ஆண்ட்ராய்டுபயிற்சிகையேடு பகுதி-12 நோக்கங்களும் வடிகட்டிகளும்

ஒரு ஆண்ட்ராய்டின் நோக்கம் என்பது ஒரு நோக்கத்தை சுமந்து செல்லும் பொருளாகும் அதாவது பயன்பாட்டிற்குள்அல்லதுபயன்பாட்டிற்கு வெளியில் ஒரு ஆக்கக்கூறிலிருந்து மற்றொரு ஆக்கக்கூறுக்கு செய்திகளை கடத்துவதே நேக்கமாகும் , – இந்த நோக்கங்களின் உதவியால் ஒரு பயன்பாட்டின் செயல்பாடுகள் ,சேவைகள், ஒளிபரப்பு பெறுதல் ஆகிய மிகமுக்கிய மூன்று மத்திய ஆக்கக்கூறுகளுக்கிடையே செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும். இந்த நோக்கம் தனக்குள்ளாகவே, ஒரு நோக்கத்தின் பொருளாக, செயல்பாட்டினை நிகழ்த்துவதற்கான ஒரு சுருக்கமான விளக்கத்தை வைத்திருக்கும் ஒரு செயலற்ற தரவு கட்டமைப்புஆகும் . உதாரணமாக, நாம் ஒரு மின்னஞ்சல் வாடிக்கையாளரை தொடங்க வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்புவேண்டும் என்ற ஒரு செயல்பாடு நமக்கு வேண்டும் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த நோக்கத்திற்காக, ஒரு ACTION_SEND எனும் செயலுடன் பொருத்தமான தேர்ந்தெடுப்பவரை சேர்த்து, இந்த ஆண்ட்ராய்டு விருப்ப தீர்வாளருக்கு அனுப்பி வைப்பதாக அமைவதே .நம்முடைய நடவடிக்கையாகும் . இந்த குறிப்பிட்ட தேர்ந்தெடுப்பவர் நம்முடைய மின்னஞ்சல் தரவினை பயனாளருக்கு எவ்வாறு அனுப்புவது என முடிவெடுப்பதற்கு ஒரு சரியான இடைமுகத்தை அளிக்கின்றது.
உதாரணமாக, நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்தை பயன்படுத்தி ஒரு இணைய உலாவி URL ஐ திறக்க வேண்டும் என்ற ஒரு செயல்பாடு நமக்கு வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். . இந்த நோக்கத்திற்காக, நம்முடைய நடவடிக்கையின் இணைய உலாவியில் கொடுக்கப்பட்ட URL ஐ திறக்க ACTION_WEB_SEARCH எனும் செயலை இந்த ஆண்ட்ராய்டு விருப்ப தீர்வாளருக்கு அனுப்பி வைப்பதாக அமைவதே .நம்முடைய நடவடிக்கையாகும் . இந்த நோக்கத்தீர்வாளரானது ஒரு செயல்பாடுகளின் பட்டியலின் மூலம் அவற்றை பாகுபடுத்தி அவைகளிலிருந்து ஒரு பொருத்தமானதை நம்முடைய நோக்கத்திற்காக தேர்வுசெய்கின்ற இணைய உலாவியின் செயலே இந்த செயலாகும் பின்னர்இந்த நோக்கத் தீர்வாளரானது நம்முடைய வலை பக்கத்தை கடந்து வலை உலாவிக்கு சென்று வலை உலாவியின் செயலை துவங்குகின்றது.
செயல்பாடுகள், சேவைகள், ஒளிபரப்பு பெறுதல்கள் – ஆகிய ஒவ்வொரு வகை ஆக்கக்கூறுகளுக்கும் நோக்கங்களை வழங்குவதற்கென தனித்தனி வழிமுறைகள் கொண்டுள்ளன.

நோக்கப்பொருட்கள் : ஒரு நோக்கப்பொருள் என்பது ஆண்ட்ராய்டு அமைவால் பயன்படுத்தப்படும் நோக்கத்தின்கூடுதல் தகவல் பெறுவது எனும் ஆக்கக்கூறு பயன்படுத்தப்படும் தகவல்களின் ஒரு கட்டினை கொண்டிருக்கின்றது.
ஒரு நோக்கப்பொருளானது தொடர்பு என்றால் என்ன அல்லது நாம் என்ன செய்ய போகிறோம் என்பதன் அடிப்படையில் பின்வரும் ஆக்கக்கூறுகளை கொண்டிருக்க முடியும்
செயல்பாடு:நோக்க பொருளின் பகுதியாக இருப்பது என்பது கட்டாயமாகும் மேலும் இது செயல்பட வேண்டிய ஒரு சரத்தின் பெயராகும் -, அல்லது ஒளிபரப்பு நோக்கம் எனில், அறிவிப்பு செய்யப்படுகின்ற செயல்பாட்டினை கொண்ட செயலாகும் இந்த செயல்பாடானது மிகுதியுள்ள நோக்கப்பொருள் எவ்வாறு கட்டமைக்கபட வேண்டும்என வரையறுக்கின்றது. நோக்க இனமானது பல்வேறு நோக்கங்களுக்கு தொடர்புடைய ஏராளமான செயல்பாட்டின் மாறிலிகளை வரையறுக்கின்றது. இங்கே ஆண்ட்ராய்டு நோக்க செந்தர செயல்பாடுகளின் ஒரு பட்டியல் உள்ளது
ஆண்ட்ராய்டு நோக்க செந்தர செயல்பாடுகள்:பின்வரும் அட்டவணையில் பல்வேறு முக்கிய ஆண்ட்ராய்டின் நோக்க செந்தர செயல்பாடுகள் பட்டியலிடப்-பட்டுள்ளன இதனை கொண்டு ஆண்ட்ராய்டின் அதிகாரபூர்வ ஆவணத்தில் செயல்பாடுகளின் ஒரு முழுமையான பட்டியலை நாம் சரிபார்க்கலாம்:

ஒரு நோக்கத்தின் பொருள் செயல்பாடானது setAction () எனும் வழிமுறைமூலம் அமைக்கவும் getAction() எனும் வழிமுறையால் படிக்கவும் முடியும்
தரவுகள்:URI இன் தரவானது அந்த தரவிற்கு MIME இன் வகை தரவாகவும் அதேதரவாகவும் செயல்பட வேண்டும் . உதாரணமாக, செயல்பாட்டின் புலத்தில் ACTION_EDIT எனில், தரவு புலத்தில் ஆவணத்தின்: URI ஆனது திருத்தம் செய்வதற்காக காண்பிப்பதை கொண்டிருக்க வேண்டும்.
இந்த setData () எனும் வழிமுறையானது இது ஒரு URI தரவு மட்டுமே என குறிப்பிடுகின்றது, setType () எனும் வழிமுறையானது இது ஒரு MIME வகை-மட்டுமே என குறிப்பிடுகிறது, மேலும் setDataAndType () எனும் வழிமுறையானது இது ஒரு URIஉம் ஒரு MIME வகையும் சேர்ந்தது என்று குறிப்பிடுகிறது இந்தURI யினை getData() எனும் வழிமுறை மூலம் படிக்கவும் gettype() மூலம் வகைபடுத்தவும் செய்கின்றது.
செயல்பாடு / தரவு ஜோடிகளின் சில உதாரணங்கள் பின்வருமாறு:

வகைப்பாடு:வகையானது விருப்ப பொருளின் ஒரு விருப்ப பகுதியாகும், அதனுடைய ஒரு சரமானது நோக்கத்தை கையாள வேண்டும் என்ற ஆக்கக்-கூறின் வகையை பற்றி கூடுதல் தகவல் கொண்டதாகும். addCategory () எனும் வழிமுறை ஒரு நோக்கப் பொருளில ஒரு வகையை சேர்க்கின்றது, removeCategory () எனும் வழிமுறையானது முன்பு சேர்க்கப்பட்டஒரு வகையை நீக்கம் செய்-கின்றது, அதனை தொடர்ந்து getCategories () எனும் வழிமுறையானது நடப்பில் உள்ள தொகுப்பான அனைத்து வகையான பொருளையும் பெறுகின்றது. இங்கே ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர வகைகளின் ஒரு பட்டியல் உள்ளது.
ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர வகைகள்: ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர வகைகளின் பட்டியல்.பின்வரும் அட்டவணையாகும் ஆண்ட்ராய்டின் அதிகார-பூர்வ ஆவணத்தினுடைய வகைகளின் ஒரு முழுமையான பட்டியலை பின்-வருவதில் காணலாம்

ஒரு நோக்கத்திற்கு பொருத்தமான செயல்பாட்டினை தெரிவு செய்வதற்கு எவ்வாறு இந்த வகைப்பாட்டினை பயன்படுத்திடமுடியும் என புரிந்துகொள்வதற்கு பின்வரும் பகுதியில் நோக்கவடிகட்டியின்மீது நாம் விவரமாக சரிபார்த்திட முடியும்
உபரிகள் :நோக்கத்தை கையாளும் ஆக்கக்கூறுக்கு வழங்கபடவேண்டும் என்ற கூடுதல் தகவலிற்காக முக்கிய மதிப்பு ஜோடிகள் இதில் இருக்கும் . உபரியைகொண்டு putExtras () , getExtras () ஆகிய வழிமுறைகளை முறையே பயன்படுத்தி அமைக்கவும் படிக்கவும் முடியும். இங்கே ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர உபரிகளின் ஒரு பட்டியல் உள்ளது.
ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர உபரிகள் : ஆண்ட்ராய்டின் விருப்ப செந்தர உபரிகளின் பட்டியல்.பின்வரும் அட்டவணையாகும் ஆண்ட்ராய்டின் அதிகாரபூர்வ ஆவணத்தினுடைய உபரிகளின் ஒரு முழுமையான பட்டியலை பின்வரும் அட்டவணையில் காணலாம்

கொடிகள் :இந்தக் கொடிகளானது நோக்க பொருளின் விருப்ப பகுதியாகும், எப்படி ஒரு நடவடிக்கையை தொடங்கவேண்டும்,, அது போன்று தொடங்கப்பட்ட பிறகு அந்நடவடிக்கையானது எப்படி நடந்துகொள்ள வேண்டும் ஆகிய ஆண்ட்ராய்டு அமைப்புகளை இது அறிவுறுத்துகின்றது
ஆக்கக்கூறின் பெயர் :இந்த விருப்ப புலமானது ஒரு Android ComponentName எனும் பொருள் ஆகும், இது செயல்பாட்டினை ,சேவையை அல்லது ஒருஒலிபரப்பு பெறுகின்ற இனம் ஒன்றினை குறிக்கும் . அவ்வாறு அது அமைக்கப்பட்டால், designate எனும் இனத்தின் ஒரு சான்றான நோக்கப் பொருள் வழங்கப்பட்டதாகும் இல்லையெனில் ஆண்ட்ராய்டானது ஒரு பொருத்தமான இலக்கை கண்டுபிடிக்க விருப்ப பொருளின் மற்ற தகவல்களை பயன்படுத்துகிறது. மேலும் Component (), setClass (), அல்லது setClassName () ஆகிய வழிமுறைகளை அமைத்தலின் வாயிலாக ஆக்கக்கூறின் பெயர் அமைக்கப்படுகின்றது அதனை தொடர்ந்து getComponent() எனும் வழிமுறை வாயிலாக படிக்கப்படுகின்றது.
நோக்கங்களின் வகைகள் : பின்வரும் இரண்டு வகையான நோக்கங்கள் அண்ட்ராய்டு பதிப்பு 4.1 வரை ஆதரிக்கின்றன
வெளிப்படையான நோக்கங்கள் :இந்த நோக்கங்களை அதனுடைய பெயரால் இலக்க கூறின் designate – ஒரு துனைச்சேவையை தொடங்குவது அல்லது ஒரு சகோதர செயல்பாட்டினை தொடங்குவது போன்று அவை பொதுவாக உள்ளக செய்திகளின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்ற செயல்பாடுகள் ஆகும். உதாரணமாக
// Explicit Intent by specifying its class name
Intent i = new Intent(this, TargetActivity.class);
i.putExtra(“Key1”, “ABC”);
i.putExtra(“Key2”, “123”);
// Starts TargetActivity
startActivity(i);
மறைமுகமான நோக்கங்கள் : இந்த நோக்கங்கள் ஒரு இலக்கின் பெயர் அல்ல ஆனால் இவை ஆக்கக்கூறின் பெயருக்காக புலத்தில் காலியாக விடப்படுகின்றன. உள்ளார்ந்த நோக்கங்களை அடிக்கடி பிற பயன்பாடுகளில் ஆக்கக்கூறுகளை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக:
// Implicit Intent by specifying a URI
Intent i = new Intent(Intent.ACTION_VIEW,
Uri.parse(“http://www.example.com”));
// Starts Implicit Activity
startActivity(i);
இலக்கு ஆக்கக்கூறானது பெறுகின்ற வளங்களின் ஆக்கக்கூறால் அனுப்பிய உபரி தரவை பெறுவதற்கு getExtras() எனும் வழிமுறையை பயன்படுத்திகொள்கின்றது . உதாரணமாக
// Get bundle object at appropriate place in your code
Bundle extras = getIntent().getExtras();
// Extract data using passed keys
String value1 = extras.getString(“Key1”);
String value2 = extras.getString(“Key2”);

லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-5.2.தொடர்-15

லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் படவில்லைகளை அச்சிட்டு பெறுவதற்காக திரையின் மேலே செந்தர கருவிகளின் பட்டையிலுள்ள Print File Directlyஎன்ற உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறானசெயலை மாறுதல்கள் செய்வதற்காக இதே திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில் Tools > Options > Load/Save > General >Load printer Settings with the document என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
இம்ப்பிரஸானது ஒரேயொரு படவில்லையை ஒரு பக்கத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லைகளை ஒரே பக்கத்திலும் படவில்லைகளுடன் குறிப்புகளையும் சேர்த்து அச்சிடவும் ,படவில்லையை சுற்றி வரம்புக் கோட்டுடனும்,நாளையும் நேத்தையும் சேர்த்தும் படவில்லையின் பக்கத்திற்கு பெயருடனும் என்றவாறு பல்வேறு வகைகளில் அச்சிடமுடியும் இதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் File > Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+P ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் Print என்ற உரையாடல் பெட்டியானது General, Libre Office Impress, Page Layout, Optionsஆகிய நான்கு தாவிகளின் திரையில் Generalஎனும் முதல் தாவியின் திரை இந்த உரையாடல் பெட்டியில் விரியும்
குறிப்பு:இங்கு இந்த உரையாடல் பெட்டியில் Options எனும் தாவித்திரையில் நாம் ஏதாவது தெரிவு செய்து செயல்படுத்திடும் செயலானது இந்த ஆவணத்திற்கு மட்டுமே பொருந்தும் அனைத்து ஆவணத்திற்கும் பொருந்தவேண்டுமெனில் இதே திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் Tools > Options > LibreOffice > Print என்றவாறும் Tools > Options > LibreOffice Impress – Print என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை நினைவில் கொள்க
இந்த உரையாடல் பெட்டியின் Printer என்ற பகுதியின்கீழ் தேவையான அச்சுப்பொறியையும் அனைத்து படவில்லைகளையுமா அல்லது குறிப்பிட்ட படவில்லைகளைமட்டுமா என Range and copies என்றபகுதியிலும் படவில்லைகளுடன் குறிப்புகளையும் சேர்த்து அச்சிடவும் ,படவில்லையை சுற்றி வரம்புக் கோட்டுடனும், அச்சிடுவதற்காக Printஎன்ற பகுதியில்Documents என்பதற்கருகிலுள்ள கீழிறங்கு பட்டியலில் Handouts என்பன போன்ற தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்துகொள்க மேலும் பண்பியல்புகளை தெரிவுசெய்து சரிசெய்து கொள்வதற்காக properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பண்பியல்புகளுக்கான உரையாடல் பெட்டியின்paper,deviceஆகிய இருதாவிகளின் திரையில் தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

தொடர்ந்து இதே Print என்ற உரையாடல் பெட்டியில் Libre Office Impress எனும் தாவியின் திரையில் உள்ள Contents, Color, Size ஆகிய பகுதிகளில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
மேலும் இதே Print என்ற உரையாடல் பெட்டியில் Page Layout எனும் தாவியின் திரையில் உள்ள Layout , Page sidesஆகிய பகுதிகளில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதுமட்டுமல்லாது இதே Print என்ற உரையாடல் பெட்டியில் Optionsஎனும் தாவியின் திரையில் உள்ள Options எனும் பகுதியில் தேவையான வாய்ப்புகளை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
குறிப்பு: இந்த வாய்ப்புகளை தெரிவுசெய்தால் இயல்புநிலை வாய்ப்புகள் செயல்படாது என்ற செய்தியை மனதில்கொள்க
படவில்லைகளை brochure ஆக ஒருபக்கத்தில் மட்டும் அச்சிடுவதற்கான முதல்படிமுறையாக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் File > Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்-பலகையில் Ctrl+P ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் Print என்ற உரையாடல் பெட்டியானது Generalஎனும் தாவிப்பொத்தானின் திரையுடன் விரியும் பின்னர் அதில் properties என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பண்பியல்புகளுக்கான உரையாடல் பெட்டியின்paper எனும் தாவியின் திரையில் orientation என்பதில் portrait அல்லது landscape ஆகிய இரண்டில் ஒன்றினை தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் Print என்ற உரையாடல் பெட்டியில் Range and copiesஎனும் பகுதியில் பக்கம் ஒன்றிற்கு நான்கு அல்லது அதற்குமேலான படவில்லைகளை தெரிவு-செய்து கொள்க அதன்பின்னர் இதே Print என்ற உரையாடல் பெட்டியில் Page Layout எனும் தாவியின் திரையில் உள்ள Layout எனும் பகுதியில் Brochureஎனும் வாய்ப்பினையும் Page sidesஎனும் பகுதியில் Includeஎனும் கீழிறங்குபட்டியலில் Back sides / left pagesஎனும் வாய்ப்பினையும் தெரிவு செய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு நாம் தெரிவுசெய்தவாறு படவில்லைகளானது ஒருபக்கம் அச்சிடப்படும் அவ்வாறு அச்சிட்டதாளை எடுத்து திரும்பவும் அச்சுப்பொறியில் அடுக்கிவைத்து மேலே கூறிய படிமுறை Layout எனும் பகுதியில் Brochureஎனும் வாய்ப்புவரை அப்படியே பின்பற்றிடுக Page sidesஎனும் பகுதியில் மட்டும்Includeஎனும் கீழிறங்குபட்டியலில் Front sides / right pagesஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதே brochure ஆனது ஒருபக்கத்தில் மட்டும் அச்சிடுவதற்கான முதல்படி-முறையாக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் File > Print என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்-பலகையில் Ctrl+P ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் Print என்ற உரையாடல் பெட்டியானது Generalஎனும் தாவிப்பொத்தானின் திரையுடன் விரியும் அதில் properties என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பண்பியல்புகளுக்கான உரையாடல் பெட்டியின்paper எனும் தாவியின் திரையில் orientation என்பதில் portrait அல்லது landscape ஆகிய இரண்டில் ஒன்றினை தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொண்டு அச்சிடுவது duplex அல்லது double sided ஆகியவற்றில் ஒன்று அச்சிடுமாறு தெரிவு செய்யப்-பட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Print என்ற உரையாடல் பெட்டியில் Range and copiesஎனும் பகுதியில் பக்கம் ஒன்றிற்கு நான்கு அல்லது அதற்குமேலான படவில்லைகளை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் இதே Print என்ற உரையாடல் பெட்டியில் Page Layout எனும் தாவியின் திரையில் உள்ள Page sidesஎனும் பகுதியில் Includeஎனும் கீழிறங்குபட்டியலில் All pagesஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லைகளைபிடிஎஃப் எனும் கையடக்க ஆவணமாகபதிவேற்றம் செய்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளைபட்டையில் File > Export as PDF என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் PDF Options என்ற உரையாடல் பெட்டியானது General,initial view, user Interface, Links,Securityஆகிய ஐந்து தாவிபொத்தான்களுள் இயல்புநிலையில் Generalஎனும் முதல் தாவிப்பொத்தானின் திரையானது இந்த உரையாடல் பெட்டிதிரையில் விரியும் இதில் பல்வேறு வாய்ப்புகளை கொண்ட Range, Images, General ஆகிய பகுதிகள் உள்ளன அவைகளுள் நமக்குதேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொள்ளலாம் அவ்வாறே இதே உரையாடல் பெட்டியின் initial view எனும் தாவிப்பொத்தானின் திரையில் விரியும் பக்கத்தில் பல்வேறு வாய்ப்புகளை கொண்ட Panes,Magnification,Page layout ஆகியபகுதிகள் உள்ளன அவைகளுள் நமக்குதேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொள்ளலாம்

அவ்வாறே இதே உரையாடல் பெட்டியின் User Interface pageஎனும் தாவிப் பொத்தானின் திரையில் பல்வேறு வாய்ப்புகளை கொண்ட Window options,User interface options,Transitions, Bookmarks ஆகியபகுதிகள் உள்ளன அவைகளுள் நமக்குத் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து கொள்ளலாம்
அதற்குமேலும் இதே உரையாடல் பெட்டியின் Linksஎனும் தாவிப்பொத்தானின் திரையில் விரியும் பக்கத்தில் பல்வேறு வாய்ப்புகளை கொண்ட General,Cross-document links ஆகியபகுதிகள் உள்ளன அவைகளுள் நமக்குதேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்ளலாம்
அதுமட்டுமல்லாது இதே உரையாடல் பெட்டியின் Securityஎனும் தாவிப்பொத்தானின் திரையில் பல்வேறு வாய்ப்புகளை கொண்ட Printing,Changes ,Content ஆகிய பகுதிகள் உள்ளன அவைகளுள் நமக்குதேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவு செய்து கொள்ளலாம் மிகமுக்கியமாக இந்த தாவியின் திரையில் Set password எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் Set password என விரியும் உரையாடல்பெட்டியில் இந்த ஆவணத்தை திறந்து படிப்பதற்குமட்டும் எனில் Set open password எனும் பகுதியிலும் பயனாளர் திருத்தம் செய்திட அனுமதிப்பது எனில் Set permission password எனும் பகுதியிலும் கடவுச்-சொற்களை உள்ளீடு செய்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படவில்லைகளை Flash file என்பதை (.swf) எனும் கோப்பு வடிவமைப்பில் பதிவேற்றம் செய்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Export என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயரை உள்ளீடு செய்து கொண்டு சேமிக்க வேண்டிய இடத்தை மட்டும்தெரிவுசெய்து File Formatஎன்பதில் கோப்பின் வடிவமைப்பினை அதற்கான கீழிறங்கு பட்டியலிலிருந்து Macromedia Flash (SWF) (.swf) என்றவாறு தெரிவுசெய்து கொண்டு Save.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லைகளை இணைய பக்ககோப்புகளாகWeb pages (HTML files) பதிவேற்றம் செய்திடுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Export என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் கோப்பின் பெயரை உள்ளீடு செய்து கொண்டு FilFormat என்பதில் கோப்பின் வடிவமைப்பினை அதற்கான HTML Document (Impress) என்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்து (.html; .htm) என்றவாறு தெரிவுசெய்து கொண்டு சேமிக்கவேண்டிய இடத்திற்கான கோப்பகத்தினை புதியதாக உருவாக்கி அதற்கொரு பெயரிட்டு Save.என்ற பொத்தானை HTML Exportஎனும் வழிகாட்டிடும் பெட்டியில் தெரிவுசெய்து சொடுக்குக அடுத்துAssign Design எனும்பகுதியில் புதியதுஎனில்NewDesign எனும் வாய்ப்பினையும் ஏற்கனவே இருப்பது எனில் Existing Designஎனும் வாய்ப்பினையும் தெரிவுசெய்து கொண்டு இதே வழிகாட்டிடும் பெட்டியில்Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் இதே வழிகாட்டிடும் பெட்டியின் திரையில் Save image as Monitor resolution Effects ஆகிய பகுதிகளில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் name of the author, e-mail address , home page, additional information போன்ற விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு இதே வழிகாட்டிடும் பெட்டியில்Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் விரியும் இதே வழிகாட்டிடும் பெட்டியின் திரையில் select the buttons style என்பதில் தேவையான பாவணையை மட்டும் தெரிவுசெய்து கொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் இதே வழிகாட்டிடும் பெட்டியின் திரையில் இந்த இணைய பக்கத்திற்கான select the color schemeஎன்ற பகுதியில் தேவையான வாய்ப்புகளையும் பொத்தான்களையும் தெரிவுசெய்து கொண்டு create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லைகளுக்கான இணையபக்கம்ஒன்று உருவாகும் இதற்கு ஒரு பெயரிட்டு சேமித்துகொள்க
நம்முடைய இம்ப்பிரஸ் படவில்லை காட்சியை மின்னஞ்சலாக அனுப்பிடுவதற்காக ODPஎனும் வடிவமைப்பு எனில் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Send > Document as E-mail அல்லது File
> Send > E-mail as OpenDocument Presentationஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
அதற்கு பதிலாக PPTஎனும் வடிவமைப்பு எனில் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Send > E-mail as Microsoft PowerPoint Presentationஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
வேறுவகையாக PDF எனும் வடிவமைப்பு எனில் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Send > E-mail as PDFஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது செந்தர கருவிகளின் பட்டையில் Export Directly as PDFஎனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ் ஆவணத்தில் Digital Signaturesஐ இணைப்பது மிக பாதுகாப்பானதாகும் இதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Digital Signaturesஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கு உடன் எச்சரிக்கை செய்தியொன்று திரையில் தோன்றிடும் அதில் yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பிறகு Digital Signatures எனும் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்அதில் Sign Document எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Select Certificate எனும் உரையாடல் பெட்டியில் தேவையான சான்றிதழ் கோப்பினை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
நாம் இந்த கோப்பினை மற்றவர்ளுக்கு அனுப்பிடும்முன் அதில் நம்முடைய சொந்த தகவல்களை நீக்கம் செய்து அனுப்புவது நல்லது அதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்Tools > Options > LibreOffice > Security > Options,என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் உரையால் பெட்டியில் தேவையான எச்சரிக்கை வாய்ப்புகளை அமைத்துகொள்க
மேலும் திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Properties. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் உரையாடல் பெட்டியின் Generalஎனும் தாவியின் திரையில்Apply user data என்ற வாய்ப்பினை தெரிவுசெய்யாது விட்டிட்டுReset என்ற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக மேலும் ok என்ற பொத்தானை தெரிவுசய்து சொடுக்குக
லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மைக்ரோசாப்ட்டின் பவர்பாய்ன்ட் கோப்பாக சேமித்திடலாம் இதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்File > Save As,என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையால் பெட்டியில்File type என்பதன்கீழ் கீழிறங்கு பட்டியலிலிருந்து(.ppt or .pptx) ஆகியMicrosoft PowerPoint வடிவமைப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு Saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக வேறு வடிவமைப்பில் சேமித்திடும்போது நமக்கு எச்சரிக்கை செய்தி யொன்று திரையில் தோன்றுவதற்காக திரையின் மேலே முதன்மை கட்டளை பட்டையில்Tools > Options > Load/Save > Generalஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் Confirm file Formatஎனும் உரையால் பெட்டியில் Ask when not saving in ODF formatஎனும வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க

Soft Murmurஎனும் மெல்லிசையை பின்புல இசையை கேட்டுகொண்டே நம்முடைய பணியை ஆற்றிடுக

Soft Murmurஎனும் மெல்லிசை இணையதளமானது நம்முடைய பணியில் நாம் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும்போது நம்முடைய கவணத்தை திசைதிருப்பாமல் பின்புலத்தில் பல்வேறு வகையான மெல்லிசைகளால் சூழப்பட்டு பணியை நன்றாக செய்வதற்கு உதவுகின்றது இந்த இணைய பக்கத்திற்கு வந்து சேர்ந்தவுடன் இதிலுள்ள Playஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் பின்னிசைகளின் சங்ககமான rain, thunder, waves, wind, fire, birds, crickets, coffee shop, singing bowl, and white noise. ஆகிய பல்வேறு வகைகளான மெல்லிசைகள் நாம் தெரிவு செய்வதற்கேதுவாக விரியும் அவைகளுள் நமக்கு பிடித்தமான இசையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இவைகளில் ஒன்றிற்கு மேற்பட்டவைகளை இணைத்து புதிய இசையாக பின்னிசையாக ஒலிக்குமாறு அமைத்திடலாம் இந்த இணையதளபக்கத்தில் Audacity எனும் பயன்பாடானது இசையில் திருத்தம் செய்வதற்காகவும் HTML5 எனும் இணைய பயன்பாட்டுடனும் கட்டுபடுத்துவதற்காக jQuery எனும் பயன்பாட்டினையும் கொண்டு வித்தியாசமான பின்னனி இசைகள் உருவாக்கப்பட்டுள்ளன இவைகளை கொண்டு நாம் நமக்கு பிடித்தமான பின்னனி இசைகளைகூட உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க இதனுடைய இணைய முகவரி http://asoftmurmur.com/ஆகும்

உருவப்படங்களை இணையதளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள ShareX எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நாம் விரும்பும் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மிகவும் சிரமமட்டு அவைகளை பதிவேற்றம் செய்திடுவோம் அவ்வாறான பணிகளை எளிதாக்குவதற்காக ShareX எனும் கட்டற்ற பயன்பாடு தயாராக இருக்கும்போது நாம் எதற்காக கவலைப்படவேண்டும் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயல் படுத்திடுக இந்த கட்டற்ற பயன்பாடானது திரையில் இருப்பதை நகலெடுப்பது கணினியின் திரையில் அல்லது ஏதேனும் ஒரு பயன்பாடு செயல்படுகின்றதுஎனி்ல் அதனுடைய சாளரத்தினைஅல்லது முழுவதுமானதிரையில் உள்ளஉருவப்படம் ஆகியவற்றை நாம் விரும்பியவாறு நகலெடுத்து நாம் விரும்பிய இடத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஏராளமான கருவிகள் நமக்கு உதவுவதற்காக இந்த பயன்பாட்டின் திரையில் உள்ளன உருவப்படங்களை மட்டுமல்லாது கானொளி காட்சிகளை கூட இந்த பயன்பாட்டினை கொண்டு பதிவேற்றம்செய்திடுமாறு செயல்படுத்திடலாம் படப்பிடிப்பு செய்த உருவப்படங்களையும் கானொளிகாட்சிகளையும் நம்முடைய நாம்விரும்பும் logo அல்லது watermark ஐ பின்புலமாக இருக்குமாறு செய்திடலாம் இணைய தளகாட்சிகளையும் இணையதள முகவரியையும் நகலெடுத்து படப்பிடிப்பு செய்தபின் அதில் திருத்தம் செய்து நம்முடைய நன்பர்களுக்கு சமூதாய வலைதளத்தில் பதிவேற்றம்செய்து பகிர்ந்து கொள்ளலாம்

தற்போதைய சோனார் தொழில்நுட்பம் எவ்வாறு மக்களுக்கு உதவுகின்றது

வெளவால்கள் இந்த சோனார் எனும் காதில் கேளா ஒலிஅலைகளின் உதவியால் தமக்கு தேவையான இரையை தேடுவதும் டால்பின் வேல்ஸ் போன்ற மீனினங்கள் நீரில் மூழ்கி இந்த இந்த சோனார் எனும் காதில் கேளா ஒலிஅலைகளின் உதவியால் தமக்கு தேவையான இரையை தேடிஅடைவதும் அனைவரும்அறிந்த செய்தியே அவ்வாறான காதுகேளா ஒலிஅலைகளின் தற்போதைய வளரச்சியினால் SmartCane எனும் கருவியானது பார்வையற்றவர்கள் மற்றவர்களின் உதவியில்லாமல் தங்களுடைய பணியை ஆற்றிட உதவுகின்றது அவ்வாறே வாரஇறுதியின் ஓய்வுநாட்களில் கடலுக்குள்சென்று மீன்பிடிப்பவரகளுக்கு உதவுவதற்காக Lowrance HDS-9 Gen2 Touch Sonar/GPS Combo with HDI Transducer system எனும் கருவியானது மூன்றாம் தலைமுறை அலைகற்றை நான்காம் தலைமுறை அலைகற்றையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தபடுகின்றது முன்பெல்லாம்பலபத்தாண்டுகளாக இந்த சோனார் தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி அதன்முடிவை 10 அல்லது 15 நிமிடத்தில்அறிந்து கொண்டனர் அவ்வாறான நிலையானது தற்போது Single Leg Bearing Range (SLBR) எனும் பயன்பாட்டினை கொண்டு சோனார் தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி அதன்முடிவை ஒருசிலநொடிகளில்அறிந்து கொள்ளமுடியும் என்றஅளவிற்கு மேம்பட்டுள்ளது

மிகமேம்பட்டபல்லூடகஇடைமுகவரையறை (High Definition Multimedia Interface (HDMI )) எனும் தொழில்நுட்பத்தினால் கணியையும் தொலைகாட்சி பெட்டியையும் எளிதாக இணைத்து பயன்படுத்தி கொள்க

நம்முடைய கானொளி படங்களையும் ஒலிகளையும் மிகஎளிதாக இந்த மிகமேம்பட்டபல்லூடகஇடைமுகவரையறை (High Definition Multimedia Interface(HDMI))எனும் தொழில்நுட்பத்தினால் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு கொண்டுசெல்லமுடியும் இதற்காக நம்முடைய கணினியில் அல்லது மடிக்கணினியில் ஒரு HDMI எனும் வாயில் HDMI எனும் இணைப்பு கம்பி தொலைகாட்சிபெட்டியில் இந்தHDMI எனும் இணைப்பு கம்பியை செருகுவதற்காக செருகுவாய் ஆகியவை தயாராக இருந்தால் போதும் இவைகளைகொண்டு நம்முடைய கணினியையும் தொலைகாட்சி பெட்டியையும்இணைத்து கொள்க பின்னர் நம்முடைய கணினியை செயல்படுத்திடுக அதன்பின்னர் நம்முடைய கணினியில் CTRL+F5 என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் கணினியானது வெளிப்புற இணைப்பான தொலைகாட்சி பெட்டியின் திரையை கணினியின் திரையாக செயல்படுத்த தயாராகிவிடும் பின்னர் கணினியின் திரையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை அழுத்துக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் SCREEN RESOLUTIONஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் உள்ள பல்வேறு வாய்ப்பு வசதிகளில்கணினி தொலைகாட்சி ஆகிய இரண்டு திரைதோன்றிடும் அதில் தொலைகாட்சி திரையைமட்டும் தெரிவுசெய்துகொண்டு நாம்விரும்பும் திரைதுல்லியத்தினை அமைத்துகொள்க

பலதளங்களிலும் செயல்படும்திறன்மிக்கபயன்பாடுகளை மேம்படுத்திட உதவிடும் Qt எனும் கருவி

இந்த கியூட் எனும் கருவியானது நிரல்தொடர்எழுதும் கணினிமொழியன்று ஆனால் இதுபலதளங்களிலும் மேஜைக்கணினி, உள்பொதிந்த அமைவு, செல்லிடத்து பேசி ஆகியவற்றில் செயல்படும்திறன்மிக்கபயன்பாடுகளையும் வரைகலைபயனாளர் இடைமுகப்பினை மேம்படுத்திட உதவிடும் ஒரு கட்டற்ற கருவியான வரைச்சட்டமாகும் இது முதன்முதலில் 1995 வெளியிடப்ட்டு தற்போது Qt 5.8எனும் புதியபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது இது சி++ எனும் கணினிமொழியில் உருவாக்கப்பட்டு விசுவல்ஸ்டுடியோ ஜாவாஸ்கிரிப்ட் எஸ்கியூஎல் ஆகியவற்றை ஆதரிக்கின்ற ஒரு வரைசட்டமாக அமைந்துள்ளது
இதனை இதுவரையில் ஏறத்தாழ ஒருமில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது வழக்கமான மேஜைக்கணினி திரைமட்டுமல்லாது வரைகலை இடைமுகப்பையும் கொண்டதுபெயின்டிங்க் பிரின்டிங்க் ஆகிய பணிகளுக்கும் இந்த விட்ஜெட்ஸ் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றதுபயனாளர் தாமே முயன்று தாம்விரும்பியவாறான இணைய உலாவி இயந்திரத்தை உருவாக்கிட இதுஉதவுகின்றது இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகை வழிகாட்டியின் உதவியால் அல்லது நேரடியாக இதனை நம்முடைய கணினியில்நிறுவுகை செய்து கொள்ளமுடியும் அதன்பின்னர் QtCreater என்பதை செயல்படுத்திடுக உடன் தோன்றிடம் திரையில் File>NewFile அல்லது NewProject என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் QtQUIApplication என்பதை தெரிவுசெய்து கொண்டு இதற்கொரு பெயரிடுக பிறகு Qtversion என்பதில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட பதிப்புகளை தெரிவுசெய்துகொள்க பின்னர்QWidget என்பதை அல்லது இயல்புநிலையில் இருப்பதை தெரிவுசெய்து கொள்க main.cpp, widget.h, widget.cpp, widget.uiஆகிய இந்த செயல்திட்டத்திற்கான கோப்புகள் உருவாகிவிடும் மேலும் விவரங்களுக்கு https://wiki.qt.io/ எனும் இணையபக்கத்திற்கு செல்க

Previous Older Entries