முகநூலில் தேவையற்ற பயன்பாடுகளை நீக்கம் செய்தலிற்கான வழிமுறை

முகநூலில் கணக்கிருப்பவர்கள் தங்களுடைய கணக்கில் எந்தெந்த பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது என தெரிந்து தேவையற்றதை நீக்கம் செய்திடமுடியும் இதற்காக முகநூல் திரையின் மேலேவலதுபுற மூலையில் உள்ளprivacy settings என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையின் கீழிறங்கு பட்டியலிலிருந்து see more settings  என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் அமைவுகளில்Apps என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் அகரமுதல வரிசைபடி முகநூல் கணக்கின் பயன்பாடுகள் பட்டியலிடபடும் அவைகளுள் ஒவ்வொன்றின் மீதும் சுட்டியை மேலூர்தல் செய்தவுடன் விரியும் திரையில் Editஎனும் கருவியை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் நாம் அளித்த அனுமதிகள் அனைத்தும் பட்டியலிடபட்டுவிடும் கூடுதலாக நம்மால் எவ்வாறு அதனை அனுகபட்டது என்றவிவரமும் தோன்றிடும் அவற்றுள் தேவையற்ற அனுமதி வாய்ப்புகளை நீக்கம் செய்திடுக.

7

விண்டோவுடன் வருகின்ற வேர்ட்பேடின் சிறப்பம்சங்கள்

 வேர்ட்பேடு ஆனது எம்எஸ் ஆஃபிஸின் எம்எஸ்வேர்டு போன்றுஉரைகளை கையாள உதவும்  கட்டணமற்ற சிறந்து பயன்பாடாகும் இதனை அனுகுவதற்கு கணினியின் திரையில் கீழே இடதுபுறமூலையில் உள்ள Start=>All program=>accessories=>wordpad=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது   wordpad ஐ ஒரு உருவபொத்தானாக அமைத்துகொண்டு அதனை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக செயல்படசெய்க  இதில் வேர்டு  ஆவணத்தை போன்றே newஎன்ற வாய்ப்பின் வாயிலாக புதிய ஆவணத்தையும் இதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து நாம் விரும்பும் எழுத்துருவையும் ,எழுத்துருவை தடிமனாக சாய்வாக  கீழ்க்கோடிட்டு என்றவாறும் மேலும் உரையை மையத்தில் இடதுபுறம் தள்ளி வலதுபுறம் தள்ளி மிக்சரியாக அமர்ந்திடுமாறு அமைத்திடலாம அதுமட்டுமல்லாது வரைபடம் உருவபடம் போன்றவைகளை இடைச்செருகல் செய்திடலாம்  கூடுதலாக உரைத்தொகுதியில் குறிப்பிட்ட சொல்லை find replace  ஆகிய வாய்ப்புகளை கொண்டு தேடிபிடித்து மாற்றி யமைத்திடலாம் மொத்தத்தில் இந்த வேர்ட்பேடானது எம்எஸ் வேர்டிலுள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்ககூடிய விண்டோ இயக்கமுறைமையுடன் கிடைக்கின்றஒரு இலவச பயன்பாட்டு மென்பொருள் கருவியாக விளங்குகின்றது

6

ஒன்றிற்கு மேற்பட்ட பலமுகவரிகளை ஒரேஜிமெயிலின் கணக்கிற்குள் உருவாக்கி பயன்படுத்தலாம்

ஜிமெயிலின் ஒரே கணக்கிற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி கொள்ளமுடியும் அதாவது   kuppansarkarai.641@gmail.com , kuppansarkarai641@gmail.com  kuppan.sarkarai641@gmail.com  kuppansarkarai+641@gmail.com ,   kuppan+sarkarai641@gmail.com என்றவாறு புள்ளியையும் கூட்டல் குறியையும் மாற்றி மாற்றி வைத்தாலும் அவையனைத்தையும் ஒரே கணக்கின் ஜிமெயிலாகத்தான்  கண்டுகொள்ளும் அதனால் நம்முடைய குடும்ப உறுப்பினர் அனைவரும் சேர்ந்து ஒரே கணக்கில் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளையும், ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியரின் கணக்கிற்குள் பல்வேறு முகவரிகளையும் , ஒருதுறையில் பணிபுரியும் ஊழியர்கள்  அனைவரும் சேர்ந்துஒரே கணக்கில் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளையும்  வழங்கி அவர்களின் மின்னஞ்சல்கள் கையாளுவதை கண்காணிக்கலாம்  இதன்மூலம் குப்பையான மின்னஞ்சல்கள் உள்வருகை செய்வதை தவிர்க்கலாம் குவியாலான மின்னஞ்சல்களை எளிதாக வடிகட்டபட்டு பிரித்து அவரவர்களின் முகவரிக்கு செல்லுமாறு செய்யலாம்  தேவையற்ற மின்னஞ்சல்கள் வருவதை தவிர்க்கலாம்  பல்வேறு இணைய பக்கங்களிலிருந்தும் அடிக்கடி வரும் மின்னஞ்சல்களை வடிகட்டி  உள்வருகை பெட்டியில் தனித்தனியாக அடுக்கிவைத்திடலாம்

5

கணினிக்குள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்துவிட்டதா கவலையேபட வேண்டாம்

விண்டோ இயக்கமுறைமையில் ஏராளமானவழிகளில் கடவுச்சொற்களை மறுகட்டமைவு செய்து அனுமதிக்கபட்ட வழிகளிலேயே உள்நுழைவுசெய்திடலாம் இற்காக the offline password &Registry Editor  எனும் கருவி விண்டோவில் எளிமையாக செயல்பட தயாராக உள்ளது  இதன்மூலம் யூஎஸ்பி வாயிலாக அல்லது குறுவட்டு வாயிலாக கணினியை மறுதொடக்கம் செய்தபின் தோன்றிடும் திரையில் விண்டோ பதிவேட்டில்திருத்தம் செய்து நம்முடைய கணக்கினையும் உள்நுழைவதற்கான கடவுச்சொற்களையும் நீக்கம் செய்தபின் மீண்டும் கணினியை மறுதொடக்கம் செய்து கடவுச்சொற்கள் இல்லாமலேயே உள்நுழைவு செய்திடலாம்

எச்சரிக்கை இவ்வாறு பயாஸ் வழியாக கணினிக்குள் உள்நுழைவு  செய்வதையும் நம்மால் தடுக்கமுடியும் அதற்காக உதவுவதுதான் பிட்லாக்கர் எனும் கருவியாகும் இது பயாஸ் பகுதியிலேயே கடவுச்சொற்களுடன் உள்நுழைவு செய்திடுமாறு அமைவுசெய்துவிடமுடியும்

4,1

ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையிலும் உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்து விட்டது என கவலைபடவேண்டாம் தவறான கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும்  கொடுத்தவுடன் forget password,forget PIN,forget pattern  ஆகிய செய்திகளில் ஒன்று திரையில் தோன்றிடும் பின்னர்  கூகுள் கணக்கின் துனைகொண்டு அதனுடைய பயனாளரின் பெயரையும் கடவுச்சொறகளையும் கொண்டு உள்நுழைவு செய்திடமுடியும்  வேறுவகையில் யூஎஸ்பி டிபக்கிங் என்பதை இயலுமை செய்து உள்நுழைவு செய்திடமுடியும் அவ்வாறு இல்லாமல் மூன்றாவது வழிமுறையாக  அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டு இந்த சாதனத்தினை உருவாக்கிய தொடக்கநிலையில் செயல்படசெய்திடமுடியும்

4.2

 மேககணியில் பிற்காப்பு வசதி சேவை

 தகவல் தொழில்நுட்பம் ஆனது பெரிய அளவிலான கணினியிலிருந்து தொடங்கி மடிக்கணினி கைக்கணி என வளர்ந்து கொண்டே வந்து தற்போது செல்லிடத்து பேசியிலும் கணினியின் பயன்களை பெறுகின்ற அளவிற்கு தொழில்நுட்பம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கின்றது இவ்வாறான வேகமானவளர்ச்சி நிலையில் இவைகளில் பயன்படும் தரவகளை சேமித்து வைத்திட மின்காந்த நாடாவில் ஆரம்பித்து குறுவட்டு, நெகிழ்வட்டு ,வெளிப்புற வன்தட்டு நினைவகம் ,யூஎஸ்பி நினைவகம் என வளர்ந்து   கொண்டே வந்துள்ளது   அதன் தொடர்ச்சியாக தற்போது செல்லிடத்து பேசியிலிருந்து ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் வாயிலாக தரவுகளை எங்கிருந்தும் எப்போதும் பிற்காப்பு செய்திடவும் அவைகளை மீட்டாக்கம் செய்திடவும்  மேககணி மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது அவைகளுள் மிகசிறந்தவைகளை பற்றி இப்போது காண்போம்

அவாஸ்ட் மொபைல் பேக்கப்  நாம் அனைவரும் இது ஒரு மிகசிறந்த பாதுகாப்பு கருவியாக மட்டுமே பார்த்து வருகின்றோம் ஆயினும் இது ஒரு சிறந்த மேககணினியின் பிற்காப்பு கருவி சேவையை கூட வழங்குவது நாம் அனைவரும் அறியாத செய்தியாகும்.இது தரவுகளை மிகபாதுகாப்பாக  பிற்காப்பு செய்திடவும் மீட்டாக்கவும் செய்திடவும் உதவுகின்றது இந்த சேவையை பெறுவதற்காக https://www.avast.com/mobile.backup/      எனும் தளமுகவரிக்கு செல்க

ஹீலியம் இது ஒரு மிகவசதியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான பிற்காப்ப சேவையை வழங்குகின்றது மேலும் இது மற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் ஒத்தியங்க செய்து பிற்காப்பு செய்திட பயன்படுகின்றது இதனை https://www.clockworkmod.com/carbon/   எனும் தளமுகவரிக்கு சென்று பெறுக

ஜிகிளவுட்பேக்கப் இது ஒளிஒலி படங்களையும் இசைகளையும் ஆவணங்களையும் செய்திகளையும் உருவபடங்களையும் தொடர்பு முகவரிகளையும் சேகரித்து சேமித்து வைத்து பாதுகாத்திட பயன்படுகின்றது இந்த சேவையை பெறுவதற்கு https://www.gcloudbackup.com/   எனும் தளமுகவரிக்கு செல்க

ஒன்ட்ரைவ் மைக்ரோசாப்ட்நிறுவனமும் ஒன்ட்ரைவ் வாயிலாக இந்த மேககணி சேவையை வழங்குகின்றது  இது ஆஃபிஸ் 365 உடன் ஒத்தியங்கும் தன்மையுடன்   பிற்காப்பு சேவையை வழங்குகின்றது இதனைhttps://www.ondrive.live.com/ எனும் தளமுகவரிக்கு செல்க

கூகுள்ட்ரைவ் மின்னஞ்சல்  ,வலைபூ , தேடுதல் போன்ற அனைத்து சேவைகளையும் ஒரேயொரு பயனாளரின்  பெயர் கடவுச்சொற்களை பயன்படுத்தி பெறமுடியும் என்ற நிலையில் கூடுதலாக ஸ்மார்ட் போன் போன்ற செல்லிடத்து பேசியிலிருந்து மேககணினியின் பிற்காப்பு சேவையைகூட பதினைந்து ஜிபி அளவு நினைவகத்தை  இந்த கூகுள் வழங்குகின்றது  இதனுடைய சேவையை அடைவதற்காக https://www.google.com/drive/    எனும் தளமுகவரிக்கு செல்க

திறந்த கணினிமொழி(Open Computer Language(Open(CL))

இதுஒரு பொதுபயன்பாட்டிற்கான சிபியூ ஜிபியூ போன்ற கணினியின் பல்வேறு வகையான வன்பொருட்களையும் செயல்படுத்தபயன்படும் பலதரபட்ட தளங்களிலும் நன்கு இயங்ககூடியதொரு இணைநிரல் வரைசட்டமாகும் இதனை Apple,Intel,AMD,NVIDIA,Samsungபோன்ற பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை கணினியுடன் ஒத்தியங்கி செயல்படுத்துதற்காக ஏற்றுகொண்டுள்ளனர். இந்த ஓப்பன்சிஎல் என்பது இயக்கநேர செயல்(runtime),பயன்பாட்டு நிரல் இடைமுகம்(Application Program Interface (API)),மொழிமாற்றி (Compiler) ஆகிய மூன்று செயல்களை அடிப்படையாக கொண்டது இவற்றுள் இயக்கநேர செயல்(runtime), என்பது இயக்கமுறைமையின் வாயிலாக கணினியில் இணைந்துள்ள வன்பொருட்களின் தொகுப்பினை வழங்குகின்றது அடுத்ததாகAPI ஆனது அடுத்தடுத்து செய்யவேண்டிய செயல்களின் வரிசையை அல்லது கட்டளை வரிசையை கெர்னெலிற்கு வழங்குகின்றது.மேலும் எந்தெந்த சாதனங்களை அல்லது உள்ளுறுப்புகளை எவ்வெப்போது செயல்படுத்தி பயனாளர் விரும்பும் வெளியீட்டை வழங்குவது என கட்டுபடுத்துகின்றது மூன்றாவதான Compiler ஆனது நம்மால் படிக்கமுடிந்தாவாறு இருக்கும் கட்டளைவரிகளை இயந்திரங்கள் அல்லது கணினியுடன் இணைந்துள்ள சாதணங்கள் புரிந்தும் கொள்ளும்இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்து வழங்குகின்றது நடப்பில் பல்வேறு வகையான வன்பொருட்களும் சாதனங்களும் இருந்தாலும் அவையனைத்திலும் ஒத்தியங்கசெய்திடும் திறன் இந்த ஓப்பன்சிஎல்லிற்கு உள்ளது இது சி99 மொழியின் அடிப்படையில் உருவாக்கபட்டுள்ளது   எல்லாம் சரி இந்த ஓப்பன்சிஎல்லில் எந்தவொரு சாதனத்திற்குமான ஒரு நிரல்தொடரை எவ்வாறு எழுதுவது என்தற்கான பின்வரும் பத்துஅடிப்படை தன்மைகளை தெரிந்துகொண்டால் போதும்

1 முதலில்   இந்த ஓப்பன்சிஎல்லின் தளத்தினை அறிந்துகொள்ளவேண்டும் அதற்கான குறிமுறைவரிகள்

cl_int clGetPlatformIDs (cl_uint num_entries,

cl_platform_id *platforms,

cl_unit *num_platforms)

2.இரண்டாவதாக தயார்நிலையிலுள்ள சாதனங்கள் யாதென அறிந்து அதனை தொடக்கநிலையாக்குவது

cl_int clGetDeviceIDs (cl_platform_id platform,

cl_device_type device_type, cl_unit num_etries,

   cl_device_id *devices,

cl_unit *num_devices)

இங்கு சாதனங்களின் வகை பின்வருபவைகளில் ஒன்றாக இருக்கலாம்

CL_DEVICE_TYPE_GPU or CL_DEVICE_TYPE_CPU or

CL_DEVICE_TYPE_ACCELARATOR or CL_DEVICE _TYPE_CUSTOM or

CLDEVICE_TYPE_ALL

3 மூன்றாவதாக அந்த சாதனங்கள் செயல்படுவதற்கான சூழலை அமைப்பது

cl_context clCreateContext (

const cl_context_properties *properties,

cl_unit num_devices,

const cl_device_id *devices,

void(CL_CALLBACK *pfn_notify)(const char *errinfo, constitutes

void *private_info, size_t cb, void *user_data),

void *user data, cl_int *errcode_ret)

4 நான்காவதாக சாதனங்களுடன் ஒத்தியங்கிடும் பணிகளின் வரிசையை அல்லது பணிகளுக்கான கட்டளைகளின் வரிசையை உருவாக்குவதற்கான கட்டளை வரிகள்

cl_command_que

clCreateCommandQueWithProperties(

cl_context context, cl_device_id device,

const cl_que_properties *properties,

cl_int *errcode_ret)

5 ஐந்தாவதாக சாதனங்களின் குறிமுறைவரிகளை உருவாக்கி மொழிமாற்றம் செய்வதற்கான கட்டளைவரிகள்

cl_program clCreateProgramWithSource

(cl_context context,

cl_unit count, const char ** strings,

const size_t *length, cl_int *errcode_ret)

6 ஆறாவதாக கெர்னெல்லை உருவாக்கிடுவதற்கான கட்டளைவரிகள்

cl_kernel clCreateKernel (cl_program program,

const char *kernel_name,

cl_int errcode_ret)

7 ஏழாவதாக கெர்னெல்லிற்கு தேவையானமதிப்புருவை தரவிப்பதற்கான செயலிகள்

cl_int clSetKernelArg(cl_kernel kernel,

cl_unit arg_index,

size_t arg_size,

const_void *arg_value)

8 எட்டாவதாக வரிசையாக உள்ள கட்டளைகளை வரையறுக்கபட்ட சூழலில் சாதனங்களை ஒத்தியங்க செய்திடுவதற்கான செயலிகள்

cl_int clEnqueueNDRangeKernel (

cl_command_queue command_queue, cl_kerbel kernel,

cl_unit work_dim, const size_t *global_work_offset,

Const size_t *global_work_size, cosnt size_t *local_work_

size, cl_unit num_events_in_wiat_list,

const cl_evetnt *event_wait_list, cl_event *event)

9.ஒன்பதாவதாக சாதனங்களின் வரும் வெளியீட்டை பயனாளருக்கும வழங்கிடுவதற்கான குறிமுறைவரிகள்

chevleresquement (cl_command_queue command_queue,

cl_mem buffer , cl_bool blocking_read,

size_t offset, size_t size, void *ptr,

cl_unit num_events_in_wait_list,

const cl_event *event_wit_list,

cl_event *event)

10 பத்தாவதாக பின்வரும் செயலிவாயிலாக அனைத்து வளங்களையும் இந்த கட்டளைவரிகளிலிருந்து விடுவித்திடவேண்டும்

clReleaseMemObject (cl_mem mem_object)

clReleaseKernel ( cl_kernel kernel)

clReleaseProgram ( cl_program program)

clReleaseCommandQueue (cl_command_queue command_queue)

clReleaseContext ( cl_context context)

இதன்பின் இறுதியாக பின்வரும் கட்டளைவரிவாயிலாக இந்த ஓப்பன்சிஎல் கட்டளைவரி நிரல்தொடரை மொழிமாற்றம் செய்து செயல்படுத்திடமுடியும்.

[user01@system01]# g++ -L/usr/lib64 -I/usr/local/cuda/

include-lOpenCL <opencl code> -o <final execuetable name>

தெரிந்துகொள்வோம் திறமூல மென்பொருட்களின் பல்வேறு உரிமங்களை பற்றி

 எவரும் தாம் உருவாக்கிய ஆக்கங்களை மென்பொருளை பதிப்புரிமையாக பதிவுசெய்து கொள்ளமுடியும் அவ்வாறான பதிப்புரிமைகளில் மென்பொருட்களின் பதிப்புரிமை என்பது சட்டபடி அந்த மென்பொருளை பயன்படுத்தவதற்கும் மறுவினியோகம் செய்திடுவதற்கும் ஆன உரிமையாகும் தற்போது நடைமுறையில் உடைமை மென்பொருட்கள் என்றும் திறமூலமென்பொருட்கள் என்றும் இரண்டு வகையான பதிப்புரிமை உள்ளன இவற்றுள் உடைமை மென்பொருட்கள் எனில் இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை யாரும் பார்வையிடவோ திருத்தம் செய்திடவோமுடியாது ஆனால் ராயல்டி கட்டணம் செலுத்துபவர்கள் அதனை தங்களுடைய தேவைக்காக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இரண்டாவதான திறமூலமென்பொருட்கள் எனில் மூலக்குறிமுறைவரிகளை பார்வையிடவும் தங்களுடைய தேவைக்கேற்ப திருத்தம் செய்து மறுவெளியீடு செய்திடவும் முடியும் ஆயினும் இந்த திறமூல மென்பொருட்களிலும் பல்வேறுவகையான பதிப்புரிமைகள் உள்ளன இவைகளுள் நாம் உருவாக்கும் நம்முடைய மென்பொருளிற்கு பொருத்தமானது எதுஎன தெரிவுசெய்திடுக தவறான உரிமத்தை தெரிவுசெய்தால் பிற்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அதனால் முதலில் சிறந்த வழக்குரைஞரை கலந்தாலோசித்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது மேலும் இந்த திறமூல மென்பொருட்களுக்கான பல்வேறு உரிமங்களை பற்றியவிவரங்களை இப்போது காண்போம் .

1பொதுபயன்பாட்டு உரிமம் (General Public License (GPL)) இதுமிகபிரபலமான புகழ்வாய்ந்த உரிமமாகும் தற்போது GPL பதிப்பு 3 நடப்பு பயன்பாட்டில் உள்ளது லினக்ஸின் கெர்னெல்இந்த வகை உரிமத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாகும் மற்ற அனைத்து உரிமங்களும் இந்த ஜிப்பிஎல்உடன் ஒத்திசைவுசெய்வது, ஒத்திசைவு செய்யாததுஎன இரண்டுவகையில்மட்டுமே வகைபடுத்தபடுகின்றன. யார்வேண்டுமானாலும் தங்களின் தேவைக்கேற்ப இந்த இந்தவகை உரிமம்பெற்ற குறிமுறைவரிகளை திருத்தம் செய்து மறுவிநியோகம் செய்திடமுடியும்

2 அளவுகுறைந்து பொதுபயன்பாட்டு உரிமம்(Lesser General Public License(LGPL))இது அடுத்த புகழ்வாய்ந்த உரிமமாகும் பொதுமக்களின் உரிமை முந்தையஜிப்பிஎல்லைவிட சிறிது குறைவானதாகும் அதாவது இயக்கநேர இணைப்பும் நூலகபங்கிடுதலும் மட்டுமே ஜிப்பிஎல்லுடன் இது வேறுபடுகின்றது தனியுடமைமென்பொருட்களுடன் இயக்கநேர இணைப்பும் நூலகபங்கிடுதலையும் இந்த உரிமம் அனுமதிக்கின்றது திறமூல மென்பொருட்களில் பாதியளவு GPL ,LGPL ஆகிய இரு உரிமங்களிலேயே அடங்கிவிடுகின்றன

3 அப்பாச்சி உரிமம்(Appache Licencse) இதனை அப்பாச்சி மென்பொருள் நிறுவனம் உருவாக்கியுள்ளது 300 வரிகளுக்கு குறைந்த குறிமுறைவரிகளையுடைய மென்பொருள் செயல்திட்டம் இந்த அப்பாச்சி உரிமத்தின் கீழ் வருகின்றது இதனுடைய தற்போதைய பதிப்பு 2 ஆனது ஜிப்பிஎல் பதிப்பு 3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமை இந்த வகை உரிமம் பெற்றதாகும்

4 பிஎஸ்டி உரிமம் (BSD License)பெர்க்ளின்மென்பொருள் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது இந்தவகை உரிமத்தில் சிறிது திருத்தும் செய்து ஜிப்பிஎல் பதிப்பு 3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது. யூனிக்ஸ் இயக்கமுறைமை இந்தவகை உரிமத்தின்கீழ் வருகின்றது

5 ஆக்கங்களின் பொதுஉரிமம் (Creative Common License(CCL)) இது Creative Common எனும் நிறுவனத்தால் உருவாக்கபட்டது இந்த உரிமத்தின்படி உடைமையாக்கபட்ட(BY), பங்கிடபட்ட(SA),வியாபரமற்ற (NC), மாறுதல் செய்யாத(ND) ஆகிய நான்கு நிபந்தனைகளின்கீழ் உரிம ஆவணங்களை இலவசமாக விநியோகம் செய்ய பயன்படுகின்றது மென்பொருட்களை தவிர மற்ற புத்தகங்கள் ,இதழ்கள் ,விளையாட்டுகள் இதன்கீழ்வருகின்றன

6 எம்ஐட்டி உரிமம் இதனை மஜாஜூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது ரூபி ஆன்ரெயில்ஸ், ஜெகுயரி,எக்ஸ்விண்டோ ஆகியவை இந்த வகை உரிமம் பெற்றவையாகும் இதுவும் ஜிப்பிஎல்3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது

7ஆர்ட்ரிஸ்டிக் உரிமம் பதிப்பு2   ஜிப்பிஎல்3 உடன் ஒத்திசைவு செய்யபட்டுள்ளது பியர்ல் நிரல் தொடர்மொழி இந்த உரிமத்தின்கீழ் வருகின்றது

8 மொஸில்லா பொது உரிமம் உடைமை மென்பொருட்கள் தங்களின் மென்பொருட்களை மேம்படுத்தும்போது இந்த உரிமத்தின்கீழ்வருகின்றன மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் ,மொஸில்லா தண்டர்பேர்டு ஆகியஇரண்டும் இந்த உரிமத்தின்கீழ் செயல்படுகின்றன

9 பொதுமக்கள் உரிமம் (Common Public License(CPL)) இது ஐபிஎம் நிறுவனமும் எக்லிப்ஸ் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியதாகும் korn shell என்பது இந்த உரிமத்தின்கீழ் செயல்படுகின்றது இது ஜிப்பிஎல்உடன் ஒத்திசைவு செய்யபடாதது

10 மைக்ரோசாப்ட் பொதுஉரிமம் இறுதியாக மைக்ரோ சாப்ட்நிறுவனம் கூட திறமூல மென்பொருட்களுக்கான உரிமத்தை உருவாக்கியுள்ளது   இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் பொதுஉரிமம்   என்றும் மைக்ரோசாப்ட் கட்டுபடுத்தபட்ட உரிமம் ஆகிய இரண்டுவகையான உரிமங்களை வழங்கியுள்ளது

உபுண்டுவை பயன்படுத்தி நாம் விரும்பியவாறு லினக்ஸ் இயக்கமுறைமையை மாற்றியமைத்து கொள்ளலாம்

8

உபுண்டுவை பயன்படுத்தி நாம் விரும்பியவாறு லினக்ஸ் இயக்கமுறைமையை மாற்றியமைத்து கொள்ளலாம் இதற்காக Ubuntu CustomizationKit(UCK) என்பது பயன்படுகின்றது இதனை Menu=> Software Manager=>UCK=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது $sudo apt -get install uck என்றவாறு கட்டளைவரியை செயல்படுத்துவதன் வாயிலாக செயல்படுத்திடமுடியும் ஆயினும் இதற்கு அடிப்படையான ISO image தேவையாகும் இதனை உபுண்டு அல்லது மின்ட் ISO image ஐ அதற்கான இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க   பின்னர் Menu => UCK என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது $uck-gui என்றவாறு கட்டளைவரியை செயல்படுத்துவதன் வாயிலாக இந்த   UCKவை செயல்படுத்திடுக உடன் வரவேற்பு திரை ஒன்று தோன்றிடும் அதில் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் ஆங்கில மொழி என்பதை தெரிவுசெய்துகொள்க   பின்னர் தோன்றிடும் திரையில் மேஜைகணினி சூழலை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் திரையில் nabilinuxmintஎன்றவாறு இதற்கொரு பெயரை உள்ளீடு செய்து OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் திரையில் downlaod எனும் கோப்பகத்தையும் அதில் base ISO என்பதையும் தெரிவுசெய்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் நாம் லினக்ஸ் இயக்கமுறைமையை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைக்க விரும்புகின்றோமா எனக்கோரும் yes என்பதை தெரிவுசெய்துகொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோ இயக்கமுறைமை வாய்ப்பு எனில் NO என்பதை தெரிவுசெய்துகொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும் hybrid image திரையில்   yes என்பதை தெரிவு செய்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக now your ISO is ready to build என்ற செய்தி திரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வேறொரு முனைமத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு மூலகடவுச்சொற்களை உள்ளீடு செய்தவுடன் நாம் தெரிவுசெய்த   ISO பிரித்து விரிக்கபடும். இந்த பணிமுடிவடைந்ததும் நாம் விரும்பியவாறு மாற்றியமைத்திட தயாராக இருக்கும் இந்நிலையில் Run Console Application என்பதை தெரிவுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் வேறொரு முனைமத்திற்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு நாம் விரும்பும் பயன்பாட்டு மென்பொருட்களை apt-get install default -jdk எனும்கட்டளைவரியின் JDK என்பதன் வாயிலாகவும் apt-get insatll sumo எனும் கட்டளைவரியின் SUMO என்பதன் வாயிலாக செயற்படுத்தி பெற்றிடுக போதுமான விரும்பிய அனைத்து பயன்பாட்டு மென்பொருட்களையும் சேர்த்தபின்னர் Exit எனும் கட்டளையை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த சூழலில் இருந்த வெளியேற செய்க உடன்   Console Application ஐ செயல்படசெய்ய விரும்புகின்றோமா continue building செய்யவிரும்புகின்றோமா எனக்கோரும் இந்நிலையில் Run Console Application என்பதை தெரிவுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதனை தொடர்ந்து   ISO மறுகட்டமைவு செய்யபடும் இந்த மறுகட்டமைவு பணி முடிவடைந்ததும் building success என தோன்றிடும் திரையில் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இறுதியாக home/nabin/remaster-new-files/livecd,iso எனும் முனைமத்திற்கு சென்று நம்முடைய புதிய ISO image ஐ குறுவட்டில் எழுதி கொள்க

QGISஎனும் கட்டற்ற மென்பொருளின் பயன்பாடு

9

புவியியல் தகவல்களடங்கிய வரைபடங்களை உருவாக்குவதற்கும் பதிப்பித்தல் செய்வதற்கும் காட்சிபடுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் இறுதியாக வெளியீடு செய்வதற்கும் QGISஎனும் திறமூல மென்பொருள் பயன்படுகின்றது . இது லினக்ஸ், மேக் ,விண்டோ ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்கும் திறன் கொண்டதாகும் மேலும் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படும் திறன்வாய்ந்த பதிப்புகூட விரைவில் வெளிவர இருக்கின்றது இந்த மென்பொருளின் மூலம் எந்தவொரு இடத்தையும் குறிப்பிடுவதற்கான இடஅமைவை Coordinate Reference System (CRS) ,Spatial Reference System (SRS)என்பதன் வாயிலாக குறிப்பிடமுடியும் இந்த CRS அனைத்தும் QGIS இல் Geographic coordinate system ,project coordinate systemஆகிய இரண்டு வகையில் ஒருங்கிணைக்கபடுகின்றது   இந்த QGISஎனும் திறமூல மென்பொருளில் முன்கூட்டியே வரையறுக்கபட்ட CRS இல்லாமலேயே புதிய CRS ஒன்றை பயனாளர் ஒருவர் வரையறுக்கமுடியும்   மேலும் விவரங்களுக்கு www.qgis.org/    எனும் தள முகவரிக்கு செல்க

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-26

நம்மில் பெரும்பாலானவர்கள் வழக்கமான இயற்கை தன்மைக்கு ஏற்ப கணினியில் ஆவணங்களை எழுதுவதை பழக்கமாக கொண்டுள்ளனர் பொதுவாக ஆவணத்தின் எழுத்துருவினுடைய குழு, எழுத்துருவின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நாம் குறிப்பதை இதற்கு எடுத்துகாட்டாக கூறலாம் .இந்நிலையில் பாவணை அல்லது நடை(style) என்பது என்ன என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் எழும் .அதாவது பாவணை அல்லது நடை(style) என்பது உரைத்தொகுதியின் தருக்க தன்மையாகும். இயல்பாக நாமனைவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் இந்த பாவணையை அல்லது நடையை பயன்படுத்தி வருகின்றோம். நாம் பயன்படுத்திடும் கணினியை சேவையாளர் கணினியென்றும் ,பணிமேடை கணினியென்றும் , மடிக்கணினி என்றும்,கைக்கணினி என்றும் ,பல்வேறு பாவணைகளில் இந்த கணினியை பயன்படுத்துவதை இதற்கு எடுத்துகாட்டாக கூறலாம். இவை ஒவ்வொன்றும் தத்தமக்கேயுரிய தனித்தன்மைகளையும் பயன்களையும் கொண்டதாக விளங்குகின்றன. இதனை தொடர்ந்து ஒருவர் என்னுடைய கணினியானது மிக எடைகுறைவானது, எல்சிடி திரையமைப்பை கொண்டது,சிறிய பெட்டிபோன்ற அமைவிற்குள் விசைப்பலகையும் இதர உறுப்புகளும் அடங்கியது என மிகவும் நீ்ளமாக கணினியை பற்றி விவரிப்பதைவிட என்னுடைய கணினி மடிக்கணினி என சுருக்கமாக கூறினாலே மேலேகூறிய அனைத்துதன்மைகளும்அதன் உள்ளடக்கமாக கொண்டுஇருப்பதை அனைவரும் புரிந்து கொள்வர் இதைத்தான் நாம் பாவணை அல்லது நடை(style)என கூறுகின்றோம். அவ்வாறே லிபர் ஆஃபிஸின் ஆவணங்களிலும் இவ்வாறான ஒரு குழுவான தன்மையை குறிப்பிட இந்த பாவணை அல்லது நடை(style) என்பது பயன்படுகின்றது. அதாவது எழுத்துருவின் அளவு -14ப்பிட்டி, பெயர்-நீயூடைம்ஸ்ரோமன் ,எழுத்துகளானது தடிமனாகவும் மையத்திலும் இருக்கும் எனக்கூறுவதற்கு பதிலாக இதனைதலைப்பு என சுருக்கமாக குறிப்பிட்டால் போதும் அதனால் எந்தவொரு உரைகளின்தொகுதியையும் எழுத்துருவின் குழுவினுடைய பெயர் ,இருக்குமிடம் அதன் அளவு தோற்றம் ஆகியவற்றை குறிப்பிடுவதை உரையின் பாவணை அல்லது நடை எனக்குறிப்பிடுவர்.

இந்த பாவணையானது உரைமுழுவதையும் ஒரேமாதிரியாக அதன் தன்மையை மேம்படுத்தி மாற்றியமைத்திடபயன்படுகின்றது.மேலும் பேரளவு உரையின் வடிவமைப்பை மாற்றியமைத்திடபயன்படுத்தி கொள்ளபடுகின்றது. பத்திமுழுவதும் உள்தள்ளி இருத்தல் எழுத்துருவை மாற்றியமைத்தல் ஆகிய செயல்களை செய்வதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.

லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இந்த பாவணை அல்லது நடை(style)யானது பின்வரும் வகைகளை கொண்டுள்ளது

பத்தியின் பாவணை அல்லது நடை(style) பத்திமுழுவதும் நாம் குறிப்பிடும் பாவணை அல்லது நடை(style) என்பது பாதிப்பு ஏற்படுத்துகின்றது

எழுத்துரு பாவணை அல்லது நடை(style) குழுவான எழுத்துகள் முழுவதையும் நாம் குறிப்பிடும் பாவணை அல்லது நடை(style) என்பது பாதிப்பு ஏற்படுத்துகின்றது

பக்க பாவணை அல்லது நடை(style) என்பது பக்கவடிவமைப்பை அதாவது பக்கத்தின் அளவு அதன் விளிம்பு அளவு ஆகியவற்றை மாற்றியமைத்திட பயன்படுத்தி கொள்ளபடுகின்றது

சட்டக பாவணை அல்லது நடை(style) என்பது செவ்வக பெட்டிபோன்ற படம் அல்லது உருவபடுத்தை மாற்றியமைத்திட பயன்படுத்தி கொள்ளபடுகின்றது

பட்டியல் பாவணை அல்லது நடை(style) என்பது உரையை பட்டியலிடும்போது மாற்றியமைத்திட பயன்படுத்தி கொள்ளபடுகின்றது.

இதேவழிமுறையில் எந்தவொரு ஆவணத்திலும் ஒருகுழுவான எழுத்துகள் சேர்ந்து ஒரு சொல்லையும், குழுவான சொற்கள் சேர்ந்து அந்த ஆவணத்தின் தலைப்பு அல்லது முடிவுபகுதியையும் அல்லது அதே குழுவான சொற்கள் சேர்ந்து ஒருபத்தியையும் , எண்களிடபட்ட பட்டியல் தொகுதி ஒரு பத்தியையும் ,குழுவான பத்திகள் சேர்ந்து ஒரு பக்கத்தையும் உருவாக்குகின்றன. அதனால் இவ்வாறான அடிக்கடி நம்மால் ஒருஆவணத்தில் பயன்படுத்தி கொள்ளபடும் ஆவணங்களின் பாவணை அல்லது நடையை(style) பற்றி மிகவிவரமாக பின்வரும் பகுதிகளில் காணலாம்.

இந்த பாவணை அல்லது நடை(style) யை நாம் ஒரு ஆவணத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு மிதக்கும் அல்லது கட்டபட்ட தயாராக இருக்கும் தொகுதியான வாய்ப்புகளை பாவணையும் வடிவமைப்பும் கொண்ட சாளரம்(styles and formatting window) என அழைப்பர்

  26.1

26.1

இந்த சாளரமே ~ஒரு ஆவணத்தில் செயல்படுத்திடும் பாவணைகளின் மையமாகும் இதில்என்னென்ன உள்ளனவோ அதனை எவ்வாறு பயன்படுத்தி கொள்வதோ என பயப்படவேண்டாம் இந்த தொடரில் இதற்காக அவ்வப்போது தேவையான விவரங்களையும் இதனுடைய செயலிகளை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்றும் பார்த்து வருவோம் இந்த பாவணையும் வடிவமைப்பும் கொண்ட சாளரத்தை திரையில் தோன்றிட செய்வதற்கு 1.வடிவமைப்பு பட்டையில் இடதுபுறத்தில் உள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல் அல்லது 2.லிபர் ஆஃபிஸ் திரையின் மேலே கட்டளைபட்டையில் உள்ள Format=>Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படுத்துதல் அல்லது 3.விசைப்பலகையிலுள்ள விசைகளில் F11எனும் செயலி விசையை அழுத்துதல் ஆகிய மூன்றில்ஒன்றின் வாயிலாக இந்த பாவணையும் வடிவமைப்பும் கொண்ட சாளரத்தை திரையில் தோன்றிட செய்யமுடியும் . உடன் தோன்றிடும் மிதக்கும் பாவணையும் வடிவமைப்பும் கொண்ட சாளரத்தை நாம் விரும்பும் இடத்தில் நகர்த்தி வைத்திடலாம் அல்லது கட்டபட்டதாக வைத்திடலாம் .இந்த பாவணையும் வடிவமைப்பும் கொண்ட (styles and formatting window) சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள முதல் ஐந்து உருவபொத்தான்கள் நாம் பணிபுரிய பயன்படுத்திடும் பாவணைகளின் வகையாகும் அவற்றுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் பத்தி பாவணை அல்லது எழுத்துரு பாவணை போன்றவற்றின் தொடர்புடைய வகையின் குழுவான வாய்ப்புகள் திரையில் பிரதிபலிக்கும்   குறிப்பிட்ட பாவணையை செயல்படுத்திட முதலில் தேவையான தொகுதியான உரைப்பகுதியை அல்லது பத்தியை அல்லது பக்கத்தை தெரிவு செய்து கொள்க பின்னர் இந்த styles and formatting சாளரத்தில் தேவையான பாவணையை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குதல் செய்தவுடன் விரியும் வாய்ப்புகளில்நாம் விரும்பும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. உடன் நாம் தெரிவுசெய்துசொடுக்குதல் செய்த பாவணையானது நாம் தெரிவுசெய்த   தொகுதியான உரைப்பகுதியை அல்லது பத்தியை அல்லது பக்கத்தில் செயல்படுத்தபட்டு மாறியமையும். இந்த styles and formatting சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள ஆறாவது உருவபொத்தான் ஆனது Fill format நிலையை வழங்குகின்றது அதாவது பல்வேறு இடங்களில் பரந்து விரிந்து பரவிகிடக்கும் உரைகளில் ஒவ்வொருமுறையும் styles and formatting சாளரத்திற்கு சென்று தேவையான பாவணையின் வகையின் வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதற்கு பதிலாக நாம் விரும்பும் பாவணையை அனைத்து பகுதிகளில் விரைவாக நடைமுறைபடுத்திட பயன்படுகின்றது.இந்த வழிமுறையானது பரந்து விரிந்து பரவி கிடக்கும் பத்திகள், குழுவான சொற்கள் பட்டியல்கள் ஆகியவற்றிற்கு நாம் விரும்பும் பாவணையை செயற்படுத்துவதற்காக முதலில் அனைத்து பகுதிகளையும் தெரிவுசெய்துகொண்டுபின்னர் மிக எளிதாக நடைமுறைபடுத்திட பயன்படுகின்றது.

இதற்காக முதலில் இந்த styles and formatting சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள தேவையான பாவணையை தெரிவுசெய்துகொண்டு ஆறாவதாக உள்ளFill format modeஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் தேவையான விட்டுவிட்டு பரவியுள்ள பகுதிகளை   சுட்டியின் வாயிலாக மேலூர்தல் செய்து தெரிவுசெய்து பிடித்துகொண்டு ஒவ்வொரு குழுவிலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்குக. நாம் தெரிவுசெய்த அனைத்து பகுதியும் முடியும்வரை இவ்வாறே செய்திடுகஇறுதியாக Fill format modeஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த நிலையிலிருந்து பழையநிலைக்கு மாறிடுக

எச்சரிக்கை இந்த Fill format நிலையில் ஆவணத்தின் எங்காவது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்தால் கடைசியாக Fill format நிலையில் செய்த செயல் நீ்க்கம் செய்யபட்டுவிடும்.அதனால் இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் செய்வது தவறுதலாக செய்வது ஆகியவை நடைபெறாமல்   பார்த்து கொள்க.

உரையின் பாவணை அல்லது நடையானது அந்த ஆவணத்தின் இயல்புநிலை பண்பியல்பாகும் . அதனால் பாவணையில் அல்லது புதிய பாவணையில் நாம் செய்திடும் மாறுதல்கள் அந்த ஆவணத்திற்கான தயார்நிலையில் உள்ள வாய்ப்புகளின் வாயிலாக மட்டுமே செயற்படுத்தபடும். பொதுவாக இந்த பாவணையானது ஒரு ஆவணத்தில் தங்கியுள்ளது உதாரணமாக நாம் நம்முடைய நண்பருக்கு உரைதொகுதியை மின்னஞ்சல்வாயிலாக அனுப்பிடும்போதுஅந்த உரையாவணத்துடன் அதற்கான பாவணையும் சேர்ந்தே சென்று நம்முடைய நண்பருக்கு கிடைக்கின்றது நாம் மற்ற ஆவணங்களில் இதே பாவணையை மாற்றிட அல்லதுபுதிய பாவணையை செயல்படுத்திட மாதிரி பலகமாக முதலில் இதனை சேமித்துகொண்டு நகலெடுத்து ஒட்டுவதன்வாயிலாக செயற்படுத்திட முடியும் இந்த styles and formatting சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள கடைசி உருவபொத்தான் பட்டியல் உருவபொத்தான் ஆகும் இதில் New style from selection, update style, load style ஆகிய மூன்று துனைபட்டியல்கள் உள்ளன.

இந்த New style from selection எனும் முதல் வாய்ப்பானது நடப்பு ஆவணத்தின் நாம் தெரிவுசெய்திடும் பகுதியில் புதிய பாவணயை உருவாக்குகின்றது. பத்தியில் அல்லது சட்டகத்தில் நாம்விரும்பியவாறு தோன்றிடசெய்தபின் புதிய பாவணைக்கு மாற்றிடமுடியும் இந்த வழிமுறையை புதிய பாவணையின் அனைத்து செயல்களையும் நினைவில் கொண்டு style எனும் உரையாடல் பெட்டிக்கு சென்று செயல்படுத்துவதற்கு பதிலாக குறிப்பிட்ட பாவணையின் பெயரை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தாலே அந்த பாவணை செயல்படுத்தபடுகின்றது. அதுமட்டுமல்லாமல் பக்கபாவணையின் உரையாடல் பெட்டிக்கு சென்று தேவையான மாறுதல் செய்வதையும் தவிர்க்கின்றது புதிய பாவணைய உருவாக்கிட பின்வரும் வழிமுறையை பின்பற்றிடுக.

26.2

26.2

நாம் விரும்பும் பத்தியை அல்லது சட்டகத்தை தெரிவுசெய்துகொள்க பின்னர் styles and formatting சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள தேவையான பாவணையை தெரிவுசெய்துகொள்க. அதன்பின்னர் நாம் பாவணையாக சேமிக்கவிரும்பும் பகுதியை தெரிவுசெய்துகொள்க பின்னர் இறுதியாக styles and formatting சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள New Style from Selection எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக. உடன் தோன்றிடும் create style எனும் உரையாடல் பெட்டியில் பாவணையின் பெயரை தட்டச்சு செய்திடுக அல்லது தேவையானபெயரை தெரிவசெய்திடுக அதன் பின்னர்Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக .

Previous Older Entries