லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர்-தொடர்-43-புலங்களில் பணிபுரிதல் தொடர்ச்சி

லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டரில் புலங்களை உருவாக்கி பணிபுரியும்போது மேற்கோள்களை ( references) புலங்களில் உருவாக்கவோம்.. அவ்வாறு உருவாக்குவதற்காக Page, Chapter, Reference, Above/Below, As Page Style ஆகிய வடிவமைப்புகள் நாம் பயன்படுத்துவதற்கு தயாராகஉள்ளன. கூடுதலாக Number (no context), Number (full context)ஆகிய இரு வாய்ப்புகளும் உள்ளன. தானியங்கியாக இல்லாமல் நாமே முயன்று ஒரு cross-reference உருவாக்கிடும்போது bookmarks அல்லது set references. ஆகிய இரண்டில் ஒன்றினை பயன்படுத்தவேண்டும் .

இந்த Bookmarksஆனது வழிகாட்டித்(Navigator)திரையில் பட்டியலாக இருந்தால் தேவையான பகுதிக்கு நேராக செல்வதற்காக சுட்டியை சொடுக்குவதன் வாயிலாக செல்லமுடியும் . அதற்காக மீஇணைப்பு செய்திடவேண்டும். இவ்வாறு மீஇணைப்பை உருவாக்குவதற்காக முதலில் தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Bookmark=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் Bookmark எனும் உரையாடல் பெட்டியின் திரையில் சிறு காலியான உரைப்பெட்டியில் இந்த புத்தகக்குறிக்கான பெயரை உள்ளீடு செய்துகொண்டு OK.எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

1

1

அதன்பின்னர் மேற்கோள்களை அமைப்பதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Cross reference=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது விசைப்பலகையில் உள்ள Ctrl+F2 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. உடன்விரியும் உரையாடல் பெட்டியின் Cross reference எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ்உள்ளவைகளுள் set reference என்பதை தெரிவுசெய்திடுக. பின்னர் தேவையான ஆவணத்தை தெரிவுசெய்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியில் Nameஎனும் உரைப்பெட்டியில் இதற்கு ஒரு பெயரிட்டு insertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Selection என்பதன்கீழ் நாம் மேற்கோள் செய்த பெயர் பட்டியலாக வீற்றிருக்கும்.. இதே படிமுறையை மேலும் மேற்கோள்கள் செய்வதற்கும் செயல்படுத்திடுக.

புலங்களைகொண்டு ஒருஆவணத்தின் தலைப்பையும் முடிவையும் உருவாக்குதல் இதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert =>Fields => [item] => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் page number, document title, author, creation date and time, current date and time, or total page ஆகிய விவரங்களை ஒருஆவணத்தின் தலைப்பு பகுதியிலும் முடிவுப் பகுதியிலும் உள்ளிணைத்து பிரதிபலிக்குமாறு அமைத்திடலாம் .அல்லது Insert=> Fields => Other => Cross-references.=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தலைப்புப் பகுதியையும் இதர விவரங்களையும் உள்ளிணைத்திடலாம். அல்லது Insert => Fields => Other => Document=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Heading 1, என்பதன்வாயிலாக Chapter number and name போன்ற விவரங்களை உள்ளிணைத்திடலாம். அல்லது Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Fields எனும் உரையாடல் பெட்டியின் Document எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Chapter என்பதையும் Format என்பதன்கீழ் Chapter number without separatorஎன்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

2

2

அடுத்து பக்கஎண்ணிடலை உள்ளிணைப்பதற்காக Insert => Fields => Page Count=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் திரையில் Page 9 of 12 என தோன்றுமாறு செய்வதற்காக Page என தட்டச்சு செய்து Space bar எனும் விசையை அழுத்துக. பின்னர் of என தட்டச்சு செய்து Space bar எனும் விசையை அழுத்துக.

புத்தகங்களில் பின்இணைப்புகளை சேர்த்திடும்போது அதற்கானபக்க எண்களை இந்த புலங்களை கொண்டு அமைத்திடலாம் .

அதற்காக முதலில் புத்தகங்களின் வழக்கமான பகுதிக்கு Heading 1, என்பதன்வாயிலாக Chapterஎன்பதை தெரிவுசெய்துகொண்டு<space> என்ற விசையை விசைப்பலகையில் அழுத்துக. பின்னர் Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்விரியும் திரையில் Fields எனும் உரையாடல் பெட்டியின் Variable எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Number range என்பதையும் select என்பதன்கீழ் Chapterஎன்பதையும் Formatஎன்பதன்கீழ் Arabic (1 2 3) என்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.. அதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் Variableஎனும் தாவிப்பொத்தானின் திரையில் Type என்பதன்கீழ் Number rangeஎன்பதையும் select என்பதன்கீழ் Appendix என்பதையும் Formatஎன்பதன்கீழ் A B C),என்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக..

3

3

இங்கு புலங்களில் பணிபுரியும்போது விசைப்பலகையிலுள்ள Ctrl+F2,ctrl+F8,Ctrl+F9,F9 என்றுள்ளவாறு விசைகளை சேர்த்து அழுத்துதல் செய்து பயன்படுத்திகொள்க..

புலங்களை உரையாக மாற்றுவதற்காக முதலில் தேவையான புலங்களை தெரிவு செய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Edit => Cut=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது Ctrl+X.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக .அதன்பின்னர் Edit => Paste Special=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் தி்ரையில் Unformatted textஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் okஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Alt+Shift+Vஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக.

நிபந்தனையுடனான உள்ளடக்கங்களை பயன்படுத்துதல்

உதாரணமாக தமிழ்கம்யூட்டர் எனும் சொல்லிற்கு அருகில் ஆம்எனில் இது திங்கள் இருமுறைவெளியிடப்படும் இதழ்என்றும் தமிழ்கம்யூட்டர் எனும் சொல்லிற்கு அருகில் இல்லையெனில் இது ஒரு வாரஇதழ் அன்றுஎன வருவதற்கு , தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப் பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் conditional text என்பதை தெரிவுசெய்து கொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில் தமிழ்கம்யூட்டர் ஆம்” ‘ என்பதையும் Then என்ற உரைப்பெட்டியில் திங்கள் இருமுறைவெளியிடப்படும் இதழ்என்பதையும் Elseஎன்ற உரைபெட்டியில் இது ஒரு வாரஇதழ் அன்று என்பதையும்உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

4

4

குறிப்பிட்ட உரைப்பகுதியை திரையில் தோன்றிடாமல் மறைத்திடுவதற்காக முதலில் தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functions எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Type என்பதன்கீழ் Hidden text என்பதைதெரிவுசெய்துகொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில்தமிழ் கம்யூட்டர் இல்லை” ‘ என்பதையும் hidden text என்ற உரைப்பெட்டியில் இது ஒரு வார இதழ் அன்றுஎன்பதையும் உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் நாம் தெரிவுசெய்த உரையானது மறைந்துவிடும்..

அவ்வாறே பத்தியை திரையில் மறையச்செய்யலாம் .அதற்காக முதலில் தேவையான பத்தியை தெரிவுசெய்து கொள்க .பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக. அதில் Typeஎன்பதன்கீழ் Hidden text என்பதைதெரிவுசெய்துகொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில் தமிழ்கம்யூட்டர் இல்லை” ‘ என்பதையும் hidden text என்ற உரைப்பெட்டியில் இது ஒரு வாரஇதழ் அன்றுஎன்பதையும்உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.. உடன் நாம் தெரிவுசெய்த பத்தியானது மறைந்துவிடும்..

மறையச் செய்த பத்தியை திரையில் தோன்றிட செய்வதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து View => Hidden Paragraphs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Tools => Options => LibreOffice Writer => Formatting Aids=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் Fields:Hidden paragraphs எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக . உடன் மறைக்கப் பட்டப் பத்தி திரையில் தோன்றிடும்.

குறிப்பிட்டப் பகுதியை மறையச்செய்வதற்காக முதலில் தேவையானப் பகுதியை தெரிவு செய்துகொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Section=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Insert Section எனும் உரையாடல் பெட்டியில் Sectionஎனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் hide என்ற வாய்ப்பினை தெரிவு செய்து கொண்டு with condidtion எனும் உரைபெட்டியில் தேவையான நிபந்தனகளை உள்ளீடு செய்து கொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக .உடன் நாம் தெரிவுசெய்த பகுதியானது மறைந்துவிடும்..

5

5

மறையச்செய்த பகுதியை மீண்டும் திரையில் தோன்றிடச் செய்வதற்காக லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Format => Sections=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Edit Section எனும் உரையாடல் பெட்டியில் Sectionஎனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் hide என்ற வாய்ப்பினை தெரிவுசெய்யாது விட்டிட்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மாறுதல்கள் செய்துகொண்டுவரும்போது அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக. லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையி லிருந்து Tools => Options => LibreOfficeWriter => General=> ன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் விரியும் திரையில் Update: Automatically என்பதன்கீழ் Fields என்பதை தெரிவுசெய்துகொள்க .

நாமே முயன்று புலங்களில் text, a table, a frame, a graphic, or an object என்பனபோன்ற விவரங்களை உள்ளீடு செய்வதற்காக .லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப் பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் Placeholder என்பதையும் Formatஎன்பதன்கீழ் Placeholder text, a table, a frame, a graphic, or an object ஆகியவற்றில் தேவையான ஒன்றினையும் தெரிவுசெய்துகொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

உள்ளீட்டு புலங்களையும் உள்ளீட்டு பட்டியல்களையும் பயன்படுத்து வதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் Input fieldஎன்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Reference எனும் உரைபெட்டியில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் Input fieldஎன்ற சிறு உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

6

6

அவ்வாறே இதேஉரையாடல் பெட்டியின்Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Input listஎன்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Itemஎனும் உரைபெட்டியில் பெயரை உள்ளீடு செய்துகொண்டு Add என்ற பொத்தானை புதியதாக பட்டியலில் சேர்ப்பதற்காக தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் பட்டியலில் இந்த பெயர் எந்த இடத்தில் தேவையென அமைவுசெய்வதற்காக move up, move down ஆகிய இருபொத்தான்களையும் நீக்கம்செய்வதற்காக Removeஎன்ற பொத்தானையும் பயன்படுத்தி கொள்க .இந்தபுலத்திற்கு Name என்ற பெட்டியில் பெயரினை உள்ளீடு செய்துகொண்டு இறுதியாக insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

ஏற்கனவே இருக்கும் பட்டியலை சரிசெய்வதற்காக Edit என்றபொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தபின் அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Shift+F9.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் விரியும் Edit எனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு திருத்தம் செய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

நம்முடைய பிள்ளைகள் மென்பொருளை கற்க உதவும் Sugar Labs எனும் இணயதளம்

1

இது ஒரு தன்னார்வ குழுவால் செயல்படுத்தப்படும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் இணையதளமாகும்.. அந்தந்த வட்டார மொழிகளில் அல்லது உள்ளூர் மொழிகளில் குழந்தைகள் எவ்வாறு கற்றுகொள்வது என அறிந்து தெரிந்துகொள்வதற்கு உதவுவதுதான் இந்நிறுவனவலைதளத்தின் முக்கியநோக்கமாகும்.. ஒரேயொரு ஒற்றையான சுட்டியின் சொடுக்குதலின் வாயிலாக எழுதுவதற்கும், பகிர்ந்துகொள்ளவும், இசையை கற்றுக்கொள்ளவும் இந்த வலைதளத்தின் மூலம் முடியும்.. வழக்கமாக மாணவர்கள் பயிலும் பள்ளியில் பாடத்திட்டம் ,தேர்வு என்ற வரையறையில் மட்டும் கல்வி கற்பிக்கப் படுகின்றது .ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அனைத்து கலைகளையும் கற்றிட விரும்பும் மாணவர்கள் கல்வி பயின்றிட இந்த தளம் உதவுகின்றது..இந்த தளத்தில் நாம் பயின்றுவரும்போது உருவாகும் கோப்பானது தானியங்கியாக பிற்காப்பு செய்யப்பட்டுவிடுகின்றது அதனால் இடையில் ஏதேனும் காரணத்தினால் தடை ஏற்பட்டு மீண்டும் தொடரும்போ.து முந்தையை நிலையிலிருந்து தொடரமுடியும்.. மிகவேகமாக செயல்படும் கணினியிலிருந்து மிகமெதுவாக ஆமை போன்று செயல்படும் கணினிவரை அனைத்திலும் இது செயல்படும் திறன் கொண்டதாகும். இது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற மொழியால் உருவாக்கபட்டது.. அதனால் இதில் பயனாளர் எதனையும் தாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும் . மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்..இந்த தளமானது பள்ளி ஆசிரியர் போன்று மாணவர்கள் பயிலுவதற்கு தேவையான ஏராளமான அளவில் அனைத்துக் கருவிகளை.யும் தன்னகத்தே கொண்டுள்ளது..சமீபத்திய அனைத்து நிகழ்வுகளும் இதில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தப்பட்டு பயிலுபவர்களுக்கு தேவையான செய்திகளை வழங்க தயாராக உள்ளது. மேலும் பயிலுபவர்களின் திறன்எவ்வாறு உள்ளதுஎன அவ்வப்போது மதிப்பிட்டு திரையில் பிரதிபலிக்கச் செய்கின்றது.. அனைவரும் சமமாக பயிலுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த தளம் உதவுகின்றது . சாதாரண விவரத்திலிருந்து மிக சிக்கலானது வரை அனைத்து கலைகளையும் எளிதில் பயில இந்த தளம் பயனுள்ளதாக உள்ளது.. இந்த தளமானது இதுவரையில் 25 மொழிகளில் பயிலுவதற் கேற்ப உள்ளது. மேலும்பல்வேறு மொழிகளிலும்இந்த தளமான வளர்ந்து வரத்தயராக உள்ளது.. இது குறுவட்டு ,நெகிழ்வட்டு, யூஎஸ்பி ,மெய்நிகர் கணினி போன்ற ஏராளமான வகையிலும் பயனாளர்கள் இதனை நகலெடுத்து சென்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதுஅனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்கொண்டது .இது ஒருசிறந்த பள்ளிஆசிரியரின் வரைச்சட்டமாகும் .இது அனைத்து கணினியுடனும் இயக்க முறையுடனும் இணைந்து இயங்கும் தன்மைகொண்டது. இது பயனாளர்கள் பயிலுவதற்கான ஆயிரக்கணக்கான செயல்களையும் கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.. ஏராளமான தன்னார்வாளர்கள் தொடர்ந்து இதனை மேம்படுத்திக் கொண்டே உள்ளனர். இந்த தளமானது 24மணிநேரம் பயன்படுத்திகொள்ளதயாராக உள்ளது..

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவிரும்புவோர்களும் பயின்றிடவிரும்பும் பயனாளர்களும் https://www.sugarlabs.org/ எனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு செல்க.

ஒரேசமயத்தில்ஒன்றிற்குமேற்பட்டநபர்கள் எக்செல்லின் பணித்தாளை பயன்படுத்தி சேமிக்கமுடியம்

இதுஎவ்வாறு சாத்தியம் என அனைவரும் ஆச்சரியமான செய்தியாக புருவத்தை உயர்த்திடுவார்கள். ஏனெனில் இவ்வாறு ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்டநபர்கள் எக்செல்லின் பணித்தாளை பயன்படுத்தி கொண்டிருக்கும்போதும் பின்னர் சேமிக்கும்போதும் இதனுடைய கோப்பானது ஒன்றுக்கொன்று முரணாகி பாழ்பட்டு வீணாகிவிடும் அல்லது முந்தைய தரவிற்குமேல் மேலெழுதப்பட்டுவிடும் மேலும் பணித்தாளானது அனைத்து தரவுகளையும் இழந்துவிடும் என பல்வேறு எக்செல்லின் பயனாளர்கள் முறையீடு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் நிபந்தனையுடனான. வடிவமைப்பில் எக்செல்தாளை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை என்ற முறையீடும் உள்ளன. அனைத்து எக்செல்பயனாளிகளும் பொதுவான கோப்பகத்தில் ,குழுவில் அல்லது சேவையாளரில் பணிபுரிவதுதான் இவ்வாறான பிரச்சினையை சரிசெய்வதற்கான எளியவழியாகும். இதனோடு நேரடியாக இணையஇணைப்பில் OneDrive எனும் இணையபக்கத்தின் வாயிலாக எக்செல்பணித்தாளில் பணிபுரிவது சிறந்ததாகும். இதன்வாயிலாக ஒரே பணித்தாளில் மற்றொருநபர் எந்த தரவை மாறுதல் செய்கின்றார் என அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தரவுகளை அப்படியே பலர் பணிபுரியும் எம்எஸ் அக்சஸ் தரவதள பயன்பாட்டு கோப்பாக சேமித்துக் கொள்ள முடியும் இவ்வாறு ஒரே எக்செல்பணித்தாளில் பலர் ஒரேசமயத்தில் பணிபுரிவதற்காக எக்செல் பணித்தாளில் Review எனும் தாவிப் பொத்தானின் திரைக்கு செல்க. அங்கு திரையின்மேல்பகுதியிலுள்ள கருவிகளில் Changes எனும் குழுவிலுள்ள Share Workbook எனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் “Allow changes by more than one user at the same time” எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க.அதன்பின்னர் Advanced எனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க. அங்கு திரையின்மேல்பகுதியிலுள்ள கருவிகளை கொண்டு தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டு இந்த பணித்தாளை பலரும் சேர்ந்து பணிபுரிவதற்காக சேமித்துக்கொள்க.

இதன் பின்னர் இரண்டு பயனாளர்கள் ஒரேசமயத்தில் இந்த எக்செல் பணித்தாளை சேர்ந்து திறந்து பணிசெய்துவரும்போது என்பவர் தான் செய்த திருத்தம் சேமித்திடவேண்டும்என விரும்பி சேமித்திடும்போது என்பவருக்கு “Your workbook has been updated with changes made by others”என்ற செய்திவந்துசேரும். அதுமட்டுமின்றி அவர்செய்த திருத்தம் செய்த பகுதி வித்தியாசமான வண்ணத்தில் அடிக்கோடிட்டுதிரையில் தோன்றிடும்.மேலும் விவரங்களை அறிந்துகொள்பவர்களும் பயன்படுத்த விரும்வோர்களும் http://www.mrexcel.com/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க.

2

எக்செல் கோப்பினை கடவுச்சொற்களுடன் பாதுகாக்கலாம்

நாம் பணிபுரிந்து சேமித்த எக்செல்கோப்பிலுள்ள தரவுகள் மற்றநபர்கள் நம்மை அறியாமல் திறந்து அறிந்தகொள்ளமுடியாதவாறு கடவுச்சொற்களுடன் பாதுகாத்திடமுடியும். .பொதுவாக எக்செல் பணித்தாளில் Review எனும் தாவிப் பொத்தானின் திரையில் உள்ள Protect Sheet , Protect Workbook ஆகிய இரண்டு கட்டளைகளின் வழிமுறைகளில் பாதுகாப்பு செய்திடலாம்..

3.1

ஆயினும் இந்த வழிமுறைகளில் கட்டமைக்கபட்ட எக்செல்பணித்திளில்  கடவுச்சொற்கள் இல்லாமல் திறந்து தரவுகளை பார்வையிடமுடியும் ஆனால் திருத்தம் மட்டும் செய்திடமுடியாது.  அதனால் எக்செல்கோப்பினை திறப்பதற்கு கடவுச் சொல்லுடன் இருந்திடவேண்டும் என விரும்பினால்  நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பணித்தாளினை Save As  எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க. உடன் விரியும் Save As எனும் உரையாடல் பெட்டயில்உள்ள உருவப் பொத்தான்களில் Save எனும்உருவபொத்தானிற்கருகில் உள்ள Tools எனும் கருவிகளின் பொத்தானில் இருக்கும் கீழிறங்கு பட்டியலிலிருந்து General Options என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக .

3.2

 பின்னர் விரியும் General Options எனும் சிறு உரையாடல் பெட்டியில்  படிப்பதற்கு மட்டும் மற்றவர்களை அனுமதிப்பது எனில் Password to Open என்பதற்கருகிலுள்ள  உரைப்பெட்டியில் தேவையான கடவுச்சொற்களைா உள்ளீடு செய்துகொள்க  உடன் Password எனும் சிறு உரையாடல் பெட்டி தோன்றிடும். அதில் Read Only எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது  படிப்பதற்கும் திருத்தம் செய்வதற்குமெனில்    Password  என்பதற்கருகிலுள்ள  உரைப்பெட்டியில் தேவையான கடவுச்சொற்களைா உள்ளீடு செய்துகொள்க.. பின்னர் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அடுத்து தோன்றிடும் திரையில் நாம் உள்ளீடு செய்த கடவுச்சொற்களைமீண்டும் உள்ளீடுசெய்திடுமாறு கோரும். மீண்டும் கடவுச்சுற்களை உள்ளீடு செய்துகொண்டு  okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

மேலும் விவரங்களை அறிந்துகொள்பவர்களும் பயன்படுத்த விரும்வோர்களும் http://www.mrexcel.com/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க..

நம்முடைய பயனத்திட்டத்தினை உருவாக்கிடஉதவும் Bucket எனும் தளம்

நாம் இணயத்தினை உலாவரும்போது நமக்கு ஏற்படும் யோசனைகள் கருத்துகள் அங்காங்கு கிடைக்கும் தகவல்கள் ஆகியவற்றை இந்த தளத்தில் தொகுத்தபின் நாம் என்ன முடிவுசெய்கின்றோமா அதனை செயல்படுத்தி பயன்பெறமுடியும் .முதலில் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்வதற்கு வழக்கமான மற்ற சமூகவலைதளமுகவரியுடன் அல்லது மின்னஞ்சல்முகவரியுடன் அல்லது தனியான பயனாளர் பெயர் கடவுச் சொற்களுடன் உள்நுழைவுசெய்திடுக .பின்னர்இந்த தளமானது எவ்வாறு செயல்பட்டு நமக்கு உதவுகின்றது இந்த தளத்தின் வரலாறுஎன்ன எந்தஇடத்திற்கேனும் பயனம் செய்வதாயின் அதற்கான விவரங்கள் அல்லது நமக்கு பழக்கமானஇடத்திற்கு செல்வதற்கான வழிமுறைகள் என்பனபோன்ற எண்ணற்ற த் தகவல்கள் இதில் கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் நாம் நம்முடைய பயனத்திட்டத்தினை அல்லது நமது அடுத்த செயல்திட்டத்தினை முடிவுசெய்து Next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . பின்னர் தேவையான புதிய பரபரப்பான செயல்களை தெரிவுசெய்து கொண்டு திரையின் கீழேயுள்ள Tripஎனும் பொத்தானை அழுத்துக உடன் விரியும் திரையின் விவரங்களை கொண்டு அடுத்தத் தி்ட்டத்தினை செயல்படுத்திட முடியும். இதில் things to do in [your location]”எனும் கூகுளிற்கு இணையாக நாம் முடிவுசெய்வதற்காக தயாராக உள்ளன.

4

மேலும் இந்த தளத்தினை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிந்த கொள்வதற்காக நம்மனதில் எழும் கேள்விகளும் அவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலும் http://www.likebucket.com/faq/ எனும் இணையபக்கத்தில் உள்ளன அவைகளை முதலில்படித்தறிந்து அதன்பின் இந்த தளத்தினை பயன்படுத்தி கொள்க.

இணைய பயன்பாடு தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் ஒரேதளத்தில் கிடைத்திடஉதவும் Contentini எனும் இணையதளம்

நம்முடைய வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்காகத் தேவைப்படும்  பயன்பாடுகளை செயல்படுத்து வதற்கான ஆலோசனைகளுக்கு ஒவ்வொரு இணையதள பக்கத்திற்கு செல்லவேண்டும் என இல்லாமல் நம்முடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கான பயன்பாடுகளை பெறுவதற்கான தந்திரங்களையும் ஆலோசனைகளையும் ஒருங்கே உள்ளடக்கங்களாக ஒரே இடத்தில் தன்னகத்தே கொண்டுள்ள Contentini எனும் தளமானது பயனாளர் அனைவருக்கும் பேரளவு உதவிபுரிகின்றது .

5

பயனாளர் ஒருவர் தன்னுடைய இணைய பக்கத்தினை எவ்வாறு வடிவமைப்பதுஅதன் உள்ளடக்கங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற ஆலோசனைகளையும் இந்த தளம் வழங்குகின்றது. மேலும் இந்த தளத்தினை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விழைபவர்களும் பயன்படுத்த விரும்வோர்களும் http://contentini.com/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க.

உருவப்படங்களையும் ஒலிஒளிப்படங்களையம் சேமித்து பயன்படுத்துவதற்காக Picboxஎனும் தளத்தினை பயன்படுத்திகொள்க

நாம் Instagram, என்பதை பயன்படுத்தபவராயின் கண்டிப்பாக இந்த Picboxஎனும் தளத்தினை பயன்படுத்திகொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது. இதுவரையில் வழக்கமாக அனைவரும் உருவப்படங்களையும் ஒலிஒளிப் படங்களையம் சேமித்து பயன்படுத்துவதற்காக Instagram ஆகிய இரு தளங்களை பயன்படுத்திகொள்வார்கள் . அதற்கு பதிலாக இந்த Picboxஎனும் தளத்தினை பயன்படுத்திகொள்வதற்காக முதலில் இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் Get Started எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..பின்னர் விரியும் திரையில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியுடன் தேவையான கடவுச்சொற்களையும் சேர்த்து உள்ளீடுசெய்து நம்முடைய பெயருக்கு ஒருகணக்கினை இந்த தளத்தில் உருவாக்கிடுக. அதற்கடுத்தாக இந்த Picboxஎனும் தளத்தில்நாம் உருவாக்கிய நம்முடைய கணக்கினை Instagram , Dropbox ஆகிய இரண்டு தளங்களுடன் ஒத்தியங்குமாறு செய்திடவேண்டும் .அதற்காக Sign in with Instagram எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக .உடன் விரியும் Instagram எனும் திரையில் இந்த தளத்தின் நம்முடைய கணக்கில் உள்நுழைவு செய்வதற்காக பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் ஆகிய இரண்டையும் சரியாக உள்ளீடு செய்து உள்நுழைவு செய்திடுக அவ்வாறே Picboxஎனும் தளத்தில் Sign in with Dropbox எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் மேலேகூறியவாறு Dropbox எனும் தளத்தின் நம்முடைய கணக்கிற்கு உள்நுழைவுசெய்திடுக. இப்போது நாம் இந்த Picboxஎனும் தளத்துடன் Instagram , Dropbox ஆகிய இரண்டு தளங்களையும் ஒத்தியங்குமாறு செய்துவிட்டோம். அதன்பின்னர் Dropbox எனும் தளத்திற்கு சென்று அங்கு இருக்கும் Apps எனும் கோப்பக பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MyPicBox.எனும் கோப்பகம் திரையில் தோன்றிடும் . இந்த தளத்தில் நாம் சேமித்து வைத்துள்ள அனைத்து உருவப்படங்களும் ஒலிஒளிப்படங்களும் இந்த கோப்பக்ததில் கொண்டுவந்து வைத்திருப்பதை காணலாம்.மேலும் விவரங்களை அறிந்து கொள்பவர்களும் இந்த சேவையினை பயன்படுத்த விரும்வோர்களும் https://picbox.io/ எனும் இணைய பக்கத்திற்குசெல்க..

7

கிண்டில், ஐபேடு,ஆண்ட்ராய்டு ஆகிய சாதனங்களில் எது சிறந்தது?

இந்தமூன்று கைக்கணினிகளும் மின்புத்தகங்களை படிப்பதற்கும், இசைப்பாடல்களை கேட்டுமகிழவும்,இணையத்தில் உலாவரவும் நமக்கு வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடவும் கானொளிகாட்சிப்படங்களை கண்டு மகிழவும் அனைத்து வகையிலும் மிகச்சிறந்ததாக உள்ளன.அவ்வாறே இம்மூன்றும் அதிக எடையில்லாத மிகவும் கையடக்கமான சாதனங்களாகும். ஆப்பிள் ஸ்டோர் எனும் இணைய அங்காடியில் நமக்குத் தேவையான மின்புத்தகங்களை, இசைப்பாடல்களை, இசைப்பாடல்களை கொள்முதல் செய்யவிரும்புவோர் ஐபேடு எனும் சாதனத்தினை பயன்படுத்தி கொள்வது நல்லது மற்ற இரு சாதனங்களும் இந்த தளத்துடன் ஒத்தியங்காதவையாகும். மேலும் அமோசான் .கூகுள் ப்ளே ஆகிய இருதளங்களின் இணைய அங்காடிகளிலும் நமக்கு தேவையான மின்புத்தகங்களை,யும் , இசைப்பாடல்களையும் கொள்முதல் செய்ய இந்த ஐபேடு எனும் சாதனம் ஒத்தியங்கவல்லது.

அமோசான் பயன்பாட்டு இணைய அங்காடியில் நமக்கு தேவையான மின்புத்தகங்களை, இசைப்பாடல்களை, இசைப்பாடல்களை கொள்முதல் செய்யவிரும்புவோர் கிண்டில் எனும் சாதனத்தினை பயன்படுத்தி கொள்வது நல்லது ஆனால் இந்த கிண்டிலில் Barnes , Noble’s Nookஆகிய இரு இணைய பக்கத்திலிருந்து இவ்வாறானசெயலைசெய்யமுடியாது மேலும் இந்த கிண்டிலானது அமோசான் .கூகுள் ப்ளே ஆகிய இருதளங்களின் இணைய அங்காடிகளிலும் குறிப்பிட்ட வரையறையுடன் மட்டுமே செயல்படுகின்றது.

செந்தர ஆண்ட்ராய்டு சாதனத்தினை கொண்டு அமோசான் தளத்தின்இணைய அங்காடியில் நமக்கு த்தேவையான மின்புத்தகங்களையும், இசைப்பாடல்களை யும் கொள்முதல் செய்திடலாம்ஆனால் ஆப்பிலின் இணைய அங்காடியில் இவ்வாறான செயலை இந்த ஆண்ட்ராய்டு சாதனத்தினை கொண்டு செய்திடமுடியாது.

ஐபேடு சாதனமானது அதிகவிலைகொண்டது இதிலுள்ள பயன்பாடுகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளஅனுமதிக்காது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஐகிளவுடுஎனும் இணையதளத்துடன் இது ஒத்தியங்கூடியது.

ஆண்ட்ராய்டு சாதனங்களானது 50 டாலர்முதல்1000 டாலர் வரை சிறுவர்முதல் பெரியோர்கள் வரை அனைத்து வாடிக்கையளர்கள் விரும்பும் மாதிரிக்கேற்ற விலையில் கிடைக்கின்றன.இதிலுள்ள பயன்பாடுகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். உற்பத்தி நிறுவனத்திற்கு தக்கவாறு இதனுடைய திறனும் தரமும் இருக்கின்றன.

கிண்டில் அமோசான் தளத்துடன் ஒத்தியங்ககூடியது இதிலுள்ள பயன்பாடுகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளஅனுமதிக்காது.

இறுதியாக நம்முடைய விருப்பத்திற்கும் பயன்பாட்டிற்கும் ஏற்ற சாதனத்தினை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது.

கட்டற்ற கணினி மொழிகள் பற்றிய ஒரு அறிமுகம்

முன்பெல்லாம் ஏதாவது ஒருகணினியின் பயன்பாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்வுசெய்வதற்கான கட்டளைவரிகளை எழுவதுஎன்பது தனியான ஆய்வுக்கூடத்தில் இருந்துகொண்டுதான் செயல் படுத்த வேண்டும் என்ற மிகச்சிரமமான பணியாக இருந்துவந்தது ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணினிமொழிகளை கற்று பயன்பாட்டு நிரல்தொடர்களை எழுவது ஒரு எளிதான செயலாகிவிட்டது. அதிலும் கட்டற்ற கணினி மொழிகளின் வளர்ச்சியினால் குறிப்பிட்ட மொழியை கற்றிருந்தால் மட்டுமே நம்முடைய பிரச்சினைகளை தீர்வு செய்வதற்கான கணினியின் கட்டளைவரிகளை உருவாக்கிட முடியும் என்ற கட்டுப்பாடு எதுவுமின்றி அந்தந்த கட்டற்ற மொழிகளில் உள்ள கட்டளைகளை ஒருங்கிணைத்து புதிய பயன்பாடுகளை உருவாக்கி கொள்ள முடியும்.அதிலும் இது ஒருதிறமூல மென்பொருள் மொழியாகும் . அதனால் பயனாளர்கள் இதன் மூலக்குறி முறைகளை தமக்குத் தேவையானவாறு திருத்தம் செய்துகொள்ளவும் மற்றவர்களுக்கு இலவசமாக வழங்கிடவும் முடியும். பின்வருபவை இவ்வாறான மிகப்பிரபலமான திறமூல கட்டற்ற கணினிமொழிகளாகும்.

நமக்கு ஒருநிரல்திட்டங்களுக்கான குறிமுறைவரிகளை எழுத தெரியாது ஆனாலும் குறிமுறைவரிகளை எழுதி பயன்படுத்த வேண்டும் என விழைபவர்கள் HTML CSSஆகிய இரண்டையும் பயன்படுத்திகொள்வது நல்லது என பரிந்துரைக்கப் படுகின்றது. HTML ஆனது ஒருமீவுரைகுறியீட்டு மொழியாகும். இதனை கொண்டு வலைப்பக்கங்களை உருவாக்கலாம் இணையஉலாவிகளுடன் உரையாடலாம் இதனை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ளமுடியும் அதிக செலவுபிடிக்காதது தரவுகளை இடமாற்றம் செய்வது எளிதானது குறிப்பிட்ட பார்வையாளர்களை மட்டும் சென்றடையமுடியும் என்ற கட்டுப்பாடும் எதுவுமில்லை. இந்த CSSஆனது ஒருஇணையபக்கத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கவேண்டும் என முடிவுசெய்கின்றது மேலும் HTML இன் குறிமுறையுடன் இந்த CSS இன் குறிமுறை உள்பொதிந்து அமைக்கபடுகின்றது

அதற்கடுத்ததாக அழகிய தோற்றத்தினை அதிக பதில்செயலை ஒரு இணைய பக்கத்தில் கொண்டுவருவதற்காக PHPஎன்ற மொழி பெரிதும் பயன்படுகின்றது. இருபதுவருடத்திற்குமுன் இணையமேம்படுத்தும் வரைச்சட்டத்திற்காக கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்றுவரை இது தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொண்டுள்ளது. இது ஒருபயனாளரின் முன்பக்க செயலையும் பின்புலசெயலையும்ஒருங்கே ஆற்றிடும் திறனுடன் நம்முடைய கணினியின் முதுகெலும்பாக செயல்வல்லமைகொண்டதாகவுிளங்குகின்றது.

இணையபக்கத்தை உருவாக்குபவர்கள் பின்புலத்தில் மட்டும் எவ்வாறு செயல்படவேண்டும்என கட்டமைவுசெய்திடவிரும்புவார்கள் அவ்வாறானவர்களுக்கு Rupy ,Pythonஆகிய இரு மொழிகள் கைகொடுக்கின்றன. இவையிரண்டும் இயக்கநேர பொருள்நோக்கு எளிய சூழலை கொண்டதொரு மொழிகளாகும். இவ்விரண்டினையும் மேம்படுத்துவதற்காகவென்றே தன்னார்வ குழுக்கள் அல்லும்பகலும் அயராது பாடுபட்டு வருகின்றன. இயந்திரமொழியையும் செயற்கை மனிதனையும் உருவாக்கவிழைபவர்கள் இந்த பைத்தான் எனும் கட்டற்ற மொழியை பயன்படுத்தி கொள்வது நல்லது

செல்லிடத்து பேசிகளில் செயல்படும் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை உருவாக்கவிழைபவர்களுக்கு ஜாவா எனும் கட்டற்ற மொழிபெரிதும் அடிப்படையாக விளங்குகின்றது. நம்முடைய கணினியானது விண்டோ அல்லது மேக் இயக்கமுறையிலிருந்தாலும் ஒருசில நிமிடங்களில் ஜாவா எனும் கட்டற்ற மொழியின் உதவியால் தேவையான பயன்பாடுகளை உருவாக்கி பரிசோதித்து பார்த்து நம்முடைய செல்லிடத்து பேசிகளில் நிறுவுகை செய்து பயன்படுத்திடமுடியும். நம்முடைய கணினியில்மேக் இயக்க முறைமை இருந்து ஐஃபோன் ,ஐபேடு அல்லது ஐபேடுசாதனங்களில் செயல்படும் ஐஓஎஸ் பயன் பாடுகளை உருவாக்கி சரிபார்த்து பயன்படுத்தி கொள்வதற்காக ஆப்ஜெக்ட்டிவ்சி எனும் கட்டற்றமொழி பெரிதும் உதவுகின்றது.

நம்முடைய மேஜைக்கணினிகளின் பயன்பாடுகளை உருவாக்கி பயன்படுத்திக் கொள்வதற்காக விசுவல்பேசிக் எனும் கட்டற்ற மொழி பெரிதும் உதவுகின்றது.

இவ்வாறான கட்டற்ற கணினிமொழிகளில் எழுதப்பெறும் கட்டளைவரிகள் கணினிக்கு புரியும்வகையில் இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்வதற்காக PHP எனும்கட்டற்ற கணினிமொழிக்கு Wamp,Zamp,Lamp ஆகிய மொழிமாற்றிகளும் Javaஎனும்கட்டற்ற கணினிமொழிக்கு NetBeans, Eclips ஆகிய மொழிமாற்றிகளும் Pythonஎனும்கட்டற்ற கணினிமொழிக்கு PyCharmஎனும் மொழிமாற்றியும் Ruby எனும்கட்டற்ற கணினிமொழிக்குColdRuby எனும் மொழிமாற்றியும் பயன்படுகின்றன. குறிப்பிட்ட கணினிமொழியை கற்றுதேர்ந்து அதன்பின் அதன் அடிப்படையில்தான் நிரல்தொடர்கட்டளைகளை எழுதவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் தற்போது இல்லை பல கட்டற்ற கணினிமொழிகளின் கலந்து உருவானவைகளே ஜாம்பி ஆங்கிரிபேர்டு போன்ற சிறுவர்களின் உருவப்படக்கதைகள்ஆகும். அதனால் வாருங்கள் நம்முடைய தேவைக்கேற்ப கட்டற்ற கணினிமொழிகளின் அடிப்படைகூறுகளை ஒருங்கிணைத்து புதியதான நாம் விரும்பும் பயன்பாட்டினை உருவாக்கி கொள்க.

ஐபேடில் யாகூ மின்னஞ்சலை திறந்து பணிபுரியஇயலவில்லைஎன்ன செய்வது?

முதலில் நாம் ஐபேடில் நம்முடைய யாகூ மின்னஞ்சல் கணக்கின் சரியான கடவுச் சொற்களை பயன்படுத்திடுகின்றோமா என உறுதிபடுத்திடுக. இதனை சரிபார்த்திடுவதற்காக சஃபாரியின் வாயிலாக http://mail.yahoo.com எனும் இணைய பக்கத்தின் வழியில் உள்நுழைவு செய்திடுக ஏற்கனவே உள்நுழைவு முயற்சி செய்திருந்தால் வெளியில்வந்து மீண்டும் உள்நுழைவு செய்திடுக. அடுத்ததாக நம்முடைய ஐபேடில் பயன்பாடுகளின் கட்டமைவை சரிபார்த்திடவேண்டும் அதற்காக Settings => Mail, Contacts and Calendars => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் திரையில் நம்முடைய நடப்பு மின்னஞ்சல் கணக்கின் கட்டமைவுகளை சரிபார்த்திடுக. அந்ததிரையில் யாகூமின்னஞ்சல் கணக்கில்Yahoo! account சுட்டியை கொண்டுசெல்க பின்னர் அதிலிருந்து Delete Accounஎனும் கட்டளைக்கு கொண்டுசென்று அந்த கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துக.

9.1

இந்நிலையில் நம்முடைய யாகூ மின்னஞ்சல் கணக்கில் உள்ள மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுவிடுமோ அல்லது யாகூ மின்னஞ்சல் கணக்கே அழிக்கப்பட்டுவிடுமே என பதற்றபட வேண்டாம்.அஞ்சற்க.ஐபேடில்மட்டும் இந்த மின்னஞ்சல் கணக்குடன்கூடிய தொடர்புமட்டுமே நீக்கம் செய்யபடுகின்றது. உடன் இவ்வாறு நீக்கம் செய்வது தொடர்பான எச்சரிக்கை செய்தி பெட்டி ஒன்று deleting the account will remove all existing emails, contacts and calendars from the iPad என்றவாறு தோன்றிடும் அதனை ஆமோதித்து Delete என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

9.2

அதன்பின்னர் Add Account என்பதையும் பின்னர் Yahoo!என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்புபட்டியில் நம்முடைய யாகூமின்னஞ்சல் கணக்குதொடர்பான விவரங்களையும் கடவுச்சொற்களையும் உள்ளீடு செய்துகொண்டு வலதுபுறமூலையில் உள்ள next எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் யாகூவின் மின்னஞ்சல் சேவைதான் நமக்குத்தேவை என்பதால் மின்னஞ்சல் சேவையைமட்டும் தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே வலதுபுறமூலையில்உள்ளSave என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இதன்பிறகு நம்முடைய ஐபேடில் நம்முடைய யாகூமின்னஞ்சல் கணக்கினை திறந்து பணிபுரியமுடியும்.

Previous Older Entries