இணையவானொலி நிகழ்ச்சிகளை RadioDroid கட்டற்ற கருவியின் உதவியுடன் கேட்டு மகிழலாம்

நாம்விரும்பும் இணையவானொலி நிகழ்ச்சிகளை நம்முடைய வீடடின் ஒலிபரப்பு கருவிகளில் எளிய கட்டமைவின் வாயிலாக கேட்டுமகிழமுடியும் சமீபத்தில் கூகுளின் Chromecast ஒலிச்சாதனத்தின் வாயிலாக இணையஒலிச்செய்திகளை பெறமுடியும் என்ற நிலைதற்போது மேம்பட்டுள்ளது ஏராளமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் இந்த Chromecast ஆதரிக்கின்றன RadioDroid என்பது Chromecast ஒலிச்சாதனத்துடன் இணைந்து செயல்படும் ஒருகட்டற்ற பயன்பாடாகும் இது Community Radio Browser என்பதன் வாயிலாக இணையவானொலி நிலைய நிகழ்வுகளை தேடிபிடித்து தெரிவுசெய்திடஉதவுகின்றது Chromecastஉடன் இணைந்த RadioDroid எனும் கட்டற்ற கருவியை https://github.com/segler-alex/RadioDroid எனும் இணையதளபக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நம்முடைய கையடக்க கருவிகளில் நிறுவுகைசெய்து கொண்டால் போதும் இது Community Radio Browser எனும் இணையதளத்தின் வாயிலாக நாம் கேட்டு மகிழவிரும்பும் வானொலி நிலைய நிகழ்ச்சிகளை தேடிபிடித்திடஉதவுகின்றது அதனை Chromecast ஆனது நம்முடைய கையடக்ககருவியில் செயல்படச்செய்கின்றது

சேமிக்கமறந்த எக்செல் கோப்புகளை மீட்டெடுப்பது எவ்வாறு?

நாம் பணியாற்றி கொண்டிருக்கும் எக்செல் கோப்பினை சேமிப்பதை பற்றி சிந்திக்காமல் மிகஆழ்ந்த ஈடுபாட்டுடன் பணிபுரிந்து கொண்டிருப்போம் ஆயினும் இடையில் ஏதேனுமொரு காரணத்தினால் கணினியின் இயக்கம் நின்று போகும் அதனால் அந்த எக்செல் கோப்பு முழுவதும் அழித்துநீக்கப்பட்டுவிட்டும் அதனை தொடர்ந்து அந்த எக்செல் கோப்பில் நாம்இதுவரை ஆற்றிய பணிவீணாகி அழிந்துபோனதால் அடுத்து என்ன செய்வது என தடுமாறி நின்றுவிடுவோம் மேலும் செய்த செயலையே மீண்டும் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப் படுவோம் அஞ்சற்க இவ்வாறான நிலையில்கூட நாம் ஏற்கனவே பணிபுரிந்த எக்செல் கோப்பினை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி மீட்டெடுக்கமுடியும்
இதற்காக புதிய எக்செல்கோப்பு ஒன்றினை திறந்து கொள்க பின்னர் மேலே கட்டளைபட்டையில் File எனும் தாவியின் திரையை விரியச்செய்து அதிலுள்ளOpen’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின்மேலே இடதுபுறமுள்ள Recent Workbook எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் கீழ்பகுதியிலுள்ள Recover Unsaved Workbooks என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் காண்பிக்கும் கோப்புகளின் பட்டியலிலிருந்து நாம் சேமித்திடாது பணிபுரிந்து கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் சேமிக்காது பணிபுரிந்த எக்செல்கோப்பு கடைசியாக செய்த திருத்தங்களுடன் திரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து Save As எனும் வாய்ப்பின் வாயிலாக இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு விரும்பிய இடத்தில் சேமித்து கொள்க பொதுவாக இவ்வாறான சேமிக்காத கோப்புகள் C:\Users\[YourSystemName]\AppData\Local\Microsoft\Office\UnsavedFiles என்ற கோப்பகத்தில் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் அதனால் நேரடியாக இந்த கோப்பகத்திற்கு சென்று கூட இந்த கோப்பினை திறந்து திரையில் தோன்றிட செய்திடலாம்
குறிப்பு 1.இயல்புநிலையில் சேமிக்காத கோப்புகள் XLSB எனும் வடிவமைப்பில் மட்டுமே இருக்கும்
குறிப்பு 2. இயல்புநிலையில் எக்செல்பயன்பாடானது நாம்பயன்படுத்திடும்போது AutoSave , AutoRecover ஆகிய செயலிகள் தானாகவே செயல்படுமாறு முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டே இருக்கும் . எனும் செய்திகளை மனதில் கொள்க

ஸ்மார்ட் விண்டோ எனும் வசதியை பயன்படுத்தி ஒரேசமயத்தில் ஒரேதிரையில்அருகருகே இருசாளரங்களைதிறந்து பணிபுரியமுடியம்

விண்டோ 7 இயக்கமுறைமை செயல்படும் கணினியில் கைகளால் சரிசெய்திடாமலேயே ஸ்மார்ட் விண்டோ அல்லது ஸ்நாப் எனும் வசதியைகொண்டு ஒரேசமயத்தில் ஒரேதிரையில்அருகருகே இருசாளரங்களைதிறந்து பணிபுரியமுடியம் மேலும் இந்த வசதியின் படி இருசாளரங்களுக்கிடையே இடம்மாறுவதற்காக Alt-Tab ஆகிய இருவிசைகளை சேர்த்துஅழுத்த தேவையில்லை

இவ்வாறு அருகருகே தோன்றிடுவதற்கான முதல் கோப்பின் தலைப்புபட்டையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பிடித்து இடதுபுறம் அல்லது வலதுபுறம் கொண்டுசென்று விடுக தொடர்ந்து இரண்டாவது கோப்பின் தலைப்புபட்டையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பிடித்து முதல் கோப்பிற்கு எதிர்புறம் கொண்டுசென்று விடுக
அதற்கு பதிலாக இரண்டாவது வழிமுறையாக முதல் கோப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்து கொண்டு விண்டோவிசையையும் அம்புக்குறிவிசையில் இடதுபுறஅல்லது வலதுபுற அம்புக்குறி விசையும் சேர்த்து அழுத்தி கொண்டுசென்று விடுக தொடர்ந்து இரண்டாவது கோப்பின் தலைப்புபட்டையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து பிடித்துகொண்டு விண்டோவிசையையும் அம்புக்குறி விசையின் எதிர்புறவிசையையும் சேர்த்து அழுத்தி கொண்டுசென்று விடுக இவ்வாறான வழிமுறைகளின்படி ஒரேதிரையில்அருகருகே இரண்டு சாளரங்களாக தோன்றிடும் இந்நிலையில் இரண்டில் எந்தவொரு கோப்பின் தலைப்பு பட்டையை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தால் முந்தைய அளவிலான முழுத்திரைக்கு நாம் தெரிவுசெய்தகோப்பு மாறிவிடும் ஒரேயொரு கோப்பு மட்டும் முழுதிரையிலும் தோன்றிடுமாறுசெய்வதற்காக சுட்டியைஅழுத்தி பிடித்துகொண்டு இடம்சுட்டியை திரையின் மேலே காலிஇடத்தில் வைத்து சொடுக்குக தொடர்ந்து சுட்டியை அசைத்திடுக உடன் மற்ற சாளரங்கள் சிறியதாக மாறி செயல்பட்டையில் சென்றமர்ந்து விடும் இடம்சுட்டிவைத்திருக்கும் சாளரம்மட்டும் முழுத்திரைக்கும் மாறி யமையும் அவ்வாறான சிறிய சாளரத்தினை கொண்ட கோப்பினை திறந்து இடம்சுட்டியால் அசைத்திட்டால்போதும் பழையவாறு இருசாளரம் அருகருகே அமையும்

OneTab எனும் பயன்பாட்டினை கொண்டுநம்முடைய இணையஉலாவேகத்தை உயர்த்திடுக

நாமனைவரும் இணையஉலாவரும்போது நம்முடையபேராசையினால் இணையஉலாவியில் ஒரேசமயத்தில் ஏராளமான இணையபக்கங்களை திறந்துகொள்வோம் அதனால் நம்முடைய கணினியினுடைய ரேமின் பணிபளு அதிகமாகி அதனுடைய இயக்கமானது எறுமைமாடு நடப்பது போன்று மிகமெதுவாகிவிடும் நாமும்நம்முடைய அவசரத்திற்கு தக்கவாறு இந்த இணையபக்கங்கள் உடன் தோன்றிடாமல் சதிசெய்கின்றதேயென மிகஅதிக வெறுப்படைந்து அமர்ந்திருப்போம் அஞ்சற்க அவ்வாறான நிலையில் இணைய உலாவலை வேகப்படுத்திட கைகொடுப்பதுதான் OneTab எனும் பயன்பாடாகும் இது குரோம், ஃபயர் ஃபாக்ஸ் ஆகிய இணையஉலாவிகளில் விரிவாக்கமாக செயல்படும் தன்மை கொண்டது நாம் ஏராளமான அளவில் இணையபக்கத்தை திறக்க முயற்சி செய்திடும்போது இதனுடைய உருவப்பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் அனைத்து தாவிப் பக்களையும் பட்டியலாக இது சுருக்கிவிடுகின்றது அவைகளுள் நாம்விரும்புவதை மட்டும் ஒவ்வொன்றாக தெரிவு செய்தவுடன் அந்த இணயபக்கம் மட்டும் உடனடியாக மேலேற்றம் செய்யப்பட்டு திரையில் தோன்றிடச் செய்திடுகின்றது இந்த பட்டியலிருந்து இணையமுகவரியை மேலேற்றவும் பழையவாறு பட்டியலிற்கு படியிறக்கவும் செய்திடுகின்றது இதனை நம்முடையநண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ளவும் முடியும் இந்த பட்டியலிலுள்ள இணையபெயர்களின் வரிசையை எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றிகொள்ளமுடியும் நம்முடைய இணையஉலாவிஏதேனும் காரணத்தினால் செயல்படாதுநின்றுபோனாலும் அதன்பின்மீண்டும் செயல்படசெய்திடும்போது இணையஉலாவலுக்கான பட்டியலும் முந்தையநிலையில் தோன்றிடும் இதனை ஃபயர்ஃபாக்ஸில்நிறுவுகைசெய்வதற்காக Menu -> Add-ons -> Extensions – > என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திட்டால் போதும்

கட்டற்ற முதன்மையான வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பக மென்பொருட்கள்

சிறிய நிறுவனங்கள்முதல் பெரிய நிறுவனங்கள் வரை தம்முடைய தரவுகளை பிற்காப்புசெய்தல், மீட்டெடுத்தல் ஆகியபணிகளை செய்வதற்கான மென்பொருட்கள் அனைத்தும் அவ்வாறான தரவுகளை எந்தவொரு சூழலிலும் இழக்காமல் பாதுகாத்திட உத்திரவாதம் அளிக்கின்றனஅதிலும் வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பக(Network attached storage (NAS)) மென்பொருட்கள் மிகப்பேருதவியாய் விளங்குகின்றன அவற்றுள் முதன்மையானவை பின்வருமாறு
1.FreeNAS எனும் கட்டற்றமென்பொருளானது SMB/CIFS,NFS , AFP, FTP, iSCSI, WebDAV என்பன போன்ற அனைத்து இயக்கமுறைமைகளின் கோப்பு பகிர்வுகளை ஆதரிக்கின்றது மேலும் இது செந்தர வலைபின்னல் ஒழுங்குமுறைமுதல் LDAP ,VLAN போன்ற ஒழுங்குமுறைவரையில் ஆதரிக்கின்றது அதனோடு Bacula, CouchPotato, BitTorrent, ownCloud,என்பனபோன்ற எண்ணற்ற கூடுதல் இணைப்புகளையும் ஆதரிக்கின்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு 11.2-RC2ஆகும் இதனை https://www.freenas.org/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

2.XigmaNAS என்பது மற்றொரு கட்டற்ற வலைபின்னல் பிற்காப்பு சேவையாளர் மென்பொருளாகும் இது FreeBSD கட்டளைவரிகள் இல்லாமலேயே வலைபின்னல் முழுவதையும் கட்டுபடுத்திடும் திறனை வழங்குகின்றது இது விண்டோ லினக்ஸ் ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளுடன் இணக்கமாக செயல்படும்திறன்மிக்கது இது SMB, LDAP, active directory, FTP, SFTP, NFS, SSH, UPnP, BitTorrent and Bridge, CARP and HAST. ஆகிய அனைத்து ஒழுங்குமுறைகளையும் ஆதரிக்கின்றது இதனை நிறுவுகை செய்திடாமலேயே LiveCD அல்லது LiveUSB வாயிலாக பயன்படுத்தி கொள்ளமுடியும் .இதனுடைய சமீபத்திய பதிப்பு 11.2.0.4.6195ஆகும் இதனை https://www.xigmanas.com/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3.Openmediavault என்பது மிகமேம்பட்ட அடுத்தலைமுறையிலான கட்டற்றவலை பின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு மென்பொருளாகும் இது S.M.A.R.T, RAID என்பனபோன்ற மிகமேம்பட்ட சேமிப்பக நிருவாகியாக செயல்படுகின்றது அதைவிடLVM2எனும் கூடுதல் இணைப்பையும் ஆதரிக்கின்றது இதுSMB/CIFS, FTP, RSync, NFS, SSH, TFTP , RSync, BitTorrent என்போன்ற சேவைகளை வழங்குகின்றது. மேலும் இதுIPv6 , Wake on LAN போன்றவைகளைகூட கூடுதல் இணைப்பின் வாயிலாக ஆதரிகின்றது.இதனுடைய சமீபத்திய பதிப்பு4.1.12ஆகும் இதனை https://www.openmediavault.org/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

வாட்ஸப்பிற்கு மாற்றான கட்டற்ற செய்தியாளர்கள் ஒருஅறிமுகம்

தற்போது நாமெல்லோரும் ஃபஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என்பன போன்றசமூதாய பல்லூடகங்களில் மூழ்கி இருக்கின்றோம் இவையனைத்தும் கட்டற்றவை யாக செயல்படவில்லை அதைவிட தனிநபர் சுதந்திரத்தில் இவை தலையிடுகின்றன அதனால்இவைகளுக்கு மாற்றாக கட்டற்றபல செய்தி யாளர்கள் தனிநபர்சுதந்திரத்தில் தலையிடாமல் நமக்கு உதவ தயாராக இருக்கின்றன அவை பின்வருமாறு
1.Line என்பதொரு கட்டற்ற செய்தியாளர் பயன்பாடாகும் இதனை Uber எனும் வாடகைமகிழ்வுந்து சேவைவழங்கிடும் நிறுவனம் Wow எனும் நம்முடைய வீட்டிற்கே உணவுபொருட்களை கொண்டுவந்து வழங்கிடும் நிறுவனம் Today எனும் செய்திகளின் மையம் போன்றவை பயன்படுத்தி கொள்கின்றன மேலும் விவரங்களுக்குhttps://line.me/ எனும்இணையமுகவரிக்கு செல்க
2.Riot.im என்பது Matrixஒழுங்குமுறையை பின்பற்றி சேவையை வழங்கிடும் கட்டற்ற செய்தியாளராகும் இதனை எங்குவேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளமுடியும் மேஜைக்கணினியிலகூட பயன்படுத்திகொள்ளும் தன்மைகொண்டது . இது நம்முடைய செய்திதொடர்பின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் வசதிவாய்ப்புகளை கொண்டது.மேலும் விவரங்களுக்குhttps://about.riot.im/ எனும்இணையமுகவரிக்கு செல்க
3.Signal என்பது வாட்ஸப்பின் அனைத்து சேவைகளையும் வழங்ககூடிய கட்டற்ற செய்தியாளராகும் இது ஒரு இலாபநோக்கற்ற நிறுவனத்தால் பராமரிக்கப்படுகின்றது செய்திதொடர்பிற்கு வாட்ஸப் போன்றவைகளுடனும் இணைக்கமாக செயல்படும் தன்மைகொண்டது . இது நம்முடைய செய்தி தொடர்பின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் வசதிவாய்ப்புகளை கொண்டது.மேலும் விவரங்களுக்கு https://signal.org/ எனும்இணையமுகவரிக்கு செல்க
4.Viberஎன்பது மிகப்பிரபலமான வாட்ஸப்பிற்கு மாற்றான மற்றொருசெய்தியாளர் பயன்பாடாகும் . இது நம்முடைய செய்திதொடர்பின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் வசதிவாய்ப்புகளை கொண்டது.மேலும் விவரங்களுக்குhttps://www.viber.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க
5.Wire என்பது முந்தைய ஸ்கைப் உருவாக்கியவர்களால் உருவாக்கப்பட்டபிரிதொரு வாட்ஸப்பிற்கு மாற்றான செய்தியாளர் பயன்பாடாகும் இதுமேஜைக்கணினியில்கூட பயன்படுத்திகொள்ளும் தன்மைகொண்டதுமேலும் இது நம்முடைய செய்திதொடர்பின் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் வசதிவாய்ப்புகளை கொண்டது.மேலும் விவரங்களுக்குhttps://wire.com/ எனும்இணையமுகவரிக்கு செல்க

ராஸ்பெர்ரிபிஐ இசைபெட்டியை நாமே எளிதாக உருவாக்கி கேட்டுமகிழலாம்

மிகக்குறைந்த செலவில் தன்னிகரற்றராஸ்பெர்ரிபிஐஇசைபெட்டியை நாமே எளிதாக உருவாக்கிகொள்ள முடியும் இதனை கொண்டு Spotify, Google Music, SoundCloud, Webradio, Podcasts ஆகிய இசைகளை மட்டுமல்லாது நம்முடைய சொந்த சாதனத்திலுள்ள இசை தொகுப்புகளையும் எளிதாக இசைத்திடுமாறு செய்து கேட்டுமகிழலாம் இது இசைக்கும்போது நம்முடைய கைபேசியின் மின்கலனின் மின்சாரம் காலியாகவிடுமோ என கவலைப்படவேண்டாம் மேலும் நம்முடைய கைபேசியில் வேறு ஏதேனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளும்போதுகூட பின்புலத்தில் இதனைசெயல்படச்செய்து இசையை கேட்டுகொண்டே நம்முடைய மற்ற பணிகளை செய்துகொள்ளலாம் இது நம்முடைய கைபேசி, திறன்பேசி, மடிக்கணினி ,மேஜைக்கணினி ஆகியஅனைத்திலும் செயல்படும் திறன்மிக்கது MPD-client, MPDroid போன்றவைகளின் வாயிலாக அல்லது இணையத்தின் வாயிலாக எங்கிருந்தும் செயல்படுத்தலாம் இது Wifi வசதியை ஆதரிக்கின்றது SD Card, USB, Network ஆகியவற்றின் வாயிலாக கூட இசையை செயல்படுத்தி கேட்டுமகிழலாம் இதனை செயல்படுத்துவதற்காக லினக்ஸ் கட்டளைவரி போன்று எதுவும் தேவையில்லை
இதனை கட்டமைவுசெய்வதற்கு நன்றாக செயல்படும் ராஸ்பெர்ரிபிஐ, குறைந்தபட்சம்1GB அளவுள்ள SD Card ஆயினும் 2GB+ இருந்தால் நல்லதுஎன பரிந்துரைக்கப்படுகின்றது , குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் போன்றவைகளின் சமீபத்தியபதிப்புகளைகொண்ட இணையஉலாவிகளுடனான திறன்பேசி அல்லது கணினி ,Spotify Premium, Google Music அல்லது SoundCloud கணக்கு ஆகியவைமட்டும் போதுமானவை யாகும் இதனை பயன்படுத்தி கொள்ளுமுன் https://github.com/pimusicbox/pimusicbox/releases/download/v0.7.0RC6/PiMusicBox.pdf எனும் இணையமுகவரிக்கு சென்று அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நன்கு ஐயம்திரிபற தெரிந்து கொள்க
முதலில் https://github.com/pimusicbox/pimusicbox/releases/tag/v0.7.0RC7 எனும் முகவரியிலிருந்து இந்த மென்பொருள்கட்டினை பதிவிறக்கம் செய்து கொள்கபின்னர் zip கோப்பில் தொகுத்து கட்டப்பட்டவைகளை வெளியிலெடுத்து Etcher SD card image எனும் பயன்பாட்டினை கொண்டு SD Card இல் வைத்திடுக அதன்பின்னர் இதனை ராஸ்பெர்ரி பிஐஇல் இணைத்திடுக தொடர்ந்து தேவையான கம்பிவழி இணைப்புகளை வழங்கிடுக அல்லது Wifi நிறுவுகை செய்திடுக இறுதியாக ராஸ்பெர்ரி பிஐ செயல்படச்செய்திடுக சிறிதுநேரம் காத்திருந்தபின்னர் தொடர்ந்து நம்முடைய இணையஉலாவியில் தேவையான இசையை தேடிபிடித்து இசைத்திடுக

Previous Older Entries