JVx எனும் பயன்பாட்டு கட்டமைப்பு


JVx எனும் வரைச்சட்டகம் (Framework)அல்லது JVx எனும் நிறுவன பயன்பாட்டு வரைச்சட்டகம் என்பது ஜாவா இயங்குதளத்திற்கான திறமூலமென்பொருள் கட்டமைப்பாகும். JVx தொழில்முறையிலானதும் திறமையானதுமான தரவுத்தள பயன்பாடுகளை, குறுகிய காலத்தில் சிறியஅளவிலான மூலக் குறிமுறை வரிகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளை எளிதாக உருவாக்க உதவுகிறது.
வரைச்சட்டக கட்டமைப்பானது மென்பொருள் அமைப்புகளின் மேம்பாட்டிற்கான பல்லூடக கட்டமைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. மூன்று-அடுக்கு கட்டமைப்பை உருவாக்குதல், சார்பு தலைகீழ் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் வாயிலாக JVxஆனது திறமையாகப் பராமரிக்கப்படுகின்ற பயன்பாடுகளை எளிதாக உருவாக்க அனுமதிக்கிறது. வரைச்சட்டகமானது பின்வருமாறானஅனைத்து அடுக்குகளுக்கும் முழு ஆதரவை வழங்குகிறது.இதில்
தரவுத்தளம் அல்லது கோப்பு முறைமை போன்ற மாற்றுகளை தரவு அடுக்காகப் பயன்படுத்தலாம்.
பயன்பாட்டு அடுக்கு இதுஒரு ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு சேவையகம் வழியாக வழங்கப்படுகிறது. இது சேவையகஅமர்வுகளின்நிர்வாகத்தையும் பயன்பாட்டு தருக்கத்தையும் ஆதரிக்கிறது.
விளக்கக்காட்சி அடுக்கு தொழில்நுட்பம் சார்ந்தது இதனைSwing,SWT,Vadin போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பயன்படுத்திடலாம்.
இந்த JVx ஆனது மேம்படுத்துநர்களின் நேரத்தைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் தங்களுடைய முயற்சிகளை பயன்பாட்டின்-குறிப்பிட்ட பணிகளில் அதிககவனம் செலுத்த முடியும். தொழில்நுட்ப தடைகள் வரைச்சட்டகத்தால் அழித்துநீக்கப்படுகின்றன. முதன்மை தரவுகளுக்கான மாதிரி பலகங்களை உருவாக்குவது போன்ற எளிய பணிகளில் குறைந்த நேரமே செலவிடப்படுகிறது. மீண்டும் மீண்டும் நிகழும் பணிகளுக்கான தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த மேம்படுத்திடும் முயற்சியை JVx குறைக்கிறது.
மற்றவற்றுடன் JVx ஆனதுபின்வரும் வசதிகளை வழங்குகிறது, :
தரவுத்தள மாதிரியின் அடிப்படையில் தானியங்கி பட்டியல் பெட்டிகள்
பொதுவான, தொழில்நுட்பம் சார்ந்த பயனாளர் இடைமுகம்
அனைத்து GUI கூறுகளுக்கும் ஒரே மாதிரியான செயலில் உள்ள மாதிரி
தரவிற்கும் தரவுத்தளத்திற்குமான சுதந்திரம்
அணுகப்படும் வரை தரவு பதிவேற்றப்படாது (சோம்பேறித்தனமாக பதிவேற்றுதல்)
சேவையாளர் பக்க அமர்வும் பொருள் மேலாண்மையும் கொண்டுள்ளகது
உள்ளுறுப்புகளின் மட்டத்தில் சர்வதேசமயமாக்கல்
முழுமையான பயன்பாட்டு கட்டமைப்பு
ஒத்திசைவானதும் ஒத்திசைவற்றதுமான தொடர்பு
வாடிக்கையாளர்,சேவையாளர் செயல்களைப் பயன்படுத்திகொள்வதற்கான தொடர்பு
தரவு/கோப்புகளின் பதிவிறக்கம்
ஒருங்கிணைந்த உருவப்பட மேலாண்மை
சொந்த iOS பயன்பாடு (iPhone, iPad), சொந்த Android பயன்பாடு, REST அடிப்படையிலான தொடர்பு சேவையகம், பயனாளர் அங்கீகாரம், பட்டியல வழிசெலுத்தல்
ஆகிய வசதி வாய்ப்புகளை இது வழங்குகின்றது
ஒட்டுமொத்தத்தில் இந்த JVx எனும் நிறுவன பயன்பாட்டு வரைச்சட்டகம் ஆனது தமக்குதேவையான அல்லது தம்முடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதிய பயன்பாடுகளை உருவாக்க விரும்புகின்ற நிரலாளர்கள் அந்த பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை எழுதுவதில் அதிக கவணம் செலுத்திடாமல் குறிப்பிட்ட பயன்பாடானது விரும்பியவகையில் சரியாக செயல்படுகின்றதா வென சரிபார்ப்பதில் மட்டும் அதிககவணம் செலுத்தி அந்தபயன்பாட்டினை வெற்றிகரமாக உருவாக்கி செயல்படுத்தி பயன்பெற இது உதவுகின்றது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://doc.sibvisions.com/jvx/homeஎனும் இணையதலமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.