அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-13-உள்படிவமத்தை(sub form) உருவாக்குதல்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-13-உள்படிவமத்தை(sub form)

ஒரு படிவத்திற்குள் மற்றொரு படிவத்தை உருவாக்குவதுதான் உள்படிவமாகும். இதன்மூலம் ஒன்றுக்குமேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தரவுகளை எடுத்து பயன்படுத்தலாம்

ஒரு உள்படிவம் அல்லது உபபடிவமானது தரவுகளை உள்ளீடு செய்வதற்கும் பிரதிபலிப்பு செய்வதற்கும் நெகிழ்வுதன்மையுடையதாகும்

பெற்றோர் பிள்ளைகளின் உறவு படிவத்தின் பண்பியல்புகளை பயன்படுத்தி தரவுகளின் ஒருமுகத்தன்மையை பற்றி கவலைப்படாமல் நாம் உள்படிவத்தில் உள்ள தரவுகளை எப்படிவேண்டுமாயினும் மாறுதல்செய்து கொள்ளலாம்

ஒன்றுக்கு பலஉறவு அடிப்படையில் படிவத்தின் புலங்களில் உள்ள தரவுகளை பலஅட்டவணைகளிலிருந்து தரவுகளை கொண்டுவந்து மாறுதல் செய்யலாம்

ஒரு வடிவமைப்பில் ஒருதாளை பிரதிபலிக்கசெய்து அந்த தாளைமற்றொரு அட்டவணையில் வேறொரு அமைப்பில் பயன்படுத்திடலாம்

ஒரு படிவத்தில் நம்மால் கீழ்காணும் மூன்று வழிகளில் தரவுகளை பிரதிபலிக்க செய்யமுடியும்

படிவம்(Form) : இதன்மூலம் ஒருபுலத்தில் உள்ள தரவைமட்டும் திரையில் பிரதிபலிக்க செய்யலாம்

.தொடர்படிவம் (Continuous):ஒன்றுக்குமேற்பட்ட படிவத்தை இதன்மூலம் திரையில் பிரதிபலிக்க செய்யலாம்.

தரவுத்தாள்(Data Sheet) : இதன்மூலம் ஒன்றுக்குமேற்பட்ட ஆவணத்தை திரையில் பிரதிபலிக்க செய்யலாம்

வித்தகர்மூலம்(Wizard ) உள்படிவத்தை(Sub Form) உருவாக்குதல் 1.அக்சஸ் சாளரத்தில் தோன்றிடும் பொருளில்(Object) உள்ள படிவம் ( Forms )என்பதை தெரிவுசெய்க.பின்னர் கருவிசட்டத்தில் ( Toolbar )உள்ள புதியது ( New  )என்பதை தெரிவுசெய்க.

 படம்-1

2.உடன் படம்-1-ல் உள்ளவாறு தோன்றிடும் Newform என்ற உரையாடல்பெட்டியில் படிவவித்தகர்  Form Wizard என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் எந்த அட்டவணைகளிலிருந்து தரவுகளை எடுக்கவிருக்கின்றோம் என்பதற்கு tbl salesஎன்பதை தெரிவுசெய்து  Ok என்ற பொத்தானை சொடுக்குக

படம்-2

3.பிறகு படம்-2-ல் உள்ளவாறு Form wizard என்ற உரையாடல் பெட்டியொன்றுதிரையில் தோன்றிடும்.அதில் Available Field  என்பதற்கு நாம் தெரிவுசெய்த அட்டவணையில் உள்ள நாம்விரும்பும் புலத்தை தெரிவுசெய்து >என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக.மீண்டும் Tables/Queries என்பதில் மேலுமுள்ள அட்டவணைகளில் tbl sales lineitems என்பதை தெரிவுசெய்து அதிலுள்ள புலங்களில் தேவையான புலத்தினை மட்டும் தெரிவுசெய்துகொண்டு முன்பு கூறியது போன்றே > என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு நம்மால் தெரிவுசெய்யபட்ட புலங்கள் அனைத்தும் Selected Field என்றபகுதியில் சென்றுபோய்சேர்ந்திருக்கும் பின்னர் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-3

 4.உடன் படம்-3-ல் உள்ளவாறு தோன்றிடும் உள்படிவ்த்தில் தரவுகளை எவ்வாறு காணவிரும்புகின்றோம்என்பதற்கான How do you want to view  your data? என்ற வினாவை நம்மிடம் கோரிநிற்கும் இதிலுள்ள தனிப்படிவமா ?இணைந்ததா?  என்பதன் கீழ்பகுதியில் Form with sub Form என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4

5.பிறகு படம்-4-ல்உள்ளவாறுWhat Layout would you like for your subform? என்ற வினாவை கோரி நிற்கும் அதில் அட்டவணை என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5

6 உடன் படம்-5-ல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் உரையாடல் பெட்டியிலுள்ள மாதிரி படிவத்தில் What  Style  would you like? என்பதற்கு Stone என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-6

7. பிறகு படம் 6 ல்உள்ளவாறு திரையில் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் படிவ்த்தின் பெயர் உள்படவத்தின் பெயர் ஆகியவற்றை உள்ளீடுசெய்து வேறுஎதுவும் மாறுதல் செய்ய தேவையில்லையெனில் Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-7

உடன் படம் 7 ல்உள்ளவாறு உள்படிவத்தாளின் காட்சி திரையில் தோன்றிடும்

படம்-8

தொடர்ச்சியான் உள்படிவம்(Continuous Form).படம்-8-ல் உள்ளவாறு உள்படிவத்தில் ஒரு இயக்குவிசை படுக்கைவசமாக உள்ளது.இதில் பண்பியில்பு உரையாடல்பெட்டியும் சேர்ந்து திரையில் பிரதிபலிக்கினறது.இந்த உள்படிவமானது பல ஆவணங்களை பிரதிபலிக்க செய்யக்கூடிய ஒருதொடர்உள்படிவமாகும்(Continuous Form)

உள்படிவத்தை திரைக்காட்சியிலிருந்து மறைத்தல்  முதலில் இந்த உள்படிவமானது வடிவமைப்பு காட்சியில் திறந்துள்ளதாவென சரிபார்த்துகொள்க.பிறகு அவ்வாறேபண்பியல்பு உரையாடல்பெட்டியும் திறந்துள்ளதாவென சரிபார்த்துகொள்க.பின்னர் அதில் Form Footer என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் திரையின் Visible Property என்பதில் No என தெரிவுசெய்து கொள்க.அவ்வாறே இதில் மிகுதியாகவுள்ள அனைத்து உள்படிவ இயக்குவிசைகளுக்கும் அவ்வாறே  No என்பதை தெரிவுசெய்துகொண்டு இந்த பண்பியல்பு உரையாடல்பெட்டியை மூடிவிடுக.இப்போது இந்த உள்படிவம் திரைக்காட்சியிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும்

உள்படிவத்தை முக்கியவெளிபடிவத்துடன் சேர்த்தல்(Adding sub form in the main form) இதற்கானமிகச்சுலபமான வழிஎதுவெனில் உள்படிவ வடிவமைப்பு பணிமுடிந்தவுடன் அதனை அப்படியே பிடித்துஇழத்துசென்று தொடர்புடையமுக்கியவெளிப்படிவத்தில் விடுவதுதான் இவ்வாறு விட்டவுடன் தொடர்புடைய அனைத்து இணைப்புகளும் தானாகவே உருவாகிவிடும்

1.Form Sales என்ற படிவத்தை வடிவமைப்பு காட்சி என்ற உரையாடல் பெட்டியில் தரவுத்தாளை இதனுடன் திரையில் பிரதிபலிக்கசெய்க.

2.பின்னர் இத்தரவுத்தாள்உரையாடல்பெட்டியில் பொருட்களின்(object) பட்டியலில் உள்ள படிவம் (Form) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

3.அதன்பின்னர்தோன்றிடும் திரையின் வலதுபுறமுள்ள படிவத்தின் பெயரில் sub sales line items என்பதை தெரிவுசெய்து சொடுக்கிபிடித்துஇழுத்துவந்து Form Sales என்பதில் விட்டிடுக.பின்னர் இடதுபுறம் Payment Method என்ற இயக்குவிசையின் எல்லைபுறத்திற்கு உடம்சுட்டியை கொண்டுசென்று சரிசெய்து உள்படிவத்தின் மிகச்சரியாக பொருந்தி அமைந்திடுமாறு செய்திடுக.

4.இதன்பின்னர் தானாகவே உருவானL(Sub form control payment method) என்ற தலைப்புபெயரை நீக்கம் செய்திடுக(Delete)உடன் முதன்மைபெற்றோர்படிவத்திற்கும் உள்படிவமான பிள்ளைகள் படிவத்திற்கு இணைப்புதானாகவே உருவாகியிருக்கும்.

5.பின்னர் உள்படிவத்தின் இயக்குவிசையை சரியானஅளவிற்குபொருந்திஅமைந்திடுமாறி அதனுடைய அளவினை சரிசெய்து அமைத்துகொள்க.

6.இதன்பின்னர் உள்படிவத்தின்இயக்குவிசை தானைாகவே இணைப்பு எற்படுத்தி யுள்ளதா வென சரிபார்திதடுக. இல்லையெனில்  பண்பியல்பு உரையாடல்பெட்டியை திறந்துகொண்டு அதன்மூலம் தேவையான இணைப்புகளை ஏற்படு்ததிகொள்க.

பெற்றோர்படிவத்திற்கும் பிள்ளைகளே படிவத்திற்கும் இணைப்பை ஏற்படுத்துதல் தரவுதள்த்திலுள்ள படிவத்திற்குள் இடம்சுட்டிமூலம் உல்படிவத்தினை இழுத்துவந்து விடும்போது தொடர்புடைய இணைப்பானது பின்வரும் நிபந்தனைகளை சரியாக பூர்த்திசெய்திருந்தால் தானாகவே  ஏற்பட்டிருக்கும் .

நிபந்தணை1. முக்கியபெற்றோர் படிவமும் பிள்ளைகளின் உள்படிவமும் ஒரே அட்டவணையின் புலங்களின் அடிப்படையில் உருவாக்கபட்டிருக்கவேண்டும்.

நிபந்தணை2.முக்கியபெற்றோர் படிவம் பிள்ளைகளின் உள்படிவம் ஆகியவற்றில் உருவாகியுள்ள புலங்களின அளவு தரவுகள் தொடக்கதிறவுகோள் அட்டவணை ஆகியவை  ஒரே மாதிரயாக இருக்கவேண்டும்

அல்லது இந்தஇணைப்பை நாம்விரும்பியவாறும் ஏற்படுத்திகொள்ளலாம் அதற்காக வழக்கமாக செயல்படுவதைபோன்று இணைப்பை ஏற்படுத்திடும் புலப்பெயரினை பெற்றோர் படிவபுலத்திலும் பிள்ளைகளின்படிவபுலத்திலும் உள்ளீடுசெய்தால்போதுமானதாகும்.

உள்படிவத்தில் மேற்கோள் இயக்குவிசையை (Reference Control)உருவாக்குதல்  

  ஒருஉள்படிவத்தின் கணக்கீடுபுலத்தின் ஒட்டுமொத்தகூடுதலானது முக்கிய படிவத்தின் கணக்கீடு புலத்தின் தொகைக்கு சமமாக இருக்கும் Sum of Line items என்ற கணக்கீடுபுலத்தின் ஒட்டுமொத்தமானது முக்கியபடிவத்தின்  Sum of total line items என்ற புலத்தின்தொகைக்கு சமமாகஇருக்கும் இது முக்கிய படிவத்தின் இயக்குவிசையில் தோன்றிடும் ஏனெனில் இது மற்றொரு படிவத்துடன் (உள்படிவம்) தொடர்புடையதுஆகும் இதுமுழுக்கமுழுக்க உளபடிவத்தின் நிகழ்வுகளை மட்டுமே பிரதிபலி்கககூடியதாகும் அதனால் இதனை உள்படிவமேற்கோள்இயக்குவிசை எனஅழைப்பர்.

சாதாரணகணக்கிடப்பட்ட (Calculated)இயக்குவிசையை உருவாக்குதல்

ஒருசிலநேரங்களில் கணக்கீடுபுலத்தை உருவாக்கிடும்போது வேறுஎந்தபடிவத்தையும் மேற்கோள் காட்டிடாமல் அந்தபடிவத்திற்குள்ளாகவே அமைந்திடுமாறு உருவாக்கபடவேண்டியிருக்கும்

படம்-9

படம்-9 -ல் உள்ளவாரு ஒரு இயக்குவிசையின் பெயர் Name என்பதற்குTxt Totalஎன்றும் இவ்வியக்குவிசையின் மூலம் (Control Source) என்பதற்கு =(txt sub total) + ( txt other amount) + (txt other amount) என்றும் உள்ளீடுசெய்தால் உடன் இதன் மொத்ததொகை.யான உள்கூடுதல் வரி வேறுஏதேனும் செலவுகள் ஆகியவற்றின் கூடுதல் தொகையாக கிடைப்தற்கு உதவுகின்றது கணக்கிடப்பட்ட வெளிப்பாடை (Calculated expression) உருவாக்குதல்

விற்பணைத்தொகையில்  தள்ளுபடிபோக மிகுதி தொகை எவ்வளவுஎனத்தெரியவேண்டும் என கொள்க அதற்காக விற்பணையான மொத்தபொருள் X பொருளின் விலை X தள்ளுபடி சதவிகிதம் X (1- 100) என பெருக்கிடவேண்டடும் இதனை தொடர்ந்து பண்பியல்பு உரையாடல் பெட்டியில் name என்பதில் txt amount என்றும் control source என்பதில் ((int quantity),0)  x (price),0)  x (1-nz(abl discount percent),0))என்றும் உள்ளீடுசெய்க.

ஒட்டுமொத்த கணக்கீடுகளின் வெளிப்பாடை உருவாக்குதல்

மேலே குறிப்பிடபட்டுள்ள கணக்கீடுகள் உள்படிவத்திற்குள் மட்டும் பிரதிபலிக்ககூடாது  நமக்கு முக்கிய படிவத்தில் இவ்வாறான பலஉள்படிவங்களின் ஒட்டுமொத்ததொகை தெரியவேண்டும் அதற்காகமுக்கிய படிவத்தின் அடிப்பகுதியில் இதனை உருவாக்கிட வேண்டும்  முக்கிய படிவத்தில் Nameஎன்பதில் Txt Item Total என்றும் control Source என்பதில்  D = sum (nz (int quantity),0) x (nz (cur price),0) x 1 – nz (dbl discount percent),0))))என்றும் உள்ளீடுசெய்து உடன் இந்த செயலியானது உள்டிவங்களின் ஒட்டுமொத்த தொகையின் கூடதலாக பிரதிபலிக்கசெய்கின்றது

வடிகட்டபட்ட ஒட்டுமொத்த கணக்கீடுகளில் வெளிப்பாடை உருவாக்குதல்

ஒருசிலநேரங்களில் நமக்கு குறிப்பிட்ட ஆவணங்களின் தொகையினுடைய கூடுதல் மட்டும் தெரிந்தால் போதுமென எண்ணிடுவோம் ுதாரணமாக ஒருசில பொருட்களுக்கு வரிவிதப்புஎதுவும் இருக்காது அவ்வாறான நிலையில் அட்டவணையில் வரியுள்ளவைமட்டும் எவையெவை அவ்வரியின் கூடுதலதொகை எவ்வளவுஎன தெரியவேண்டுமெனில்  = sum(iif((bln taxable = true, nz(int qunatity),0) x (nz((cur price),0) x (1-nz((dbl discount percent),0))),0)) எனஉள்ளீடுசெய்க

Dlookupஎன்ற செயலியை வினாவை பயன்படுத்துதல்

படம்-10-ல் உள்ளவாறு நாம் தயாரிக்கும் பட்டியிலின் பெயருக்கு பிறகு முழுமையான முகவரிவிவரத்தை கொண்டுவருவதற்கு இந்த Dlookupஎன்ற செயலி பயன்படுகின்றது    = =Dlookup (“(chr city) & “,” & (chr state) & “,” & (Chr zipcode) “,” tbl contacts “,” (ids contractid)=(ingzbuyer) என்பன போன்ற விவரங்களை எந்த அட்டவணையிலிருந்து tbl contact எந்தபுலங்களிலிருந்து ids contactid எந்த புலங்களில் இதனைபிரதிபலிக்கசெய்யவேண்டும் ingbuyerஎன்றவாறு விவரத்தை மட்டும் உள்ளீடுசெய்தால் நாம் குறிப்பிடும் அட்டவணையிலிருந்து தேவையான விவரங்களை எடுத்து பிரதிபலிக்க செய்யும் இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே வரியில் விவரங்களை கோருவதற்கு  பதிலாகபின்வருமாறு தனித்தனியாகவும் இந்த விரங்களை கோரி உள்ளீடு செய்யலாம்

= Dlookup (“(Chr city)”, tbl contact “,”(Ids contact,0) = ((ing buyer)) & “,” &

= Dlookup (“(Chr state)”, tbl contact “,”(Ids contact,0) = ((ing buyer)) & “,” &

= Dlookup (“(Chr zipcode)”, tbl contact “,”(Ids contact,0) = ((ing buyer)) & “,” &

 படம்-10

சேர்க்கைபெட்டியை (Combo Box)உருவாக்குதல்

Buyerஎன்ற சேர்க்கைபெட்டியானது கட்டுபாடுள்ள இயக்குவிசையாகும் இது sales எனும் அட்டவணையிலுள்ள Buyerஎன்ற புலத்தின் விவரங்களை உள்ளடக்கியதாகும் மேலும் இந்த Buyer-ன் பெயர் முகவரி என்பன போன்ற விவரங்களை மற்றொரு அட்டவணையான tbl

contact என்பதிலிருந்து எடுத்து பிரதிபலிக்க செய்கின்றது

இதில்Buyer-ன் பெயர் நிறுவனத்தின் பெயர் போன்றவை மட்டும் முழுவிரத்துடனும் மற்ற புலங்களின் விவரம் ஒட்டுமொத்தவிவரமாக மட்டும் பிரதிபலிக்கின்றது இந்த ஒட்டுமொத்த விவரங்களில் கணக்கீடுகளும் வரிசைபடுத்தி அடுக்குவதற்கு தேவையான புலங்களையும் பயன்படுத்தினாலும் அந்த முழுவிவரங்களும் மறைக்கபட்டு அதனுடைய ஒட்டுமொத்த விவரம் மட்டுமே திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது

ஆயினும் தேவையான குறிப்பிட்ட புலத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்கி பண்பியல்பு பட்டியை பிரதிபலிக்கசெய்து Source என்பதில் Builder என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்கினால்இந்த வினா(query )வில் உள்ள புலங்களின விவரம் நம்முடைய கண்ணுக்கு புலப்படும்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-12-அக்சஸில் படிவத்தை வடிவமைப்பு செய்தல்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-12-அக்சஸில் படிவத்தை வடிவமைப்பு செய்தல்

மேஜை வெளியீட்டுத்தொகுதி மூலம் சொற்தொகுப்பில் உருவாக்கிய ஆவணத்தின் தோற்றத்தினை மேம்படுத்தி படிப்பவர்களின் மனநிலைக்கேற்ப உருவாக்கமுடியும் .மிகமுக்கியமாக படிவவடிவமைப்பில் இந்தபயன்பாடு மிகவும் பயனுள்ளதாகும்

ஒரு செய்திதாளில் அதன்தலைப்புசெய்தி வாசகர்களை கவர்ந்து அந்த செய்திதாளை படிக்கும்படி தூண்டுவதுபோன்று ஒருபடிவத்தின் தோற்றம் அதனை படிப்பவர்களின் உள்ளத்தை கவர்ந்திடுமாறு தூண்டுவதுதான் ஒரு சிறந்த படிவ வடிவமைப்பாகும் இவ்வாறான படிவவடிமைப்பை மேம்படுத்திடுவதற்காக பல்வேறு கருவிகள் உள்ளன அவற்றுள் மிகமுக்கியமான கருவிகள் பின்வருமாறு

1.பின்புல வண்ணத்தை நிரப்புதல்

2.முன்புற எழுத்துரு அவ்வெழுத்துருக்களின் வண்ணத்தை நிர்ணயித்தல் 3.கோடு எல்லைக்கோட்டின் அகலம், செவ்வக எல்லைக்கோட்டை உருவாக்குதல்

4.கோடு எல்லைக்கோட்டின் வண்ணம், செவ்வக எல்லைக்கோட்டை உருவாக்குதல்

5. சிறப்பு சேர்க்கை,மிதக்க வைத்தல், மேம்படுத்துதல்,உள்நிறுத்தி வைத்தல் , நிழல் தோன்றுதல்

 தலைப்பு பெயர்,உரைப்பட்டியலின் தோற்றத்தினை மேம்படுத்துதல் எழுத்துருவின் வகையை மாறுதல் செய்தல் , எழுத்துருவின் அளவை மாறுதல் செய்தல், எழுத்துருவின் பாவணையை மாறுதல் செய்தல், எழுத்துருவின் வண்ணத்தை மாறுதல் செய்தல், எழுத்துருக்களின நிழலுருவை உருவாக்குதல் ஆகிய வழிகளில் மதிப்பை உயர்த்தி தோற்றத்தினை மேம்படுத்திடமுடியும்  எழுத்துருக்களின் பல்வேறு வகை,பாவணைகள் அமைப்பினை படம்-1-ல் காணலாம்

 படம்-1

எழுத்துகளின் நிழலுருவை உருவாக்குதல்

1.முதலில் தேவையான உரையை நகலெடுக்கவும்

2.பின்னர் நகல் உரையை உண்மை உரைக்கு பதிலாக உருவாக்குக

3.அதன்பின்னர் இந்த நகல்உரையின் வண்ணத்தை மென்மையான இளநிறமாக மாறுதல் செய்க

4. பின்னர் நகல் உரையை உண்மை உரைக்கு பின்புறம் கொண்டு சென்று வைத்திடுக

5.அதன்பின்னர் உண்மைஉரையின் பின்புல வண்ணத்தை நீக்கம் செய்திடுக 

தலைப்பு பெயருக்கு நிழலுருவை உருவாக்குதல்

1முதலில் நிழலுரு உருவாக்கவேண்டிய தலைப்பை தெரிவுசெய்க.

2. பின்னர் படம்-2-ல் உள்ளவாறு கட்டளைச்சட்டத்தில் உள்ள Edit என்பதை   தெரிவு செய்க.

3. அதன்பின்னர் விரியும் பட்டியில் Duplicate என்பதை தெரிவுசெய்க.

 படம்-2

4.உடன் படம்-3-ல் உள்ளவாறு மற்றொரு தலைப்பு உருவாகி இருக்கும்

 படம்-3

5அதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக

6.உடன் படம்-4-ல் உள்ளவாறு விரியும் குறுக்குவழி கட்டளைபட்டியில்  Fill/Back colour , fill / Font colour ஆகியவற்றில் ஒன்றினை தெரிவுசெய்க. 7.உடன் விரியும் Transparent என்பதில் தேவையான வண்ணத்தை எழுத்துருவிற்கும் பின்புலத்திற்கும் தெரிவுசெய்க  எழுத்துருவின் முன்புற வண்ண சாளரத்தின் மூலம் வெள்ளை வண்ணத்தை தெரிவுசெய்க

 படம்-4

 8.பின்னர் படம்-5-ல் உள்ளவாறு கட்டளைச்சட்டத்தில் Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் திரையில் விரியும் பட்டியில் sent back என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. Duplicate தலைப்பிற்கு படம்-4-ல் உள்ளவாறு தேவையான வண்ணங்களை உருவாக்கி சேர்த்திடுக

 படம்-5

 9.அதன்பின்னர் படம்-6-ல் உள்ளவாறுDuplicate தலைப்பை Original-ன் பின்புறம் சொண்டு சென்று வைத்திடுக.பின்னர் பின்புல நகல்தலைப்பினை சரியான இடத்திலும் அளவிற்கும் சரிசெய்து அமைத்திடுக

 படம்-6

திரையில்தோன்றிடும் ஒலிஒளிகாட்சி பிரதிபலிப்பதை முன்பின் தோன்றுவதற்கு ஏற்ப உரையை மாறுதல் செய்தல்:

பொதுவாக திரையில் வெள்ளை பின்புலத்தில் கருப்பு வண்ண எழுத்துகள் தெரிவதைமுன்பின் மாறிய திரையில் தோன்றிடும் ஒலிஒளிகாட்சி என்பர். இவ்வாறு மாற்றி காண்பிப்பதற்கு

1.உரைப்பெட்டி இயக்குவிசையில் உள்ள மாற்ற விரும்புவதை தெரிவு செய்க.

2. பின்னர் கட்டளைச்சட்டத்தில் உள்ள Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. திரையில் விரியும் பட்டியில்  நிரப்பு / பின்புலநிறம் (fill / background color) என்ற கட்டளையை தெரிவுசெய்துஅதில் தோன்றும் வண்ணத்தில் தேவையான கருப்பு வண்ணத்தைமட்டும் தெரிவுசெய்க

3.அதன்பின்னர் இதே கட்டளைபட்டியில்  எழுத்துரு /முன்புறநிறம்(font/front color) என்ற கட்டளையை தெரிவுசெய்துஅதில் தோன்றும் வண்ணத்தில் தேவையான வெள்ளைப வண்ணத்தைமட்டும் தெரிவுசெய்க

4.எழுத்துரு தடிமனாக வேண்டுமெனில் கருவிபட்டியிலுள்ள B என்ற கருவியை தெரிவுசெய்துகொள்க.

5. எழுத்துருவின் அளவை தேவையானவாறுவஉதாரணமாக 10 லிருந்து 12 ஆக மாற்றியமைத்திடுக.6.நாம் அமைத்திடும் உரையின் அளவும் இயக்குவிசையின் அளவும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைவதற்காக இதன் கீழ்புறம் உள்ள கைப்பிடியை சொடுக்கி சரிசெய்துகொள்க

7.இறுதியாக இதனுடைய சதுரமான அமைப்பின் பின்புல தோற்றத்திற்கு இளநீல நிறத்தை தெரிவுசெய்க உடன் படம்-6-ல் உள்ளவாறுகருப்புபின்புலத்துடன் இயக்குவிசையின் உரைஎழுத்துகள் வெள்ளை வண்ணத்தில் தோன்றும்

ஒரு படிவத்தில் கோடும் செவ்வகமும் உருவாக்குதல்

எந்த ஒரு படிவத்தினையும் உருவாக்கிடும்போது அப்படிவத்தினை சுற்றி சுற்றெல்லை கோட்டுடன் இருந்தால் பார்ப்தற்கு அதன் தோற்றம் நன்றாக இருக்குமேஎனஎண்ணிடுவோம் அவ்வாறான நிலையில்  செவ்வகத்தை உருவாக்குவதற்கு

1.அப்படிவத்தில் உள்ள செவ்வகம் உருவாக்கவிரும்பும் இயக்குவிசையை தெரிவுசெய்க

2.பின்னர் கருவிபட்டியிலுள்ள செவ்வகம்உருவாக்குவதற்கான கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

3அதன் பின்னர் தேவையான இயக்குவிசைமீது இடம்சுட்டியைவைத்து  பொருத்தமான அளவிற்கு இடம்சுட்டியை நகர்த்தி சரிசெய்து செவ்வகத்தை உருவாக்கிகொள்க.

கோட்டை உருவாக்குவதற்கு

1.கோடுஉருவாக்கவிரும்பும் இயக்குவிசையை தெரிவுசெய்க

2. பின்னர் கருவிபட்டியிலுள்ளகோடு உருவாக்குவதற்கான கருவியை தெரிவுசெய்து சொடுக்குக

3. அதன்பின்னர் படிவத்தின் இயக்குவிசையின் கீழ்பகுதியில் இடம்சுட்டியைவைத்து விசைப்பலகையில் Shift என்ற விசையை பிடித்துகொண்டு தேவையானஅளவு இடம்சுட்டியை பிடித்து இழுத்துவிடுக.அவ்வாறே மேற்புறமும் வலப்புறமும் இடப்புறமும் கோடுகளை தேவையான அளவிற்கு இழுத்துவிடுக.

4 பின்னர் மேலே கட்டத்தில் . உள்ள Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்  விரியும் பட்டியில்  Special Effects  என்ற கட்டளையை தெரிவுசெய்து அதில் தேவையானதை தெரிவுசெய்து கொள்க

5.கோட்டின் தடிமனை நிர்ணயிப்பதற்கு இவ்வடிவைப்பு Format பட்டியிலுள்ள கோட்டு தடிமன் என்பதைதெரிவுசெய்து அதில் 3 ஆவது பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

6.அவ்வாறே கோட்டிற்கான வண்ணத்தையும் தெரியவுசெய்துகொள்க இயக்குவிசையின் பின்புல நிழலுருவை உருவாக்குதல்

1.இவ்வாறு உருவாக்கிட விரும்பும் இயக்குவிசையை தெரிவுசெய்க

2. பின்னர் மேலே கட்டத்தில் . உள்ள Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

3. உடன்  விரியும் பட்டியில்  Special Effects  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

4. பிறகு விரியும் Special Effects  என்ற பெட்டியில் நிழலுருவம் என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

5. உடன் படம்-7-ல் உள்ளவாறு நிழலுரு பின்புலத்துடன் இயக்குவிசை தோன்றும்

6.இந்நிலையில் தலைப்பு பெயருக்கும் இவ்வாறான நிழலுருபின்புலம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என விரும்புவோம் அதற்காக அந்த தலைப்பு பெயரின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக. உடன் விரியும் குறுக்குவழிபட்டியில் Special Effects  என்ற கட்டளையை தெரிவுசெய்தவுடன் விரியும் சிறுபட்டியில்  தேவையான அமைப்பை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் படம்7-ல் உள்லவாறு தலைப்பு பெயர் எழுத்துகளுக்கும் நாம் தெரிவுசெய்த நிழலுருபின்புலம் தோன்றிடும் 

                                                         படம்-7

இயக்குவிசையின் பின்புலத்தில் Bitmap என்ற படத்தை தோன்றச்செய்தல்

1இரண்டு இயக்குவிசைகளுக்கிடையே மேல்புறம்இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக

2.உடன்விரியும் குறுக்குவழிபட்டியில் பண்பியல்பு(properties)  என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

3.பிறகு விரியும் பண்பியல்பு(properties)  என்ற உரையாடல் பெட்டியில் படப்பண்பியல்பு (Picture properties)என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

4 அதன்பின்னர் Bitmap படம் உள்ள கோப்பகம்(Directory) தேடிபிடித்து திறந்துஅதில் நாம்விரும்பும் படத்தை தெரிவுசெய்து சொடுக்குக. .

5 பின்னர் படத்தின் அளவு முறைமை பண்பில்பு போன்றவைகளை தேவையானவாறு மாற்றியமைத்துகொள்க உடன் Bitmap படபின்புலத்துடன் இவ்வியக்குவிசை தோன்றிடும்

தானியங்கி வடிவமைப்பை பயன்படுத்துதல்

புதியவர்கள் இவ்வாறான செயல்கள் தானாகவே நடைபெற்றால் நன்றாக இருக்கும் என எண்ணிடுவார்கள் அவ்வாறான நிலையில்

1.தேவையான தலைப்பு பெயரை தெரிவுசெய்துகொள்க

2.பின்னர் மேலே கட்டத்தில் . உள்ள Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

3.உடன் படம்-8-ல் உள்ளவாறு விரியும்  Format என்ற கட்டளை பட்டியில் Auto Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

                                                             படம்-8

    4.உடன் Auto Format என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்

5..பின்னர் அதில் Customize என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

6.உடன் படம்-9-ல் உள்ளவாறு Customize AutoFormat என்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் 

7. அதில் தேவையான செயல்களை தெரிவுசெய்து கொண்டு  OK  என்ற பொத்த்தானை சொடுக்குக 

8.பின்னர் என்பதில் பல்வேறு வாய்ப்புகள் நாம் தெரிவுசெய்வதற்காக தயாராக இருக்கும் அவற்றுள் தேவையான நாம்விரும்பும் வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு OK  என்ற பொத்த்தானை சொடுக்குக

9. உடன் படம்-9-ல் உள்ளவாறு தலைப்புபெயர் என்ற ஒன்று தானாகவே உருவாகி பிரதிபலிக்கும்  பின்னர் அதற்கான எழுத்துரு அளவு வண்ணம் எல்லைக்கோடு பின்புல படஅமைப்பு போன்ற அனைத்தும் முன்கூட்டியே தீர்மாணிக்கப்பட்டவாறு இந்த இயக்குவிசை தோன்றிடும்

10. இவ்வாறு தானாகவே உருவாகியதில் தேவையான ஒருசிலமாறுதல்களை மட்டும் சரிசெய்வதற்காக பட்டியில் நாம்விருபம்பியதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு OK  என்ற பொத்த்தானை சொடுக்குக 

                                                               படம்-9

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-11படிவங்களில் தரவுகளின் ஏற்புத்தகுதி வெளிப்பாடு உருவாக்குதல்

அறிந்து கொள்வோம் அக்சஸ் 2003-தொடர்-பகுதி-11படிவங்களில் தரவுகளின் ஏற்புத்தகுதி வெளிப்பாடு உருவாக்குதல்

கணினியில் குப்பையை உள்ளீடு செய்தால் வெளியீடும் குப்பையாகத்தான் இருக்கும்..அவ்வாறே நாம் தவறான தரவுகளை கணினியில் உள்ளீடு செய்தால் அதன் வெளியீடான அறிக்கையும் தவறாகத்தான் கிடைக்கும் என்றவாறான பொதுவான அபிப்பிராயம் உண்டு.

ஆனால் நல்ல தரமான நிரல்தொடர் கணினியில் இருந்தால் குப்பையாக தரவுகளை உள்ளீடு செய்தாலும் அதனை நன்கு சுத்தபடுத்தி நாம் எதிர்பார்க்கின்ற மிகச்சிறந்த வெளியீட்டு அறிக்கையாக கிடைத்திடவேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் நிரல்தொடரே மிகச்சிறந்ததென அனைவரும் ஏற்றுக்கொள்வர் சிறந்த தொரு பயன்பாட்டு நிரல்தொடரானது உள்ளீடு செய்யபடும் தரவுகள் மோசமானதாதாக இருந்தாலும் அதனை நன்றாக பகுத்தாய்ந்து வெளியிடும் அறிக்கையானது மிகச்சிறந்த்தகவும் திறன்வாய்ந்ததாகவும் அமைந்திருக்க வேண்டும்   

இவ்வாறான மிகச்சிறந்த பயன்பாட்டு நிரல்தொடரானது தரவுகளை எவ்வாறெல்லாம் மிகச்சரியாக உள்ளீடு செய்வது,இயக்குவிசையின் ஏற்புத்தகுதி என்ன என்றவாறு மிகச்சரியாக வழிகாட்டி ஒருபயனாளருக்குத் தேவையான ஆலோசனைகளை கூறுகின்றது 

படிவங்களில் தரவுகளை தவறுதலாக உள்ளீடு செய்தால் ஏற்புத்தகுதி என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும் இந்த வெளிப்பாட்டை அட்டவணையில் ஒரு படிவத்தின்மூலம் உள்ளீடு செய்யமுடியும் .மேலும் இவ்வெளிப்பாடு தானாகவே அட்டவணை வடிவமைப்பில் மரபுரிமையாக அல்லது அட்டவணைகளில் பயன்படுத்தபடும் படிவத்தில் ஏற்றுக் கொள்ளு மாறு இருக்கும்

இந்த வெளிப்பாட்டை ஒரு படிவத்தின் மூலம் அட்டவணைக்குள் உள்ளீடு செய்திடும் போது அப்படிவமானது ஏற்புத்தகுதியை சரிபார்க்கின்றது

தற்போதைய நிலைப்பாடு, வரிச்செய்தியை உருவாக்குதல்: பல்வேறு வகையான ஏற்புத்தகுதி உரையை அட்டவணை வடிவமைப்பிலேயே  உருவாக்கமுடியும் .ஒவ்வொரு தரவின் ஏற்புத்தகுதி விதி .ஏற்புத்தகுதிஉரை,உள்ளீட்டு மூடி போன்றவைகள் அட்டவணையின் பண்பில்பு தாளில் பிரதிபலிக்கும் .இவைகளை மீண்டும் படிவ வடிவமைப்பில் உள்ளீடு செய்யத்தேவையில்லை .இதனை படம்-1-ல் உள்ளவாறு நம்மால் காணமுடியும்.

படம்-1

விருப்பக்குழுபெட்டியை உருவாக்குதல்:விருப்பக்குழு வழிகாட்டிவித்தகர் மூலம் இதனை உருவாக்குவதுதான் மிகச்சுலபமான வழியாகும்.

1.முதலில் விருப்பக்குழு பொத்தானை அதற்கான கருவிபெட்டியிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குக.

2.பின்னர் புலவரிசை பட்டியலில் உள்ள புலம் ஒன்றினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து அப்படியே பிடித்து இழுத்துவந்து காலிபடிவத்தில் விட்டிடுக

           படம்-2

3.உடன் படம்-2-ல் உள்ளவாறு தோன்றும் விருப்பக்குழு வித்தகர் பெட்டியில் ஒவ்வொரு வரியிலும் தனித்தனியாக  On site, On field என்று உள்ளீடு செய்க

4.அதன்பின்னர் இவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

          படம்-3

5. உடன் படம்-3-ல் உள்ளவாறு   Yes ,the Default choice is : on field என்று இயல்புநிலைமதிப்பு திரையில் பிரத்பலிக்கும்

 6.பின்னர்   இவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7. உடன் படம்-4-ல் உள்ளவாறு  பிரதிபலிக்கும்.கட்டுண்ட விருப்பக்குழு புலத்தில் இயல்பு நிலை மதிப்பும் உண்மை மதிப்பும் பிரதிபலிக்கும் .வேண்டுமானால் 100,200,300 என ஒவ்வொன்றாக நாம் விரும்பியவாறு இவ்வெண்களை மாறுதல் செய்வதற்காக உள்ளீடு செய்க

படம்-4

8.அதன்பின்னர் இவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

9. உடன் படம்-5-ல் உள்ளவாறு இப்போது இவ்விருப்பக்குழு புலமானது கட்டுண்டபுலமாக இருக்கவேண்டுமா அல்லது கட்டற்ற புலமாக இருக்கவேண்டுமாவென் குறிப்பிடுவதற்காக Store the value in this field : in auction type என்ற செய்தி பிரதிபலிக்கும்

படம்-5

10. பின்னர் இவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

11. உடன் படம்-6-ல் உள்ளவாறுஇவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் மேற்படி பொத்தானின் வகைஎவ்வாறு இருக்கவேண்டுமென்பதில் Option button என்ற தேர்வுசெய்பெட்டியையும் கீழ்பகுதியில் எந்த பாணியில் அமைவேண்டும் என்பதில் Raised என்றதேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்க.  

படம்-6

12.அதன்பின்னர் இவ்விருப்பக்குழு வித்தகர்பெட்டியில் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-7

13. உடன் படம்-7-ல் உள்ளவாறு விருப்பக்குழு இயக்குவிசைக்கு தலைப்பு பெயர்(Caption) ஒன்றினை தெரிவுசெய்து சேர்த்திருக்கும் .தேவையானால் இத்தலைப்பு பெயரை (Caption) நாம் விரும்பியவாறு மாறுதல் செய்துகொள்க.

14.இறுதியாக finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-8-ல் உள்ளவாறு விருப்பக்குழு பொத்தான் என்ற இருவிதமான மாற்றியுடன் பிரதிபலிக்கும்

.படம்-8

பெயரை மாறுதல் செய்தல்:இவ்விருப்பக்குழுவிற்கு நாம் முன்பு வைத்தபெயர் சரியாகஇல்லை என எண்ணிடும்போது இதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் குறுக்குபட்டியில் Properties என்பதை தெரிவு செய்து சொடுக்கியவுடன் விரியும் பண்பியல்பு (Properties) என்ற உரையாடல் பெட்டியில் Name என்பதில் நாம்விரும்பிய பெயரை உள்ளீடு செய்திடுக. இயக்குவிசை மூலம் இப்பண்பியல்பை மாறுதல் செய்யவேண்டாம்

அளவை மாறுதல் செய்தல்: செவ்வகவடிவ இவ்விருப்பக்குழு பொத்தானின் அளவை தேவையானால் மாறுதல் செய்வதற்காகஇதன் வலப்புறம் கைப்பிடியில் இடம்சுட்டியை வைத்துபிடித்து அப்படியே இழுத்துசென்று விடுவதன்மூலம் தேவையானஅளவு மாறுதல் செய்க. அல்லது கட்டளை சட்டத்தில் உள்ள Format என்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் பட்டியில் Align என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர்விரியும் திரையில் தேவையான அளவை தெரிவுசெய்துகொள்க. அல்லது பொருத்தமானது (Fit) என்பதை தெரிவுசெய்க

Yes / No ஆகியவிருப்பத்தை இதில் உருவாக்குதல்:

1.இவ்வடிவமைப்பு பண்பியல்புகளின் மூலம் உரைப்பெட்டி இயக்குவிசையில் Yes / No ஆகிய விருப்பத்தேர்வை கொண்டுவரலாம்.

2.தேர்வுசெய் பெட்டியை பயன்படுத்தியும் Yes / No ஆகிய விருப்பத்தேர்வை கொண்டுவரலாம்.

3.விருப்பப்பொத்தானை உருவாக்குவதன் மூலமும் Yes / No ஆகிய விருப்பத்தேர்வை கொண்டுவரலாம்

.4.இருநிலை மாற்றி பொத்தானை உருவாக்குவதன் மூலமும் Yes / No ஆகிய விருப்பத்தேர்வை கொண்டுவரலாம்.

படம்-9

இருநிலை மாற்றி பொத்தானில் படத்தை கொண்டு வருதல்:

1.முதலில் தேவையான இருநிலைமாற்றி  பொத்தானை தெரிவுசெய்க

2.பின்னர் பண்பில்பு உரையாடல் பெட்டியை படம்-9-ல் உள்ளவாறு திறந்து அதில் Picture என்ற பண்பினை தெரிவுசெய்க

3.அதன்பின்னர் இப்பண்பியல்பு அமைப்பின் அருகிலிருக்கும் என்ற முப்புள்ளியாக வுள்ள Builder என்ற பொத்தானை சொடுக்குக

 4.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட முன்கூட்டியே தீர்மாணிக்கப்பட்ட படங்கள் தயாராக இருக்கும் அவற்றில் தேவையானதை Browse என்பதன் மூலம் தேடிப்பிடித்து தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை சொடுக்குக 5. உடன் படம்-10-ல் தேவையான படமானது இருநிலை மாற்றி பொத்தானில் வந்தமர்ந்திருக்கும்

படம்-10

பட்டியல் பெட்டிக்கும் சேர்க்கைபெட்டிக்கும் உள்ள வேறுபாடு:

1.பட்டியல் பெட்டியானது எப்போதும் நாம் தெரிவுசெய்வதற்கு ஏதுவாக திறந்த நிலையில் இருக்கும் .ஆனால் சேர்க்கைபெட்டியானது நாம்விரும்பும் பொத்தானை சொடுக்கியபின்னரே திறந்தநிலையில் இருக்கும்

2.சேர்க்கைபெட்டியில் பட்டியலில் இல்லாத மதிப்பைகூட உள்ளீடுசெய்யமுடியும் ஆனால் பட்டியல் பெட்டியில் பட்டியலில் இருக்கும் மதிப்பைமட்டுமே உள்ளீடு செய்யமுடியும்

3. பட்டியல் பெட்டியில் முதலெழுத்தைஅடிப்படையாக வைத்தே தேடிக் கண்டு பிடிக்கும்.ஆனால் சேர்க்கைபெட்டியில் முதலெழுத்து தெரியவில்லையென்றாலும் பரவாயில்லை அடுத்துள்ள எழுத்துகளை உள்ளீடு செய்துதேடிக்கண்டுபிடித்துவிடலாம் ஒற்றை நெடுவரிசை சேர்க்கை பெட்டியை உருவாக்குதல் :

1.முதலில் ஏற்கனவே இருக்கும் உரைபெட்டி,புலஇயக்குவிசை தலைப்புபெயரை(caption) நீக்கிவிடுக

.2.கருவிபெட்டியிலுள்ள சேர்க்கை பெட்டியை தெரிவுசெய்க

3.புலப்பட்டியில் தேவையானதை இடம்சுட்டியை வைத்து தெரிவுசெய்து சொடுக்கிஅப்படியே  பிடித்து இழுத்து வந்து தேவையான காலிபடிவத்தில் விட்டிடுக

4..உடன் படம்-11-ல் உள்ளவாறு சேர்க்கைபெட்டி வித்தகரின் (combo box wizard) உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்  இதன் மதிப்பு அட்டவணையில் / வினாவில் உள்ளவாறு உருவாக்கவேண்டுமா என்ற கேள்வியுடன் இருவாய்ப்புகளுடன் பிரதிபலிக்கும்.

படம்-11

5 முதல் விருப்பத்தை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை சொடுக்குக

6.உடன் படம்-12-ல் உள்ளவாறு எந்த வகையான அட்டவணை / விணா தேர்வுசெய்ய வேண்டுமென கோரும் அதில் நாம் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-12

7.உடன் படம் -13-ல் உள்ளவாறு தெரிவுசெய்யபட்ட அட்டவணையின் தயாராகவுள்ள புலத்திலிருந்து ( Available fields ) நாம் விரும்பும் புலத்தை( Selected fields)  க்கு >என்ற குறிமூலம் தெரிவுசெய்து  கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக.

படம்-13

8.உடன் படம்-14-ல் உள்ளவாறு  எந்தபுலத்தை வரிசைபடுத்தி அடுக்கவேண்டு(sort)மென கோரும் .இயல்புநிலையில் நாம் விரும்பியபுலமும் மேல்நிலையிலிருந்து கீழ்நிலைநேக்கி   (Ascending order) என்று தெரிவுசெய்திருக்கும் இதனை ஏற்று  கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக

படம்-14

9.உடன் படம்-15-ல் உள்ளவாறு பிரதிபலிக்கும் சேர்க்கைபெட்டியில் எழுத்துகள் முழுவதும் பிரதிபலிப்பதற்கு ஏற்றவாறு அகலத்தை சரிசெய்து கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக

படம்-15

10.உடன் படம் -16-ல் உள்ளவாறு Store the value in the field என்று நாம்விரும்பிய புலத்தின் பெயருடன் பிரதிபலிக்கும் தேவையானால் மாறுதல் செய்து கொண்டு Next என்ற பொத்தானை சொடுக்குக

படம்-16

11.உடன் தோன்றிடும் திரையில் இந்த சேர்க்கை பெட்டிக்கு ஒரு பெயரை உள்ளீடுசெய்க.பண்பியல்பு பெட்டியில் இந்த சேர்க்கைபெட்டி பிரதிபலிக்கவில்லையெனில் படிவக்காட்சி என்பதை தெரிவுசெய்க.உடன் திரையில் தோன்றுவதை பிடித்து இழுத்துவந்து சேர்க்கைபெட்டியில் விட்டிடுக.இறுதியாக  Finish என்ற பொத்தானை சொடுக்குக

படம்-17

பலநெடுவரிசை சேர்க்கை பெட்டிகளை உருவாக்குதல்: நடப்பில் இருக்கும் உரைப்பெட்டியை சேர்க்கை பெட்டியாக மாற்றி பலவகையான சேர்க்கை அமைப்பாக மாற்றமுடியும்  அதற்காக

1.முதலில் Seller எனும் உரைபெட்டியை தெரிவுசெய்க.

2.பின்னர் படம் -18-ல் உள்ளவாறு இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்த்தானை சொடுக்குக

3. உடன் விரியும் பட்டியில் Change to என்பதை தெரிவுசெய்க. அதன்பின்னர் விரியும் சிறுபெட்டியில் Combo Box என்பதை தெரிவுசெய்க.     

படம்-18

4.அதன்பின்னர்  கிடைவரிசைமூல(RowSource)பண்பியல்பினை தெரிவுசெய்து Builder என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5.உடன் படம்-19-ல் உள்ளவாறு Showtable என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான அட்டவணையின் பெயர்களை தெரிவுசெய்துகொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

3. உடன் நாம் தெரிவுசெய்தஅட்டவணை பட்டியல் சிறுபட்டியலாக திரையில் பிரதிபலிக்கும்.

7.பின்னர் Showtable என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-19

   மூன்று புலத்தினை  SQL Builder என்பதின்மூலம் உருவாக்குதல்:  

1.பட்டியிலில் உள்ள Company  Last Name, Contact ID, Contact Type ஆகிய மூன்று புலங்களை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து இழுத்துவந்து கீழுள்ள பலகத்தில் விட்டிடுக.

2.பின்னர் Last Name என்பது பிரதிபலிக்கவில்லயெனில் Contact Name, Char Last Name & “, “ & Char First Name  என இரண்டாவது புலத்தில் உள்ளீடு செய்க

 3.பின்னர் முதல்புலத்திற்கு கீழுள்ள Sort என்பதை தெரிவுசெய்து அதில் Ascending என்பதை கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவுசெய்க.

4. Contact Type ல் Seller Or Buyer ஆகிய இரண்டையும் தெரிவுசெய்து கொள்க .

5.நான்காவது புலத்தின் கீழ்உள்ள Criteria என்பதை தெரிவுசெய்துகொண்டு  அதில் Seller அல்லது(or) Buyer என உள்ளீடு செய்க.

6. இறுதியாக இந்த வினாவினை மூடி மாறுதல் செய்ததை சேமித்திடுக.  

கீழ்காணும் சேர்க்கை பெட்டியில் மாறுதல் செய்தல்:

1.Seller என்பதில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் படம்-19-ல் உள்ளவாறு விரியும் பட்டியில் Properties என்பதை தெரிவுசெய்க.உடன் படம்-20-ல் உள்ளவாறு  ComboBoxSellerID என்ற பண்பியில்பு பெட்டி தோன்றிடும் அதில் என்ற பண்பியல்பில் நாம் மூன்று நெடுவரிசைகளை உருவாக்கிட விரும்புவதால் 3 என உள்ளீடு செய்க.

2.வெடுவரிசை தலைப்பில் Yes என அமைத்திடுக

3.நெடுவரிசையின் அகலத்தை ‘2’,’2’,’0’என அமைத்திடுக.

4. கட்டுண்ட படிவம் என்பதில் 3 என அமைத்திடுக

.5. பட்டியின் அகலபண்பியல்பை 4 என அமைத்திடுக .நெடுவரிசை அளவில் மொத்த மதிப்பை அமைத்திட வேண்டும் இல்லையெனில் நெடுவரிசையை கிடைவரிசையின்மூலம்தான் காணவேண்டும்6. வரைமுறை பண்பியல்பில் Yes என்பதை  தரிவுசெய்க, உடன் படம்-20-ல் உள்ளவாறு என்ற சேர்க்கை பெட்டியின் குறுக்கு விசை பண்பியல்பு சாளரம் தோன்றிடும்

படம்-20

கடவுச்சொல்(password) இல்லாமல் நம்முடைய முகத்தை மட்டும் காட்டி கணினிக்குள் நுழையலாம்

பொதுவாக ஒரு கணினிக்குள் நுழைய பயனாளர் பெயரும் ,கடவுச் சொல்லும் வழங்குவதுதான் தற்போதைய நடையமுறையாகும்  இனி நம்முடைய முகத்தை மட்டுமே காட்டி கணினிக்குள் எளிதாக நுழையலாம்.

1.1

  கணினி உலகில் அதிகபட்ச பாதுகாப்புகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஆகும் இது திரைப்படங்களில் மட்டுமல்லாது  நாமும் நம்முடைய  முகத்தை காட்டி நம்முடைய கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் அவைகலின் மூலம் நம்மால் உள் நுழைய  முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் பிலிங் என்ற  மென்பொருள் வெற்றி பெற்றுள்ளது. .இது தற்போது http://www.luxand.com/blink/ என்ற முகவரியில் இலவசமாக கிடைக்கின்றது  இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் தரவிறக்கமம் செய்து நிறுவிகொண்டு வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம்முடைய முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி நம்முடைய கணினி நம்மை உள்ளே செல்லஅனுமதிக்கும். விண்டோ விஸ்டா , விண்டோ 7 ஆகிய இயக்கமுறைமைகளில் இயங்கும் திறனுடன் 32 பிட் , 64 பிட் பதிப்பிலும் இது கிடைக்கின்றது.இம்மென்பொருளின் அளவு 8.3 MB தான். இம்மென்பொருள் இயங்க 25 முதல் 30 MB வரை  இடம் மட்டுமே தேவையாகும்.

 

புதிய இணைய தளமொன்றை எவ்வாறு பதிவேற்றுவது?

2.1

ஒரு இணைய தளம் இயங்கிடும் இணையசேவையாளரின் (Host )  கணினிக்கு கோப்பு ஒன்றை அனுப்பும் செயலையே பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைப்பார்கள்.
இந்த  கணினியானது  FTP என சுருக்கமாக அழைக்கப்படும் கோப்பு பரிமாற்ற மரபொழுங்கை(File Transfer Protocol) ஆதரிக்கும் செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம் தேவையாகும்.  FileZilla என்பது அவ்வாறான   FTP Client திறமூல மென்பொருள் கருவியாகும் FileZilla. 3.3.3 எனும் இதன் தற்போதைய  பதிப்பை    http://sourceforge.net/projects/filezilla/  எனும்  தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். இக்கருவியை கொண்டு உரைகள், படங்கள். வீடியோ, இசை என எந்த வகையான கோப்புகளையும் பதிவேற்றம் (Upload) செய்யலாம்.

இவ்வாறு இணைய தள மொன்றிற்கு நம்முடைய கோப்பு ஒன்றை பதிவேற்றம் (Upload) செய்வதற்கு முன்னர் நாம் கணக்கு வைத்திருக்கும் அல்லது நம்முடைய இணைய தளத்தை பராமரிப்பு செய்யும் நிறுவனத்திடமிருந்து  நம்முடைய இணைய தளத்தை பராமரிக்கும் கணினியின் பெயர் அல்லது சேவையாளர் முகவரி.  ftp://ftp.example.com/.. FTP என்றவாறும், பயனர் பெயர் , கடவுச் சொல். இணையச்சேவையாளரில் www அல்லது public_html என்றவாறான பெயருடைய  நம்முடைய கோப்புகளை சேமிக்க வேண்டிய கோப்பகத்தின் பெயர் என்பன போன்ற  விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். .

2.2

 முதலில் இந்த  பைல்ஷிலா எஃப்.டி.பீ க்ளையன்டைத் திறந்து கொள்க. அதில் File=>  Site Manager=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக. பின்னர் தோன்றும் Site Manager எனும் திரையில் New Site எனும் பொத்தானை சொடுக்குக. அப்போது அதன் மேற் பகுதியில் இணைய தளத்தின் பெயரை வழங்குவதற்கு ஏதுவான உரைபெட்டியில் இடம்சுட்டி தோன்றும். அதில் அந்த இணைய தளத்திற்குரிய  பெயரை உள்ளீடு செய்க. இந்தப் பெயர் நம்முடைய தளத்தை அடைவதற்கான இணைய தள முகவரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
பின்னர் General எனும் தாவியின் திரையில் Host எனுமிடத்தில் நம்முடைய தளத்திற்கான செர்வர் முகவரியை  ftp://ftp.example.com/. என்றவாறு தவறில்லாமல் தட்டச்சு செய்து Server type எனுமிடத்தில் FTP ஐ தெரிவு செய்க. . இந்நிலையில் Port இலக்கம் வழங்கத்தேவையில்லை
அதன்பின்னர் Logon type எனுமிடத்தில் அதனுடைய கீழிறங்கு பட்டியலிலிருந்து Normal என்பதை தெரிவு செய்க. உடன் User Name , Password வழங்கக் கோரி அந்த இடம் மாறும். அவ்விடங்களில் நமக்கு தரப்பட்டுள்ள பயனர் பெயரையும் கடவுச  சொல்லையும் வழங்குக. இந்த விவரம் நம்முடைய கணினியில் இயல்பாகவே சேமிக்கப்படும். அதனால்  நாம்  விரும்பும் கோப்பினை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு தடவையும் இந்த விவரங்களை வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. .
எனினும் இணைய மையம்(Internet café) போன்ற பொது இடங்களில் இந்த எஃப்.டிபீ க்ளையன்டை பயன் படுத்துவதாக இருந்தால் கோப்பு பதிவேற்றும்  பணி் முடிந்ததுமே அந்த விவரங்களை  அந்த கணினியிலிருந்து அகற்றி விட்டு வெளியேறுக என அறிவுறுத்தபடுகின்றது.
பின்னர் நம்முடைய சேவையாளர் கணினியை அடைவதற்கு Connect எனும் பொத்தானை சொடுக்குக. உடன்  FileZilla திரையின் வலப்புறம் நம்முடைய தளத்திற்குரிய கோப்பகங்களை பட்டியலிடக் (Remote Site) காணலாம். அதேபோல் இடப்புறம்  நம்முடைய  கணினியிலுள்ள (Local Site) கோப்பகங்களை காண்பிக்கும். இந்த இரண்டும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் போன்று செயற்படும்

2.3

 சாளரத்தின் வலப்புறத்தில் நமக்கு வழங்கப்பட்டwww, public_html போன்ற ஏதேனுமொரு பெயரை தெரிவுசெய்து இருமுறை சொடுக்கி திறந்து கொள்க.
பின்னர் சாளரத்தின் இடப்புறத்தில் நாம் பதிவேற்றம் செய்ய விரும்பும் கோப்பை நம்முடைய கணினியிலிருந்து தெரிவு செய்து கொள்க.
அதன்பின்னர் அந்த கோப்பினை இழுத்து சென்று விடும்(Drag & Drop) முறையில் இழுத்து வலப்புறம் உள்ள உரிய கோப்பகத்தில் போட்டு விடுக. உடன் அந்த கோப்பினை  பதிவேற்றம் செய்யும் பணி ஆரம்பிக்கும் .இப்பதிவேற்ற செயலை பைல்ஷிலா திரையின்  கீழ்ப் பகுதியில் காண்பிக்கும்.இப்பதிவேற்ற பணி முடிந்தவுடன் Server=>  Disconnect => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி செர்வரிலிருந்து இணைப்பைத் துண்டித்து விடுக
ஒரு வேளை நம்முடைய  தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் இந்த பைல்ஷிலா எப்.டி.பீ க்ளையன்ட்  கொண்டு நம்மை அணுக விடாமல் தடுத்தால் நம்முடைய கோப்பை பதிவேற்றம்  செய்யும் பணிக்கு வழக்கமான இணைய உலாவியையே பயன் படுத்த வேண்டும். என்பதை நினைவில் கொள்க. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த இணைய தளங்களை நிர்வகிப்பதற்கான கட்டுப்படாடு பலகம்(Control Panel) எனும் வசதி இந்த ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும் என்பதையும் மனதில் கொள்க.

வருங்காலத்திய கணினிகள்

இந்த படத்தில் உள்ளவை நாம் எழுதும் பேனா அல்லது படம் பிடிக்கும் கேமராவா என தடுமாறவேண்டாம் இவை வருங்காலத்திய கணினிகள் ஆகும்

 இவையே தற்போதைய pcஎனும் தனியாள் கணினிக்கு பதிலாக வரவிருப்பவை யாகும் இது எவ்வாறு பணியாற்றும்

3.1

அறிவியலறிஞர்களின் கடும் உழைப்பினாலும் ப்ளூடூத் எனும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் கணினியை சிற்றளவாக்கம் செய்து நம்முடைய சட்டைபையில் செருகி எடுத்துசெல்லுமாறான பேனாவடிவில் இவ்வருங்கால கணினியை உருவாக்கியுள்ளனர்

3.2

தற்போதைய மேஜைக்கணினியில் செய்யும் அனைத்து பணிகளையும் இந்த பேனாவடிவ கருவிகள் ஒருசமதளபரப்பையே கணினியின் திரையாகவும் விசைப்பலகையாகவும் பாவித்து செயற்படுத்திட அனுமதிக்கின்றன

3.3

இதனுடைய வரவால் தற்போதைய மடிக்கணினியை கூட மிக விரைவில் இது வழியனுப்பி வைக்கும் நிலை ஏற்படபோகின்றது

தமிழில் மொழிபெயர்ப்பு கருவி.

தமிழ் மொழி மட்டுமே தெரிந்துள்ள நாம் உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நம்முடைய  கடிதங்களை எழுதலாம்…அதேபோன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து படிக்கலாம். இதற்காக தத்தமது தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிபேசுபவர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில்  மொழிமாற்றும் கருவியொன்றை நமக்கு கூகிள் வழங்குகின்றது இதன்மூலம்  வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டுமல்லாது உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றாக இணைக்க முயற்சி செய்கின்றது.

தமிழில் செய்திகள், மின்னஞ்சல், தட்டச்சு கருவி,  தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகளுடன் தற்போது தமிழுலகிற்கு கூகுள் ஆனது  கூகுள் மொழிமாற்றி (Google Translate) எனும் சேவையைஅறிமுகபடுத்தியுள்ளது

இந்த கருவி தற்போது முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற http://translate.google.com/ என்ற முகவரிக்கு செல்க.உடன் இதன் திரை தோற்றம்  கீழ்காணுமாறுஇருக்கும் .

5.1

  இதில்உள்ள From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், TO என்பதில் மாற்றம்பெற வேண்டிய மொழியையும் தேர்வு செய்க.  பின்னர் மொழிபெயர்ப்புசெய் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும்.


 இந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது.. அதன் மூலம், நாமே இப்பிழைகளை திருத்திவிடலாம். இதனால் அடுத்த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் ஆகும் என்றாலும்  நாமெல்லோரும் இந்த பணியில் பங்கெடுத்து கொண்டால்  விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும் என்பது திண்ணம்.

வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணைய தளத்தையோ அல்லது ஆவணத்தையோகூட இதனுடைய உதவியால் நம்மால்  மொழி பெயர்க்க முடியும்… உதாரணமாக… உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..

கூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.

பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் இணையதளத்தினை அல்லது கணினியை  கையாளும் நிலையிலிருந்து தற்போது ஒரு சாதாரண மனிதன்கூட தத்தமது தாய்மொழியை கொண்டே இணையதளத்தினையும் அல்லது கணினியையும் கையாளவும் செய்யலாம் என்ற நிலை இந்த  வசதி நமக்கு அளிக்கின்றது. இது போன்ற மொழி மாற்றம் செய்யும் கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு நமக்கு மிக எளிதாகிவிடும் என்பது திண்ணம்.

 குறிப்பு:

1.         கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம் ஆகும்.
2. கணினி துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பிரிவின் கீழ் வரும் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகளை தற்போது பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன.

வேர்ட் 2010 ல் எக்சல் பணித்தாளை இணைக்கலாம்

எம்எஸ் ஆஃபிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான எம்எஸ் ஆஃபிஸ் 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.
இதனுடைய வோர்ட் 2010 ல் இருந்தபடியே எக்சல் பணித்தாளை இதனுள் இணைத்துக் கொள்ள முடியும். என்ற வசதி மிக சிறப்பானதாகும் இந்த வசதியின் மூலமாக வேர்ட் தொகுப்பில் இருந்தபடியே எக்சல் தொகுப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சில நேரங்களில் வேர்ட் தொகுப்பில் ஒரு சில கணக்குளை போட வேண்டிவரும் அது போன்ற நேரத்தில் மிகவும் சிரமப்படுவோம். சதாரண கணக்கென்றால் பராவயில்லை மிகப்பெரிய அளவிளான கணக்குளை செய்ய வேண்டிய நிலையில் எக்சல் உதவியைதான் நாட வேண்டியிருக்கும். இதற்கு பதிலாக எக்சல் பணித்தாளையே  வேர்ட் தொகுப்பில் பயன்படுத்தினால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.  இவ்வாறு இணைக்க முதலில் வேர்ட் 2010 தொகுப்பை திறந்து கொள்க. அடுத்ததாக இதில் Insert என்னும் தாவியின் திரையை தோன்றச்செய்க. அதில் Table=> Excelspreadsheet=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

6.1

 உடன்  எக்சல் பணித்தாளானது வேர்டு ஆவணத்தில் இணைக்கப்பட்டுவிடும். அதை பயன்படுத்தி எளிமையாக எக்சல் பணிகளையும் வேர்ட் தொகுப்பிலேயே செய்ய முடியும்.

6.2

  இவ்வாறு எக்சல் தொகுப்பை இணைத்தவுடன், அதனோடு கூடவே எக்சல் தொகுப்பிற்கு உண்டான டூல்பாரையும் காண முடியும்.

 6.3

 இந்த டூல்பாரின் உதவியுடன் எக்சல் பணிகளை மிகவிரைவாக செய்ய முடியும். வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு இந்த வசதியானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

வன்தட்டில்(Harddisk) இல் ஏற்படும் பிழைச்செய்திகளை சரிசெய்ய

எந்த வொரு கணினியிலும் தொடர்ந்து அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் அவ்வப்போது திரையில் தோன்றி கொண்டேயிருக்கும். பொதுவாக விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் ஏராளமான அளவில் கிடைக்கபெறும். வழக்கமாக ஒரு வன்தட்டில்தான் அனைத்து மென்பொருள்களையும் நிறுவி செயற்படுத்தி பயன்படுத்துவோம்

குறிப்பிட்ட மென்பொருள் தேவை இல்லையெனில் அம்மென்பொருள்ளை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். அவ்வாறு கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில கோப்புகள்  நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த கோப்புகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி பிழைச் செய்தி காட்டும்.  ஒரு வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது தனித்தனி செக்டர் பகுதிகளாகவே இவை சேமிக்கப்படும். இம்மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் தேவைபடும்போது மட்டும் இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் முழுமையாக இல்லாமல் பதியபடும், மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் பிழைச்செய்தி வருவதோடு கணினி தொடக்கமும் நத்தையை போன்று மந்தமாகும். இதுபோன்ற பிழைச்  செய்திகளை சரிசெய்ய  CheckDiskGUI என்ற மென்பொருள் உதவி செய்கிறது.இம் மென்பொருளை தரவிறக்க  http://www.wieldraaijer.nl/download/CheckDiskGUI/CheckDiskGUI.exe
என்றதளத்திற்கு செல்க.
 இந்த மென்பொருளை மேற்படி இணையத்திலிருந்து பதிவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க. பின் இந்த பயன்பாட்டினை செயற்படுத்துக உடன் தோன்றும் திரையில் தேவையான இயக்ககத்தை (drive) தெரிவு செய்து, Read only என்ற பொத்தானை சொடுக்கி சோதனை செய்து கொண்டு, பிழைச்செய்தி இருப்பின் அதனை தெரிந்துகொள்ளFix என்ற பொத்தானையும். அப்பிழைச்செய்திகளை நீக்கம் செய்ய  Fix and Recover என்ற பொத்தானையும்  சொடுக்கி அந்த பகுதிகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்க. இது ஒரு  இலவச மென்பொருள் ஆகும். இதனை விண்டோஸ் 7 இயக்கமுறைமையிலும் பயன்படுத்தலாம்  வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

ஆப்ரா எனும் இணைய உலாவி

இது ஒருவழக்கமான இணையஉலாவிதானே என கருதவேண்டாம் ஏனெனில்  File, Edit, View,  என்பனபோன்று இதனுடைய கட்டளைபட்டிகளின் மிக வித்தியாசமாக பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளன

8.1

முகப்பு பக்கம் (Home Page)இதற்கான சுருக்கு விசை Ctrl+F12 ஆகும் இவற்றை அழுத்தியவுடன் தோன்றிடும் preference என்ற உரையாடல் பெட்டியின் General தாவியின் திரையில்  Use Current என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நாம்விரும்பும் இணையதளத்தின் URL முகவரியை அதற்கான பகுதியில் தவறில்லாமல் தட்டச்சசெய்க வேறு வாய்ப்புகளை பயன்படுத்திட  Startup எனும் இதனுடையகீழிறங்கு பட்டியலை (drop down menu ) பயன்படுத்திகொள்க

8.2

Default Search Engine  Preferences உரையாடல் பெட்டியினுடைய Search எனும் தாவித்திரையில் நம்முடைய விருப்ப தேடுபொறியை (preferred search engine) தெரிவுசெய்துகொண்டு  Edit என்ற பொத்தானை சொடுக்குக.

8.3

பின்னர் தேன்றிடும் Search Engine எனும் உரையாடல் பெட்டியில் Use as default search engine என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க  தேவையானால்  Details என்ற பொத்தானை இதற்காக சொடுக்கி விரிவுபடுத்திகொள்க

8.4

Bookmarks இதனை செயற்படுத்திட Ctrl+D, ஆகிய விசைகளை  சேரத்து அழுத்துக உடன்  Add Bookmark எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும்.

8.5

அதில் Details என்ற பொத்தானை சொடுக்கி விரிவுபடுத்துகபின்னர் Show on Bookmarks Bar என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க .

8.6

தேவையானால்  View=>Toolbars => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் விரியும் பட்டியில் Bookmarks Bar என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து. Bookmarks Toolbar,என்பதை திரையில் பிரதிபலிக்கசெய்க

8.7

Previous Older Entries