வலைபூ ஆசிரியரின் தன்விவரக்குறிப்பு

வலை பூ ஆசிரியரின் தன் விவரகுறிப்பு

நான் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன்.

நான் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே பயின்ற பின் பணியிலிருந்து கொண்டே வணிகவியல் இளநிலைபட்டமும்(B.com) , அடக்கவிலை கணக்கர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் முதுநிலை உறுப்பினராகவும் (FCMA), நிறுமச்செயலர் மாமன்றம் நடத்தும் இறுதிதேர்வில் வெற்றிபெற்று அதில் இளநிலை உறுப்பினராகவும் இருக்கின்றேன்(ACS).

மேலும் நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்ற உந்துதலினால் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தபடும் நிருவாக கணக்கியல் முறை(Management Accounting Practice) பற்றிய முனைவர் பட்ட ஆய்வை பகுதிநேரமாக செய்து முடித்து முனைவர் பட்டம்(Phd) பெற்றுள்ளேன்.

1996 முதல் 1999 வரை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரையிலும் பின்னர் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுவரை கள்ளக்குறிச்சி  கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் கணக்குஅலுவலராகவும் அதன்பின்னர் 2005ஆம் ஆண்டுமுதல் 2007ஆம் ஆண்டுவரையிலும் பின்னர் 2010 ஆம் ஆண்டுமுதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும்  கள்ளக்குறிச்சி  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமை கணக்கராக  பணிபுரிந்துவந்தேன் 2007 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டு வரை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமை கணக்கராக பணி புரிந்து வந்தேன்  2012 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தலைமை கணக்கராக  பணிபுரிந்து வருகின்றேன் ..

விவசாயிகளின் நிலைபற்றியும், மக்களின் ஆரோக்கியமான உடல் நிலை பற்றியும் அவ்வப்போது தினமனி நாளிதழின் நடுபக்க கட்டுரை எழுதி வருகின்றேன்.

கணினியிலும் தமிழிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் கணினியின் பயன்பாடுகள் பற்றி தமிழ் கம்யூட்டர் என்ற திங்கள் இருமுறைவெளியாகும் இதழில் கணினி பற்றிய கட்டுரைகளும், ஓப்பன் ஆஃபிஸ்,லிபர் ஆஃபிஸ் ,கட்டற்ற பயன்பாடுகள் பற்றிய தொடர்கட்டுரைகளும் தற்போது எழுதிவருகின்றேன்.

இதன் அடிப்படையில் 24.03.2012 அன்று  தமிழ் இதழ்கள் பதிப்பாளர் சங்கம்  எனக்கு 2012ஆம் ஆண்டிற்கான பயனெழுத்து படைப்பாளி  என்ற விருதினை வழங்கியுள்ளது  என்ற செய்தியினை மிக மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

மேலும்

1.எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9,

2.வியாபாரத்தில் எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும்,

என்பன போன்ற பாமரனும் கணினியை பயன் படுத்திகொள்ளும் வகையில் கணினிமென்பொருள் பற்றிய இரு புத்தகங்கள் நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் சென்னை என்ற நிறுவனத்தின் மூலம் அக்டோபர் 2010 ஆம் ஆண்டில் வெளியிடபட்டுள்ளன.

அதுமட்டுமின்றி

1.www.arugusarugu.blogspot.inஎன்ற என்னுடைய வலைபூவில் பொதுவான தகவல்களையும், சிறுசிறு கதைகளையும், சட்டங்களை பற்றிய எளிய விளக்கமும் இதுவரையில் சுமார் 300 பதிவுகளும்

2.www.vikupficwa.wordpress.com என்ற என்னுடைய வலைபூவில் எளிய தமிழில் கணினிபற்றிய தகவல்களை இதுவரையில் சுமார் 2311 பதிவுகளும்,

3.www.skopenoffice.blogspot.com என்ற என்னுடைய பிரிதொரு வலைபூவில்  எளிய தமிழில்  ஓப்பன் ஆஃபிஸ் எனும் பயன்பாடு பற்றிய விளக்க கையேடாக இதுவரையில் 93 பதிவுகளும்

ஆகிய என்னுடைய இணைய வலை பூக்களில்(Web Blog), அவ்வப்போது எழுதி வருகின்றேன்

என்னுடைய மின்னஞ்சல் முகவரி ,

1.vikupficwa@yahoo.co.in  2. Kuppansarkarai641@gamil.com 3.vijikup@rediff.com 

முதுமுனைவர்.ச.குப்பன்

 

 

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. TamilTally
  அக் 03, 2011 @ 03:21:54

  உங்கள் பதிவு பயன் தரும் என்பதில் ஐயமில்லை.

  டேலி பற்றிய புதிய வலைப்பூ tamiltally.blogspot.com

  அமைத்துள்ளேன்.வருகையும் ,கருத்தையும் எதிர்நோக்கும்.

  மறுமொழி

 2. NRS. Rajkumar
  நவ் 25, 2011 @ 16:06:49

  தமிழ் கம்ப்யூட்டரில் வெளிவந்த தங்களது கட்டுரைகளைப் படித்து பயனடைந்திருக்கிறேன். நன்றி.

  மறுமொழி

 3. krishnamoorthy.s
  மார்ச் 10, 2012 @ 08:32:38

  தங்களின் முதல் http://www.arugsarugu..blpgspot.com என்பது திறக்க முடியவில்லை

  மறுமொழி

 4. NRS. Rajkumar
  மார்ச் 25, 2012 @ 06:15:48

  பயனெழுத்துப் படைப்பாளி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. K.. N. Sankara Narayanan
  மே 30, 2012 @ 10:40:39

  what a fantastic job you have done to tamil community by simplying most of the common doubts lingering in their minds. Thanks and Regards. K.N. Sankara Narayanan

  மறுமொழி

 6. perumalrajdpr
  ஜூன் 11, 2012 @ 13:17:28

  பயனெழுத்துப் படைப்பாளி விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ் கம்ப்யுட்டர் இதழில் இது தொடர்பான செய்தியை படிக்கும் போதே வாழ்த்த வேண்டும் என நினைத்தேன்.சரியான தொடர்பு ஏதும் இல்லை. இன்றே தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். தங்களை வாழ்த்துவதில் மிக மகிழ்கிறேன். உங்கள் சேவை தளராது தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   டிசம்பர் 31, 2012 @ 02:29:23

   நன்றி. என்னுடைய எளிய தமிழில் கணினி தகவல்(www.vikupficwa.wordpress.com ) என்ற வலைபூவிற்கு தாங்கள் வருகைபுரிந்து ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி மேலும் (www.arugusarugu.blogspot.in )என்ற என்னுடைய மற்றொரு வலைபூவையும் பார்வையிட்டு தங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
   என்றும் தங்கள் அன்புள்ள நண்பன்
   ச.குப்பன்

   மறுமொழி

 7. tamiluzhavan
  மே 28, 2013 @ 09:39:11

  கணினித்தமிழுக்கு ஒரு இனிய சோலை. தெளிந்த நீரோடை. சற்று தாகம் தணிந்தது. திறநிலை கணிமைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். வணக்கம்

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   மே 29, 2013 @ 15:24:50

   மிக்க நன்றி நண்பரே.மேலும் (www.arugusarugu.blogspot.in )என்ற என்னுடைய மற்றொரு வலைபூவையும் பார்வையிட்டு தங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
   என்றும் தங்கள் அன்புள்ள நண்பன்
   ச.குப்பன்

   மறுமொழி

 8. M.SHAJAHAN
  அக் 17, 2013 @ 10:17:56

  I read your arugusarugu for computer informations. very useful for computer operating.

  மறுமொழி

 9. புவனேஷ் குமார்
  டிசம்பர் 10, 2013 @ 10:00:38

  தங்களின் இந்த சேவை எனக்கும் என்னைப் போன்றோருக்கும் பல மடங்கு உதவியாய் இருக்கும். தங்க‌ளின் இந்த சிறப்பான சேவை மேலும் தொடர எம் நல்வாழ்த்துக்கள் தோழரே!!!

  மறுமொழி

 10. K.N. Sankara Narayanan
  டிசம்பர் 14, 2013 @ 10:51:38

  I am a regular reader of your mail and website and wish to say that I have benefitted a lot. Thanks for your efforts in simplyfying even the toughest subject.
  Many many thanks to you.
  Regards.
  K.N. Sankara Narayanan

  மறுமொழி

 11. சோ.அப்பூதி
  பிப் 08, 2014 @ 08:53:57

  சிறந்த பணி! வாழ்த்துக்கள்!
  சோ.அப்பூதி

  மறுமொழி

 12. பூச்சரம்
  மார்ச் 10, 2014 @ 02:59:09

  தங்கள் பங்களிப்பு தமிழுக்கு வளம் சேர்ப்பதாகும். உங்கள் பதிவுகளில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் யாவும் நீங்களே உருவாக்கியது போல் தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் சொற்களை பயன்படுத்தினால் தமிழுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  இங்கு பாருங்கள் http://thamizhchol.blogspot.in/

  மறுமொழி

 13. gurumoorthy
  ஜூலை 15, 2014 @ 15:55:27

  உங்கள் இடுகை எதுவும் படிக்கவில்லை.எனினும் உங்கள் நோக்கம் உயர்ந்த்து.வாழ்த்துக்கள்.அனைத்தும் படிப்பேன்….

  மறுமொழி

 14. sri
  அக் 10, 2014 @ 09:28:54

  உங்கள் இடுக்கைகள் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. இது போன்ற பதிவுகள் எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லும் உங்களுக்கு நன்றி.

  மறுமொழி

 15. தட்சணா மூர்த்தி. பா
  ஏப் 08, 2015 @ 11:08:55

  வாழ்த்துக்கள் மாமா. உங்கள் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன. தமிழில் இது போன்ற கட்டுரைகள் மிகவும் குறைவாகவே உள்ளன, அதனை ஈடுகட்டும் விதமாக தங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குறியது. தொடரட்டும் உங்கள் சேவை!

  மறுமொழி

 16. T.N.MURALIDHARAN
  செப் 24, 2015 @ 01:44:36

  உங்கள் கட்டுரைகளை தமிழ் கம்ப்யூட்டரில் படித்து வருகிறேன்.நீங்கள் எழுதிய அக்சஸ் தொடரை தொகுத்து வைத்திருக்கிறேன்.பொதுவாக அக்சஸ் பயன்பாடு குறைவாகத் தான் காணப்படுகிறது. பலருக்கு அக்சஸ் பற்றி தெரிய வே இல்லை .நான் உங்கள் கட்டுரை மூலம் விரிவாக தெரிந்து கொண்டேன்.

  மறுமொழி

 17. LAKSHMI V
  டிசம்பர் 14, 2015 @ 10:52:09

  Thank you very much sir. Very useful blogs. Hats off to you sir.

  மறுமொழி

 18. LAKSHMI V
  டிசம்பர் 14, 2015 @ 10:53:11

  Hats off to you Sir. Very useful blogs. Thanks a lot Sir.

  மறுமொழி

 19. senthil kumar
  மார்ச் 03, 2016 @ 06:48:54

  அருமை கலைஞரே

  மறுமொழி

 20. nagarajan
  ஏப் 03, 2016 @ 11:15:54

  லினக்ஸில் முதன்முதலாக காலடி வைத்திருக்கும் எனக்கு மிகவும் பயனுள்ளதக உள்ளது. லிபர் ஆபிஸில் நெடில் உயிர்மெய்யெழுத்துக்களும் shri என்ற கிரந்த எழுத்தும் டைப் செய்வது எப்ப்டி என்று விளக்கயும்.Shri என்ற எழுத்து special characterலும் இல்லை.

  மறுமொழி

 21. K.Kumar
  ஜூலை 03, 2016 @ 12:46:12

  வணக்கம். ச.குப்பன் அவர்களுக்கு இன்றுதான் தங்கள் கட்டுரையை கண்டேன் மிக்க மகிழ்ச்சி க.குமார் விழுப்புரம்

  மறுமொழி

 22. Barkavi-Sivane
  நவ் 30, 2016 @ 05:24:34

  வாழ்க வளமுடன்.. தமிழ்கம்ப்யூட்டர் பயனுள்ளவையாக இருந்தது.

  சிவபார்கவி.. துரை.தியாகராஜ்

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   நவ் 30, 2016 @ 11:47:05

   மிக்க நன்றி
   முனைவர் சகுப்பன்

   மறுமொழி

   • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
    ஆக 24, 2017 @ 08:34:38

    Dear Friend
    I got the opportunity to visit your website. I am really astonished. It is a great achievement by you. You r my role model. After visiting your website, I observed that you are becoming role model for many students and also for the people who want to achieve from rural and also for the people who are not having any support. My request is it is the right time for u think about your service after retirement. You are having the skill and knowledge that should be benefited to the young people who wants to achieve. Who really a wonderful person. My best wishes for your continuous improvement and achievement
    Your loving friend K.P.GANDHI. CA CHEYYAR CO-OPERATIVE SUGAR MILLS..

 23. RAMESH
  டிசம்பர் 21, 2016 @ 14:51:45

  L¦² Tt±V RLYpLÞdÏ Su±. G]dÏ
  Nikon Camera Fx Format Dx format ®j§VôNm
  Tt± ùR¬®dLÜm GuàûPV ªu]gNp
  ØLY¬ srstudio237@gmail.com Su± S.WúUx
  SR vÓ¥úVô-LPjço RÚU׬ UôYhPm.635303

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: