Agena எனும் கட்டற்ற பயன்பாடு ஒரு அறிமுகம்

Agenaஎன்பது இரவு நேர வானத்தில் தோன்றிடுகின்ற பத்தாவது பிரகாசமான நட்சத்திரமாகும், மேலும் 1960 களில் நாசாவின் ஜெமினி பயணங்களின் போது பயன்படுத்தப்பட்ட ஆளில்லா இலக்கு வாகனத்தின் பெயர்கூடAgenaஎன்பதாகும .

Agena என்பது அறிவியல், உரைநிரல், போன்ற பல பயன்பாடுகளில் பயன்படுத்தி கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுலபமான கற்றல் செயல்முறைக்கான நிரலாக்க மொழியாகும்.
நம்முடைய ஆலோனைகளை விரைவாக செயல்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் இது(Agena)நமக்கு வழங்குகிறது: உண்மையில் விரைவான , சிக்கலான எண்கணிதம், திறமையான உரை செயலாக்கம், வரைகலை, நெகிழ்வான தரவு கட்டமைப்புகள், அறிவார்ந்த நடைமுறைகள், எளிய தொகுப்பு மேலாண்மை போன்ற பல பயனாளர் சூழல்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. இது Windows, Mac OS X, Linux, OS/2, DOS, Solaris , Raspberry Pi ஆகியபல்வேறு இயக்கமுறைதளங்களில் செயல்படுகின்ற திறன்மிக்கது

இதனுடைய தொடரியல் Maple, Lua , SQL ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கூறுகளுடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட Algol 68 ஐ ஒத்திருக்கிறது.
AgenaEdit
எனப்படும் இதனுடைய எளிய பதிப்பாளருடன், தொடரியலை-மேம்படுத்தி காண்பித்தலின்வாயிலாக ஒருங்கிணைந்த Agena சூழலைக் கொண்டுள்ளது.
இது பிரேசிலின் PUC-Rio இல் உருவாக்கப்பட்ட பிரபலமான ,பரவலாகப் பயன்படுத்தப்படும் திறமூல நிரலாக்க மொழியான Lua இன் ANSI C மூலக் குறிமுறவரிகளைஅடிப்படையாகக் கொண்டது
இது(Agena)மொழிபெயர்ப்பாளர் , செயல்முறை நிரலாக்கம் , உண்மையான & சிக்கலான எண்கணிதம் , எண்கள் , புள்ளியியல் , நுன்கணிதவியல் , இயற்கணிதம் , உரை செயலாக்கம் .வரைகலை , எளிய தொகுப்பு மேலாண்மை , கட்டளை வரி போன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டது

இது (GPLv2),MITஎனும் உரிமங்களின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு http://agena.sourceforge.net/ எனும் இதனுடைய இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.