புதியவர்களுக்கு ஆண்ட்ராய்டு-பயிற்சிகையேடு பகுதி-6 வளங்களை நிருவகித்தலும் அனுகுதலும்

நல்லதொரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டினை உருவாக்குவதற்காக ஏராளமான பொருட்கள் உள்ளன. அவைகளுள் பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளைத்தவிர உருவப்படம், வண்ணம், புறவடிவமைப்பை வறையறுத்தல் ,பயனாளர் இடைமுகச் சரம், அசைவூட்டும் கட்டளைகள் போன்றவைகளை குறிமுறைவரிகளை பயன்படுத்தி நிலையான உள்ளடக்கங்கள் போன்று பல்வேறு இதர வளங்களை பயன்-படுத்துவதில் நாம் அதிக கவணம் செலுத்திடவேண்டும். இந்த வளங்களனைத்தும் நம்முடைய செயல்திட்டத்தில் res/எனும் கோப்பகத்தில் தனித்தனி துனைக்-கோப்பகங்களில் எப்போதும் வைத்து பராமரித்து வரப்படுகின்றன இந்த பயிற்சியானது நம்முடைய பயன்பாடுகளில் இந்த வளங்களை எவ்வாறு நிருவகித்து பயன்படுத்தி கொள்முடியும் அதற்கு மாற்றான வளத்தினை எவ்வாறு மிகச்சரியாக பயன்படுத்தி கொள்ளமுடியும் என விவரிக்கவிருக்கின்றது
வளங்களை நிருவகி்த்தல்
ஒவ்வொரு வகையான வளத்தினையும் res/ எனும் நம்முடைய செயல்திட்டத்தின் தனித்தனியான ஒரு குறிப்பிட்ட துனைக்கோப்பகத்தில் வைத்திடவேண்டும் உதாரணமாக ஒரு எளிய செயல்திட்டத்திற்கான கோப்பு அடுக்குவரிசைகளானது பின்வருமாறு
MyProject/
src/
MyActivity.java
res/
drawable/
Icon.png
layout/
activity_main.xml
info.xml
values/
strings.xml
இதிலுள்ள res/ எனும் கோப்பகம் இதனுடைய துனைகோப்பகங்களின் அனைத்து வளங்களையும் உள்ளடக்கியுள்ளது இங்கு ஒரு உருவப்பட வளமும் இரு புறவமைப்பு வளங்களையும் ஒரு சரவள கோப்பும் நம்மிடம் இருக்கின்றன. பின்வரும் அட்டவணை இந்த res/ கோப்பகத்தில் உள்ள அனைத்து துனைக்கோப்பகங்களில் உள்ள அனைத்து வளங்களை பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது அட்டவணை
கோப்பகங்கள் மற்றும் வளங்களின் வகை விவரங்கள்

anim/ XMLகோப்புகளானவை அசைவூட்டங்களின் பண்பியல்புகளை வரையறுக்கின்றன இவை res/anim/ எனும் கோப்பகத்தில் சேமிக்கப்பட்டு R.anim எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது

color/ XMLகோப்புகளானவைஒரு வண்ண பட்டியலின் நிலையை வரையறுக்கின்றன இவை res/acolor/ எனும் கோப்பகத்தில் சேமிக்கப்பட்டு R.color எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது.

drawable/ png, .jpg, .gif அல்லது XML போன்ற உருவப்படகோப்புகளானவை bitmaps, state lists, shapes, animation drawables ஆக உருமாற்றப்-படுகின்றன. இவை res//drawable/எனும் கோப்பகத்தில் சேமிக்கப்பட்டு R..drawable எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது

layout/ XMLகோப்புகளானவைஒரு பயனாளர் இடைமுகபுறவமைப்பை வரையறுக்கின்றன இவை res/layout/ எனும் கோப்பகத்தில் சேமிக்கப்பட்டு R.layout எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
menu/
XMLகோப்புகளானவை Options Menu, Context Menu, or Sub Menu போன்ற பயன்பாட்டு பட்டியல்களை வரையறுக்கின்றன இவை res/menu/ எனும் கோப்பகத்தில் சேமிக்கப்பட்டு R.menu எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது

raw/ இவைகளின் rawஎனும் வடிவமைப்பில் சேமிப்பதற்கு சுயமான கோப்புகளாகும் வளங்களின் நாம் Idயுடன்சேர்த்து Resources.openRawResource() என்பதை அழைத்திடவேண்டும் இதுவே raw எனும் கோப்புகளை திறந்திடுவதற்கு R.raw.filename ஆகும்

values/ XMLகோப்புகளானவை strings, integers, colors என்பனபோன்ற சாதாரண மதிப்பு உள்ளடக்கங்களாகும் உதாரணமாக இங்கு வழக்கமான வளங்களுக்கான சில கோப்புகளின் பெயர்களை நாம் இந்த கோப்பகத்தில் உருவாக்கமுடியும்
arrays எனும் வளங்களுக்கான arrays.xml எனும் கோப்பு இதனை R.array எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
integers எனும்வளங்களுக்கான aintegers.xml எனும் கோப்பு இதனை R.integers எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
bools எனும்வளங்களுக்கான bools.xml எனும் கோப்பு இதனை R.bools எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
colors எனும்வளங்களுக்கான colors.xml எனும் கோப்பு இதனை R.colors எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
dimens எனும் வளங்களுக்கான dimens.xml எனும் கோப்பு இதனை R.dimens எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
strings எனும் வளங்களுக்கான strings.xml எனும் கோப்பு இதனை R.strings எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது
styles எனும்வளங்களுக்கான styles.xml எனும் கோப்பு இதனை R.styles எனும் இனத்திலிருந்து அனுகப்படுகின்றது

xml/ சுயேச்சையான XMLகோப்புகளானது Resources.getXML()என்பதை அழைத்து இயக்கநேரத்தில் படிக்கமுடியும் மேலும் இயக்க நேரத்தில் பயன்படுத்தி கொள்ளப்படும் பல்வேறு வகையான கட்டமைவு கோப்புகளை சேமித்து கொள்ளமுடியும்

பதிலான வளங்கள்
நம்முடைய பயன்பாட்டில் குறிப்பிட்ட சாதாரன கட்டமைவிற்கு ஏற்ற பல்வேறு பதிலான வளங்களைபயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன உதாரணமாக பல்வேறு திரைத்துல்லியத்திற்கான பதிலான உருவப்படங்களை வரைவதற்கான வளங்களையும் பல்வேறு மொழிகளுக்கான பதிலான சரங்களையும் நாம் நம்முடைய குறிமுறைவரிகளில் உள்ளிணைத்து கொள்ள-முடியும் இதுஇயக்கநேரத்தின்போது ஆண்ட்ராய்டானது நம்முடைய பயன்-பாடுகளுக்கான நடப்பில் நாம் பயன்படுத்திடும் குறிப்பிட்ட சாதனத்தின் கட்டமைவிற்கு பொருத்தமானவைகளை கண்டுபிடித்து அதனை மேலேற்றம் செய்து செயல்படச்செய்கின்றது ஒரு தொகுதியான வளங்களுக்காக குறிப்பிட்ட பதிலீடுகளுக்கான கட்டமைவை குறிப்பிடுவதற்கு பின்வரும் படிமுறையை பின்பற்றிடுக
படிமுறை-1 -. எனும் பெயரிலிருந்து res/ எனும் கோப்பகத்திற்குள் ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்கிடுக இங்குesources_name என்பது மேலே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு layout, drawableபோன்ற வளங்களுள் ஏதேனும் ஒரு வளங்களின் பெயராக இருக்கவேண்டும் மேலும் இங்கு qualifier என்பது இந்த வளங்களை பயன்படுத்தி கொள்வதற்கானதனிப்பட்ட கட்டமைவை குறிப்பதாகும் வெவ்வேறு வகையான வளங்களுக்கான ஒரு முழுமையான qualifier எனும் பட்டியல்களை வெளியிடப்பட்ட ஆவணங்களில் நம்மால் சரிபார்த்திடமுடியும்
படிமுறை-2 பின்னர் தொடர்புடைய பதிலான வளங்களை புதிய கோப்பகத்தில் சேமித்திடுக பின்வரும் எடுத்துக்காட்டில் கண்டுள்ளவாறானஇயல்புநிலை கோப்புகளை போன்றுமிகச்சரியான பெயரைஇந்த வளங்களின் கோப்புகளுக்கு அமைத்திடவேண்டும் ஆனால் இந்த கோப்புகள்பதிலிடானவைகளுக்கு இவைகளின் உள்ளடக்கங்கள் இருக்கவேண்டும் உதாரணமாக உருவப்படக்-கோப்பின் பெயர் மற்ற உருவப்பட கோப்பின் பெயர் போன்று இருந்தாலும்இதன் திரைத்துல்லியம் மிகஅதிகமாக இருக்கவேண்டும்
பின்வரும் குறிமுறைவரிகள் இயல்புநிலைதிரையும் மிகஅதிக திரைத்-துல்லியத்துடனான பதிலீட்டு உருவப்படங்களும் குறிப்பிடுகின்ற உருவப்-படங்களாகும்
MyProject/
src/
MyActivity.java
res/
drawable/
icon.png
background.png
drawable-hdpi/
icon.png
background.png
layout/
activity_main.xml
info.xml
layout-ar/
main.xml
values/
strings.xml
பின்வரும் குறிமுறைவரிகள் ஒரு இயல்புநிலை மொழியும் அராபி மொழிக்கான பதிலீடு புறவமைப்பை குறிப்பிடும் மற்றொரு புறவமைப்பு எடுத்துக்காட்டாகும்
MyProject/
src/
MyActivity.java
res/
drawable/
icon.png
background.png
drawable-hdpi/
icon.png
background.png
layout/
activity_main.xml
info.xml
layout-ar/
main.xml
values/
strings.xml
வளங்களை அனுகுதல்
நாம் ஒரு பயன்பாட்டினை உருவாக்கிடும்போது நம்முடைய XMLஇன் இடஅமைவு கோப்புகள் அல்லது நம்முடைய குறிமுறைவரிகள் ஆகியவற்றில் ஏதனும் ஒன்றின் வாயிலாக வரையறுக்கப்பட்ட வளங்களை அனுகுவதற்கு நமக்கு தேவையாகும்
குறிமுறைவரிகளில் வளங்களை அனுகுதல்
நம்முடைய ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை மொழிமாற்றம் செய்திடும்போது R.எனும் இனம் உருவாக்கப்பெறுகின்றது இதில் நம்முடையres/எனும் கோப்பகத்தில் தயார்நிலையில் உள்ள அனைத்து வளங்களக்குமான சுட்டிகளை உள்ளடக்கங்களாக கொண்டுள்ளன வளங்களின் சுட்டியை அல்லது வளங்களின் பெயரையும் துனைக்கோப்பகத்தையும் பயன்படுத்திஇந்த வளங்களை அனுகுவதற்கு R.எனும் இனத்தை பயன்படுத்தி கொள்ளமுடியும்
எடுத்துகாட்டு
res/drawable/myimage.png என்பதை அனுகுவதற்கும் ஒரு உருவப்பட காட்சியை அமைப்பதற்கும் பின்வரும் குறிமுறைவரிகளை பயன்படுத்திகொள்க
ImageView imageView = (ImageView) findViewById(R.id.myimageview); imageView.setImageResource(R.drawable.myimage);
இங்கு ஒரு இடஅமைவு கோப்பில் idmyimageviewஎன்பதுடன் உருவப்படக்காட்சியை வரையறுப்பதை பெறுவதற்கு R.id.myimageview என்பதைமுதல்குறிமுறைவரியில் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாவது குறிமுறைவரியில் /res என்பதன்கீழ் தயார்நிலையில் உள்ள வரைபடத்தின் துனைக்கோப்பகத்தில் myimage எனும் பெயருடன் உருவப்படத்தை பெறுவதற்கு R.drawable.myimageஎன்பதை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது
எடுத்துகாட்டு
பின்வரும் es/values/strings.xmlஎன்பதின் வரையறுத்தலில் அடுத்தஎடுத்துகாட்டினை கருத்தில் கொள்க

அனைவருக்கும் வணக்கம்!

இப்போது நாம் ஒரு வளங்களின் சுட்டியை பயன்படுத்தி செய்தியின்சுட்டியுடன் ஒரு TextView என்பதை உரையில் அமைத்திடமுடியும்

TextView msgTextView = (TextView) findViewById(R.id.msg);
msgTextView.setText(R.string.hello);
எடுத்துகாட்டு
பின்வரும் வரையறையுடன்கூடிய res/layout/activity_main.xmஎன்பதன் இடவமைப்பை கருத்தில் கொள்க

இந்த பயன்பாட்டின் குறிமுறைவரிகளானது ஒரு செயலிற்காக onCreate() எனும் வழிமுறையில் பின்வருமாறு இந்த இடவமைவில் மேலேற்றம் செய்யலாம்
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
setContentView(R.layout.main_activity);
}
XMLஇற்குள் வளங்களை அனுகுதல்
பின்வரும் வளங்களின் XML res/values/strings.xm எனும் கோப்பினை கருத்தில் கொள்க அது ஒரு வண்ண வளங்களாகவும் சரத்தின் வளங்களாகவும் சேர்ந்து உள்ளன

#f00
Hello!

இப்போது உரையின் வண்ணத்தையும் உரையின் சரத்தையும் பின்வரும் இடஅமைவில் அமைப்பதற்கு நாம் இந்த வளங்களை பயன்படுத்திகொள்ளமுடியும்

இப்போது திரும்பவும் முந்தைய பயிற்சிபகுதிக்கு சென்றால் “அனைவருக்கும் வணக்கம்” என்றநம்முடைய எடுத்துகாட்டில் விளக்கம் அளித்ததை நன்கு தெளிவாக புரிந்து கொள்ளமுடியும் மேலும்அந்த பயிற்சிப்பகுதியில் நன்கு ஐயம் திரிபற புரிந்துகொள்ளுமாறு அனைத்து அடிப்படைக்கருத்துகளும் விளக்கப் பட்டுள்ளதை கண்டிப்பாக தெரிந்து கொள்வீர்கள் அதனால் ஒரு அடிப்படை-நிலையிலேயே பல்வேறு வளங்களை எவ்வாறு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது எனமுந்தைய பயிற்சி பகுதியில் சரிபார்த்து கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலைநிறுத்தம் செய்திடலாம்

நண்பர்கள் அல்லது பிறநபர்களுக்கு மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பிடுவோம்போதுஅது முழுமையாக இல்லாமல் அறைகுறையாக இருக்கின்ற நிலையில் நாம் அம்மின்னஞ்சலை தவறுதலாக அனுப்பியிருந்தால் அதனை திரும்ப பெறுவதற்காக நாம் undoஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் மின்னஞ்சல்அனுப்பியதை நிறுத்தம் செய்திடமுடியாது ஆனாலும் அவ்வாறு தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை வெறும் 30 நொடிகளில் திரும்ப பெறமுடியும் அதற்காக இந்த மின்னஞ்சல் பயன்பாட்டில் BEFORE எனும் வாய்ப்பினை செயல்படுத்தி தயாராக இருக்குமாறு செய்திருக்கவேண்டும் இதற்கான படிமுறை பின்வருமாறு முதலில் நம்முடைய ஜிமெயிலி்ன் Inboxஎனும் மின்னஞ்சல் உள்வருகை பெட்டியை திறந்து கொள்க

பின்னர் இந்த மின்னஞ்சல் உள்வருகை பெட்டித்திரையின் மேலே பற்சக்கரம் போன்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில்Settings எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் general எனும் தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த தாவிப்பொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக இதன்பின்னர் general எனும் தாவிப்பொத்தானின் திரையின் கீழ்பகுதிக்கு இடம்சுட்டியை நகர்த்தி சென்று  Send and Archiveஎன்பதன் கீழுள்ள Undo Send எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்திடுகமேலும் அதற்கருகில் Enable Undo Send sendஎன்பதன்கீழ் cancellation period என்பதற்கருகிலுள்ள கால அவகாசத்திற்கான கீழிறங்கு பட்டியலில் நாம் விரும்பும் கால அளவை அதிக பட்சம் 30 நொடிவரை மின்னஞ்சலை நீக்கம் செய்யவேண்டும் என தெரிவுசெய்து கொள்க

இதன்பின் மீண்டும் இடம்சுட்டியை கீழே நகர்த்தி சென்று Save Changes ,  Click on Save Changes ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு மின்னஞ்சலொன்றினை தயார்செய்து அனுப்புவதற்கு தயாராகும்போது Undo , View Message ஆகிய இருவாய்ப்புகள் மேல்மீட்புபட்டியலாக தோன்றிடும் அவற்றுள் Undo எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து மின்னஞ்ல் அனுப்பிடும் செயலை நீக்கம்செய்திடுக

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-9-வரைகலை பொருட்களை நிருவகித்தல்-தொடர்ச்சி

லிபர் ஆஃபிஸ் இம்பிரஸின் படவில்லையில் உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருட்களை தெரிவுசெய்து சரியான நிலையில்அமையச்செய்வதற்காக சரிசெய்திடும் கருவிகள் நாம் பயன்படுத்திடுவதற்கு தயாராக உள்ளன இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் உள்ள Alignmentஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்தகருவியானது கருவிகளின் பட்டையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars > Align Objectsஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்இந்த கருவியானதுLine and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் தோன்றிடும் அல்லது இம்பிரஸின் படவில்லையில் உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருட்களை தெரிவுசெய்துகொண்ட பின்னர் சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Alignmentஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Alignmentஎன்பதில் உள்ள Left, Centered, Right, Top, Center, Bottomஆகிய துனை வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
ஒருசிலநேரங்களில் குறிப்பிட்ட பொருளானது படவில்லையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றிடவேண்டும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லைகளில் மிகச்சரியாக ஒரேமாதிரியான இடத்தில் மட்டுமே அமையவேண்டும் என்றிடும்போது Grid , Snap Linesஆகிய இரு தொழில்நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன
இந்த Grid என்பது திரையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளை பட்டையில் View > Gridஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Gridஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Gridஎனும் வாய்ப்பில் உள்ள Display Grid, Snap to Grid, Grid to Frontஆகிய துனைவாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து இந்தவாய்ப்பினை அமைவுசெய்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில்Tools > Options > LibreOffice Impress > Gridஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
இந்தSnap Lines என்பது திரையில் காணவில்லையெனில் திரையின் மேலே கட்டளை பட்டையில் View > Snap Linesஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Snap Lines என்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Snap Lines என்பதில் உள்ள Display Guides, Snap to Snap Lines, Snap Lines to Frontஆகிய துனை-வாய்ப்புகளில் தேவையான மட்டும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் ஒரு புதிய snap pointஅல்லதுline உருவாக்கிடுவதற்காக இம்பிரஸின் படவில்லையில் காலியான பகுதியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Insert Snap Point/Line என்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்New Snap Object எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதிலுள்ள Positionஎன்பதில் X ,Y ஆகிய அச்சுகளின் அளவுகளையும் Type என்பதில் Point, என்பது கோடுஎனில்Vertical ,Horizontal ஆகியவற்றில் தேவையானதையும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக
குறிப்பு படவில்லையில் கட்டம்கட்டமாக கோடுகள் இருந்தால்அதனடிப்படையில் பொருட்களை பிடித்து இழுத்து சென்று சரிசெய்து அமைத்திடமுடியும் இவை படவில்லையில் தோன்றிட செய்வதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Rulersஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
snap pointஐ அல்லதுline ஐ மாறுதல்கள் செய்திடுவதற்காக மாறுதல்கள் செய்திட விரும்புவதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Edit Snap lineஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் X ,Y ஆகிய அச்சுகளின் அளவுகளை தேவையானவாறு மற்றி யமைத்துகொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக இதனை நீக்கம் செய்வதற்கு இதே சூழ்நிலைபட்டியல் Delete Snap lineஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்துகொள்க
படவில்லையில்உள்ள பொருட்களை தேவையானவாறு அடுக்கிவைத்திடுவதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Arrangeஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Arrangeஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Positionஎனும் கருவிகளின் பட்டையில் உள்ள Bring to front, Bring forward, Send backwards, Send to back,In front of object, Behind object ,Reverse ஆகிய கருவிகளில் தேவையான கருவியை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லைகளின் பொருட்களின் சுற்றெல்லையிலுள்ள glue points என்பதன் வாயிலாக அவைகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி நிலையாக இணைப்பு செய்து flowchart, organization chart, schematics, அல்லதுdiagrams ஆகியவற்றை உருவாக்கிடுவதற்காக கோடுகளை பயன்படுத்துவதைவிட connectorஎன்பதை பயன்படுத்துவது சிறந்தது என பரிந்துரைக்கப் படுகின்றது
படவில்லையிலுள்ள பொருட்களுக்கு இடையே இந்த connectorஎன்பதனை உருவாக்கு-வதற்காக திரையின் மேலேDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Connector என்பதற்கருகிலுள்ள முக்கோணவடிவ உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலான இணைப்புக்கருவிகளில் தேவையான இணைப்புக் கருவியை மட்டும் தெரிவுசெய்து கொண்டு இணைக்கவேண்டிய பொருட்களில் ஒன்றின் சுற்றெல்லையில் உள்ளglue points என்பதில் வைத்து சொடுக்குதல் செய்து பிடித்து கொண்டு அப்படியே பிடித்து இழுத்து சென்று இணைப்பை வரைந்து சென்றுஅப்படியே அடுத்த பொருளின் சுற்றெல்லையில் உள்ளglue points என்பதில் வைத்து பிடியைவிட்டிடுக
இங்கு glue points என்பது ஒரு பொருளை இணைப்புக்கோட்டுடன் இணைத்திட உதவிடும் பொருளின் சுற்றெல்லையில் இருக்கின்றதொரு புள்ளியாகும் இந்தglue points என்பதை கையாளுவதற்காக திரையின் மேலேDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையில்Gluepoints எனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இது திரையில் தோன்றிடவில்லையெனில்திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars >
Gluepoints என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக படவில்லையின் ஒரு பொருளில் இதனை உள்ளிணைத்திடுவதற்காக Gluepointsஎனும் கருவிகளின் பட்டியில் Insert Glue Pointஎனும் கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பொருளின் அளவை சரிசெய்திட Glue point relativeஎனும் கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் 3D Objectsஎனும் முப்பரிமான பொருட்களைகூட கையாளமுடியும் காலியான படவில்லையில்முப்பரிமான பொருளை உருவாக்கிடுவதற்காக திரையின் மேலே Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள3D Objectsஎன்பதற்கருகிலுள்ள முக்கோணவடிவ உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் 3D Objectsஎனும் பட்டியில் தேவையான கருவிப்பொத்தானை தெரிவுசெய்து கொண்டு காலியான படவில்லையில் தேவையான முப்பரிமான உருவத்தை வரைக
இந்த முப்பரிமான கருவிகளின் பட்டையில் திரையில் தோன்றவில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View > Toolbars > 3D-Objects என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படவில்லையில் ஏற்கனவே உள்ள பொருட்களைமுப்பரிமானமாக உருமாற்றிடுவதற்காக தேவையானபொருளை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Convert > To 3Dஅல்லது To 3D
Rotation Object என்றுவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக .அதற்குபதிலாக தேவையான பொருளை தெரிவுசெய்துகொண்டுDrawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ள Extrusion on/offஎனும் கருவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் 3D-Settings toolbarஎனும் முப்பரிமான கருவிகளின் பட்டையில் தேவையான கருவியை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க
படவில்லையிலுள்ளஒரு பொருளை வெவ்வேறு வகையான பொருளாக உருமாற்றம் செய்திடமுடியும் இதற்காக தேவையான பொருளின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Convertஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் To Curve, To Polygon , To Contour, To 3D, To 3D Rotation Object,To Bitmap, To Metafileஆகிய இதனுடைய துனை-வாய்ப்புகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு தேவையானவாறு உருமாற்றிகொள்க
குறிப்பு கருவிகளின் பட்டையில் காலியான இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Visible Buttons.எனும் என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து To Curve, To Polygon , To Contour, To 3D, To 3D Rotation Object, ஆகிய கருவிகளை Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலேயே கொண்டுவரலாம்

9.1
படவில்லையிலுள்ளஒரு பொருளுடன் இடைமுகம் செய்வதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் மேலே Line and Filling toolbarஎனும் கருவிகளின் பட்டையில் Interactionஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Interactionஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் விரியும் Interactionஎனும் உரையாடல பெட்டியில் Action at mouse click என்பதற்கருகிலுள்ள தேவையான செயலை தெரிவுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை சொடுக்குக எந்த செயலும் தேவையில்லையெனில்இதே உரையாடல் பெட்டியில்No action எனும் செயலை தெரிவு செய்து கொண்டுOK எனும் பொத்தானை சொடுக்குக

9.2
படவில்லையிலுள்ள எழுத்துருவை நாம் விரும்பியவாறு வடிவமைத்து மாற்றியமைத்திடலாம் இதற்காக திரையின் மேலே Drawing toolbarஎனும் கருவிகளின் பட்டையிலுள்ளFontwork Galleryஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Fontwork toolbar எனும் கருவிகளின் பட்டையிலுள்ளFontwork Galleryஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Fontwork Galleryஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான மாதிரியைதெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக Fontwork toolbar எனும் கருவிகளின் பட்டை திரையில் தோன்ற-வில்லையெனில் திரையின் மேலே கட்டளைபட்டையில் View >Toolbars > Fontwork என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இந்த கருவி பட்டையிலுள்ள மிகுதியான Fontwork Shape, Fontwork Same Letter Heights, Fontwork Alignment , Fontwork Character Spacingஆகிய கருவிகளை தேவைகேற்ப பயன்படுத்தி கொள்க

9.3
படவில்லையின் பொருட்களுக்கு நாம் விரும்பியவாறு அசைவூட்டம் செய்திடலாம் இதற்காக இவ்வாறு விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொள்க பின்னர் திரையின் பக்கப் பகுதியிலுள்ள Sidebarஎனும் பக்கப்பட்டையிலுள்ள Custom Animationஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து பக்கப்பட்டையிலுள்ள Custom Animationஎன்பதிலுள்ள Add Effect, Remove Effect , Modify Effect, Move Up, Move Down, Preview Effect , Start, Direction, Speed, Automatic preview ,Effect Options ஆகிய வாய்ப்புகளுள் தேவைக்கேற்ப தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொள்க

9.4
அல்லது விரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்-சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Custom Animationஎன்ற வய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையில் Slide Show > Custom Animationஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும்Custom Animation எனும் உரையாடல் பெட்டியின் Entrance, Emphasis,Exit, Motion Paths , Misc Effects , Automatic previewஆகிய தாவிப்பொத்தான்களின் பக்கங்களில் உள்ள வாய்ப்புகளில் தேவைக்கேற்ப தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக

9.5
அவ்வாறே Effect Options எனும் உரையாடல் பெட்டியின் Effect,Timing ஆகிய தாவிப்-பொத்தான்களின் பக்கங்களில் உள்ள வாய்ப்புகளில் தேவைக்கேற்ப தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK எனும் பொத்தானை சொடுக்குக
படவில்லையில் ஏற்கனவே நம்மால் உருவாக்கப்பட்டுள்ள அசைவூட்டத்துடன் கூடிய பொருளை உள்ளிணைத்திடலாம் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert >
Animated Image என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Animationஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதனை தொடர்ந்து நம்மால் உருவாக்கப்-பட்டுள்ள அசைவூட்டத்துடன் கூடிய பொருளை தெரிவுசெய்து கொண்டுApply Object எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் transformationஅல்லது rotation, change color, add அல்லதுremove characters,போன்றவைகளில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து அமைத்துகொள்கஇவ்வாறே தேவையான வெவ்வேறு அசைவூட்டம் கொண்டபொருட்களை உள்ளிணைத்திடுக இது குழுவானது எனில் Animation groupஎன்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானதை பயன்படுத்தி கொள்க இதில் தனித்தனியாக அசைவூட்டம் அமைத்திடுவதற்காக Apply objects individuallyஎனும் உருவப்பொத்தானை சொடுக்குக

9.6

ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையில் உருப்படத்தைஉடனிணைத்து அனுப்பமுடியும்

ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையில் வழக்கமான வேர்டு எக்செல் ஆகிய ஆவணங்களை உடனிணைத்து அனுப்பமுடியும் ஆனால் உருப்படத்தை அவ்வாறு அனுப்பிட சிறிது சிரமமான செயலாகும் பின்வரும் படிமுறைகளைபின்பற்றி ஜிமெயிலில் உருவப்படம் இணைத்திடும் பணியைஎளிதாக்கிடுக இதற்காக நம்முடைய ஜிமெயிலி்ன் Inboxஎனும் மின்னஞ்சல் உள்வருகை பெட்டியை திறந்து கொள்க

1

பின்னர் composeஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து புதிய மின்னஞ்சல் உருவாக்கிடும் திரையை தோன்றிடச்செய்திடுக இந்த திரையின்கீழ்பகுதியில் இடதுபுறத்தில் camera எனும் உருவத்தில் உள்ள  Insert Photoஎனும்வாய்ப்பு உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்Upload Photos எனும் திரையானது Upload எனும் தாவிப்பொத்தானின் திரையுடன் தோன்றிடும் இதிலுள்ள நீலவண்ண  Choose photos to upload எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2

பின்னர் விரியும் கோப்பினை தேடிடும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பு இருக்கும் கோப்பகத்தில் நாம் விரும்பும் உருவப்படத்தை தேடிப்பிடி்தது தெரிவுசெய்து கொண்டு  open.எனும் பொத்தானை இந்த உரையாடல் பெட்டியில் தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய உருவப்படத்தின் அளவிற்கு ஏற்ப ஒருசில நொடிகளில் நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சலில் இந்த உருவிப்படம் உள்ளபொதியப்பட்டு விடும்

3

வருங்கால மின்வணிகம் (e-commerce)

வியாபார உலகில் கடந்த சில வருடங்களாக மிகவேகமாக வளர்ச்சி யடைந்துவருவது மின்வணிகம் (e-commerce)எனும் இணையத்தின் வாயிலான நேரடி விற்பணையாகும் மிகமுக்கியமாக71 சதவிகித விற்பணை நிலையங்களில் இவ்வாறான இணையத்தின் வாயிலான நேரடி விற்பணையே மிகச்சிறந்தது எனஒரு ஆய்வில் தெரியவருகின்றது ஏறத்தாழ 80 சதவிகித மக்கள் இவ்வாறானஇணையத்தின் வாயிலாக பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்திடும் மனநிலையிலேயே உள்ளனர் இதனால் இவ்வாறான மின்வணிகமான இணைய விற்பணையானது அதிக அளவு அலைபேசிவாயிலாக(Mobile Usage) விற்பணைசேவை, புதிய தொழில்-நுட்பங்கள், திறனுடைய சந்தைபடுத்துதல் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளில் வருங்காலங்களில் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன

தற்போது பெரும்பாலான மக்கள் தம்முடைய அனைத்து பணிகளையும் எந்தவிடத்தில் இருந்தாலும் தம்முடைய அலைபேசிவாயிலாகவே செயல்படுத்தி முடித்துகொள்கின்றனர் அதாவது மேஜைக்கணினிக்கு பதிலாக தம்முடைய அனைத்து செயல்களையும் அலைபேசி வாயிலாகவே செயல்படுத்திமுடித்துகொள்ள விழைகின்றனர் அதனால் வியாபார நிறுவனங்கள் தம்முடைய இணைய பக்கங்களை கணினியில் மட்டுமல்லாதுமடிக்கணினி கைக்கணினி அலைபேசிஆகியவற்றில் செயல்படும் திறனுடன் இருந்திடுமாறு வடிவமைக்க வேண்டியது கட்டாயமாகும் மேலும் வழக்கமான இணைய பக்கமட்டுமல்லால் சமூகவலைதளபக்கங்களின் வாயிலாக திறனுடைய சந்தை-படுத்துதலின் மூலம் மின்வணிகமானது மேலும் வளர்ச்சிபெறவுள்ளது
இவ்வாறன இணைய விற்பணையின் பொருட்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருட்கள் விரைவாகவும் குறைந்தசெலவிலும் திறனுடனும் பயனாளர்களை சென்றடைகின்ற வசதிஇதில் கிடைக்கின்றது வருகின்ற2020 ஆண்டில் இந்த மின்வணிகமானது நான்கு டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏறத்தாழ 15 சதவிகிதம் அளவிற்கு சில்லறை விற்பணையானது வளர்ச்சியடையவிருக்கி்ன்றது

ஆங்கிலத்தில் மிக நீண்ட கதைகளுக்கான Longreads எனும் தளம் ஒருஅறிமுகம்

இதில் சுமார் ஒவ்வொரு கதையும் ஏறத்தாழ1500 சொற்களைவிடகூடுதலாக கொண்ட மிகநீண்ட கதைகளையுடைய இணைய தளபக்கமாகும் அதனால் இந்த தளத்தின் பெயரே Longreads என அமைக்கப்பட்டது இதில் புதினம் நாவல் போன்ற பல்வேறு வகையில் மிக நீண்ட கதைகள் பலஉள்ளன இந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்தவுடன் திரையின் மேல்பகுதியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு நாவல்களும் பட்டியலாக விரிகின்றன அதற்கு கீழ்பகுதியில் 2016 ஆம் ஆண்டில் வெளியிடபட்டவைகள் பட்டியலாக விரிகின்றன அதற்கு கீழ்பகுதியில் வலதுபுறம் பல்வேறு வகையிலான தலைப்புகள் பட்டியல்களாக உள்ளன அவைகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் நாம் தெரிவுசெய்த தலைப்பினை சார்ந்த பல்வேறு நாவல் களின் பெயர்கள் பட்டியலாக விரியும் மேலும் குறிப்பிட்ட தலைப்பில் தேடுவதற்கான Our Picks and Exclusives எனும் வசதியின் வாயிலாக நாம் விரும்பும் நாவலை தேடிபிடித்திடலாம் இந்த Longreads எனும்குழுஉறுப்பினர்களின் பொருள் உதவியால் பதிவேற்றபட்ட பல்வேறு நாவல்களையும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளதை காணலாம் பல்வேறு பதிய வழிகளில் நம்முடைய சிந்தனையை வளர்ப்பதற்கு இந்த Longreads எனும் இணையதளம் பெரும்பங்காற்றுகின்றது வாருங்கள் https://longreads.com/என்ற இணைய முகவரியிலுள்ள இந்த இணைய தளபக்கத்திற்கு வந்த பயன்பெறுங்கள்

இரு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை ஒரேசமயத்தில் பயன்படுத்தி கொள்ளமுடியும்

நம்முடைய ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஒரேசமயத்தில் இரு பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக நம்முடைய அலைபேசியின் முதன்மைத்திரையில் Settingsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Settingsஎனும் திரையில் Displayஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Displayஎனும் பட்டியில் Multi-Windowஎனும் வாய்ப்பு உள்ளதாவென சரிபார்த்து கொள்க அல்லது முதன்மை திரையில் கீழ்பகுதிக்கு நகர்த்திசென்று Quick Settings எனும் பட்டியலை விரியச்செய்து அதில் Multi-Window. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய அலைபேசியில் நிறுவனத்தின் அமைவிற்கு ஏற்ப பின்செல் பொத்தானை அழுத்துவது அல்லது சிறிய அம்புக்குறியை அழுத்துவதன்வாயிலாக பக்கப்பட்டையின் பட்டியலிற்கு செல்க பிறகு தேவையான பயன்பாடுகளை செயல்படசெய்திடுக அதன்பின்னர் மீண்டும் பழைய திரைக்கு வந்து வேறொரு பயன்பாட்டினை செயல்படுத்திடுக இவ்வாறு Multi-Window. எனும் வாய்ப்பினை பயன்படுத்தி நம்முடைய ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஒரேசமயத்தில் இரு பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்க

தாவரங்களை வரையஉதவும் இணையதளபக்கம்

செடிகொடிகளை அச்சுஅசலாக அப்படியே இயற்கையில்வளர்ந்திருக்கின்ற அதன் உருவை உள்ளது உள்ளவாறே நாம் வரையும் நம்முடைய படத்திலும் கொண்டுவருவதற்கு உதவுவதே http://johnmuirlaws.com/drawing-plants எனும் இணைய தளமாகும் இந்த இணைய பக்கத்திற்கு உள்நுழைவுசெய்தவுடன் முதலில் எழுத்துமூலமான அறிமுகஉரையை படித்தறிந்த கொள்க அதன்பின்னர் தவரங்களின் இலை பூக்கள் ஆகியவற்றை வரைவதற்கு உதவிடும் பணித்தாளை பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் இவைகளை எவ்வாறு வரைவது என கூறும் கானொளி காட்சிகளை கண்டு அறிந்துகொள்க இந்த தளத்தின் வலதுபுற பகுதியில் How to Draw Mushrooms, How to Draw an Iris, How to Draw Trees, and How to Draw Wildflowers என்பன போன்று ஏராளமான அளவில் செடிகொடிகளை வரைவதற்கான செயல்முறை பயிற்சிகள் உள்ளன இவ்வாறான செயல்முறை பயிற்சிகளானவை painting, colored pencils, and pen & ink on mylar போன்று பல்வேறு வகையிலும் எவ்வாறு வரைவது என அறிந்து கொள்வதற்காக உள்ளன இவைகளில் தேவையான வகையையும் தேவையான செடிகொடிகளையும் தெரிவுசெய்து செயல்முறை பயிற்சியை அறி்ந்துகொண்டபின்னர் நாமே செடிகொடிகளை வரைவதற்கான பயிற்சியை leaf and flower worksheetஎனும் ஒரு பயிற்சி தாளில் பதிவிறக்கம் செய்துஅறிந்துகொள்க ஓவிய ஆசிரியராக இருந்தால் தம்முடைய மாணவர்களுக்கான multiple leaf template , multiple flower template எனும் மாதிரி பயிற்சிதாள் பலகங்களை PDF கோப்பாக பதிவிறக்கம் செய்து கற்பிப்பதற்கு தயார் செய்து கொள்க பேனா பென்சில் இங்க் ஆகியவற்றை பயன்படுத்தியும் செடிகொடிகளை அச்சுஅசலாக அப்படியே இயற்கையில் இருப்பதை போன்றே நாம் வரைய இந்த தளத்தில் பயிற்சி பெறலாம்

இசையோடு இணைந்த கணிதத்திற்கான இணையதளம்

http://www.ams.org/samplings/math-and-musicஎனும் இந்த இணைய பக்கத்திற்குள் சென்றால் இசையோடு இணைந்த கணிதத்திற்கான இணைப்புகள் ஏராளமான அளவில் இருப்பதை காணலாம் இசையும் கணிதமும் இணைந்துள்ளதை விளக்கமாக கூறுவதற்கான தொகுப்பான கட்டுரைகள் ,போட்காஸ்ட்,கானொளிபடங்கள் ஆகியவை இந்த தளத்தில் உள்ளன இதன்முகப்புபக்கத்தில் கானொளி படங்கள் தொகுப்பாக இருப்பதை காணலாம் அதற்கடுத்ததாக கட்டுரை தொகுப்புகள் நூலகங்களாக தரவுதள அடிப்படையில் பார்வையாளர்கள் எளிதாக அனுகுவதற்கு வசதியாக பட்டியலிடப்பட்டுள்ளதை காணலாம் rhythm, scales, intervals, patterns, symbols, harmonies, time signatures, overtones, tone, pitch ஆகிவற்றை அடிப்படையாக கொண்ட classical, rock, folk, religious, ceremonial, jazz, opera, pop, ஆகிய இசைகள் அனைத்தும் குறிப்பிட்ட கணித தேற்றத்தின் அடிப்படையில் இயங்குவதை இந்த தளத்தில் கண்டு உணரலாம் இந்த இசையனைத்தும் கணித கோட்பாடுளை பயன்படுத்தியே உருவாக்கபட்டவை என்ற அடிப்படை உண்மையை அறிந்த கொள்க


இசையை வழங்கும் நாண் ஆனது குறிப்பிட்ட தாளகதியில் அதிருவது கணிதத்தின் அடிப்படை-யிலேயேயாகும் அவ்வாறே நாம் காணும் கானொளி படங்கள்கூட இயங்குவது கணிதமும் இசையும்Geometry + Music சேர்ந்ததாகும்

மைக்ரோ பைத்தான் ஒரு அறிமுகம்

மைக்ரோ பைத்தான் என்பது ஒரு சிறிய பைத்தானின் திறமூல நிரல்தொடர்மொழியாகும் இது கணினியிடன் இணைந்த வன்பொருட்களை கட்டுபடுத்துவதற்கு சி சி++போன்ற சிக்கலான கீழ்நிலை மொழிகளை பயன்படுத்துவதற்குபதிலாக எளிய தெளிவான பைத்தான் குறிமுறைவரிகளுடன்கூடிய சிறிய உட்பொதிந்த மேம்படுத்தும் அட்டைவாயிலாக மொழிமாற்றியின் வாயிலாக செயல்படுத்திடும் திறன்மிக்கது வன்பொருளை கட்டுபடுத்துவதற்கான கட்டளைவரிகளை உருவாக்கஎண்ணிடும் புதியவர்களுக்கு ஒரு அருமையான தேர்வாக இந்த எளிய பைத்தான் நிரல்தொடர்மொழி உருவாக்குகின்றது ஆயினும் பைத்தானுடைய முழுமையான அனைத்து பயன்களும் இந்த மைக்ரோ பைத்தானில் கிடைப்பதால் மிகத்திறனுடன் வன்பொருட்களை கையாளும் வசதியை இது வழங்குகின்றது ஒருங்கிணைந்த படித்தல் மதிப்பிடுதல் அச்சிடுதல் மடக்கிடுதல் ஆகிய செயல்களுடன் read-evaluate-print loop( REPL) எனும் செயலை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடாமல் இது நேரடியாக அதற்கான அட்டையில் செயலை செயல்படுத்திடுகின்றது பரவலாக்கப்பட்ட மென்பொருள் நூலகவசதி (Extensive software library.) கொண்டுஇணையத்தின் வாயிலாகவும் வலைபின்னல் வாயிலாகவும் எளிதாக தேவையான செயலை செய்துகொள்கின்றது விரிவாக்கவசதி (Extensibility) சி சி++போன்ற சிக்கலான கீழ்நிலை மொழிகளின் செயலிகளையும் மேல்நிலை பைத்தான் குறிமுறைவரிகளுடன் இணைத்து மேம்படுத்தி செயல்படும் வசதி இதில் உள்ளது விட்டுவிட்டுமின்னிடும்விளக்குகளின் GPIO இணைப்புகம்பிகள் படித்திடும் read switches போன்ற பல்வேறு வன் பொருட்களை எளிதாக ஆர்டினோ அட்டைபோன்று இந்த மைக்ரோ பைத்தான் கட்டுபடுத்தி செயல்படுத்திடுகின்றது சர்வோவின் PWM வெளியீடுகள், LEDs போன்ற இயக்கிகளை இந்த மைக்ரோ பைத்தானைகொண்டு கட்டுபடுத்திடமுடியும் டிஜிட்டல் மாற்றி்க்கு ஒரு அனலாக் உடன் அனலாக் சென்ஸார் படித்திடும செயலைகூட இந்த மைக்ரோ பைத்தானை கொண்டு செயல்படுத்திடமுடியும் NeoPixels and LED strips, tiny OLED displays போன்றவைகளைகூட இ்நத மைக்ரோ பைத்தான் ஆனது தன்னுடைய நூலகங்களின் மூலம் கட்டுபடுத்திடுகின்றதுpyboard, ESP8266, SAMD21-Boards,WiPy, BBC micro:bit, Teensy 3.x ஆகியவகைகளை இது ஆதரிக்கின்றது ஒட்டு மொத்தத்தில் இது வன்பொருட்களை கட்டுபடுத்திடும் அனைத்து செயல்களையும் செயற்படுத்திடுகின்றது

Previous Older Entries