நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படும் எக்செல்லின்செயலிகள்

1திருப்பூரில் ஒரு பணியன் உற்பத்தி செய்யும் நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய விற்பணை மையங்களை திறந்து செயல்படுவதாக கொள்வோம் அ எனும் நாட்டில் ஆ எனும் பணியன் வகையானது இ எனும் இன மக்கள் மார்ச்சு2014 இல் எவ்வளவு எண்ணிக்கையில் எவ்வளவு தொகைக்கு விற்பனை ஆனதுஎன காண தனியான மென்பொருள் எதவும் தேவையில்லை நாம் வழக்கமாக பயன்படுத்திடும் எம் எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் இருந்தால் அதில் அனைத்து விற்பனைகிளைகளும் தத்தமது விற்பனை தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்தால் போதும் தலைமை அலுவலகத்தில் = SUMIFS(sales, regions, “A”, products, “B”, customer types, “C”, month, “M”) என்றவாறு ஃபர்முலாவை உள்ளீடுசெய்து மிகஎளிதாக ஒருசில நொடிகளில் நாம் விரும்பும் விவரத்தை பெறமுடியும்
2.இதே விற்பணை விவரங்களிலிருந்து குறிப்பிட்ட வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை பணியன்களை எவ்வளவு எண்ணிக்கை எவ்வளவு தொகைக்குகொள்முதல் செய்தார் என காண VLOOKUP எனும் செயலி VLOOKUP(“C00023″, customers, 2, false) என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி அறிந்துகொள்ள பயன்படுகின்றது இங்கு என்பது C00023பணியன் வகை என்பது வாடிக்கையாளரின் குறியீட்டு எண் customers, 2,ஆகும்
3. எம்எஸ் எக்செல் அல்லது லிபர் ஆஃபிஸ் கால்க் பயன்படுத்திடும் பத்து நபரில் ஒருவர் கண்டிப்பாக VLOOKUP எனும் செயலியை பயன்படுத்தி கொள்வதாக ஆய்வு ஒன்றுகூறுகின்றது ஆயினும் இந்த VLOOKUP எனும் ஃபார்முலாவானது இடதுபுறம் ஓரம் உள்ள தரவை மட்டுமே ஒப்பீடு செய்து பார்த்து விவரங்களை கொடுக்கின்றது இதற்கென தனிப்ப்ட்டவகையில் அட்டவணையை உருவாக்கி கையாளவேண்டியுள்ளது இதை தவிர்த்து இதே செயலை அட்டவணைஎவ்வாறு இருந்தாலும் செயல்படுத்திட பயன்படுவதுதான் INDEX+MATCH ஆகிய செயலிகள் ஆகும் =INDEX(customer IDs, MATCH(“Tamil Computer”, Customer names, 0) ) என்றவாறு ஃபார்முலாவை உள்ளீடு செய்து செயல்படுத்தி எந்த நெடுவரிசையிலுள்ள தரவுகளையும் எந்த நெடுவரிசைகளுடனும் ஒப்பிட்டு அதன் முடிவை அட்டவணையில் காண்பிக்கின்றது
4. அரசாங்கம் தம்முடைய மக்களின் கணினி அறிவை தமிழில் அறிந்து கொள்ள ஊக்கபடுத்துவதற்காக ஒருஅரசாணை வெளியிடும்போது அதில் நிபந்தனைகளுடன் வெளியிடுவதை =IF(Public reads Tamil Computer, “ exemption of income2%”, “exemption of income 0% ”) என்றவாறு ஃபார்முலாவுடன் ஒப்பிடலாம். இங்கு இந்த பந்தனையானது பூர்த்தி ஆனால் exemption of income2% என்றும் இல்லையஎனில் exemption of income0% என்றும் =IF (condition to test, output for TRUE, output for FALSE) என்றவாறு ஃபார்முலா அமைகின்றது

Perl எனும் மொழியை விண்டோ 7 இலும் செயல்படுமாறு செய்யமுடியும்

Practical Extraction and Reporting Language என்பதை அவைகளின் முதலெழுத்துகளின் சுருக்குமாக Perl என அழைக்கபடும் இதுயூனிக்ஸின் அடிப்படையில் உருவான ஒரு கணினிமொழியாகும் இது பொதுபயன்பாட்டினை உருவாக்கிடும் சிறந்த மொழியாகவும் நல்ல செயல்திறன் ,கட்டமைவு, பின்புல குழுவான நபர்களின் உதவி போன்றவைகளால் மிகசிறந்தவொன்றாக விளங்குகின்றது இது எந்தவொரு லினக்ஸ் இயக்கமுறைமை கட்டுகளிலும் அதனேடுகூடவே இயல்பாகவே கிடைக்கின்றது ஆயினும் விண்டோ இயக்கமுறைமையெனில் அதற்கென தனியாக பதிவிறக்கம் செய்து அதற்கேற்ப கட்டமைவுசெய்யவேண்டியுள்ளது இருந்தாலும் இதனுடைய பழைய பதிப்புகளே விண்டோ இயக்கமுறைமையில் செயல்படுவதற்காக . உள்ளது தற்போதைய சமீபத்திய பதிப்பாக விண்டோவில் செயல்பட தனியான படிமுறைமையை பின்பற்ற வேண்டும்
அதற்காக http://www.strawberryperl.com/ எனும் இணைய பக்கத்திற்கு சென்று More downloads எனும் பகுதியில் other release:ZIP,portable என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து எனும் கோப்பினை நம்முடைய கணினிக்கேற்ற 32அல்லது 64 தகுந்த பதிப்பில் portable ZIP எனும் கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்க பின்னர் ஒரு புதிய கோப்பகத்தில் இந்த கட்டுகளை பிரித்து unzip கொள்க. அதன்பின்னர் portableshell.bat எனும் கோப்பினை செயல்படுத்தி வழிமுறைகளையும் விவரங்களையும் அறிந்து அவ்வாறே செயல்படுத்தி பயன்படுத்தி கொள்க

வாருங்கள் ராம்கிளவுடின் அடிப்படையை பற்றி அறிந்து கொள்வோம்

அமோசான்,முகநூல் போன்ற  சமூகவலைதளங்களை ஏராளமான நபர்கள் பல்வேறு முனைமங்களிலிருந்து ஒரே சமயத்தில் அனுகி இதனுடைய ஒற்றையான முதன்மை பக்கத்தை மட்டும் அனைவரும் பயன்படுத்துவதால் உருவாகும் அந்த தளங்களின் அனைத்து தரவுகளையும் சேமித்து வைத்திடவும்  அதனால் தன்னுடைய செயல்படும் திறனை குறைத்து கொள்ளாமல் செயல்படுமாறு பீட்டாபைட் அல்லது டெராபைட் அளவிற்கு சேவையாளர் கணினியில் காலி நினைவகத்தை ஒதுக்கீடு செய்யவேண்டியுள்ளது ஆயினும் கடந்த காலங்களில் கணினியின் வன்பொருட்களில் அபரிதமான அல்லது மிகவேகமான வளர்ச்சிநிலை ஏற்பட்டு வருகின்றது மிகமுக்கியமாக செயலி, நினைவகம்,நினைவக வட்டு ஆகியவற்றின் வளர்ச்சியினால் தரவுகளை சேமித்து வைக்கும் திறன் உயர்வுஅடைவதோடு மட்டுமல்லாது கொள்ளளவும் உயர்ந்து வருகின்றன. ஆயினும் இவைகளில் ஏதேனுமொன்றில் சுனக்கமேற்பட்டால் தரவுகளை தேக்கும் திறன்முழுவதும் இன்று பாதிக்கபடும சூழல் ஏற்பட்டுள்ளது   நடப்பில் உள்ள செயலி, நினைவகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நினைவக வட்டில் போதுமான அளவிற்கு ஏற்படவில்லை.ஆயினும்  நினைவக வட்டின் தேக்கும் திறன்மட்டும் உயர்ந்து வருவதைபோன்று அதனுடைய தரவுகளின் பரிமாற்ற திறன் உயரவில்லை என்பதே உண்மையான நிலையாகும். இதனை சரிகட்டுவதற்காக இன்று தற்காலிக நினைவகத்தை பயன்படுத்தி கொள்ளபடுகின்றது.  இதில் ஒரு சதவிகிதம் பாதிக்கபட்டாலும் இந்த இணைய பக்கத்தை பயன்படுத்திடும் ஏராளமான நபர்கள் பாதிக்கபடுவார்கள்   அதற்காக அல்லது அதற்கு பதிலாக இதனை கையாளுவதற்காகவென்று தனியாக மின்வெட்டு நினைவகம்(flash memory) பயன்படுத்தபடுகின்றது அதனால் இதனை பயன்படுத்துவதற்காக உள்ளீட்டுவெளியீட்டு சாதனங்களிலும் கூடுதலான இயக்கிகள் இடைமுகங்கள் கையாளவேண்டியுள்ளது  இவ்வாறான அனைத்து பிரச்சினைகளையும் சவால்களையும் சமாளித்து தற்போதைய தேவைக்கேற்ற தரவுகளை தேக்கிவைக்கும் செயல்தேவைப்படுகின்றது அதற்காக கைகொடுக்க வருவதுதான் இந்த மேககணினி(cloud computer) எனும் அமைப்பாகும்  ராம்கிளவுட் எனும் மேககணினி அமைப்பானது ஆயிரக்கணக்கான சேவையாளர்  கணினியில் ஒரேயொரு தரவுமையத்திலிருந்து தரவுகளை DRAM எனும் முதன்மை நினைவகத்திலேயே தரவுகளை தேக்கிவைத்திடுமாறு செயல்படுகின்றது .இந்த ராம்கிளவுட் எனும்   மேககணினி அமைப்பானது அடுத்த தலமுறை கணினியாக வளர்ந்து வருகின்றது  இது தரவுகளை முதன்மை நினவகத்தில் சேமித்திடும் அதேநேரத்தில்  அதன் பிற்காப்பு நகலை வேறொரு சேவையாளரில் சேமித்திடுகின்றது  இது மின்சாரம் இருந்தால் மட்டும் செயல்படும் இல்லையெனில்  செயல்படாது என்ற அடிப்படையில் இயங்கிடும் நினைவகமாக இருந்தாலும் தரவுகளை பிற்காப்பு செய்யபடுவதால் தரவுகளை உறுதியாக தேக்கிவைக்கபடும் என நம்மபிக்கையுடன் செயல்படமுடியும். பத்தாண்டுகளுக்கு முன்பு தரவுகளை தேக்கிவைப்பதற்கான வன்தட்டுகள் என்ன விலையிருந்ததோ அதே செலவுஇந்த ராம்கிளவுடிலும் ஆகின்றது . ஆயினும் செலவுகளிளும் மின்நுகர்விலும் வழக்கமான வன்தட்டுகளின் திறனைவிட நூறுமடங்கு உயர்ந்ததாக  உள்ளது . இதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள https://ramcloud.stanford.edu/ ‎   என்ற இணைய தளத்திற்கு செல்க

Open Virtual Switch (OVS)எனும் திறமூல மெய்நிகர் பொத்தான்

Open Virtual Switch (OVS)எனும் திறமூல மெய்நிகர் பொத்தான் என்பது பல்லடுக்கு இருவகையான வசதிகளை அளிக்கும் திறன்கொண்டதாகும் . தற்போது OVS இன் முதல் பதிப்பு வெளியிடபட்டுள்ளது இது பயனாளிகள் பயன்படுத்தும் பகுதியாகும் Control path என்பதில் ஒரு அட்டவணையை உருவாக்கி தீர்வுகாணும் வழிமுறை உள்ளது Data path என்பதில் முந்தைய Control path எனும் வழிமுறையில் ஏற்படுத்தபட்ட தீர்விற்கு ஏற்ப தரவுகளை பொட்டலங்களாக அனுப்பிவைக்க அனுமதிக்கும் பகுதியாகும் தரவுகளின் பொட்டலம்ஆனது கிடைக்கபெற்றவுடன் அது செல்லும் பாதையை நடப்பிலுள்ள பாதையுடன் ஒப்பிடுகின்றது. சரியாக இருந்தால் அனுமதிக்கின்றது. இல்லையெனில் திரும்ப அனுப்பி அதற்கென ஒருபாதையை உருவாக்கி கொள்ளுமாறு செய்கின்றது . இந்த தரவுகள் சென்றிடும் பாதையானது கெர்னல் பகுதியில் அடுத்த ஐந்து நொடிகள் வரை உள்ளது இது VLANஎன்பதை பயன்படுத்தி தரவு போக்குவரத்தை கட்டுபடுத்துகின்றது இது GRE ஐ ஆதரிக்கின்றது இது கணினியின் வாயில்களுக்கு இணையான மெய்நிகர் வாயில்களை பராமரிக்கின்றது . அதிக தரவுகளின் போக்குவரத்துகளினால் சிப்பியூவின் வளங்களை அதிகஅளவு பயன்படுத்தி கொள்கின்றது ஒற்றையான தரவோட்டங்களுக்காக பல்லடுக்கு TCP/UDP போன்றவைகள் இதற்காக தேவைப்படுகின்றன அதனால் இது பல்வேறுவகையான இணைப்புகளையும் ஒப்பீடுகளையும் முனைமங்களையும் கையாளும் திறன் கொண்டதாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது OVS ன் இரண்டாவது பதிப்பில் மேலும் பல்வேறு வசதிகளுடன் வருவதற்கான வாய்ப்பு உள்ளது

கணினியை இயக்கதொடங்கிடுமுன்பு சரியான சூழலை உருவாக்குதல் (Preboot eXecution Environment(PXE)

கணினியை இயக்கதொடங்கிடுமுன்பு சரியான சூழலை உருவாக்குதல் (Preboot eXecution Environment(PXE) என்பதற்காக கணினியுடன் இணைய இணைப்பிற்கு தேவையான இடைமுக செயலை ஏற்படுத்துகின்றது .இந்த செயலிற்காக gPXE எனும் திறமூல மென்பொருளானது பயன்படுகின்றது இது PXE,ROMs ஆகியவற்றிற்கு மாற்றாகவும் HTTP,iSCSI ஆகிய வற்றிலிருந்து தரவுகளை மீட்டெடுப்பதற்கான பல்வேறு செயலிகளுடனும் இருக்கின்றது VMware ESXi5 என்பது நம்முடைய கணினியில் இருந்தால் gPXE சூழலில் இயக்கமுறைமைகளின் வளங்களை வலைபின்னல் இணைப்பிற்கேற்றவாறு தயார்செய்திடும் பணி எளிதாகிவிடும். முதலில் PXE மூலமும் பின்னர் gPXE மூலமும் கணினின் இயக்கத்தை தொடங்கிடும்போது உடன் திரையில் DHCP IP ஐ மீண்டும் நம்மிடம் கோரும் ஏனெனில் கணினியானது ஏற்கனவே உள்ள கோரிக்கையை பற்றி கவலைபடாது மீண்டும் DHCP IP ஐ கோருவதை கண்டு பயப்படத்தேவையில்லை
இந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு முதலில்சமீபத்திய gPXE 1.0.1.tar.gz என்ற மென்ப பொருளை பதிவிறக்கம் செய்து அக்கட்டுகளிலிருந்து அவிழ்த்து வெளியிலெடுத்துகொள்க
பின்னர் ‘#undef TIME_CMD’ என்பதை ‘#define TIME_CMD’ என மாற்றியமைத்துகொள்க.
அதன்பின்னர் வாடிக்கையாளரின் sleep.gpxe எனும் குறிமுறையை src என்ற கோப்பகத்திற்குள் உருவாக்கிகொள்க
பின்னர் வாடிக்கையாளரின் gPXEஎனும் குறிமுறையை இயந்திரமொழிக்கு உருவமாற்றம் செய்திடுக
அதன்பின்னர் TFTPஎனும் சேவையாளருக்கு binஎன்பதனகீழ் உருவாக்கபட்ட undionaly.kpxe என்பதை நகலெடுத்து கொள்க
பின்னர் Ctrl+B என்றவாறு விசைகளை விசைப்பலகையில் சேர்த்து அழுத்துக.
அல்லது menu.cfgஎனும் கோப்பு உருவாகவில்லை எனில் நம்முடைய இயக்கமுறைமைபற்றிய விவரங்களை கைகளால் உள்ளீடு செய்திடுக.
இப்போது மிக சுமுகமான கணினியின் இணைய இணைப்புடனான இயங்கும் சூழலிற்கு ஏற்றவாறு இயங்குவதை காணலாம்

கணினித்துறையின் வேலைவாய்ப்புகள் ஒரு ஆலோசனை

இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 67 மில்லியன் மக்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களாக உள்ள இந்த எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் 382 மில்லியனாக உயர வாய்ப்புள்ளதாக பல்வேறு பொருட்களை சந்தைபடுத்துதலுக்கான ஆய்வுகள் கூறுகின்றன அதனால் இந்த ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்கள் தத்தமது பணிகளுடன் இடையிடையே மனதை ஒய்வு கொள்ளசெய்யவும் புத்தாக்கம் செய்திடவும் ஏதாவது விளையாட்டுகள் அதில் இருந்தால் நல்லது என அனைவரும் விரும்புவார்கள் . அவ்வாறான விளையாட்டுகளை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் அதாவது சுமார் 27 பில்லியன் வருமானம் கொண்ட சந்தை தயாராக உள்ளது வேலைகிடைக்கவில்லையே என அரசாங்கத்தை குறைகூறாமல் சோம்பித்திரியாமல் அதனை மிக்கச்சரியாக பயன்படுத்திகொள்பவர்கள் தம்முடைய வாழ்வில் வெற்றிகாணமுடியும் இந்த விளையாட்டிற்கான மென்பொருளானது வழக்கமான கணினிக்கானது போன்று இருக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும் இந்த ஸ்மார்ட் ஃபோன் ஆனது அனைத்து நிறுவனங்களின் சாதனங்களும் ஒரேமாதிரியாக இருக்காது அதனுடைய உள்ளுறுப்புகள் நினைவக வளங்கள் ஆகியவற்றை நன்கு கவனித்து குறைந்த நினைவகத்தையே தங்களுடைய விளையாட்டிற்கான மென்பொருளிற்கு போதுமானதாக இருக்கமாறும் பயனாளர்களின் வழக்கமான பணியை தடங்கல் செய்திடாமலும் அதாவது விளையாட்டு மென்பொருளை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இடையில் யாராவது நம்முடன் பேசுவதற்கு அழைக்கும்போது இந்த விளையாட்டு மென்பொருளை மூடிவிட்டுதான அவருடன் பேசவேண்டும் என்றில்லாமல் தற்காலிகமாக நிறுத்தம் செய்து பேசிமுடித்தபின் நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்து செயல்படுவதை போன்று இருக்கவேண்டும் நம்மைபோன்று பல்லாயிரகணக்கானவர்கள் இதேபோன்று இந்த விளையாட்டுகளுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடைய மென்பொருட்களைவிட நம்முடையது மிகச்சிறப்பாக வாடிக்கையாளர்களை கவர்ந்திடும் வண்ணம் அமைந்திருக்கவேண்டும் பயனாளிகளை எரிச்சலூட்டவதை போன்ற விளையாட்டு மென்பொருள் அமைந்திடக்கூடாது என்பனபோன்ற கருத்துகளை மனதில் கொண்டு இந்த துறையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாழ்வில் வெற்றிகொள்வார்கள் என்பது திண்ணம்

Applnventor2என்பதை கொண்டு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதாக உருவாக்கிடலாம்

இது ஒரு இணைய உலாவியின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும் அதனால் இதனை செயல்படுத்துவதற்கு   என தனியாக மென்பொருட்கள் எதனையும் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தேவையில்லை   இதனை செயல்படுத்திட மொஸில்லா ஃபையர் ஃபாக்ஸ் 3.6 அல்லது அதற்கு பிந்தையது, ஆப்பில் சபாரி 5.0 அல்லது அதற்கு பிந்தையது,கூகுள்குரோம்4.0 அல்லது அதற்கு பிந்தையது,ஆண்ட்ராய்டு 2.3(ஜிஞ்சர்பேர்ட்) அல்லது அதற்கு பிந்தையது, கூகுளில் நமக்கு ஒரு கணக்கு ஆகியவை மட்டும் . இருந்தால் போதுமானதாகும். இதில் நம்முடைய பயன்பாடுகள் சரியாக செயல்படுகின்றனவா என சரிபார்த்திட பின்வரும் இருவாய்ப்புகளில் அனுமதிக்கபடுகின்றது

1 ஆண்ட்ராய்டு சாதனத்தினை பயன்படுத்தி கொண்டிருந்தால் நம்மிடம் கம்பியில்லா இணைய இணைப்பு இருக்கவேணடும் App Inventor Companion என்ற பயன்பாட்டினை மட்டும் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதணத்திற்காக நிறுவி கொள்ளவேண்டும் வேறு எந்த வொரு மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யாமலேயே ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு தேவையான பயன்பாடுகளை கட்டமைவு செய்யலாம்.

2 நம்மிடம் ஆண்ட்ராய்டு சாதனம் இல்லையெனில் மெய்நிகராக இந்த ஆண்ட்ராய்டு சாதனத்தினை பயன்படுத்துவதை போன்று நாம் உருவாக்கிடும் பயன்பாடுகளை செயல்படுத்தி சரிபார்த்திட விண்டோ, மேக் ஆகிய இயக்கமுறைமைகளில் மட்டும் அதற்கான aiStarter என்ற மென்பொருளை http://appinv.us/aisetup_windows/ என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடுக

நம்முடைய இணைய உலாவியில் http://ai2.appinventor.mit.edu/ என்றவாறு உள்ளீடு செய்து இதனுடைய இணைய பக்கத்திற்கு செல்க அங்கு நம்முடைய கூகுளின் கணக்கில் உள்நுழைவு செய்வதற்கான பயனாளரின் பெயர் ஸகடவுச்சொற்கள் ஆகியவற்றை மிகச்சரியாக உள்ளீடு செய்து உள்நுழைவு செய்திடுக பிறகு New Project என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அதற்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்து

கொள்க. பின் நாம் விரும்பும் பயன்பாட்டினை உருவாக்கி கொண்டு மேலே இடதுபுறம் உள்ள designers, blocks ஆகிய இரு பொத்தான்களில் blocks என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவைகளில் தேவையான தருக்கங்களை உள்ளீடு செய்து குறிமுறைகள் சரியாக உள்ளது என திருப்பதியுற்றால் aiStarter என்ற மென்பொருளை செயற்படுத்தி மெய்நிகர் ஆண்ட்ராய்ட சாதனத்தில் நாம்உருவாக்கிய பயன்பாடு சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடுக சரியாக இருக்கின்றது எனில் Build எனும் பட்டியலிற்கு சென்று அங்குள்ள இருவாய்ப்புகளில் ஒன்ரினை செயல்படுத்தி apk எனும் கோப்பாக உருமாற்றி பதிவிறக்கம் செய்து நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து கொள்க

Previous Older Entries