விண்டோ SDK வின் IEC 60870-5-104 எனும் நெறிமுறை

இந்த நெறிமுறைையானது கோப்புகளின் இடமாறுதலை நிருவகிப்பதலும் கட்டுபடுத்தலும்,அடைவுகளின் கட்டளைகள்யும்,அனைத்து வகையான கண் காணிப்பினையும்,கட்டளைகளையும், அளவுரு ASDU களையும் ஆதரிக்கிறது
IEC 104 Windows SDK
ஆனது Win DLL (முன் தொகுக்கப்பட்ட நூலகம்), நிலையான இணைப்புநூலகம், மாதிரி செயல்முறை,IEC104 சேவையாளர் & வாடிக்கையாளர் நிரலாக்கங்கள், விஷுவல் ஸ்டுடியோ மாதிரி செயல்முறை திரையின் செயல் திட்டக் கோப்புகள், Doxygen ,ஆகியவற்றைக் கொண்டுள்ளது.நமக்கு தேவையெனில்
இதனுடைய கட்டணமற்ற பதிவிறக்க மதிப்பீட்டு Kit - IEC 104 மேம்பாட்டு தொகுப்பினை பெறமுடியும்
முக்கியவசதிவாய்ப்புகள் தயாரிப்பு கையேட்டை அணுகவும்(API ஆவணப்படுத்தல்)(pdf, Doxygen html) , IEC 60870-5-104 நூலக API ஆவணங்களை உலாவவும், வழங்கப்பட்ட IEC 60870-5-104 எடுத்துக்காட்டுகளின் மூலக் குறிமுறைவரிகளைப் படிக்கவும்.IEC 60870-5-104 எடுத்துக்காட்டுகளை மாற்றி தொகுக்கவும்.நம்முடைய சொந்த IEC 60870-5-104 நிரல்களை உருவாக்குதல், (ASE,...) போன்ற முன்னணி சோதனைக் கருவிகளைக் கொண்டு சோதிக்கவும் இது பேருதவியாக விளங்கு கின்றது. தேவையெனில் இதனுடைய பயன்பாட்டு எடுத்துக்காட்டுகளின் மூலக் குறிமுறைவரிகளைப் பயன் படுத்தலாம் மேலும் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைத்திடலாம்.இது ANSI-தரநிலை C இன் மூலக் குறிமுறை வரிகளில் எழுதப்பட்டு, கடுமையான நிறுவன குறிமுறைவரிகளின் தரத்தின் கீழ் எழுதப்பட்டுள்ளது, மேலும்இது C++, C# ஐ ஆதரிக்கிறது.அதுமட்டுமல்லாது இதுவிரைவான செலவு குறைந்த செயலாக்கத்தினையும் வெளிப்படையான உரிமத் திட்டத்தையும் கொண்டது . மறைக்கப்பட்ட செலவுகள் எதுவும் இதில்இல்லை, ஒத்திவைக்கப்பட்ட தொகை எதுவும் இதில் இல்லை. இதுஉயர் செயல் திறனுடன், வலுவான , அளவிடக்கூடிய கட்டமைப்பினை கொண்டது. இது அமைவு ஒருங்கிணைப்புகளும் OEMகள் தங்களுடைய அமைவுகளைச் செயல்படுத்த நிலையான கருவிகளையும் பயன்படுத்த எளிய வழிமுறையை வழங்குகிறது. இதில் APIகள் பயன்படுத்த மிகவும் எளிதாகவும் நெகிழ்வாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. IEC 60870-5-104 இனுடைய வாடிக்கையாளர் பக்கத்தில், தரவு முறை, சோதனை முறை ஆகிய இணைப்பு வகைகள் உள்ளன. இதுசூழல் சார்ந்த நிகழ்வு-உந்துதல் மாதிரியை கொண்டது அதனோடு இது பல சேவையகமும் வாடிக்கையாளர் போ்ன்மியும் கொண்து மேலும் ஒற்றை சேவையகத்தில் (இணைப்பு) பல நிலையங்களை உருவகப்படுத்தவும் (பொது முகவரி) கொண்டது இது பின்னனியில் வருடுதல், சுழற்சி தரவு பரிமாற்றம், இரட்டை பரிமாற்றம், பணிநீக்கம், கோப்பு பரிமாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. மிகமுக்கியமாக தேவையற்ற கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தொடர்பும் தேவையற்ற அமைப்புகளுக்கு இடையே குறுக்கீடும் இல்லாத மாறுதலை கொண்டது,இது"Select-Before-Operate", "Direct-Execute" ஆகிய கட்டளை செயல்படுத்தல் முறைகளை ஆதரிக்கிறது. இதில்குறைந்த நினைவக தடமும், மூலக் குறிமுறைவரிகளாக வும் வழங்கப்படுகிறது. இதுஅதிக உள்ளமைவு, தேவையான சதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது, ராயல்டி இல்லாத உரிமம் கொண்டது

இது (GPLv3) எனும் உரிமத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.மேலும் விவரங்களுக்கு https://www.youtube.com/playlist?list=PL4tVfIsUhy1bx7TVjtZnqFB6tbZBhOlJP எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.