ஸ்பார்க்கி லினக்ஸ் ஒரு அறிமுகம்

ஸ்பார்க்கி லினக்ஸ் என்பது துவக்கநிலையாளர்கள், நன்றாக அனுபவமுடையவர்கள் ஆகிய இருதரப்பார்களுக்கும் இடையில் மூன்றாவதாக அரைகுறையாக தெரிந்தவர்களால் பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டு வெளியிடப் பட்ட தொரு இயக்க முறைமையாகும் ,இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டு மெனில் லினக்ஸ் இயக்கமுறைமை பற்றிய அறிவு ஓரளவு தேவையாகும். .இந்த ஸ்பார்க்கி லினக்ஸ் ஆனது டெபியன் குனு / லினக்ஸ் இயக்க முறைமையின் மீது உருவாக்கப்பட்ட தொரு , கட்டற்ற கட்டணமற்ற இயக்க முறைமையாகும்.இதுமிகவிரைவான, முழுமையாக தனிப்பயனாக்கக்கூடிய இயக்கமுறைமை யாகும், வெவ்வேறு பயனாளர்களுக்கும் ஒருசில முக்கிய பணிகளை செயற்படுத்திடுவதற்காக தற்போது ஒரு சில புதிய பதிப்புகள் இதனோடு வழங்கப்படுகின்றன. இது வீட்டு பயனாளர்களுக்கான முன்கூட்டி.யேநிறுவுகை செய்யப்பட்டபல்வேறு பொதுப்பயன்பாட்டு மென்பொருட்களையும் கொண்டுள்ளது;
குறைந்த அளவு வரைகலை பயனாளர் இடைமுகப்புடன்கூடிய எந்த வொருகணினியின் சூழலிலும் அல்லது சாளர மேலாளரும் தாம் விரும்பும் மேஜைகணினியை அவர்கள் விரும்பும் விதத்தில் கட்டமைக்க தேவையான அடிப்படை மென்பொருளுடன் மட்டும் முன்பே நிறுவப்பட்டு கிடைக்கின்றது,
1.விளையாட்டாளர்களுக்கான GameOver, 2. ஆடியோ, வீடியோ,HTML பக்கங்களை உருவாக்குவதற்கான Multimedia ,3. இயக்கமுறைமையை மீட்டுசரிசெய்யRescue ஆகிய மூன்று சிறப்பு பதிப்புகளாக, இயல்புநிலையில் இதுகிடைக்கின்றது
சுமார் 20 வகையான மேஜைக்கணினி சூழல்களையும் சாளர மேலாளர்களையும் இந்த ஸ்பார்க்கி லினக்ஸானது ஆதரிக்கின்றது,கணினியில் பணி செய்வதற்கும், வேடிக்கையாகபொழுது போக்குகளுக்கும், நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், மேலும் பல்வேறு பணிகளுக்கும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.
, பிற இயக்க முறைமையை மாற்றுவதற்கும், நிறுவுகையை தேவையில்லாமல் கணினி பகிர்வு அட்டவணையை மாற்றுவதற்கும் குனு / லினக்ஸ் விநியோகத்தை முயற்சிப்பதற்கான சிறந்த தேர்வாக இந்த ஸ்பார்க்கி லின்க்ஸின் “stable flavor” உள்ளது.
ஸ்பார்க்கி லினக்ஸின்“testing flavor” என்பது மிகவும் மேம்பட்ட பயனர்களை இலக்காகக் கொண்டது, அவற்றின் பயன்பாடுகளின் சற்று குறைவான நிலையான பதிப்பைப் பற்றி பயப்படாமல் பயன்படுத்தி கொள்ளலாம்
இந்த ஸ்பார்க்கியை பயன்படுத்தி கொள்ள விரும்பினால், அதை கணினியில் தனியானதொரு பக்கமாக அல்லது தற்போதைய நாம் பயன்டுத்திவரும் இயக்கமுறைமைக்கு மேல் நிறுவுகை செய்து ம்பயன்படுத்தி கொள்ளமுடியும்.
ஸ்பார்க்கியின் முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
– இது டெபியன் அடிப்படையிலானது ,- நிலையான அல்லது பகுதிமாறும் வெளியீடாக கிடைக்கின்றது ,- பயன்படுத்தி கொள்ள எளிமையானது , – பெரும்பாலான கம்பியில்லா தொலைதொடர்பினையும் கைபேசிவலைபின்னல் அட்டைகளையும்இது ஆதரிக்கின்றது,- தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாடுகள், பல்லூடக பயன்பாடுகளின் செருகுநிரல்களின் தொகுப்பாக விளங்குகின்றது ,- கூடுதல் பயன்பாடுகளின் பெரிய தொகுப்பைக் கொண்ட சொந்த களஞ்சியத்தைகொண்டுள்ளது மேலும் விவரங்களுக்கு https://sparkylinux.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

SkyChart / Cartes du Ciel எனும்கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

SkyChart என்பது வானவியல் வரைபடங்களை வரைய உதவிடும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும் இது லினக்ஸ், விண்டோஸ், மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது . இது வானவியல் வரைபடங்களை வரைவதற்காக, நட்சத்திரங்கள் , நெபுலாக்கள் ஆகியவற்றின் பல்வேறு பட்டியல்களின் தரவுகளைப் பயன்படுத்தி கொள்கின்றது. மேலும் இதில் கூடுதலாக சிறுகோள்கள் , வால்மீன்கள்ஆகியவற்றின் தற்போதைய நிலையையும் இதில் காட்டப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட கண்காணிப்பிற்கு வெவ்வேறு வானவியல் வரைபடங்களைத் தயாரிப்பதே இந்த பயன்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். அதற்காக எந்தெந்த பட்டியல்களைப் பயன்படுத்த வேண்டும், அதில் நட்சத்திரங்களின் , நெபுலாக்களின் நிறம் , பரிமாணம், கோள்களின் பிரதிநிதித்துவம்,அவற்றின் பெயர்கள் அவற்றின் ஒருங்கிணைப்பு கட்டங்களின் காட்சி, படங்களின் மிகமேம்பட்டநிலை, தெரிவுநிலையின் நிலை என்பன போன்ற பல்வேறு கரு்த்தாங்களை வசதிகளைஇதில் கொண்டுவர முடியும் மேலும். இவையனைத்தும் இந்த வானவியல் வரைபடத்தை ஒரு வழக்கமான கோளரங்கத்தை விட முழுமையானதாக ஆக்குகின்றன.இது ஜிபிஎல் எனும் பொதுஉரிமத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக எந்தவொரு பயன்பாட்டினையும் நாம் பயன்படுத்த துவங்கியவுடன் ,அதனைவணிக ரீதியாகவோ அல்லது அவ்வாறு இல்லாமலோ (வலைப்பதிவு, வலை வெளியீடு, அச்சிடப்பட்ட புத்தகம்,…) அந்த பயன்பாடு கொண்டுள்ள எந்தவொரு விளக்கப்படத்தையும் அச்சையும் பயன்படுத்த முனையும்போது அவ்வாறு வாய்ப்பிற்கான இணைப்பை தெரிவுசெய்திடுமாறு நம்மிடம் கோரப்படும் அதனை தொடர்ந்து நாம் தெரிவுசெய்தவாறு பயன்படுத்திடமுடியும் ஆனால் இந்த பயன்பாட்டில் அவ்வாறு எதையும் நாம்தெரிவுசெய்யத் தேவையில்லை வழக்கம்போன்று நம்முடைய பணியை சுதந்திரமாக இதனை பயன்படுத்தி துவங்கிடலாம் இதில்குறைந்த எண்ணிக்கையிலான தொலைநோக்கிகள் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன. முழு அளவிலான தொலைநோக்கி மாதிரிகளுடன் பணிபுரிய ஆஸ்காம் இயங்குதளத்தையும் தேவையான தொலைநோக்கி இயக்கிகளையும் கூடுதலாக நிறுவுகைசெய்திட வேண்டும்..நம்முடைய கணினி 32 பிட் அல்லது 64 பிட் ஆகியவற்றில் எந்தவகையென தெரிந்து அதற்கேற்ப பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க ஸ்கைசார்ட்டை ஒருபோதும் நிருவாகியாக இயக்க வேண்டாம் .நம்மை போன்று இதனை பயன்படுத்த முனைவர்களுக்கு நாம் உதவ விரும்பினால் நாம் நிரலாளராக உதவவேண்டும் என்றில்லாமல் மின்னஞ்சல்களின் கேள்விக்கு பதில் கூறுதல் மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்தல் வலை சேவையகத்தை பராமரித்தல் என்பன போன்று நம்மால்முடிந்தவகையில் இதற்கு உதவிடலாம்.மேலும் விவரங்களுக்கு https://www.ap-i.net/skychart/en/startஎனும் இணைய முகவரிக்கு செல்க

மைக்ரோசாப்ட் குவாண்டம் கணினி யை மேம்படுத்திடும் கருவி-

மைக்ரோசாப்ட் குவாண்டம் கணினி மேம்படுத்திடும் கருவிஎன்பது ஒரு குவாண்டம் கணினியில் இயங்கும் குறிமுறைவரிகளை எழுதுவதற்கான நிரலாக்க கருவிகளின் தொகுப்பாகும். இதனை பயன்படுத்தி கொள்வதற்காக வென குவாண்டம் இயற்பியலில் வலுவான பின்னணி எதுவும் நமக்குத்தேவையில்லை அவ்வாறுபின்னனி இல்லாத நிரலாளர்களை யும் குவாண்டம் கணினி வளர்ச்சியின் புதிய துறையில் நுழையஇது (SDK)அனுமதிக்கிறது.
வழக்கமான தொரு பைனரி கணினியில் பிட்களானவை 0 அல்லது 1 ஆக இருக்கும் அவ்வாறில்லாமல், குவாண்டம் கணினியின் பிட்கள்ஒரே நேரத்தில் 0 ஆகவும்1 ஆக இருக்கின்றனஅவை qubits, என்று அழைக்கப்படுகின்றன, . ஒரு qubitஇன் சாத்தியமான அனைத்து வரிசைமாற்றங்களையும் ஒரே நேரத்தில் கணக்கிடுவதற்கான திறமையே வழக்கமான கணினிகளை விட மிக அதிவிரைவாக கணக்கீடுகளை செய்ய குவாண்டம் கணினிகளுக்கு உதவுகின்றது. இருப்பினும், குவாண்டம் கணினியின் செயலிகள் பரவலாகக் கிடைக்கும் வரை, குவாண்டம் நிரலாக்கமானது பொதுவாக ஒரு போலியானசெயலாக செயல்படும் ஹோஸ்ட் பயன்பாட்டில் இயங்குகின்றது.
இது ஒரு திற மூலபயன்பாடாகும், இது Q # எனும் கணினி மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
Q # தொகுப்பி.
Q# நூலகம்.
வள மதிப்பீட்டாளர்.
Q # இல் எழுதப்பட்ட குவாண்டம் செயல்பாடுகளை இயக்கும் ஹோஸ்ட் பயன்பாடு (பைதான் அல்லது .NET மொழியில் எழுதப்பட்டுள்ளது).
விஷுவல் ஸ்டுடியோ மற்றும் பிற மைக்ரோசாஃப்ட் நிரல்களுடன் ஒருங்கிணைப்பு.
மேம்படுத்துநர்கள் Q # நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ள உதவுவதற்காக, மைக்ரோசாப்ட் குவாண்டம் கட்டாஸ் எனப்படும் தொடர்ச்சியான சுயமான பயிற்சிகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு Kata உம் இதன் மேம்படுத்துநருக்கு குவாண்டம் கணினியில் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பற்றி கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தேர்வுகளுக்கான உலாவி

பாதுகாப்பான தேர்வு உலாவி (Safe Exam Browser(SEB))என்பது இணையத்தின் வாயிலாக அனைத்துவகையான தேர்வுகளையும் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவிடும் ஒரு இணைய உலாவி சூழலாகும்.அதாவது இதனை கொண்டு தமிழ்நாடு தேர்வாணையும், பல்கலைகழகங்கள்.போன்றவை இணையத்தின் வாயிலாக தாங்கள் நடத்தவிரும்பும் நேரடி தேர்வுகளுக்கு இந்த பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது இந்த மென்பொருளானது எந்தவொரு கணினியையும் தற்காலிகமாக பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகின்றது. இது கணினி செயல்பாடுகள், பிற வலைத்தளங்கள் , பயன்பாடுகள் போன்ற ஆதாரங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றது மேலும் எந்தவொரு தேர்வு நடைபெறும்போதும் அங்கீகரிக்கப்படாத வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றது
இந்த SEB ஆனது எந்தவொரு கணினியிலும் இயங்குகின்ற திறன்கொண்டது, மேலும் இது ஒரு இணையம் வழியான கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) அல்லது இணைய மதிப்பீட்டு அமைப்புடன் இணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த SEB ஆனது எந்தவொரு இணைய அடிப்படையிலான LMS , பிற வகையான இணைய அடிப்படையிலான தேர்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. அதாவது Moodle, ILIAS, OpenOLAT போன்ற ஒருசில கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது குறிப்பாக இவற்றுடன் ஒரு இணக்கமான வினாடி வினா பயன்முறையை கூடவழங்குகின்றது.
இந்த SEB ஆனது ஒரு kiosk பயன்பாட்டினையும் உலாவி பகுதியையும் கொண்டுள்ளது, அவை கணினி அல்லது மடிக்கணினி சாதனத்தில் இயங்குகின்றன. .கியோஸ்க் பயன்பாடு தேர்வு களுக்கான கணினியைப் பூட்டிடுகின்றது, இணையத்தின் உலாவிடும் பகுதியானது (அல்லது ஒரு வளாகபிணையம்) ஒரு சேவையகத்தில் இயங்குகின்ற LMS வினாடி வினா தொகுப்புடன் தொடர்பு கொண்டு செயல்படுகிறது.

படத்தில் SEB கியோஸ்க் பயன்பாடு(விண்டோ மேஜைக்கணினி ) , SEB இணையஉலாவி (ஃ பயர் ஃபாக்ஸ் )ஆகிய இரண்டு உட் கூறுகள், கொண்டுள்ளதை காணலாம் அதனோடு ILIAS அல்லது Moodle. கொண்ட LMS எனும் மூன்றாம் விருப்ப பகுதி ஒன்று ம்ஆதரிக்கப்படுமாறு காண்பிக்கப்பட்டுள்ளது அல்லது எக்செல் அல்லது ஆர் என்பன போன்ற பல்வேறு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை ஒரு இணையத்தின் வாயிலான தேர்வின் போது இயக்க அனுமதிக்கப்படலாம் இவையனைத்தும் SEB கியோஸ்க் பயன்பாட்டால் ஒரே நேரத்தில் செயல்படுவதற்காக தொடங்கப்படுகின்றன.
இந்த SEBஎனும் பாதுகாப்பான தேர்வு உலாவி யானது மாணவர்களின் சொந்த கணினி ,மடிக்கணி போன்ற வற்றுடன் கூடிய விண்டோஸ், மேக்ஸ் iOS ஆகிய மூன்று தளங்களிலும் செயல்படுகின்ற நிருவகிக்கப்படாத கணினிகளிலும், நிருவகிக்கப்பட்ட சூழல்களிலும் பாதுகாப்பான தேர்வுகளை செயல்படுத்த உதவுகின்றது. SEB 2.0 இற்கு மேற்பட்ட பதிப்புகள் எந்தவொரு இணையத்தின் வாயிலான தேர்விற்கு ம்ஒரு தனிப்பட்ட உள்ளமைவை வழங்குகின்றது, அதனோடு இது தேர்வின் போது தவறாக முறைகேடாக கையாளுதலுக்கு எதிரான வலுவான குறியாக்கத்தாலும் விரிவான அங்கீகார த்தினாலும்பாதுகாக்கின்றது. , ஒரு குறிப்பிட்ட, மாற்றப்படாத SEB பதிப்பினை கொண்டு மிகச்சரியான தேர்வு அமைப்புகள் ஒரு தேர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன வாஎன சரிபார்க்க முடியும்.
இது ஒரு ஒருங்கிணைந்த பதிப்பாகும், இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வசதிவாய்ப்புகள், தேர்வு அமைப்பு இடைமுகம், இணக்கமான உள்ளமைவு கோப்புகள் , மிகவும் ஒத்த பயனர் இடைமுகம் ஆகியவற்றை மூன்று தளங்களிலும் கொண்டு வருகிறது, அதே நேரத்தில் கணக்கியல் இயக்க முறைமை வேறுபாடுகள் , தனித்துவமான இயங்குதள மான மைக்ரோசாப்ட் விண்டோ: , இணையஉலாவியான மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது
. இதில் பொதுவான நிருவகிக்கப்பட்ட வலை உலாவி, மறைகுறியாக்கப்பட்ட உள்ளமைவு கோப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டமைக்க முடியும், சிறப்பு மீயிணைப்புகளைப் பயன்படுத்தி, SEB ஐ மற்ற வலை உலாவிகளில் இருந்து தொடங்கலாம் மேலும் ஒரு தேர்வுக்கு தனித்தனியாக மறுகட்டமைவை செயற்படுத்திடலாம், முழுத்திரை பயன்முறை அல்லது பல்வேறு உலாவி சாளரங்கள் என மாற்றிகொள்ளலாம் இது ஒரு மெய்நிகர் இயந்திரத்தில் அல்லது ஜெயில்பிரேக் செய்யுப்பட்ட சாதனத்தில் இயங்குகிறதா என்பதை கண்டறிந்து, அவ்வாறு தொடங்க மறுக்க முடியும், மேலும் இதுகுறிப்பிட்ட வலைத்தளங்கள், பக்கங்கள் அல்லது ஆதாரங்களை மட்டுமே அணுக அனுமதிக்கும் URL வடிப்பான், மனித இடைமுகப்பினைத் தடுக்கசேவையகங்களுக்கான இணைப்பு மீதான நடுத்தர தாக்குதல்கள், எழுத்துப்பிழை சரிபார்ப்பு அகராதி தேடல் முடக்கப்பட்டுள்ளது, HTML மற்றும் PDF ஆவணங்கள், முழு வலை பயன் பாடுகளையும் கூட தேர்வில் பயன்படுத்தல் என்பனபோன்ற பல்வேறு வசதி வாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன மேலும் விவரங்களுக்கு https://www.safeexambrowser.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

வாகணங்களின் இணையம்:

வாகணங்களின் இணையம் (Internet of Vehicles(IoV)) என்பது நான்கு சக்கர வாகணங்கள் ,கனரக வாகணங்கள் ஆகிய அனைத்துவகைகளிலான வாகணங்களுடன் இணைக்கப்பட்ட தற்காலிக வலைபின்னல்களில் உருவாக்கிய தரவுகளைப் பயன் படுத்துவதை ஆதரிக்கும் ஒரு விநியோகிக்கப்பட்ட வாகணங்களுக்கான பிணையமாகும். , வாகணங்களை இயக்கும் மனித ஓட்டுநர்கள், பாதசாரிகள், பிற வாகனங்கள், சாலையோர உள்கட்டமைப்புவசதிகள், வாகண மேலாண்மை அமைப்பு ஆகியவை களுடன் நிகழ்வுநேரத்தில் தொடர்பு கொள்ள அனுமதிப்பதே இந்த IoV இன் முக்கிய குறிக்கோளாகும்.இந்த IoV ஆனது பின்வரும்ஐந்து வகைகளாலான பிணைய தகவல் தொடர்புகளை ஆதரிக்கின்றது:
1.ஆன் போர்டு யூனிட்கள் (OBU )என்பதன் மூலம் வாகனத்தின் உள் செயல்திறனைக் கண்காணிக்கும் வாகனத்திற்குள்ளான Intra-Vehicleஎனும் அமைப்புகள்.
2.வாகணத்தை சுற்றியுள்ள மற்ற வாகனங்களின் வேகம், நிலை ஆகியவை குறித்த கம்பியில்லா தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் வாகனங்களுக்கிடையேயான (Vehicle to Vehicle (V2V)) அமைப்புகள்.
3.குறிப்பிட்ட வாகனம் ,சாலையோர ஆதரவுஅலகுகள் (RSUs) ஆகியவற்றிற்கிடையே கம்பியில்லா தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வாகனமும் உள்கட்டமைப்புக்கிமான (Vehicle to Infrastructure (V2I)) அமைப்புகள்
4.பயன்பாட்டு நிரல் இடைமுகங்கள் (API) மூலம் இணையத்திலிருந்து கூடுதல் தகவல்களை அணுக வாகனத்தை அனுமதிக்கும் வாகனமும் மேககணினிக்குமான (Vehicle to Cloud (V2C)) அமைப்புகள்.
5.பாதசாரிகள் மிதிவண்டி ஓட்டுநர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாககூடிய சாலை பயனாளர்களின் (VRU) விழிப்புணர்வை ஆதரிக்கின்ற வாகனமும் பாதசாரி களுக்குமான(vehicle to Pedestrian (V2P)) அமைப்புகள்.
இதுகுறித்து 5 ஜி,புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைப்புகளின் (Intelligent transport systems (ITS)) சூழல் ஆகியவற்றுடன் விவாதிக்கப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வகையான வலைபின்னல்கள் ஒருசில நேரங்களில் வாகனத்திலிருந்து எல்லாவற்றிற்குமான (Vehicle to Everything (V2X)) தகவல்தொடர்பு என குறிப்பிடப் படுகின்றன. சந்தை ஆராய்ச்சியின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய இந்த IoV சந்தையின் மதிப்பானது 2024 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் பிஎம்டபிள்யூ ,டைம்லர் ஆகியோர் உட்பட பலவாகன உற்பத்தியாளர்கள், பாதைகளின் மேலாண்மை,திறனுடைய நிறுத்தங்கள் போன்ற IoV சேவைகளை இணைக்கும் முதன்மை தகவல் மையத்திற்கான ஒரு தளத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளனர்.. ஆப்பிள், சிஸ்கோ, கூகிள், ஐபிஎம், இன்டெல், மைக்ரோசாப்ட், எஸ்ஏபி ஆகியவை இதற்கான கட்டமைவை தற்போது உருவாக்கி கொண்டுள்ளன.என்ற கூடுதல் தகவல்களை மனதில் கொள்க

தரவுகளின் கதைசொல்லுதல்(Data storytelling)

வியாபாரத்தில் மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியானமுடிவு எடுப்பது அல்லது செயலை மிகச்சரியாகச் செயல்படுத்திடுவது ஆகியவற்றின் பொருட்டு தரவுகளின் பகுப்பாய்வு களை சாதாரண மனிதன் புரிந்து கொள்ளுமாறான சொற்களில் மொழி பெயர்க்கும் செயல்முறையையே தரவு கதைசொல்லுதலாகும்(Data storytelling) .டிஜிட்டல் உருமாற்றமும் தரவு உந்துதல் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாகவும் தரவு கதைசொல்லுதலானது தரவு அறிவியல் உலகில் அதிகம் பேசப்படும் ஒரு திறமையாக மாறியுள்ளது. வரிசையாக வியாபார (Line of Business (LOB)) முடிவெடுப்-பவர்களுக்கு முடிவு புள்ளிகளையும் போட்டிகளின் தன்மையையும் இணைக்க உதவுவதோடு, பகிரப்படும் தரவின் சூழலின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவுவதே . இந்த தரவு கதைசொல்லுதலின் குறிக்கோளாகும். ஒரு தரவுக் கதையானது வெற்றிகரமாக கருதுவதற்காக, பின்வருமாறு இருக்கவேண்டும்: நம்பக்கூடியதாகவும் புரிந்துகொள்ள எளிதான வகையில் பார்வையாளர்களுக்கு தகவல்களை வழங்கிடுமாறு ம் அமைந்திருக்க வேண்டும். தரவின் பொருளை விரைவாக புரிந்துகொண்டு உள்வாங்க பார்வை யாளர்களை அனுமதிக்குமாறு இருக்கவேண்டும். தரவுக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பார்வை யாளர்களின் உறுப்பினர்களை ஊக்குவிக்குமாறும் அதற்கான பதில் நடவடிக்கை எடுக்க பார்வையாளர்களை ஊக்குவிக்குமாறும். இருக்க வேண்டும். இன்றுவரை, தரவுக் கதைகளை எவ்வாறு சொல்வது என்பதில் சிறந்த நடை முறைகள் எதுவும் இல்லை, ஆனால் கணினிவல்லுநர்கள் பெரும்பாலும் பாரம்பரிய கதைசொல்லிடும் சொற்களில் தரவு கதைசொல்லுதலை விவரிக்கின்றார்கள், இதில் கண்டிப்பாக கேட்பவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு “கொக்கி”உள்ளடங்கியதாக இருக்க வேண்டும், கேட்பவரை தொடர்பு படுத்தக்கூடிய ஒரு கதையானது தனிப்பட்ட முறையில், கதையை மேம்படுத்தும் படங்கள் , கேட்பவரை திருப்திப்படுத்துகின்ற ஒரு முடிவு. ஆகியவை களுடன் இருக்கவேண்டும். ஒரு விவரிப்பைக் கட்டமைக்க தரவைப் பயன் படுத்து வதற்கான திறன்., சொற்கள் , படங்கள் மூலம் ஒரு கதையை பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதில் அனுபவம். , சிக்கலான கருத்துக்களை எளிமையான, தொடர்பு படுத்தக்கூடிய கதைக்களங்களாக மாற்றியமைக்ககூடிய திறமை. , ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கதைகளை சரி செய்திடும் விருப்பம். , பகுப்பாய்வு பயன்பாட்டின் முடிவுகளை மொழிபெயர்க்க சரியான தரவு காட்சிப் படுத்தல் கருவிகளைத் தேர்ந்தெடுக்கும் திறன்.பட்டை விளக்கப்படங்கள்,வரி விளக்கப் படங்கள், ஸ்பார்க்லைன்ஸ், புல்லட் வரைபடங்கள், சிதறல் அடுக்கு, மரங்களின் படங்கள், பின்னணி படங்கள் , தகவல் வலைபூக்கள் ஆகியவற்றை உருவாக்கிய அனுபவம்.நிறுவன அளவிலானபகுப்பாய்வுமென்பொருளுடன்அதிக அனுபவம். ,இயந்திர கற்றல், முன்கணிப்பு பகுப்பாய்வுகளுடன் பரிச்சயம். ஆகியவை பொதுவாக, தரவு கதைசொல்பவர்களின் வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களாகும்

குழந்தைகளுக்கான முகப்பு திரை

குழந்தைகளுக்கான முகப்பு திரை( KIDS DASHBOARD) என்பது எந்தவொரு கைபேசி சாதனத்தையும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய பாதுகாப்பான குழந்தைகளின் பயன்பாட்டுமுறை சாதனமாக மாற்றுகின்ற ஒரு பயன் பாடாகும் மேலும் எப்போதும் இணையமே கதி என்றவாறான போதையில் குழந்தைகள் வீழ்ந்திடாமல் தடுத்து காத்திட இதுஉதவுகின்றது இது ஒரு மேகக்கணி ஆதரவுடன் செயல்படும் கட்டணமற்ற பெற்றோர் கட்டுப்பாட்டு பயன்பாடு (APP)அமைவாகும் . இதில் ஒரே யொரு சொடுக்குதலில் கைபேசி சாதனத்தை குழந்தைகளின் தொலைபேசியாக மாற்றி கொள்ளஉதவிடுகின்றது . ஆயினும் இதில் தனிப்பட்ட பயன்பாடுகளையும் தேவையற்ற அணுகலை யும் தடுத்து காத்திட உதவுகின்றது.இந்த பயன்பாட்டை நேசிக்க பல காரணங்கள் உள்ளன அவை
1.பயன்பாட்டினை பூட்டிடுதல் / கியோஸ்க்:முகப்புதிரையில் குழந்தைகள் அணுகக்கூடிய பயன்பாடுகளை மட்டும் பெற்றோர்கள் தேர்வு செய்து அமைத்திடலாம் , பிளேஸ்டோர் அணுகலைத் தடுத்திடலாம் , அழைப்புகளை கட்டுப்படுத்தலாம் , மறுதொடக்கம் செய்த பிறகு சாதனத்தினை பூட்டிவிடலாம்
2. திரையை பயன்படுத்திடும் நேரத்தினை கட்டுபடுத்துதல்:சாதன பயன்பாட்டிற்கான தினசரி பயன்படுத்திடும் காலவரம்பை அமைக்கவும். கடவுச்சொல் மூலம் பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளின் பயன்பாட்டு நேரத்தை கட்டுபடுத்திட வும்முடியும் , வாராந்திர பயன்பாட்டை திட்டமிட்டு கட்டுபடுத்திடலாம், மிகுதி எவ்வளவு நேரம் பயன்படுத்திடலாம் என்பதைக் குறிக்க கவுண்டவுன் டைமர் திரையில் காண்பிக்கும்
3. எளியமுறையில் ஒரேயொரு சொடுக்கதல் வழியாக மாற்றியமைத்தல்:இதில் பூட்டுதல் பயன்பாட்டினை அமைக்கப்பட்டபின்னர் , குழந்தைகளின் பாதுகாப்பு பயன்பாட்டைத் தொடங்குவதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் பயன் பாடுகளுக்குள் உள்நுழைவு செய்திடலாம்.
4. பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறிவும்(AI ):இதன் வாயிலாக ஒவ்வொரு பயன் பாட்டிலும் அந்தந்த பயன்பாட்டின் புள்ளிவிவரங்களை . தேதிகளின் அடிப்படையில் வடிகட்டிடலாம்
5. தனிப்பயனாக்குதல்:பதிவிறக்கம் செய்யப்பட்ட எந்தவொரு படங்களிலிருந்தும் வால்பேப்பரை அமைக்கும் திறன் எந்தவொரு தனிப்பயன் உரையையும் திரையின் மேல் தட்டச்சு செய்யும் திறன் , திரையின் மேல் கடிகாரத்தை இயங்கசெய்தல் திரையில் வரிசை எண்ணைக் காண்பிக்கும் திறன் உருவப்பொத்தானின் பின்னணியை மாற்றுதல் வெளியேறுதலின் அமைப்புகள் ஆகியவற்றின் உருவபொத்தான்களை இதன் முகப்புத் திரையில் காண்பிக்க செய்யமுடியும்
6. பாதுகாப்பு ம் பாதுகாத்தலும் :கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட பயனாளரால் மட்டுமே அமைப்புகளை அணுக முடியும் கடவுச்சொல்லை உள்ளிட முகப்புத்த திரையில் ஒரு முறை சொடுக்குக உடன் 5 விநாடிகள் செயலற்ற நிலையில் கடவுச்சொல் திரை மறைந்துவிடும்
7. கணினியில் கட்டமைப்பு ஆண்ட்ராய்டு அமைப்புகளுக்கான அணுகல் மற்றும் அறிவிப்பு தடுக்கப்படுதல்:பயன்பாட்டு அமைப்புகளை பதிவேற்றும் செய்திடலாம் பதிவிறக்குமும் செய்திடலாம். கைபேசி சாதனத்தை மீட்டமைக்க திட்டமிட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://www.kidsdashboard.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

எந்த வொருகணினியிலும் உங்கள் விருப்பமான இணையஉலாவியை எவ்வாறு பயன்படுத்திகொள்வது-

தற்போதைய காலச்சூழலில் நாமெல்லோரும் நிலையாக ஒரேஇடத்தில் பொறுமையாக நின்று எந்தவொரு பணியை செய்யமுடியாமல் நம்முடைய கால்களில் சக்கரத்தை கட்டியுள்ளதை போன்று அங்கு இங்கு என எப்போதும் நாம்ஓடிகொண்டே இருக்கின்றோம் இவ்வாறான சூழலில் நாம்குறிப்பிட்ட இணையஉலாவியை பயன்படுத்தி நம்முடைய இணைய உலாவலை செய்வது நமக்கு மிகபிடித்தமாகவும் விருப்பமானதாகவும் இருக்கும் ஆயினும் நாம் பயனிக்கும் இடத்தில் அவ்வாறான நமக்கு விருப்பமான இணையஉலாவி பயன்பாடு இருக்குமா என உத்திரவாதம் எதுவும் கிடையாது இந்நிலையில் நாம் எந்த இடத்திலிருந்தும் நாம் விரும்பும் இணைய உலாவி பயன்பாட்டின் வாயிலாக இணையத்தை அணுக வேண்டும். ஆனால் தனிப்பட்ட தேடல்களைச் செய்ய அல்லது இணைய பயன்பாட்டில் பணி செய்ய அறிமுகமே இல்லாத பல்வேறு நபர்களும் பயன்படுத்திடுகின்ற பொது வான கணினியைப் பயன்படுத்த முடியமா என நாம் கவலைப்படலாம். இந்த நிலையில் இந்த சிக்கலை தீ்ர்வுசெய்வதற்கான அல்லது நம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென ஒரு வழி,யாக நாம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய சிறிய கையடக்க இணையஉலாவி (portable browser) என்பது நமக்கு கைகொடுத்து நம்மை காத்திடவந்துள்ளது, இதனை யூ.எஸ்.பி டிரைவ் போன்ற சிறிய சேமிப்பக சாதனத்திலிருந்துகூட நேரடியாக இதைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த உலாவியின் சிறிய பதிப்பைப் பயன்படுத்துவதன் மூலம், நம்மை அடையாளம் காணும் எந்த வொரு தடயங்களையும் கணினியில் விட்டிடாமல் புக்மார்க்குகள், வரலாறுகள், தனியாளர் பயன்முறை நீட்டிப்புகள் ஆகிய அனைத்தையும் அறவே நீக்கம் செய்து மிகபாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.. இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
நாம் ஏதேனுமொரு பணியை செய்வதற்காக அல்லது விடுமுறையை கழிப்பதற்காக அல்லது உறவினர்களின் குடும்ப முக்கிய நிகழ்வில் பங்கு கொள்ள பயணம் செய்கின்ற நிலையில் அங்கு பல்வேறு அறிமுகமில்லாத நபர்களும் பயன் படுத்திடுகின்ற பொது வான கணினியை நாம் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானால், அவ்வாறான நிலையில் வேறுஎந்தவொரு புதிய மென்பொருளையும் அந்த கணினியில் நிறுவுகை செய்திட முடியாது. ஆயினும் நாம் விரும்பும் இணைய உலாவியின் வாயிலாக மிகமுக்கியமான பணியை செய்யவேண்டும்என தவித்து கொண்டிருப்போம் அந்நிலையில்நாம் பயன்படுத்த விரும்பும் உலாவியின் நகலை நம்முடைய கைவசம் வைத்திருப்பது இணையத்தை அணுகுவதை எளிதாக்குகின்றது. இந்த கையடக்க இணைய உலாவியைப் பயன்படுத்து வதற்காகவென தனியாக குறிப்பிட்ட கணினியில் எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை, இது கணினியில் மென்பொருளை நிறுவுகை செய்வதற்கான நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றது. இதுமென்பொருளின் வழக்கமான பதிப்பை விட வேகமாக இயங்கும். திறன் கொண்டதாகும் இது விண்டோஸ் பதிவேட்டில் செயல்பாட்டின் எந்த தடயங்களையும் விடாது. தனிப்பட்ட தகவல்களை விட்டு விடுவோமோ என்ற பயத்தில் உலாவியின் நிறுவப்பட்ட பதிப்பைப் பயன்படுத்த நாம்விரும்பவில்லை. எனும் சூழ்நிலையில் கையடக்க உலாவிகள் மிகச் சிறந்ததாக அமைகின்றன, ஏனென்றால் நாம் ஒரு சிறிய உலாவியைப் பயன்படுத்தும்போது, நம்முடைய எல்லா தகவல்களும் கணினியில் இல்லாமல் சேமிப்பக சாதனத்தில் சேமிக்கப்படும்.
ஒரு சில சிறிய உலாவிகள் Chrome, Firefox ,Opera போன்ற பிரபலமான இணைய உலாவிகளின் பதிப்புகள். அசல் மென்பொருளின் அதே செயல்பாடு , செயல்திறன் ஆகியவற்றை . கொண்டுள்ளன. அவை குரோமியம், அவந்த் உலாவி, மிடோரி, க்யூட்வெப் போன்ற குறைந்த அறியப்படாத மூலங்களிலிருந்து பரவலான சிறிய உலாவிகளும் உள்ளன. நம்முடைய விரிவாக்கங்கள் புக்மார்க்குகள் தேவையில்லை என்றால் இவை நல்ல தேர்வாக இருக்கும். நம்முடைய செயல்பாட்டின் தடயங்களை மற்ற கணினியிலிருந்து அறவே நீக்கிவிட இவை உதவுகின்றன.
கொடுக்கப்பட்ட சிறிய உலாவியைப் பதிவிறக்குவதற்கு சற்று வித்தியாசமான வழிமுறைகள் இருக்கலாம், ஆனால் பின்வருமாறு செயல்பட வேண்டும்: 1. பயன்பாட்டின் பதிவிறக்கப் பக்கத்தைப் பார்வையிடுக. நாம் பயன்படுத்த விரும்பும் உலாவியை அடைய மேலே உள்ள எந்த இணைப்புகளையும் பயன்படுத்திகொள்க. 2. பதிவிறக்க பொத்தானை சொடுக்குதல் செய்து கோப்பை நம்முடைய கணினியில் சேமித்திடுக. 3. நாம் பதிவிறக்கிய “AppNamePortable_x.x.paf.exe” கோப்பின் இருப்பிடத்திற்கு செல்க. 4. அந்த செயலிகோப்பை இருமுறை சொடுக்குக 5. உடன்திரையில் கேட்கும் கட்டளைகளைப் பின்பற்றிடுக. 6. கோப்பை எங்கே சேமிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும் திரைக்கு வரும்போது, இதை நம்முடைய யூ.எஸ்.பி டிரைவிற்கு மாற்றிடுக . 7. நம்முடைய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்ததுOK.எனும் பொத்தானை சொடுக்குக. 8. தொடர்ந்து Installஎனும் பொத்தானை சொடுக்குக.
மற்றொரு கணினியில் நிரலைப் பயன்படுத்த: 1. யூ.எஸ்.பி டிரைவை கணினியல் அதற்கான வாயிலில் செருகுக, நம்முடைய நிரலை நிறுவிய கோப்பகத்தில் உலாவுக. 2. “AppNamePortable.exe” எனும் கோப்பை இருமுறை சொடுக்குக. 3. இப்போது, வழக்கமான பதிப்பைப் போலவே உள்நுழைந்து இணைய பயன்பாட்டைப் பயன்படுத்திடுக.
தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைப் பற்றி கவலைப்படாமல் நம்முடைய விரல் நுனியில் கணினியில் இணையத்தை வைத்திருக்க விரும்பினால், நமக்கு பிடித்த உலாவியைத் தேர்வுசெய்து, சிறிய பதிப்பை ஃபிளாஷ் டிரைவ் அல்லது பிற சிறிய சேமிப்பகத்திற்கு பதிவிறக்கி கொள்க அதன்பின்னர் . நாம் செல்லும் எல்லா இடங்களிலும் அதை நம்முடன் இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவா.

தாய்மொழியை தவிர வேறுபிறமொழிகளைகற்பதற்கான சிறந்த பயன்பாடுகள்-

நாம் நம்முடைய தாய்மொழியை தவிர வேறு எந்தவொரு வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள (அல்லது மேம்படுத்திகொள்ள) விரும்புகின்றோம்எனில் அதைச் கற்றுகொள்வதற்கு என நேரடியாக எந்தவொரு வகுப்பிற்கும் செல்லத்தேவையில்லை மேலும் பயிற்றுவிப்பதற்காகவென தனியாக ஆசிரியர் எவரும் தேவையில்லை: அதற்கு பதிலாக தற்போது பல்வேறு கணினி பயன்பாடுகள் அம்மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களஞ்சியங்களையும் கொண்டு பயிற்சி செய்ய பல்வேறு வழிகளில் நமக்கு உதவுகின்றன, மேலும் வேடிக்கையாக பொழுதுபோக்காக கூட அவைகளை பயன்படுத்தி அம்மொழிகளில் நம்முடைய திறனை மேம்படுத்தி கொள்ளலாம்!
1.Duolingoஎன்பது இணையதளத்தின் வாயிலாக பிறமொழியை கற்றுகொடுக்கும் ஒருவலைத்தளமாகும் .இது ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன், பிரஞ்ச் , ஜெர்மன் உள்ளிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் கற்றுகொள்வதற்காக பயனாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை வழங்குகின்றது. .அவ்வாறு பிறமொழி கற்றுகொள்ளவேண்டும் எனும் குறிக்கோளை நிறைவேற்றிகொள்வதற்காக தினமும் இந்த தளத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று இந்த தளம் கோருகின்றது. இது பிறமொழியொன்றினை கற்கவேண்டும் எனும் உந்துதலுக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல், காலப்போக்கில் குறிப்பிட்ட மொழியில் தேவையான நல்ல அனுபவத்தைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக இது விளங்குகின்றது . இவை எழுதப்பட்ட எழுத்துகளின் வாயிலாக அல்லது குரலொலி வாயிலான மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பல்வேறு பாணிகளைக் கொண்டுள்ளது . ஒரு மொழி முதன்மையாக தொடர்புடைய நாட்டின் வெளிப்பாடுகள், ஒருமை பன்மை வேறுபாடுகள் உணவுகள், விலங்குகள், , உடைமைகள் அந்நாட்டின் பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளஉதவிடும் கேள்விபதில்கள் போன்ற பல்வேறு வகைக ளில் குறிப்பிட்ட மொழியை கற்பதற்கான பாடங்களை படித்து அந்த மொழியை கற்றுகொள்வதற்கான உள்ளடக்கியுள்ளன என்பதை கவனத்தில் கொள்க. ஒவ்வொரு எட்டு பாடங்களுக்கும் இந்த தளமானது நம்முடைய முன்னேற்றத்தை பரிசோதிக்கின்றது.
2.Memriseஎன்பது நம்முடைய அறிவை வலுப்படுத்த அல்லது நம்முடைய நிலையை மேம்படுத்த விரும்பும் எந்தவொரு தலைப்பிலும் ஆறாயிரக்கணக்கான வழிமுறைகளில் பிறமொழிகளை கற்க உதவிடும் ஒரு கருவியாகும். படிக்க விரும்புவது எதுவாக இருந்தாலும், இந்த பயன்பாட்டில் Toki Pona(ஒரு செயற்கை மொழி) ,Esperanto(கிட்டத்தட்ட அழிந்துவிட்டது) உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதுமட்டுமல்லாது இதில்கலை, அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் உள்ளிட்ட கருப்பொருள்களில் கூடுதலாக அம்மொழிகளில் நினைவில் கொள்ள உதவுகின்றது, . அனைத்து படிப்புகளும் ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவற்றைப் படித்த பிற பயனர்களால் மேம்படுத்தப்பட்டு, தேவைகளுக்கு ஏற்ப தரமான கற்றல் அனுபவத்தை உறுதிசெய்கின்றது.
3. Babbelதிறன்பேசி அல்லது மடிக்கணினியிலிருந்து ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கும் பயன்பாடு தான் இந்த Babbelஆகும். இது ஆங்கிலம், இத்தாலியன், ஸ்வீடிஷ், ரஷ்ய, துருக்கிய போன்ற டஜன் கணக்கில் பிற மொழிகளிலிருந்து தேர்வு செய்து முற்போக்கான மற்றும் பயனுள்ள கற்றல் திட்டத்தைத் தொடங்குக. மொழியியலாளர்களால் உருவாக்கப்பட்ட முழுமையான மற்றும் விரிவான பாடங்கள் உட்பட 15 நிமிட குறுகிய அமர்வுகளுடன், மொழிகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும் அல்லது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்பினாலும் எல்லா தேவைகளையும் Babbelமாற்றியமைக்கின்றது. இந்த பயன்பாட்டை அணுக ஒரு உறுப்பினராக குழுசேர வேண்டும், இருப்பினும்முதல் பாடத்தை இலவசமாக முயற்சி செய்யலாம்.
4.Busuuuமொழி கற்றலுக்கான ஒரு மெய்நிகர் சமூகம் இது சமூக கற்றலை ஊக்குவிக்கும் ஒரு சேவை. உண்மையில், இணைய பயனர்கள் அவர்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கும் மொழியில் “virtual immersed”இருப்பதற்காக தளத்தில் பதிவுசெய்யப்பட்ட சொந்த பேச்சாளர்களுடன் கானொளிமாநாடு மூலம் அரட்டை அடிக்கலாம். ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலியன், போர்த்துகீசியம் அரபு ரஷ்யன் போன்ற பிற மொழிகளைக் கற்க முடியும். வெவ்வேறு கருப்பொருள்களின்படி 150 க்கும் மேற்பட்ட கற்றல் வரவுகளை வழங்குகிறது. Busuuuவழங்கும் மொழி படிப்புகள் அனைத்துநிலை மாணவர்களையும் இலக்காகக் கொண்டவை
5.Rosetta Stone என்பது மென்பொருள் வடிவில் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் ஒரு வழிமுறையாகும். நம் தாய்மொழியைக் கற்றுக்கொண்டது போல ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது. இந்த முறை ஆங்கிலம் பேசும் நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது, ஆனால் மற்ற நாடுகளில் இது நன்கு அறியப்படவில்லை. இது12,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 9,000 பொது நிறுவனங்கள் மற்றும் 22,000 கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டதாக ஒரு சாதனைப் பதிவாக இது உள்ளது.

இணையத்தில் நேரடியாக உரையிலிருந்து பேசும்ஒலியாக (Text to Speech (TTS)) படிப்பவர்

இந்த திரையில் உள்நுழைவுசெய்தவுடன் தயவுசெய்து நாம் விரும்புகின்ற குரலொலியையும் மொழியையும் தேர்ந்தெடுத்து கொண்டபின்னர், கீழேயுள்ள உரை உள்ளீட்டு புலத்தில் நாம் பேசும்மொழியாக மாற்றிடவிரும்பும் நம்முடைய உரையை நகலெடுத்து கொண்டுவந்து ஒட்டிடுக, தொடர்ந்து “Listen”எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் நகலெடுத்து கொண்டுவந்து ஒட்டிய உரையானது நாம் தெரிவுசெய்த மொழியில் குரலொலியாக காதால் கேட்டு மகிழலாம்
இன்னும் பல்வேறு வசதி வாய்ப்புகளைக் கொண்ட விண்டோஸ் இயக்கமுறைமை செயல்படும் கணினிக்கான கட்டணமற்ற TTS Reader எனும் பயன்பாட்டு மென்பொருளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது உரை பெட்டியில் உள்ள தட்டச்சு செய்யப்பட்ட அல்லது நகலெடுத்துகொண்டுவந்து ஒட்டப்பட்ட உரையை இயற்கையான ஒலிக் குரல்களுடன் படிக்கும் வல்லமை கொண்டதாகும் உரையை நாம் விரும்பும் மொழியில் பேச்சொலியாக மாற்றி ஒலிக்கும் இந்த பயன்பாட்டிற்கான நேரவரம்புகள் எதுவும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக இணையஇணைப்புஇருந்தால் நேரடியாக , இணையஇணைப்பு இல்லாதபோதும் இதனை இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும் . இது பயன்படுத்த மிகவும் எளிதானது இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென இதில் பதிவுசெய்து உள்நுழைவு செய்யத்த தேவையில்லை. மாறாக கணினிக்கான இலவச Brainaடிடிஎஸ் பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
இந்த டிடிஎஸ் மென்பொருளானது எந்தவொரு இணையஉலாவியிலும் கணினி , மடிக்கணினி கைபேசி .திறன்பேசி ஆகிய எந்தவொரு சாதனத்திலும் விண்டோ மேக் லினக்ஸ் ஆகியவை மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு, ஐபோன் , ஐபாட் உள்ளிட்ட அனைத்து இயக்கமுறைமைகளிலும் இயங்குகின்ற திறன்கொண்டது.
ஆங்கிலம், சீன, ஜப்பானிய, இந்தி, இத்தாலியன், டச்சு, அரபு, ரஷ்ய, பிரஞ்சு, டேனிஷ், இந்தோனேசிய, தமிழ், தாய், கொரிய, ஜெர்மன், கிரேக்கம், செக், போர்த்துகீசியம், ரோமானியன், கற்றலான், ஐஸ்லாந்து, நோர்வே, ஸ்பானிஷ் ஸ்வீடிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் உரையை பேசும் குரலொலி வாயிலாக செயல்படும் திறன்மிக்கது மொழிதெரியாத இருவர் இணையத்தின் வாயிலாக தங்களுக்குள் தொடர்புகொள்ள இது பேருதவியாய் விளங்குகின்றது
மேலும்இதனை நம்முடையஇணையபக்கத்தில் கூடுதல் இணைப்பாக செய்து உரைவடிவிலான நம்முடைய இணையபக்கஉள்ளடக்கங்களை வேற்று மொழியாளர்களும் அவர்களின் மொழியில் அறிந்து கொள்ளஉதவிடும் ஒருகருவியாக செய்துகொள்ளும் தன்மைகொண்டுள்ளது இது இன்போரோபோ AI சாட்போட் இயங்கு தளத்தால் இயக்கப்படுகிறது மேலும் விவரங்களுக்கு https://www.brainasoft.com/braina/tts-reader.htmlஎனும்இணையபக்கத்திற்கு செல்க

Previous Older Entries