Internet Explorer என்ற இணைய உலாவியின் செயல்களை வேகமாக செயல்படுமாறு முடுக்குவதற்கான குறிப்புகள்

Internet Explorer என்ற இணைய உலாவியின் செயல்களை வேகமாக செயல்படுமாறு முடுக்குவதற்கான குறிப்புகள்

1. Internet Explorer என்ற இணைய உலாவியில் தேவையற்ற Add-ons களை ஐமுடக்கம் செய்திடவேண்டும் அதற்காக(disable) முதலில்“iexplore.exe-extoff” என்பதை இயக்குக.பின்னர் மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools   என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கிய வுடன் தோன்றும் Tools என்ற பட்டியில் Manage add-on  என்ற கட்டளையை  தெரிவு செய்து சொடுக்குக , உடன் தோன்றிடும் Manage add-on  என்ற உரையாடல் பெட்டியில் தேவையற்றவை களை மட்டும் தெரிவு செய்த பிறகு disable என்ற வானொலி பொத்தானை  தெரிவுசெய்து கொண்டு ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 எச்சரிக்கை இவ்வாறான வாய்ப்பை தெரிவு செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2.Internet Explorer என்ற இணைய உலாவியில்  URL முகவரிகளை உள்ளீடு செய்யும்போது ஒரு சில எழுத்துகளை உள்ளீடு செய்தவுடன் மிகுதி எழுத்துகள் தானாகவே பூர்த்தி செய்து கொள்வதற்காக, மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools  => என்றகட்டளையை  தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Tools என்ற பட்டியலில் internet options என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக ,உடன் தோன்றிடும் internet options   என்ற உரையாடல் பெட்டியில் advanced  என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர்  விரியும்advanced  என்ற தாவியினுடைய திரையின் settings  என்ற பகுதியில் use inline Auto complete  என்றவாய்ப்பை தெரிவு செய்து கொண்டு ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,எச்சரிக்கை இவ்வாறு செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது

 

 

 

 

 

 

 

 

 

3. Internet Explorer என்ற இணைய உலாவியில்தாவிகளின்(Tabs)களின் பணிகளை மாறுதல் செய்வதற்காக மேலேகட்டளை பட்டையில் உள்ளTools => என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Tools என்ற பட்டியலில் internet options என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக ,உடன் தோன்றிடும் internet options   என்ற உரையாடல் பெட்டியில்  general என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்general என்ற தாவியின் திரையில் Tabs என்ற பகுதியின் கீழுள்ளChange how webpages are displayed in tabsஎன்பதற்கருகிலுள்ள  settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும்  Tabbed browsing settings என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளையும் தேவையானவாறு மாறுதல்களையும் செய்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்  internet options   என்ற உரையாடல் பெட்டியிலும்.ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,எச்சரிக்கை இவ்வாறு  செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது

 

4.    Internet Explorer என்ற இணைய உலாவியில் கட்டளை பட்டையானது நிலையாக திரையின் மேல் பகுதியில் பிரதிபலிப்பு செய்வதற்காக  மேலே கட்டளை பட்டையில் உள்ளTools => menubar => என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக .

5.    Internet Explorer என்ற இணைய உலாவியில் குக்கீஸ், திறவு சொல், படிவ தரவுகள், தற்காலிக இணைய கோப்புகள் போன்றவைகளை  நீக்கம் செய்வதற்காக மேலேகட்டளை பட்டையில் உள்ளTools => delete browsing history  =>என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.

6.    Internet Explorer என்ற இணைய உலாவியில் Add-onsநிறுவியதை கண்டுபிடிக்கமேலேகட்டளை பட்டையில் உள்ளTools => manage add-ons => find more add-ons=> என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.

7. Internet Explorer என்ற இணைய உலாவியில் பிரதிபலிக்கும் இணைய பக்கத்தில் ஒரு பகுதியை மட்டும் அச்சிடுவதற்குவிரும்புவோம் அந்நிலையில் அவ்வாறு  அச்சிட விரும்பும் பகுதியை தெரிவு செய்து  கொண்டு விசைப் பலகையில் Crtl + P என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் தோன்றிடும் print என்ற உரையாடல் பெட்டியில் page rangeஎன்ற பகுதியில selection என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு printஎன்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக

அறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர்-பகுதி-27-செயலிகள் I(Functions)

வரையறுத்தல், கணக்கிடுதலால் எற்படும் மதிப்பை திருப்புதல், ஒப்பீடு செய்தல், மதிப்பிடுதல் அகிய செயல்களை செய்வதற்கான சிறு கட்டளை தொடர்களே செயலிகள் அகும். திருப்பி அனுப்பும் மதிப்புகள் சரமாகவோ, தருக்க மதிப்பாகவோ, எண்களாகவோ செயலியின் வகைக்கு ஏற்ப இருக்கும். அக்சஸின் அட்டவணைகள், வினாக்கள், படிவங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கேற்றவாறு  நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள்  தயாராக இருக்கின்றன. வி.பி.ஏ வை பயன்படுத்தி பயனாளர் ஒருவர் வரையறுக்கும் செயலியைகூட (User Define function (UDFS) )அக்சஸில் உருவாக்க முடியும்.

பெரும்பாலான செயலிகளின் சிறப்பு செயல் கூறுகள் அக்சஸில் உள்ள வசதிகளை மேம்படுத்த பயன்படுகின்றன. மேலும் பலநேரங்களில் செயலிகள் அக்சுஸின் ஒருங்கிணைந்த ஒரு உறுப்பாகவே செயல்படுகிறது.

அக்சஸில் உள்ள செயலிகளின் வகைகள்

   1)மாற்றும் செயலிகள் (Conversion Function ):இது  ஒரு வகை தரவுகளை மற்றொரு வகையாக மாற்றுகிறது. எ.கா. U Case ( “Tamil Computer”)  என்பது  TAMIL COMPUTER  என  பெரிய எழுத்தாக மாற்றுகிறது.

   2)நாள்/நேரம் (Date/Time )எனும்செயலி :இது நாள் நேரம் போன்ற  செயலினை வெளிப்படுத்த உதவுகிறது. .எ.கா NOW ( )  என உள்ளீடு செய்தவுடன் 17.12.2006 06.35:30 AM  என பிரதிபலிக்கிறது.

3)நிதி (எஸ்கீயூஎல்)செயலி(Financial (SQL)Function ):

இது புலங்களின் மதிப்புகளின் கூடுதல் காண்பது, சராசரி காண்பது போன்ற செயல்களின் மதிப்பை திருப்புகிறது. .எ.கா- Sum ( (Gross Amount)+(Tax)+(Shipping))

   4)நிதி (பணம்)செயலி (Financial (Monetary) Function )(:பணம் தொடர்பான நடவடிக்கைக்கான செயல்களை செய்கிறது.எ.கா-P.M.T(.006,360-110000) என்ற செயலி ரூ.110000 கடன் பெற்றிருந்தால் 6 சதவிகிதம் வட்டிக்கு 360 மாதத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ 659.51 கட்ட வேண்டும் என தெரிவிக்கின்றது.

   5)கணக்கீட்டு செயலி (Mathematical Function ):குறிப்பிட்ட கணக்கீடுகளுக்கு பயன்படுகிறது.எ.கா -Sqr (9) என்ற செயலி இந்த எண்ணிற்கு வர்க்க மூலம் 3-என்ற மதிப்பை திருப்புகிறது.

    6)சரமாற்றசெயலி (String Manipulation ):உரை அடிப்படையில் உள்ள வெளிப்பாடுகளில் இது பயன்படுகிறது..எ.கா -RTRIM (“abcd ”)என்பது (“abcd”)  என வலப்பக்கம் உள்ள இடைவெளியை  நீக்குகிறது.

     7)கட்டளை செயலி(Programme function): வகைகளில்  அடங்காதவை  இந்த வகையில் வருகின்றன.எ.கா – Choose (2”, :”A”, “B”, “C”. “D”) என்பதில் மதிப்பை இரண்டாவது எழுத்தின் மதிப்பாக  “B” என திருப்புகிறது.

    8)செயற்களப் பகுதி செயலி (Domain Function ):அட்டவணை,வினா, SQL  வெளிப்பாடு ஆகியவை அடங்கிய ஆவணங்களின் அமைப்பை செயற்களப் பகுதி என்பர். குறிப்பிட்ட நிபந்தனைகள், நிகழ்நிலை மதிப்பு, கணக்கீட்டு புலங்கள் மேற்கோள்கள் போன்ற செயல்கள் இந்த வகையாகும்.  எ.கா -D First (“Chr First Name” “ tbl magazine”) என்ற செயலி பத்திரிகையில் முதல் பெயராக தமிழ் என்பது தமிழ் கம்பியூட்டரின் முதல் பெயராக வருகின்றது.

செயலியை உருவாக்குதல்

செயலி செயல்முறைகளிலிருந்து பொதுவாக அளபுருக்களை கடத்து வதிலும், மிக முக்கியமாக ஒற்றை மதிப்பை மட்டும் திருப்பி அனுப்புவதன் மூலம் மாறுபடுகிறது. ஒரு புதிய தகவமைவு(Module)  கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படுகிறது. இதன் பெயராக bas Sales functionsஎன இருக்கட்டும். இதற்காக முதலில்

1.தரவுதள சாளரத்தை திறந்துக்கொள்ளுங்கள்.

2.அதில் இடப்புறம் உள்ள பொருட்களில்  Modules  என்பதை தெரிவு செய்க.

3.இந்த தகவமைப்பின் பெயராக bas Sales functions  என உள்ளீடு செய்து வடிவமைப்பு எனும் குறும்படத்தை(Design icon ) கருவி பட்டையிலிருந்து(Tool bar) தெரிவு செய்து சொடுக்குக.

4.உடன் குறி முறை எழுத உதவும் விபிஏ சாளரம் bas sales function என்ற தலைப்புடன் தோன்றும். பின்னர் உள்ளிணைக்க மேலே கட்டளை பட்டையிலிருந்த Insert  என்ற கட்டளையை பட்டியலிருந்து தெரிவு செய்து சொடுக்குக.. உடன் விரியும் பட்டியில்Add procedure என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.. உடன் படம் 27-1ல் உள்ளவாறு தோன்றும் திரையில் Name  என்பதற்கு Calc extension  என்று உள்ளீடு செய்து Type என்பதற்கு function என்பதையும் Scope  என்பதற்கு publicஎன்பதையும் தெரிவு செய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் தோன்றும் விபிஏ சாளரத்தில் கீழ்காணும் வரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்க.

Dim curExtension As Currency

CalcExtension = 0

curExtension = intQuantity * curPrice

CalcExtension = curExtension – (curExtension * dblDiscountPercent)

இதன் முதல் வரியில் உள்ள cur extension என்ற மாறியை currency என அறிவிக்கிறது. அடுத்த வரியில் உள்ள Calc extension  என்ற மதிப்பை 0 என ஆரம்ப மதிப்பாக்குகிறது. ஏனெனில் இதன் மதிப்பை Dim மூலம் அறிவிப்பு செய்யவில்லை. இது நாம் உருவாக்கும் செயலியின் பெயராகும். அழைக்கப்படும்  இது ஒரு செயலிக்கான மதிப்பை திருப்புவதற்கு மாறியின் பெயர் பயன்படுகிறது. இது தானாகவே செயலியின் பெயரை அறிவிப்பு செய்கிறது. முதல் வரியில் அறிவிக்கப்பட்ட மாறிக்கு கணக்கீட்டு அமைப்பை Int quantity , cur price ஆகிய இரண்டையும் பெருக்குவதன்மூலம் மூன்றாவது வரியில் உருவாக்குகிறது. இதில் உள்ள இரண்டு மாறிகளும் அறிவிப்பு செய்யாமலேயே பெருக்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் மூன்றாம் வரியில் இவ்வாறு கணக்கிடப்பட்ட மதிப்பை Calc extension தானாகவே கடத்துகிறது.  அதன்மூலம் அழைக்கப்படும் செயலிக்கு மதிப்பை உருவாக்கி கொடுக்கிறது.

இந்த நிரல் தொடரின் முதல் வரியில் கீழ்காணும் வரியை ஒற்றை வரியாக உள்ளீடு செய்க

Public Function Calc Extension(int quantity as Ineger, cur price as currency, dbl discount as double) as currency

இவ்வாறு உருவாக்கிய செயலியை பரிசோதித்தல்

இவ்வாறு நாம் உருவாக்கிய செயலி சரியாக செயல்படுகிறதா என உடனடி சாளரத்தின் (immediate window) மூலம் பரிசோதிக்க வேண்டியுள்ளது.  அதற்காக

1)Ctrl+G  என்ற இரு விசையை சேர்ந்தாற் போன்று அழுத்துக

2)உடன்படம் 27-1ல் உள்ளவாறு உடனடி சாளரம் (immediate window) ஒன்று இந்த சாளரத்தின்  கீழ்பகுதியில் தோன்றும் Calc extension(10,5,0.02) 1என்பதில் Quantity 10 10 என்றும் Price 5  என்றும் Discount rate 2%  என்றும் மதிப்பை திரும்ப கடத்துகிறது. அதன்  விளைவாக 49 என்ற மதிப்பை திருப்புகிறது.

 படம் 27-1

3)பின்னர் உடனடி சாளரத்தையும் (immediate window),விபிஏ சாளரத்தையும்  மூடிவிட்டு தரவுதள சாளரத்திற்கு திரும்புகின்றது.

இவ்வாறு நாம் உருவாக்கி பரிசோதித்து பார்த்த சார்பு செயல்முறையை ஒரு  வெளிப்பாட்டில் அழைக்கலாம் அதே தகவமைவு(Module)க்குள்ளும் அழைக்கலாம் மற்றொரு தகவமைவு(Module)க்குள்ளும் அழைக்கலாம்.

ஒரு சார்பு செயல்முறையை (Function procedure ) வெளிப்பாட்டில்(Expression )உடன் அழைத்தல்

  1)Insert=> procedure=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்  மூலம் தோன்றிடும் சாளரத்தில் கீழ்காணும் வரிகளை உள்ளீடு செய்து இதற்கு concatenate  எனப்பெயரிட்டு கொள்க

Public function concatenate (A,B)

Concatenate= A& “,”&B

MSG Box= This is the Concatenate procedure int bas 2

End function

2)பின்னர் நாம் உருவாக்கிய Employee என்ற அட்டவணையை பதிவிறக்கம் செய்க. இதில் Employee  இன் பெயரை காண்பதற்கு ஒரு வினாவை

Full Name : Concatanate (Last name. First name) என்றவாறு எழுப்புக. உடன் இந்த வினாவின் விடையாக கடைசிப் பெயரும் முதல் பெயரும் சேர்த்து முழு பெயராக திரையில் காட்சியளிக்கும்.

இவ்வாறு நாம் உருவாக்கிய சார்பு செயல்முறையை வெளிப்பாட்டில் அழைப்பது போன்று அதே தகவமைவு(Module)க்குள் உள்ள செயல்முறையாக அல்லது அடுத்து தகவமைவு(Module)க்குள் அழைத்து நம்முடைய பணியை முடித்துக்கொள்ளலாம்.

அதே தகவமை(Module)ப்பில் சார்பு செயல் முறையை அழைத்தல்

1.கீழ்காணுமாறு Discard Return Value என்ற சார்பு செயல் முறையை உள்ளீடு செய்க

Public function Discard Return Value ( )

Call concatenate (“Kuppan” Sarkarai)

End Sub.

2.உடனடி சாளரத்தில்(immediate window) Call Discard Return Value என தட்டச்சு செய்து உள்ளீட்டு (Enter)விசை அழுத்தி இந்த சார்பு செயல் முறையை இயக்குக. உடன் வி.பிஏ-வானது Concatenate என்ற செயலியை இயக்கி அதற்கான செய்தியை திரையில் பிரதிபலிக்கச் செய்து திருப்பி அனுப்பும் மதிப்பை விட்டுவிடுகிறது.

3.இந்த நிரல் தொடரை கீழ்காணுமாறு பிறைஅடைப்பையும் Call  என்ற குறிச்சொல்லையும் விடுத்து மற்றவற்றை மட்டும் தட்டச்சு செய்க

Public function Discard Return value ( )

Concatenate “ Kuppan” , “Sarkarai”

End Sub

4முன்புபோலவே .உடனடி சாளரத்தில்(immediate window) Discard Return value என்பதை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இயக்கி பார்த்தால் அதே செய்தி கிடைக்கிறது.

மற்றொரு தகவமைப்பில் (Module )சார்பு செயல்முறையை அழைத்தல்

1)Run Public Function என்ற சார்பு செயலியுடன் கீழ்காணுமாறு Bas 2 module ஐ  உள்ளீடு செய்க

Public Function Run Public function ( )

MSG Box Form- Frm1.function ( 3)

End function

பின்னர் Form- Frm1 module -லிருந்துக்கொண்டு Form.function 1 -ல் சார்பினை Public  என்பதை Private  என மாற்றுக.

2).உடனடி சாளரத்தில்(immediate window) Call Run Public Function என தட்டச்சு செய்து  உள்ளீட்டு விசையை அழுத்துக.  உடன் Function1 என்ற1 செயல்முறை இயங்கி தேவையான செய்தியை திரையில் பிரதிபலிக்கிறது.

3) Bas 2 Module -ல் கீழ்காணுமாறு உள்ளீடு செய்க.

Public function run private function ( )

Msg Box Bas 1 function (3)

End Function.

4)பின்னர் உடனடி சாளரத்தில்(immediate window) Call Run private Function என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக.  உடன் வி.பி.ஏ சாளரத்தில்- இயக்க நேர பிழைச் செய்தி(Method or Data member not found) என்று பிரதிபலிக்க செய்கிறது. மற்றொரு தகவமைப்பில்(Module) வைத்துள்ள Private  என்ற  செயல் முறையை நடப்பு தகவமைப்பில் (Module) இயக்க முடியாது  மேலும் எந்த வரியில் தவறோ அதனை வேறு நிறத்தில் அம்புக்குறியிட்டு திரையில் பிரதிபலிக்கசெய்து அந்நிரல்தொடரில் உள்ள தவற்றைசரி செய்யும்படி கோரி நிற்கும்.

5)உடன் Reset என்ற பொத்தானை சொடுக்கி குறிமுறையில் Private  என்பதை Public  என மாற்றம் செய்க.

நன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்

ரைட்டர் 2 இபப் (w2ePUB)

  ஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின்  சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது

ஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது  ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும்  இதனை http://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.

பிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன்றிடும்   Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை  தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க

உடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்

முதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்

இரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது

மூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம்  ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்

எச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும்  ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்

உரைஆவணத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்

தற்போதைய நவீனதகவல்போக்குவரத்திற்கு உரைஆவணம் மிகமுக்கிய பங்காற்றுகின்றது

இந்த தகவல்பரிமாற்றத்தில் மின்னஞ்சல்ஆனது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது தற்போது இந்த மின்னஞ்சலை கைபேசிமூலம் கையாளமுடியும் என்றநிலை உள்ளது இந்த தகவல் பரிமாற்றத்திற்கான உரையை இதுவரை கைபேசியிலுள்ள தொடுதிரைமூலமும் சின்னஞ்சிறு பொத்தானை அழுத்துவதன் வாயிலாகவும் உள்ளீடு செய்துவந்தோம் அதனால் தற்போது இந்த SMSஎன அழைக்கபடும் குறுஞ்செய்தியை அனுப்பவதில் மிகசிரமமான நிலையாக இருந்துவருகின்றது அதனை தவிர்க்க நம்முடைய கைபேசி சேவையாளர்களின் குறுஞ்சய்திசேவையின் நுழைவுவாயிலை(SMS Gateway ) Wikipedia entry என்பதன் மூலம் கண்டுபிடித்து மின்னஞ்சலை எளிதாக அனுப்பலாம்

   அதற்காக மின்னஞ்சல் அனுப்பும் திரையை தோன்றசெய்க அதில் To என்ற பகுதியில் நாம் குறுஞ்செய்தி அனுப்பிட விரும்பும் கைபேசி எண்ணையும் தெடர்ந்து  குறுஞ்செய்தி சேவையின் நுழைவுவாயில்(SMS Gateway ) விவரங்களையும் உள்ளீடு செய்து subject போன்ற மற்ற பகுதிகளில் வழக்கமான மற்ற மின்னஞ்சல் பணிகளை செய்து  முடித்து  send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இந்த செய்தியானது குறிப்பிட்ட எண்ணு டைய கைபேசிக்கு உடன் சென்று சேர்ந்துவிடும் இந்த குறுஞ்செய்தி மட்டுமல்லாது  படங்கள் ஒலிஒளிபடங்கள் கூடMMS எனசுருக்கமாக அழைக்கப்படும்  “Multimedia Messaging Services  என்ற  சேவையின் மூலம் மேற்கண்ட வழமுறை வாயிலாக அனுப்பிடமுடியும்

விக்கிபீடியாவின் குறுஞ்செய்தி சேவைவிவர படம்

விண்டோ 7

விண்டோ 7 இயக்கமுறைமையின் startஎன்ற பட்டியில் உள்ள ஏராளமான பயன்பாடுகளில் தேவையற்றதை எளிதாக நீக்கம் செய்யலாம் அதற்காக சாளரத்தின் கீழே இடதுபுற மூலையிலிருக்கும் startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் startஎன்ற  பட்டியில் தேவையற்ற பயன்பாடுகளின் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக

உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் remove from this listஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த பயன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியலில் இருந்து நீக்கம் செய்யபட்டு விடும் இவ்வாறு தேவையற்றவைகளை  ஒவ்வொன்றாக தெரிவுசெய்து நீக்கம் செய்தபின் விண்டோ 7 இயக்க முறைமையை மறுதொடக்கம் செய்து இயக்கினால் மிகவிரைவாக தொடங்குவதை காணலாம்

அவ்வாறே வேறு ஏதேனும் பயன்பாட்டினை இந்த startஎன்ற பட்டியிலில் சேர்ப்பதற்கு  தேவையான பயன்பாட்டின் பெயரை விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில் தேடி தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் pin to start menuஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியில்  சேர்க்கப்பட்டுவிடும்

கணினி உதவி குறிப்புகள்

1.இப்போதெல்லாம் கடித போக்குவரத்திற்காக மின்னஞ்சலை பயன்படுத்துவதால் இணையதளம் இல்லாது எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. இவ்வாறு அனுப்பும் மின்னஞ்சலுடன் இணைப்பாக (attachment) மிக முக்கிய கோப்புகளையு‹படங்களையும் அனுப்புவதற்கு விரும்புவோம். அதற்காக attachment என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சலுடன் தோன்றிடும் வழிகாட்டியின் உதவியுடன் இவ்வாறு அனுப்ப விரும்பும் கோப்புகளை இணைப்பதற்கு நிறைய நேரத்தை எடுத்து கொண்டு நம்முடைய பொறுமையை இழக்கச்செய்து வருகிறது. இதனால் கால விரயமும் செலவு கூடுதலாகவும் ஆவதை தடுப்பதற்காக விண்டோ எக்ஸ்புளோரருடன் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஆகிய இரணடு சாளரத்தையும் பக்கம் பக்கமாக திறந்து  வைத்து கொள்ளுங்கள் பின்னர் தேவையான மின்னஞ்சலை தயார்செய்து கொண்டு அருகிலிருக்கும் சாளரத்தில் இணைப்பு attachment செய்ய விரும்பும் கோப்புகளின் மடிப்பகத்தை(folder) திறந்து கொண்டு அவைகளை ஒவ்வொன்றாக இடம்சுட்டியால் பிடித்து அப்படியே இழுத்து வந்து மின்னஞ்சல் அனுப்ப உள்ள சாளரத்தில் விடவும். உடன் இவைகள் தானாகவே மின்னஞ்சலுடன் இணைந்து(attachment)விடும். இவ்வாறாக உங்களின் பொன்னான நேரத்தையும் பண விரயத்தையும் இந்த வசதிமூலம் மிச்சப்படுத்துங்கள்.

2.    மின்னஞ்சல் அனுப்பும்போது To என்ற பகுதியில் அனுப்ப வேண்டிய முகவரியை தட்டச்சு செய்வோம். இதே மின்னஞ்சல் வேறு யாருக்காவது செல்ல வேண்டுமெனில் அவர்களின் முகவரியை CC (Carbon copy ) என்ற பகுதியில் குறிப்பிட்டு அனுப்புவோம். இவ்வாறு இல்லாமல்  நமக்கு மட்டும்தான் பிரத்யேகமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பெறுபவர் நம்புவதற்கு BCC(Blind corbon copy)என்ற பகுதியில்  உள்ளீடு செய்திடுக அவ்வாறு Bcc என்ற பகுதி மின்னஞ்சLல் இல்லாதிருப்பின் சாளரத்தில் மேலே உள்ள view என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் All header என்பதை தெரிவு செய்து சொடுக்குக . உடன் மின்னஞ்சலில் Bcc என்ற வசதி செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தயாராகிவிடும்.

3.    கணினியின் சாளரத்திரையின் கீழ்பகுதியில் உள்ள செயல்பட்டையில்  (TaskBar) அவ்வப்போது Update is ready to install என்ற மேல்மீட்பு பலூன்போன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி நம்மை எரிச்சலுறச்சசெய்யும் இதனை தவிர்ப்பதற்காக இதே சாளரத்திரையின் கீழ்பகுதியில்  செயல்பட்டையின் இடதுபுறமாக உள்ள Start=> Allprogram=> Control panel என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் தோன்றிடும்  திரையின்  இடதுபுறபலகத்தில்(panel) உள்ள Task Bar and Start menu என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் தோன்றிடும் திரையின் வலதுபுறம் உள்ள Enable ballon tips  என்ற வாய்ப்பு தெரிவு செய்ய்யபட்டிரு்ந்தால்  அதனை நீக்கிவிடுக, அதன் பிறகுOK என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக.

4, விண்டோஎக்ஸ்பிஇயக்கமுறைமை இயங்கும் கணினியின் திரையில் உள்ள பயன்பாடுகளை இயக்குவதற்கான குறுக்குவழி குறும்படங்களைDesktop Icon’s  குறிப்பிட்டகால இடைவெளியில்பயன்படுத்தவில்லை  யெனில் இவைகளை என்ன செய்வது எனமேல்மீட்பு பலூன்போன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி  கேட்டு நின்று  நம்மை  எரிச்சல் படுத்தும் ,இதனை தவிர்ப்பதற்காக திரையில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் சூழ்நிலைபட்டியில் Property  ஐஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றும் Property என்ற உரையாடல்பெட்டியில் Desktop என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Desktop என்ற தாவியின் திரையில்Customise desktop  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக ,அதன் பின்னர்   கீழ்பகுதியில் Run Desktop Cleanup Wizard every 10 days  என்ற வாய்ப்பு  தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கி விடுக, பின்னர் OK  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உபுண்டு-11.10 -இன் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை

எளிதான பாவணை ,உள்ளுணர்வுடைய இடைமுகம்,விரைவாக இயங்க கூடியது, பாதுகாப்பானது , ஆயிரக்கணக்கான பயன்பாட்டு மென் பொருட்களை கொண்டது , புதுமையான அனுபவத்தை வழங்குகூடியது ஆகிய அனைத்து அருங்குணங்களையும் ஒருங்கே கொண்ட உபுண்டு-11.10 இயக்க முறைமையின் சிறப்பியல்புகளை பற்றி இப்போது காண்போம்

   1.இந்த உபுண்டு-11.10 இயக்கமுறைமையுடன் ஆயிரத்திற்கும் அதிகமான பயன் பாட்டு மென்பொருட்கள் மென்பொருள் மையம்(software centre) என்பதன்கீழ்  அவைகளின் தரத்திற்கேற்ப வரிசைபடுத்தி வைத்திருப்பதால்  அவைகளிலிருந்து நம்முடைய தேவைக்கேற்றதை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளலாம்

2.இதன் முகப்புத்திரையின் இடதுபுற பலகத்தில் நம்முடைய விருப்ப கருவிகள், பயன்பாடுகள் ஆகியவற்றின் குறும்படங்கள் தயார்நிலையில் பட்டியலாக இருப்பதால் அவைகளிலிருந்து நாம்விரும்பியதை உடனடியாக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

மேலும் இந்த பட்டியில் நாம் மேலும் சேர்க்க விரும்பியவற்றை சேர்த்து கொள்ளமுடியும் தேவையில்லாததை நீக்கிடவும் அல்லது தற்காலிகமாக மறைத்து வைக்கமுடியும்

3துவக்கத்திரையின்  மேலே இடதுபுற மூலையிலிருக்கும் இதனுடைய குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சல்,படங்கள் போன்றபயன்பாடுகளை உடனடியாக துவக்கி   கையாளுவதற்கான குறுக்குவழிகள் ஏராளமாக இதிலிருந்து கிடைக்கின்றன

4.நாம் இதனுடைய ஒரேதிரையில ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை தனித்தனி சாளரமாக தோன்றச்செய்து அவற்றுள் பணிபுரியலாம் மேலும்  அந்நிலையில் Alt + Tab , Alt + Grave ஆகிய விசைகளை சேர்த்து அழுத்து வதன் வாயிலாக அல்லது workspaces எனும் கருவியின் மூலமாக அவைகளுக்கிடையே அவ்வப்போது மாறிக்கொண்டு தடங்களின்றி பணிபுரியலாம்

5.இதில் உள்ள செந்தரமான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஃபயர்வால் ,வைரஸ் பாதுகாப்பு கவசங்கள்  போன்ற கூடுதலான பாதுகாப்பும் கிடைக்கின்றன அதனால் தனிப்பட்ட வங்கிகணக்கை பராமரித்தல் மிகமுக்கியமான தரவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய பணிகளைபயமின்றி செய்யலாம்

6.மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய பயன்பாடுகளின் எந்தவகையான கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கான ஒத்திசைவு தன்மை இதில் உள்ளதால் எதைபற்றியும் கவலையில்லாமல் எந்த கோப்பையும் கையாளமுடியும்

7.இது எந்த கணினியிலும் விரைவாக செயல்படக்கூடியது புதியகணினியெனில் மிகவும் விரைவாக செயல்படக்கூடியதாகும்

8இது வட்டாரம் மொழி பால்வேற்றுமை போன்று எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இலவசமாக கிடைக்ககூடியதாகவும் செயல்படுத்த கூடியதாகவும் உள்ளது


 

 

 

 

 

9.இதனை ஆரம்பித்து ஏறத்தாழ ஏழாண்டுகள் , பதினைந்து பதிப்புகளுடன் எந்தவித கவலையிமில்லாமல் வெற்றிநடை போடக்கூடியதாக இந்த உபுண்டு 11.10 விளங்குகின்றது

இதனை இதனுடைய http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

Previous Older Entries