மீட்டாக்க வட்டு எத்தனைமுறை பயன்படுத்திட வேண்டும்

மீட்டாக்க வட்டு எத்தனைமுறை பயன்படுத்திட வேண்டுமென ஏதேனும் கட்டுபாடு உள்ளதாவென சேந்தேகபடுபவர்கள் அவ்வாறான கட்டுபாடுஎதுவும் இல்லாமல் எத்தனைமுறைவேண்டுமானாலும் இந்த செயலிற்காக பயன்படுத்திகொள்ளலாம்  அதனால் வட்டிற்கு சேதமோ தரவுகளின் இழப்போ ஆகிய  எதுவும் ஏற்படாது என்ற செய்தியை மனதில் கொள்க.  கணினியானது தொடங்காமல் சண்டித்தனம் செய்தால் அல்லது இயங்கிகொண்டிருக்கும்போது பாதியில் தொங்கலாக நின்றுபோனால் அல்லது கணினியின் திரை கருப்பாக தோன்றினால்  கணினியின் பதிவேட்டில் பிழை ஏற்பட்டுவிட்டது என தெளிவுபெற்று மீட்டாக்க வட்டின்மூலம் கணினியின் நினைவகத்தை மறுகட்டமைவு செய்வார்கள் அதனால்  கணினியின் பதிவேட்டின் பிழை சரிசெய்யபட்டுவிடும்  வைரஸ் மால்வேர் போன்றவைகளினால் கணினிக்கு ஏற்படும் பாதிப்பின்போதும் இந்த  மீட்டாக்க வட்டினை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளலாம்

105.6.7

இருபரிமானஅசைவூட்டு படக்கதைகளை நாமே உருவாக்கிட உதவும் ஸ்கிராச் எனும் திறமூல பயன்பாடு

  ஸ்கிராச் என்பது இருபரிமான அசைவூட்டு படங்களையும் விளையாட்டுகளையும் படக்கதைகளையும் தொடக்கநிலையார்களும் உருவாக்கிட உதவிடும் நிரல்தொடர் எழுதவதற்கானசூழலை கொண்ட தொரு திறமூல மொழியாகும்.இதனை http://scratch.mit.edu/ என்ற தளத்திலிருந்து இதனுடைய சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்க இதனை நிறுவி பயன்படுத்திட 800 X 480 துல்லியம் கொண்ட 16 பிட்டிற்கு மேற்பட்ட திரை, விண்டோ 2000இற்கு பிந்தைய பதிப்புடைய இயக்கமுறைமை, 120 மெகாபைட் காலி நினைவகம், ஒலி,ஒளிஒலி அமைப்பு ஆகியவை தேவையானவையாகும் இந்த ஸ்கிராச்சின் ஒரு செயல்திட்டத்தை sprites என அழைப்பார்கள். இதில் பயன்படுத்திடும் கட்டளைகள் scripts என அழைப்பார்கள். Sprites என்பது வரைபட பதிப்பானால்(paint editor) உருவாக்கபட்ட அல்லது நினைவகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யபட்ட ஒருகுழுவான உருவப்படங்களின் தொகுப்பாகும் இந்த தொகுதியின் ஒவ்வொருஉருவப் படமும் ஒருcostume என அழைக்கபடும். இந்த ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையானது block palette ,scripts area, stage ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை கொண்டதாகும் . ஸ்கிராச்சினுடைய முதன்மை பக்கத்திரையின் block palette ஆனது Movement, Looks, Sound, Pen, Control, Sensing, Operators, Variables ஆகிய எட்டு துனைப்பகுதிகளை கொண்டது. அதற்கடுத்தாகவுள்ள scripts area ஆனது ஸ்கிராச்சின் கட்டளை தொகுதிகளை அவ்வப்போது இயந்திர மொழிக்கு மொழிமாற்றும் பணியை செய்கின்றது. block palette இலிருந்து scripts area இக்கு கட்டளைகளானது கொண்டுவரப்பட்டு விடுபட்டவுடன் இது வரிசைகிரமமாக தருக்கமுறையில் செயல்படசெய்கின்றது இந்தspritesஐ தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மேலிருந்து கீழாக செயல்படுத்துகின்றது மூன்றாவதாகவுள்ள stageஎன்பது இறுதிய நிலையாகும் அசைவூட்டு படங்களை உருவாக்கிய பின் அதனை இயந்திர மொழியாக மாற்றி செயல்படுத்திட கட்டளை பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கிய அசைவூட்டு படங்கள் இயந்திரமொழிக்கு குறிமுறைகளாக மொழிமாற்றிடும் செயல் ஆரம்பித்து வெளியீடு stageஎன்ற பகுதிக்கு வந்து சேர்ந்து திரையில் பிரதிபலிக்க செய்கின்றது.

105.1.1

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் -105 –தொடர்ச்சி

 

ஓப்பன் ஆஃபிஸ்  பேஸிக்கில் com.sun.star.awt.UnoControlFixedLineஎன்ற கட்டுப்பாட்டின் மூலம் ஒரு உரையாடல் பெட்டியில் தேவையான கோடு ஒன்றினை உருவாக்கமுடியும், அவ்வாறே  com.sun.star.awt.UnoControlDateFieldஎன்ற கட்டுபாடானது ஒருஉரைபுலத்தினை விரிவாக்கம் செய்து நாம் உள்ளீடு செய்திடும்  நடப்பு நாளினை YYYYMMDD என்ற வடிவமைப்பில் ஏற்றுக் கொள்ளுமாறும் இதில் கீழிறங்கு  பட்டியலை உருவாக்கி அவற்றிலிருந்து தெரிவுசெய்துகொள்ளுமாறும் செய்யமுடியும்,

மேலும் com.sun.star.awt.UnoControlNumericField என்ற கட்டுப்பாட்டின் மூலம் எண்களையும் பின்ன எண்களையும் உள்ளீடு செய்திட அனுமதிக்கலாம்  அதுமட்டுமின்றி com.sun.star.awt.UnoControlFormattedField என்ற கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட புலம் எந்தவகையான வடிவமைப்பில் வேண்டுமென முடிவுசெய்திடலாம்  முடிவாக com.sun.star.awt.UnoControlFileControl என்ற கட்டுப்பாடு மேலேகூறிய உரைபுலத்தில் கூடுதலான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட பொத்தான்களுடனான கோப்பு கட்டுபாடாக பணிபுரிகின்றது அதாவது இந்த பொத்தானை சொடுக்கினால்  நாம் இதுவரை உரைபெட்டிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளை சேமிக்கவேண்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடசெய்கின்றது

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தும்போது உரையாடல் பதிப்பு பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இது நாம் உருவாக்கிடும் புதியதான உரையாடல்பெட்டியை வடிவமைத்திடும் கருவியாக பயன்படுகின்றது இதில்com.sun.star.awt.XDialogProvider API என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி BeanShell, JavaScript, Java, OpenOffice.org Basic ஆகிய மொழிகளில்  உருவாக்கபடும் மேக்ரோவின் வாயிலாக இந்த  உரையாடல்பெட்டியை வடிவமைத்திட பயன்படும் உரையாடல் பதிப்பு பெட்டியை நினைவகத்தில் மேலேற்றி திரையில் தோன்றிட செய்கின்றது. மேலும் Java Swing என்ற உறுப்பினை பயன்படுத்தியும் இயக்க நேரத்தில் ஒரு உரையாடல்பெட்டியை உருவாக்கிடமுடியும்   இதற்காக முதலில் com.sun.star.awt.UnoControlDialogModel என்ற கட்டுபாட்டின் மூலம் ServiceManager எனும் சேவைமேலாளரின் வாயிலாக ஒரு உரையாடல் பெட்டியை இயக்கநேரத்தில் உருவாக்கிடமுடியும்   பின்னர் அவ்வுரையாடல் பெட்டியின் இடவமைவு ,தலைப்பு போன்றவைகளை com.sun.star.beans.XPropertySet என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி அமைத்திடுக இந்நிலையில் மிகசிக்கலான அமைவிற்கு com.sun.star.beans.XMultiPropertySet என்றகட்டுபாட்டினை பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது இதனோடு “PositionX”, “PositionY”, “Width”, “Height”, “Name”, “TabIndex”, “Step” and “Tag” ஆகியவற்றின் பண்பியல்புகளை பயன்படுத்தி ஒரு  கட்டுபாட்டு மாதிரியை உருவாக்கியபின்னர் com.sun.star.container.XNameContainer என்ற கட்டுபாட்டின் மூலம்  ஒரு கட்டளை பொத்தான், அதன் பெயர், இடவமைவு, அளவு ஆகியவற்றினை முடிவுசெய்துஅமைத்துகொள்க இறுதியாக நாம்உருவாக்கிய உரையாடல் பெட்டியை com.sun.star.awt.XDialog interface. என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி திரையில் பிரதிபலிக்கசெய்க.

நிரல் தொடர்-105-1

public void trigger(String sEvent) {

if (sEvent.equals(“execute”)) {

try {

createDialog();

}

catch (Exception e) {

throw new com.sun.star.lang.WrappedTargetRuntimeException(e.getMessage(), this, e);

}

}

}

மேலே காணும் நிரல் தொடர்வழிமுறையின்வாயிலாக com.sun.star.task.XJobExecutor என்ற கட்டுபாடானது ஒருபயனாளர் எத்தனைமுறை கட்டளைபொத்தானை சொடுக்கினார் என கவணித்தல் செய்கின்றது இதே செயலை   பின்வரும் எளிய மேக்ரோவரிகளும் செய்கின்றன

 

Sub Main

Dim oJobExecutor

oJobExecutor = CreateUnoService(“com.sun.star.examples.SampleDialog”)

oJobExecutor.trigger(“execute”)

End Sub

வருங்காலத்தில் இயக்கநேரத்திலும் உரையாடல் பெட்டியொன்று தானாகவே உருவாகி செயல்படுமாறான வழிமுறையுடன் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் வாயிலாக வழங்கவிருக்கின்றனர் என்றசெய்தியை மனதில் கொள்க.

105.

விண்டோ-8 இல் மறைந்திருக்கும் வசதிவாய்ப்புகள்

1 விண்டோ-8 இன் திரையில் கீழே இடதுபுறமூலைக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் தொடக்கத்திரையானது தோன்றிடும் அப்போது சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கினால் குறுக்குவழிபட்டி போன்ற கட்டளைகளுடன் பட்டியல் ஒன்று திரையில் தோன்றிடும்

104.1-1

2  இது வழக்கமான பயனாளிகளின் கணக்குடன்  புதிய SkyDrive, Xbox, Hotmail/Outlook , the  cloud services ஆகிய இணைய தொடர்புகளுக்கான கணக்கினையும் பராமரிப்பு செய்கின்றது இதனை தெரிந்துகொள்ள PC settings  என்ற திரையில் Change PC settings => Sync your settings=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.104.1.2

3  விண்டோ -8 இயங்கும் கணினியில் viruses , spyware ஆகியவற்றின் தாக்குதலிருந்து  பாதுகாத்திட வழக்கமான பாதுகாப்பு வசதிகளுடன் Windows Defender என்ற வசதி கூடுதலாக பாதுகாப்பினை கணினிக்கு அளிக்கின்றது 104.1.3

4 விண்டோ-8 இன் இயக்கத்தை நிறுத்தம் செய்திட வழக்கமான Settings=> Power button =>’Shut down=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதுடன் Alt+F4 என்றவாறு சுருக்குவழிவிசைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் குறுக்குவழி பட்டியலைகொண்டும் நிறுத்தம் செய்யலாம்

104.1.5

5 விண்டோ-8-இன் திரைக்காட்சிகளை வழக்கமான Windows.,PrtScr ஆகிய விசைகளை அழுத்துவது அதனோடு Snipping Tool என்றகருவியை கொண்டு  தானாக படப்பிடிப்பு செய்து திரைக்காட்சிகளை சேமித்திடலாம்

104.1.6

6 விண்டோ-7ல் புதிய பயன்பாடுகளை நாம் பணிபுரியும் திரையில் தெரிவுசெய்து சொடுக்கி இழுத்துவந்து snap windows என்பதில் கொண்டுவருவதை போன்று கூடுதலாக தேவையான Weather or Bing என்பனபோன்ற பயன்பாடுகளையும் வழக்கமான நாம்பணிபுரியும் பயன்பாட்டினுடைய திரையின் அருகே கொண்டுவந்து பிரதிபலிக்கசெய்யலாம்

104.1.7

7 மிகமுக்கியமான கோப்புகள் உருவப்படங்கள் போன்றவைகள் தவறுதலாக அழிந்திடும்போது  அவைகளை Control Panel System and Security  File History என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம் மீட்டெடுத்திடலாம் .

104.1.8

8 விண்டோ-8 ஏதேனுமொருசமயத்தில் கணினியானது இயங்குவதற்கு  சிக்கல் ஏற்படும்போது  reset your pc என்ற வசதிமூலம் மிகச்சுலபமாக மீண்டும் இயங்குதுவங்குமாறு செய்திடலாம்

104.1.9

 

தற்போது லிபர் ஆஃபிஸ் 4.1.3என்ற புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது

104.2.1

 

Windows, Macintosh , Linux ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்த திறமூல பயன்பாடாக Writer, Calc, Impress, Draw, Math and Base ஆகிய எந்தவகை ஆவணங்களையும் கையாளும் திறன்கொண்ட புதிய லிபர்ஆபிஸ்-4.1.3 என்ற பதிப்பு தற்போது கிடைக்கின்றது

இதனுடைய  ரைட்டர்மூலம் tables of contents, embedded illustrations, bibliographies and diagrams ஆகிய வசதிகளுடன் உடனடியாக ஒருபுதிய புத்தகத்தை  உருவாக்கிடமுடியும்  மேலும் இந்த ரைட்டரில் auto-completion, auto-formatting and automatic spelling checking , multi-column newsletters and brochures ஆகியஎம்எஸ்ஆபிஸ் போன்ற அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன

இதிலுள்ள கால்க்கில்  Charts , analysis  ஆகியவற்றுடன் தரவுகளை SQL or Oracle ஆகிய வெளிபயன்பாடுகளுடன் சேமித்து, சேர்த்து பயன்படுத்துதல்  line, area, bar, pie, X-Y ஆகிய வரைபடங்களின் இருபரிமான முப்பரிமான படங்களையும் கையாளும் திறன்கொண்டதாக விளங்குகின்றது

இம்ப்பிரஸானது பல்லூடக திரைகாட்சிகளை  பார்வையாளர்களை கவரும்வண்ணம் படவில்லைகளாக காண்பிக்கும் திறன்மிகுந்ததாகஉள்ளது

ட்ராவானது தொடக்கத்திலிருந்து புதிய. படங்களை உருவாக்கி இருபரிமான முப்பரிமான படங்களாக உருமாற்றிடும் திறன் கொண்டதாக உள்ளது

பேஸ் ஆனது  MySQL, PostgreSQL or Microsoft Access  ஆகியவற்றினுடைய தரவகளை கையாளும் திறனுடன்  forms, reports, views and queries ஆகியவற்றை உருவாக்கிட HSQL database என்பது முன்கூட்டியே கட்டமைக்கபட்டதாக விளங்குகின்றது

E=mc2.என்ற சூத்திரத்தின் மதிப்பை மேத் என்றபயன்பாடு மிகத்துல்லியமாக திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது

 

தானியங்கி மின்சுற்றுவரைபடம்

நம்முடைய வீடுகளில்  மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைத்திருப்போம் அதில் தண்ணீர்காலியாகிவிட்டால் மின்மோட்டாரை இயக்கி நீரை தொட்டியில் நிரப்பவும் தொட்டியில் நீர் நிரம்பிவிட்டால் மின்மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவும் ஆன செயலானது மிகச்சிரமமானதாக இருந்துவருகின்றது இதனை தானியங்கியாக செய்தால் என்ன என்பவர்கள் பின்வரும்  மின்சுற்றுவரைபடம் இதற்கான செயல்களை செய்யவல்லது என்ற செய்தியை தெரிந்து கொள்க இதற்காக   step-down transformer, a 24V AC double-changeover relay, two floats , two micro switches, pusக
h-to-on switch ,மின்சுற்றிற்கான கைவசம் தயார்நிலையில் உள்ள கம்பி ஆகியவைமட்டும் போதுமானவயாகும் இவைமட்டுமல்லாது தொட்டி நிரம்பிவிட்டது அல்லது காலியாகிவிட்டது என காண்பிக்கும் float1 ,float2 எனும் மிதவைகளும் அதனோடு தொடர்பு ஏற்படுத்திடும் S1 , S2ஆகியபொத்தான்களும் இவைகளை இணைப்பதற்கான மூன்று கம்பிகளை கொண்ட மின்சுற்று ஆகியவை மட்டுமேயாகும்.

3.0

 

 

நீர்மட்டம் அடிப்பகுதிவரை குறைந்துமிதவை-1 வரை செல்லும்போது இந்த மிதவை-1 ஆனது சிறுமின்குமிழ்-1(S1) என்பதை செயற்படுத்திடும் உடன் RL1எனும் மின்சுற்றில் மின்னோட்டம் முழுமை பெறும். அதனால் contact-1 இல் மின்னோட்டம் ஏற்பட்டு மின்மோட்டார் இயங்கத்துவங்கி தொட்டிக்கு  தேவையான தண்ணீர் கொட்டத்துவங்கும் இதேநேரத்தில்  contact-2 மின்சுற்று மூடபட்டிருக்கும் இதனால் 24V AC  மின்னோட்டத்தின் வாயிலாக S2 எனும் மின்குமிழ் மூடப்பட்டிருக்கும்.

தொட்டியில் தண்ணீரின் அளவு உயர்ந்து நிரம்பி மிதவை-2 வரை சென்றிடும்போது இது சிறுமின்குமிழ்-2(S2)என்பதை  செயற்படுத்திடும் உடன் RL1எனும் மின்சுற்றில் மின்னோட்டம் குறைய பெறும்.  அதனால் contact-2 இல் மின்னோட்டம் ஏற்பட்டு S2 எனும் மின்குமிழ்  வாயிலாக இயங்குகின்ற மின்மோட்டாரின் செயல் நிறுத்தம் செய்யபடும். மீண்டும் தொட்டியின் அடிப்பகுதிக்கு தண்ணீரின் அளவு சென்றிடும்போது முன்புபோலவே மறுபடியும்  மின்மோட்டார் இயங்கி தொட்டியில் தண்னீர் கொட்டிடும் .இவ்வாறு இந்த சுற்றுமுறை செயல் தானாகவே செயல்படுமாறு இதில் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக மொத்த மின்சுற்றிற்கும் மின்மோட்டார் இயங்குவதற்கும் தேவையான மின்சாரம் தடைபெறும்போது மின்மோட்டாரின் இயக்கம் நின்றுவிடும் மீண்டும் மின்விநியோகம் கிடைத்திடும்போது தனியாக s4 அல்லது power on எனும் மின்குமிழை அழுத்தி இந்த இயக்கம் தானியங்கியாக செயல்படுமாறு மறுதுவக்கம்செய்திடவேண்டும்

 

தெரிந்து கொள்வோம் கோப்பு ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அமைப்பு கருவியை பற்றி

தற்போதைய நம்முடைய சமுதாயத்திலுள்ள தகவல் தொடர்புகளனைத்தும் கணினிசார்ந்ததாக வளர்ந்து விட்டதால் அதில் தரவுகள் திருடுபோதல்,  மாற்றிவிடுதல், அழிந்துபோதல்,கணினியின் இயக்கம் சண்டிமாடுபோன்று நின்றுபோதல்  என்பன போன்ற தீங்குகளும், ஏராளமான இடர்பாடுகளும் இழப்புகளும்  ஏற்படும் நெருக்கடிக்கு ஆளாகவேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டுள்ளன  அதனால்  நாம் பயன்படுத்தும் தகவல்தொடர்பு செயல்களை செந்தரமாக்குவதற்காக ஐஎஸ் ஓ என்பது போன்ற அமைப்புகளும் ஒவ்வொரு நாடும் தமக்கேஉரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செந்தரமான தகவல்தொடர்பு பாதுகாப்பு சட்டத்தையும் இயற்றி  செயல்படுத்திகொள்கின்றன ஆயினும் அவையனைத்தும் அடிப்படையில்  ஏதேனும் ஒரு பிரச்சினை ஏழுந்தால் மட்டும் அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது ,கட்டுபடுத்துவது, களைவது, நிருவகிப்பது ஆகிய அடிப்படை செயல்களை கண்டிப்பாக செயற்படுத்திடுமாறு செய்கின்றன. இவ்வாறான பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்து கட்டுபடுத்திடும் அமைவு கோப்பினை , அனுமதியற்றவர்களால் செய்யபடும் மறுதல்களை நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திடுமாறு  அமைத்துகொள்கின்றன. அவ்வாறு நிகழ்வு ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்கான தக்கநடவடிக்கையை எடுத்து செயல்படுத்திடுகின்றன. ஆயினும் முற்காலத்தில் பயன்படுத்தபட்ட பழைய கட்டுபடுத்திடும் அமைப்பில் ஏதனும் பிரச்சினை அல்லது தீங்கு ஏற்பட்டால்  மட்டும் உடன் அதனைபற்றிய அறிக்கையை  அதன்பயனாளருக்கு அளித்திடுமாறும்  அதன்பின் பயனாளரின் கட்டளைகளுக்கேற்ப அந்த பிரச்சினையானது சரிசெய்யபடும்

இதற்கான கோப்பு ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அமைப்பு கருவி யானது  path and filename,dateand time of creation last modification, last accessed,permission ownership,size என்பனபோன்ற பொதுவான கோப்பிற்கான அடிப்படை விவரங்களை மட்டும் உருவாக்கி கொள்கின்றது. பின்னர் குறிப்பிட்ட காலஇடைவெளியில் அந்த கோப்பு அமைவானது சரிபார்க்கபட்டு ஏதனும் மாறுதல் இருந்தால் மட்டும் கடைசியாக எப்போது மாறுதல் செய்தது என சரிபார்க்கின்றது. பிறகு பயனாளருக்கு அதுபற்றிய அறிக்கையை அனுப்பிவைக்கின்றது. அதாவது ஏதேனும் கோப்பு அல்லது கோப்பமைவு மாறுதல் செய்யபட்டிருந்தால் மட்டும் உடன் எச்சரிக்கை மணியானது அதன் உரிமையாளருக்கு அறிவிப்பு செய்கின்றது அவ்வாறான  கோப்பு ஒருங்கிணைப்பு கட்டுபடுத்திடும் அமைப்பானது திறமூல வகையில் OSSEC,Samhain,AIDEஎன்றவாறு ஏராளமானவகைகளில் கிடைக்கின்றன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை மட்டும் தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க.

 

Previous Older Entries