மைக்ரோசாப்ட் 365க்கு மாற்றாக EGroupware எனும் திறமூல பயன் பாட்டினை பயன்படுத்தி கொள்க

நாம் ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், நடுத்தர அளவிலான நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், மைக்ரோசாப்ட் 365எனும் பயன்பாட்டிற்கு மாற்றாக நம்முடைய அத்தியாவசிய பயன்பாடாக இந்தEGroupware எனும் திறமூல பயன்பாடானது அமைந்திருக்கின்றது . இது ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடி செயல்படுவதை ஊக்குவிக்கிறது , அவ்வாறாக செயல்படுகின்ற குழுக்களை ஒன்றாக இணைக்கிறது. அதனோடு பல்வேறு மிகப்பெரிய பயன்பாடுகளுக்கு மாற்றான திறமூலபயன்பாடாக இது திகழ்கின்றது மிக முக்கியமாக மைக்ரோசாப்ட் 365 அல்லது கூகுளின் Workspace இற்கு மாற்றாக இந்த Egroupwareஎனும் திறமூல பயன்பாடு அமைகின்றது.
திறனுடைய இணைய அலுவலகம்
இதே பெயரில் ஜெர்மன் நிறுவனத்தின் மென்பொருள் ஒன்று20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்துவருகின்றது.ஆயினும் இது(EGroupware) அதன் சொந்த தகவமைகள் தவிர, Collabora Online, Rocket.Chat, Guacamole, Jitsi ,BigBlue Button உள்ளிட்ட பிற நன்கு அறியப்பட்டதிறமூல பயன்பாடுகளை ஒருங்கிணைக் கிறது. மேலும் இதுAsterisk/Placetel உடன் கணினி தொலைபேசி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பையும் (CTI) ஆதரிக்கிறது. தற்போது இது(EGroupware) பின்வருமாறான இரண்டு பதிப்புகளில் கிடைக்கின்றது:
1.கட்டணமற்ற சமூககுழுவின் பதிப்பு (CE) ஆனது GPLv2 எனும் உரிமத்தின் கீழ் உருவாக்கப்பட்டது , வரம்புகள் எதுவும்இல்லாமல் அடிப்படை செயலிகளை கொண்டுள்ளது.
2.நிறுவனபதிப்பு (EPL) ஆனது கூடுதல் வசதிவாயப்புகளுடனான பயன்பாடு களுடன் கிடைக்கின்றது, குறிப்பாக நிறுவனங்கள் அல்லது பெரிய நிறுவனங் களுக்கு, மேலும் நீட்டிக்கப்பட்ட விற்பனையாளர் ஆதரவை வழங்குகிறது.
நம்முடைய சொந்த சேவையாளரில்இந்தEGroupware ஐ அமைப்பது சிக்கலானது அன்று. உண்மையில், EGroupwareஐ நிறுவுகைசெய்திட்டால் அதன்பிறகு இது நமக்காக அனைத்து பணிகளையும் செயல்படுத்துகிறது. இந்த மென்பொருள் செயல்படுவதற்கு அதிக வன்பொருள் வளங்கள் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, 2 ஜிபி ரேம் , 32 ஜிபி காலிநினைவகம், டூயல்-கோர் கணினி ஆகியவை மட்டுமே போதுமானவைகளாகும் இதனை ஒரே நேரத்தில் 80 பயனாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு செயல்படுகின்ற திறன்மிக்கது. இது (EGroupware) மெய்நிகர் சேவையகங்கள், உள்ளூர் VM அல்லது NAS ஆகிய வற்றிலும் நன்றாக செயல்படுகின்ற திறன்கொண்டது. நாம் இந்த மென்பொருளை புரவலாக செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனில், ஜெர்மன் தரவு மையங்களில் புவலராக செய்யப்பட்ட SaaS தீர்வை இது(EGroupware) வழங்குகிறது. நாம் ஐரோப்பாவிற்கு வெளியே வேறு நாடுகளில் வசிப்பவர் எனில் அப்போதும் பிரச்சனை எதுவும் இல்லை, நன்றாக செயல்படுகின்ற திறன்கொண்டது இதனை பயன்படுத்தி கொள்ளும் போது தேவையான உதவிக்கு இதனுடைய EGroupware குழுவைத் தொடர்பு கொள்க.
EGroupware ஐ நிறுவுகைசெய்தல்
இதனை பயன்படுத்திட தொடங்குவோமா! முதலில் இதனை (EGroupware)-நாமே நிறுவுகை செய்திடுவதற்காக நமக்கு அதிக அனுபவம் எதுவும்தேவையில்லை – லினக்ஸ் அமைப்பு பற்றியும், அதனுடைய அடிப்படைகள் பற்றியும் மட்டும் நமக்கு தெரிந்திருந்தால் போதுமானதாகும். ஆயினும் குறைந்தபட்சம் நம்முடைய தொகுப்பு மேலாளரை பற்றி மட்டும் நன்கு அறிந்திருக்க வேண்டும், அதனை கொண்டது இதனுடைய thee groupware-docker package என்பதை நிறுவுகை செய்திடுவதற்காக பயன்படுத்திகொள்ளலாம். இது(EGroupware) வழங்குகின்ற நிறுவுகைக்கான உரைநிரல்கள், குறிப்பாக திறமூல Docker கூறுகளுக்கானது, எனவே மற்ற கொள்கலன்(container) இயந்திரங்கள் (Podman, LXC அல்லது CRI-O போன்றவை) நன்கு செயல்படுவதை உறுதி படுத்தி கொள்க, அவை அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படாது.

நிறுவுகைசெய்தலுக்குப் பிந்தைய உரைநிரல்கள், Docker, Nginx (ஒருமுறை எதிர்பதிலியாக,ஒருமுறை EGroupwareஇன் இயங்கும் இணைய சேவையகமாக), MariaDB போன்ற சார்புகளை இவை இழுத்து கொண்டுவந்து, உண்மையான நிறுவுகை பணியைக் கவனித்துக் கொள்கின்றன. பல்வேறு கட்டமைப்பும் பதிவு கோப்புகளும் சேவையாளரில் முடிவடைகின்றன. Nginx ஐ Apache உடன் எதிர்பதிலியாக(reverse proxy) மாற்ற விரும்பினால், அதற்கு பதிலாக the apache2package ஐ சேர்க்கலாம்.
இதனுடைய (EGroupware) இணைய சேவையகம் (தலைகீழ் பதிலி அன்று), தரவுத்தள சேவையகம்,உள்ளேதள்ளிடும் சேவையாளர் (உலாவி சாளரத்தில் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கான இணைய கொள்குழி), காவற்கோபுரம் (கொள்கலண்களுக்கான தானியங்கி புதுப்பிப்புகள்), Collabora Online, Guacamole, உட்பட கிட்டத்தட்ட அனைத்து கூறுகளும் Rocket.Chat, போன்றபல, தனித்தனி கொள்கலன்களில் சேமிக்கப்படுகின்றது. இதனை(EGroupware) நிறுவுகைசெய்வதும் மேம்படுத்துவதும் முடிந்தவரை அதிகசிரமமின்றி இருப்பதை உறுதிசெய்ய இந்த வடிவமைப்பானது மேம்படுத்துநர்களை அனுமதிக்கிறது.
குறிப்பு: இணைய உலாவிக்கும் இதனுடையசேவையகத்திற்கும் இடையேயான தகவல்தொடர்பு குறியாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, EGroupware க்கான SSL சான்றிதழ்களை அமைக்க சிறிதுநேரம் ஒதுக்கிடுக. இந்த(EGroupware) பயன்பாடடிற்கும், iOS சாதனத்திற்கு இடையில் தரவை ஒத்திசைக்க விரும்பினால், SSL குறியாக்கம் கட்டாயமாகும். அதேபோன்று, Collabora Online போன்ற சில வெளிப்புற பயன்பாடுகளுக்கு SSL தேவைப்படுகிறது.
EGroupware அணுகுதல்
EGroupware ஐ வெற்றிகரமாக நிறுவுகைசெய்துவிட்டோம்.இப்போது இந்த பயன்பாட்டினை எவ்வாறு அணுகுவது? எனும் சந்தேகம் கண்டிப்பாக எழும் நிற்க ஃபயர்பாக்ஸ், குரோம்/குரோமியம், சஃபாரி , எட்ஜ் உள்ளிட்ட பெரும்பாலான நவீன இணைய உலாவிகளில் இந்த Egroupwareஎனும் பயன்பாடானது நன்கு செயல்படுவதால் நாம் இதனை மிக எளிதாக அனுகலாம். உண்மையில், இது கைபேசி சாதனங்களிலும் நன்றாக செயல்படுகின்றது.
இது தவிர, EGroupwareஇன் குழுவானது ஒரு சிறப்பு கைபேசி மாதிரிபலகம் ஒன்றினை வழங்குகிறது. மீண்டும், திறன்பேசியின் இணைய உலாவியில் fiddling செய்வதை விரும்பவில்லை எனில், Egroupware, கைபேசி சாதனங்கள் ஆகிய வற்றிற்கு இடையில் நம்முடைய தரவை ஒத்திசைப்பது எளிது என்பதைக் கண்டு மிக மகிழ்ச்சியடைந்திடுவோம். EGroupware ஆனது ActiveSync, CardDAV, CalDAV, WebDAV போன்ற பல நெறிமுறைகளைகூட ஆதரிக்கிறது.
EGroupware தகவமைவுகளும் பயன்பாடுகளும்
நம்முடைய பணியில் ஒற்றையான EGroupware தகவமைவுகள் , பயன்பாடுகளைப் பயன்படுத்தி கொள்ள நாம் தயாரெனில் உள்நுழைவுசெய்த பிறகு, மின்னஞ்சல், காலெண்டர், முகவரிப் புத்தகம், InfoLog செயல்திட்ட மேலாளர் (செய்ய வேண்டியவை/இலக்குபணிகள்), நேரத்தாள், கண்காணிப்பு அமைப்பு, Kanban, கோப்பு மேலாளர் போன்ற இதில் கிடைக்கக்கூடிய அனைத்து தகவமைவுகளையும் பயன்பாடுகளையும் இந்த திரையின் இடது பக்கப்பட்டியில் காணலாம்.

இதில் InfoLogஎனும் தகவமைவானது EGroupware இன் சுவிஸ் இராணுவ கத்தி போன்று. நாம் செய்ய வேண்டிய பணிகளின் எளிய பட்டியல்கள், சிக்கலான பணிகள், நிலுவைப்பணிகளின் தேதிகளை அமைத்தல்,பிற பயனாளர்களுக்கு பணிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை செயல்படுத்திடமுடியும் இங்குதான். மாற்றங்களைப் பற்றி நமக்கும் நம்முடைய நண்பர்களுக்கும் தெரிவிக்க முடியும் என்பதால், இது(InfoLog) புதுப்பித்த நிலையில் இருக்கவும் முழுமையாக தனிப்பயனாக்கக்கூடியதாகவும் நம்முடைய சொந்த தரவு புலங்கள், பணி வகைகள், இலக்கு வகைகள், மாதிரி பலகங்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது. மேலும், தேவையான பணிகளுக்கான அணுகுதலை யார்யார் பயன்படுத்தி கொள்ளலாம் என்பதை கட்டுப்படுத்திட உதவகின்றது. அதுமட்டு மல்லாது படிக்க, திருத்த அல்லது வழங்குவதற்கான அனுமதியை வரை யறுக்கவும். தேவைப்பட்டால், உள்ளடக்கங்களை குறியாக்கம் செய்யவும் முடியும்.
இடது பக்கப்பட்டியில் உள்ள தகவமைவுக்கூறுகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால், பயன்பாட்டுடன் உலாவியின் சாளரத்தில் ஒரு புதிய தாவலின் திரையை தோன்ற செய்திடுகின்றது. ஏறக்குறைய எல்லா தகவமைவு களிலும், ஒரு சூழல் பட்டியை (சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல்) அணுகலாம், இது கூடுதலான செயலிகளை வழங்குகிறது . சில நேரங்களில் மற்ற EGroupware தகவமைவுகளுக்கு இணைப்புகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, கோப்பு மேலாளரின் சூழல்பட்டியில்புதிய ஆவணங்கள், கோப்புறைகளை உருவாக்குவதற்கும் ஆவணங்களை PDF அல்லது PNG க்கு மாற்றுவதற்கும் உள்ளீடுகளைக் காண்பிக்கின்றது. அதனோடுகூடுதலாக, மின்னஞ்சல் வழியாக ஆவணங்களை அனுப்பலாம் அல்லது துனைபட்டியின் பகிர்வில் கூட்டுத் திருத்தத்திற்கான இணைப்புகளை உருவாக்கலாம்.
மேலே வலதுபுற மூலையில் ஒளிரும், ஒளிர்வறற இருண்ட பயன்முறைக்கு (light and dark mode) இடையே மாறுவதற்கான பொத்தானைக் காொண்டுள்ளது, அச்சிடுவதற்கான உருவப்பொத்தான்கள் , விரைவாக சேர்த்தல் (காலண்டர், முகவரி புத்தகம் போன்றவற்றில் புதிய உள்ளீடுகளைச் சேர்ப்பதற்கான குறுக்குவழி). அறிவிப்புகள் உருவப்பொத்தானிற்கு அடுத்ததாக பயனாளர் பட்டியல் உள்ளது, இது முகப்புத் திரை, தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள், கடவுச்சொல்லை மாற்றுவதற்கான உரையாடல்பெட்டி ,வெளியேறுவதற்கான பொத்தான் ஆகியவற்றைத் திறக்கின்றது. இறுதியாக, வலது பக்கப்பட்டி மற்ற பயனாளர் களுக்கான அவதாரங்களைக் காண்பிக்கிறது. ஒருவரை அழைக்க அல்லது புதிய அல்லது ஏற்கனவே உள்ள அழைப்பிற்கு (Jitsi அல்லது BigBlueButton) பயனாளரை அழைக்கின்ற மற்றொரு சூழல் பட்டியைத் ஒரு செய்தியை அனுப்புதல் (Rocket.Chat) அல்லது மின்னஞ்சல் அனுப்புதல்போன்ற பல்வேறு வகையான பணிகளுக்காக உருப்பொத்தான்களில் ஒன்றில் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,. பல்வேறு மொழிகளில் அறிவிப்புகள், தொழில்நுட்ப வழிகாட்டிகள், விரைவான வழிமுறைகள் விவாதங்கள் ஆகியவற்றினை இதில் காணலாம். மேலும் விவரங்களுக்கு https://www.egroupware.org/en எனும் இணையமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.