புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடு பகுதி-28- பாவணைகளின் தலைமுறை மாறுதல்

ஒருஇணையவடிவமைப்பின்போது பயன்படுத்திடும் அடுக்கு பாவணைதாட்களை(Cascading Style Sheet (CSS)) போன்ற அதேவழிமுறையில் ஆண்ட்ராய்டின் பாவணையின் தலைமுறையும் ஆதரிக்கின்றது நடப்பிலிருக்கும் பாவணைகளிலிருந்து பண்புகளின் தலைமுறைமாறுதல்கள் செய்வதற்கு இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்பின்னர் அதனுடைய பண்புகளைமட்டும் நாம் மாறுதல்கள் செய்திடவிரும்பியவாறு அல்லது சேரத்திடுவதற்காக வரையறுத்தால் போதும் முன் பகுதியில் பாவணையை வரையறுத்தவாறு CustomFontStyle என்பதன் தலைமுறை மாறுதல்களைஒருபுதிய பாவணையை LargeFont என்பதற்காக உருவாக்குவது மிகஎளிதாகும் ஆனால் எழுத்துருவின் அளவினை பெரியதாக ஆக்குவதற்கு பின்வருமாறு புதிய பாவணையில் நாம் அனுமதிக்கமுடியும்

20ps

நம்முடைய எக்ஸ்எம்எல்லின் புறவடிவமைப்பில்இந்த புதிய பாவணையை @style/CustomFontStyle.LargeFont ஆக மேற்கோள் செய்திடமுடியும். மேலும் நாம் விரும்பும் வரை பலமுறை நாம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு கால அளவுடன் பெயரை மட்டும் மாறுதல்கள் செய்து இதனை கொண்டுசெல்லமுடியும் உதாரணமாக FontStyle.LargeFontஎன்பதில் Red என பெயரைமட்டும் மாறுதல்செய்து பின்வருமாறுவிரிவாக்கம் செய்திடமுடியும்

?xml version=”1.0″ encoding=”utf-8″?>

#FF0000/>

நம்முடைய சொந்த வளங்களால் பாவணைகளை வரையறுப்பதற்காகமரபுரிமையின் பெயர்களை மட்டும் மாறுதல்கள் செய்வதால் இந்த தொழில் நுட்பம் செயல்படுகின்றது இந்த வழியில் ஆண்ட்ராய்டின் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட பாவணைகளை நம்மால் மரபுரிமையாக கொண்டுசெல்லமுடியாது ஆண்ட்ராய்டின் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட பாவணையை TextAppearance என்றவாறு மேற்கோள்செய்வதற்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு பெற்றோர்(parent)களின் பண்புக்கூறுகளை நாம் பயன்படுத்திகொள்ளவேண்டும்

fill_parent
wrap_content
characters
monospace
12pt
#00FF00/>

ஆண்ட்ராய்டின் கருப்பொருட்கள் (Themes )
இதுவரை பயிற்சியில் பார்த்துவந்ததன் அடிப்படையில நாம் இந்த பாவணையின் அடிப்படை கருத்தமைவை பற்றி புரிந்துகொண்டிருப்போம் என நம்பலாம் அதனால் நாம் அதற்கடுத்ததாக ஒரு கருப்பொருள் (Theme )என்றால் என்ன என புரிந்துகொள்ளமுயற்சி செய்திடுவோம் ஒரு கருப்பொருள்என்பது ஒரு தனிப்பட்ட காட்சிக்கு பதிலாக ஒரு செயல்முழுவதும் அல்லது ஒரு பயன்பாடு முழுவதும்ஆண்ட்ராய்டு பாவணையை நடைமுறைபடுத்துவதைதவிர வேறுஒன்றுமில்லை இவ்வாறாக ஒரு பாவணையானது ஒரு கருப்பொருளாக நடைமுறைபடுத்திடும்போதுஇந்த செயல்களின் ஒவ்வொரு காட்சி(View) அல்லது அது ஆதரிக்கின்றஒவ்வொரு பாவணையின்பண்புகளில் பயன்பாடு செயல்படுத்திடுவதாகும் உதாரணமாக நாம் பயன்படுத்திடும் அதே CustomFontStyle எனும் பாவணையை ஒரு செயலிற்காக ஒரு கருப்பொருளாக செயல்படுத்திடமுடியும் பின்னர் அந்த செயலிற்குள்(Activity) உள்ள அனைத்து உரைகளும் ஒற்றையான பச்சைவண்ண எழுத்துருவாக தோன்றிடும் .நம்முடைய பயன்பாட்டில் அனைத்து செயல்களுக்காக இந்த கருப்பொருளை அமைப்பதற்கு AndroidManifest.xmlஎனும் கோப்பினை திறக்கவும்
பின்னர் பாவணையின் பெயருடன் android:theme என்பதன் பண்புக்கூறும் உள்ளிணைந்ததாக செய்வதற்கு எனும்டேக்கினை திருத்தம் செய்திடவும் உதாரணமாக

ஆனால் நாம் ஒரு கருப்பொருளை ஒரு செயலிற்கு எனும் டேக்கினை மட்டும் செயல்படுத்திடுவிரும்பினால் android:theme என்பதன் பண்புக்கூறினை Activity எனும் டேக்கினை மட்டும் சேர்த்திடுக எடுத்துக்காட்டாக

ஆண்ட்ராய்டால் வரையறுக்கப்பட்ட இயல்புநிலைகருப்பொருட்கள் ஏராளமான அளவில் உள்ளன இவைகளை நாம் நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது நாம் அவைகளை பின்வருமாறு பெற்றோர்(parent) பண்புக்கூறுகளாக பயன்படுத்தி மரபுரிமையாக பயன்படுத்திகொள்ளலாம்


ஆன்ட்ராய்டு கருப்பொருளின் கருத்தமை புரிந்து கொள்வதற்கு இதனை நாம்கீழே கொடுக்கப்பட்டுள்ள Theme Demo எனும் எடுத்துகாட்டில் சரிபார்த்து கொள்ளலாம்
பின்வரும் எடுத்துகாட்டானது ஒரு பயன்பாட்டிற்காக ஒரு கருப்பொருளை எவ்வாறு நாம் பயன்படுத்திடமுடியும் என மாதிரிசெயல்விளக்கமாக அமைகின்றது மாதிரி செயல்விளக்கத்திற்காக நாம் நம்முடைய இயல்பிநிலையில் உள்ள AppThem eஎனும் பயன்பாட்டில் இயல்புநிலை உரை அதன் அளவு அதன் குடும்பம் அதன்நிழல் போன்றவைகளை நாம் மாறுதல்கள் செய்திடுவோம் பின்வரும் படிமுறைகளை பின்பற்றி ஒரு எளிய ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குவதன் வாயிலாக நாம் இந்த பணியினை நாம் துவக்குவோம்

பின்வருவதுfilesrc/com.example.themedemo/MainActivity.java எனும் மாறுதல்கள் செய்யப்பட்ட முதன்மை கோப்புகளின் உள்ளடக்கமாகும் இந்த கோப்பு ஒவ்வொரு அடிப்படை வாழ்க்கை சுழற்சி வழிமுறைகளை உள்ளிணைந்ததாக்க முடியும
package com.example.themedemo;
import android.os.Bundle;
import android.app.Activity;
import android.view.Menu;
import android.view.View;
import android.widget.Button;
import android.widget.TextView;
public class MainActivity extends Activity {
@Override
protected void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.activity_main);
//— find both the buttons—
Button sButton = (Button) findViewById(R.id.button_s);
Button lButton = (Button) findViewById(R.id.button_l);
// — register click event with first button —
sButton.setOnClickListener(new View.OnClickListener() {
public void onClick(View v) {
// — find the text view –
TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size —
txtView.setTextSize(20);
}
});
// — register click event with second button —
lButton.setOnClickListener(new View.OnClickListener() {
public void onClick(View v) {
// — find the text view —
TextView txtView = (TextView) findViewById(R.id.text_id);
// — change text size —
txtView.setTextSize(24);
}
});
}
@Override
public boolean onCreateOptionsMenu(Menu menu) {
getMenuInflater().inflate(R.menu.main, menu);
return true;
}
}
பின்வருவது res/values/style.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும் இது CustomButtonStyle எனும் கூடுதல் பாவனைகளை வரையறுத்துள்ளது

<!– Application theme. →


characters
monospace
1.2
1.2
2
#494948/>
center
3dp
5pt
#000000

100dp
38dp

பின்வருவது res/layout/activity_main.xml எனும் கோப்பின் உள்ளடக்கமாகும

பின்வருவது res/values/strings.xml என்பதன் புதிய இருமாறிலிகளை வரையறுப்பதற்கானதாகும்

ThemeDemo
Settings
Hello world!
Small Font
Large Font

பின்வருவது AndroidManifest.xml எனும் கோப்பின் இயல்புநிலை உள்ளடக்கமாகும் இதில் நாம் வேறு எதனையும் மாறுதல்கள் செய்திடவேண்டாம் ஏனெனில் நாம் கருப்பொருளின் பெயரை மாறுதல்கள் செய்திடாமல் அப்படியே வைத்திருக்கவேண்டும் ஆனால் புத்தம் புதிய கருப்பொருளை வரையறுத்தாலோ அல்லது வேறு பெயரில் இயல்புநிலை கருப்பொருளை மரபுரிமையாக பெற்றாலோ AppTheme எனும் பெயரை புதிய பெயராக மாற்றியமைத்திடவேண்டியிருக்கும்

</manifest
சற்றுமுன் நம்மால் மாறுதல்கள் செய்யப்பட்ட "ThemeDemo "எனும் பயன்பாட்டினை இயக்க முயற்சி செய்வோம்! சூழல் அமைவை செயற்படுத்திடும் போதே நாம் நம்முடைய AVDஐ உருவாக்கிவிட்டதாக கருதி(எடுத்து)கொள்க எக்லிப்ஸிலிருந்து இந்த பயன்பாட்டினை இயக்குவதற்கு நம்முடைய செயல்திட்டங்களின் கோப்புகளில் ஒன்றாக திறந்து கொள்க தொடர்ந்து கருவிப் பட்டையிலிருந்து Run எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் எக்லிப்ஸானது இந்த பயன்பாட்டினை நம்முடைய AVD இல்நிறுவுகை செய்யத்துவங்கிடும் அதனைதொடர்ந்து நம்முடைய பயன்பாட்டிலும் கட்டமைவிலும் உள்ள அனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றது எனில் அது பின்வரும் முன்மாதிரி சாளரத்தினை திரையில் காண்பிக்கும்

இயல்புநிலை பாவணைகளும் கருப்பொருட்களும்
ஆண்ட்ராய்டு தளத்தில் ஏராளமான அளவில் பாவணைகளும் கருப்பொருட்களும் தொகுக்கப்பட்டு நாம் நம்முடைய பயன்பாடுகளில் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன நாம் இவையனைத்தையும் R.style எனும் இனத்தினை மேற்கோள் செய்வதன் வாயிலாக இதனை நாம் காணமுடியும் அவ்வாறு பட்டியலிடப்பட்ட பாவணைகளை பயன்படுத்தி கொள்வதற்கு இந்த பாவணைகளின் பெயர்களிடையே உள்ள அடிக்கோட்டினை மட்டும் நீக்கம் செய்துவிட்டு அதற்கு பதிலாக இடைவெளிமட்டும் விட்டால் போதும் உதாரணமாக Theme_NoTitleBar theme எனும் பெயருக்கு பதிலாக”@android:style/Theme.NoTitleBar”. எனும் பெயராக பயன்படுத்தி கொள்ளமுடியும் பாவணைகளுக்கும் கருப்பொருட்களுக்கும் ஆன மூலக்குறிமுறைவரிகளை https://android.googlesource.com/platform/frameworks/base/+/refs/heads/master/core/res/res/values/styles.xml , https://android.googlesource.com/platform/frameworks/base/+/refs/heads/master/core/res/res/values/themes.xml ஆகிய இணையபக்கங்களுக்கு சென்று காணமுடியும்

ஜிமெயிலின் புதிய வசதிவாய்ப்புகள்

நம்முடைய மின்னஞ்சலில் நம்முடைய கையெழுத்து அல்லது முக்கியமான பழமொழிகளை தானாகவே உருவாகுமாறு செய்து அனுப்பலாம் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் General எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக அதன்பின்னர் விரியும் General எனும் தாவிபக்கத்தில் Signature எனும் பகுதியில் நம்முடைய கையெழுத்து அதற்கான வண்ணம் பாவணைகள் இணைப்புகள் உருவப்படங்கள்போன்றவைகளை உருவாக்கி இணைத்துகொண்டு save changesஎனும் பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் நாம் அனுப்பிடும் மின்னஞ்சல்கள் நம்முடைய கையெழுத்தானது நாம் கட்டமைத்தவாறு தானாகவே உருவாவதை காணலாம்
இந்த ஜிமெயிலின் சேவையை இணைய இணைப்பில்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் இதற்காக ஜிமெயிலின்மேலே வலதுபுற மூலையிலுள்ள cog என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Settings என்ற வாய்ப்பையும் பின்னர் விரியும் Settings எனும் பட்டியலில் Offline எனும் தாவிபக்கத்தை விரியச்செய்திடுக பின்னர் விரியும் Offline எனும் தாவிபக்கத்தில்  Install Gmail Offline எனும் பொத்தானை சொடுக்குக அதன்பின்னர்  Install Gmail Offline எனும் பக்கத்தில்  Add to Chrome > Add app.என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர்chrome://apps/ என்ற இணையபக்கத்திற்கு சென்று Gmail Offline என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் நம்முடைய ஜிமெயிலை இணைய இணைப்பில்லாத போதும் பயனபடுத்தி கொள்ளமுடியும்
இதுமட்டுமில்லாது Google Drive,Google Maps,Google Keep,YouTubeஎன்பன போன்ற பல்வேறு வசதிகளும் இந்த ஜிமெயிலில் உள்ளன அவைகளையும் பயன்படுத்தி கொள்க

விண்டோஇயக்கமுறைமைசெயல்படும் கணினிகளில் தானியங்கியாக செயல்களை கட்டுபடுத்திட AutoHotkeyஎன்ற கட்டணமில்லாத கருவியை பயன்படுத்தி கொள்க

விண்டோ இயக்கமுறைமையின் எந்தொரு பயன்பாட்டையும் தானியங்கியாக செயல்களை கட்டுபடுத்திட இந்தAutoHotkeyஎன்ற கட்டணமில்லாத கருவிமிகத்திறனுடன் செயல்படுகின்றது இந்த கருவியை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்தபின்னர் திரையில் எந்தவொரு இடத்திலும் இடம் சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் New,என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் New,எனும் பட்டியில் AutoHotkey script என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் இதற்கு ஒரு பெயரிட்டுகொள்க பின்னர் இதனை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை அழுத்துக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Edit the script என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
இதிலுள்ளஒவ்வொரு ஸ்கிரிப்டும் ஒரு விசை சொற்கள் (hotstring)ஒதுக்கப்பட்டிருக்கும் அல்லது ஒருகுறுக்குவழிவிசையின் செயல் ஒதுக்கப்பட்டிருக்கும் அதாலது பயன்பாட்டு செயலின் முதலெழுத்துகள் எண்கள விசை்குறியீடுகள் போன்றவைகளால் ஒதுக்கபட்டிருக்கும் விண்டோ விசையை”#” என்ற குறியீடும் Altஎன்ற விசையை “!”என்ற குறியீடும்Ctrl என்ற விசையை”^” என்றகுறியீடும் குறிப்பிடுவது போன்று .இதன் வாயிலாக #zஎன்ற குறியீடுகளை செயல்படுத்தினால் http://www.autohotkey.comஎன்ற தளம் தானா க திரையில் தோன்றசெய்திடும் இதனுடைய பெரும்பாலான ஸ்கிரிப்டுகள் பின்வருமாறு ஒன்றுமேற்பட்டவரிகளில்இருக்கும்
^!n::
IfWinExist Untitled – Notepad
WinActivate
else
Run Notepad
return
இதனை செயல்படுத்தினால் Ctrl+Alt+n ஆகிய விசைகளை சேர்த்து அழுத்திடும் செயலை செய்கின்றது அதனை தொடர்ந்து நோட்பேடை திறக்கசெய்து செயல்படசெய்கின்றது
Autohotkey.ahk எனும் இதனுடைய இயல்புநிலை கோப்பினை திறந்து பின்வருமாறு நம்முடைய முதல் ஸ்கிரிப்டை உருவாக்கிடுக
::அனைவருக்கும் வணக்கம்::அனைவருக்கும் வணக்கம்{!} My first script. ;Example comment
பின்னர் இதற்குஒரு பெயரிட்டு சேமித்து கொள்க அதன்பின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக அல்லது இடம்சுட்டியால்தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் பட்டியில் Run Script என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அனைவருக்கும் வணக்கம் என திரையில் தோன்றிடும்
இதே அனைவருக்கும் வணக்கம்எனும் செயலைசெயலி விசைவாயிலாக செயல்படுத்திடுவதற்காக இந்த ஸ்கிரிப்டை பின்வருமாறு சிறிது திருத்தம் செய்திடலாம்

#F2::
sendஅனைவருக்கும் வணக்கம்{!}
return
இதனை சேமித்தபின்னர் இந்த F2எனும் செயலிவிசையைஅழுத்தினால் போதும் இதனை தொடர்ந்து இதே ஸ்கிரிப்டில் தரவுகளை நகலெடுத்து சேமித்து வைத்திடுமாறுசெய்து அந்தசெயல்முடியும்வரை அமைதியாக இருக்குமாறு செய்திடலாம்
#F2::
send அனைவருக்கும் வணக்கம்{!}
send {CTRLDOWN}{SHIFTDOWN}{HOME}{CTRLUP}{SHIFTUP}
send {CTRLDOWN}c{CTRLUP}{END}
example = %clipboard%
StringUpper,example,example
sleep, 1000
send, – புதியதாக அனைவருக்கும் வணக்கம் = %example%
return
இதில் மூன்றாவது வரி Ctrl+Shift+Home ஆகிய குறுக்குவழி விசைகளை அழுத்துகின்ற செயலையும் நான்காவது வரி Ctrl+C ஆகிய குறுக்குவழி விசைகளை அழுத்துகின்ற செயலையும்
சுட்டெலிக்கான ஸ்கிரிப்ட பின்வருமாறு
#F2::
Click 980,381
return
இதில் Windows key + F2 ஆகிய குறுக்குவழிவிசைகளை அழுத்துவதை குறிப்பிடுகின்றது

Run, wordpad.exe, C:\My Documents, max
இதில் வேர்டுபேடானது இயல்புநிலை கோப்பகத்தை திறப்பதை குறிப்பிடுகின்றது

Run, http://www.vikupficwa.wordpress.com
இதில் குறிப்பிட்ட இணைய பக்கத்தை திறப்பதை குறிப்பிடுகின்றது

Run, mailto:example@domain.com?subject=My Subject&body=Body text example
இதில் மின்னஞ்சல் அனுப்புவதை குறிப்பிடுகின்றது

மாறிலிகளை குறிப்பிட
#F2::
example := 5+5
msgbox, Example is equal to %example%
return

இதில் எண்களாலான மாறிலிகளின் கூடுதலை செய்திபெட்டியின் வாயிலாக குறிப்பிடப்படுகின்றது

#F2::
example := “முனைவர் சகுப்பன்”
msgbox, அனைவருக்கும் வணக்கம்! My name is %example%
return
இதில்குறிப்பிட்ட எழுத்துகளின் வாயிலாக அனைவருக்கும் வணக்கம் என செய்தி பெட்டியின் வாயிாக காண்பிக்கசெய்யப்படுகின்றது

#F2::
example := “Example: ” 5+5
msgbox, Mixed variable is %example%
return
இதில் எண்களும் எழுத்துகளும் கலந்த மாறிலிகளால் செய்திபெட்டியில் தகவல் தெரிவிக்கப்படுகின்றது

பின்வருவது நிபந்தனை கூற்றாகும்
#F2::
example := 5
if example = 5
msgbox, true
else
msgbox, false
return

பின்வருவது மற்றொருநிபந்தனை கூற்றாகும்

#F2::
example := “vikupficwa.”
if (example = “wordpress”)
msgbox, true
else
msgbox, false
return

பின்வருவது திரும்ப திரும்ப நிகழும் சுழற்சிசெயலாகும்

#F2::
loop, 5
{
send அனைவருக்கும் வணக்கம்{!}
sleep 300
}
return

பின்வருவது வழக்கமான வெளிப்பாடாகும்

#F2::
example := “support@vikupficwa.wordpress .com”
example:= RegExReplace(example, “@.*”, “”)
msgbox, Username is %example%
return

இவ்வாறு எளியமுறையி்ல் AutoHotkeyஎன்ற கட்டணமில்லாத கருவியின் உதவியுடன் நாம் விரும்பியவாறு தானியங்கியாக செயல்களை உருவாக்கி கட்டுபடுத்திடலாம்

சிறுநிறுவனங்களுக்கு எவ்வாறு கடனட்டைகள் உதவியாய் இருக்கும்

தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாம் கொள்முதல் செய்திடும் பொருட்கள் அல்லது பெறுகின்ற சேவைகளுக்கு ரொக்கமில்லாத பணபரிவர்த்தனை என்பதன் அடிப்படையில் கடனட்டைகளின் வாயிலாக தொகையை செலுத்த விரும்புகின்றனர் அதனால் பெருநிறுவனங்கள் மட்டுமல்லாத சிறுநிறுவனங்கள் கூட இவ்வாறான கடனட்டை வாயிலான பணபரிவர்த்தனைக்கு மாறவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகின்றது
ஆயினும் இந்த புதிய ரொக்கபணமற்ற பணபரிமாற்ற சூழ்நிலையின்வாயிலாக அதிகஅளவு ரொக்கபணப்புழக்கத்தினால் ஏற்படுகின்ற பாதுகாப்பு இடர்கள் தவிர்க்கப்படுகின்றது எந்தவொரு நிறுவனமும் தம்முடைய விற்பணைவருமானத்தில் வரி போன்றவைகளை கணக்கிடுவது எளிதாகின்றது மேலும் தம்முடைய நிறுவனத்தின் ரொக்கஓட்ட நடவடிக்கையை கட்டுபடுத்துவது மிகஎளிதாகின்றது இவ்வறான நிறுவனங்களின் விற்பணை பலமடங்கு உயர வாய்ப்பாகின்றது இந்நிறுவனங்கள் கணக்கு பதிவியலிற்கு என தனி மென்பொருள் எதையும் உருவாக்கி செய்த செயலை மீண்டும் செய்திடாமல் நடைபெற்ற நடவடிக்கைகளை தானியங்கியாக கணக்கு பதிவியலிற்கு எடுத்து கொள்கின்றது மிகமுக்கியமாக அதிகஅளவு வாடிக்கையாளர்களை கவருவதற்கு இந்த வழிமுறை பேருதவியாய் விளங்கிடுகின்றது

ஒரு சிறந்த தனியார் மெய்நிகர் வலைபின்னலை தெரிவுசெய்வது எவ்வாறு

VPN என சுருக்கமாக குறிப்பிடும் தனியார் மெய்நிகர் வலைபின்னல்களின் (virtual private network) சேவையானது ஒவ்வொரு நாளும் மென்மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது கூடவே அதற்கான கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன அதனோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் புதிதுபுதிதாக அச்சுறுத்துகின்றன. அதனால் ஒரு சிறந்த தனியார் மெய்நிகர் வலைபின்னல்எதுவென தெரிவுசெய்வதற்கு பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றிடுக
முன்பெல்லாம் மிகமெதுவான இணைப்பென்றால் யாரும் கேள்வி எதுவும் எழுப்பாமல் இணையச்சேவை கிடைத்தால் போதுமென பயன்படுத்திவந்தார்கள் ஆனால் தற்போது இணைய இணைப்பெனில் உடனடியாக அடுத்த நொடியேகிடைக்கவேண்டும் என விரும்புகின்றனர் அதனால் கட்டணம் செலுத்துவதற்கேற்ப விரைவான இணைப்பு கிடைக்கின்றதாஎன சரிபார்த்து கொள்க ஒன்றுக்கு மேற்பட்ட சேவையாளர்கள் ஒருங்கிணைந்த வலைபின்னல் சேவையாக இருந்தால் ஒரு சேவையாளர் பழுதடைந்தாலும் மற்றொரு சேவையாளரை கொண்டு செயல் தடைபடாமல் இருக்கும் அதனால் மெய்நிகர் வலைபின்னலானது ஒன்றுக்கு மேற்பட்ட சேவையாளர்களை கொண்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க இறுதியாக கட்டணமில்லாத இலவச சேவைகள் நன்றாக உள்ளது இருந்தபோதிலும் மிககுறைந்த செலவில் அதிக பயனுள்ளதாக எது உள்ளது என சரிபார்த்து தெரிவுசெய்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

கணிதத்தை எளிதாகவும் விரைவாகவும் கற்பதற்கான Mathway எனும் பயன்பாடு ஒரு அறிமுகம்

கணக்கு என்றாலே பெரும்பாலானமாணவர்கள் காததூர்ம ஓடிவிடும் நிலையில் எளிதாக இனியதாக கணிதத்தை கற்பதற்கு Mathway எனும் பயன்பாடு உதவுகின்றது இந்த பயன்பாடு பயன்படுத்த மிகஎளிதானது எந்தவொரு கணக்கிற்குமான விடை மிகவிரைவாக இதில் கிடைக்கின்றது எந்தவொரு கணிதத்திற்கான தீர்வும் படிப்படியாக பல்வேறு படிமுறைகளின் வாயிலாக இதல் தீர்வுசெய்யப் படுகின்றது இதில் எந்தவொரு சிக்கலான கணக்குகளையும் கற்பவர்களின் மனதில் நிலையாக நிற்குமாறு வரைகலை வாயிலான தீர்வு கிடைக்கின்றது மிகமுக்கியமாக trigonometric characters, roots, power exponential characters, special symbols போன்ற அனைத்து எழுத்துருக்களும் நாம் விரும்பிய விசைகளின் வாயிலாக கொண்டுவருமாறான வசதி இதில் உள்ளது இது கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் கிடைக்கின்றது
வாருங்கள் கணிதத்தை சுலபாக கற்பதற்குhttps://www.mathway.com/என்ற இணையதளபக்கத்திற்கு
மிகமுக்கியமாக இது நாம் பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு பதிப்பாகவும் கிடைக்கின்றது

வியாபாரத்திற்கும் மாணவர்களுக்கும் பயன்படும் mind mapping எனும் கருவிகள்

எந்தவொரு புதிய செயல்திட்டத்திலும் நம்மனதில் தோன்றிடும் புதிய எண்ணங்களை புத்தாக்கங்களை செயல்வடிவமாக கொண்டுவருவது என்பதுதான் மிகவும் சிக்கலான செயலாகும் புத்தாக்க சிந்தனையை உருவவரைபடமாக கொண்டுவருவதே இதனுடைய முதல் படிமுறையாகும் இவ்வாறான நிலையில் நமக்கு கைகொடுக்கவருவதுதான் mind mapping எனும் கருவிகளாகும் அவைகளைபற்றிய அறிமுகம் பின்வருமாறு
1.மிகஎளியதாக இருக்கவேண்டும்என விரும்புவோர்கள் முதலில் விருப்பம் Bubl.usஎனும் mind mapping கருவியாகவேஇருக்கும் இது இணையத்தின் அடிப்படையிலான கருவியாகும் அதாவது இதனை பயன்படுத்திகொள்வதற்கென தனியாக பயன்பாடு எதனையும் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்திடதேவையில்லை இதனுடைய இணைய தளபக்கத்திற்குசென்று நாம் விரும்பிய செயல்திட்டத்தினை இதில் கணக்கெதுவும் துவங்காமலேயேஉருவாக்கிட லாம்கட்டணமி்ல்லாமலேயே அனைத்து சாதனங்களிலிருந்தும்இதனை பயன்படுத்தி கொள்ளலாம் JPG, PNG, HTML ஆகியவற்றின் நாம்விருமபும்வடிவமைப்பில் உருவாக்கிடலாம் மேலும்விவரங்களுக்கு https://bubbl.us/என்ற இணையமுகவரிக்கு செல்க
2.முழுவதுமான செயல்திட்டத்தினை முன்கூட்டியேகட்டமைக்கப்பட்ட பலகத்தின் துனையுடன் விரைவாக உருவாக்கிடவிரும்புவோர்கள் Mindjet எனும் mind mapping கருவி முதல் தேர்வாக இருக்கும் நம்முடைய எண்ணத்தைபிடித்து மேம்படுத்தி கட்டமைத்திட உதவுவதோடுமட்டுமல்லாமல் மற்றவர்ளுடன் மற்ற தளங்களுடன் பயன்பாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் பேருதவியாக விளங்குகின்றது இது 30 நாட்கள் இலவச மாக பயன்படுத்தி திருப்தியுற்றால் கட்டணத்துடன் இதனை பயன்படுத்தி கொள்க மேலும்விவரங்களுக்குhttp://www.mindjet.com/என்ற இணையமுகவரிக்கு செல்க
3. MindMeister எனும் mind mapping கருவி யானது தனிநபராக அல்லது குழுவாக எண்ணங்களை புத்தாக்கங்களை விரைவாக செயல்திட்டமாக உருவாக்குவதற்கும் விரைவாக படக்காட்சியை உருவாக்கிடவும் குழுக்கூட்ட நடவடிக்கை யின் முடிவில்அக்கட்டத்தின் அறிக்கையை தயார் செய்திடவும்இது பயனுள்ளதாக விளங்கின்றது இது Basic, personal, Pro, Business ஆகிய நான்கு வகைகளாக கிடைக்கின்றது இவற்றுள் நாம் விரும்பியதை தெரிவுசெயது கொள்க மேலும்விவரங்களுக்குhttp://www.mindmeister.com/என்ற இணையமுகவரிக்கு செல்க
4. கட்டணமில்லாத வகையில் இருக்கவேண்டும் எனவிரும்புவோர் Coggleஎனும் mind mapping கருவியை தெரிவுசெய்து கொள்க இதனுடைய உருவப்படங்களைநம்முடைய கோபபகத்திற்குல் என இடைமுகம் வழியாக சேமித்தகொள்ளலாம் மேலும் நாம்செய்திடும் எந்தவொரு திருத்தமும் உடனுக்குடன் தானாகவே சேமித்துகொள்ளும் வசதி கொண்டது இதனுடைய உருவப்படங்கள் நெகிழ்வுதன்மையுடனும் திறன்மிக்கதாக loops and branches எனும் வசதியின் துனையுடன் எந்த தளத்திலும் உலாவரமுடியும்
5. வியாபார நோக்கத்திற்காக மட்டும் தேவையென விரும்புவோர் களுக்குMindomo எனும் mind mapping கருவி பொருத்தமானதெரிவாகும் தலைப்புகளை சேர்த்தல் இழுத்து சென்று விடுவதன்வாயிலாக இதனுடைய arrow, park-related links, notes , filesஆகியவற்றின் துனையுடன்அவைகளை எளிதாக நம்முடைய செயல்திட்டத்தில் இணைத்துகொள்ளலாம் இதனை தளங்களுக்கிடையே இடங்களுக்கிடையே மக்களுக்கிடையேஎளிதாக பகிர்ந்து கொள்ளலாம்
மேலும்விவரங்களுக்குhttps://www.mindomo.com/என்ற இணையமுகவரிக்கு செல்க
இவ்வாறே XMind ,iMindMap ,WiseMapping, MindMaple,  Freemind ஆகிய mind mapping கருவிகளும் நாம் பயன்படுத்திகொள்ள தயாராக இருக்கின்றன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க

Previous Older Entries