பெரியகோப்புகளையும் சுலபமாக பாண்டோஎனும் பயன்பாட்டின் மூலம் மின்னஞ்சலில் அனுப்பலாம்

பெரியகோப்புகளையும் சுலபமாக பாண்டோஎனும் பயன்பாட்டின் மூலம் மின்னஞ்சலில் அனுப்பலாம்

இணையச் சேவை வழங்குபவர்கள் நாம் அனுப்புகின்ற மின்னஞ்சலுடன் குறிப்பிட்ட அளவுள்ள ஃபைல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கின்றனர், இந்த சேவையாளர்கள் மூலம் இலக்கவகை படம் போன்ற பெரிய அளவுள்ள கோப்புகளை மின்னஞ்சலுடன் இணைப்பாக அனுப்ப முடியாது, அதற்கு பதிலாக குறுவட்டில் நகலெடுத்து அனுப்பி வைப்போம், மாற்று வழியாக பாண்டோ எனும் பயன்பாட்டு கருவி மூலம் மின்னஞ்சலுடன் இணைப்பாக பெரியகோப்புகளைகூட  மிகசுலபமாக அனுப்பமுடியும்  இவ்வாறாக அனுப்பப்படும் பெரிய கோப்புகள் பாண்டோ  சேவையாளரில் தேக்கிவைக்கப்படும் பெறவிரும்புவர்கள் இந்த இனையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்

www.pando.com http://www.pando.com/ என்ற வலைதளத்திற்கு சென்று அங்குள்ள  Get Pando Free link எனும் பொத்தானை சொடுக்குக,உடன் தோன்றும் அடுத்த திரையில் விண்டோவின் பதிப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதிசெய்துகொள்க,பின்னர் பச்சை வண்ணத்தில் உள்ள  Download Pando Now என்ற பொத்தானை சொடுக்குக,,உடன் திரையில் தோன்றும் விண்டாவினுடைய பாதுகாப்பு எச்சரிக்கை செய்திகளை தவிர்த்திடுங்கள் பதிவிறக்கமாகும கோப்பினைமேஜைத்திரையில் சேமித்திடுக,

இறக்குமதி பணி முடிந்ததும் Run எனும் பொத்தானை சொடுக்கி பாண்டோ வை நிறுவும் செயலை ஆரம்பிக்கவும் பின்னர்திரையில் தோன்றும் வித்தகரின் அறிவுரைக்கேற்ப செயல்பட்டு இயல்பு நிலைகளையும் அனுமதி ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்க,உடன் நிறுவும் பணி தானாகவே நடைபெற்று திரையில் இறுதி (முடிவு) நிலைக்கு வந்துசேரும்,உடன் finish என்ற பொத்தானை சொடுக்குக இவ்வாறு பாண்டோ  பயன்பாட்டு கருவி நிறுவிய ஓருசிலநொடிகளில்¢ 250 எம்பி போன்று பேரளவுகோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கு தயாராக உள்ளோம்,

இதன் திரையில் உள்ள send new என்ற பொத்தானை சொடுக்குக, இவ்வாறு கோப்புகலை மட்டுமல்லாது கோப்பகங்களையும் ஒன்றாக சேர்த்து அனுப்புவதற்காக முதலில் இதற்கு ஒரு பெயரை உள்ளீடு செய்ய வேண்டும் அதற்காக browse¢ என்ற பொத்தானை சொடுக்குக, உடன் தோன்றும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் இருக்கும் பொத்தான்களில் நாம்அனுப்பஇருப்பது ஒளியொலிகோப்பு என்பதால் videos என்பதை  சொடுக்குக ,பின்னர் நாம் அனுப்ப விரும்பும்  கோப்பின்பெயரை தெரிவுசெய்து சுட்டியால் பிடித்து இழுத்துவந்து வலதுபுற பலகத்தில் விடுக,

அதன்பின்னர் மின்னஞ்சல் அனுப்பவிருக்கும் நம்மடைய நண்பரின் முகவரியை மேல்வரியில் உள்ளீடுசெய்க, உடன் பாண்டோ ஆனது இந்த மின்னஞ்சல்கட்டிற்கு Tamilcomputer.wmv என்றவாறு ஒரு பெயரை தானாகவே ஒதுக்கீடுசெய்திருக்கும் மேலும்கோப்புகளை சேர்த்தால் இதே பெயரின்கீழ் சேமிக்கபட்டுவிடும், இந்த கோப்பினை பற்றிய சுருக்கமான செய்தியை subject என்ற பகுதியில் தட்டச்சுசெய்க,பின்னர் செய்தி சாலரத்தின் கீழ்உள்ள from link என்பதை சொடுக்கி நம்மடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,

முதன்முதல் பாண்டோ மூலம் செய்தியை அனுப்பஇருப்பதால் வழக்கமான இலவச மின்னஞ்சல் சேவைகளின்  சாலரத்தில் கேட்பது போன்ற பாதுகாப்பு குறியீடுகளை மிகச்சரியாக சிறிய அல்லதுபெரிய எழுத்துகளுடன் எண்களையும் எழுத்துகளையும் கலந்தார்போன்று தட்டச்சு செய்க, இந்த பாதுகாப்பு வளையம் மற்றவர்கள் தவறான வழிகளிலும் செயல்களிலும் நம்முடைய கோப்பை பயன்படுத்தாதவாறு தடுக்க உதவுகின்றது,பின்னர் ok பொத்தானை சொடுக்குக  உடன் பாண்டோ ஆனது கோப்புகளை  இணையத்தின் அகல்கற்றை வேகத்திற்கேற்றவாறு ஏற்றுமதிசெய்ய ஆரம்பிக்கும்,

ஆனால்  மின்னஞ்சல் மட்டும் சரியான முகவரிக்கு சென்று சேர்ந்துவிடும் இணைப்புகோப்பு இதன்சேவையாளரில் சென்று சேர்ந்திருக்கும் உடன் இந்த மின்னஞ்சல் செய்தியை பெறுபவர் இதனை திறந்து பார்த்தவுடன் மேல்பகுதியில் இருக்கும்இணைப்பு கோப்புகளின் இணைப்பை linkஐ தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த இணைப்பானது பாண்டோ  இணையதலத்திற்கு அழைத்து சென்றுவிடும் அங்கு நாம்முந்தைய படிமுறையில் செய்ததை அப்படியே பின்பற்றி பாண்டோவை பதிவிறக்கம்செய்து நிறுவிஇயக்கியவுடன் மின்னஞ்சலின் இணைப்புக்கோப்பை அங்கீகரித்து பதிவிறக்கம் செய்யஆரம்பித்துவிடும்,

இந்த பணிமுடிந்தவுடன் பாண்டோ சாளரத்தின் Open எனும் லேபிளுக்கு அடுத்தாக NEWஎன்ற குறியுடன் பச்சைவண்ணபொத்தாக அமர்ந்திருக்கும் இந்த லேபிள்கள் இவவாறு பெறப்பட்ட பலபெரிய கோப்பு ஒவ்வொன்றிற்கும் பிரித்தறிவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும்

வேறு எந்த இலவச மின்னஞ்சல் சேவைமூலமும்இவ்வாறான பெரிய பெரிய கோப்புகளை அனுப்பவும் பெறவும் முடியாதுஎன்பதை மனதில் கொள்ளுங்கள்,ஏராளமான கோப்புகளை ஒரேசமயத்தில் அனுப்புவதற்கு இந்த போண்டோ கட்டுகள்முறை பெரிதும் பயன்படுகின்றது,

நிறுவணங்களின் மிகப்பெரிய கணக்கப்பதிவியல் ஆவணங்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதாக கொள்வோம் இதற்கும் முன்பு சொன்னவாறே இந்த கோப்புகளின் கட்டிற்கு ஒருபெயரிட்டு மற்ற வழிமுறைகளைமேலேகூறியவாறு பின்பற்றிடவேண்டும்  மிகமுக்கியமாக நாம் மின்னஞ்சல் அனுப்பும் கோப்பினை  வேறுயாரும் பார்த்தறியாதவாறு இருக்கவேண்டுமெனில் இந்த கட்டுகளின் பெயருக்கு அருகிலிருக்கும் Padlock என்ற உருவகுறும்படத்தை  சொடுக்குக , உடன் கடவுச்சோற்களை உள்ளீடு செய்து பாதுகாப்பதற்கான உரையாடல்பெட்யை திரையில் தோன்றசெய்யும்

வழக்கம்போலவே இதில் கடவுச்சொற்களை உள்ளீடுசெய்திடுக,பின்னர் முதன்மை சாளரத்தின்வலதுபுறத்தில் உள்ள பாண்டோ வின் பெரிய உருவகுறும்படத்திற்கு அடுத்ததாகஇருக்கும் padlockஎன்பது இந்த கட்டுகளானது கடவுச்சொற்களின் பாதுகாப்புடன் இருப்பதாக சுட்டிகாட்டுகின்றது,send என்ற பொத்தானை சொடுக்குக உடன் பாண்டோவானது கோப்புகளை மேலேற்றிவிடும்,

பெறுபவருக்கு தொலைபேசிமூலம் கடவுச்சொற்களை அறிவிப்புசெய்து இதனை பதிவிறக்கம்செய்துகொள்ளும்படி கூறலாம் பெறும்இடத்தில் அவுட்லுக் எக்பிரஸ்மூலம் இதில் உள்ள தாளிணைப்பு உருவகுறும் படத்தை  சொடுக்கி இணைப்பு பட்டியிலில் கோப்பினை பதிவிறக்கம்செய்வதற்காக சொடுக்குக உடன் பாண்டோவானது எல்லாம் சரியாக இருக்கின்றது என்று அறிவிக்கும் பின்னர் open என்ற பொத்தானை சொடுக்குக உடன் பாண்டோவின்  பதிவிறக்கசாளரம் திறந்துகொண்டு கடவுச்சொர்களால்  பாதுகாக்கப்பட்ட கட்டுகளின் உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும் அதில் சரியான கடவுச்சொற்களை தவறின்றி தட்டச்சுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக உடன் பாண்டோ வானது தட்டச்சுசெய்தது பொருத்தமானசரியான கடவுச்சொற்கள்தானா என சரிபார்த்திடும் சரியானது எனில் கோப்பினை பதிவிறக்கம் செய்திடும்

இவ்வாறான பெரிய கோப்புகளை ஒன்றுக்குமேற்பட்டவர்களுக்கு அனுப்புவதாயின் பாண்டோவை இயக்கவும்பின்னர் தோன்றும் திரையில் உள்ள send newஎன்ற பொத்தானை சொடுக்குக,அதன்பின்னர் மேல்பகுதியின் To field –ல்நாம் அனுப்பவிரும்பும் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகள் ஒவ்வொன்றிற்கும் கால்புள்ளியிட்டு உள்ளீடுசெய்க,subject பகுதியில் சுருக்கமான செய்தியை தட்டச்சுசெய்து send என்ற பொத்தானை சொடுக்குக, உடன் மின்னஞ்சல் முகவரியிலில்குறிப்பிட்ட அனைவரும் இந்த கோப்பின் முன்னர் கூறியவாறு பதிவிறக்கம்செய்து திறந்து படிக்கலாம்

மற்றகருவிகள்  சாளரத்தில் இயல்புநிலையில் செயல்படுவதைபோன்று நினைவகத்தை குறைந்ததது 50எம்பி அளவிற்கு இதுஎடுத்துகொள்ளும், programm என்ற சாளரத்தை திறந்து வய்ப்புகள் (Options)எனும் கட்டளையை  சொடுக்குக பின்னர் myprofile என்பதை சொடுக்குக மேலும் பாண்டோ வானது தானாக இயங்குவதை தவிர்த்திட இந்த உரையாடல் பெட்டியின் வாய்ப்பிற்குஅடுத்துள்ள டிக்கை நீக்கிவிடுக,

விண்டோவிஸ்டாவின் வசதிகளை விண்டோ எக்ஸ்பியில் கொண்டுவரலாம்

விண்டோவிஸ்டாவின் வசதிகளை விண்டோ எக்ஸ்பியில் கொண்டுவரலாம்

விண்டோ விஸ்டாவானது புத்தம் புதிய பல்வேறு வசதிகளை .  இதனை விடுத்து எவரும் தப்பித்திடவே முடியாது என்ற நிலையில் வழங்குகிறது.  ஆனால் இந்த இயக்கமுறைமைக்கு ஏற்ப வன்பொருட்களை மேம்படுத்துவதற்காக மிகவும கூடுதலாக செலவிட  வேண்டியுள்ளது. அவ்வாறு கூடுதலாக என்னால் செலவிட முடியாது நடப்பில் இருக்கும் விண்டோ எக்ஸ்பியையே தாம் தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக ஒருவர் பிடிவாதம் பிடித்தால் பரவாயில்லை விஸ்டாவின அனைத்து வசதிகளையும்  கருவிகளையும் எக்ஸ்பியிலும் கொண்டுவரலாம்.

விஸ்டாவின் புதிய தோற்றம் கண்களை கவரும் வண்ணம் முந்தைய இயக்கமுறைமையிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது . இவ்வாறான திரையின் முகப்பு தோற்றத்தை வின்டோ எக்ஸ்பியில்  Transapps. என்பதை பயன்படுத்தி கொண்டுவரமுடியும். இதனை www.vasileios.gr/freesoft.com http://www.vasileios.gr/freesoft.com என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் தலைப்பு பக்கத்தில்உள்ள product link என்பதை சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையின் கீழ் பகுதிக்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று Transapps1.1 என்ற தலைப்பில் கீழ் உள்ள download link என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பியவாறு பதிவிறக்கம் ஆகியபின இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்க. பின்னர் தோன்றும் system tray என்ற உருவகுறும்படத்தை சொடுக்குக.  அதன்பின்னர் சாளரத்தின் இடது புறம் மேல் பகுதியில் உள்ள அம்புக்குறி(arrow) பொத்தானை சொடுக்குக உடன். Transapps ஐ தானாகவே விண்டோவுடன்Start group ஐ நிறுவுச்செய்யும் ,

முதன்மை சாலரத்தில்visible application என்ற பகுதியில் சாளரத்தில் இயங்ககூடிய அனைத்து பயன்பாடுகளின் பட்டியலை பிரிதிபலிக்கும் அவற்றில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க, அதன் பிறகு திரையின் கீழ் பகுதியில் உள்ள Level பகுதியில் உள்ள 0 என்ற பொத்தானை சொடுக்கினால் ஒளிஊடுருவும் அளவின்நிலை 0 வாக இருப்பதற்கு இந்த பொத்தானை சொடுக்குக.ஆயினும் இதனை செயல் படுத்தும் ,திரையின் தோற்றத்தில் மாற்றம் எதுவும் இந்நிலையில் ஆகாது,

அதற்கு பதிலாக 90 என்பதை தெரிவுசெய்தால் திரையின் தோற்றம் முழுவதும் 90 சதவிகித அளவிற்கு ஒளியூடுருவும் தன்மைக்கு மாறிவிடும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பயன்படும் Settingஐதெரிவு செய்க.  அதன்பிறகு மேலே வலதுபுறம் உள்ள start என்ற பொத்தான் உருவத்தை சொடுக்குக.  0-90 என்ற பொத்தானை பயன்படுத்தி செயல்பட்டையை பாதியளவிற்கு ஒளி ஊடுருவும் தன்மையில் மாற்றியமைத்திடுக, minimise  என்ற பொத்தானை சொடுக்கி Transapps ஐ மறைத்துவிடுக.

அடுத்து கையாளதக்க வசதியாக விஸ்டாவில் இருப்பது செயல் பட்டையின் தோற்றம் ஆகும். சுட்டியை  இந்த  பொத்தான்மீது. மேலூர்தல் செய்தால் ஒருமேல் மீட்பு காட்சியாக  குறிப்பிட்ட பொத்தானை பற்றிய விளக்கம் பிரதிபலிக்க செய்யவேண்டும். இதற்காக www.visualtasktips.com http://www.visualtasktips.com/ என்ற வலைதளத்தி லிருந்து visual task tools2.1 என்றகருவியை இலவசமாக இறக்குமதி செய்துகொள்க. இது விண்டோ எக்ஸ்பியில் விஸ்டாவின்  தோற்றத்தை கொண்டுவர உதவுகிறது.

வின்டோவின் Flip3D வசதியானது பழைய Alt ,Tab ஆகிய குறுக்குவழி விசையானது  விசைப்பலகையின்  தோற்றத்தை மட்டுமல்லாது. விண்டோவிற்கிடையே மாறும் செயலையும் வழங்குகிறது. செந்தர Alt ,Tab குறுக்குவழி விசையின் செயல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன,இது சுட்டிகாட்டுவதற்கேற்றவாறு காட்சியை பிரதிபலிக்க செய்கிறது . www.ntwind.com/software/taskswitchxp.html என்ற வலைதளத்திலிருந்துTaskswitchxp என்பதை பதிவிறக்கம் செய்து கொள்க. இது விண்டோ எக்ஸ்பியை போன்று மாறிகொள்ள அனுமதிக்கின்றது. பதிவிறக்க இணைப்பை சொடுக்கி நிறுவுவதற்கானஇணைப்பை தொடர்ந்து செயல்படுத்துக இவ்வாறு நிறுவிய பிறகு Alt மற்றும் Tab விசைகளை தட்டி பயன்பாடுகளுக்கிடையே மாறிக்கொள்க.  மிகப்பெரும் காட்சியாக நடப்பிலிருக்கும் தெரிவுசெய்யப்பட்ட விண்டோ பிரதிபலிக்கும். அவற்றில் உள்ளதை தெரிவு செய்து சொடுக்கினால் நேரடியாக குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு தாவி செல்ல முடியும்

வின்டாவிஸ்டாவில் இதனுடைய பக்கபட்டையானது வாடிக்கையாளர் விரும்பும் திரையை தெரிவுசெய்வதற்கு ஏற்றகருவிகளான Rss போன்றவைகளை சுலபமாக திரையில் கொண்டுவரச்செய்கின்றது. அதை போன்று விண்டோ எக்ஸ்பியில் www.desktopsidebar.com http://www.desktopsidebar.com/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவிக்கொண்டு திரையின் மேல் பகுதியில் உள்ள Side bar என்ற பொத்தானை சொடுக்குக பின்னா¢ Run this Programm When Windows Start என்ற லேபிள் உடைய தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்து கொள்க.

Appearance and droptown கட்டலைபட்டிக்கு சென்றுமேஜைக்கணினி பக்கபட்டையை skinஐபயன்படுத்தி நாம் விரும்பியவாறு மாற்றி யமைத்திடுக. குறிப்பிட்ட அளவு வாய்ப்பு மட்டுமே இதில் இருக்கும் மேலும் தேவையெனில் online-இல் download more skinsஎன்ற  பொத்தானை சொடுக்கி Add panel என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க இயல்பு நிலையுடன் மேலும் பல்வேறு பலகங்கள் இருக்கின்றன . இவைகளை பட்டயலிலிருந்து தெரிவு செய்து Add பொத்தானை சொடுக்கி பக்கபட்டையில் சேர்த்து கொள்க. More panel என்ற இணைப்பை சொடுக்கி மேஜைக்கணினி பக்கபட்டையின் இணையதளத்திற்கு சென்று ஏராளமாக இருக்கும் வாய்ப்புகளில் விருப்பத்திற்கு ஏற்ற வகைகளை வழிகாட்டுதலின் மூலம் dropdownஎன்ற பட்டியலிலிருந்து மிகசுலபமாக விரும்பியதை மட்டும் தெரிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்க.

பக்கபட்டை,பலகம் ஆகியவற்றின் வெளிப்புறஅமைவை பிடித்து இழுத்து சென்று  விடுகிற வசதி மூலம் தேவையான இடத்தில் மாற்றியமைத்து கொள்க பலகங்களை தனித்தனியாகவும் மாற்றியமைக்கமுடியும் சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியவுடன் தோன்றும் குறுக்கவழிபட்டியலில் பேனல் பிராப்பர்டி என்ற வாய்ப்பை தெரிவு செய்து அமைத்து கொள்ளலாம். இதில் உள்ள வாய்ப்புகள் ஒவ்வோரு பலகத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும் .

கோப்புகளைதேடும் வசதியை விண்டோ எக்ஸ்பியில் கொண்டுவருவதற்காக      www.microsoft.com/windows/desktopsearch/default.mspx என்ற வலைதளத்திற்குசென்று டவுன்லோடு என்ற பொத்தானை சொடுக்குக இது வன்தட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கோப்புகளின் பெயரை உள்வரும்பெட்டி மூலம் வா¤சைபடுத்துகின்றது. இந்த செயலிற்காக சிறிது நேரம் எடுத்துக கொள்ளும். இதனை விரைவுபடுத்த magnifying glass icon ஐ  இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக.பின்னர் தோன்றிடும் திரையில் Indexing status என்பதை தெரிவுசெய்க. அதன்பிறகு இந்த உரையாடல் பெட்டியிலுள்ள start என்ற பொத்தானை சொடுக்குக. உடன் விரியும் பட்டியலில்send என்ற பொத்தானை சொடுக்கியவுடன் விஸ்டாவின் பாவனையில் எக்ஸ்பியில் தேடுதலை செயல்படுத்துகிறது. வரையறையை குறிப்பிட்டும் தேடச் செய்யலாம் . விண்டோ எக்ஸ்பியின்  வழிமுறை வேண்டுமென்றால் click here to use search comapanion என்ற தொடர்பை சொடுக்குக. பாதுகாப்பு வளையத்தை www.microsoft.com என்ற வலைதளத்திற்கு சென்று spywareலிருந்து  பாதுகாப்பு செய்வதற்குதேவையான மென்பொருளை இலவசமாக இறக்குமதிசெய்து நிறுவிகொள்ளலாம்.

வன்தட்டு இயக்கத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் encription செய்து பாதுகாப்பு Bit  Locker உதவியால் பாதுகாக்கின்றது . ஆனால் இது விஸ்டாவில் மட்டுமே உள்ளது. Compu sec என்ற இலவச கருவியை www.ceinfosys.com.,sg<>   என்ற வலைதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து இதே வசதியைபெறலாம் வன்தட்டு குறுவட்டு  யூஎஸ்பி மட்டுமல்லாது கூடுதலாக கடவுச்சொல் பாதுகாப்பு வசதியை Boot செயலின்போதே வழங்குகிறது. கணினி இயங்க ஆரம்பிக்கும்போதே பயனாளரின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடுசெய்தால்  மட்டுமே கணினியை இயங்க செய்யும்  இல்லையெனில் இயங்க மறுத்துவிடும்.

எம்பி3,டிவிடி, தொலைகாட்சி போன்றவைகள் கணினியில் இயங்குவதற்கு தேவையான தனித்தனிபயன்பாடுகள் இல்லாமலேயே செயல்படுவதற்காக      www.team-mediaportal.com என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக mediaportal என்ற கருவியை பதிவிக்கம்செய்துநிறுவிக்கொள்க,டிவிடியை இயக்குவதற்கான  பயன்பாடு இருக்கின்றதா எனதேடிப்பார்த்திடுக இல்லையெனில்¢ MPEG-2 decorder என்பதை நிறுவிடுக,உடன் தோன்றும் திரையில் Media Portal Setup என்பதை தெரிவுசெய்துகொள்க பின்னர் next என்ற பொத்தானை சொடுக்கியவுடன் தோன்றும் வாய்ப்பினை தகவமைவுசெய்க next என்ற  பொத்தானை சொடுக்குக. உடன் பல்லூடக கோப்புகள் ஏதேனும்  இருக்கின்றதாவென தேடிப்பார்த்திடும்.இறுதியாக finish என்ற பொத்தானைசொடுக்குக,

சரியாக தகவமைவு செய்யப் பட்டிருந்தால் மட்டும்சுட்டி அல்லது விசைப்பலகை மூலம் அனுகமுடியும் தொலைகட்சியை மட்டும்  தனியாக அனுகமுடியாது இதற்காக wizardஎன்பதன் கட்டளை பட்டியலை சொடுக்குக .உடன் தோன்றிடும் திரையில் television என்பதை தெரிவுசெய்து.yesஎன்ற பொத்தானை சொடுக்குக. பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குக. அடிப்படைTV என்ற வாய்ப்பினை தெரிவு செய்க. next என்ற  பொத்தானை சொடுக்கி Tvcard என்பதை தெரிவு செய்க. finish என்ற பொத்தானை சொடுக்குக  மேல்மீட்பு பட்டியை பொத்தானை சொடுக்கி சொருகவதன் மூலம் பல்லூடக வாயிலை விரிவுபடுத்த முடியும்.

மேலேகண்ட வாய்ப்புகளை விண்டோ எக்ஸ்யில் நிறுவி விஸ்டாவில்  வசதிகளை பெற்றிடுக.

விஸ்டாவை நிறுவும்செயல் மிக எளிதானது மற்றும் சுலமானதும் கூட

விஸ்டாவை நிறுவும்செயல் மிக எளிதானது மற்றும் சுலமானதும் கூட

கணினியில் ஏதேனுமொரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும் செயலானது மிக சோம்பேறித்தனமான செயலாகும்,ஏனெனில்  இதனை நிறுவஆரம்பித்தவுடன் ஒருசெயலையும் செய்யாமல் கணினியின் முன்பு வெட்டியாக மணிக்கணக்கில் நாம் அமர்ந்திருக்கவேண்டும் ஆனால் திரையினை பார்த்துகொண்டேயிருந்து அவ்வப்போது பல்வேறு படிமுறைகளுக்குத்தேவையான உள்ளீடுகளை மட்டும் கொடுத்து கொண்டிருக்கவேண்டும், மேலும் ஒரிரு மணித்துளிகள் காத்திருந்து பல்வேறு சாதனங்களுக்கான இயக்ககங்களையும் நிறுவவேண்டியிருக்கும்,இவற்றை தொடர்ந்து இறுதியாக ஓரிரு மணிநேரம் செலவிட்டபின் விண்டோவினை நிகழ்நிலை செய்வதற்காக பதிவிறக்கம்செய்து நிறுவிடவேண்டும்,

இவ்வாறான மிகநீண்டசெயலை மிகசுலபமாக எளிதாக செய்யமுடியாதா?முடியும் பின்வரும் படிமுறைகளை பின்பற்றினால்,இதற்காக  விண்டோ விஸ்டாவின் டிவிடி,காலியான டிவிடி இணைய இணைப்பு,சிறிதுநேர காத்திருப்புமட்டும் போதுமானது,

உங்களுடைய வன்தட்டின் ஒருமடிப்பகத்தில் விஸ்டா டிவிடியின் முழுஉள்ளடக்கங்களையும் நகல்எடுத்துகொள்க,

படிமுறை1: www.wud.jcarle.com என்ற வலைதளத்திலிருந்து 350KB அளவுள்ள விண்டோவின் நிகழ்நிலை பதிவிறக்கியை(Update Downloader) பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்,இதே வலைதளத்தில் link update listsஎன்பதை சொடுக்குக,உடன்தோன்றும் பட்டியலில் விஸ்டாவின்  பதிப்பை x86அல்லது x64 என்றவாறு தெரிவுசெய்துகொள்க,

படிமுறை2:இப்போது விண்டோவின் நிகழ்நிலை பதிவிறக்கியை(Update Downloader) இயக்குக உடன்  தயாராக இருக்கும் விண்டோ விஸ்டாவின் நிகழ்நிலைபட்டியல் திரையில் பட்டியலிடப்படும்,இவையனைத்தையும்  புதிய நிறுவுகை ஒருங்கிணைப்பு செய்பவைகளையும் தெரிவுசெய்து ஒருமடிப்பகத்தில் பதிவிறக்கம்செய்து வைத்திடவும்

படிமுறை3:ஸ்டார்ட் பட்டியலிலிருந்துvLite என்பதை இயக்கதொடங்கவும்பின்னர் டிவிடி உள்ளடக்கத்தை எந்த மடிப்பகத்தில் நகலெடுக்கப்போகின்றோம் எனக்குறிப்பிடுக,

படிமுறை4:மேல்மீட்பாக தோன்றும் விண்டோ விஸ்டாவின் பதிப்புகளிலிருந்து ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக,பின்னர் ok என்ற பொத்தானை சொடுக்குக உடன் அடுத்த செயல்பலகத்திற்கு இடம்சுட்டியானது செலலும் அதில் enable before apply என்பதை தவிர்த்து அனைத்து செயல்களையும் தெரிவுசெய்து next என்ற பொத்தானை சொடுக்குக ,இது vLite-ற்கு டரைவர்களை ஒருங்கிணைப்புசெய்வதாகவும் நிகழ்நிலை செய்வதாகவும் கூறுகின்றது,

படிமுறை5:இந்த ஒருங்கிணைப்பு பகுதியானது  hotfixes, driversஆகியஇரு முக்கிய தாவிகளை கொண்டுள்ளது,enable என்ற பெட்டியை தெரிவுசெய்து hotfixesஐ இயலுமை(enable)செய்க,பின்னர் இந்த hotfixe ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விண்டோ நிகழ்நிலை பதிவிறக்கியை பயன்படுத்தி நிகழ்நிலை செய்துகொள்க,

படிமுறை6:அடுத்தாக driversஎன்ற தாவியினுடைய திரைக்கு செல்க,அதில் எந்தெந்த சாதணங்களின் இயக்ககம் ஒருங்கிணைக்கப் படவேண்டும் எனக் குறிப்பிடுக, உதாரணமாக கிராபிக் கார்டுகள் ,பிரிண்டர்கள் ,சவுண்டு கார்டுகள்,சிப்செட்டுகள் ,நெட்வொர்க் கார்டுகள்போன்றவைகள் விண்டோவை நிறுவிடும்போது ஒருங்கிணைக்கப் படவேண்டும் இந்த டிரைவர்களை வன்பொருளுடன் கொடுக்கப்பட்ட நிறுவுகை குறுவட்டு அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து கொள்தன் மூலம் தெரிவு செய்து கொள்க, nvidiaஃபோர்ஸ்வேர்அல்லது ATIகேட்டலிஸ்ட் ஆகியவற்றின் அமைப்பை ஒருங்கிணைப்பு செய்திடுவதர்காக இயக்கவும் இந்த இயக்ககத்தின் நிறுவும்செயலை இயக்க வேண்டாம், தப்பித் தவறி நிறுவும் செயலை செயல்படுத்தியிருந்தால் cancel என்ற பொத்தானை சொடுக்கி நிறுவிடும் செயலை நிறுத்திடுக, nvidiaஅல்லது ATIஆகியவற்றின் இயக்ககத்தை விண்டோவின் C: முதன்மை மடிப்பகத்தில் காணலாம் அடுத்தாக உறுப்புகளின் பகுதிக்கு செல்வதற்காக next என்ற பொத்தானை சொடுக்குக ,

படிமுறை7: இந்த பகுதி விண்டோ விஸ்டாவிற்கு தேவையற்ற உறுப்புகளை கட்டுப்பாட்டு  பலகத்தின் மூலம் நீக்கம் செயய அனுமதிக்கின்றது, உறுப்புகளனைத்தையும் accessories ,multimedia என்பது போன்றவாறு ஒன்பதுகுழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றது, இதனை தெரிவு செய்யுமுன்பு ஒத்தியங்கசெய்வதற்கான உரையாடல்பெட்டி மேல்மீட்பாக தோன்றும் அதனை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவேண்டும் அனைத்து வாய்ப்புகளையும் ஒத்திசைவுசெய்வதை ok என்ற பொத்தானை சொடுக்கி ஏற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது,

படிமுறை8: ஒவ்வொரு வகை உறுப்புகளையும் விரிவாக்கம் செய்து அவற்றில் எவையெவை தேவையற்றது என சரிபார்த்திடவும்,சந்தேகமாக இருக்கும் உறுப்புகளின் மீது இடம்சுட்டியை மேலூர்தல் செய்து அவற்றை பற்றிய விளக்கம் திரையின் வலதுபுறத்தில் தோன்றுமாறு செய்து பின்னர் படித்தறிந்து கொள்க welcome ,center ,games ,media center போன்றவைகளை பாதுகாப்பாக நீக்கம் செய்து ஒரிரு கிகாபைட் காலிநினைவக இடத்தை பெற்றிடுக,எதிர்காலத்தில் பயன்படுத்தப்போகின்ற உறுப்புகள் எதனையும் நீக்கம் செய்திடவேண்டாம்,

படிமுறை9: விண்டோவை நிறுவுகை செயலை ஒத்திசைவு செய்வதற்கேற்றவாறுஉள்ள  சில வாய்ப்புகளை இயலுமை அல்லது முடக்கம் செய்து ஒத்தியைவு செய்வதை அனுமதிக்கின்றது உதாரணமாக ,user account control என்பதை முடக்கம் செய்திருந்தால் ஒவ்வொரு முறையும் ஒருசெயலை செய்யம்போது மேல்மீட்பு உரையாடல் பெட்டி தோன்றி நம்மை இம்சைபடுத்திடும் மடிக்கணினி வைத்திருந்தால் அதில் பவர்ஸ்கீம் என்பது இயல்புநிலையில் அமைக்கப்பட்டிருந்தால் மின்சாரம் இல்லாத போது கூட தொடர்ந்து பேட்டரியின் மின்சாரத்தை வைத்து மடிக்கணினியை இயக்கமுடியும், எக்ஸ்புளோரர் பகுதியில் மறைக்கப்பட்ட கோப்புகள் மடிப்பகங்களை இயலுமை அல்லது முடக்கம் செய்யமுடியும் மற்றும் கட்டுப்பாட்டு பலகத்தின் காட்சியை கிளாஸிக் வசையாக மாற்றியமைத்திட முடியும்,

படிமுறை10: இறுதியாக பயன்பாடானது தானாகவே நிறுவிடுமாறு செய்யமுடியும் இதில் உள்ள general டேபில் புரொடக்ட் கீயை குறிப்பிட்டு தானாகவே விஸ்டாவை நிறுவிட அதன் பதிப்பை தெரிவுசெய்து தகவமைவு செய்க,EULA ஏற்றுக்கொள்வது,பின்னர் file name ,organization  ,computer name போன்றவற்றை அந்தந்த பகுதியில் நிறுவிடும்போது குறிப்பிடுவதற்காக உள்ளீடு செய்திடுக, regionalதாவியில் எந்த நாடு ,அதன் நாணயம் ,நேரம் ,விசைப்பலகையிந்அமைப்பு , என்பதுபோன்ற விவரங்களை குறிப்பிடுக,

படிமுறை11: இவையனைத்தும் செய்த பின்னர் apply என்ற பொத்தானை சொடுக்குக ,பின்னர் அப்ளை மெத்தடு என்ற உரையாடல் பெட்டியிலிருந்து just apply the change என்ற வாய்ப்பினை தெரிவு செய்திடுக, நாம் நிறுவவிரும்பும் பதிப்பினைத்தவிர மற்ற விஸ்டாவின் பதிப்புகளை ctrlஎன்ற பொத்தானை அழுத்தி பிடித்துக்கொண்டுஅதன் பட்டியிலிருந்து நீக்கம் செய்திடுக,vLite என்பது இப்போது நிறுவுவதற்கு தயாராக இருக்கின்றதுஅதற்குமுன் ISO என்ற பகுதிக்கு செல்க,

படிமுறை12: ISO என்ற பகுதியில் vLite என்பதன் இடைமுகத்தின் மூலம் மாறுதல் செய்யப்பட்ட நிறுவுகையை டிவிடியில் நேரடியாக பதிவுசெய்திட ஐந்து நிமிட நேரத்தில் burn செய்வதற்கான ISO என்ற என்ற இமேஜை உருவாக்குகின்றது,

படிமுறை13: ISOஎன்பதன் இமேஜை காலியான டிவிடியில் பதிவுசெய்திட நீரோ பார்னிங் ROM ஐ பயன்படுத்தி கொள்கின்றது,அதில் recorder/burn image என்ற நீரோவின் பகுதிக்கு சென்று vLite பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ISO இமேஜை குறிப்பிடுக, டிவிடி ரைட்டரில் காலியான டிவிடியை உள்ளே வைத்திடுக, பார்ன் என்ற பொத்தானை சொடுக்கி  நிறுவுகை குறுவட்டை உருவாக்கிடுக

படிமுறை14:இந்த நிறுவுகை குறுவட்டின் உதவியுடன் மிக எளிதாக விரைவாக உங்களின் இடைமுகம் இல்லாமலேயே விண்டோ விஸ்டாவை எந்த கணினியிலும் நிறுவிடமுடியும்

நிவிடியாவின் பதிப்பாளரை பற்றி தெரிந்துகொள்வோம்

நிவிடியாவின் பதிப்பாளரை பற்றி தெரிந்துகொள்வோம்

NIBItor  என்பது நிவிடியாவின் பயாஸ் பதிப்பாளர்ஆகும் இது நிவிடியாவின் பயாஸை பதிப்பிக்க பயன்படுகின்றது, இதனை  www.softpedia.com/get/tweak/nvidia-bios-editor.shtml ,   http://www.softpedia.com/get/tweak/nvidia-bios-editor.shtml என்ற வலைதளத்திலிருந்து இலவசமாக இறக்குமதிசெய்து பயன்படுத்திகொள்ளலாம்,

எச்சரிக்கை அனுபவமற்றவர்கள் பயாஸைமாறுதல் செய்வது மிக ஆபத்தான செயலாகும் இதனால் ஒருசிலசமயத்தில் நிவிடியாவின் அட்டையே வீணாக்கப்பட்டு இழுக்கநேரிடலாம்

முதலில் பயாஸ் அட்டையை திரையில் பிரிதிபலிக்கச்செய்யவேண்டும்  அதற்காக பயாஸ்செட்டிங் திரையில் உள்ள Tools=> Reed Bios => select devise என்றவாறு கட்டலைகளை தெரிவுசெய்து கொள்க, உடன் தோன்றும் திரையில்  நிவிடியா ஃப்ளாஷ்அட்டையை தெரிவுசெய்க,பின்னர் ok என்ற பொத்தானை சொடுக்குக,

அதன்பின்னர் Tools => Reed Bios => Reed into NIBITor என்றவாறு தெரிவுசெய்து frmare ஐ நினைவகத்தில் ஏற்றிக்கொள்க, பின்னர் தோன்றும் திரையில் Reed into file என்பதை சொடுக்குக ,இது Rom ஐfileஆக சேமிக்கும் இவ்வாறு சேமிப்பதற்கான இடத்தை தெரிவுசெய்து save என்ற பொத்தானை சொடுக்குக,

அதன்பின்னர் file=>open  Rom என்றவாறு தெரிவுசெய்து Rom  ஐ நினைவகத்தில் ஏற்றி திறந்துகொள்க,இதேபோன்று ஏற்கனவே சேமித்த கோப்பினைஅல்லது பதிவிறக்கம்செய்த கோப்பான firm wareஐ நினைவகத்தில் ஏற்றுக,

தேவையான மாறுதல்கள் செய்துமுடித்தபிறகு file => save Bios என்றவாறு தெரிவுசெய்து  சேமிப்பதற்கான இடத்தை குறிப்பிட்டு save என்ற பொத்தானைடுக்குக,

முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டவாறு இயக்க அட்டை கணினியை இயங்கச்செய்யும் இவ்வாறான இயக்கம் 3D,2D,throttle ஆகிய மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கும்

நாம் பயாஸை மாற்றியமைப்பதால் ப்ரோகோப்பில் இருக்கும் இயல்புநிலைக்கு பதிலாக நாம் தெரிவுசெய்யும் கடிகார வேகத்தையே எடுத்து செயற்படுத்தும்,

இதன்முதல்படியாக ஏற்கனவே உங்களுடைய கணினியானது அதிவேககடிகார இயக்கத்தில்  இயங்கி வெப்பம் அதிகமாகவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள் ,

எச்சரிக்கை அதிவேககடிகார இயக்கத்தின் அதிவேக செயல்பாடு உங்களுடைய அட்டையையே வீணாக்கிவிடும்,

extra field பகுதியில் மிகச்சரியான பொருத்தமான வேகத்தை தெரிவுசெய்க, அதிவேககடிகார இயக்கத்தின்  வேகத்தை கட்டுபடுத்தவதற்காக www.guru3d.com/rivutuner http://www.guru3d.com/rivutuner என்ற வலைதளத்திலிருந்து rivutunerஎன்ற கருவியும்  www.entechtaiwan.com/util/ps.shun http://www.entechtaiwan.com/util/ps.shun>   என்ற வலைதளத்திலிருந்து power strip என்ற கரவியும் பயன்படுகின்றன,இந்த கருவிகளை பதிவிறக்கம்செய்து செயலகம் மிகவேகமாகவும் இல்லாமல் idle ஆகவும் இல்லாமல் போதுமான அளவிற்க மிகச்சரியான வேகத்தில் இயங்கும்படிசெய்து அதிகம் வெப்பமடையாமல் இருக்குமாறு பயன்படுத்திகொள்க,

திரையில் டெம்ப்ரேச்சர் தாவியின் கீழ் இருக்கும்வாய்ப்புகளை பயன்படுத்தி வெப்பத்தையும் மிககக்குறைந்த அளவேயிருக்கும்படி கட்டுபடுத்திகொள்க,

ப்ரோஃபைல் வேகம் ஆகிய இரண்டைமட்டும் இங்கு பார்த்துவருகின்றோம், ப்ரோஃபைலுக்கேற்றவாறு NIBItor ஆனது மின்விசிறியின்   இயக்கவேகத்தை மாற்றியமைக்கின்றது, சாளரத்தின் வலதுபுறத்தில் 3d,2d,throttle ஆகிய மூன்று அளவுகளில் கடிகார வேகம் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம் மின்விசிறியின் அதிகபட்ச வேகத்தின் மதிப்பை சதவிகிதத்தில் உள்ளீடுசெய்து ஒரேசீராக இயங்கும்படிசெய்க அதனால் கணினியாநது மிக அமைதியாக இயங்கும் மெதுவாக மின்விசிறி இயங்கும்படி செய்யவேண்டாம்  இதனால் Gpu பகுதி மிக விரைவில் வெப்பம் அடைந்துவிடும்,

NIBItor இன் டெம்ப்ரேச்சர் தாவியில் அதிகபட்ச வாய்ப்புகள் அட்டையின் விசைக்கேற்ப தயாராக இருக்கின்றது, முடிவாக இந்த அட்டையில் அதிகபட்ச  வெப்பநிலை கட்டுபடுத்துதல் பகுதி இருப்பதை காணலாம் ஆரம்பநிலை அட்டையில் இந்த வசதிஇல்லை பாயஸைமாறுதல் செய்வதால் இந்த வாய்ப்பினை இயலுமை செய்யப்படுகின்றது,டெம்ப்ரேச்சர் தாவியை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்¢ enable 6600GT temperature monitor trick என்ற செய்தி திரையில் தெரிகின்றதாவென சரிபார்க்கவும் வெப்பநிலையை கண்காணிக்கவேண்டாம் என எண்ணிடும்போது disable temperature monitoring என்ற வாய்ப்பு தெரிவுசெய்ப்பபட்டுள்ளதாவென சரிபார்த்திடவும்

ப்ராசஸர்-8085

ப்ராசஸர்-8085

மின்னனு(Electronic) கல்விபயிலுபவர்கள் ப்ராசஸர்8085 என்பதற்கான அடிப்படை நிரல்தொடரை பற்றி கற்பது மிகஅவசியமாகும் மேலும் இதுஅதிக ஈடுபாடுள்ள ஆர்வத்தை தூண்டுகின்ற பாடமாகும், Gnusim8085 என்றநிரல்தொடரானது லினக்ஸ்க்காக எழுதப்பட்டுள்ளது

பொதுவாக சில்லு(Assembly) மொழிஎன்பது கணினியில் கீழ்மட்டநிலைக்கே (வன்பொருளை-(hardware) சார்ந்த)உரியதாகும்

2,சில்லுமொழிபெயர்ப்பி(Assembler) எனப்படும் பயன்பாட்டு மென்பொருள் இந்த கீழ்மட்ட நிலைக்கே உரியதான சில்லு(Assembly) மொழியை கணினிக்கு புரியும் இருநிலை குறியீடாக மொழிமாற்றம் செய்யப் பயன்படுகின்றது,

3,mnemonicஎன்பது sub=substraction ,add = addition,div=division , mult=multiply என்றவாறு ஒன்று முதல் ஐந்துவரையுள்ள எழுத்துகளின சுருக்கு குறியீடுகளாகும்

Gnusim8085 என்பதை வைத்து20h, 30hஆகியவற்றிற்கான கூடுதலை காண்பதற்காக பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி கொள்ளப்போகின்றோம்

Mvi a, 20h; load register a ( accumulator)

; with data byte 20h

Mvi  b, 30h; load register b with data byte 30h

Add b; add with carry, the contents of

;register b with accumulator contents

, hlt=> stop

படிமுறை 1 Gnusim8085 ஒருபயன்பாட்டுநிரல்தொடரை ஸ்டார்ட் எனும் பட்டியலிலிருந்து அல்லது கட்டளை வரியில் Gnusim8085 என தட்டச்சுசெய்து இயக்கவும்

உடன் தோன்றும் திரையில் இடதுபுறம் கீபேடு எனும் தாவியை8085mnemonicsஎன காண்பிப்பதற்காக அதனை சொடுக்குக,உடன் வலதுபுறபலகத்தில் A,B,C,D,E,H,L,PSW(program status word),PC(Program counter),SP(stack pointer) ஆகிய பதிவேடுகளையும் அதன் உள்ளடக்கங்களையும் காண்பிக்கும்

decimal <==> hex என்றவாறு உருமாற்ற புலம் ஒன்றில் எண்களை தட்டச்சுசெய்து மற்றொன்றில் பொத்தானைத் தட்டினால் உருமாற்றம் செய்யப்பட்டு பிரிதிபலிக்கும்,வாயில்களின் மதிப்பு , நினைவக பட்டன்கள் ஆகியவற்றில் தேவையானதை  சொடுக்கி நிகழ்நிலை செய்துகொள்க,நிரல்தொடரை உள்ளீடு செய்யவேண்டியது மையப்பகுதியாகும் இதில் எந்தவொரு கட்டளைவரியையும் அதன் ஆரம்பித்தில் அரைப்புள்ளியிட்டு உள்ளீடு செய்ய ஆரம்பிக்கவேண்டும்

இரண்டாவது வரியை நிரல்தொடர் பெட்டியில் உள்ளீடுசெய்க, வரிஆறு தரவுகளின் விவரமாகும்,அதனால் அடுத்து உள்ளீடுசெய்யும் பணியை வரிஎண்ஏழிலிருந்து ஆரம்பிக்கவும்,வரிஎண் பதினொன்று எப்போதும் கட்டளை வரியாகும்,வரிஎண் பன்னிரண்டிலிருந்து நம்மடைய நிரல்தொடரின் கட்டளை வரியை ஆரம்பிக்கவும்

படிமுறை2, 12ஆவது வரியை சொடுக்கி MVI என்ற பொத்தானை சொடுக்குக, உடன் தோன்றும் சாளரத்திலுள்ள கீழிறங்கு பெட்டியில் Aஎன்பதை தெரிவுசெய்து  Okபொத்தானை சொடுக்குக,உடன்தோன்றும் அடுத்த சாளரத்தில் enter symobol என்ற புலத்தில் 2oh என தட்டச்சுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக,

உடன் 12ஆவது கட்டளை வரியில் MVI  a, 20h என பிரிதிபலிக்கும் அல்லது நேரடியாக 12ஆவது வரியில் MVI  a, 20hதட்டச்சுசெய்துகொள்க,

படிமுறை 3,படிமுறை 2ஐபின்பற்றி MVI,b,30h என்பதை உள்ளீடுசெய்க,

படிமுறை 4, 14ஆவது வரியில் add b எனதட்டச்சு செய்க,

படிமுறை 5, பின்னர் hlt என தட்டச்சு செய்க,

படிமுறை6 Assembler=> Execute என்றவாறு செயற்படுத்துக, சரியாக இருந்தால் மட்டும் இதன் சரியான இறுதிவிடை 50h எனக்கிடைக்கும் தவறாக இருந்தால்  பிழைச்செய்தி கீழ்ப்பகுதியில் பிரிதிபலிக்கு¢ம்

பதிவேடுகளின் பகுதியில் பதிவேட்டையும் ஏதேனும் அடையாளத்திற்கு உதவிபுரியும் அமைப்பையும் காண்பிக்கும்,வலதுபுற பலகத்தில் டேட் என்றதாவியின் வெளியீட்டுப் பகுதியில் ஏதேனும் வாயில்கள் வழியாக அனுப்புவதாயின் அது திரையில் காட்சியாக பிரிதிபலிக்கும், இதனையும் இதற்கான நிரல்தொடரையும் தேவையானால் அச்சுபொறியில் அச்சிட்டு பெறலாம்

இவ்வாறு சிப்புமொழிபெயர்ப்பி நிரல்தொடரின் அடிப்படைகருத்தைமைவை பயன்படுத்தி gnusim8085 source for new போன்றவைகளை செயல்படுத்தி கொள்ளலாம்

கம்பியில்லா இணைப்பு

கம்பியில்லா இணைப்பு

இன்று ஏராளமான அளவில் வெவ்வேறு வகையான செந்தரத்தில் கம்பியில்லா பிணையம் இருப்பதால் இவற்றில் எதனை தேர்ந்தெடுப்பது எதனை விடுவது என்பதே குழப்பமிகுந்த செயலாகும், ஆயினும் பெரும்பாலானவர்கள் wifi என்பதையே அங்கீகரித்துள்ளனர், தரவுகளின் பிணையத்தில் 802.11 என்பது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது,இதில் 802.11b,என்பது மிகப் பழமை யானதாகும் இதன் தரவு பரிமாற்று வேகம்11 mbits/sec, ஆகும், 802.11a,என்பதன் தரவு பரிமாற்று வேகம் 54mbits /sec ஆகும்,ஆனால் இதற்கான வன்பொருட்களை வாங்கவேண்டிய செலவு மிககூடுதலாகும்மேலும் மற்ற செந்தரத்துடன் இது ஒத்துபோகாது, மிகவும் பிரபலமானது 802.11g,என்பதே இதன் தரவு பரிமாற்று வேகம்54mbits/secஆகும், மேலும் இது முந்தைய செந்தரத்தை மட்டு மல்லாது மற்ற செந்தரங்களுடன் ஒத்துபோகும் தன்மையுடையது அதனால் பெரும்பாலானவாகளின் விருப்பத் தேர்வாக இது அமைந்திருக்கின்றது,

சமீபத்தில் புதியதாக 802.11 என்பதை அறிமுகப்படுத்தியுள்ளனர்,இதன் தரவு பரிமாற்றுவேகம் 54mbits /sec ஆகும்,மற்ற செந்தரத்துடன் ஒத்துபோகாத தன்மையே இதன் மிகப்பெரிய குறைபாடாகும் ஆனாலும் இந்த குறையை விரைவில் சரிசெய்து வெளியிடவிருக்கின்றனர்,

இதுபோன்ற பிரச்சினை நமக்கெதற்கு என்பவர்கள் வழிசெலுத்தி (rooter) , ஏற்பி(Adapter) ,அனுகும்புள்ளி(Access point) ஆகியவற்றின் உறுப்புகளை ஒரேமாதிரியான கம்பியில்லா செந்தரத்தில் இருக்கின்றதாவென்றும் ஒரே உற்பத்தியாளருடைய பொருட்களாவென்றும் உறுதிசெய்துகொள்க, கம்பியில்லா வழிசெலுத்தி ஒரு உற்பத்தியாளருடையதாகவும் கம்பியில்லா ஏற்பி வேறுஒரு உற்பத்தியாளருடையதாகவும் இருக்கும்போது இவைகள் ஒன்றுக்குஒன்று ஒத்துபணிபுரியும் என்ற உத்திரவாதம் எதுவும் தரமுடியாது,அதனால் இவைகள் அனைத்தையும் ஒரே உற்பத்தியாளருடையதாக இருக்குமாறு பார்த்து வாங்கிகொள்ளுங்கள், மேலும் இவைகளை அவ்வப்போது புத்தாக்கம் செய்துகொள்ளுங்கள்,அதனால் நல்லதரத்துடனும் பிரச்சினை ஏதுமின்றியும் இவை பணிபுரியும்,

பிணையத்திலின் அடிப்படை அமைப்பு

கம்பி இணைப்பிற்கு பதிலாக வானொலி அலைகளை தரவுகளை கடத்துவதற்கு பயன்படுத்தி கொண்டாலும் இவை செயல்படும் அடிப்படைத்தன்மை ஒன்றுதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்., பிணையத்திலில் தரவானது பல்வேறு வாயில்களின் (port )வழியாக பயனிக்கின்றது.,ஒருபிணையத்தில் ஒன்றுக்குமேற்பட்ட கணினிகள் அல்லது சாதணங்கள் இணைக்கப்பட்டிருப்பின் வழிசெலுத்தியானது தரவுகளை ஒழுங்குபடுத்தி கணினிகள் கேட்டுக்கொண்டவாறு அனுப்பிவைக்கின்றது,

இவ்வாறு அனுப்பிவைக்கும்போது இவைகள் சென்றறைடய வேண்டிய இயக்ககத்தின் முகவரி Ip address ஒரே மாதிரியாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதா வென உறுதி செய்து கொள்ளப்படவேண்டும் வழிசெலுத்தியானது இவைகளுக்கிடையே போக்குவரத்தை தடங்களின்றியும் குழப்பேமிதுமில்லாமல் செயல்படுமாறு பார்த்து கொள்கின்றது,ஒவ்வொரு சாதனம் அல்லது கணினிக்கும் ஒரு Ip முகவரி ஒதுக்கீடுசெய்யப்பட்டு மிகச்சரியான வழிசெலுத்தி மூலம் இணையம் அல்லது வளாகபிணைய இணைப்புடன் (Lan) இணைக்கப் படுகின்றது,

இந்த சாதனங்களை அல்லது கணினிகளை தனிப்பட்ட வகையில் தகவமைவு (Configuration)  செய்யத்தேவையில்லை, ஆனால் பிரச்சினை ஏதும் எழும்போது சம்மபந்தப்பட்ட அமைப்புகளை மட்டும் சரிபார்த்தால் போதும், கணினியில்  விண்டோ எக்ஸ்பியின் கட்டுப்பாட்டு பலகத்தை Start என்ற கட்டளைமூலம் திறந்துகொண்டு அதில் உள்ள Networkஎன்ற உருவத்தை இடம்சுட்டியால் தெரிவு செய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக,உடன்திரையில் விரியும் குறுக்குப்பட்டியில் Properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் தோன்றும் Network Properties  என்ற உரையாடல் பெட்டியில் obtain an IP address automatically என்ற வாய்ப்பு தெரிவு செய்யப் பட்டுள்ளதாவென உறுதிசெய்து கொள்க, தெரிவுசெய்யாத மற்றவாய்ப்புகள் சாம்பல் நிறத்தில் மாசியதை போன்று தோன்றும்

படம்-1

பின்னர் use the following Ip address என்பதை தெரிவுசெய்து இந்த  Ip முகவரி வேறு எதற்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்க, இந்த  Ip முகவரியானது ஒவ்வொரு வழிசெலுத்திக்கும் ஏற்றவாறு மாறுபடும் உதாரணமாக 192.168.0.1 . 192.168.0.2 ,192.168.0.3 என்றவாறு  ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும், இதில் கடைசிஎண்கள் மட்டும் வழிசெலுத்திக்கு ஏற்றவாறு மாறுபட்டு இருக்கும் துனைப்பிணையத்தில் (sub network) குறிப்பிட்ட புலத்திற்கு தானாகவே  எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவென உறுதிசெய்து கொள்க,இதுவே நுழைவு வாயில் புலமாகும்

Preferred DNS server புலத்திற்கு முன்பு ஒதுக்கீடு செய்த ஐபி முகவரியை உள்ளீடுசெய்க வழிசெலுத்தியானது இயல்புநிலை முகவரியால் வழிசெலுத்தி யினுடைய பட்டியலில் குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்டிருக்கும்

(படம்-2)

விண்டோ எக்ஸ்பியானது wireless zero configure சேவை மூலம் தயார் நிலை இணைப்பை கட்டுபடுத்துகின்றது  எது எவ்வாறாயினும் கம்பியில்லா இணைப்புடன் வரும் wifi ஆனது இதனை பார்த்துகொள்ளும் அதனால் கம்பியில்லாஇணைப்பிற்கான அட்டையுடன் வரும் மென்பொருளை  சமீபத்திய பதிப்புதானாவென உறுதிசெய்துகொள்க, அல்லது இதன் உற்பத்தியாளரின் இணையதளத்திற்கு சென்று புத்தாக்கம் செய்துகொள்ளுங்கள், சாளர கட்டுப்பாட்டினை பயன்படுத்துமுன் கூடுதல் இணைப்புமென்பொருள் எதுவும் நிறுவப்பட்டுள்ளதா என்றும் சரியான இயக்ககமாக இருக்கின்றதா என சரிபார்த்துகொள்க,விண்டோ எக்ஸ்பிக்கு மாற்றாக பிணையஇணைப்பு அட்டை  இருக்கின்றதா என்றும்  சரிபார்த்துகொள்க,அதற்காக start=> Run => services .msn என தட்டச்சுசெய்து உள்ளீட்டுவிசையை தட்டுக,உடன் (படம்-2)தோன்றும் services என்ற உரையாடல்பெட்டியின் கீழே உள்ள wireless zero configuration என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் (படம்-2)தோன்றும் wireless zero configuration properties(localcomputer) என்ற உரையாடல்பெட்டியில் start typeஐ Automaticஎன அமைத்திடுக,

Services இந்த சேவை இயங்கிகொடிருக்கவில்லையெனில் Startஎன்ற  பொத்தானை சொடுக்கி இதனை செயலுக்கு கொண்டு வருக,

பொதுவாக சைகை (Signal) சரியாக கிடைக்கவில்லை என்பதே கம்பியில்லாஇணைப்பில் பெரும்பிரச்சினையாகும் மிக நல்ல இணைப்பில் ஒருசில இடங்களில் போதுமான அளவிற்கு சைகை(signal) கிடைக்கவில்லை என்ற புகார் எப்போதும் வந்துகொண்டேயிருக்கும்,இவ்வாறான பிரச்சினை கம்பியில்லாஇணைப்பின் சைகையை(signal) எல்லை ,சைகை(signal)யை தடுக்கும் அமைப்பு ஆகிய இரண்டு அடிப்படை காரணிகளால் ஏற்படுகின்றது ஒரு வளாகத்திற்குள்ளாக இணைப்பு எனில் எல்லாஇடத்தையும் இணைக்கக்கூடிய ஒரு மைய இடத்தில் வழிசெலுத்தியை அமைத்து இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்

ஒரேவளாகத்தினுள் உள்ள இணைப்பில் சைகை(signal)யானது சுவர் , வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றின் வழியாக பயனித்து இறுதியாக குறிப்பிட்ட சாதனம் அல்லது கணினியை அடைய வேண்டியுள்ளது இந்நிலையில் சுவரானது சைகை(signal)யின் பயனவேகத்தை குறைக்கின்றது அல்லது சைகை(signal)யினை திசைதிருப்புகின்றது, .வீட்டுஉபயோக பொருட்களானது சைகை(signal)யை கபளீகரம் செய்துவிடுகின்றது இதனை தவிர்க்கும்பொருட்டு இப்போது மாற்று வழியாக வானூர்தி (Airial) விரிவாக்க மின்காந்கஅலைவாங்கி (Antenna)யை அமைத்து பயன்படுத்தப்படுகின்றது

இவ்வகையில் மின்காந்கஅலைவாங்கி (Antenna)யின் திசையை சரிசெய்து மிகச்சரியான நல்லநிலையில் சைகை(signal) கிடைக்கும்படி  செய்யப்படுகின்றது

கம்பியில்லா இணைப்பு என்பதால் நம்முடைய ஐபி முகவரி தெரிந்தவர்கள் நம்முடைய இணைப்பிற்குள் புக வாய்ப்புள்ளது,இதனை தவிர்க்க webஅல்லது wpa பயன்படுத்தி தரவுகளை மறைவாக்கம் செய்துகொள்வது நல்லது,இது கம்பியில்லாபிணைய பொருட்களுடன் வழங்கப்படுகின்றது, கடவுச்சொல்லை பயன்படுத்தியும் தரவுகளை பாதுகாத்துகொள்ளலாம்

media access control address filing வழிமுறையை பின்பற்றுவது மிக பாதுகாப்பான செயலாகும்இதன்மூலம் ஒவ்வொரு வழிசெலுத்தி, ,ஏற்பி ஆகியவற்றின் இணைப்பிற்காக ஒதுக்கப்படும்  குறிப்பிட்ட குறியீட்டின் மூலமாகமட்டுமே குறிப்பிட்ட கம்பியில்லாபிணையத்தை  அனுகமுடியும் என்று அமைப்பது மிகபாதுகாப்பான வழிமுறையாகும்,

start=> Run என்றவாறு தெரிவுசெய்கபின்னர்  CMD என தட்டச்சுசெய்துOk என்ற பொத்தானை சொடுக்குக ,பின்னர் “Ip configuaration”என தட்டச்சுசெய்துOk என்ற பொத்தானை சொடுக்குக

அதன்பின்னர் mac addressஐ கணினியில் சேர்த்திடுக, இது வன்பொருளிலும் சமீபத்திய இயக்கிகளிdriverலும் பயன்படுத்தப் படுவதுமிக முக்கிய செயலாகும் இதனால் மற்றசாதணங்களுடன் ஒத்துபோகும் தன்மையுடனும் தகராறு ஏதுமில்லாமலும் செயல்படுகின்றது ,முன்கூட்டியே கட்டப்பட்ட நெருப்புச் சுவருடனே (Firewall)நல்ல தரமான வன்பொருட்கள் வழங்குபடுகின்றது,

இவைகள் தானாகவே  வளங்களை திரட்டுவதற்கு வசதியாக முதலில் port forwarding என்பதை தகவமைப்பு செய்யப்படுகின்றது,அதன்பின்னர் இணைப்பை அனுமதிக்கின்றது,இதில் பிரச்சினை ஏதேனுமிருந்தால் www.portforarding.com http://www.portforarding.com/ என்ற வலைதளத்திற்கு சென்று சரிசெய்து கொள்ளலாம்,

பெரும்பாலான கம்பியில்லாஇணைப்பின்  பயன் கணினியை இணையத்துடன் இணைப்பதுவேயாகும்,ஆயினும் ஒரேகுழுவிற்குள் உள்ள கணினிகளுக்கிடையே கோப்புகளை பங்கிட்டுகொள்வது செய்திகளை பரிமாறிக்கொள்வது ஆகிய செயல்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது,

system control பலகத்திற்கு சென்று computer name என்ற தாவியை தெரிவுசெய்க உடன் விரியும் திரையில் change என்ற பொத்தானை சொடுக்குக,பின்னர் குழுவின் பெயரை மாற்றியமைத்திடுக உங்கள் கணினிக்கு  ஒரு பணிக்குழுவின் work group பெயரை ஒதுக்கீடுசெய்க

start=> other network => my network places என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து  செயற்படுத்தி இணைப்பு ஏற்படுத்திய கணினிகளை திரையில் காணலாம், இதன் மடிப்பகத்தில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை      சொடுக்கியவுடன் திரையில் தோன்றும் குறுக்குவழி பட்டியலில் properties என்பதை தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் திரையில்தோன்றும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் sharing என்ற தாவியை தெரிவுசெய்க, பணி முடிந்தவுடன் if you understand the security risks but want to share files without running wizard click here என்பதை சொடுக்குக, just enable file sharing option என்பதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்கிய,பின்னர்sharing என்றதாவியில் share this folder on the net work என்பதை தெரிவுசெய்து கொள்க, அதற்கு ஒரு பெயரை உள்ளீடுசெய்க,allow network users to change  my file என்பதை தெரிவுசெய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக,

அதன்பின்னர் mynetworkplaces என்பதை திறந்து பங்கிட்டுகொள்க, வளாகத்திற்குள் கம்பியில்லா பிணையஇணைப்பு எனில் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கணினிகளையும் சாதணங்களையும் குறிப்பிட்ட எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்திகொள்ளலாம் ஆனால் ஒரு சில முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கை மட்டும் எடுத்திடவேண்டும்,