்குவோர் பொருட்களை கொள்முதல் செய்வோர் என ஏராளமான அளவில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள் தங்களுடைய இவ்வாறானதொடர்பாளர்களை கையாளுவதற்காக வாடிக்கையாளர் தொடர்புநிருவாகி(customer relationship management (CRM))என்ற தனியுடைமை கருவிகளாக Salesforce, Hubspot, Zohoஆகியவைஉள்ளன இவைகளுக்கு மாற்றாக திறமூலமென்பொருட்கள் EspoCRM ,SuiteCRM ,Oro CRM ,CiviCRM ஆகியவை உள்ளன

மாணவர்களின் வாழ்க்கையை காத்திடஉதவிடும் கட்டற்ற பயன்பாடுகள்

மாணவர்களின் மனங்களை pornography, violence, gambling போன்றவை அலைகழித்து அவர்களின் வாழ்க்கையை வீணாக்குகின்றன இவைகளில் இருந்து காப்பதற்காக பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் இவை தனியுடைமை பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதால் அவ்வப்போது ஆண்டுக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே நிகழ்நிலைபடுத்தி சமீபத்திய தீங்குகளை தடுத்திடுகின்றன இவ்வாறான தனியுடைமைக்கு பதிலாக கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகளும் ஏராளமாக கிடைக்கின்றன அவைகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து தம்முடைய பிள்ளைகளை காத்திடலாம்
PicBlock எனும் கருவியானது பிள்ளைகள் இணையஉலாவியைதுவங்கிடும்போது தீங்கிழைக்கசெய்திடும் திறவுச்சொற்கள் இணையமுகவரிகளை தடுத்திடுகின்றது
BlockSmart என்பது குறிப்பிட்ட தளங்களை முன்கூட்டியே தடுத்திட உதவுகின்றது
Blue Coat K9 Web Protection எனும் பயன்பாடு இணையஉலாவியை துவக்கியவுடனேயே தானாகவே திரையில் தோன்றி தவிர்க்ககூடிய தளங்களை உள்நுழைவுசெய்திடாதவாறு தடுக்கின்றது மேலும் அவ்வாறான இணையபக்கங்கள் தானாக நம்முடைய இணையஉலாவியில் தோன்றுவதை தவிர்க்கின்றது இதே போன்ற Microsoft Family Safety ,Qustodio ,Kurupira WebFilter ,netCheckPostnet, Stop P-O-R-N ஆகிய பல்வேறு பயன்பாடுகள் உள்ளன இவைகளுள் நம்முடைய தேவைக்கேற்றதை பயன்படுத்திகொள்க

podcastingஐஎவ்வாறு பயன்படுத்திகொள்வதுஎனும் வழிகாட்டி

எந்தவொரு நிகழ்வுகளையும் ஒலிஅல்லது கானொளி படவாயிலாக தயார்செய்து பொதுமக்களுக்கு உடனுக்குடன் ஒலிபரப்பு செய்வதையே podcasting எனஅழைப்பார்கள் இது பொதுவான நோக்கத்தில் உள்ள குழுவிற்குள் நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வதற்கு பேருதவியாக இருக்கின்றது இதனை நம்முடைய கணினியில் செயல்படும் விண்டோ ,லினக்ஸ், மேக் போன்ற எந்தவொரு இயக்கமுறைமையிலும் செயல்படுத்திகொள்ளலாம் இதனை செயல்படுத்துவதற்காக sAudacity,Ardour போன்ற கட்டற்றபயன்பாடுகள் உதவுகின்றன இதனை புதிய episodes, அல்லது விரும்பினால் இணையபக்கங்களாக அதைவிட YouTubeஅல்லதுSoundCloudசேவைகளைகூட இதற்காக பயன்படு்த்திகொள்ளலாம் இதற்காக பதிப்புரிமை கொண்ட MP3 வடிவமைப்பு கோப்புகள் அல்லது எக்ஸ்எம்எல்லின் அடிப்படையிலான podcast , an oggcast.வடிவமைப்பு கோப்புகளை பயன்படுத்தி கொள்க
RSS இன் அடிப்படையிலான iTunes syndication,Google Play syndication,general podcasts, andoggcastsஉள்ளீட்டை பராமரித்திடுக வேர்டுபிரஸ் எனும் இணையதளத்தினை பவர்பிரஸ்எனும் கூடுதல் இணைப்புடன் பயன்படுத்தி கொள்க iTunes and Google Play ஆகியவற்றின் வாயிலாக வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தி கொள்க பொதுமக்களை சென்றடைவதற்காக ட்விட்டர் சமூதாயா வலைபின்னல் சேவையை பயன்படுத்தி கொள்க மேலே கூறிய வழிமுறையில் தொழில்நுட்பம் , பொழுபோக்கு போன்ற பல்வேறு வகைகளில் நம்முடைய podcastingஐ உருவாக்கி பயன்படுத்தசெய்திடுக

விண்டோ10 இயங்கும் கணினியின் வேகத்தை அதிகபடுத்திட

நம்முடைய கணினியின் செயல்வேகம் மிகவும் மெதுவாக நத்தைபோன்று உள்ளது எனும் நிலையில் இதற்காக கணினியின்ரேம் அளவை அதிகபடுத்துவது மிகவிரைவான எஸ்எஸ்டியை பொருத்துவது ஆகிய செயல்களால் விண்டோ10 இயக்கமுறைமை செய்ல்படுத்தபடும் கணினியின் வேகத்தை அதிகபடுத்தலாம் ஆனால் அதற்காக நம்முடைய பையிலிருந்து அதிக செலவிடவேண்டியிருக்கும் அவ்வாறு பணம் எதுவும் செலவிடாமலேயே பின்வரும்வழிமுறைகளை பின்பற்றி விண்டோ10 இயக்கமுறைமை செய்ல்படுத்தபடும் கணினியின் வேகத்தை அதிகபடுத்தலாம்
1முதல்வழிமுறையாக நம்முடைய கணினியின் இயக்கத்தை நிறுத்தும் செய்து மீண்டும் துவங்கசெய்திடுக
2 இரண்டாவாதாக கணினியின் திரையில் கீழே இடதுபுறமூலையில் உள்ள Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் விரியும் பட்டியில் Power Options எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் கட்டுபாட்டு பலக்கத்தின் Power Options எனும் திரையில் High performance எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
3இதே Start எனும் பொத்தானின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் System என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் பட்டியில்Advanced system settings. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் System Properties எனும் உரையாடல் பெட்டியில் Advanced எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அந்த திரையில் Performance box எனும் பெட்டியில்உள்ள முதல்மூன்று அமைவுகளின் பொத்தான்களில் எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Settings எனும் உரையாடல் பெட்டயில் Adjust for best performance எனும் தேர்வுசெய்திடு்ம் வாய்ப்பினை தெரிவுசெய்து ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4 கணினியானது இயங்கத்துவங்கிடும்போது தேவையற்ற இயக்கங்களும் கூடவே துவங்கிநம்முடைய கணினியின் இயக்கத்தை மெதுவாக ஆக்கிடும் இவைகளை தானாக துவங்குவதை தவிர்ப்பதற்காக taskbarஇன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் TaskManager என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும்TaskManager எனும் திரையில் Startup எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அந்த திரையில் தானியங்கியாக செயல்துவங்கிடும் பயன்பாடுகளின் பட்டியல் விரியும் அவைகளில் தேவையற்றவைகளில் ஒவ்வொன்றின்மீதும் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Disable என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
5 இதேTaskManager எனும் திரையில் Processes எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து அந்த திரையில் CPU எனும் நெடுவரிசையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் பயன்பாட்டிற்கு தக்கவாறு பட்டியலிடும் தலைப்பில் அதிக அளவுஇருப்பவைகளைஅந்த பணி முடிவுற்றதால் அவைகளைமூடிவிடுவது நல்லது
6 Start > Settings.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Settings. எனும் திரையில் System என்பதை தெரிவுசெய்க பின்னர் விரியும் திரையின் இடதுபுற பலகத்தில் Notifications & actions என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் இடதுபுற பலகத்தின் கீழ்பகுதியில் Get tips, tricks, and suggestions as you use Windows.என்ற வாய்ப்பு தெரிவுசெய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கம் செய்திடுக

மிகச்சிறந்த பயனுள்ள இணையதளங்கள்

1 Zamzar.com இந்த தளமானது எந்தவொரு வகையான கோப்புகளையும் நாம் வேறு எந்தவொரு வகையான கோப்புகளாக மாற்றுதற்கு உதவிடும் மிகச்சிறந்த இணையதளமாகும் இதற்காக இந்த தளத்தில் நமக்கென தனியாககணக்கு எதுவும் துவங்கத்தேவையில்லை நம்முடைய மின்னஞ்சல்முகவரியை மட்டும் அளித்தால் போதும் நாம் இந்த தளத்தில் மேலேற்றிடும் கோப்பினை நாம் விரும்பிடும் வகையில் கோப்பினை மாற்றியமைத்து மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைத்திடுகின்றது ஏறத்தாழ 1200 வகையன கோப்புகளின் வகைகளை இதுஆதரிக்கின்றது கோப்பின் அளவு 50 எம்பி வரை இது கையாளுகின்றது

2.Printfriendly.com நாம் இணையத்தில் உலாவரும்போத குறிப்பிட்டபக்கத்தின் உள்ளடக்கத்தை அச்சிட்டுகொள்ளலாம் என முனையும்பது மிகவும் சிரமமான பணியாக நம்மை மிகவும் அலைகழிக்கவைத்திடும் அவ்வாறானநிலையில் இந்த தளத்தில் நாம் அச்சிட விரும்பும் தளத்தின் முகவரியைமட்டும் மிகஎளிதாக நமக்கு அந்த தளத்தின் பக்கங்களை அச்சிட்டுவழங்கிடும் இந்த பணிக்காக இந்த இணையபக்கத்திற்கு செல்லால் நம்முடைய இணைய உலாவியில் கூடுதல் இணைப்பாக செய்தும் அச்சிடும் செயல்படுத்தி கொள்ளலைாம்

3.Spreeder.com ஒருசில ஆங்கில இணையதளத்தின் குறிப்பிட்ட தகவல்கள் ஏராளமான பக்கங்களின் விரிந்திருக்கும் அவைகளை படித்து அந்த குறிப்பிட்ட கட்டுரை கூறும் தகவல்என்னவென தெரிந்து கொள்வதில் மிகவும் சிரமமான செயலாகும் அதனை தவிர்த்திட குறிப்பிட்ட இணையதள கட்டுரையை நகலெடுத்து இந்த தளத்தில் ஒட்டினால் போதும் நாம் விரும்பும் அளவிற்கு அந்த தளத்தில் கூறவிழையும் செய்தியை சுருக்கமாக நாம் விரும்பும் எழுத்துருவின் அளவில் வண்ணத்தில் வழங்கிடும் இதனை குறுக்குவழி விசையாக வும் பயன்படுத்தி கொள்ளலாம்

4 TwoFoods.com பொதுமக்கள் அனைவரும் தாம் எத்தனை கலோரி அளவிற்கு எந்தெந்த உணவுகளை உண்ணலாம் என திட்டமிடுவதற்கு இன்த தளம் மிகவும்சிறந்ததாக அமைகின்றது

5 Pdfunlock.com இந்த தளத்தில் நமக்கு கடவுச்சொற்களை உள்ளீடு செய்தால்தான் உள்நுழைவு செய்திடமுடியும் என்றவாறு வரும் கையடக்க PDFகோப்புகளை இந்த தளத்தின் வாயிலாக அவ்வாறான கடவுச்சொற்களை கொடுத்தபின்னர் கடவுச்சொற்கள் இல்லாமல் திறக்குமாறு மாற்றியமைத்துவிடும்

6 Newsmap.jp உலகில் நிகழும் சமீபத்திய அனைத்து நிகழ்வுகளின் செய்திகளையும் பல்வேறு வகையாக வகைபடுத்தி ஒரேயொரு பக்கத்தில் தலைப்பு செய்தியாக அறிந்து கொள்ளஇந்த இணையதளம் உதவுகின்றது

7 Mailinator.comநாம் இணையத்தில் எந்தவொரு பக்கத்திற்குள் உள்நுழைவுசெய்திடமுனையும்போதும் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து நமக்கென கணக்கினை துவங்கி உள்நுழைவுசெய்திட அனுமதிக்கும் இந்த தளமானது நமக்கென தனியாக ஒருமின்னஞ்சல் முகவரியை அவ்வாறான நிகழ்விற்கு உருவாக்கி வழங்குகின்றது குறிப்பி்ட்ட பணிமுடிந்து நாம்குறிப்பிட்ட தளத்தனை விட்டு வெளியேறியபின் தானாகவே அந்த மின்னஞ்சல்முகவரியை அழித்துவிடுகின்றது
8Disposablewebpage.comவேறுசில இணையதளங்கள் நாம் அந்த தளங்களுக்குள் உள்நுழைவு செய்திடுவதற்கு நம்முடை இணையபக்கமுகவரியை வழங்கிடுமாறு கோரும் அவ்வாறான நிலையில் இந்த தளமானது ஒரு தற்காலிக இணையமுகவரியை நமக்கென உருவாக்கி வழங்குகின்றது குறிப்பி்ட்ட பணிமுடிந்து நாம்குறிப்பிட்ட தளத்தனை விட்டு வெளியேறியபின் தானாகவே அந்த இணையமுகவரியை அழித்துவிடுகின்றது

9 AccountKiller.comமுகநூல் போன்ற சமூதாய இணையதளபக்கங்களில் ஒருமுறை நமக்கென கணக்கு துவங்கியபின் அதனை நீக்கம் செய்வது என்பது மிகவும் சிரமமான செயலாகும் அவ்வாறான நிலையில் இந்த தளம் கைகொடுக்கின்றது அவ்வாறான சமூதாய இணையதள பக்கங்களில் நம்மால் உருவாக்கப்பட்ட நம்முடைய கணக்குகளை எளிதவிலக்கி கொள்ளஇந்த தளம் நமக்கு உதவுகின்றது

நம்முடைய எந்தவொரு தேவைக்கும் உதவும் கட்டற்ற பயன்பாடுகள்

1 AnyMemo எனும் கட்டற்ற பயன்பாடு விட்டுவிட்டு ஒளிறும் படவில்லை அட்டைக் காட்சியாக தோன்றும் பல்வேறு தகவல்களை தன்னகத்தே கொண்டதாகும் இதன் சேகரிப்புகளை பதிவிறக்கம் செய்வது அல்லது நாமே குறிப்பெழுதுவதை போன்ற உருவாக்கலாம் எங்கும் எப்போதும் தேவையானபோது அவைகளை படிக்கலாம்
நமக்கு தெரியாத செய்திகளையும் மேல்மீட்பு பட்டியாக காண்பிக்கசெய்திடும் வசதிமிக்கது AnkiDroid F-Droidஆகியவை இந்த வகையை சேர்ந்தவையாகும் இது GPLv2 எனும் உரிமத்தில் கிடைக்கின்றது
2 arXiv Droid எனும் பயன்பாடானதுநம்முடைய கைவிரல் நுனியில் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்புகளை காண்பதற்கான வசதியை அளிக்கின்றது இந்த கட்டுரைகள் உயிரியல், கணினி அறிவியல், கணிதம், இயற்பியல் , இன்னும் பல்வேறு துறைகளுடைய கட்டுரைகளின் தொகுப்பாக திகழ்கின்றது. நாம் விரும்பும் புதிய செய்திகளை இ்ந்த தொகுப்பில் சேர்த்து தங்களின் ஆராய்ச்சிதிறனை விரிவாக்ககொள்ளமுடியும், இதனுடைய உரிமம்: GPLv2ஆகும்
3 எச்.டபிள்யூ-மேலாளர் எனும் பயன்பாடானது மாணவர்களின் பொதுவான குறிப்பு புத்தகமாக அன்றாட வீட்டுபாடங்களை எழுதுதல்போன்ற பல்வேறு பணிகளை தலைப்பு வாரியாக முடிவு தேதி வாரியாக அட்டவணை படுத்தபட்டுஅவைகள் தொடர்பான பணிகள் கீழிறங்கு பட்டியலாக காண்பிக்கசெய்து மாணவர்கள் தம்முடைய அன்றாட பணிகள் எதுவும் விடுபடாமல் செய்து முடிப்பதற்கு உதவுகின்றது இது GPLv3எனும் உரிமத்தில் கிடைக்கின்றது
4 Kiwix எனும் பயன்பாடானது விக்கிபீடியா போன்றதகவல்களின் களஞ்சியமாகும் ஆனால் இணைய இணைப்பு இல்லாதநிலையிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறுதகவல்களையும் தேடிபிடித்து தெரிந்து கொள்ள உதவுகின்றது இது ஒரு கல்விக் கட்டுரையை எழுதும் போது மாணவர்கள் பொதுவாக விவாதிக்க விரும்பவில்லை என்றாலும், பல்வேறு தலைப்புகளைப் பற்றி மேலும் அறியவும், தரமான மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது இது GPLv3 உரிமத்தில் கிடைக்கின்றது
5 Sugarizer என்பது சர்க்கரை கற்றல் சூழல், பயன்பாட்டின் வடிவத்தில் ஒரு லேப்டாப் ஒரு குழந்தை திட்டத்திற்காக முதலில் உருவாக்கப்பட்ட பிரத்யேக டெஸ்க்டாப் சூழல். இள வயதினரையும், சர்க்கரை கற்றல் சூழலையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஒரு எளிய தொகுப்பின் தொகுப்பாகும். இந்த செயல்பாடுகள் ஓவியம், இசை மற்றும் ஒரு அடிப்படை ஸ்க்ராட்ச் போன்ற இழுவை மற்றும் சொடுக்கும் நிரலாக்க சூழலைப் பயன்படுத்தி அடிப்படை நிரலாக்கத்தையும் உள்ளடக்கியது. இது Apache v2.0 உரிமத்தில் வெளியிடபட்டுள்ளது

ஆண்ட்ராய்டு ஓரியோ8.00 எனும் புதிய பதிப்பை பயன்படுத்தி கொள்க

இது சிறந்த பாதுகாப்பான, புத்திசாலியான, அதிக சக்திவாய்ந்த, முந்தைய பதிப்புகளைவிட மிக இனிமையானதாக திகழ்கின்றது இது எந்தவொரு சாதனத்திலும் தன்னுடைய இயக்கத்திற்காக மிகவிரைவான துவக்கத்தை அளிக்கின்றது இது மிககுறைந்த அளவு பயன்பாடுகளின் பின்புல இயக்கத்தை கொண்டது இதில் நாம் வழக்கமாக பயன்படுத்திடும் பயன்பாடுகளின் பெயர்களை ஓரிரு எழுத்துகளை உள்ளீடு செய்தவுடனே மிகுதிஎழுத்துகளை தானாகவே நிரப்பி குறிப்பிட்ட பயன்பாட்டினை இயங்குவதற்காக துவக்கசெய்திடும் வசதிகொண்டது இது ஒரே சமயத்தில் வெவ்வேறான இரு பயன்பாடுகளை செயல்படுத்திடும் திறன்மிக்கது இதில் முகநூல் போன்றசமூதாய வலைதளத்தினை ஒத்த புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் அதனை பார்வையிட்டவுடன் நீக்கம் செய்திடவும் ஆன வசதிமிக்கது ஒருசில பயன்பாடுகளை தேவையெனும்போது நம்முடைய சாதனத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடாமலேயே செயல்படுத்திகொள்ளும் வசதி கொண்டது இதில் மிக விரைவாக கட்டமைவு செய்துகொள்ளும் வதிமிக்கது இதில் வழிகாட்டிடும் பட்டை எழுத்துக்களைதட்டச்சுசெய்வது போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்ட இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ8.00 என்பதன் பீட்டா பதிப்பு தற்போது வெளியிடபட்டுள்ளது

Previous Older Entries