விலைஅதிகமான கணினிபயன்பாட்டிற்கு மாற்றான 2018 ஆம் ஆண்டின் சிறந்த கட்டற்ற பயன்பாடுகள்

பொதுவாக எந்தவொரு கட்டற்ற பயன்பாட்டினையும் பயன்படுத்தி கொள்வதற்காகவென தனியாக சிறப்பு விதிமுறைகள் சட்ட திட்டங்கள் எதுவுமில்லை அதைவிட ஒற்றர்கள் யாரும் நம்மை பின்தொடரமாட்டார்கள் யாருடனும் எப்போது வேண்டு மானாலும் அதிகசெலவில்லாமல் இவைகளை பகிர்ந்து கொள்ளலாம் அதிலும் விண்டோ ,லினக்ஸ் மேக்ஸ் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் இவை செயல்படும் திறன்மிக்கவை அவைகளுள் இந்த 2018 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த கட்டற்ற பயன்பாடுகள் பின்வருமாறு
1.Amarok என்பது பயன்படுத்த எளிதான மிகச்சிறந்த இசைக்கருவியாகும் இணைய இசைச்சேவையுடன் ஒத்தியங்கும் திறன்மிக்கது இயக்கநேரஇசை பட்டியலாகவும் குறிப்பிட்ட இசையை மட்டும் செயல்படுமாறு குறித்திடலாம் என்பன போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகள் இதி்ல் உள்ளன இது iTunes எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றாக விளங்குகின்றது மேலும் விவரங்களுக்கு https://amarok.kde.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க
2.BRL-CADஎன்பது AutoCAD எனும்தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது பொறியியல் துறைக்கு அடிப்படையான வரைகலைவரைபடங்களை வரைவதற்கும் ஆய்வுசெய்வதற்கும் மிகஅடிப்படையாக உதவுகின்றது மேலும் விவரங்களுக்குhttp://brlcad.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க
3.PDFCreatorஎன்பது எந்தவொரு பயன்பாட்டின் கோப்பினையும் கையடக்க PDF கோப்பாக உருமாற்றிடவும் அதனோடுமின்கையொப்பத்தை சேர்த்தல் ,மறையாக்கம் செய்தல் போன்ற செயல்களையும் சேர்த்து செயல்படுத்திடு- கின்றது இது Adobe Acrobat எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது மேலும் விவரங்களுக்கு http://en.pdfforge.org/pdfcreator எனும் இணையமுகவரிக்கு செல்க
4.Cinelerra என்பது கானொளி காட்சி கோப்புகளை கையாளுவதற்குஉதவிடும் மிகச்சிறந்த கட்ற்ற பயன்பாடாகும் இது Adobe Premiere Pro எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது மேலும் விவரங்களுக்கு http://www.heroinewarrior.com/cinelerra.php எனும் இணையமுகவரிக்கு செல்க
5.Psiphon.என்பது VPN எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது இது VPN, SSH , HTTP ஆகியவற்றை ஆதரிக்கின்றது இணையத்தை எளிதாக அனுக உதவுகின்றது மேலும் விவரங்களுக்கு https://psiphon3.com/en/index.html எனும் இணையமுகவரிக்கு செல்க
6.HandBrakeஎன்பது எந்தவொரு கோப்பினையும் கானொளி படகாட்சி கோப்பாக எளிதாக உருமாற்றுகின்றது அதிலும் படகாட்சியின் தரத்தினை குறைக்காமல் கானொளி படகாட்சி கோப்பின் அளவை குறைத்து கையாள உதவுகின்றதுஇது Nero Recode 2 எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது மேலும் விவரங்களுக்கு https://handbrake.fr/ எனும்இணையமுகவரிக்கு செல்க
7.Quanta Plusஎன்பது ஒரு சிறந்த கட்டற்ற இணையவடிவமைப்பு கருவியாகும் WYSIWYG எனும் அடிப்படையில் பதிப்பித்தல் பலஆவணங்களிலிருந்துஅனுகுதல் மாதிரிபடிமங்கள் போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டதுஇது Adobe Dreamweaver எனும் தனியுடமை பயன்பாட்டிற்கு மாற்றானது மேலும் விவரங்களுக்கு https://handbrake.fr/ எனும் இணைய முகவரிக்கு செல்க
8.NixNoteஎன்பது குறிப்பெடுக்க உதவும் அதனோடு உருவப்படகோப்புகளையும் ஒலிக்கோப்புகளையும் ஆவணங்களையும் சேர்த்து சேமித்துவைத்துகொள்ளஉதவிடும் கட்டற்ற பயன்பாடாகும்.இது Evernote, Microsoft One Note ஆகிய தனியுடமை பயன்பாடுகளுக்கு மாற்றானது மேலும் விவரங்களுக்கு http://www.nixnote.org/ எனும் இணையமுகவரிக்கு செல்க

நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்காக கூகுளிற்கு மாற்றானQwant எனும்தேடுபொறியை பயன்படுத்தி கொள்க

கூகுளுக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் (Bing) எனும்தேடுபொறியும்,ரஷ்ய இணையதளமான யான்டெக்ஸ் (Yandex) என்பதும்,செக்குடியரசின் செஸ்னம் (Seznam) எனும் தேடுபொறியும், ஜெர்மன் ஸ்பெயின் நாடுகளின் கன்டூட் (Conduit) ,டீஆன்லைன் (T-Online) ஆகிய தேடுபொறிகளும், நெதர்லாந்து நாட்டின் வின்டென் (Vinden.nl)என்பதும், பின்லாந்தில் ஓநெட் (Onet.pl)என்பதும் ,இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஆரஞ்சு (Orange) என்பதும் இந்த கூகுளிற்கு மாற்றான அந்தந்த நாடுகளின் உள்ளூர் இணையதேடுபொறி தளங்களாகவிளங்குகின்றன அவ்வாறானவைகளுள் கூகுளிற்கு மாற்றான தனிநபர்களின் தகவல்களை பொதுவெளியில் மற்றவர்களுக்கு விற்றிடாமல் பாதுகாப்பாக அதிலும் நம்முடைய பிள்ளைகள் மிகப்பாதுகாப்பாக இணையத்தில் தேடுவதற்கு உதவவருவதுதான் Qwant எனும் தேடுபொறியாகும் இது நான்குவகை சேவைகளை வழங்குகின்றது தேடுகின்ற நம்மிடம் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் கோரிபெறாமல் தனிநபர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்துகொண்டு அவரவர்விரும்பும் எந்தவொன்றயும் தேடிட உதவிடும் Qwant Search எனும் சேவையாகும் இதேபோன்று தேடிடும் பணியை கணினிமட்டுமல்லாத கைபேசியிலும் இதே கொள்கையின் அடிப்படையில் நாம் எந்தவிடத்திலிருந்தும் அவரவர்விரும்பும் எந்தவொன்றயும் தேடிட Qwant mobile எனும் சேவையாகும் . நம்முடைய பிள்ளைகள் கெட்டழிந்து போகாமல் பாதுகாப்பாக கல்வி விளையாட்டு தொடர்பாக தேடிடஉதவுவதுதான் Qwant Junior எனும் சேவையாகும் நாம் தேடிஎடுத்த தகவல்களை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுவதுதான் Qwant Boards எனும் சேவையாகும் இதனுடைய Tracking protectionஎன்பதை ஃபயர்ஃபாக்ஸ் இணையஉலாவியின் விரிவாக்கமாக இணைத்து கொண்டு நம்முடைய இணையஉலாவலை வேறுயாரும் அறிந்து கொள்ளாமல் பாதுகாத்து கொள்ளலாம் விரைவாக அனுகுவது குறிப்பிட்ட பக்கத்தை குறித்து வைத்து கொள்வது பின்தொடர்பவர்களை பாதுகாப்பது ஆகிய அனைத்து செயல்களையும் இதிலுள்ள Qwant எனும் ஒரேயொருபொத்தானை சொடுக்குவதன் வாயிலாக பயன்படுத்தி கொள்ளலாம் நாம் அடிக்கடி பயன்படுத்திடும் இணையபக்கங்களை Bookmarksசெய்து விரைவாக சென்றடையலாம் இதனை நம்முடைய இணையஉலாவியில் இயல்புநிலை தேடுபொறியாக செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இதனை பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்வதற்கு https://www.qwant.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து எச்சரிக்கையாக பதிவிறக்கம் செய்திடுக

ஆண்ட்ராய்டுசெயல்படும் கைபேசிகளை வைத்துள்ள பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தேவையான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து தாம் விரும்பும் பயன்பாடுகளை தங்களுடைய சாதனங்களில் பதிவிறக்கம்செய்திடும்போது சிறிது கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கப்படுகின்றார்கள் ஏனெனில் அதனோடு ஏராளமான தீங்கிழைக்கும் பயன்பாடுகளும் (malicious apps) சேர்ந்து நம்முடைய சாதனத்திற்குள் நம்மை அறியாமலேயே வந்து நம்முடைய சமுதாய வலைபின்னல் கணக்குகளையும் மிகமுக்கியமாக நம்முடைய இணையவங்கி கணக்குகளின் உள்நுழைவு தகவல்களையும் அபகரித்து கொள்கின்றன அதனோடு இவை போலியான உரைகளின் வாயிலாக இந்த கணக்கினை அபகரிக்க செய்கின்றனஇவை battery managers, phone cleaners, device speed boosters, horoscope-themed apps என்பனபோன்ற பயன்பாடுகளுடன் நம்முடைய ஆண்ட்ராய்டு சாதனத்திற்குள் உள்புகுந்து நாசவேலைசெய்கின்றன அதனால் கூகுள் ப்ளேஸ்டேரிலிருந்து நாம் விரும்பும் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யமுயலும்போது அவை பாதுகாப்பான பயன்பாடுகளா என அறிந்து தெளிந்து சிறிது எச்சரிக்கையாக கையாளுக என அறிவுறுத்தப்படுகின்றது

புதிய ராஸ்பெர்ரி பிஐ3 மாதிரிA+ என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது

மிகச்சிறிய அளவில் குறைந்த எடையில் ethernetஇல்லாமல்WiFi உடனும்,ஒன்றிற்கு மேற்பட்ட USB portsஉடனும், கூடுதலான RAMஉம் சேர்த்து மிககுறைந்த மின்சாரத்தில் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இது 25 அமெரிக்க டாலர் எனும் மிகக்குறைந்தவிலையில் கிடைக்கின்றது ஆயினும் கல்விபணிக்கெனில் கட்டணமில்லாமலும் கிடைக்கின்றது இதனை கொண்டு குறைந்த இடவசதியில் மிகுதியான பயன்களை கொண்ட பல்லூடக மையமாக நாம் கட்டமைத்து கொள்ள முடியும் அதுமட்டுமல்லாதுபடத்திலுள்ளவாறு மிகச்சிறியஅளவு இயந்திர மனிதனைகூட இதன் வாயிலாக மிகஎளிதாக விரைவாக கட்டமைவு செய்து தானியங்கியான பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளமுடியும்


மேலும் விவரங்களுக்கு https://www.raspberrypi.org/ எனும் இணையமுகவரிக்கு சென்று அறிந்து பயன்படுத்தி கொள்க

வியாபார நிறுவனங்களுக்கானGoogle Maps எனும் புதிய சமுதாய வலைபின்னல் ஒரு அறிமுகம்

தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் ட்விட்டரானது தட்டுதடுமாறிகொண்டிருக்கின்றது ஃபேஸ்புக்கானது தவித்துகொண்டிருக்கின்றது இந்நிலையில் Google Maps எனும் புதிய சமுதாய வலைபின்னல் ஒன்று வியாபாரத்திற்காக மட்டுமென வெளியிடபட்டுள்ளது பொதுவாக நுகர்வோரின் பார்வையில் சமுதாயவலைபின்னல்கள் மீம்ஸ்களையும் உருவப்படங்களையும் சுயஉருவப்படங்களையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் சிறந்த கருவிகளாக விளங்குகின்றன
ஆயினும் வியாபார நிறுவனங்களை உயர்த்துவதற்கும் தங்களுடைய வியாபார பெயரை பாதுகாப்பதற்குமான தளமாக இந்த சமுதாயவலைபின்னல் விளங்குகின்றது மேலும் தங்களுடைய உற்பத்தி பொருட்களின் சேவைகளின் விவர தகவல்களை நுகவோர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் உலகிலுள்ள பல்வேறு வாடிக்கையாளர்களுடன் இதுகுறித்து விவாதங்களில் பங்குகொள்ளவும் ஒரு சிறந்தகளமாக இந்த சமுதாயவலைபின்னல் விளங்குகின்றது ஏற்கனவே ஒவ்வொரு வியாபார நிறுவனத்திற்கென தனித்தனியான இணையதள பக்கங்கள் இருக்கும்போது இந்த சமுதாயவலைபின்னல் கட்டமைப்பு தேவையா என்ற வினா நம்அனைவரின் மனதில் எழும் நிற்க. தேவைதான் ஏனெனில் சமுதாயவலைபின்னலின் வாயிலாக நுகர்வோர்கள் அனைவரும் தங்களுக்குள் குறிப்பி்ட்ட நிறுவனத்தின் உற்பத்தி பொருளை பற்றி அல்லது சேவையைபற்றி விவரங்களையும் அதனுடைய குறைநிரைகளை பற்றியும் அதனுடைய வசதி வாய்ப்புகளை பற்றியும் தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிகொள்வதன் வாயிலாக குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தி பொருள் அல்லது சேவையானது சந்தையில் நிலையாக நிற்பதற்கும் காணாமல் போவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைகின்றது இவ்வாறான நிலையில் ட்விட்டர் ஃபஸ்புக் போன்றவை வியாபார நிறுவனங்களுக்கு பொருத்தமான சரியான தளமாக அமைவதில்லை ஏனெனில்இவைகளை பயன்படுத்துபவர்கள் தங்களுக்குள் பொய்யான போலியான தகவல்களை உடனுக்குடன் பரிமாறிகொள்கின்றனர் அதைவிட வெறுப்பாளர்கள், இனவெறியர்கள், தவறாக வழிநடத்துபவர்கள், பயங்கரவாதிகள், ட்ரால்கள், ஸ்பேமர்கள் ஆகியோருக்கான மிக மோசமான கவர்ச்சி தளமாக இவை விளங்குகின்றன மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தைமோசமாக கையாளுதல், கண்காணித்தல், துஷ்பிரயோகம் செய்தல், நேர்மையற்ற வழியில், இவை அந்நிறுமத்தினை தகுதியின்மை ஆக்குகின்றன இவ்வாறான மோசமான சூழலில் இவை வியாபார நிறுவனங்களுக்கு பொறுத்தமானதல்ல அதனால் வியாபார நிறுவனங்களுக்கு வியாபார நிறுவனத்தை உயர்த்துவதற்கும் தங்களுடைய பெயரை பாதுகாப்பதற்குமான இடமாக வும் தங்களுடைய உற்பத்தி பொருட்களின் சேவைகளின் விவர தகவல்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளவும் உலகிலுள்ளபல்வேறு வாடிக்கையாளர்களுடன் இதுகுறித்து விவாதங்களில் பங்குகொள்ளவும் ஒரு சிறந்தகளமாக திகழுமாறு Google Maps எனும் புதிய சமுதாயவலைபின்னல்வெளியிடபட்டுள்ளது இதிலுள்ள Follow எனும் பொத்தானின் வாயிலாக குறிப்பிட்ட வியாபாரநிறுவனத்தை பின்பற்றிசெல்லவும் For You எனும் தாவிப்பொத்தானின் மூலம் அவ்வாறானவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளவும் My Business எனும் பொத்தான்வழியாக குறிப்பிட்ட விவரங்களை கொண்டவர்களை மட்டும் பின்தொடருமாறு சரிபார்ப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும் தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் உதவதயாராக இருக்குமாறு கட்டமைக்கப்டுள்ளன .மேலும்விவரங்களுக்கு https://www.google.com/business/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

லினக்ஸ் இயங்கும் கணினிகளுக்கும் விண்டோ இயங்கிடும் கணினிகளுக்கும் இடையே கோப்புகளை பரிமாறிக்கொள்ளுதல்

ஒரு வளாக பிணையத்தின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ள லினக்ஸ் இயங்கும் கணினிகளுக்கும் விண்டோ இயங்கிடும் கணினிகளுக்கும் இடையே கோப்புகளை பரிமாறிகொள்ள உதவ வருவதுதான் Samba எனும் பயன்பாடாகும் புதியதாக வெளியிடப்படும் தற்போதைய அனைத்து விண்டோ இயக்கமுறைமைகளிலும் லினக்ஸ் இயக்க முறைமைகளிலும் இந்த Samba எனும் பயன்பாடானது முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்டே கிடைக்கின்றன
இதனை பயன்படுத்திகொள்வதற்காக நம்முடைய விண்டோஇயங்கும்கணினியில் கட்டுப்பாட்டு பலகத்தினை திறந்து கொண்டு அதில் Network and Sharing எனும் வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Change Advanced Sharing Settingsஎனும் வாய்ப்பினைதெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Turn on Network Discovery , Turn on File and Print Sharing ஆகிய வாய்ப்புகளை தெரிவுசெய்து கொள்க
பின்னர் கணினியின் காலியானதிரையில் இடம்சுட்டியை வைத்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Properties எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் Propertiesஎனும் திரையில் Sharing எனும் தாவிப் பொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக அதில் Share… எனும் பொத்தானிற்கு மேல்பகுதியில் \\YOURCOMPUTERNAME\Users\YourUserName\ShareFolderName. என்றவாறு இருக்கும் இது லினக்ஸ் கணினிக்கானதாகும் பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம் அதனால் Share… எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
லின்க்ஸ் கணினியில் Konqueror என்பதை பயன்படுத்துவதாக இருந்தால்
பெரும்பாலான லினக்ஸ் இயங்கும் கணினிகள் KDE எனும்முகப்புதிரையையும் Konqueror எனும் கோப்பு பகிர்ந்து கொள்ளும் மேலாளரையும்கொண்டிருக்கின்றன அவற்றின் முகப்புத்திரையில் K எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயல்படுத்திடுக பின்னர் Internet -> Konqueror.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Network Folders எனும் இணைப்பை தெரிவு செய்து சொடுக்குக அல்லது முகவரி பட்டையில்remote:/ என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் Samba Shares எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து நம்முடைய Windows Home பணிக்குழுவின் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Workgroup எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் நம்முடைய கணினியின் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் திரையில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் பயனாளரின் பெயர் கடவுச்சொற்களை மிகச்சரியாக உள்ளீடு செய்து கொண்டு இறுதியாக OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
லினக்ஸ் கணினியில் Nautilus என்பதை பயன்படுத்துவதாக இருந்தால்
லினக்ஸ் இயங்கும் கணினிகள் GNOME எனும்முகப்புதிரைகொண்டுள்ள கணினிகளில் அந்த முகப்பத்திரைக்குசெல்க அதில் Nautilus எனும்கோப்பு பகிர்ந்து கொள்ளும் மேலாளரை செயல்படுத்திடுக பின்னர்File => Connect to Server…=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துசெயற்படுத்திடுக அதன்பின்னர்தோன்றிடும் திரையில்Service type எனும் கீழிறங்கிடும் பட்டியை விரியச்செய்து அதில் Windows share எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Serverஎனும் புலத்தில் நம்முடைய விண்டோ இயங்கிடும் கணினியின் பெயரை உள்ளீடுசெய்து கொண்டு Connect எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு பதிலாக Nautilus என்பதன் முகவரிபட்டையில் smb://YOURCOMPUTERNAME/Users/YourUserName/ShareFolderName எனஉள்ளீடுசெய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக இதில் முக்கியமாக smb: என்பதற்கு பின்புறம் \\என்பதற்கு பதிலாக //என்பதாக இருசாய்வுக்கோடுகள்இருக்கவேண்டும் என மனதில்இறுத்திகொள்க

Kodi எனும் இயக்கமுறைமையை கொண்டு Raspberry Pi ஐ நம்முடைய வீட்டின் பல்லூடக மையமாக மாற்றியமைத்துகொள்க

நம்முடைய வீடுகளில் கணினியைபல்லூடக மையமாக அமைப்பதற்கு மிகபொருத்தமாக இருப்பது Kodi எனும் கட்டற்ற பயன்பாடாகும் அதிலும் Raspberry Pi ஐ சேர்த்து பல்லூடகமையமாக அமைப்பது செலவு குறைவான எளிதானசெயலாகும் இதற்கு தேவையானவை Raspberry Pi 3B+அல்லது சமீபத்திய வெளியீடு இரண்டாவதாக விருப்பப்பட்டால் USB Wi-Fi dongle என்பது மூன்றாவதாக HDMIஎனும் இணைப்பு கம்பி நான்காவதாகஇந்தRaspberry Pi 3B+ இற்கு பொருத்தமான மின்சாரம்வழங்கும் வாயில்கள் ஐந்தாவதாக 8 GB அல்லது அதற்குமேலும் நினைவகத்தொகொண்ட MicroSDஎனும் அட்டை ஆகியவைமட்டுமேயாகும்

நாம் நம்முடைய Raspberry Pi இல் Raspbian Jessieஎன்பதை செயல்படுத்துபவராக இருந்தால் மிகஎளிதாக கட்டளைவரி சாளரத்தை திறந்து கொண்டு
sudo apt-get install kodi
எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக தொடர்ந்து
sudo nano /etc/default/kodi
எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் விரியும் திரையில்
ENABLED=1
என்றவாறு ENABLEDஅமைவை மாற்றியமைத்திட்டு Ctrl + Z ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி இந்த அமைவினை சேமித்து வெளியேறுக அதற்கு பதிலாக Kodi எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளைவரி சாளரத்தை திறந்து கொண்டுkodi எனும் கட்டளை வரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக வேறொரு வகையில் kodiஎனும் இயக்கமுறைமையை Raspberry Pi இல் நிறுவுகை செய்திட LibreELEC, OpenElec ,OSMC.ஆகிய மூன்று வாய்ப்புகள் தயாராகவுள்ளன முதலாவதற்கான libreelec.tvஎனும் கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க இரண்டாவதற்கான openelec.tvஎனும் கோப்பினை Raspberry Pi இல்செயல்படும் NOOBS எனும் பயன்பாட்டின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்க.அவ்வாறே மூன்றாவதின் osmc.tvஎனும் கோப்பினைRaspberry Pi இல்செயல்படும் NOOBS எனும் பயன்பாட்டின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்க

அடுத்து etcher.io எனும் பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து நம்முடைய MicroSDஎனும் அட்டையில் நிறுவுகைசெய்து கொள்க இந்த அட்டையானது நம்முடைய கணினியுடன் card reader பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி கொள்க Select image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Select drive என்பதன் கீழ்நாம் தெரிவுசெய்தது சரியான இயக்ககமாவென உறுதிபடுத்திகொண்டு Flash என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் MicroSDஎனும் அட்டையில் Etcher எனும் பயன்பாடானது OpenElec அல்லது OSMC image கோப்பு எழுதப்படும் செய்தியை திரையில் பிரதிபலிக்கும்


இந்த பணி முடிவடைந்ததும் MicroSDஎனும் அட்டையை கணினியிலிருந்து வெளியிலெடுத்து Raspberry Pi உடன் இணைத்திடுக உடன் இந்த Raspberry Pi செயல்படச்செய்தால் kodiஎனும் இயக்கமுறைமையை Raspberry Pi இல் செயல்படத்தயாராகவிடும்

தொடர்ந்து நல்ல தரமான படத்தையும் ஒலியையும் கொண்டுவருவதற்காக Ethernet கம்பியை பயன்படுத்திகொள்க அருகலை இணைப்பு தேவையில்லை தொடர்ந்து சரியான USB வாயிலில் HDMI கம்பியின் வாயிலாக தரமான ஒலியை பெறுவதற்கு Full-HD PCM5122 Amplifier X400 Expansion Board என்பதைபயன்படுத்தி கொள்க IR receiver ஐ இணைத்து தொலைவிலிருந்து கட்டுபடுத்துவதற்காக IR Remoteஆக பயன்படுத்தி கொள்க பல்லூடக கோப்புகளை கையாள 8GB microSD அட்டையே போதுமானதாகும் 64GBஅளவு அட்டையில் பல்லூடகம் சரியாக செயல்படாது அதனால் தேவையில்லை SATA இயக்ககம் வாயிலாக 8GB microSD அட்டையை Raspberry Pi இல் இணைத்து கொள்க இறுதியாக Niche எனும் கூடுதல் இணைப்பை ( add-ons) ஏற்படுத்தி YouTube, Hulu, Spotify, BBC iPlayer போன்றவைகளை செயல்படச்செய்து கண்டுகளிக்கலாம் இந்தபல்லூடகத்தை உடனடியாக நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் அல்லது படுக்கைஅறையில் உடன் கட்டமைத்துபயன்படுத்திக் கொள்க

Previous Older Entries