ரூபி எனும் கணினிமொழியின் அடிப்படை பண்புகளை அறிந்து கொள்க

ரூபி என்பது ஒரு எளிய பொருள்நோக்குஅடிப்படையிலான செயல்நிறைந்த மிகவலுவான திறமூல கணினிமொழியாகும். இது விண்டோ லினக்ஸ்,மேக் ஆகிய அனைத்து இயக்க-முறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது பியர்ல்,பைத்தான் ஆகிய கணினி மொழிகளை போன்ற சேவையாளர் கணினியில் பயன்படுத்தபடுகின்ற கற்பதற்கு எளிய கணினி-மொழியாகும் இது DB2,MYSQLஎன்பன போன்ற தரவுதளங்களுடன் எளிதாக இணைந்து செயல்படும் திறன்கொண்டது மேலும் இது Tk,GTK,OpenGLபோன்ற வரைகலை பயனாளர் இடைமுகப்பினை ஆதரிக்கின்றது அதுமட்டுமல்லாது HTML என்பதை உட்பொதிந்த, நேரடியாகXMLஉடன் பயன்படுத்தமுடிந்த நன்றாக வடிவமைக்கப்பட்ட வலைபின்னல் இணைப்பை ஆதரிக்கும் அருமையானதொரு கணினிமொழியாகும் இதனுடைய குறிமுறைவரிகளை கொண்ட கோப்பினை கட்டளைவரிகளின் வாயிலாக செயல்படுத்திடமுடியும் .இதில் மாறிலிகளை தனியாக முன்கூட்டியே அறிவிக்கத்-தேவையில்லை அதற்குபதிலாக மாறிலிகளுக்கான மதிப்புகளை மட்டும் நேரடியாக அளித்தாலே போதுமானதாகும் இதில் எழுத்துச்சரங்களை ” “ எனும்இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் குறிப்பிட்டால் போதும் மேலும் forஎனும் கன்னியை பயன்படுத்தி திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களை அதற்கு பதிலாக அந்த செயலை எத்தனைமுறை செயற்படுத்திடவேண்டும் என 4.Times என்றவாறு கட்டளைவரிகளை உருவாக்கினால் போதும் இதில் ஒரு தொகுப்பான கட்டளைவரிகளை ( ) எனும் பிறையடைப்பிற்குள் குறிப்பிட்டால் போதும் தொகுப்பான தரவுகளை sort ,each,join,index,include ஆகிய வழிமுறைகளில் குறிப்பிடலாம் மேலும் தொகுப்பான தரவுகளை ஒவ்வொருதரவிற்கும் ஒரு பெயரென தனித்தனியாக ஒதுக்கீடு செய்து குறிப்பிட்ட திறவுச்சொல்லின் வாயிலாக நாம் விரும்பும் செயல்களில் பயன்படுத்தி கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது சரி தவறு ,ஆம் இல்லை ,சமம் சமமன்று போன்று நிபந்தனைகளை இதில் எளிதாக கையாளமுடியும்
பின்வருவது ஒரு சி ++ எனும் கணினிமொழியின் நிரல்தொடராகும்
#include
using namespacestd;
int main()
{
cout <<”அனைவருக்கும் வணக்கம் “
<<end;
return0;
}
பின்வருவது ஒரு ரூபி எனும் கணினிமொழியின் நிரல் தொடராகும்
puts "அனைவருக்கும் வணக்கம்"
இவ்விரண்டில் ரூபி மிகவும் எளிய கணினிமொழிதானே வாருங்கள் இன்றே கற்று இதனை நம்முடைய தேவைக்கு பயன்படுத்தி கொள்வோம்

கலை ,அறிவியில் ஆகியவற்றின் ஆய்விற்கு பயன்படும்Tout-Fait:எனும் இணைய மின்னிதழ்

நவம்பர்1999 இல் CyberBOOK+ எனும் இலாப நோக்கமற்ற கலை அறிவியில் ஆய்வுக்கான ஆய்வகமானது முதன்முதலில் கல்விக்கான Tout-Fait:எனும் இணைய மின்னிதழை வெளியிட்டது இந்த Tout-Fait எனும் பிரெஞ்சு சொல்லின் பொருள் பயன்படுத்திடதயாராக இருக்கும்(Redy made) என்பதாகும் இது கலை அறிவியலிற்கு மட்டுமல்லாது மற்ற துறைகளை் தொடர்பான செய்திகளும் இதில் வழஙகப்படுகின்றன. இதில் செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள், நேர்முகஉரையாடல்கள், புதியவரைபடங்களில் முக்கியமானபடங்கள் ஆகியவை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இதில் இடம் பெறுகின்றன சிந்தனையாளர்களும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் தத்தமது துறைசார்ந்த கட்டுரைகளை இதில் வெளியிடச்செய்கின்றனர் இதில் வரலாறு மனிதஇனம் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர் இது ஒரு நிலையான வெளியீடாக அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழ்நிலை படுத்தி தேடுதல், விரிவாக்கம், கருத்துகளை பதிவுசெய்தல், தினமும் புதிய தலைப்பு செய்திகள், மெய்நிகர் கூட்டஅரங்கு போன்றவைகளினால் மேம்படுத்தப்-பட்டுவருகின்றது நாமும் நம்முடைய ஆய்வுக்-கட்டுரைகளை இந்த தளத்தில் சமர்ப்பித்து நம்முடைய கருத்துகளை பொதுமக்கள் பயனடையுமாறு செய்திடமுடியும் http://toutfait.com/ எனும் இந்த இணைய தளத்திற்கு வாருங்கள்வந்து பயனடையுங்கள்
5

ஆங்கிலத்தில் ஐயம்திரிபற அறிந்து நல்ல எழுத்தாளனாக வளருவதற்கு உதவிடும் dailywritingtips எனும் இணையதளத்தினை பயன்படுத்திகொள்க

நாம் வெளியிடுகின்றமின்னஞ்சல் ,வலைபூ,சமூகவலைதளம் ஆகியவற்றின் வாயிலாக நம்முடைய கருத்துகளை பார்வையிடும் எவரும் மிக்கச்சரியாக நாம் கூறவிழையும் செய்திகளை தவறின்றி எளிதில் புரிந்து கொள்ளுமாறு செய்வது மிகமுக்கியமாகும் அதிலும் மாணவர், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர், மேலாளர்,வழக்குரைஞர் ஆகியோரில் நாம் யாராக இருந்தாலும் ஒருசில நேரத்தில் ஆங்கிலத்தில் தவறின்றி எழுத தடுமாற நேரிடும் அவ்வாறானவர்களுக்கு உதவவருவதே dailywritingtips எனும் இணைய தளமாகும் இந்த தளமானது ஆங்கிலத்தில் எழுதுவதற்கு அடிப்படையான எழுத்துகள் ,இலக்கணம், நிறுத்தக்குறிகள், கட்டுரை எழுதுதல் ஆகியவற்றை எளிதாக பரிந்து பயன்படுத்திடுமாறு விளக்கமளிக்கின்றது இந்த இணைய பக்கத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் இதன் வலதுபுறம் Business Writing, Mistakes, Expressions, Fiction Writing, Freelance Writing, General, Grammar, Grammar 101, Misused Words, Punctuation, Spelling, Style, Vocabulary, Word of the Day, Writing Basics, Usage Review. ஆகிய பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டுள்ள பட்டியல் இருக்கின்றன அவற்றுள் நாம் விரும்புவதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தொடர்புடைய விளக்கங்களை அறிந்து கொள்க மேலும் இந்த பட்டியலிற்கு மேல்பகுதியில் நாம் விரும்பும் சொல்அல்லது சொற்றொடர் தொடர்பாக விளக்கத்தை அறிந்த கொள்வதற்கான தேடிடும் பெட்டியில் உள்ளீடு செய்து தேடி அறிந்த கொள்க வாருங்கள் இன்றே http://www.dailywritingtips.com/எனும் இதனுடைய இணைய பக்கத்திற்கு சென்று பதிவுசெய்து கொண்டு மேலும் விவரங்களை அறிந்து பயன்பெறுக
4

கணினியின் செயல்வேகம் அதிகரித்திடுவதற்காகPC Decrapifierஎன்பதை பயன்படுத்தி கொள்க

PC Decrapifierஎன்பதை பயன்படுத்தி மெதுவாக இயங்கும் நம்முடைய கணினியை மிக அதிக வேகத்துடன் செயல்படுமாறு செய்திடமுடியும் அதற்காகhttps://www.pcdecrapifier.com/download எனும் இணையதளத்திற்கு சென்று நமக்கு பொருத்தமான பதிப்பை தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை இயங்க செய்திடுக ஆயினும் இதனை தனியாக நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திட தேவையில்லை மேலும் ஒற்றையான கணினியெனில் இலவசமாகவும் ஒன்றிற்கு மேற்பட்ட கணினியெனில் 25 டாலர் நன்கொடையுடனும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் இதனை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து சேமித்தபின்னர் இந்த கோப்பினை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குதல் செய்து இதனை செயல்படச்செய்திடுக உடன்விரியும் திரையில் Analyze to start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் நம்முடைய கணினியில் செயல்படும் தேவையற்ற பயன்பாட்டு மென்பொருட்களின் விவரங்கள் பட்டியலாக விரியும் அவைகளுள் நாம் பயன்படுத்திட வேண்டாம் என்பவைகளை மட்டும் தெரிவுசெய்துகொண்டு Remove Selectedஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதுவக்கம் செய்திடுக தற்போது கணினியின் செயல்வேகம் அதிகமாக இருப்பதை காணலாம்

கடைசியாக விட்டஇடத்திலிருந்து இணையத்தில் தொடர்ந்து உலாவரலாம்

மிகப்பிரபலமான கூகுளின் குரோம் எனும் இணைய உலாவிதான் தற்போது நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய இணைய உலாவலுக்கு பயன்படுத்திவருகின்றோம் இதில் ஏராளமான வசதிவாய்ப்புகள் இருந்தாலும் நாம்அனைவரும் வழக்கமான செயலை மட்டுமே பயன்படுத்தி கொண்டு இதிலுள்ள மற்ற வசதிகளை பயன்படுத்திடாமல் விட்டுவிடுகின்றோம் நாம் நம்முடைய அலுவலகம் அல்லது வீட்டை விட்டு வெளியில் இருக்கும்போது நம்முடைய கைபேசி வாயிலாக மிகமுக்கியமான இணைய தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தை பார்வையிட்டுவிட்டு வேறு அவசரமான பணி வந்ததால் அப்படியே அந்த பக்கத்தின் மிகுதியை பார்வையிடாமல் விட்டுவிடுவோம் எனக்கொள்வோம் அதன்-பின்னர் நம்முடைய அலுவலகம் அல்லது வீட்டிற்கு வந்தபின்னர் தொடர்ந்து அதே-இணைய தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தை பார்வையிட விரும்புகின்றோம் எனில் முதலில் இந்த கூகுளின் குரோம் எனும் இணைய உலாவியில் பதிவுசெய்துகொண்டு நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவக்கி கொள்க அதன்பின்னர் ஏற்கனவே பார்வையிட்ட இணையதளத்தின் அதே பக்கத்தை பார்வையிடுவதற்காக நம்முடைய கணக்கின் வாயிலாக இந்த கூகுளின் குரோம் எனும் இணைய உலாவியில் நம்முடைய இணைய உலா பணியை துவங்கிடுக பின்னர் இதில்உள்ள பட்டியலையும் தொடர்ந்து History என்பதையும் சொடுக்குக அல்லது விசைப்பலகையில்Ctrl+H என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்துக உடன் நாம் இதற்கு முன் இந்த இணைய உலாவியை பயன்படுத்திய கணினி அல்லது திறன்பேசி அல்லது கைபேசி ஆகியவற்றின் விவரங்களை பட்டியலாக சிறுசிறு உருவப் பொத்தான்களாக திரையின் மேல்பகுதியில் காண்பிக்கும் அவைகளுள் நாம் கடைசியாக பயன்படுத்திய சாதனத்தின் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் இவைகளின் ஒவ்வொன்றிலும் குரோம் எனும் இணைய உலாவியின் நாம் திறந்து பார்வையிட்ட இணையதள பக்கங்களின் விவர பட்டியல் உள்ளடங்கியிருப்பதால் நாம் சொடுக்குதல் செய்த சாதனத்தில் இணைய உலாவந்த விவரபட்டியல் விரியும் இங்கு கணினியில் பயன்படுத்தியது அல்லது கைபேசி சாதனங்களில் பயன்படுத்தியது ஆகிய இருதாவிபொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்கியபின் Open all எனும் பொத்தானை சொடுக்குக உடன் நாம் இணையஉலாவந்த அனைத்து இணையபக்கங்களும் தாவிபக்களாக விரியும் அவைகளுள் சமீபத்தில் நம்மால் பார்வையிடப்பட்ட இணைய தள பக்கத்தைமட்டும் சொடுக்குதல் செய்துநாம் இணையஉலாவலை விட்ட இடத்திலிருந்து தொடரமுடியும்

துவக்கநிலையாளர்களுக்கான ஆண்ட்ராய்டு பற்றிய பயிற்சிகையேடுபகுதி-1-ஆண்ட்ராய்டு ஒரு கண்ணோட்டம்

ஆண்ட்ராய்டு என்றால் என்ன?
ஆண்ட்ராய்டுஎன்பது திறன்பேசிகள் கைக்கணினிகள் போன்ற செல்லிடத்து பேசி சாதனங்களுக்கான ஒரு திற மூல லினக்ஸ் அடிப்படையிலான இயக்க- முறைமையாகும்.
கூகுள் எனும் நிறுவனத்தின் தலைமையில், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனமும் பிற நிறுவனங்களும் சேர்ந்து இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையை உருவாக்கினர்.
இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையானது செல்லிடத்து பேசி சாதனங்களுக்கான பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்துவதற்கு ஒரு ஒருங்கிணைந்த அனுகுமுறையை நமக்கு வழங்குகின்றது அதாவது நிரலாளர்கள் இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமைக்கு தேவையான பயன்பாடுகளை மட்டும் உருவாக்கினால் போதும் இவ்வாறு உருவாக்கப்பட்ட பயன்பாடுகளானது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையில் செயல்படும் பல்வேறு வகையான சாதனங்களிலும் தானாகவே அவை இயங்குவதற்கான திறனை இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையானது அவைகளுக்கு வழங்குகின்றது.
கூகுள் நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கும் கட்டின் (Software Development Kit(SDK)) முதல் பீட்டா பதிப்பு 2007இல் வெளியிடப் பட்டது.பின்னர் ஆண்ட்ராய்டு 1.0 எனும் இதனுடைய முதல் வணிக பதிப்பு , செப்டம்பர் 2008 ல் வெளியிடப்பட்டது
ஜூன் 27, 2012 அன்று கூகுள் நிறுவனத்தின் உள்ளீடு அல்லது வெளியீடு (I / O ) மாநாட்டில், ஜெல்லி பீன் எனும் இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் அடுத்த புதிய பதிப்பு, 4.1 ஐ வெளிடுவதாக அறிவித்தது. இந்த ஜெல்லி பீன் ஆனது செயல்பாடு , செயல்திறன் ஆகிய இரண்டிலும் பயனாளர் இடைமுகத்தை ஒரு கூடுதலான மேம்படுத்துவதில் முதன்மை நோக்கமாக கொண்டதாகும் .
இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் மூலக் குறிமுறைவரிகளானது இலவச, திறமூல மென்பொருள் உரிமங்களின் கீழ் கிடைக்கின்றது. கூகுள் நிறுவனமானது பெரும்பாலான மூலக்குறிமுறைவரிகளை அப்பாச்சி உரிமம் பதிப்பு 2.0 உம் இதர உரிமைகளும் எனும் அடிப்படையில் வெளியீடு செய்து வருகின்றது இதனுடைய லினக்ஸ் கெர்னல் மாற்றங்களானது குனு பொது மக்கள் உரிமம் பதிப்பு.2 இன் கீழ் அமைகின்றது
ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் முக்கிய வசதிகள்
இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையானது ஆப்பிள் 4ஜீஎஸ்ஸிற்கு இணையாக போட்டியிடும் ஒரு சக்திவாய்ந்த பல்வேறு வசதிகளை ஆதரிக்கும் இயக்க-முறைமையாக விளங்குகின்றது .அவ்வாறான பல்வேறு வசதிகளை பற்றிய சில விவரங்கள் கீழே அட்டவணையாக வழங்கப்பட்டுள்ளன:
வசதிகள்
விளக்கங்கள்
அழகான பயனாளர் இடைமுகம்(BeautifulU I)
இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையின் அடிப்படை திரையானது பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் ஒரு அழகான பயனாளர் இடைமுகப்பை வழங்குகின்றது
வலைபின்னல் இணைப்பு(Connectivity)
GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS, Bluetooth, Wi-Fi, LTE, NFC ,WiMAX.ஆகிய பல்வேறு இணைப்புகளை கொண்டது
சேமிப்பகம்(Storage)
சாதனங்களில் தரவுகளை சேமித்து வைத்திடுவதற்காக SQLite எனும் எடைகுறைவான தொடர்பு தரவுதளத்தினை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது
பல்லூடக ஆதரவு (Media support)
இது H.263, H.264, MPEG-4 SP, AMR, AMR-WB, AAC, HE-AAC, AAC 5.1, MP3, MIDI, Ogg Vorbis, WAV, JPEG, PNG, GIF, and BMPஆகிய பல்வேறு பல்லூடகங்களை ஆதரிக்கின்றது
செய்திகள்(Messaging)
இது SMS , MMSஆகிய செய்திகளை அனுப்பிடுகின்ற பெறுகின்ற வசதிகளை கொண்டது
இணைய உலாவல் (Web browse)
இது HTML5 , CSS3ஆகியவற்றை ஆதரிக்கும் Chrome’s V8 Java-Scripஎனும் பொறியுடன் சேர்ந்து open-source WebKit layou எனும்பொறியின் அடிப்படையில் இணையஉலாவலை அனுமதிக்கின்றது
பலதொடுதிரை (Multi-touch)
துவக்கத்தில் கைபேசியில்HTC Hero என்பதுபோன்ற பல-தொடு திரைவசதியாக இருந்தது பின்னர்ஆண்ட்ராய்டின் சொந்த வசதியை ஆதரிக்கின்றது
பல செயல் (Multi-tasking)
இது பயனாளர் ஒருசெயலிலிருந்து அடுத்த செயலிற்கு தாவிச்சென்றிடவும் ஒரேசமயத்தில் பலசெயல்களை செயல்-படுத்திடும் திறனும் கொண்டது
உருவ அளவை சரி செய்துகொள்ளும் பொருட்கள் (Resizable widgets)
இதன் திரையில் பயன்படும் பொருளின் உருவத்தை சரிசெய்து மற்ற பயன்பாடுகளுடன் கூடுதலான பயன்பாடுகளை திரையில் காண்பிக்குமாறு இதில் அமைத்து கொள்ள முடியும்
பலமொழி பயன்பாடு (Multi-Language)
இது உரையை ஒருபக்கத்திலிருந்து செல்லுமாறும் இருபக்கமும் செல்லுமாறும் ஆதரிக்கின்றது
GCM
இது கூகுள் மேககணிசெய்தி (Google Cloud Messaging (GCM)) எனும் சேவையை கொண்டு பயன்பாடு உருவாக்கு-பவர்கள் குறுஞ்செய்தி தரவுகளை மற்ற ஆண்ட்ராய்டு சாதனங்களை பயன்படுத்து பவர்களுக்கு தனியாக பயன்பாடுகள் இல்லாமலேயே அனுப்பும் வசதியை அளிக்கின்றது
Wi-Fi Direct
இது மிக மேம்பட்ட அலைவரிசையுடன் நேருக்குநேர் பயன்பாடுகளை இணைத்திடும் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது
Android Beam
இதில் ஒரு மிகப்பிரபலமான NFCஇன் அடிப்படையிலான தொழில்நுட்பமானது பயனாளர் NFCயை இயலுமை செய்த செல்லிடத்து பேசிகளில் தொடுதலை பகிர்ந்து கொள்ளலாம்
ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்
வழக்கமாக ஆண்ட்ராய்டு மென்பொருளின் மேம்படுத்தும் கட்டினை பயன்படுத்தி ஜாவா மொழியில் இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் உருவாக்கப்பட்டதாகும்
இவ்வாறான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை ஒருமுறை உருவாக்கிவிட்டால் போதும் , பின்னர் இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதாக தொகுத்து Google Play அல்லது அமோசான் பயன்பாட்டு கடைகளின் மூலம் விற்பணை செய்திட முடியும்.
தற்போது இந்த ஆண்ட்ராய்டு இயக்கமுறையானது உலகம் முழுவதும் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன் கணக்கான செல்லிடத்து பேசி சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இது எந்த செல்லிடத்து பேசி தளத்திலும் பேரளவில் முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் மிகவேகமாக வளர்ந்து வரும் ஒரு அமைவாகும் . மேலும் தற்போது உலக முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் புதிய ஆண்ட்ராய்டு சாதனங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்ட்ராய்டு பயிற்சிகையேடானது எவ்வாறு ஒரு ஆண்ட்ராய்டு பயன்-பாட்டினை உருவாக்கி தொகுப்பது என நாம் கற்றுகொள்ளும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும். நாம் இந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் நிரலாக்க சூழல் அமைப்பிலிருந்து துவங்கி பிறகுபடிப்படியாக ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் பல்வேறு தன்மைகளை அறிந்து கொள்வதற்கான பயிற்சிகளை இது வழங்குகின்றது
-தொடரும்

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-3

ஒரு படவில்லையின் பின்புலத்திலும் உரையிலும் என்னவகையான வண்ணக்கலவை பயன்படுத்தவேண்டும்?
பார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கேற்ப உள்ளிணைத்த படங்கள் இதில் அமைந்துள்ளனவா?
குறிப்பிட்ட உரை அல்லது படம் ஆனது அனைத்து படவில்லைகளிலும் உள்ளிணைக்கப்-பட்டுள்ளதா?
நாம் காண்பிக்கும் படவில்லைகாட்சியை பார்வையாளர்கள் மேற்கோள்-செய்வதற்கு ஏற்ப அதற்கென படவில்லைகளில் எண்களை குறிப்பிட்டுள்ளோமா?
படவில்லையின் பின்புல வரைபடங்கள் சரியாக அமைத்துள்ளோமா ?
நாம்கூறவிழையும் கருத்துகளை தெரிந்து கொள்ளுமாறு தொடர்ச்சியான ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகள் அமைக்கப்பட்டுள்ளவா ?
ஆகிய கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் படவில்லை காட்சிகளை நாம் வடிவமைத்திடவேண்டும் இந்நிலையில் நாம் படவில்லை மேலாளர்(slide master) என்ற கருத்துருவை நம்முடைய கவணத்தில் கொள்ளவேண்டும் உடனடியாக அப்படியாயின் படவில்லை மேலாளர் என்றால் என்ன?என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க

1
1

லிபர் ஆஃபிஸின் ரைட்டரின் ஒரு பக்க பாவணை போன்று லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் மற்ற படவில்லைகளை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்தி கொள்ளும் துவக்க-புள்ளியையே படவில்லை மேலாளர்(slide master) என அழைப்பர். இந்த அடிப்படையி-லிருந்தே அனைத்து படவில்லைகளின் அடிப்படை வடிவமைப்புகளையும் கட்டுபடுத்தும் அமைவாக இதுவிளங்குகின்றது பொதுவாக ஒரு படவில்லை காட்சியானது ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லை மேலாளர்(slide master)களை கொண்டிருக்கும் மிகமுக்கியமாக இந்த லிபர் ஆஃபிஸ்5.2 இல் ஸ்லைடு மாஸ்டர், மாஸ்டர் ஸ்லைடு, ,மாஸ்டர் பேஜ் ஆகிய மூன்று பெயர்கள் ஒரே கருத்துருவிற்காக பயன்படுத்தப் படுகின்றன ஆயினும் நாம் இங்கு ஸ்லைடு மாஸ்டரை பற்றி மட்டுமே காணவிருக்கின்றோம்
பின்புல வண்ணம், வரைகலை படங்கள் போன்ற உருவங்கள்ஆகியவை சேர்ந்த பின்புலம்..தலைப்பும் முடிவும் , உரைகளின் வரைச்சட்ட அளவு ,உரைகளின் வடிவமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுதியான பண்பியல்புகளின் வரையறை கொண்டதே ஒரு ஸ்லைடு மாஸ்டராகும். இந்த ஸ்லைடு மாஸ்டரின் அனைத்து பண்பியல்புகளையும் அதனுடைய ஸ்டைல்கள் கட்டுபடுத்துகின்றன.இந்த ஸ்டைலின் அடிப்படையிலேயே நாம் உருவாக்கிடும் எந்தவொரு புதிய படவில்லையின் வடிவமைப்பும் அமைந்திருக்கும் ஆயினும் தனிப்பட்ட படவில்லையை ஸ்லைடு மாஸ்டரில் பாதிப்படையாத வண்ணம் அதன் உள்ளடக்கங்களை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து கொள்ளமுடியும் இந்த ஸ்லைடு மாஸ்டரில் காட்சி பாவணை, உருவப்படபாவணை ஆகிய இரண்டுவகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட படவில்லையின் காட்சியில் பாவணையை திருத்தம் செய்திடமுடியும் ஆனால் புதிய படவில்லையில் அவ்வாறு காட்சி பாவணையை திருத்தம் செய்திடமுடியாது
இம்ப்பிரஸானது ஒரு தொகுதியான ஸ்லைடு மாஸ்டர்களுடன் நாம் பயன்படுத்திடு-வதற்காக தயாராக உள்ளது இந்த மாஸ்டர் பேஜ் ஆனது Used in This Presentation, Recently Used, Available for Useஆகிய மூன்று பகுதிகளாலானதாகும் இந்த பெயர்களுக்கு அடுத்துள்ள குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதிலுள்ள கட்டைவிரல்அளவேயுள்ள படவில்லைகளை காட்சியாக விரியச்செய்திடலாம் அல்லது தேவையில்லையெனில் அவைகளை மறையச்செய்திடலாம் நாம் புதியதாக படவில்லையை உருவாக்கி கொள்வதற்கு தயாராக மாதிரி பலகங்ளானது பட்டியலாக இந்த Available for Use என்ற பகுதியில் உள்ளன அவற்றுள் நாம் விரும்பியதை மட்டும் தெரிவு செய்து சொடுக்குதல் செய்து நம்முடைய புதிய படவில்லை காட்சியை உருவாக்கிடுவதற்காக துவங்கிடலாம் நல்ல அனுபவம் பெற்றபிறகு நாமே புதிய படவில்லைகளின் மாதிரி பலகங்களை உருவாக்கி இந்த பட்டியலில் சேர்த்திடமுடியும்
புதிய ஸ்லைடு மாஸ்டரை உருவாக்கிடுதல்
இதனை முதன்முதல் உருவாக்கிடுவதற்காக திரையின்மேலே கட்டளை பட்டையில் View ==> Master ==> Slide Master==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது View ==> Tool bars ==> Master View==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
2
2

அதற்குபதிலாக பக்கப்பட்டையின் மாஸ்டர்பேஜ் பகுதியிலுள்ளவைகளுள் நாம் விரும்புவதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit Masterஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Master Viewஎனும் கருவிகளின் பட்டி திரையின் மேல்பகுதியில் தோன்றிடும் அதில் New Masterஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லை பலகத்தில் புதியபடவில்லை மேலாளர் ஒன்று தோன்றிடும் பின்னர் இந்த படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Rename master எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் இந்த படவில்லைக்கு புதிய பெயரை உள்ளீடு செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டியில் Close Master View என்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்ஸின் வழக்கமான பதிப்பு திரைக்கு கொண்டு வருக அனைத்து படவில்லை-களிலும் இந்த ஸ்லைடு மாஸ்டரை செயற்படுத்திடுவதற்காக பக்கப்பட்டையிலுள்ள Master Pages எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Master Pages எனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to All Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
ஒவ்வொரு படவில்லையிலும் தனித்தனி ஸ்லைடு மாஸ்டரை செயல்படுத்திடு-வதற்காக தேவையான படவில்லைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டபின்னர் ஒவ்வொரு முறையும் பக்கப்பட்டையிலுள்ள Master Pagesஎனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to Selected Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
3
3
ஒருசில நேரங்களில் ஒரே படவில்லையில் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்லைடு மாஸ்டர்களை செயற்படுத்திட விரும்புவோம் அந்நிலையில் திரையின் மேலே கட்டளை பட்டையில் Format => Slide Design=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Slide Design என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் ஏற்கனவே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஸ்லைடு மாஸ்டர்கள் தோன்றிடும் மேலும்ஸ்லைடு மாஸ்டர்களை தோன்றிட செய்வதற்காக இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Loadஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Load Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் templateஎனும் பகுதியின் கீழுள்ள வைகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Slide Designஎனும் உரையாடல் பெட்டியிலும் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாஸ்ட்ர் பேஜ் என்பதில் Available for useஎனும் துனைப்பகுதியில்அனைத்தும் சென்று வீற்றிருக்கும் நாம் நம்முடைய படவில்லையில் செயல்படுத்திய இந்த ஸ்லைடு மாஸ்டரில் பின்புல வண்ணம் பின்புல பொருட்கள் உரையின் பண்பியல்புகள்,தலைப்பு அடிப்பகுதியின் அளவுகள் படவில்லையின் அளவுகள் ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும் இவ்வாறு மாறுதல்கள் செய்துகொள்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில் View => Master => Slide Master=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் நாம் மாறுதல் செய்திட விரும்பும் படவில்லை பலகத்தின் ஸ்லைடு மாஸ்டரை தெரிவுசெய்து கொள்க பின்னர் இந்தஸ்லைடு மாஸ்டரின் பணிபுரியும்காலிஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் மாறுதல்கள் செய்திட விரும்பும் படவில்லையின் பொருளின் மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் தேவையானவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல் செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டையில் Close Master Viewஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் View=> Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இந்த வழக்கமான திரைக்காட்சியில் படவில்லைகளில் செய்யப்படும் மாறுதல்கள் ஸ்லைடு மாஸ்டரில் பின்னர் மாறுதல்கள் செய்திடமுடியாது அதனால் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்காக படவில்லை-யில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Default Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குகஅல்லது படவில்லையில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Default எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கு
4
4

அதன் பின்னர் படவில்லையின் பின்புலத்தினை மாறுதல்கள் செய்திடுவதற்காக தேவையான படவில்லையை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளை பட்டையில் Format => Page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் Slide =>Page Setup=> என்றவாறு கட்டளை-களை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் விரியும் Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப்பொத்தானின் திரையை விரியச்செய்க பின்னர் Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் தேவையான பொருட்கள் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது விசைப்-பலகையில் F11எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது Line and Fillingஎனும் கருவிகளின் பட்டியலில் உள்ள Styles and Formattingஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்
5
5

அல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formattingஎனும்பகுதியிலுள்ள Styles and Formatting எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் பட்டியில் Background style என்பதை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Modify எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Background எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இது ஏறத்தாழ Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப் பொத்தானின் திரையை போன்றதேயாகும் இதிலுள்ள Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் None, Color, Gradient, Hatching, or Bitmap. ஆகியவற்றில் தேவையான பொருளை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக உடன்நாம் தெரிவுசெய்ததற்கேற்ற பட்டியில் விரியும் அவற்றுள் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
6
6

படவில்லையில் உருவப்படத்தை உள்ளிணைத்தல்
இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Master => Slide Master=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் ஸ்லைடு மாஸ்டர்களில் நாம் உள்ளிணைக்க விரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Image => From File என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் கோப்புகளை தேடிபிடித்திடும் உரையாடல் பெட்டியில் தேவையான உருவப்படம் இருக்கும் கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு முன்காட்சி பகுதியில் அது சரியாக இருக்கின்றது எனில் Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படம் ஸ்லைடு மாஸ்டரில் உள்ளிணைந்து விடும் இந்த உருவப்படம் பின்புலமாக இருந்தால்தான் நாம் கூறவிரும்பும் செய்திக்கான உரையை பார்வையாளர்கள் படித்திடுமாறு அதன்மீது எழுதமுடியும்இதற்காக ஸ்லைடு மாஸ்டரில் உள்ளஇந்த உருவப்படத்தினை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Arrange => Send to Back => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொள்க அதற்கடுத்ததாக இந்த படவில்லையில் உள்ள ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து திருத்தம் செய்து சரிசெய்வது எனும் செயல் அதிக நேரம் எடுத்துகொள்வதாக அமையும் அதனால் ஒட்டுமொத்தமாக இந்த ஸ்லைமாஸ்டருக்கு என தனியான ஸ்டைலை அமைத்திட்டால் விரைவாக அனைத்தும் அதற்கேற்ப அமைந்துவிடும் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையில் Styles and Formatting எனும் உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ளF11, எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formatting எனும் பகுதியிலுள்ள Styles and Formattingஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Styles and Formattingஎனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Presentation Styles எனும் உரையாடல் பெட்டியானது திரையில் விரியும் அதில் background,background objects,text ஆகிய மூன்றுமுக்கியமான உறுப்புகளின் பாவனைகள் உள்ளன இந்த text Styles என்பதில் Notes, Outline 1 through Outline 9, Subtitle, Title ஆகிய இதனுடைய பாவணைகள் உள்ளன இவைகளின் வாயிலாக Presentation Styles ஐ மாறுதல்கள் செய்து அமைத்து கொள்ளலாம் ஆனால் புதியதை உருவாக்கமுடியாது Image styles என்பது உருவப்-படங்களுக்கு ஆனதாகும்
ஸ்லைடு மாஸ்டரை திருத்தம் செய்வதற்காக அதனை திறந்தால் அதில் Title area for AutoLayouts , Object area for AutoLayouts , Date area , Footer area , Slide number area ஆகிய ஐந்து பகுதிகள் இருப்பதை காணலாம்

Previous Older Entries