நீக்கப்பட்ட அல்லது காணாமல் போன வாட்ஸ்அப் செய்திகளை எவ்வாறு மீட்டெடுப்பது

வாட்ஸ்அப் பின் அரட்டையை காப்பகப்படுத்துவதற்கு பதிலாக, தற்செயலாக அதை நீக்கியிருக்கலாம். காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள் வாட்ஸ்அப்பில் இருந்து மீட்டெடுப்பது எளிதானது, அதேசமயம் நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதானது அன்று. ஆனால் அதையும் செய்ய முடியும்
நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க, பயன்பாட்டின் அமைப்புகளில் அரட்டை காப்புப்பிரதியை ( Chat Backup) இயலுமைசெய்திட வேண்டும். இதை அடைய, iOS இல் கீழே உள்ள Settings எனும் தாவல் திரைக்குசெல்க அல்லது மேலே வலதுபுறத்தில் மூன்று-புள்ளிகளாலானபட்டியலை திறந்து Android இல் Settings தேர்வு செய்க.
அங்கிருந்து, Chats => Chat backup=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி அந்துபகுத்திக்கு செல்க. இங்கே (iOS இல் Auto Backup இன் கீழ் மற்றும் Android இல் Google Driveஇற்கு காப்புப்பிரதி எடுத்திடுக), வாட்ஸ்அப் ஆனது தினசரி, வாராந்திர, மாதாந்திர ஆகிய பல காப்பு அதிர்வெண்களை வழங்குகிறது:,
Android இல், வாட்ஸ்அப்ஆனது ஒவ்வொரு இரவும் உள்ளூர் காப்புப்பிரதியை உருவாக்குகிறது, ஆனால் நம்முடைய கைபேசியை இழந்தால் இதுநமக்கு உதவாது. அதனால்தான் மேகக்கணி காப்புப்பிரதிகள் மிக முக்கியமானவையாகும்.
புதியவற்றை உருவாக்கும்போது பழைய காப்பு கோப்புகளை வாட்ஸ்அப்ஆனது அறவே நீக்குகிறது. ஐபோன் பயன்பாடானது சமீபத்திய காப்புப்பிரதி கோப்பை மட்டுமே வைத்திருக்கிறது, அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு பதிப்பு காப்பு கோப்புகளை “கடந்த ஏழு நாட்கள் வரை” வைத்திருக்கின்றது. நம்முடைய தேவைகளுக்கு சரியான காப்பு அதிர்வெண்ணை நாம் தேர்வுசெய்யும்போது அதை நினைவில் கொள்க.
தினசரி தானியங்கு காப்புப்பிரதிகளை வைத்திருப்பதன் மூலம், செய்திகளை நீக்கியவுடன் அவற்றை எளிதாக மீட்டெடுக்க முடியும். மறுபுறம், சமீபத்திய அரட்டை செய்திகளை இழக்கும் செயலில், நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க வாராந்திர தானியங்கி காப்புப்பிரதிகள்நம்மை மீண்டும் செல்ல அனுமதிக்கும். ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான மேம்பட்ட காப்புப்பிரதி திட்டத்திற்கு, தயவுசெய்து கீழே உள்ள “Advanced WhatsApp Backup Strategy on Android ” எனும் பகுதிக்கு நகரத்தி செல்க
காப்பகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைகளை எவ்வாறு மீட்டெடுப்பது
ஐபோனில், நாம் பழைய அரட்டைகளை காப்பகப்படுத்தினால், நம்முடைய ஐபோனை அசைத்து, காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகளை மீட்டெடுக்க Undo என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காப்பகத்தை மாற்றியமைக்கலாம். பின்னர் அரட்டையைத் தொடங்க:

  1. காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள்( Archived Chats) தோன்றும் வரை அரட்டை பட்டியலில்நகரத்துக
    2.தாவிபொத்தானை அழுத்துக, பின்னர் நாம் மீட்டெடுக்க விரும்பும் அரட்டையில் இடதுபுறமாக தேய்த்திடுக(swipe ).
  2. உடன்தோன்றிடும் Unarchive எனும் பொத்தானை அழுத்துக.
    ஆண்ட்ராய்டில் அரட்டையைத் தடுக்க:
  3. அரட்டை பட்டியலின் கீழேநகர்த்திசெல்க மேலும்Archived (X).இற்கு தாவியின் திரைக்குசெல்க.
  4. மீட்க விரும்பும் அரட்டையை அழுத்திப் பிடித்துக் கொள்க.
  5. மேல்நோக்கி எதிர்கொள்ளும் அம்புடன் கூடிய பெட்டியைப் போன்ற unarchive உருவப்பொத்தானை சொடுக்குக.
    நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை எவ்வாறு பெறுவது
    சாதனத்தில் வாட்ஸ்அப்பை நிறுவுகையை நீக்கி மீண்டும் நிறுவுகைசெய்திடுக. பயன்பாட்டை மீண்டும் நிறுவுகைசெய்திடும்போது, நம்முடைய செய்தி வரலாற்றை காப்பு கோப்பிலிருந்து மீட்டெடுக்கும்படி கோரப்படுவோம்.அதனால் Restore எனும் பொத்தானை சொடுக்கு, உடன் சமீபத்திய காப்புப்பிரதியிலிருந்து எல்லாவற்றையும் மீட்டெடுத்திடுவதை காணலாம்.
    நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்கும் இந்தவழி முறையானது, நாம் காப்புப்பிரதி வைத்திருக்கும் வரை Android ,iOS ஆகிய இரண்டிலும் செயல்படும். இருப்பினும், நாம் தேர்ந்தெடுத்த தானாக காப்புப்பிரதி அதிர்வெண்ணில் இருக்க வேண்டும் என்ற செய்தியை மட்டும் நினைவில் கொள்க. உதாரணமாக, தினசரி காப்புப்பிரதி எடுக்க பயன்பாட்டை அமைத்திருந்தால், அடுத்த தினசரி காப்புப்பிரதி ஏற்படுவதற்கு முன்பு நீக்கப்பட்ட எந்த அரட்டையையும் மீட்டெடுக்கலாம்.
    வாட்ஸ்அப்பில் பழைய நீக்கப்பட்ட அரட்டைகளை மீட்டெடுப்பது
    புதிய காப்புப்பிரதி இயக்கப்பட்ட பிறகு நீக்கப்பட்ட செய்திகளை மீண்டும் பெறுவது சற்று கடினம். நம்முடைய வெற்றியானது நாம் தேர்ந்தெடுத்த தானியங்கு காப்பு அதிர்வெண்ணைப் பொறுத்தது. உள்ளூர் காப்பு கோப்புகளை அணுக இது நம்மை அனுமதிப்பதால், இந்த செயல்முறை Android சாதனங்களில் மட்டுமே செயல்படும் என்பதை நினைவில் கொள்க. செயல்முறைக்கு முழுகிசெல்வதற்கு முன், இங்கே ஒரு கண்ணோட்டம்:
  6. நம்முடைய சாதனத்தில் கோப்பு தேடி(file explorer app ) பயன்பாட்டைசெயல்படுத்திடுக.
  7. WhatsApp / Databasesஇற்கு செல்க.
  8. msgstore.db.crypt12 ஐ msgstore-latest.db.crypt12 என மறுபெயரிடுக.
  9. msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 ஐ msgstore.db.crypt12 என மறுபெயரிடுக.
  10. வாட்ஸ்அப்பை நிறுவுகையை நீக்குக.
  11. கூகிள் இயக்கக காப்புப்பிரதிகள் இயக்கப்பட்டிருந்தால், கூகிள் இயக்ககத்தை திறந்து, இடதுபுற பட்டியலை தனித்தனியாக செய்து, Backups இற்கு தாவிசெல்க, வாட்ஸ்அப் காப்புப் பிரதி கோப்பை நீக்கிவிடுக.
  12. வாட்ஸ்அப்பை மீண்டும் நிறுவுகைசெய்திடுக.
  13. கோரும் போது, காப்பு கோப்பிலிருந்து மீட்டமைத்திடுக.
    ஆண்ட்ராய்டில் பழைய நீக்கப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைகளை மீட்டெடுத்தல்
    முன்பு குறிப்பிட்டபடி, வாட்ஸ்அப் பல்வேறு நாட்களின் அரட்டை காப்பு கோப்புகளை வைத்திருக்கிறது. ஒன்று, நிச்சயமாக, சமீபத்திய அரட்டை காப்புப்பிரதி. மற்றவை, நம்முடைய தானாக காப்புப்பிரதி அதிர்வெண்ணைப் பொறுத்து, ஒரு நாள் அல்லது பல நாட்கள் இருக்கலாம். கூகுளின் இயக்ககமானது மேகக்கணி காப்புப்பிரதிக்கு கூடுதலாக, வாட்ஸ்அப் இந்த காப்புப்பிரதிகளை நம்முடைய சாதனத்தின் உள்ளூர் சேமிப்பகத்தில் சேமிக்கிறது.
    நம்முடைய சாதனத்தின் கோப்பு தேடி பயன்பாட்டைசெயல்படுத்திடுக (நம்மிடம் ஒன்றை நிறுவவில்லை என்றால் கூகுளின் கோப்புகள் ஒரு நல்ல வழி), மேலும் / WhatsApp / Databases க்கு செல்க. நம்முடைய சாதனத்தைப் பொறுத்து, வாட்ஸ்அப் கோப்புறையானது sdcard /, / storage /, அல்லது அதற்கு ஒத்ததாக தோன்றக்கூடும்.
    அந்த கோப்புறையில், பல்வேறு அரட்டை காப்பு கோப்புகளை காணலாம். msgstore.db.crypt12 என்று பெயரிடப்பட்டுள்ளது சமீபத்தியதாகும், மற்றவை msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 என்பனபோன்று இருக்கும். நாம் எதிர்பார்ப்பது போன்று, YYYY-MM-DD முறையே ஆண்டு, மாதம் தேதியைக் குறிக்கிறது.
    இரண்டு காப்புப்பிரதிகளுக்கு இடையில் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க, பின்வருவனவற்றைச் செய்க:
    Ms msgstore.db.crypt12 ஐ msgstore-latest.db.crypt12 என மறுபெயரிடுக. நாம் பழைய காப்புப்பிரதியின் பெயரை வழங்கவிருப்பதால் இது சமீபத்திய காப்பு கோப்பை மாற்றுகிறது.
    அடுத்து, நாம் msgstore.db.crypt12 க்கு மீட்டமைக்க விரும்பும் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 என கோப்பிற்கு மறுபெயரிடுக.
    அதன் பிறகு, வாட்ஸ்அப்பை நிறுவுகையை நீக்குக. நாம் கூகுளின் இயக்கக மேகக்கணி காப்புப்பிரதிகளை இயக்கியிருந்தால், கூகுளின் இயக்கக பயன்பாட்டைத் திறந்து, இடது புறபட்டியை வெளியேற்றி, காப்புப்பிரதிகளைத் தேர்ந்தெடுத்திடுக. நம்முடைய கைபேசி எண்ணுடன் ஒரு வாட்ஸ்அப் காப்பு கோப்பைக் காண்போம். இதன் வலதுபுறத்தில் மூன்று-புள்ளிகளாலான பட்டியலை சொடுக்குக, அதை அழிக்க Delete backup என்பதைத் தேர்வுசெய்க.
    இதைச் செய்வது, நாம் மீட்டெடுக்க விரும்பும் உள்ளூர் கோப்பிற்கு பதிலாக கூகுள் இயக்ககத்திலிருந்து காப்பு கோப்பைப் பயன்படுத்துவதை வாட்ஸ்அப் தடுக்கிறது.
    இப்போது, வாட்ஸ்அப்பை மீண்டும் நிறுவுகைசெய்திடுக. அமைவு செயல்பாட்டின் போது,நாம் இப்போது திருத்திய காப்பு கோப்பிலிருந்து மீட்டெடுக்கும்படி கோரப்படுவோம் – இது மிக சமீபத்திய காப்பு கோப்பிற்கு பதிலாக X நாட்கள் பழையதாக காண்பிக்கப்படும்.
    பழைய காப்புப்பிரதிகளிலிருந்து நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க நாம் செய்ய வேண்டியது இதுதான். அந்த செய்திகளை மீட்டெடுத்ததும், மீண்டும் இயல்பாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தத் தொடங்குக.
    மீட்டெடுக்கப்பட்ட செய்திகளை பதிவேற்றம் செய்து சமீபத்திய காப்புப்பிரதிக்குத் திரும்புக
    ஒரு சில செய்திகளை மீட்டமைக்க மேற்கண்ட செயல்முறையை மட்டுமே மேற்கொண்டால், சமீபத்திய செய்திகளை இழக்க விரும்பவில்லை என்றால், மீட்டெடுக்கப்பட்ட அரட்டை செய்திகளைபதிவேற்றம் செய்து, வாட்ஸ்அப்பை சமீபத்திய காப்புப்பிரதிக்கு மீட்டமைக்கலாம்.அதற்காக முழு செயல்முறையையும் மீண்டும் இயக்க வேண்டும், ஆனால் அது கடினம் அன்று.
    செய்திகளை பதிவேற்றம் செய்ய, நாம் சேமிக்க விரும்பும் செய்திகளைக் கொண்ட அரட்டையைத் திறந்திடுக. மேல் வலதுபுறத்தில் மூன்று-புள்ளிகளாலான பட்டியல் பொத்தானைத்சொடுக்குக, அதைத் தொடர்ந்து More => Export chat=>என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்திடுக அரட்டைகாளனவை பல்லூடகத்தில் இருந்தால், பல்லூடகம் இல்லாமல் பதிவேற்றம் செய்ய அல்லது பல்லூடகத்தைச் சேர்க்க ஒரு வாய்ப்பு இருப்பத்தைக் காணலாம்.
    பல்லூடகம் உட்பட அனைத்து சமீபத்திய படங்களையும் இணைப்புகளாகச் சேர்க்கும், இது பதிவேற்ற கோப்பின் அளவை வெளிப்படையாக அதிகரிக்கும். நாம் ஊடகங்களுடன் 10,000 செய்திகளை அல்லது பல்லூடகம் இல்லாமல் 40,000 செய்திகளை பதிவேற்றம் செய்யலாம்.
    தேர்வுசெய்த பிறகு, நம்முடைய செய்திகளைக் கொண்ட உரை கோப்பை ( இணைப்புகள் பொருந்தினால்) பகிர்ந்து கொள்ள நம்முடைய கைபேசியில் ஒரு பயன்பாட்டைத் தேர்வுசெய்க. இதை நாமேமின்னஞ்சல் செய்யலாம், மேகக்கணி சேமிப்பகத்தில் சேர்க்கலாம் அல்லது அதற்கு ஒத்ததாக இருக்கலாம்
    நாம் சேமிக்க விரும்பும் செய்திகளுடன் வேறு எந்த அரட்டைகளுக்கும் இதை மீண்டும் செய்துகொள்க. அந்த பணி முடிந்ததும், மேல் பகுதியில் கூறியுள்ள படிமுறைகளை மீண்டும் பின்பற்றிடுக. காப்பு கோப்புகளை மறுபெயரிட வரும்போது, அதன்செயல்முறையை மாற்றியமைக்கவும்:
    இன்றைய தேதியைப்( Today) பயன்படுத்தி, தற்போதுள்ள msgstore.db.crypt12 (நாம் மீட்டெடுத்த செய்திகளைக் கொண்டுள்ளது) ஐ msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 என மறுபெயரிடுக.
    பின்னர் msgstore-latest.db.crypt12 (நாம் தொடங்கியபோது உருவாக்கப்பட்ட சமீபத்திய காப்புப்பிரதி) ஐ மீண்டும் msgstore.db.crypt12 என மறுபெயரிடுக.
    வாட்ஸ்அப்பை நிறுவுகையை நீக்குக, தேவைப்பட்டால் நம்முடைய கூகுள் இயக்கக காப்புப்பிரதியை நீக்கிடுக, பயன்பாட்டை மீண்டும் நிறுவுகைசெய்து காப்புப்பிரதியிலிருந்து மீட்டெடுத்திடுக, உடன் சமீபத்திய அரட்டைகள் மீண்டும் திரையில் தோன்றும்.
    ஆண்ட்ராய்யில் மேம்பட்ட வாட்ஸ்அப் காப்பு உத்தி
    ஆண்ட்ராய்டில் நாம் வாட்ஸ்ப்பின் அரட்டை காப்பு கோப்புகளை எளிதாகக் காணலாம் மேலும் திருத்தலாம் என்பதால், நாம் விரும்பினால் அவற்றைக் கையாளுவது எளிது. அவற்றை மறுபெயரிடும் செயலானது நாம் விரும்பும் பல காப்பு கோப்புகளை வைத்திருக்க அனுமதிக்கிறது.
    நாம் செய்ய வேண்டியதெல்லாம், msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 எனும் வடிவத்தில் உள்ள காப்புப்பிரதியை மறுபெயரிடுவதுமட்டுமேயாகும், அதாவது oct11.db.crypt12. எனும் இந்த கோப்பு வாட்ஸ்அப்பின் பெயரிடும்வழக்கத்தை பயன்படுத்தாததால், அது இப்போது வாட்ஸ்அப்பால் மேலெழுதப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
    ஒவ்வொரு மாதமும் ஒரு முறைமட்டும் நம்முடைய சொந்த காப்பு கோப்பை இந்த வழியில் உருவாக்குவதைக் கவனித்திடுக. அந்த வகையில், அவற்றில் ஒன்றை மீட்டெடுக்க வேண்டுமானால் நாம் ஏராளமானஅளவு செய்திகளை இழக்க மாட்டோம். இன்னும் கூடுதலான பாதுகாப்பிற்காக, காப்புப்பிரதி கோப்புகளை மேககணினி சேமிப்பு அல்லது கணினியில் நகலெடுத்திடுக, இதனால் நம்முடையகைபேசி செயல்படாமல் நிறுத்தப்பட்டாலும் அவை பாதுகாப்பாக இருக்கும்

கணினியை கையாளதெரிந்த கிளிகளின் விற்பணை


ஒருமனிதன் கிளிஒன்றினை வாங்கி கொண்டுவந்து தன்னுடைய வீட்டில் வளர்க்கவேண்டும் என நீண்டாநாளைய ஆசையை தீர்வசெய்வதற்காக அவ்வூரிலிருந்த கடைத்தெருவிற்கு சென்று கூண்டுகளில் கிளிகளை அடைத்து வைத்து விற்பணைசெய்துவருக்கின்ற ஒரு கடைக்குள் சென்று “ஐயா! இந்த கிளி என்னவிலை?” என வினவினார் .உடன் அந்த கிளிகளின் கடைக்காரர் “அந்த கிளியின் விலை ரூ. 500 “, என கூறியதை தொடர்ந்து அம் மனிதன் “சின்னஞ்சிறிய ஒரு கிளிக்கு ஏன் அவ்வளவு விலை ?”என வினவியபோது, கடைக்காரர் “அந்த கிளியானது நாம் பயன்படுத்தி கொண்டுவரும் கணினியில் Word, Excel , Power Point போன்ற பயன்பாடுகளை தானாகவே செயல்படுத்திடும்திறன்மிக்கது அதனால்தான் அதனுடைய விலை ரூ. 500 ” என பதில் கூறினார் .”சரிதான்” என ஆமோதித்த பின்னர் அடுத்த கிளியை சுட்டிகாட்டி “இரண்டாவதாக இருக்கும் இந்த கிளியன் விலைஎன்ன?” என அந்த மனிதன் வினவியபோது “இரண்டாவது கிளியின் விலை ரூ 1000 .ஏனெனில் இது கணினியில் Word, Excel, Power Point போன்ற பயன்பாடுகளை தானாகவே செயல்படுத்திடுவது மட்டுமல்லாமல் அவ்வாறான பயன்பாடுகளை உருவாக்கும் நிரலாக்கதிறன் பெற்றது.” என கடைக்காரர் கூறியவுடன் “ஆகா பரவாயில்லையே அவ்வளவு திறன்வாய்ந்ததா மிகவும் சரி” மூன்றாவதாக தூங்கி கொண்டிருந்த ஒரு கிளியை காண்பித்து “அதனுடைய விற்பணைவிலை எவ்வளவு ?”என வினவியபோது “அதனுடைய விலை ரூ. 5000 ” என கடைக்காரர் கூறியவுடன் “ஏன்கடைக்காரரே! அந்தகிளிக்கு மட்டும் அவ்வளவு அதிக விலை கூறுகின்றீர்! அந்த கிளிக்கு என்னென்னவெல்லாம் தெரியும்.என கூறுங்களேன் ” என அந்த மனிதன் வினவியபோது “அதுஎன்ன செய்கின்றது என நான் பார்க்கவில்லை ஐயா! இருந்தபோதிலும் இந்த இரண்டுகிளிகளும் தங்களுடைய பணிமுடிவடைந்தவுடன் தலைவரே! அடுத்து நாங்கள் என்ன செய்வது என கணினியின் நிரலாக்க குழுத்தலைவரிடம்(Team Leader) அனுமதி கேட்பதை போன்று அதனிடம் அனுமதிகேட்டு அதன்படி தங்களுடைய பணியை செய்கின்றன” என விளக்கமளித்தார்

பொருட்களுக்கான முற்போக்கான இணையம்


பொருட்களின் முற்போக்கான இணையம் என்பது முற்போக்கானஇணைய பயன்பாடுகள்(PWA) + பொருட்களுக்கான இணையம்( IoT) ஆகிய இரண்டும் சேர்ந்துதொரு கலவையாகும். இது முற்போக்கான இணையபொருட்களில் உருவாகின்றது. பொதுவாக, பயன்பாட்டு மேம்பாடானது சொந்த(native )பயன்பாடு , இணைய(web)பயன்பாடு ஆகிய இரண்டு வழிகளில் செய்யப்படலாம்: .
சொந்த (native ) பயன்பாடுகள் இந்த சொந்த பயன்பாட்டின் மேம்பாடானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோ போன்ற பல்வேறு தளங்களை கொண்டிருக்கலாம். இருப்பினும், மேம்டுத்துநர்கள் தங்களுடைய பயன்பாடுகளை தனித்தனியாக உருவாக்குவதுஅதிக சிரமமான பணியாகும், இதனால் அவை ஒவ்வொரு தளத்திற்கும் இணக்கமாக இருக்குமாறு செய்யப்பட்டிருக்கும். இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
பயனாளர் அனுபவ ஈடுபாடு (பயனாளர்களுக்கு)
இணையஇணைப்பில்லாதபோதிலும் ஆதரவு (பயனாளர்களுக்கு)
சேமித்தலும் நிறுவுகைசெய்தலும் (பயனாளர்களுக்கு)
சொந்த பயன்பாட்டின் வசதிகளுக்கான ஈடுபாட்டு அணுகல் (மேம்படுத்தநர்களுக்கு)
மேம்பாடுகளை மேம்படுத்தும் உயர் முயற்சிகள் (மேம்படுத்துநர்களுக்கு)
குறைந்த நிறுவுகையையும் பயனாளர்களின் பங்களிப்பையும் குறைத்தல் (மேம்படுத்துநர்களுக்கு)
இணைய(web) பயன்பாடுகள்
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்பின்வருமாறு
நிறுவுகைசெய்தலும் கூடுதல் சேமிப்பிடங்களும் தேவையில்லை (பயனாளர்களுக்கு)
பயனாளர் அனுபவ ஈடுபாடு (பயனாளர்களுக்கு)
இணையஇணைப்பில்லாதபோதிலும் ஆதரவு (பயனாளர்களுக்கு)
குறைந்த முயற்சிகளில் மேம்படுத்துதல்கள் (மேம்படுத்துநர்களுக்கு)
மேலும், சொந்த பயன்பாட்டு வசதிகளுக்கான அணுகல் (மேம்படுத்துநர்களுக்கு)
பொதுவாக சொந்த பயன்பாடுகள் ஒரு சில சாதனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவைகளாகும், ஆனால் இணைய பயன்பாடுகளுக்கு அத்தகைய வரம்பு எதுவும் இல்லை மேலும் இவை URL இன் உதவியுடன் செயல்படும் திறன்மிக்கவைகளாகும்.
முற்போக்கான இணைய பயன்பாடுகள்
சொந்த பயன்பாடுகள் இணைய பயன்பாடுகள்ஆகியவற்றின் சிறந்தவசதிகளை இணைந்து முற்போக்கான இணைய பயன்பாடுகளை வழங்குகிறது.
முற்போக்கான இணைய பயன்பாடுகள் சிறந்த சொந்த அனுபவத்துடன் கூடியஇணைய பயன்பாடுகளாகும்
பின்வருவனபோன்ற ஒரு கலப்பின தொகுப்பு வசதிகளை இவை கொண்டுள்ளன:
கைபேசி போன்ற அனுபவத்தை வழங்குதல்
முற்போக்கான வலை வடிவமைப்பினை வழங்குதல்
அதன் சிறந்த முறையில் மீண்டும் ஈடுபடுதல் (இதனால் நம்முடைய வாடிக்கையாளர்கள் / பயனாளர்கள் எல்லா பயன்பாடுகளையும் நிறுவுகைசெய்திடவேண்டிய சிரமத்தினை அனுபவிக்க வேண்டியதில்லை)
இவை இணையஇணைப்பிலாதுபோதும் (சொந்த பயன்பாடுகள் போலவே) செயல்படும் திறன்மிக்கவை
மேலும், குறிப்பிட்ட கால ஒத்திசைவு, மிகுதி அறிவிப்புகள். ஆகிய பல்வேபு வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளன.2020 ஆம் ஆண்டின் முடிவில், IoT சாதனங்களின் எண்ணிக்கை 20 பில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இது நாம் வாழும் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக 6 க்கும் மேற்பட்ட IoT சாதனங்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.
இந்த IoT கட்டமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது:
(1) புலனுணர்வு அடுக்கு- உணர்விகளையும் தூண்டுதல்களையும் கொண்டது
(2) பிணைய அடுக்குகள் – திசைவிகளையும் நுழைவுவாயில்களையும் கொண்டது
(3) பயன்பாட்டு அடுக்கு- மேககணினி / சேவையகங்களைக் கொண்டது.
IoT உடன் PWA இன் கலவையானது IoT கட்டமைப்பின் பயன்பாட்டு அடுக்கில் நிகழ்கிறது.
ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், தற்போது இந்த புதிய IoT தொழிளானது மேலும் உயர்ந்து வளர்ந்து வருகிறது. அதனோடுஒவ்வொரு நிறுவனமும் தம்முடைய IoT சாதனங்களுக்கான அதன் சொந்த கட்டமைப்பையும் தரத்தையும் உருவாக்குகின்றன. அதனால்,(இணைய பயன்பாடுகளுடன் ஒப்பிடுகையில்) இந்த IoT சாதனங்களுக்கான உலகளாவிய பொதுவான தரநிலைகள் இல்லாததால் , வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் பல்வேறு சாதனங்களும் வெவ்வேறு தரங்களுடன் இருப்பதால் இவைகளை ஒன்றுக்கொன்று இணக்கமாக இணைக்க முடியாத நிலையுள்ளது. இதன் காரணமாக, IoT சாதனங்களின் இணைப்பானது வெகுவாக குறைந்து வருகிறது. இணையத்தினை IoT உடன் இணைப்பதன் மூலம், திறந்த வலையின் அனைத்து நல்ல வசதிகளையும் IoT க்கு கொண்டு வருவதன் மூலம் இந்த சிக்கல்களை தீர்வு செய்திட முடியும். இதன் மூலம், இணையத்தினைப் போன்றே IoT சாதனங்களின் வரம்பையும் அதிகரிக்கலாம்.
நாளுக்குநாள் IoT சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து கொண்டே வருவதால், தரவு களின் சேகரிப்பும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் மேலும் மிக அதிகமாக அதிகரித்து கொண்டேவருகின்றன. ஒரு சிலருக்கு தகவல்களைச் சேகரிப்பதில் ஆழ்ந்த விருப்பங்கள் உள்ளன. உதாரணமாக, சாலைகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் (இவை பொது தரவுகளின் கீழ் வருவதால்) நன்றாக உள்ளன ஆனால் அதே நேரத்தில், உயிரியல்ஆய்வு தரவுகள் போன்ற தனிப்பட்ட சுயவிவரங்களில் தரவுகளை சேகரிப்பது, நிதி பரிமாற்றங்கள் போன்றவை அச்சுறுத்தலாக இருக்கின்றன. முக்கியமான தகவல்கள் உட்பட IoT சாதனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பிட் தரவும் மேகக்கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தவொரு நிறுவனமும் திற மூல தளங்களை ஊக்குவிக்கவில்லை, ஆனால் இன்று ஒவ்வொரு நிறுவனமும் திற மூலத்தை ஏற்க முயற்சிக்கின்றது. ஏனெனில் திறமூலமானது தரவுகள் வளர்ந்து வரும் வணிகத்தின் முக்கிய பகுதியாகும். உதாரணமாக, சுமார்10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு, மென்பொருள் உலகின் முக்கிய வணிகம் என்பது தனியுரிமை மென்பொருளை விற்பனை செய்வதாகும். அதனால் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்திய பயனாளர்கள் எந்த வகையான தகவல்களை நிறுவனங்களில் சேகரிக்கின்றார்கள் என்றதகவல்கள் வேறு யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. அந்த நேரத்தில், பயனாளர்கள் இயந்திரங்களை சொந்தமாக வைத்திருந்தனர், ஆனால் அதற்கான குறிமுறைவரிகள் மட்டும் அதனை உருவாக்கி வழங்கிய நிறுவனங்களுக்கு சொந்தமானதாக இருந்துவந்தன
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பயனாளர் சமூகங்கள் திற மூலத்தின் பெயரில் தனியுரிமை நிறுவனங்களுக்கு மாற்று மென்பொருளை உருவாக்கத் தொடங்கின. மேககணினி தொழிற்துறையின் வளர்ச்சியுடன், நிறுவனங்கள் தற்போது இயந்திரங்களை சொந்தமாக்கத் தொடங்கியுள்ளன, அதே நேரத்தில் குறிமுறைவரிகள் பொதுசமூகங்களுடன் இணைந்து உள்ளன. நிறுவனங்கள்தற்போது தங்களுடைய வணிக மாதிரியை ஒருதிறமூல சேவையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன, குறிமுறைவரிகளானவை ஒரு தயாரிப்பு அல்ல, ஆனால் தங்களுடைய வணிகங்களை பெரிதாக்க நிறுவனத்திற்கு உதவும் ஒரு சேவையாகும்.
மேம்படுத்துநர்களுக்கான திற மூல தளம் எனக் கூறும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு GitHub தளமானது சொந்தமானதாகும் அவ்வாறு எனில், GitHub தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், மைக்ரோசாப்ட் மேம்படுத்துநர்களுக்கு தங்களுடைய திற மூல மென்பொருளை உருவாக்க Azureஐ வழங்குவதன் மூலம் தங்களுடைய சேவைகளை மேம்படுத்த முடியும்.வணிக மாதிரி மாறினாலும், தகவல் சேகரிப்பு மாறாது. முன்னதாக, தனியுரிமை மென்பொருளானவை கண்காணிப்பின் முக்கிய அலைவரிசைகளாகப்( channels) பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது திறந்த கண்காணிப்புக்கு மாறிவிட்டன.
மூலக் குறிமுறைவரிகளை பொதுமக்களின் பார்வைக்கு திறந்தவிட்டதன் மூலம், உலகை கற்பனாவாதத்திற்கு கொண்டுசென்றோமா எனில் அவ்வாறெல்லாம் ஒன்றும் இல்லை. மூலக் குறிமுறைவரிகள் திறந்திருக்கும், ஆனால் இன்னும்,நமக்கு பல்வேறு பெரிய போட்டி கள்உள்ளன, அது மையமயமாக்கல். ஃபேஸ்புக்கில் எதிர்வினை கொண்டுள்ளன, கூகிள் Angular ஐயும் மைக்ரோசாப்ட் GitHub ஐயும் கொண்டுள்ளன. இவை அனைத்தும் திறமூலங்கள் ஆனால் அவை மையப்படுத்தப்பட்டவை மேலும் அந்தந்த நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தரவு கண்காணிப்பின் இருண்ட பக்கத்தைப் பார்ப்போம். நம்மிடம் GPS இருப்பிடம்காணும் கருவி அல்லது நம்முடைய கைபேசியில் உள்ள உணர்விகள் மூலம் கண்காணிக்கப்படும் எல்லா தரவுகளும் திறந்த இணையத்திலும், இருண்ட இணையத்திலும் கிடைக்கின்றன. இது எதிர்காலத்தில் குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.எனவே இப்போது, தனியுரிமையை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
பரவலாக்கம் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. திறமூலத்தின்வாயிலாகவும் பரவலாக்கத்தின் உதவியுடனும், தரவுகளை கசிவுகளின் கவலைகள் இல்லாமல் ஒரு பாதுகாப்பான தளத்தை நாம் செயல்படுத்த முடியும்.
பயன்பாட்டு அடுக்கில் உள்ள மேககணினி / சேவையகங்கள் மேககணினி, முனைமகணினி மூடுபனி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றுள் மேககணினி மிகவும் பிரபலமாக இருந்தபோதிலும், முனைமகணினி மூடுபனி பொருட்களுக்கான இணையம்(IoT) ஆகியவற்றையும் ஆய்வுசெய்திட பரிந்துரைக்கப்படுகிறது. அதன் உதவியுடன், பயனாளர்கள் திறனுள்ள அலுவலகங்கள், திறனுள்ள வீடுகள் போன்ற சொந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்க முடியும். இதற்கான இயங்குதளம் மிகவும் எளிதானது, பயனாளர் தங்களுடைய சொந்த சேவையகங்களை மொஸில்லாவின் திற மூலஇணைய மென்பொருளுடன் அமைத்து அதை சாதனங்களுடன் கட்டமைக்க வேண்டும். அவ்வளவுதான்.
பொதுவாக, ஒவ்வொரு IoT சாதனமும் விற்பனையாளர்களின் மையப்படுத்தப்பட்ட சேவையகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையகங்களில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுக, ஒருவர் அவற்றின் சேவையகங்கள், நுழைவாயில்கள்ஆகியவற்றின் வழியாக உள்செல்ல வேண்டும். ஆனால் மொஸில்லாவின் முற்போக்கான பொருட்களுக்கான கட்டமைப்பின் மூலம், ஒரு பரவலாக்கப்பட்ட, சிறிய-சேவையகம் அல்லது ஒரு தனியார் சேவையகத்தை ஒருவர் செயல்படுத்த முடியும், இதனால் நம்முடைய எல்லா தரவுகளும் எந்தவொரு வெளிப்புற சேவையகத்திற்கும் சரணடையாமல் நம்முடையள் வரம்பிற்குள் இருக்கும்.
புதிய இணையத் தரங்களின் வருகையுடன், முகப்புத் திரையில் சேர்ப்பது, கைபேசியில் பதிலளிக்கக்கூடியது PWA இன் வசதிகள் மட்டுமல்லாது. நம்முடைய கைபேசிகளிலில் வெவ்வேறு உணர்விகள் உள்ளன, modern web APIs கள் மூலம் நாம் அவையனைத்தையும் இணைக்கலாம் மேலும்பொருட்களைஇணையத்தின் வழியாக இயக்கலாம். கூடுதலாக, நவீன இணைய உலாவிகள் பிற சாதனங்களுடன் இணைவதற்கான திறன்களை வழங்குகின்றன. PWA இன் சிறந்த பகுதி என்னவென்றால், நாம் ஒரு push அறிவிப்பைப் பெறலாம் என்பதேயாகும். மொஸில்லாவின் பொருட்களுக்கான இணையத்தினை பற்றிய கூடுதல் தகவலைதெரிந்து கொள்ள https://iot.mozilla.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க.

எக்செலில் புதிய FLASH FILL எனும் செயலியை பயன்படுத்தி கொள்க

மைக்ரோசாஃப்ட் எக்செல் சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு பயனாளர் நட்பு கருவியாகும். நாம் இதை வழக்கமாக அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தலாம், ஆனால். நம்மில் பெரும்பாலானோர் அதன் திறன்களில் ஐந்து சதவிகிதத்தை(5% )கூட பயன்படுத்து வதில்லை.
இதனுடைய VLOOKUP, HLOOKUP, MATCH , INDEX போன்ற செயலிகளைப் பயன்படுத்துவதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம், அதேபோன்றே FLASH FILL எனும் மேலும் மற்றொரு பயனுள்ள செயலியும் உள்ளது என்றும் இதனை எவ்வாறு செயல்படுத்தி பயன்படுத்துவது என திகைத்து நின்றிடாமல் இதனை மிகவிரைவாகவும் எளிதாகவும் கற்றுக் கொள்ள முடியும் எனும் செய்தியையும் மனதில்கொள்க. இந்த செயலியானது MS Excel இல் உள்ள தரவுகளை ஒன்றிணைக்க, ஒன்றாக இருப்பதை பிரித்தெடுக்க அல்லது மாற்றியமைத்திட உதவிடும் ஒரு கருவியாகும் ஒரே செயலைமீண்டும்மீண்டும் செய்ய எக்செல்லில் அதற்காகவென தனியாகவொரு சூத்திரத்தை உருவாக்குவதை விட அவ்வாறான பணிகளை எளிதாக செயல்படுத்திட இவ்வாறான செயலிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன . இது செயலில்உள்ளஒரு மாதிரியை அறிந்தவுடன் தானாகவே மிகுதி தரவுகளை நிரப்புகிறது.அதாவதுநாம் மாற்ற விரும்பும் முடிவுகளுக்கு ஓரிரு உதாரணங்களை மட்டுமே வழங்க வேண்டும்உடன் அதனுடைய முழு அமைப்பையும் மிக எளிதாக யூகித்து, மீதமுள்ள தரவுகளை நமக்காக தானே நிரப்பிவிடுகின்றது.
எ.கா. ITR எனும் வருமான வரிபடிவத்தில் செயலாக்கத்தை அறிவித்தல் அல்லது திருத்தம்செய்யவேண்டிய கோரிக்கையைத் தெரிவித்தல் அல்லதும் வேறு எந்தவொரு அறிவிப்பிலும் அல்லது உத்தரவிலும் தொடர்புடைய கோப்பினை திறக்கவேண்டுமெனில் அதற்காகவென தனியாக இருக்ககூடிய கடவுச் சொல்லை உள்ளீடு செய்தால் மட்டுமே திறக்கமுடியும் என்றநிலையில் இவ்வாறான வருமானவரி அறிவிப்பில் வருமானவரிபதிவுண்ணில்( PAN) சிறியஎழுத்துகளாகவும் நம்முடைய பிறந்த தேதியையும்(DOB ) சேர்த்து கலந்து உள்ளிடுவதே இதற்கான கடவுச்சொல்லாகும் என்ற நிலையில் நம்மிடம் இரண்டு நெடுவரிசைகளைக் கொண்ட எக்செல் தாள் உள்ளது, நெடுவரிசை A என்பது PANஎண்ணாகும் இரண்டாவது நெடுவரிசை B ஆனது பிறந்த நாளாகும்(DOB), என்றநிலையில் இப்போது இந்த FLASH FILLஎனும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் C நெடுவரிசையில் PAN , DOB ஆகியவற்றினை கலந்து தட்டச்சு செய்வதன் மூலம் ஒரு புதிய வடிவத்தை நிறுவினால், எக்செல்லின் FLASH FILLஎனும் வசதியானது நாம் வழங்கிய வடிவத்தின் அடிப்படையில் மீதமுள்ளவற்றை தானாகவே நிரப்பிகொள்கின்றது.
இப்போது இரண்டாவது சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம்,நம்மிடம் வாடிக்கையாளர்களின் GSTIN தரவுத்தளம் உள்ளது, இப்போது இந்த வாடிக்கையாளர்களின் PAN எண் வேண்டும், என்றநிலையில் இந்த தரவை மீட்டெடுப்பது சிக்கலான செயல்முறையாக இருக்கும், ஆனால் FLASH FILLஇன் வசதியால் ஒரு சொடுக்குதலில் அவற்றை கொண்டுவந்துவிடலாம் , அதாவது நெடுவரிசை A என்பது வாடிக்கையாளர் களின் GSTIN பட்டியலாகும், அதனை நெடுவரிசை B இல் நெடுவரிசை A இலுள்ள GSTIN இலிருந்து PAN எண்ணை மட்டும் பிரித்தெடுத்திடுமாறு தட்டச்சு செய்து இந்த FLASH FILL எனும் செயலியை இயக்கி ஒரு வடிவத்தை நிறுவுகை செய்தால் போதும் உடன் மிகுதி GSTIN நெடுவரிசையிலிருந்து PAN எண்ணைமட்டும் நெடுவரிசை B இல் பிரித்தெடுத்திருப்பதை காணலாம்.
. இந்த FLASH FILLஎனும் செயலியானது எக்செல் 2013 இல் வெளியிடப்பட்டது, எனவே, அதன்பின்னர் வெளியிடபட்ட அனைத்து எக்செல் பதிப்புகளிலும் அதாவது எக்செல் 2013,எக்செல் 2016,எக்செல் 2019 , அலுவலகம் 365 ஆகியவை இந்த செயலியை உள்ளடக்கியுள்ளன.
எக்செல் 2010 அல்லது வேறு எந்த வொரு முந்தைய பதிப்புகளிலும் FLASH FILL எனும் செயலிஇருக்காது.
எனும் செய்தியை மனதில் கொள்க FLASH FILL எனும் செயலியை Data எனும் தாவல் திரையில் காணலாம். அதாவது திரையில் மேலே Dataஎனும் தாவல் பட்டியின் Data Tools எனும் பிரிவில் FLASH FILL எனும் செயலி இருப்பபதை காணலாம் நாம் எக்செல்லில் FLASH FILL எனும் செயலியின் முன்னோட்டத்தை உருவாக்கவில்லை என்றால், அது இருக்காது நாமே முயன்று Data > Flash Fill> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி அல்லது Ctrl + Eஆகிய விசைகளை சேர்த்து அழுத்தினால் போதும் உடன் Flash Fill என்பது செயலில் இருப்பதை காணலாம் அல்லது Tools > Options > Advanced > Editing Options > check the Automatically Flash Fill box.> என்றவாறு கட்டளைகளைசெயல்படுத்தியபின்Flash Fill என்பது செயலில் இருப்பதை காணலாம்
இதனை பயன்படுத்துவதற்கான மற்றொரு வாய்ப்பாக , Quick Access Toolbar. இல் இதைச் சேர்ப்பதாகும் . இந்த வழிமுறையில்
தற்போது எந்தவொரு ribbon தாவலையும் பொருட்படுத்தாமல் எப்போதும் கிடைக்கும். Quick Access Tool barஇல் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாகஉருவாகும் சூழ்நிலைபட்டியில் இதனை தெரிவுசெய்திடலாம்
அல்லது Ribbon > select Customize Quick Access Toolbar. Quick> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குவதன்வாயிலாக இதனை தெரிவுசெய்திடலாம் இதற்கான படிமுறை பின்வருமாறு

முதலில் அனைத்து கட்டளைகளையும்( All Commands) தேர்வு செய்க.

பின்னர் கட்டளைகளின் பட்டியலிலிருந்து Flash Fill எனும்செயலியைத் தேர்ந்தெடுத்திடுக.

அதன்பின்னர் Add எனும் பொத்தானை சொடுக்குக.

இறுதியாக OK எனும் பொத்தானை சொடுக்குக.


இது மிகவும் சக்தி வாய்ந்தது மேலும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றை மாற்ற முடியும், அதாவது நம் அனைவரிடமும் உள்ள எக்செல்தாளின் இடது, வலது, நடுவில்,ஆகியவாறு உள்ள நெடுவரிசைகளிலான உரையை, ஒன்றிணைத்தல், மேல்நோக்கிசெல்லசெய்தல் அல்லது கீழ்நோக்கிசெல்லசெய்தல், ஒட்டுமொத்தமாக ஆக்குதல் ஆகியஅனைத்து செயல்களுக்கும் ஒரு சில குறிப்பிட்ட தேவைகள் உள்ளன, அவைகளில் நமக்கு தேவைப்பட்டால் பூர்த்தி செய்ய வேண்டும், அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது எக்செல் வாய்ப்புகளில் இயக்கப்பட்டிருந்தால் ஒரு சில எடுத்துக்காட்டுகளை உள்ளிட்டவுடன் மிகுதி நிரப்பிடும் பணியை தானாக செய்யும். முதல் ஒருசில எடுத்துக்காட்டுகளைத் தட்டச்சு செய்வதன் மூலம்மிகுதிமுடிவுகளை தானாகவே நிரப்புவதன்வாயிலாக நாம் அதைப் பெறலாம். பின்னர் எக்செல் வெளிர் சாம்பல் நிறத்தில் ஒரு மாதிரிக்காட்சியைக் காண்பிக்கும், மேலும் உள்ளீட்டு(Enter) விசையை அழுத்துவதன் மூலம் முடிவுகளை ஏற்கலாம். ஆயினும் இந்த Flash Fill எனும் செயலியின் உதவியுடன் மேல்நோக்கியவாறுமட்டும் நிரப்ப முடியாது. அதாவது எடுத்துக் காட்டுகளை நெடுவரிசையில் எங்குவேண்டுமானாலும் தொடங்கலாம், ஆனால் Flash Fillஆனது அங்கிருந்து அதற்கு கீழ்நோக்கி மட்டுமே நிரப்பிடும் பணியைசெய்திடும் என்ற செய்தியை மனதில்கொள்க.
அலுவலக பயன்பாட்டிற்கு நமக்கு பயனுள்ளதாக இருக்கும் சில எடுத்துக்காட்டுகள் இங்கே.

விவரங்கள்நெடுவரிசைAநெடுவரிசைBFlash Fill இன்முடிவுகள்
GSTIN உம் Date of Incorporation உம்சேர்ந்தது24AAACB0123D1ZV01/07/1724AAACB0123D1ZV01072017
PAN உம் DOBஉம்சேர்ந்ததுAAACB0123D01/01/91aaacb0123d01011991

இந்த செயலியைப் பயன்படுத்திடுவதற்காகவென தனியாக கட்டைவிரல் விதிஎதுவும் இல்லை, நம்முடைய மாதிரியினை(pattern) அறிந்துகொண்டிருந்தால் இந்த செயலியானது செயல்படும். இது ஒரு வடிவத்தை தீர்மானிக்க முடியாவிட்டால், உடன் We looked at all the data next to your selection and didn’t see a pattern for filling in values for you. என்றவாறு பிழைச் செய்தியை திரையில் காண்பிக்கும்.
இதை பயன்படுத்த, நாம் பார்க்க விரும்பும் வெளியீட்டின் இரண்டு எடுத்துக்காட்டுகளை உள்ளீடு செய்து, மிகுதியாக நாம் நிரப்ப விரும்பும் நெடுவரிசையில் செயலில் உள்ள நெடுவரிசையில் வைத்து, மீண்டும்Flash Fill எனும் செயலியின் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய பணியைமுடித்துகொள்ளமுடியும்
இது எந்த முடிவுகளையும் வழங்கத் தவறினால் அல்லது சரியான முடிவுகளை வழங்கத் தவறும்போது, சிக்கலைத் தீர்க்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பின்வருமாறு.

  1. எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்து பிழைகள் ஏதேனும்இருந்தால்அவற்றை சரிசெய்க. ஒரு சிறிய எழுத்து தவறு அல்லது காணாமல் போன எண் போன்றவற்றில் ஒரு வடிவத்தைக் கண்டுபிடிக்கத் தவறியதால் கூட இந்த தவறு ஏற்படலாம்.
  2. எடுத்துக்காட்டுகளை நீக்கி மீண்டும் தொடங்கவும். ஒரு சில நேரங்களில் எடுத்துக்காட்டுகளை ஆராய்ந்து தொடங்கும் போது பிழையைப் பார்க்க முடியாமல் போகலாம்.
  3. கூடுதல் எடுத்துக்காட்டுகளுடன்இதனை வழங்கிடுக. சரியான வடிவத்தைப் பெற எக்செல் இன்னும்ஒரு சில எடுத்துக்காட்டுகள் தேவைப்படலாம்.
  4. முதல் ஜோடி எடுத்துக்காட்டுகளை வழங்கிய பின்இது தானாக இயங்கவில்லை என்றால், அதை இயக்க ரிப்பனில் உள்ள கட்டளை அல்லது விசைப்பலகை குறுக்குவழியைப் பயன்படுத்தலாம்.
  5. இது தானாக இயங்கவில்லை என்றால், அது முடக்கப்பட்டிருக்கலாம். இதனை தானாக இயக்குவதற்கான வாய்ப்பு இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த Excel options எனும் பட்டியில் Flash Fill என்பது இயலுமை செய்யபட்டுள்ளதாவென சரிபார்த்திடுக:
    Flash Fill எனும் செயலியானது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அதற்கு வரம்புகள் உள்ளன.
  6. இது நிரப்பிடும் மதிப்புகளின் அடிப்படையாகக் கொண்ட மதிப்புகளை மாற்றும்போது இது தானாக புதுப்பிக்காது. மதிப்புகளைப் புதுப்பிக்க மீண்டும் இதனை முதலிலிருந்து நிரப்புதலைச் செய்ய வேண்டும்.
  7. எக்செல் வழிமுறை மிகவும் சிக்கலானதாக இருந்தால் இது எப்போதும் முடிவுகளை வழங்காது. இருக்கலாம்.
  8. இது நிரப்பபிடும்முறையை தவறாக அடையாளம் கண்டு விரும்பத்தகாத முடிவுகளை அளிக்கலாம். ஏராளமான தரவுகளுடன், தவறான முடிவுகளைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம், எனவே . இதற்காக ctrl + E ஐ அழுத்துவதை விட 2-3 நெடுவரிசைகளில் தட்டச்சு செய்து முயற்சித்திடுக இதற்கான எடுத்துகாட்டுகளை சமர்ப்பிக்கும் முன் ஒரு சிலவற்றை எடுத்துக்காட்டுகளுடன் சரிபார்க்கவும்.
  9. இது முடிவுகளை கிடைமட்டமாக நிரப்பாது. இதற்கான தரவுகள் எப்போதும் செங்குத்தாக இருக்க வேண்டும்.

Etcher ஒரு அறிமுகம்

இது ஒரு சக்திவாய்ந்த இயக்கமுறைமையின் (OS) image வெளியீடாகும் இது இயக்ககத்தின் தேர்வைத் தெளிவுபடுத்துவதன் மூலம் தற்செயலா க வன்தட்டுகளை மேலெழுதவிடாமல் பயாளனரைப் பாதுகாக்கிறது; சரிபார்க்கப்பட்ட ஒளிர்வியின் மூலம் சிதைந்த இயக்கங்களுக்குOS image எழுத முடியாது. இது balenaஎனும் நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்டது என்பதால் இது balenaEtcher என்றும் அழைக்கப்படுகிறது.
கூடுதலாக, இது நேரடியாக யு.எஸ்.பி துவக்கத்தை ஆதரிக்கும் ராஸ்பெர்ரி பை சாதனங்களைஒளிரச் செய்யலாம். நேரடி SD அட்டைகளையும் யூ.எஸ்.பி ஒளிரும் இயக்ககங்களை உருவாக்க .iso , .img ஆகிய கோப்புகளுக்கும், சுருக்கி கட்டப்பட்ட கோப்புறைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இது குறுக்கு இயங்குதள பயன்பாட்டிற்காக மின்னனுக்களுடன் எழுதப்பட்டது இது விண்டோ, மேக், லினக்ஸ் ஆகிய இயக்கமுறைமைகளில் செயல்படும் திறன்மிக்கது.
இதன் வசதி வாய்ப்புகள்
இது SD இல் Images எழுதபயன்படுகின்றது
சிதைந்த அட்டைகளில் Images எழுதுவது இல்லை, சரிபார்க்கப்பட்ட ஒளிரும் தன்மையால் நம்முடைய சாதனம் ஏன் துவங்கவில்லை என்று சரிபார்த்திடுகின்றது.
வன்வட்டுகளுடன் நட்பாக இருப்பதால் நம்முடைய வன்வட்டுகள் முழுவதையும் துடைத்து நீக்குவதைத் தவிர்க்கஇயக்கக தேர்வைத் தெளிவாக்குகிறது
இதனுடைய அழகான இடைமுகவசதியால் SD அட்டைகளை ஒளிரச் செய்கின்றது
இது திறமூலமாக இருப்பதால்JS, HTML, node.js ஆகியவற்றின் மூலம் இது உருவாக்கப்படுகிற,து.
இது அனைத்து தளத்திலும் செயல்படுகின்றது
இதில்மிகவும் சிக்கலான நிறுவுகைசெய்வதற்கான வழிமுறைகள்எதுவும் இல்லை.
மேலும் 50% வேகமான ஒளிரும்தன்மை, பல இயக்ககங்களில் ஒரே நேரத்தில் எழுதுதல் திறன்கொண்டது மேலும்விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.balena.io/etcher/எனும் இணையதள முகவரிக்கு செல்க

விண்டோ10 இல் ஒத்தியங்கும் தன்மையுடன் பழைய பயன்பாடுகளை எவ்வாறு இயக்குவது

இது பழைய இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப்பட்டநமக்கு பிடித்த பயன்பாடுகளை விண்டோவின் சமீபத்திய பதிப்பில் இயக்க உதவுகின்றது.. இது பழைய பயன்பாடுகளை விண்டோ10 இல் இயங்குவதற்கான பல்வேறு தந்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சரிசெய்தல் வழிகாட்டியில் விரிவான படிமுறைகளைப் பின்பற்றிடுக, மேலும் ஒவ்வொன்றிலும் ஒத்தியங்கக்கூடிய அமைப்பையும் விவாதித்திடுக
விண்டோ10 இல்ஒத்தியங்கக்கூடியவகையில் பயன்பாடுகளை சரிசெய்து இயக்குதல்
ஒரு பொதுவான விதியாக, நாம் விண்டோ 10 ஐ நெருங்க நெருங்க, பயன்பாடுகளானவை நிலையானதாக இருக்கின்றன. எனவே, ஒத்தியங்கக்கூடிய நிலையின்(compatibility mode )முழு திறன்களையும் நிரூபிக்க, காலாவதியான விண்டோஎக்ஸ்பி எனும் இயக்கமுறைமையில் செயல்பட்ட 2002 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டை சமீபத்திய விண்டோ 10 பதிப்பு 19.09 இல் இயக்குவதற்கான படிமுறைகள் காண்பிக்கும்! இது விண்டோ எக்ஸ்பிக்கான பிரபலமான திரை பிடிப்பு கருவியாக இருந்தது.
தொடக்க பட்டியலிற்குச் சென்று, “run programs,” என்று தட்டச்சு செய்து, கட்டுப்பாட்டு பலகத்தின் வாய்ப்பான, ““run programs made for previous versions of Windows.”என்பதை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் “Program Compatibility Troubleshooter ” எனும் வழிகாட்டியானது திரையில் தோன்றிடும். அதனை தொடர்ந்து அதில் காணும் “Next” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் விண்டோ10 இல் கிடைக்கக்கூடிய பயன்பாடுகளின் பட்டியலை உருவாக்கும் முன், ஏதேனும் சிக்கல்களைக் கண்டறிய சரிசெய்திடும் செயலிற்காக ஒருசில நொடிகளை அனுமதித்திடுக.
அடுத்து தோன்றிடும் திரையில் நம்முடைய விண்டோ 10 செயல்படும் கணினியில் கிடைக்கும் அனைத்து பயன்பாடுகளின் பட்டியலையும் காணலாம். அந்ததிரையில் கீழே நகர்த்திசென்று, நமக்கு சிக்கலைத் தரும் பயன்பாட்டினைத் தேர்ந்தெடுத்திடுக.நம்முடைய பழைய விண்டோ7 அல்லது விண்டோ எக்ஸ்பியில் செயல்படுகின்ற பயன்பாடுகள் எதுவும் திரையில் தெரியவில்லை என்றால், “Not Listed” என்பதைத் தெரிவுசெய்து சொடுக்குக.
முழுமையான பகுப்பாய்விற்கும் தீர்மானத்திற்காகவும் பழைய நிரலாக்கங்களின் .exe கோப்பை நாம் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். அவ்வாறு செய்ய “Next” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
1. ஒத்தியங்கக்கூடியசெயல்முறை: பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளை முயற்சித்திடுக
எந்தவொரு பொருந்தக்கூடிய சிக்கல்களையும் தீர்வுசெய்திடுவதற்காக நிரலாக்க இணக்கத்தன்மையை சரிசெய்திடுக இது இரண்டு வெவ்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. முன்னமைவுகளின் அடிப்படையில் விண்டோ 10 ஒத்தியங்கக்கூடிய தன்மையை தானாகவே பழுது நீக்கி சரிசெய்வதற்காக ““Try Recommended Settings” எனும்வாய்ப்பினை பயன்படுத்திகொள்க.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிரலாக்கத்தில் பொருந்தக்கூடிய சிக்கல்கள் சரி செய்ய தயாராக உள்ளன (இந்த எடுத்துக்காட்டில் மூவிமேக்கர்). சிக்கல்களைக் கவனிக்க நிரலாக்கத்தினை பரி சோதித்திடுக. இந்த பணியைதொடர்ந்து செயல்படுத்திடுவதற்காக “Next” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

நிரலாக்க ஒத்தியக்கத்தன்மை சரிசெய்தலானது எந்தவொரு சிக்கலையும் விரைவாகக் கண்டறிந்து தீர்வுசெய்திடும் மேலும் சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராயும். ஆம் எனில், நிரலாக்கத்திற்கான “save the settings” என்பதை தெரிவுசெய்து சொடுக்கு மேலும்இந்த வழிகாட்டியின் திரையிலிருந்து வெளியேறிடுக. இந்த நடவடிக்கைக்குப் பிறகு நாம் மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடாது.இன்னும் சிக்கல்கள் இருந்தால், “try again using different settings”, எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கு மேலும் இது அடுத்த பகுதியில் காட்டப்பட்டுள்ளபடி இரண்டாவது வாய்ப்பிற்கு நம்மை திருப்பி அனுப்பும்.
2. ஒத்தியங்கக்கூடிய நிலை: நிரலாக்கங்களைசரிசெய்தல்
நிரலக்க இணக்கத்தன்மை யை சரிசெய்தலுக்காக இரண்டாவது வாய்ப்பாக, “Troubleshoot program” என்பதைத் தெரிவுசெய்து சொடுக்குக, இது சிக்கலின் சரியான தன்மை குறித்து கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது.
பழைய இயக்க முறைமைகளில்செயல்படும் நிரலாக்கங்களாக வடிவமைக்கப்பட்ட தேர்வுநமக்கு வழங்கப்படும். நமக்கு நன்றாக நினைவில் இல்லை என்றால் “I don’t know” எனும் வாய்ப்பினைத் தெரிவுசெய்திடுக. அவ்வாறு தேர்ந்தெடுத்த பிறகு, நிரலாக்கங்களானவை தானாகவே பழைய பதிப்போடு ஒத்தியங்கக்கூடிய தன்மையை நிறுவுகைசெய்துகொள்ளும்.
இங்கே சுட்டி காட்டப்பட்டுள்ளபடி, விண்டோ எக்ஸ்பிக்காக வடிவமைக்கப்பட்ட திரையிலிருப்பதை பிடித்தல்(screen capture )எனும் கருவியானது இறுதியாக செயல்படுகிறது. ஆனால் திரையை சரியாக நகலெடுப்பதற்கு பதிலாக, அது வெற்றுத் திரையை மட்டுமே திரையில் காண்பிக்க செய்கின்றது . இது காலாவதியான எக்ஸ்பி நிரலாக்கம் என்பதை நினைவில் கொள்க. பெரும்பாலான விண்டோ7- விண்டோ 8 இற்கு வடிவமைக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு, நாம் மேலும் செல்ல தேவையில்லை.
3. குறைக்கப்பட்ட வண்ண பயன்முறையைப் பயன்படுத்திடுதல்
இன்றைய கணினி வரைகலையில் பழைய பதிப்புகளை விட மிகவும் மேம்பட்டவை. நம்முடைய பழைய நிரலாக்கங்களில் ஒருசில சொடுக்குகளில் வரையறுக்கப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்தி இயக்கு வதற்காக வடிவமைக்கப் பட்டிருக்கலாம். இதுதான் வெற்றுத் திரைகளுக்கு வழிவகுக்கிறது.
நம்முடைய பழைய விண்டோ நிரலாக்கத்தினை “8-பிட் (256) வண்ணத்தில்” அல்லது “16-பிட் (65536) வண்ணத்தில்” மீட்டமைக்கலாம். இதைச் செய்ய, எந்த கணினியினுடைய இருப்பிடத்திலும் நிரலாக்கத்தினுடைய .exe எனும் கோப்பின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Properties -> Compatibility என்றவாறு வாய்ப்புகளின் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பண்பியல்புகளின் Compatibility எனும் திரையில்.இந்த சிக்கல்களை சரிசெய்ய “reduced color mode” எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கு . பின்னர் மாற்றங்களை சேமித்து தொடர்ந்து செயல்படுத்திடுக, பழைய நிரலாக்கத்தினை மீண்டும் இயக்குக. இது இன்னும் சரியாகசெய ல்படவில்லை எனில், அடுத்த பொருந்தக்கூடிய அமைப்பிற்குச் செல்க.
4. 640 × 480 தீர்வுகளை இயக்குதல்
ஒரு சில நேரங்களில் பழைய நிரலாக்கங்களில் காட்சி சிக்கல்களானவை வரைகலை சிக்கல்களால் ஏற்படுகின்றன, அவை துண்டிக்கப்பட்டு அல்லது தவறாக வழங்கப்படலாம். நிரலாக்கத்தின் .exe கோப்பின்மீது மீண்டும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் “Properties -> Compatibility.” என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பண்பியல்புகளின் Compatibility எனும் திரையில் காட்டப்பட்டுள்ளபடி “640 × 480” திரை தெளிவுத்திறனை தேர்ந்தெடுக்கலாம்.
சமீபத்திய விண்டோ 10 பதிப்பில் திரையைப் பிடிக்க இப்போது இதைப் பயன்படுத்தலாம். நிரலாக்கத்தில் பொருந்தக்கூடிய உதவியாளரின் “Did this program work correctly” என்ற வரியில் இதனை கவனிக்கலாம்.

5. உயர் DPIஅமைப்புகளை மாற்றிடுதல்
“Change High DPI Settings” என்று அழைக்கப்படும் மற்றொரு பொருந்தக்கூடிய அமைப்பு உள்ளது, இது விண்டோ10 இல் மங்கலாகவோ, மிகப் பெரியதாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ தோன்றும் நிரலாக்கங்களின் காரணமாக ஏதேனும் மோதல்களைத் தீர்வுசெய்திடும்.
இதற்காக நிரலாக்கத்தின் .exe கோப்பின்மீது மீண்டும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் “Properties -> Compatibility.” என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பண்பியல்புகளின் Compatibility எனும் திரைக்கு சென்று “Change High DPI Settings ” எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒரு புதிய உரையாடல் பெட்டி திறக்கும். அதில் தோன்றிடும் “fix scaling problems” அல்லது “override high DPI scaling behavior” ஆகிய இரண்டில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக. நிரலாங்கங்கள் குறைவாக மங்கலாகத் தோன்றும் வகையில் இவை இரண்டும் நமக்கு உதவுக்கூடும்.
அதிகாரப்பூர்வ மைக்ரோசாப்ட் பரிந்துரைக்கப்பட்ட கையேடுடன் மேலும் இரண்டு பொருந்தக்கூடிய அமைப்புகள் உள்ளன. ஒருசில நிரலாக்கங்களுக்கு சரியாக இயங்குவதற்காக நிர்வாகியின் அனுமதிகள் தேவையாகும், எனவே நாம் administratorஎன்பதன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின்வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த நிரலாக்கத்தை இயக்க வேண்டும்.தொடர்ந்து விரியும் திரையில் Properties -> Compatibility எனும் திரைக்குச் சென்று அனைத்து பயனாளர்களுக்காகவும் இதனஉடைய அமைப்புகளை மாற்றலாம்.
இந்த வழிகாட்டியில் நாம் பார்த்தபடி, பெரும்பாலான பழைய பயன்பாடுகள் அல்லது விளையாட்டுகள் விண்டோ10 இல் மோசமாக இயங்குகின்றன, ஏனெனில் அவை விண்டோ8, விண்டோ7, விண்டோ விஸ்டா அல்லது விண்டோஎக்ஸ்பிக்காக வடிவமைக்கப்பட்டவைகளாகும். ஆனால் விண்டோ இணக்கத்தன்மை சரிசெய்தல் மூலம், புதியசமீபத்திய இயக்கமுறைமை செயல்படும் கணினியில் நம்முடைய மரபு பயன்பாடுகளை இயக்க எப்போதும் ஒரு வழி இருக்கிறது. விண்டோ 10 இல் நாம் இயக்க விரும்பும் பழைய டாஸ் நிரலாக்கங்களை நம்மிடம் இருந்தால், அதைச் செய்வதற்கான ஒரு வழிகூடஇருக்கின்றது

நம்முடைய பென்ட்ரைவிலிருந்து குறுக்குவழி நச்சுநிரலை அகற்ற சிறந்த வழிகள்

குறுக்குவழிநச்சுநிரல்(Shortcut virus)என்பது ஒரு புதியநச்சு நிரலாகும், இது நம்முடைய எல்லா தரவுகளையும் குறுக்குவழியில் உருவாக்குகிறது. இது நம்முடைய தரவுகளை அழிக்காது, ஆனால் அது நம்முடைய தரவுகளை மறைத்து சிதைக்கும்.இணையத்தில் குறுக்குவழிநச்சுநிரல்களை நீக்கிடுவதற்கான மென்பொருள் கருவிகள்ஏராளமாக உள்ளன. இவ்வாறான நிலையில் நம்முடைய பென் டிரைவை வடிவமைத்தால்(format), இந்த நச்சுநிரல் போய்விட்டது என்று அர்த்தமன்று, ஏனெனில் நாம் மீண்டும்நம்முடைய பென் டிரைவை அதற்கான வாயிலில் செருகும்போது, அது மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும் இயல்பினை கொண்டுள்ளது.அதனால் அவ்வாறான நச்சுநரலை அறவே நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு
வழிமுறை 1.கட்டளை வரி வாய்ப்பினை பயன்படுத்து
எந்தவொரு மென்பொருளையும் நிறுவுகைசெய்திடாமல் அனைத்து குறுக்குவழிநச்சுநிரல் பயன்பாடுகளையும் நீக்க விரும்பினால், இதற்கான எளிய தீர்வு உள்ளது, அதாவதுகட்டளை வரியை (CMD) பயன்படுத்தி நம்முடைய பென் டிரைவிலிருந்து குறுக்குவழி வைரஸை எளிதாக அகற்றலாம். சிஎம்டி பற்றி நமக்குத் தெரியாவிட்டால், பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றிடுக.
1. முதலில் நம்முடைய யூ.எஸ்.பி டிரைவை கணினி அல்லது மடிக்கணினியில் செருகுக.
2. தொடர்ந்துwindow எனும் உருவப்பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது “Run”” எனும் செயலியை இயக்கி பட்டியலை தொடங்குக பின்னர் விரியும் திரையில் cmd என தட்டச்சு செய்து உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக.
3. அதன்பின்னர் கட்டளைவரிக்கு கீழே இரண்டாவது படி நகலெடுத்து, நாம் ஏற்கனவே திறந்த கட்டளை வரியில் ஒட்டியபின்னர் உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக.
வழிமுறை 2. BAT எனும்கோப்பை உருவாக்குதல்:
கோப்பு நிரலாக்கதொகுப்பு பற்றி நமக்குத் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது, இல்லையென்றால் இந்த நிரலாக்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குறுக்குவழிநச்சுநிரலை அகற்ற BAT எனும்கோப்பை உருவாக்கிட எளிதான படிமுறைகள் உள்ளன . அதாவது நோட்பேடில் செயல்படும் BAT எனும்கோப்பை உருவாக்க நமக்கு எந்த வகையான மென்பொருளும் தேவையில்லை. பின்வரும் படிமுறைகளை மட்டும் பின்பற்றிடுக.
படிமுறை 1. கணினி அல்லது மடிக்கணினியில் நோட்பேடைத் திறந்திடுக.
படிமுறை 2. தொடர்ந்து கீழே உள்ள குறிமுறைவரிகளை நகலெடுத்துஅந்த நோட்பேடில் ஒட்டிடுக
படிமுறை 3.அதில் இயக்ககத்தின் (drive ) பெயரை G என மாற்றிடுக.
படிமுறை 4 பிறகு, “Ctrl + S” ஆகிய விசைகளை மூன்று முறை அழுத்திசேமித்திடுக. இந்த கோப்பிற்கு நாம் விரும்பும் எந்தவொரு பெயரையும் அமைத்திடுக, ஆனால் “.bat” (removeveshortcut.bat) என்ற உரை வகையின் முடிவில் அதைகணினியில் சேமித்திடுக.
படிமுறை 5. இப்போது நோட்பேடை மூடி, நாம் உருவாக்கும் BAT கோப்பினை இருமுறை சொடுக்கிகணினியில் சேமித்திடுக.
இயக்ககத்திலிருந்து நம்முடைய குறுக்குவழி நச்சுநிரலானது அகற்றப்பட்டு அசல் கோப்புகள் திரும்பப் பெறப்படும்.
வழிமுறை 3: பதிவுக் கோப்புகளை மாற்றுதல் பென்ட்ரைவிலிருந்து குறுக்குவழி நச்சுநிரலை(virus ) அகற்று வதற்காக எந்தவொரு மூன்றாம் தரப்பு மென்பொருளையும் நாம் பயன்படுத்த விரும்பவில்லை எனில் இந்த வழிமுறைமிகவும் பயனுள்ளது இதனை செய்வது மிகவும் எளிது அல்லது புரிந்து கொள்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு முக்கியமான அறிவிப்பு கீழேயுள்ள படிநிலையைப் புரிந்துகொண்டால், நாம் இந்த வழி முறையை மறந்துவிட்டு வேறு ஏதேனும் வழிமுறைகளை முயற்சி செய்யலாம். ஏனெனில் இந்த வழி முறையில் ஏதேனும் நாம் தவறான செயலைச் செய்தால், நம்முடைய கணினி சிக்கலில் மாட்டி கொள்ளும்.
1. ctrl + shift + esc ஆகியவிசைகளை சேர்தது அழுத்துவதன் மூலம் செயற்பணிமேலாளரைத்( task manager) திறந்திடுக அல்லது பணிப்பட்டியில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Open Task Manager எனும்வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
2. உடன் விரியும் திரையில் Processes எனும் தாவல்திரைக்குச் சென்று, அதில்wscript.exe என்பதை தேடி கண்டுபிடிக்க கீழே சுட்டியை நகர்த்தி செல்க, பின்னர் End Processes என்பதைக்தெரிவுசெய்து சொடுக்குக..
3. இப்போது “window+R” ஆகிய இரண்டு பொத்தான்களை சேர்த்து அழுத்திஇயங்கசெய்திடுக பின்னர் விரியும் திரையில் “regedit” என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. இது Registry Editor என்பதை திரையில் காண்பிக்கும்.
4. இப்போது HKEY_CURRENT_USER => Software => Microsoft => Windows => CurrentVersion => Run என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
5. பின்னர் விரியும் திரையில் odwcamszas எனும் விசையைதேடிகண்டுபிடித்து அதன் மீதுஇடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியம் சூழ்நிலை பட்டியி delete எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
வழிமுறை 4: Smadav எனும்எதிர்நச்சுநிரலை பயன்படுத்துதல்
பென் டிரைவிலிருந்து குறுக்குவழி நச்சுநிரலை அகற்றSmadav எனும்எதிர்நச்சுநிரல் சிறந்த வழிமுறையாகும். இந்த மென்பொருள் ஒரு அற்புதமான இடைமுகத்துடன் மிகவும் இலகுரக மென்பொருளாகவும் கட்டுப்படுத்த எளிதாகவும்அமைந்துள்ளது. பென் டிரைவை கணினி அல்லது மடிக்கணினியில் செருகும்போது, இது தானாகவே வருடுதல் செய்யத் தொடங்கும்.
1. முதலில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்துகொள்க.
2. நம்முடைய கணினியில் யூ.எஸ்.பி டிரைவைசொருகி நிறுவிய பின்.
3. இப்போது அது தானாக வருடுதல் செய்யத் தொடங்குகிறது.
4. வருடுதல் செய்த பிறகு பாதிக்கப்பட்ட கோப்புகள் மறைக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலைக் காண்பிக்கும்.
5. இப்போது கணினியிலிருந்து எல்லா கோப்புகளையும் எளிதாக நீக்கலாம்.
வழிமுறை 5: WinRAR வாய்ப்பினை பயன்படுத்துதல்
தரவுகளை சுருக்கி கட்டிவைத்திடுவதற்காக நாமனைவரும் WinRAR ஐப் பயன்படுத்துகின்றோம். ஆனால் இது பென்ட்ரைவிலிருந்து குறுக்குவழிநச்சுநிரலை அகற்றுவதை பற்றியசெய்திநம்மில் பலருக்கு தெரியாது. இது ஒரு அற்புதமான இடைமுகமும் வரைகலையையும் கொண்ட இலகுரக மென்பொருளாகும்.
1.நம்மிடம் WinRAR இருந்தால், இரண்டாவது படிமுறைக்குச் செல்க, இல்லையென்றால் முதலில்WinRARபதிவிறக்கம் செய்துகொள்க
2. கணினி அல்லது மடிக்கணினியில் பென் டிரைவைடிரைவைசொருகி நிறுவுகைசெய்க.
3. WinRAR மென்பொருளை செயல்படச்சசெய்து திரையில் தோன்றிடசெய்க.
4. WinRAR இடைமுகத்தில் பென் டிரைவைத் திறந்திடுக.
5. இப்போது நம்முடைய எல்லா கோப்புகளையும் திரையில் காணலாம், அனைத்து கோப்புகளையும் தெரிவுசெய்வதற்காக “ctrl + A” ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக.
6. அனைத்து சரியான கோப்புகளையும் தேர்ந்தெடுத்த பிறகு அதைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து WinRAR கோப்பை உருவாக்கிடுக.
7. இப்போது பென் டிரைவைத் திறந்து மூல கோப்பை வன் வட்டில் நகலெடுத்திடுக. இப்போது தரவுகளின் காப்புப்பிரதி நம்முடைய கைவசம்உள்ளது.
8. இப்போது பென் டிரைவ் தரவுகள் கணினியில் பாதுகாப்பானக உள்ளது அதனால் பென் டிரைவை format செய்திடுக அதன்பின்னர் இப்போது பென் டிரைவ் நச்சுநிரல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும.

ஆண்ட்ராய்டில் திரைபடப்பிடிப்புகளை எடுக்கவும் அவற்றைத் திருத்தவும் பல்வேறு வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு சாதனங்களில் திரைப்படப்பிடிப்பு எடுப்பதற்காக பல்வேறு குறுக்குவழிகள் உள்ளன. நம்முடைய கைபேசியின் திரையின் படப்பிடிப்பு எடுப்பதற்காக வெவ்வேறு குறுக்குவழி வழிகளை வெவ்வேறு ஆண்ட்ராய்டு சாதனங்கள்நமக்கு வழங்கக்கூடும். எனவே, ஆண்ட்ராய்டு சாதனங்கள் வழங்கும் ஒரு சில திரைபடப்பிடிப்பு எடுப்பதற்காக குறுக்குவழிகள் பின்வருமாறு உள்ளன. அவைகளுள் நம்முடைய சாதனத்துடன் இணக்கமான அல்லது வழங்கப்பட்ட ஒன்றை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
1-Power , Volume ஆகிய பொத்தான்களைப் பயன்படுத்துதல் ஆண்ட்ராய்டில் திரையின் படப் பிடிப்புகளை எடுக்க இது மிகவும் பொதுவான வழிமுறையாகும். இதற்காக, நாம் ஒரே நேரத்தில் volume down பொத்தானை யும் power பொத்தானையும் அழுத்த வேண்டும். ஆண்ட்ராய்டில் திரையின் படப்பிடிப்புகளை எடுக்கும் இந்த வழிமுறை வசதியானது அன்று, மேலும் அவற்றை அடிக்கடி அழுத்தினால் சாதனத்தின் பொத்தான்கள் பாதிப்பு உண்டாகும்.
2-திரைபடபடிப்பு (screenshot ),விரைவு அணுகல்( quick access) விசை ஆண்ட்ராய்டு சாதனங்களில் வழங்கப்பட்ட பொதுவான திரையின் படப்பிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதுஆண்ட்ராய்டு சாதனங்களில் திரைபடப்பிடிப்பினை எடுக்க மிக விரைவானதும் எளிதானதுமான வழியாகும். பல்வேறு ஆண்ட்ராய்டு சாதனங்களின் திரையில் விரைவான அமைப்புகளின் வாய்ப்பினை வழங்குகின்றன. நம்முடைய கைசியிலும், விரைவான அமைப்புகள்பட்டியிலும்தீத்துதல்( swipe) செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், screenshot வாய்ப்பினை சொடுக்குதல் மட்டுமேயாகும் நாம் செய்ய வேண்டியது அவ்வளவுதான், உடன் திரையின் படிப்பிடிப்பானது நம்முடைய கைபேசியின் தொகுப்பில்( gallery) சேமிக்கப்படும்.
3- மூன்று விரல்களால் தீத்துதல்( swipe) திரைபடபிடிப்பினை எடுக்க நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்தில் மேலே உள்ள வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இதை முயற்சிக்கலாம். இந்த திரைபடபிடிப்பு சைகைக்கு நாம் கைப்பற்ற விரும்பும் திரையில் மூன்று விரல்களை தீத்துதல்( swipe) செய்ய வேண்டும், அது திரைபடபிடிப்பினை எடுக்கும். எடுக்கப்பட்ட திரைபடபிடிப்பின் நம்முடைய கைபேசியின்தொகுப்பில்( gallery)ல் சேமிக்கப்படும். இந்த சைகை OnePlus, Redmi, Oppo சாதனங்களிலும் மேலும் பலவற்றிலும் கிடைக்கின்றது.
4- Knuckle எனும் சைகை ஒருசில ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் இந்த சைகை கிடைக்கிறது. இந்த சைகையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் திரைபடப்பிடிப்புகளை எடுக்க, நாம் திரைபடப்பிடிப்பினை எடுக்க விரும்பும் உள்ளடக்கத்திற்குச் சென்ற, பின்னர் திரையை இரண்டு முறை தட்டுக. இந்த சைகையை ஹவாய் ஆண்ட்ராய்டு சாதனங்களில் காணலாம்.
5-உள்ளங்கைதீத்துதல் சைகை சாம்சங் போன்ற ஒரு சில ஆண்ட்ராய்டு சாதனங்கள் வழங்கும் மற்றொருதிரைபடபிடிப்பு சைகை, உள்ளங்கை தீத்துதல் சைகையைநமக்கு வழங்குகிறது. இந்த ஆண்ட்ராய்டு சாதனங்களில், ஆண்ட்ராய்டு திரைபடபிடிப்பினை எடுக்க நம்முடைய உள்ளங்கையை திரையில் இடமிருந்து வலமாக நகர்த்த வேண்டும் அல்லது நேர்மாறாக நகர்த்த வேண்டும் அவ்வளவுதான்

6-மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் திரைபடபிடிப்பினை எடுக்க Aoveஇன் உள்ளமைக்கப்பட்ட வழிகள் உள்ளன நம்முடைய ஆண்ட்ராய்டில் திரைபடபிடிப்பினை எடுக்க மேலும் ஒரு சில வழிகளை நாம் விரும்பினால், ஆண்ட்ராய்டு சாதனங்களில் திரைபடபிடிப்புகளை எடுத்துத் திருத்த மேலும் ஒரு சில சிறந்த பயன்பாடுகள் கீழே உள்ளன. இந்த பயன்பாடுகளைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
6.1-இறுதியான திரைபடபிடிப்பு(Screenshot Ultimate) இது ஆண்ட்ராய்டில் திரைபடபிடிப்புகளை எடுத்து அவற்றைத் திருத்துவதற்கான சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாகும். நாம் திரைபடபிடிப்புகளை எடுக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் அவற்றில் திருத்தம்செய்யலாம். இது 16 வெவ்வேறு திரை கைப்பற்றும் வழிகளை வழங்குகிறது என்பதை அறிந்தால் நாம் ஆச்சரியப்படுவோம், சாதனம் வேரூன்றி இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமன்று, இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி திரையைப்படம் பிடிக்கலாம். அவ்வாறு செய்த பிறகு, அவற்றில் திருத்தம் செய்திடலாம். திரைபடபிடிப்புகளில் உரையை வரைந்து சேர்க்க இதுநம்மை அனுமதிக்ன்கிறது. நாம் திரைபடபிடிப்பினை நேரடியாக பயன்பாட்டிலிருந்து அனுப்பலாம்.


6.2-திரையின்ஆசரியர்(Screen Master) இது ஆண்ட்ராய்டில் திரைபடபிடிப்புகளை எடுக்க நாம் பயன்படுத்தக்கூடிய மற்றொருமற்றொரு மூன்றாம் தரப்பு பயன்பாடாகும். இது ஒரு சிறிய அளவிலான பயன்பாடாகும், இதுநம்முடைய கைபேசியில் குறைந்த இடத்தைப் பயன்படுத்தும். திரைபடபிடிப்பினை எடுக்க,நம்முடையகைபேசியை அசைக்கலாம் அல்லது மிதக்கும் பொத்தானைத் சொடுக்குதல்செய்திடலாம். நாம் விரும்பினால் அமைப்புகளை சரிசெய்யலாம். ஆண்ட்ராய்டின்திரைபடபிடப்புகளைத் திருத்தம் செய்திட இதுநமக்கு வழங்கும்திருத்துதல் வசதிகளையும் வழங்குகின்றது. நாம் திரைபடி்பில் உரை, வெட்டுதல், அம்புவரைதல், வட்டம், செவ்வகம் போன்றவற்றைச் சேர்க்கலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் இன்னும் பல அற்புதமானசெயல்களை pixelate செய்யலாம். இது வலைப்பக்க வதியை வழங்குகிறது, இது வலைப்பக்கத்தை இந்த பயன்பாட்டிற்கு நகலெடுக்க பயன்படுகின்றது, மேலும் முழு வலைப்பக்கமும் எளிதாகப்படம் பிடிக்கவும் உதவுகின்றது.


6.3-முதன்மை திரைபடபிடிப்பு(Super Screenshot) ஆண்ட்ராய்டு திரைபடபிடிப்புகளை எடுக்க இது ஒரு சிறந்த பயன்பாடாகும். இது ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச பயன்பாடாகும். இது பயன்படுத்த மிகவும் எளிதானது. திரைபடபிடிப்புகளைத் திருத்துவதற்கான பயன்பாட்டை விரும்புவோருக்கும் அவர்களின் சாதனத்தின் இயல்புநிலை திரைபட பிடிப்பில் குறுக்குவழியுடன் நன்றாக செயல்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழிமறையாகும். இது நம்முடைய சாதனத்தின் இயல்புநிலை திரைபடபிடிப்பினை எடுக்கும் பொத்தான்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கிறது மற்றும் சில கூடுதல் வசதிகளை நமக்கு வழங்குகிறது. எனவே, நாம் செய்ய வேண்டியது, திரைபடபிடப் பினை பிடிக்க 2 வினாடிகளுக்கு volume and power பொத்தானை அழுத்துதல் மட்டுமேயாகும். திரைபடபிடிப்பினைச் சேமிப்பதற்குப் பதிலாக, ஆண்ட்ராய்டு திரைபடபிடிப்பினைத் திருத்துவதற்கான முழுமையான இடைமுகத்தை இது வழங்குகிறது. நாம் திரைபடபிடிப்பினை எடுத்த பிறகு அதில், உரையைசேர்த்தல, வெட்டுதல், திருத்துதல் போன்றவற்றைச் சேர்ப்பது உட்பட அதைத் திருத்த பல வாய்ப்புகளை அது தானாகவே வழங்குகிறது.

6.4-தொடுதிரைபடபிடிப்பு (Touchshot) இதுஆண்ட்ராய்டில் திரைபடபிடிப்புகளை எடுக்க எளிதான, விரைவான வழிமுறையை வழங்குகின்ற மேலும் ஒரு பயன்பாடாகும். மற்ற பயன்பாடுகளைப் போலவே, இதுவும் ஒரு இலவச திரைபடபிடிப்பினை கைப்பற்றும் வழிமுறையாகும். திரையைத் தொடுவதன் மூலம்திரைபடபிடிப்பினை பிடிக்க இது நம்மை அனுமதிக்கிறது அல்லது திரைபடபிடிப்பினை பிடிக்க நம்முடையகைபேசியை அசைக்கலாம். இந்த பயன்பாடு நமக்கு ஏராளமான வசதிவாய்ப்புகளை வழங்குகின்றது. உண்மையில், இது ஒரு திரை பதிவாளரும் கூட, எனவே, நம்முடைய திரையின் நடவடிக்கைகளையும் பதிவு செய்யலாம். திரைபடபிடிப்பு திருத்துல் வசதிகளுடன், திரைபடபிடிப்புகளை எடுக்கும்போது நிலைப்பட்டையையும் மென்மையான விசைப் பட்டியையும் அகற்ற இது நமக்கு உதவுகிறது.நம்முடையகை பேசியில்இந்த பயன்பாட்டிை நிறுவும் போது,இது நம்முடைய திரையில் ஒரு மிதக்கும் பொத்தானைச் சேர்க்கிறது, இதைப் பயன்படுத்தி நம்முடைய ஆண்ட்ராய்டு திரைபடபிடிப்புகளை எடுத்து நம்முடைய திரைநடவடிக்கைகளைகூடப் பதிவு செய்யலாம்


6.5-powersoftஎனும்திரைபடபிடிப்பு பயன்பாடு ஆண்ட்ராய்டு திரைபடபிடிப்பினை எடுக்க சிறந்தஒரு சில பயன்பாடுகளின் பட்டியலின் கடைசி பயன்பாடு இது ஆகும். குறிப்பிடப்பட்ட பிற பயன்பாடுகளைப் போலவே, இந்த பயன்பாடும் அதன் பணியை மிகஅற்புதமாக செய்கிறது. உள்ளார்ந்த உலாவி மற்ற பயன்பாடுகளிலிருந்து தனித்துவமான ஒரு வசதி இதில் உள்ளது. நாம் ஒரு வலைப்பக்கத்தினை திரைபடபிடிப்பு எடுக்க விரும்பினால், இந்த பயன்பாடுகளின் உலாவியைத் திறந்து விரும்பிய வலைப்பக்கத்தின் URL க்குச் செல்க, அங்கிருந்து வலைப்பக்கத்தின் நீளம் எவ்வளவு இருந்தாலும் ஒரே நேரத்தில் முழு வலைப்பக்கத்தின்திரைபடபிடிப்பு எளிதாக எடுக்கலாம்.



எந்தவொரு மென் பொருட் களின் துனையில்லாம லேயே ஐபோனில் செயல்படும் உளாவாளி(Spyic)எனும் பயன்பாடு

திறன்பேசிகளில் ஒரு ஐபோன்ஆனது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுவாக ஐபோனினுடைய வேகமானசெயல்பாடுகளினாலும் கவர்ச்சிகரமான பயனாளர் இடைமுகத் தன்மையினாலும் பொதுமக்கள்அனைவரும் விரும்புகின்றனர். இப்போது நம்மில் பெரும்பாலானவர்கள் நண்பர்களின் அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஐபோன் சாதனத்தில் உளவு பார்க்க விரும்புகின்றனர். ஐபோனில் உளவு பார்ப்பது அதன் மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக நடக்காது.
இப்போது தொழில்முறை குறும்புகாரர்களைப் போன்றஒரு சிலர் எந்தவொரு மென்பொருளையும் கொண்டு எந்தவொரு ஐபோனையும் தாக்குவதாகக் கூறுகின்றனர். கைபேசியிலோ அல்லது கணினியிலோ மென்பொருளை நிறுவுவதன் மூலம் ஐபோனை தாக்குவது புத்திசாலித்தனமாகவும் எளிதாகவும் இல்லை. பயன்பாடுகளை உளவு பார்க்க புதிதாக இருக்கும் ஒருவருக்கு இது சொந்தமாக செய்ய வேண்டிய பணியாகும். எந்தவொரு திறமையையும் கற்றுக்கொள்ளாமல் எந்தவொரு ஐபோன் சாதனத்தையும் உண்மையில் கண்காணிக்க முடியும் என்ற செய்தி அறிவீர்களா?
ஆம், எந்தவொரு மென்பொருளும் அல்லது பயன்பாடுகளையும் நிறுவுகைசெய்திடாமலேயேல் ஐபோன் சாதனத்தில் உளவு பார்க்க தற்போது முற்றிலும் சாத்தியமானசெயலாகும். மக்கள் வழக்கமாக ஐபோனில் உள்நுழைவுசெய்வதற்கு வெவ்வேறு ஆபத்தான நுட்பங்கள் அல்லது தந்திரங்களைச் செய்கிறார்கள், ஆனால் அந்த தந்திரங்கள்எதுவும் செயல்படாது. கைபேசி உளவு பயன்பாட்டைப் பயன்படுத்துவது எந்த நிறுவுகையை தெய்திடாமலும் கற்றல்எதுவும் இல்லாமலும் எந்வொரு ஐபோன் சாதனத்திலும் உளவு பார்க்க அனுமதிக்கின்ற சிறந்த கைபேசி உளவு பயன்பாடுகளில் ஒன்றைப் பற்றி இப்போது காண்போம்
உளவாளி (Spyic) எனும் ஒரு புதுமையான உளவு பயன்பாடு
இதுதற்போது உலகின் பிரபலமான தொழில்முறை உளவு பயன்பாடுகளில் ஒன்றாகும். மேலும்மில்லியன் கணக்கானவர்களின் நம்பிக்கையானதாகவும், மக்கள் தங்களுடைய தினசரி அடிப்படைபணிகளுக்காகவும் இதனை பயன்படுத்திகொள்கின்றனர். பெற்றோர்கள், ஊழியர்கள், நிறுவனங்கள் , கிட்டத்தட்ட மேற்கூறிய அனைவருமே. இந்த உளவு பயன்பாடு மென்பொருள் இல்லாத ஐபோனில் உளவு பார்க்கவும் பயன்படுத்தவும் இதுமிகவும் பயனுள்ளது என்று யாரும்இதற்கு முன்னர் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஐபோனின் கண்காணிப்புக்கு உளவாளி (Spyic) யைப் பயன்படுத்தும்போது மக்கள் எந்த வொரு பிரச்சினையையும் சந்திப்பதில்லை. ஒருசில உளவு பயன்பாடுகள் பயனார்களை ஐபோனில் உளவு பார்ப்பதற்கு முன் கட்டைஉடைக்கின்ற( Jailbreak)பணியை செய்யச் சொல்கின்றன, ஆனால் அவ்வாறான செயல் உளவாளி (Spyic) யில் நடைபெறுவதில்லை. கைபேசி உளவு பார்க்க நம்முடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் சாதனத்தில் Jailbreak ஐ வேரறுக்க வேண்டியதில்லை.
மென்பொருள் இல்லாமல் ஐபோனில் உளவு பார்க்கலாம் உளவாளி (Spyic) ஒரு பயன்பாடு என்றாலும், இது ஒரு வலை அடிப்படையிலான பயன்பாடாகும், இது எந்தவொரு சாதனத்திலும் உள்ள எந்தவொரு இணைய உலாவியிலிருந்தும்கணினிஅல்லது கைபேசியிலிருந்தும் செயல்படுத்தி பயன்பெற முடியும். ஐபோனைப் பொறுத்தவரை உளவு சாதனத்தில் எதையும் நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை. உளவாளி (Spyic) யானது திருட்டுத்தனமான பயன்முறையில் இயங்குகிறது, எனவே எல்லாவற்றையும் மிகவும் பாதுகாப்பாக மாற்றுவதால் நாம் அகப்பட்டுகொள்ளும் வாய்ப்பு பூஜ்ஜிய(%) சதவிகிதமாக உள்ளது. இந்த பயன்பாடு நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் பயன்படுத்த மிகவும் எளிதானதும் எளிமையானதும் ஆகும். முழு உளவாளி (Spyic) யின் மதிப்பாய்வையும் பார்வையிடுவது இந்தகைபேசி உளவு பயன்பாட்டைப் பற்றிய நம்முடைய தவறான எண்ணங்களை அழிக்கும். இந்த உளவு பயன்பாட்டில் 30 க்கும் மேற்பட்ட உளவு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தால் நாம் ஆச்சரியப்படுவோம். இந்த நவீன தொழில்நுட்ப உலகில் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வதிகளும்இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான கைசி உளவு பயன்பாட்டின் முக்கிய உளவு வசதிகள் பின்வருமாறு.
அழைப்புகளின் கண்காணிப்பு: நாம் கண்காணிக்க விரும்பும்ஐபோன் சாதனத்தின் அழைப்பு பதிவுகளின் மீது முழுமையான கண்காணிப்புக் கட்டுப்பாட்டை வழங்கும் அற்புதமான உளவு வசதிகொண்டது.
குறுஞ்செய்தி கண்காணிப்பு: நாம் கண்காணிக்க விரும்பும் ஐபோனின் அனைத்து குறுஞ்செய்திகளையும் அணுகவும், அனுப்பப்பட்ட, பெறப்பட்ட நீக்கப்பட்ட அனைத்து குறுஞ்செய்திகளைப் படிக்கவும் முடியும்.
இருப்பிட கண்காணிப்பு: புவியியல் முகவரி ஒருங்கிணைப்புகளுக்கான முழு அணுகலுடன் GPS அல்லது அருகலை அடிப்படையில் ஐபோனின் இருப்பிடத்தைக் கண்காணிக்கமுடியும்.
மேலே கூறிய வசதிகளை தவிர, உளவாளி (Spyic) இல் மேலும் பல வசதிவாய்ப்புகள் உள்ளன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவப்பட்ட அனைத்து மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் அவைகளால் கண்காணிப்பதை அறிந்தகொள்ளமுடியாமல் கண்காணிக்க முடியும். எனவே, இந்த அற்புதமான கைபேசி உளவு பயன்பாட்டின் மூலம் சமூக ஊடக பயன்பாடுகள், வலை உலாவிகளின் வரலாறு, கிட்டத்தட்ட அனைத்தையும் ஐபோன் சாதனத்தில்இதன் வாயிலாக கண்காணிக்க முடியும்.
இந்த பயன்பாட்டை அதனுடைய முகப்புபக்கத்தினைப் பயன்படுத்தி எந்த வசதிகளுக்கும் பயன்படுத்தலாம். இந்நிலையில்,இந்த உளவாளி (Spyic) யைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் ஒரு ஐபோனை உளவு பார்ப்பதற்காக இந்த உளவாளி (Spyic) யுடன் ஐபோன் கண்காணிப்பைத் துவங்க நாம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு.
இந்த உளவாளி (Spyic) யைப் பயன்படுத்தி ஐபோனில் உளவு பார்ப்பது மிகவும் கடினம் என்றுநம்மில்ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் சரி, ஒரு ஐபோனில் உளவு பார்ப்பது இப்போது இருப்பதைப் போல இது மிகவும் எளிதானதாகவும் வேகமாகவும் இருந்ததில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றுவதுதான்கைபேசி கண்காணிப்பைச் செய்ய நாம் ஒரு ஐபோனைதொட்டு அணுக வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்க.
படிமுறை 1: முதலில், நாம் நம்முடைய இணைய உலாவியைத் திறந்து உளவாளி (Spyic) யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுக. தொடர்ந்து நம்முடைய மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல்லை உள்ளிட்டு நமக்கென தனியாக ஒரு கணக்கினை துவங்க Signup எனும் பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை 2:நமக்கு ஆண்ட்ராய்டு iOS ஆகிய இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். நாம் ஒரு ஐபோன் சாதனத்தைக் கண்காணிக்க விரும்புவதால் iOS ஐத் தேர்ந்தெடுத்திடுக.
படிமுறை 3: இப்போது நாம் உளவுபார்ப்பதற்காக குறிவைக்க விரும்பும் அதே ஐபோன் சாதனத்தில் உள்நுழைந்திருப்போம் அதனால் iCloud கணக்கின் நற்சான்றிதழ்களை( credentials) உள்ளிடுக.
படி முறை4: iCloud கணக்கினை கணினியானது சரிபார்க்க ஒருசில வினாடிகள் காத்திருக்கவும்.ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, கணக்கு உருவாக்கும் செயல்முறை முடிவடைவதை காணலாம்.
வாழ்த்துக்கள், நாம் இப்போது நமக்கென தனியாக ஒரு கணக்கை உளவாளி (Spyic) யில் உருவாக்க முடிந்தது. நாம் எந்த வகையான இணைய உலாவியையும் திறக்கலாம், புதிய உளவாளி (Spyic) கணக்கை உருவாக்க உள்நுழைந்து இலக்கு ஐபோனை உள்ளமைக்க கண்காணிக்க ஆரம்பிக்கலாம். இந்த உளவு பயன்பாடுகள் அனைத்தும் நம்முடைய உளவாளி (Spyic) யின் கணக்கில் காண்பிக்கும்முகப்புதிரையின் இடது பக்கத்தில் பட்டியலிடப் பட்டிருப்பதை காணலாம்.எந்தவொரு பயன்பாட்டையும் பற்றிய மதிப்புரைகளைப் படிப்பதன் மூலம்ஒரு சிலர் திருப்தி அடைவதில்லை, அவர்கள் எப்போதும் அதனை செயல்முறையில் தாங்களே முயற்சிக்க விரும்புவார்கள்.உளவாளி (Spyic) யின் மற்றொருகூடுதல் நன்மை என்னவென்றால், இது உளவாளி (Spyic) யின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உள்ள மாதிரிபலக தாவல் திரைக்கு செல்வதன் மூலம் நாம் எளிதாகக் காணக்கூடிய நேரடி இணைய ‘மாதிரி(Demo )’ பதிப்பை வழங்குகிறது. இதைப் பார்வையிடுவதன் மூலம் இந்த பயன்பாடு எவ்வாறெல்லாம் இயங்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
தற்போதப முழு உளவாளி (Spyic) கைபேசி உளவு பயன்பாட்டை விவரங்களில் மதிப்பாய்வு செய்துள்ளோம், தரத்தின் அடிப்படையிலும் தொழில்முறை உளவு சேவைகளின் அடிப்படையிலும் வேறு எந்தவொரு உளவு பயன்பாடும் உளவாளி (Spyic) யை விட சிறந்தது அன்று என கூறலாம். உளவாளி (Spyic) யின் ஒவ்வொரு வதியும் சேவையும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது.இதில் எந்த ஆபத்தும் இல்லை மேலும் கைபேசி கண்காணிப்பைத் துவங்க Root அல்லது Jailbreak வகையான செயல்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உளவாளி (Spyic) பயன்பாட்டின் திருட்டுத்தனமான பயன்முறையானது பயனர்களுக்கு ஐபோன் சாதனத்தில் உளவு பார்ப்பதை யாரும் கண்டறிய மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே நாம் எதற்காக காத்திருக்கவேண்டும்ள? உளவாளி (Spyic) யின் தளத்தைப் பார்வையிட்டு, தேவைகளுக்கு ஏற்ப விரும்பும் ஐபோன் சாதனத்தைக் கண்காணிக்கத் தொடங்குக

இணைப்பில்லாத போதும் இணையதளங்களை பார்வையிடுவதற்கேதுவாக அவைகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது .


இன்றைய காலகட்டத்தில், நமக்கு இணைய இணைப்பு இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கையே இல்லையென்ற நிலைக்கு தள்ளப்பட்டு நாமெல்லோரும் வாழ்ந்து வருகின்றோம். அதிலும் பெரும்பாலான நேரங்களில், நாம் அதிவேகமான இணைய அணுகலை பயன்படுத்தி கொண்டிருக்கின்றோம்.
இந்த அதிவேக இணையஅனுகலானது நாம் ஒரு விமானத்தில் பயனித்து கொண்டிருந்தாலும் அல்லது சொந்த நாட்டில் தாத்தா பாட்டி ஆகியோர்களின் வீட்டில் இருந்தாலும், யூடியூப் கானொளிகளை எளிதாக வெள்ளோட்டம் செய்ய போதுமானதாகும். இந்த நவீண வாழ்க்கையானது எப்போதாவது நம் அனைவரையும் அருகலை 4 ஜி அலைவரிசை ஆகியவை அடைய முடியாத இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்கு நாம் தயாராக வேண்டும். ஆம், அது நடக்கலாம். இணைப்பில்லாத போதும் வலைத்தளங்களைப்பார்த்து மகிழ அவைகளை பதிவிறக்கம் செய்திடலாம்.
. கவலைப்படாதீர்கள். இது நேரடியான எளிதான பணியாகும்.இணைப்பில்லாத போதும் இணைய தளங்களை பார்வையிடுவதற்கேதுவாக அவைகளை பதிவிறக்கம் செய்வதற்கான பயன்பாடுகள் பின்வருமாறு
1. HTTrack.இது வலைத்தளங்களைப் பதிவிறக்குவதற்கான சிறந்த மதிப்பிடப்பட்ட பயன்பாடாகும். பயன்படுத்த எளிதானது தளம் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கும் அமைப்புகள் மூலம் நம்மைப் பின்தொடரும்.மேலும், பதிவிறக்குவதற்கு எந்தெந்த கோப்புகளைத் தவிர்க்கலாம் என்பன போன்ற பிற குறிப்புகள். ஒரு குறிப்பிட்ட பதிவு பதிவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டால், நாம் அதை எளிதாகத் தவிர்க்கலாம் அல்லது செயல்முறையை ரத்து செய்யலாம்.இணைப்பில்லாதபோதும் வலைத்தளங்களைப்பார்வையிடுவதற்கு பதிவிறக்குவதற்கான படிமுறைகள்.
படிமுறை 1. முதலில்,இதிலுள்ள பதிவிறக்கம்செய்க ( download)எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் மூலம்இந்த மென்பொருளைப் பதிவிறக்கவும்
படிமுறை 2. அவ்வாறான பதிவிறக்கம் செய்திடும் பணிமுடிந்ததும் அதை நிறுவுகை செய்திடுக.
படிமுறை 3. பின்னர் HTTrack எனும் இந்த பயன்பாட்டினை திரையில் தோன்றசெய்துஅதில், Add URL. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.
படிமுறை 4. தொடர்ந்து விரியும் திரையில் நாம் பதிவிறக்கம்செய்யவிரும்பும் இணையதளத்தின் URL முகவரியை அதில் உள்ளீடுசெய்திடுக.
படிமுறை 5.அதன்பின்னர் Set Options. எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் நம்முடைய விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து மாற்றலாம். பின்னர், Next.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
படி முறை6. அதனை தொடர்ந்து நாம் தெரிவுசெய்த இணையதளபக்கத்தின் பதிவிறக்க பணி நடந்து கொண்டிருப்பதை காணலாம் நாம் விரும்பிய இணையதளபக்கத்தின் கோப்புகள்அனைத்து் பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன். “index.html” க்கு ஒத்த கோப்பைப் பயன்படுத்திஅவ் வலைத்தளத்தை அதன் மூலத்தில் திறந்து பார்வையிடலாம்.

2. Getleft இதுஅதனுடைய இடைமுகத்திற்கு நவீன புதிய உணர்வைக் கொண்டுள்ளது. இணைப்பில்லாத போதும் வலைத்தளங்களைப்பார்வையிடுவதற்கு பதிவிறக்குவதற்கான படிமுறைகள்.
படிமுறை 1. முதலில் download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம்இந்த Getleftஎனும் பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்திடுக.
படிமுறை 2. பின்னர் இந்த பயன்பாட்டினை செயல்படச்செய்து அதன் துவக்கத்திரையில் , நாம் பதிவிறக்கம்செய்திட விரும்பும் இணையதளத்தின் URL முகவரியை விரைவாக உள்ளீடு செய்து “Ctrl + U”ஆகிய விசைகளை சேர்த்து அழுத்திநேரடியாக நாம்விரும்பும் கோப்பகத்தில் சேமித்துகொள்க
படிமுறை 3. இவ்வாறு நாம் விரும்பும் இணையபக்கத்தை பதிவிறக்கம்செய் வதற்கு முன்,அதற்காக எந்தெந்த கோப்புகளை பதிவிறக்க விரும்புகின்றோம்என நம்மிடம் கோரும் தேவையானவற்றை தெரிவுசெய்திடுக .
படிமுறை 4. அல்லதுNextஎனும் பொத்தானைத் தெரிவுசெய்து சொடுக்கு,உடன் நாம் விரும்பிய இணையதளபக்கத்தின் பதிவிறக்கம் தொடங்கும்.
படி முறை5. இப்போது பதிவிறக்கும் பணி நடைபெறுவதை காணலாம். பதிவிறக்கம் முடிவடைந்ததும் அவ் வலைத்தளத்தை அதன் திறந்து பார்வையிடலாம்.

3. Pagenest இது HTTrack , Getleft ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்ததை போன்று செயல்படுகின்றது
பின்வருமாறான படிமுறைகளைப் பின்பற்றி இதனை பயன்படுத்தி வலைத்தளத்தைப் பதிவிறக்கம்செய்திடுக.
படி முறை1. முதலில் download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம்இந்த Pagenest எனும் பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்திடுக
படி முறை2.பின்னர் இந்த பயன்பாட்டினை செயல்படச்செய்து அதன் துவக்கத்திரையில் Addressஎனும் தாவல் திரைக்கு சென்று நாம் பதிவிறக்க விரும்பும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடுக.
படிமுறை 3.நாம்பதிவிறக்கம்செய்திடவிரும்பும் வலைத்தளத்தின் பெயர்,அதனுடைய URL முகவரி,அதனை சேமிக்கப்பட வேண்டிய இடம். போன்ற விவரங்கள் நம்மிடம் கோரும்அவைகளை மிகச்சரியாக உள்ளீடுசெய்திடுக.
படிமுறை 4. அதனைதொடர்ந்து Range எனும் தாவலின் திரைக்குசென்று அதில் இருந்து ஒருசில விருப்பங்களைத் தேர்ந்தெடுத்திடுக.
படிமுறை 5. அனைத்தும் சரியாக இருக்கின்றதுஎனும்போது , Ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் நாம் விரும்பிய இணையதளமானது பதிவிறக்கம் ஆவதைகாணலாம் பதிவிறக்கபணி முடிவடைந்ததும், பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பைத் திறந்து அதனை பார்வையிடுக

  1. Cyotek WebCopy இது நேரடியாக பயன்படுத்த எளிதான ஒரு மென்பொருளாகும் . இணைப்பில்லாத போதும் வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்கு பதிவிறக்குவதற்கான படிமுறைகள் பின்பற்றிடுக.
    படிமுறை 1.முதலில் download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம்இந்த Cyotek WebCopyஎனும் பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம்செய்து நிறுவுகைசெய்திடுக ம்.
    படி முறை2. நாம் இணைப்பில்லாத போது காணவிரும்பும் தளத்தையும் அதனை சேமிக்க கோப்புறையைச் சேர்த்திடுக.
    படிமுறை 3. நாம் விரும்பும் வலைத்தளத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்க .
    படி முறை 4 . இப்போது பதிவிறக்கும் பணி நடைபெறுவதை காணலாம். பதிவிறக்கம் முடிவடைந்ததும் அவ் வலைத்தளத்தை அதன் திறந்து பார்வையிடலாம்.

Previous Older Entries