நம்முடைய இணைய இணைப்பின் வேகத்தை நாமே சரிபார்க்கலாம்

நமக்கு நம்முடைய இணைய இணைப்பு வழங்குநர் Internet Service Provider (ISP) நமக்கு அளித்த உறுதிமொழியின்படி நம்முடைய இணைய இணைப்பின் பதிவிறக்கவேகம், பதிவேற்ற வேகம் இருக்கின்றதா என தெரியுமா அல்லது நாம் அறிந்துதான வைத்துள்ளோமா
இணையத்தில்   உலாவருதல், நமக்கு வந்த மின்னஞ்சலை திறந்து படித்தல் ,சமுதாய வலைபின்னலில் உரையாடல் செய்தல் ஆகிய செயல்களினால் இணைய இணைப்பிற்கு அதிக bandwidth தேவைப்படாது அதனால் அதுபோன்ற சமயத்தில் பதிவிறக்க வேகம் அதிகமாக இருக்கும் ஆனால் பேரளவு கோப்புகளையும் திரைப்படங்களையும் பதிவிறக்கம் செய்தல்   YouTube இணையதளத்தில் ஒலிஒளி படங்களை பார்வையிடுதல் ஆகிய செயல்களில் மட்டுமே  இணைய இணைப்பிற்கு அதிக bandwidth  தேவைப்படுகின்றன அதனால் அதுபோன்ற சமயத்தில் பதிவிறக்க வேகம் நத்தைபோன்று மெதுவாகின்றது

பொதுவாக போதுமான அளவிற்கு  இரண்டும் வேண்டுமென நாமனைவரும் விரும்புகிறோம் இந்த இணைய இணைப்பின் வேகம் எவ்வளவுஎன நாமே தெரிந்துகொண்டால் அதற்கேற்றவாறு தரவிறக்கம் தரவேற்ற செயல்களை கட்டுபடுத்தி சரிசெய்து கொள்ளமுடியும் இதற்காக http://speedtest.net/  என்ற இணையதளத்திற்கு செல்க அதில் உள்ளBegin Test என்ற பொத்தானை சொடுக்குக. இது செயல்படுவதற்குs Adobe Flash player என்ற கருவி தேவையாகும் இதனை http://get.adobe.com/flashplayer/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவிக்கொள்க.


இவ்வாறு Begin Testஎன்ற பொத்தானை சொடுக்கியவுடன் இது நம்முடைய இணைய இணைப்பு வழங்குநரை Internet Service Provider (ISP) தொடர்புகொண்டு,நம்முடைய இணைய இணைப்பின்  தோராயமான தரவிறக்கவேகம்download  , தரவேற்ற வேகம்upload ஆகியவற்றை  யூகித்து கணக்கிடுகின்றது.

இந்த சரிபார்க்கும்பணி நடைபெறும்போது அதற்கானஅளவீடுகாட்டிதிரையில் தோன்றி அளவீடுகள் ஏற்ற இறக்கத்துடன் தற்போதைய செயலை காண்பிக்கின்றது இந்நிலையில் தேடுபொறியின் சாளரத்தை மூடிடவேண்டாம்
20 நொடிப்பொழுது கழிந்து இறுதியாக இந்த இணைய இணைப்பின் தற்போதைய தரவிறக்கவேகம்download  ,தரவேற்றவேகம்upload ஆகியவற்றை தனித்தனியாக காண்பிக்கின்றது

குறிப்பு:இந்த அளவீடுகளானது நாம் பயன்படுத்தும் Wi-Fi connection,  router dongle   broadband ADSL modem ஆகியவறிற்கேற்ப மாறுபடும் அதனால் கம்பியுடன்கூடிய Broadband ADSL  மோடம் பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கபடுகின்றது

செயல்படும் சாளரத்தை மட்டும் திரைகாட்சியாக பதிவுசெய்யலாம்

நம்மில்பலர் விசைப்பலகையிலுள்ள Print Screen என்றவிசையை அழுத்துவதன்மூலம் திரைகாட்சியை பதிவுசெய்வது வழக்கமாகும் அதாவது திரையில் என்ன காட்சி இருக்கின்றதோ அதனை நகலெடுப்பதுதான் இந்த விசையின் அடிப்படை செயலாகும் அதன்பின்னர் நாம்விரும்பும் பயன்பாட்டில் இந்த திரைக்காட்சியை ஒட்டிகொள்ள முடியும் இந்த செயலானது திரையில் இருக்கும் அனைத்தையும் திரைக்காட்சியாக நகலெடுக்கின்றது

அதற்குபதிலாக நாம்விரும்பும் அல்லது செயலில் இருக்கும் சாளரத்தை மட்டும் திரைக்காட்சியாக நகலெடுத்தால் நன்றாக இருக்கும் என விரும்புவோம் இந்நிலையில்  விசைப்பலகையிலுள்ள Alt +PrtScஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் நாம்விரும்பியவாறு செயல்படும் சாளரதோற்றம் மட்டும் திரைகாட்சியாக பதிவாகும் இந்த வசதி Windows Vista அல்லது Windows 7 ஆகிய இயக்கமுறைமையிலுள்ள   Snipping Tool என்ற கருவிமூலமும் பெறமுடியும்
இருந்தாலும் தனியானதொருகருவி அல்லது பயன்பாடு இல்லாமலேயே விசைப்பலகையிலுள்ள விசைகளைகொண்டே நாம்விரும்பும் பகுதியைமட்டும் திரைகாட்சியாக நகலெடுத்து பதிவுசெய்ய Alt +PrtScஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் பெறமுடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்

ஒலி கோப்பை உரைக்கோப்பாக உருமாற்றி தரும் இணையதளம்

.கல்லூரி பேராசிரியர்களின் Presentation -ஐயும் , திறமையான மேடை பேச்சாளர்களின்  பேச்சையும் Text கோப்பாக மாற்றுவதற்கு இனிமேல்  எந்த மொழி பெயர்ப்பாளரும் தேவையில்லை. இணையத்தின் மூலம் நாம் பேசிய ஒலிக்கோப்பை உரைக்கோப்பாக உருமாற்றி சேமித்துகொண்டு பின்னர் இதை நம்முடைய  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்

தற்போது இந்த Text to Voice Conversonபணிசெய்வதற்காக  பல்வேறு இலவச மென்பொருள்கள் இருந்தாலும் Voice to text Conversion -க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள் கூட முழுமையான பயன்பாடாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்
இவ்வாறான நம்மனைவருடைய குறையையும் போக்கி ஒலி கோப்பை உரைக்கோப்பாக உருமாற்றி தருவதற்காக  :http://www.voicebase.com1என்றவொரு தளம் நமக்கு உதவுகின்றது. முதலில் இந்தத்தளத்திற்கு சென்று  ஒரு இலவச பயனாளர் கணக்கை நமக்கென்று உருவாக்கிக் கொண்டுஇதில் உள்நுழைவுசெய்க.

அடுத்து வரும் திரையில்  Upload Audio என்பதை தெரிவுசெய்து நாம் பேசிய ஒலி அல்லது உருமாற்ற விரும்பும் ஒலிகோப்பை  தேர்ந்தெடுத்து Upload செய்க  அடுத்து நாம்இவ்வாறு மேலேற்றுதல் செய்த கோப்பு தானாகவே உரைText கோப்பாக உருமாற்றம் ஆகிவிடும். இதன் பின் நாம் பேசியஉரையில் ஏதாவது ஒரு சொல்லைமட்டும் கொடுத்தவுடன் அவ்வாறு தேடுபவர்களுக்கு அச்சொல்லின் பேச்சொலியும் அதனுடன்கூடவே அதற்கான உரையும் Text திரையில் காண்பிக்கும். தற்போது இந்த தளம் ஆங்கில மொழிக்கு மட்டுமே  துணை செய்கின்றது.கண்டிப்பாக இந்த தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

இணையதள வடிவமைப்பிற்கு உதவும் HTML எடிட்டர்

இணையதள வடிவமைப்பிற்கு  உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும்போதே  உடனுக்கூடன்சரியாக இருக்கின்றதாவெனசரிபார்த்து தெரிந்து கொள்ளும் பொருட்டு இணையத்தில் நேரடி HTML எடிட்டர் ஒன்றுவந்துள்ளது .

தற்போது ஒவ்வொருவரும் தத்தமக்கென தனியானதொரு வலைபூ,வலைப்பக்கம் , வலைமனை , இணையதளம் போன்றவைகளை தாமாகவே வடிவமைப்பு செய்து உருவாக்குவதை விரும்புகின்றனர் இவ்வாறான இணையதள வடிவமைப்பின் அடிப்படையாக விளங்குவது HTML  மொழியாகும்இதனை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளஒவ்வொருக்கும் இந்தHTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக  வளர்ப்பதற்காக http://www.htmlinstant.com1என்ற இணைய தளம் உதவுகிறது.

பொதுவாக சாதாரன Notepad -ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து ஏதேனுமொரு உலாவியில் பரிசோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியவாறு இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் வலது பக்கத்தில்அதனுடைய விளைவு Output அவ்வப்போது உடனுக்கூடன்
காண்பிக்கப்படுகிறது.

HTML மொழியை கற்க விரும்பும் ஒவ்வொரும்இதன்மூலம் Html –ன் கட்டளை ஒவ்வொன்றும் உலாவியில் எவ்வாறு இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இதனால் இணையதளத்தின் அடிப்படை மொழியான Html –ல் ஏற்படும் அனைத்து சந்தேகங்களும் அவ்வப்போது தீர்வுசெய்யபடுகின்றன அதனடிப்படையில்  பார்க்கும்போது Html மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம்.

தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினியானது தமிழிலேயே வாசித்துக் காட்டும்

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும், இனி கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினியானது தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கியிருகின்றார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள்

1990-ல் சண்டிகாரைச் சேர்ந்த சபீர் பாட்டியா என்ற சாதாரண மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த  மின்னஞ்சல் ஆனது. இன்றைக்கு நம்முடைய தினசரி காலைக்கடன்களில்  ஒன்றாகிவிட்டது .இது தற்போது நமக்கு அஞ்சலகங்களின் சேவையே தேவையில்லாததாக்கிவிட்டது இதில். அனுப்புநர், பெறுநர்  தகவல் போன்றவை மட்டுமேயுள்ளது என்று  தவறாக எண்ணிவிடவேண்டாம்.

ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அத்தகவலின் நதிமூலம், ரிஷிமூலம் ஆகிய அனைத்து தகவல்களும் சேர்த்தே அனுப்பி வைக்கப்படுகிறது, ஆயினும் பொதுப்பயன்பாட்டுக்கு அவை அவசியமல்லாததால் நம் பார்வைக்கு இவை தென்படாது. அதனால் இணைய மென்பொருள் நிரல்களை (scripts) எழுதுவது குறித்த அடிப்படை அறிவு ஒருவருக்கு இருந்தால் போதும், ஏதேனுமொரு மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் வலைபதிவை அல்லது அவர்களுடைய செயல்களை  பாராட்டி ஆனந்த விகடன், குமுதம் அல்லது ஏதேனுமொரு பிரபலம் ஆகியோர் அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதை போன்று  மின்னஞ்சலை அனுப்புவது மிகமிகச் சுலபம் ஆன செயலாகும்.

நம்ப முடியாத அல்லது சர்ச்சைக்குரிய செய்திகளை மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதப்படுத்தும் சூழ்நிலைகளில் முறையாக ஆய்வு செய்யாமல் திரைக்காட்சி (screenshot) அல்லது வெறும் மின்னஞ்சல்களைப் படித்து முடிவுக்கு வராமல் இருப்பது மிக்க நன்று. மிக அதிமுக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்பெற்றால் அதையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி கொள்வது மிகவும் நன்று

ஏதேனுமொரு சமயத்தில் நமக்கு ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய, வடஅமெரிக்க, தென் அமெரிக்க, ஆஸ்திரேலிய  அண்டார்டிக்க கண்டங்களிலிருந்து    அதிருஷ்ட தேவதை  வந்து  பொற்காசுகளை அள்ளிவழங்க விருப்பதாகவும் அதற்காக கொஞ்சமாக பணம் அனுப்ப சொல்லியும் வரும் மோசடி மின்னஞ்சல்கள் நாம் அறிந்த செய்தியாகும் இதுமிகபழமையான செய்தியும் கூட. இம்மாதிரி மின்னஞ்சல்களைக் கூர்ந்து நோக்கினால் சமயத்தில் hotmail  yahoo ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து கூட உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு  உடனே அணுகவும் என்று கூறியிருப்பார்கள். இதில் அனுப்புநர் முகவரி மிகவும் நம்பத்தகுந்தது போல : admin@yahoo.com , customerservice@hotmail.com. என்றவாறு இருக்கும்

சில சமயங்களில் பிரபலங்களுக்கு  வேட்டு வைக்கப் போவதாக  ஒருசில சில்மிஷமான மின்னஞ்சல்களை  அனுப்பும் சம்பவங்களைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். உடன் இதற்காக  இணையக் குற்றவியல் துறையினர் குற்றவாளியைத் தேடி பட்டிவீரன் பட்டியில் வலைவீசிக் தேடிக்கொண்டிருப்பார்கள். இது எவ்வாறு சாத்தியமாகும்

பொதுவாக மின்னஞ்சல் நேரடியாக ஒருவரிடமிருந்து வரலாம் அல்லது ‘சாமி உங்களை தண்டித்துவிடும் அதனால் இந்த மின்னஞ்சலை குறைந்தது 7 பேருக்காவது அனுப்புக என்றோ அல்லது முன்பகிர்வு மின்னஞ்சலாகவோ (forwarded emails) இருக்கலாம். ஒரு மின்னஞ்சல் எவ்வாறு இருந்தாலும் அதனுடைய மூலத்தை (origin) மிக எளிதாக நம்மால் கண்டுபிடிக்கமுடியும்,

ஒருமின்னஞ்சலில் உள்ள தலைப்பகுதி (header)யில் அம்மின்னஞ்சல் ஓவ்வொரு முறையும் ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு பயனிக்கும் போது அதனுடைய அனுப்புநரின் வலை யிணைப்பு முகவர் எண் (I.P Address), உபயோகப்படுத்திய மின்னஞ்சலின் செர்வர், செர்வரில் அந்த மின்னஞ்சலுக்கான பதிவு எண், தேதி, நேரம், நாள், ஆகிய அனைத்து விவரங்களும்  பதிவாகும். இது நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைக்கேற்ப சிறிது மாறுபடும்.

இதில் உள்ள தலைப்பகுதியில் Received என்ற பகுதி மீண்டும் மீண்டும் வருவதைக்  காணலாம். இந்த Received என்று தலைப்பிட்ட பகுதிகள் தான் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டுபிடிக்க நமக்கு உதவப் போகின்றன. முதலில் நாம் அனுப்பும் எந்தவொரு  மின்னஞ்சலும் அதுசேர வேண்டிய இடத்தைப் பொருத்து சில/பல மின்னஞ்சல் செர்வர்களில் பயனித்து இறுதியாகவே பெறுநரை சென்றடை கின்றது (trace route). இது ஓவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் நகரும் போதும் ஒவ்வொரு Received தகவல் அம்மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும். இந்த trace route குறித்து கீழ்காணும் முறையில் நாமே மிக எளிதாக பரிசோதித்துப் பார்க்கலாம்.

Start => Run=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் cmd என்று உள்ளீடு செய்க. உடன் command prompt window என்ற கருப்புவெள்ளை திரைதோன்றும். அதில் tracert “IP ADDRESS” அல்லது tracert “DOMAIN NAME” என்று உள்ளீடு செய்து உள்ளீட்டுEnter பொத்தானை அழுத்துக உடன் வரிசையாக  இணைய இணைப்பின் மூலம் நம்முடைய தகவல் பறிமாற்றமானது  கொடுக்கப்பட்ட வலையிணைப்பு முகவர் எண்ணுக்கோ அல்லது வலைத்தளத்திற்கோ எப்படியெல்லாம் பயனித்தது, என்று இது பயனித்த இடங்களின் வலையிணைப்பு முகவர் எண் ஆகிய அனைத்தையும் திரையில் காண்பிக்கும். நாம் ஒரு முகவரிக்கு அனுப்பும் மின்னஞ்சலும் இம்முறையிலேயே  மின்னஞ்சல் செர்வருக்கு சென்று அங்கிருந்து பெறுநரின் மின்னஞ்சல் செர்வருக்கு சென்று அதன் பின் பெறுபவரின் மின்னஞ்சல் பெட்டிக்குச் சென்றடைகின்றது..

. பொதுவாக ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும் Received தகவல்களானது கீழிருந்து மேலாகப் பதிவு செய்யும் முறையை பின்பற்றப் படுகிறது. அதாவது  ஒரு மின்னஞ்சல் மூன்று நபர்களைத் தாண்டி நம்மிடம் வந்தடைகிறது என்று வைத்துக் கொண்டால்  அந்த மின்னஞ்சல் முதன் முதலில் யாரிடமிருந்து புறப்பட்டது என்பதை அறிய கடைசியாக இருக்கும் Received தகவலைச் பரிசோதிக்க வேண்டும் அதில் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும், அதனை கொண்டு அந்த எண்ணுக்கான நாட்டினையோ, ஊரையோ மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் : http://www.melissadata.com/Lookups/iplocation.asp என்பன போன்ற இலவச வலைத்தளங்கள் இணையத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை ஏதேனுமொரு இணைய உலாவிமூலம் தேவைக்கேற்ப தேடிபிடித்து தேர்வு செய்து கொள்க.

நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை (yahoo/hotmail/gmail) அல்லது மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (email clients: outlook/outlook express/thunderbird) ஆகியவை அதனதன் தன்மைகேற்ப மாறுபடும்.

யாஹூ மின்னஞ்சல்: இதன் மேல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் view full headers என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

ஹாட்மெயில்: இம்மின்னஞ்சலின் மேல்இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் view message source என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

ஜிமெயில்: இம்மின்னஞ்சலைத் திறந்த பின் Reply என்ற பொத்தானில் கீழ்நோக்கிய அம்புக்குறிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் show original என்பதனைத் தேர்வு செய்க.

அவுட்லுக்: இதன் மேல்பகுதியில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் options என்பதை தெரிவுசெய்து  சொடுக்குக உடன் message options window என்பது திரையில் தோன்றும் அதில internet headers என்ற பகுதியில் தலைப்பகுதியினைக் காணலாம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்: இதன் மேல்பகுதியில்  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் பட்டியில் properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் திரையில் தோன்றும் படிவத்தில் details என்ற பகுதியைத் தேர்வு செய்க.

தண்டர்போர்ட்: இதன் மேல்பகுதியிலிருக்கும்பட்டியில் View => message source=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

இவ்வாறு செயற்படுத்தியவுடன் காணும் தலைப்பு பகுதியில் நமக்குத் தேவையான Received என்று குறிப்பிடப்பட்ட பகுதிகள் மட்டுமே. இந்த Received பகுதிகள் அனுப்புநர், அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (ip address), பெறுநர்  மின்னஞ்சல் செர்வர்களின் பெயர்கள், செர்வர்களின் குறியீட்டு எண்கள் ஆகியத் தகவல்களைக் கொண்டிருக்கும்.

பல நபர்களைக் கடந்து ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வருகின்றதெனில் இந்த received பகுதிகளைக் கீழிருந்து மேலாக ஆய்வு செய்தால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதாவது கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்,. அவ்வாறு இல்லாமல் இருந்தால் மின்னஞ்சலில் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம், காரணம் தேர்ந்த சில்மிஷ மின்னஞ்சல் அனுப்பும் கில்லாடிகள் வலை நிரல்கள் மூலம் இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியிலும் கைவைத்து குழப்பி விடுவார்கள்.

நன்கு  வாரியிருக்கும் தலைமுடியை கலைத்து விடுவது போல மேலும் சில received பகுதிகளை நிரல்கள் மூலம் ஆங்காங்கே மானாவாரியாக தலைப்பகுதியில் விதைப்பார்கள். அவற்றை மண்டை காய்ந்தாலும் கவலைப்படாமல் களையெடுப்பது ஆய்வு செய்யும் நிபுணர்களின் வேலையாகும்.

மேலே சொன்னபடி அனைத்து received பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்க வேண்டும்(கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்). அவ்வாறு இல்லாத received பகுதிகளை நீக்கிக் கொண்டே வந்தால் ஒழுங்கு படுத்தி விடலாம். அவ்வாறு ஒழுங்கு படுத்தி விட்டு பார்க்கும் போது கடைசி received பகுதியில் இருக்கும் வலையிணைப்பு முகவர் எண் (“[ ]” என்ற அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டிருக்கும்) இதுதான் நமக்குத் தேவையான தகவல்.ஆகும்

அது போக மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கென சில தலைப்பு பகுதிக் கட்டமைப்புகளைப் தனித்தன்மையுடன் வைத்துள்ளன. ஹாட்மெயில் சேவையில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் தலைப்பு பகுதியில் வழக்கமான received பகுதிகளோடு சேர்த்து X-Origninating-IP என்ற ஒரு பகுதி கூடுதலாக இருக்கும். அதில்  முதன் முதலில்  அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும். இதனால் நமக்கு ஆய்வு செய்யும் வேலை மிச்சம்.ஆகும்

யாஹூ வழக்கம் போல நாம் விவரித்த முறையிலேயே தங்கள் மின்னஞ்சல்களின் தலைப்பு பகுதியினை கட்டமைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழாக received பகுதிகளை ஆய்வு செய்தால் கடைசியாக இருக்கும் பகுதியில் முதன் முதலில்  அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும்.

ஜிமெயில் தமது மின்னஞ்சல் சேவையின் போது உலாவி மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண்களை பதுக்கி விட்டு, தம்முடைய மின்னஞ்சல் செர்வரின் தகவல்களை மட்டுமே அளிக்கின்றது. அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் தேவை என்றால் கூகுளிடம் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ கெஞ்சி கூத்தாடி சல்லடைபோட்டு தேடினால் மட்டுமே கிடைக்கப்பெறும். கூகுள் செய்யும் இணையச் சேட்டைகளில் இதுவும் ஒன்று. உலாவி அல்லாமல் மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்களான outlook  போன்றவைகளை பயன்படுத்தி அனுப்பினால் தலைப்பகுதியில் அனுப்புநரின் முகவர் எண் கிடைக்கப் பெறும்.

அடுத்து நாம் http://www.melissadata.com/Lookups/iplocation.asp  போன்ற வலைத்தளங்களுக்கு சென்று கண்டுபிடித்த வலையிணைப்பு முகவர் எண்ணை உள்ளிட்டால் அதன் இருப்பிடத்தை அறியலாம்.

இறுதியாக ஒரு செய்தி இம்மின்னஞ்சலானது இரண்டு விதமாக அனுப்பப்படலாம். ஒன்று நேரடியாக அனுப்புநரால் அனுப்பப்படுவது. இரண்டாவது தானியங்கி நிரல்களால் வெப் செர்வர்களின் மூலம் அனுப்பப்படுவது. முதல் வகை நாம் சாதரணமாக அனுப்பும் முறையாகும். வலைப்பதிவுத் திரட்டிகளில் இருந்து பெறும் மின்னஞ்சல்கள் இரண்டாவது வகையை சார்ந்தது ஆகும்  இவை அனேகமாக நிரல்கள் மூலம் வெப் சர்வரில் இருந்து அனுப்பப்படுபவையாகும். அவற்றின் தலைப்பு பகுதியினை ஆய்வு செய்தால் கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண், அவர்களின் வெப் சர்வருக்கு உரியதாக இருக்கும். அதன் இடத்தை கண்டுபிடித்தால் வெப் சர்வர் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அறியலாம்.

இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் தான் junk, spam மின்னஞ்சல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன. நம்முடைய மின்னஞ்சல்களில் ஒன்றை junk அல்லது spam என்று நாம் வகைப்படுத்தினால் பின்னணியில் செயல்படும் நிரல்கள் அவற்றின் தலைப்பகுதியை ஆய்வு செய்து அதன் மூலத்தின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடித்து குறித்து வைத்து கொள்ளும், அதன் பின்னர் எப்பொழுது அந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து நமக்கு மின்னஞ்சல் வந்தாலும் அவை spam அல்லது junk என்று வகைப்படுத்தப்படும்.

பி.கு: இதன் மூலம் ஒருவருக்கு நாம் மின்னஞ்சல் அனுப்புப் போது நாம் வெறும் தகவல் மட்டும் அனுப்புவதில்லை, நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றிய பல்வேறு குறிப்புகளையும் சேர்த்தே அனுப்புகின்றோம் என்பதையும் நினைவில் கொள்க, சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களை இவ்வாறு நாமே ஆய்வு செய்து தெளிவடைந்து மின்னஞ்சல் மோசடிகள், சில்மிஷங்களிலிருந்து அவரவர்களை தற்காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தபடுகிறது

ஒருகணினியை நம்முடைய கண்ணிற்குள்பொருத்தமுடியும்

ஒருசதுரமில்லிமீட்டர் அளவில் அதாவது நம்முடைய கண்ணின் கருமணிஅளவு கணினியை தற்போது உருவாக்கியுள்ளனர்

 இதில் ultra low-power microprocessor, a pressure sensor, memory,தரவுகளை பரிமாற்றம் செய்துகொள்ள antenna உடன்  கூடிய wireless radio  சூரியசக்தியால் இயங்ககூடியthin film battery ஆகியவை அடங்கியுள்ளன இதனை மெக்சிகன் பல்கழக அறிவியலறி ஞர்களின் குழுவொன்று உருவாக்கியுள்ளது  இது வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதற்கு இன்னும்ஒருசில ஆண்டுகள் ஆகும் இது சுற்றுசூழலைகண்காணித்தல் கட்டமைப்புஒருங்கிணைப்பை கட்டுபடுத்துதல்  மேற்பார்வைசெய்தல் ஆகிய பணிகளுக்கு மிகபயனுள்ளதாக இருக்கும் கண்புறை பார்வைகுறைபாட்டை சரிசெய்தல் ஆகிய பணிகளுக்குகூட இந்த கணினி பெரிதும் பயன்படுகின்றது

Previous Older Entries