Msc-generator எனும்பல்வேறு விளக்கப் படங்களை வரைவதற்கான கருவி


இது (Msc-generator )உரை விளக்கங்களிலிருந்து பல்வேறு விளக்கப்படங்களை வரைவதற்கான ஒரு கருவியாக திகழ்கின்றது. இது (Msc-generator ) தற்போது, வரிசையான செய்திகளின் விளக்கப்படங்கள், பொதுவான வரைபடங்கள் , தொகுப்பு வரைபடங்கள் ஆகிய மூன்று வகையான விளக்கப்படங்கள் ஆதரிக்கின்றது, மேலும் எதிர் காலத்தில் கூடுதலான வகைகள் சேர்க்கப்பட விருக்கின்றன. Linux , Mac ஆகியவற்றில் செயல்படுமாறு இதனுடைய கட்டளை-வரி பதிப்புகூட தற்போது கிடைக்கின்றது இது mscgen என்பதற்கு மாற்றானது, ஆயினும் இதுGUI எனும் பயனாளர் வரைகலை இடைமுகப்பையும் கொண்டுள்ளது.
இது (Msc-generator ) கணினித்திரையின்தோற்றத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது மேலும் விரிவான ஆவணங்களுடன் முழுமையான அம்சத்தை கொண்டுள்ளது. விண்டோவில், ஒரு ஆவணம் அல்லது விளக்கக்காட்சியில் விளக்கப்படங்களை உட்பொதிக்கலாம் அவற்றைத் திருத்தம் செய்வதற்காக அலுவலக(Office)பயன்பாட்டில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்தால் போதுமானதாகும்.
மேலும் Gábor Németh என்பவர் உபுண்டுவிற்கான டெபியன் தொகுப்பை பராமரிக்க முன்வந்துள்ளார்
இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள்
Windows இல் அலுவலக(Office) பயன்பாட்டுடன்நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது இதில் திருத்தம் செய்வதற்காக உட்பொதிக்கப்பட்ட விளக்கப்படத்தை இருமுறை சொடுக்குதல் செய்திடுக.
லினக்ஸ் , மேக் ஆகியவற்றின் GUIஇன் விளக்கப்படங்களுடன் எளிதாக செயல்படுகின்றது. ( 7.0 எனும் இதனுடைய புதியபதிப்பில்)
வண்ண தொடரியல் சிறப்பம்சத்துடன் உள்ளமைக்கப்பட்ட editor, smart-ident, தானியங்கியான-பரிந்துரை , தானாக நிறைவு ஆகிய வசதிகளை கொண்டது.
உபுண்டு தொகுப்பில் நிறுவுகைசெய்வதற்கு ஏற்றவாறு பயன்படுத்தவும், GUI சேர்க்கப்பட்டுள்ளது.
Signalling இன்விளக்கப்படங்கள்: அம்புகள், பெட்டிகள், கருத்துகள் போன்ற பலவற்றை விவரிக்க சிறந்த தொடரியலை கொண்டுள்ளது.
Graphviz: DOT மொழி வழியாக வரைபடங்களுக்கான முழு ஆதரவு கொண்டது. துணை வரைபடங்களைச் சுருக்கவும்/விரிவாக்கவும், பாவணைகள்போன்ற பல நீட்டிப்புகளைப் பயன்படுத்துதல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
தொகுப்பு வரைபடங்கள்: தானியங்கி தளவமைப்பு, அம்புக்குறி வழிசெலுத்தி ஆகியவசதிகளை வழங்குகின்றது
மிகமுக்கியமாக mscgen உடன் முழு இணக்கத்தன்மை மூலம் Doxygen, Sphinx, Msctexen ஆகியவற்றின் முழுஒருங்கிணைப்பு கொண்டுள்ளது.
UTF-8 , விண்டோ ஒருங்குகுறி கோப்புகளுடன் முழு சர்வதேச ஆதரவு கொண்டது.
PNG, PDF, SVG,EMF,EPS வடிவமைப்புகளில் பதிவேற்றிடும் வசதியை அளிக்கின்றது.
விளக்கப்பட உரையை PNG படங்களில் உட்பொதித்திடுகின்ற வசதி கொண்டது.
விரிவான பயனாளர் ஆவணங்களுக்கும் குறிமுறைவரிகளின் ஆவணங்களுக்கும் இதனுடைய விக்கி இணைய பக்கத்தை பார்வையிடுக.. நிறுவுகை வழிமுறைகளை அதற்கானவிக்கியிஇணைய பக்கத்தை பார்வையிடுக .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.