ஜாவா17 எனும் கொள்கலணில்(containers) புதியதாக என்ன உள்ளது?

கொள்கலண் தளங்கள் எட்ஜ் கணினி ஆகியவை தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, இவை உலகெங்கிலும் உள்ள முக்கிய வலைபின்னல்கள், பயன்பாடுகளை இயக்குகின்றன, மேலும் ஜாவா தொழில்நுட்பங்கள் நவீன உள்கட்டமைப்புடன் படிமுறைகளை பொருத்த புதிய வசதிகளையும் மேம்படுத்தப்பட்ட செயல் திறனையும் உருவாக்கியுள்ளன. சமீபத்தில் (செப்டம்பர் 2021) பின்வரு மாறான வசதிவாய்ப்புகளுடன் ஜாவா 17(OpenJDK 17) எனும்கொள்கலண் வெளியிடப் பட்டுள்ளது.:
1.எப்போதும்-கடுமையான மிதவை புள்ளியின்(Floating-Point)சொற்பொருளை மீட்டமைத்தல் , 2.மேம்படுத்தப்பட்ட போலியான-சீரற்ற எண்கள் உருவாக்குதல், 3.JDKஇன் உள்ளகங்களை வலுவாக இணைத்தல் , 4.மாறுதலுக்கான தோரணியை(Pattern) பொருத்தமாக்குதல் (முன்னோட்டம்) ,5.வெளியக செயலி & நினைவக API (அடைகாத்தல்) , 6. நெறிய ஏபிஐ (இரண்டாவதான அடைகாத்தல்), 7.குறிப்பிட்ட சூழலின்-ஒழுங்கற்ற வடிப்பான்கள் கைக்கொள்ளுதல்
இந்தOpenJDK ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய பயன்பாட்டு மேம்பாட்டைத் தொடங்க Quarkus மேம்படுத்துநர்களை அனுமதிக்கிறது.தற்போது ஜாவா 17 இன் புதிய வசதிகளைப் பயன்படுத்தி பயன்பாட்டு தர்க்கத்தை எவ்வாறு செயல் படுத்துவது என்று மேம்படுத்துநர்கள் யோசித்து வருகின்றனர், பின்னர் அவற்றை அதே OpenJDK 17ஐ இயக்க நேரத்தில் உருவாக்கி இயக்கலாம் எனவும் அறிந்து கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, Java 17 உடன் ஒரு புதிய பயன்பாட்டை சாரக்கட்டு (scaffolding) செய்ய மேம்படுத்துநர்களுக்கு Quarkus இயலுமை அமைந்துள்ளது. இது குறிமுறைவரிகளின் மாற்றங்களைத் தொகுத்தல், உருவாக்குதல், வரிசைப் படுத்துதல் ,ஆகியவற்றுடன் இயக்க நேரங்களை மறுதொடக்கம் செய்வதற்குப் பதிலாக வணிக தர்க்கத்தை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த மேம்படுத்துநர்களை அனுமதிக்கின்ற செயலிலுள்ள குறிமுறைவரிகளின் திறனையும் வழங்குகிறது.
குறிப்பு: நாம் ஏற்கனவே OpenJDK 17 ஐ நிறுவுகைசெய்திடவில்லை எனில், நம்முடைய இயக்க முறைமையில் ஒரு binaryon ஐப் பதிவிறக்கம் செய்திடுக.
Quarkus.இல் ஜாவா 17 இன் போலியான-சீரற்ற எண் உருவாக்குதல்களின் (PRNG) தருக்கபடிமுறைகளைப் பயன்படுத்திகொள்வதற்கானதாகும். Quarkusஇன் கட்டளை வரி கருவியை (CLI) பயன்படுத்தி ஒரு புதிய செயல்திட்டத்தை சாரக்கட்டு மூலம் தொடங்கிடுக அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$quarkus create app prng-example--java=17
இதனுடைய வெளியீடு பின்வருவன போன்று இருக்கும்:

[SUCCESS]✅ quarkus project has been successfully generated in:

–>/Users/danieloh/quarkus-demo/prng-example

பாரம்பரிய ஜாவா கட்டமைப்பைப் போலன்றி, குறிமுறைவரிகள் மாறும் போது, மேம்படுத்துநர்கள் மீண்டும் கட்டமைக்க ,வரிசைப்படுத்த Quarkusஆனது நேரடி குறிமுறைவரிகளின் வசதிகளை வழங்குகிறது. இறுதியில், இந்த திறன் ஜாவா மேம்படுத்துநர்களுக்கான உள் வளைய மேம்படுத்துதலை துரிதப்படுத்துகிறது. Dev எனும்பயன்முறையைப் பயன்படுத்தி பின்வருமாறான கட்டளைவரியின் வாயிலாக Quarkus பயன்பாட்டை இயக்கிடுக:

$cdprng-example

$ quarkus dev

இதனுடைய வெளியீடு பின்வருவன போன்று இருக்கும்:

INFO[io.quarkus](Quarkus MainThread)Profile dev activated.LiveCoding activated.

INFO[io.quarkus](Quarkus MainThread)Installed features:[cdi, resteasy, smallrye-context-propagation, vertx]

Tests paused

Press[r]to resume testing,[o]Toggle test output,[:]forthe terminal,[h]formore options>

ஜாவா 17 ஆனது Xoshiro256PlusPlusPRNG எனும் தருக்கபடிமுறைகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் சீரற்ற முழு எண்களை உருவாக்க மேம்படுத்துநர்களுக்கு உதவுகிறது. hello()எனும் வழிமுறையில் பின்வரும் குறிமுறைவரிகளைச் சேர்த்திடுக

thesrc/main/java/org/acmedirectory:

RandomGenerator randomGenerator=RandomGeneratorFactory.of(“Xoshiro256PlusPlus”).create(999);

for(inti=0;i<10;i++){

intresult=randomGenerator.nextInt(11);

System.out.println(result);

}

அடுத்து, சீரற்ற முழு எண்கள் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்த RESTful API (/hello) ஐ அழைத்திடுக. நம்முடைய வளாக முனையத்தில் பின்வரும் cURLஎனும் கட்டளை வரியை இயக்கிடுக அல்லது இணைய உலாவியைப் பயன்படுத்தி முடிவுபுள்ளியின் URL ஐ அணுகிடுக அதற்கான கட்டளவரிபின்வருமாறு:

$curl localhost:8080/hello

தொடர்ந்து Quarkus Dev எனும் பயன்முறையை இயக்குகின்ற முனைத்திற்குச் செல்க. அங்கு பின்வருமாறான பத்து சீரற்ற எண்களைக் காணலாம்:

4 ,6 ,9 ,5 ,7 ,6 ,5 ,0 ,6 ,10

குறிப்பு: நாம் குறிமுறைவரிகளை மீண்டும் உருவாக்கி ஜாவா இயக்க நேரத்தை மறுதொடக்கம் செய்ய வேண்டியதில்லை. curlஎனும் கட்டளை வரியைஇயக்கிய முனைம்த்தில் Hello RESTEasy என்ற வெளியீட்டையும் காணலாம்.
முடிவாக
Quarkus ஆனது நேரடி குறிமுறைவரிகளின் வழிமுறை மூலம் மேம்படு்த்து நர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. ஒரு உற்பத்தி வரிசைப் படுத்து தலுக்காக, மேம்படுத்துநர்கள் OpenJDK 17 , GraalVM ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குதளத்தை செயல்படுத்திடலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.