மறையாக்க நாணயதேடுதல் (CryptoTracker) எனும்சேவையை பயன்படுத்தி கொள்க

மறையாக்க நாணயதேடுதல்(CryptoTracker)எனும் பயன்பாடானது 100% கட்டணமற்றது / கட்டற்றது / தனியார் மறையாக்க நாணய பைகளை தேடுதல். மின்னஞ்சல் / உரை / அலெக்சா / தந்தியின்வாயிலான சந்தைவிலை எச்சரிக்கைகள், அன்றன்றைய விலை விளக்கப்படங்கள், சுரங்கக் கணக்கீடுகள், அந்நியச் செலாவணி / லாபம் / இழப்பு / இருப்பு புள்ளி விவரங்கள், செய்தி ஊட்டங்கள் + மேலும்கூடுதலான வசதிவாய்ப்புகளுடன்.. Bitcoin / Ethereum / வரம்பற்ற மறையாக்க நாணயங்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவும். நாம் விரும்பும் பல சொத்துக்கள் / சந்தைகள் / எச்சரிக்கைகள் / விளக்கப் படங்களைத் தனிப்பயனாக்கம் செய்தல்ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டது.
இது 40 க்கும் மேற்பட்ட பரிமாற்றங்கள் / 80 வர்த்தக ஜோடிகள் ஆதரிக்கின்றது இது ஏறக்குறைய வரம்பற்ற சொத்துக்களை ஆதரிக்கின்றது (ஆதரவு பரிமாற்றங்களில் உள்ள சொத்துக்கள் எதுவாக இருந்தாலும்).
இதனை பயன்படுத்தி கொள்வதற்கான குறைந்தபட்ச விவரக்குறிப்புகள்: 1 Ghz CPU / 512 Mb RAM / தரம் 32 Gb MicroSD / Nginx அல்லது Apache headless / PHP v7.2+
தேவையெனில் உபுண்டு / ராஸ்பெர்ரி பை தானாக நிறுவுகைசெய்திடும்உரைநிரல் (கணினியின் பட்டியில் "Terminal" எனும் பயன்பாட்டைப் பயன்படுத்திடுக அல்லது தொலைநிலை SSH வழியாகவும் பயன்படுத்திடுக): (உள்ளக / வளாக வலை பின்னலின் தனிப்பட்ட முறையில் / மலிவாக பயன்பாட்டைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட வழியை பின்பற்றிடுக) அதற்கான கட்டளைவரிபின்வருமாறு
wget --no-cache -O FOLIO-INSTALL.bashhttps://git.io/JoDFD
chmod +x FOLIO-INSTALL.bash
sudo ./FOLIO-INSTALL.bash
முக்கியவசதிவாய்ப்புகள் :

இதுகுறைந்த சக்தி சாதனங்களுக்கு (raspberrypi, pine64, முதலியன) உகந்ததாக உள்ளது.

இதில் மேசைக்கணினி/ சேவையாளர்பதிப்புகளும் உள்ளன

எப்போதும் 100% கட்டணமற்ற F.O.S.S. மென்பொருள் (பதிவு செய்து பிரீமியம் அணுகல் கட்டணத்தை செலுத்த தேவையில்லை).

API இணைப்புகளுக்கு விருப்பமான பதிலிஆதரவுடன், தரவு , comms (ஒரு இடைத்தரகர் சேவையகத்திற்கு ""phoning home" இல்லை) ஆகியவற்றிற்கான APIகள் / சேவையகங்களுடன் தனிப்பட்ட முறையில் நேரடியாக இணைக்கிறது.

உபுண்டு அல்லது ராஸ்பெர்ரி பை பயன்பாடுகளின் அமைப்பிற்கான தானியங்கியான பயனாளர் நட்பு நிறுவுகை / மேம்படுத்தல் உரைநிரல் வீட்டு /உள்ளக / வளாக வலைபின்னல் அல்லது இணையதளத்தில். 40 க்கும் மேற்பட்ட பரிமாற்றங் களுக்கான ஆதரவு (DeFi உட்பட), 80 க்கும் மேற்பட்ட சந்தை இணைப்புகள் ( fiat நாணயம் அல்லது இரண்டாம் நிலை crypto நாணயம்).. தனியுரிமை , பாது காப்பிற்காக portfolio இடைமுகத்தில் பாதுகாப்பான HTTPS (SSL), பயனாளர்பெயர் / கடவுச்சொல் பாதுகாப்பு ,தனியுரிமை பயன்முறை கொண்டது.

நிர்வாக இடைமுகம், பயன்பாட்டின் உள்ளமைவை எளிதாகப் பார்க்க / மாற்ற அனுமதிக்கும் (எச்சரிக்கைகள் / விளக்கப்படங்கள் / சந்தைகள் / API / காப்புப்பிரதிகள் / பதிவுகள் / போன்றவை).இது மிகதிறன்மிக்கது நாம் விரும்பினால் ஒளி / இருண்ட (இரவு முறை) காட்சி வண்ணங்களுக்கு இடையே மாறிடலாம்

.மறையாக்க நாணயத்தின் பைகளின் ஒட்டுமொத்தச் சுருக்கமான விவரங்களும் மொத்த portfolio மதிப்பு (மறையாக்கநாணயத்தில், உள்ளூர் முதன்மை நாணயத்தில்), மதிப்பு ஆதாயம் / இழப்பு தரவு (நீண்ட / குறுகிய விளிம்பு நெம்புகோளின் சக்திகளுக்கான(leverages)கண்காணிப்பு ஆதரவுடன்), portfolio இருப்புத் தரவும் சந்தைத் தரவும் உட்பட. .மின்னஞ்சல் / உரை / அலெக்சா / டெலிகிராம் மூலம் விலை மாற்ற எச்சரிக்கைகள் (கட்டமைக்கக்கூடிய எச்சரிக்கை அளவுருக்கள் உள்ளன).

நமக்குப் பிடித்த பரிமாற்றங்கள் / சந்தை இணைப்புகளுடன் நம்முடைய சொந்த portfolio சொத்துகளின் பட்டியலைச் சேர்க்கவும் / திருத்தவும் / நீக்கவும் முடியும். சொத்துகள் / பரிமாற்றங்கள் / சந்தை இணைப்புகளுக்கான நம்முடைய சொந்த விலை எச்சரிக்கைகளும் விலை விளக்கப்படங்களைச் சேர்க்கவும் / திருத்தவும் / நீக்கவும் (ஒரு சொத்திற்கு பல பரிமாற்றங்கள் / சந்தை இணைப்புகளை ஆதரிக்கிறது) ஆன திறன் கொண்டது

நம்முடைய சொந்த portfolio வை CSV (விரிதாள்) கோப்பு வடிவத்தில் பதிவிறக்கம் செய்யவும் / பதிவேற்றம் செய்யவும்ஆன வசதி கொண்டது.

நிறுவனம் , நிறுவன வலைப்பதிவுகள் / செய்தித் தளங்கள் / podcasts கள் / யூடியூப் சேனல்கள் / reddit ,பங்குசந்தை மன்றங்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட வெவ்வேறு மறையாக்கநாணயம் தொடர்பான RSS ஊட்டங்களைக் கொண்ட செய்திப் பக்கம், பயன்பாடுகளின் உள்ளமைவில் ஊட்டங்களைச் சேர்த்திடும் / அகற்றிடும் திறன் கொண்டது.

புதிதாகச் சேர்க்கப்பட்ட செய்தி ஊட்ட இடுகைகள், விளக்கப்பட தரவு காப்புப் பிரதி காப்பகங்கள் , மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட பயன்பாட்டு பிழை / பிழைத்திருத்தப் பதிவுகள். வெளிப்புற ஆதாரங்களின் பக்கங்கள், சந்தைஇடைவெளி புள்ளிவிவரங்கள் தளங்கள் / செய்தி தளங்கள் / பணப்பைகள் / பரிமாற்றங்கள் / தொகுதி முழுதும் தேடுதல்கள் / மேம்படுத்துநர் வளங்கள் / செய்திமடல்கள் / podcasts கள் / சமூக ஊடகங்கள் / போன்றவற்றிற்கான இணைப்புகளை உள்ளடக்கியது.

விரிவான விலை விளக்கப்படங்கள் (மறையாக்கநாணயம் உள்ளூர் முதன்மை நாணயத்தில் அடிப்படை மதிப்புகள்), நேரடி விலை / 24 மணிநேர விலை விவரங்கள், portfolio புள்ளிவிவரங்கள், பயனாளர் வரையறுத்த கால இடைவெளிகளுடன் செயல்திறன் பக்கவாட்டு ஒப்பீட்டு விளக்கப்படங்கள் , சொத்து ஒதுக்கீடுகளுக்கு சிறந்த உணர்வைப் பெற portfolio இருப்பு pie விளக்கப் படங்கள். மறையாக்கநாணய கருவிகள் (QR குறியீடு உருவாக்குபவர், altcoin வர்த்தக முன்னோட்டம் / BTC இல் சந்தைஇடைவெளி கணக்கீடு உள்ளூர் முதன்மை நாணயம் போன்றவை).

சுரங்க கணக்கீடுகள், நாணய சுரங்க லாபத்தை தீர்மானிக்க (மறையாக்கநாணயம் உள்ளூர் முதன்மை நாணயத்தில், மின்சார செலவுகள் தொகுப்பு கட்டணங்கள் அடங்கும்).
பொதுவான சிக்கல்களுக்கு (நமக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால் ஆதரவு / தொடர்பு இணைப்புகளுடன்) பயன்படுத்த எளிதான FAQ வடிவத்தில் உதவிப் பக்கம். கணினி புள்ளிவிவரங்கள் / விழிப்பூட்டல்கள் இடைமுகத்தில், உரை அல்லது மின்னஞ்சல் அல்லது பிற பொதுவான பதிவுகளில் (நம்முடைய சாதனத்தில் இருந்தால், இயக்க நேர/ ஏற்றநேர சராசரிகள் / கணினியின் வெப்பநிலை / இலவச வட்டு இடம் / பயன்படுத்திய கணினி நினைவகம் / portfolio குக்கீகள், தற்காலிகநினைவக அளவுகள்), ராஸ்பெர்ரி பை அல்லது பிற சாதனத்தை ஆரோக்கியமான அளவுருக்களுக்குள் இயங்க வைக்க உதவும். கூடுதல் அம்சங்களுக்காக உள்ளமைக்கப்பட்ட /சொந்த தனிப்பயன் செருகுநிரல்களைப் பயன்படுத்த செருகுநிரல் அமைப்பினை கொண்டது.

பாதுகாப்பான webhook திறன், பிற வெளிப்புற பயன்பாடுகளை நிகழ்நேரத்தில் பாதுகாப்பாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது (ஒரு சேவைக்கு தனி விசைகள், முதன்மை webhook திறவுகோளினை வழங்காமல்).

80 க்கும் மேற்பட்ட fiat நாணயங்கள் / இரண்டாம் நிலையிலான மறையாக்க நாணயங்கள் இணைத்தல்களில் (மூலத் தரவும் கிடைக்கும்) நிகழ்நேர சந்தைத் தரவை வினவுவதற்கு பிற வெளிப்புற பயன்பாடுகளை அனுமதிக்க, உள்ளமைக்கப்பட்ட உள்ளமைதியுடனான API கொண்டது.
வெளிப்புற API கோரிக்கைகளுக்கு பதிலாள்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மின்னஞ்சல் அனுப்புவதற்கான SMTP அங்கீகாரம். விவரமான பிழை பதிவும் பிழைத்திருத்தமும் (சரிசெய்யக்கூடிய verbosity / பிழைத்திருத்த முறைகள்), சரிசெய்தல் / நிறுவுகைசெய்தல் / பயன்பாட்டின் உள்ளமைவு ஆகியவற்றிற்கு உதவிடும் அமைவினை கொண்டது.
இது GPLv3 எனும் உரிமத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://taoteh1221.github.io/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.