நம்முடைய பயன்பாட்டினை கொள்கலன்களுக்கு (containers) மாற்றுவதற்கான ஐந்து 5 படிமுறைகள்

நாம் கொள்கலன்களுக்கு(containers) புதியவராக இருந்தால், இந்தcontainers எனும் பெயரைகேட்டு பயப்பட வேண்டாம். ஒரு கொள்கலன் மற்றொரு சூழல். கொள்கலணின் மேம்பாட்டின் உணரப்பட்ட தடைகள் உண்மையில் நம்மமுடைய பயன்பாட்டை ஒருமுகப்படுத்தவும், அது எவ்வாறு இயங்குகிறது, நம்பகத்தன்மையுடன் இயங்க வேண்டியது என்ன, ஏதேனும் தவறு நடந்தால் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை நன்கு புரிந்துகொள்ளவும் உதவுகின்றது மாறாக, கணிணியின் நிருவாகிகள் நம்முடைய பயன்பாட்டை நிறுவுகைசெய்து இயக்குவதற்கு மிகக் அதிக குறைவான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது, ஆயினும் கொள்கலன்கள் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்பட்ட சூழலாகும். நம்முடைய குறிமுறைவரிகளை கவனமாக மதிப்பாய்வு செய்து, நம்முடைய பயன்பாட்டிற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மறுசீரமைத்திடச்செய்திடுகின்றதுஇதனுடைய முக்கியக் கொள்கைகள் நம்முடைய பயன்பாட்டை மேகக்கணிக்கு நகர்த்த உதவக்கூடும். பொதுவாக, நம்முடைய பயன்பாட்டினை மக்கள் பயன் படுத்த விரும்பும்போது அதை நல்ல செய்தியாகக் கருதுவோம். இருப்பினும், எந்தவொரு பயன்பாடும் ஏதேனுமொரு சேவையகத்தில் இயங்கும் போது, அதுபிரபலமடைவதற்கு அதிக செலவாகின்றது. தற்போது பயனாளர் களிடம் வளங்களின் மீதான தேவைகள் அதிகரித்துகொண்டே வருகின்றன, மேலும் சில சமயங்களில், பயன்பாட்டை அளவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு சிக்கல்களில் அதிகமான சேவையகங்களைத் தூக்கி எறிந்து, Nginx போன்ற சுமையின் சமநிலையை நிறுவி, தேவையை வரிசைப்படுத்த அனுமதிப்பது போன்ற ஒரு வாய்ப்பு உள்ளது,. இருப்பினும், அந்த வாய்ப்பு அதிக செலவுபிடித்தததாக இருக்கலாம், ஏனெனில் தேவை குறைவாக இருக்கும் போது சேமிப்புகள் இல்லாமல் போய்விடுகின்றன, மேலும் போக்குவரத்து அதிகம் இல்லாத சேவையாளர்களில் நம்முடைய பயன்பாட்டின் நிகழ்வுகளை இயக்கிடுவோம். கொள்கலன்கள் தற்காலிகமாக இருப்பது, புதிய நிகழ்வுகள் கிடைக்கும்போது தொடங்குவதும் தேவை குறைவதால் செயல்படாமல் இருப்பது போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நமக்குத் தேவையான வசதியாகத் தோன்றினால், நம்முடைய பயன்பாட்டை கொள்கலன்களுக்கு மாற்றுவதற்கான சரியான பொருத்தமான நேரமாக இது இருக்கலாம். பயன்பாட்டை ஒரு கொள்கலனுக்கு நகர்த்துவது விரைவில் திசைதிருப்பும். ஒரு கொள்கலனுக்குள் இருக்கும் சூழல் நன்கு தெரிந்ததாக உணரும்போது, ​​பல கொள்கலன் images குறைவாகவே இருக்கும், மேலும் அவை நிலையற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு வகையில், இது கொள்கலன்களின் பலங்களில் ஒன்றாகும். பைதான் மெய்நிகர் சூழலைப் போலவே, இது ஒரு வெற்று பலகமாகும், இது பல சூழல்கள் வழங்கும் கண்ணுக்குத் தெரியாத இயல்புநிலைகள் இல்லாமல் நம்முடைய பயன்பாட்டை உருவாக்க (அல்லது மீண்டும் உருவாக்க) அனுமதிக்கிறது. ஒவ்வொரு இடம்பெயர்வும் தனித்துவமானது, ஆனால் நம்முடைய பயன்பாட்டை கொள்கலன்களுக்கு இடம்பெயர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான கொள்கைகள் பின்வருமாறு. 1. சார்புகளைப் புரிந்து கொள்க நம்முடைய பயன்பாட்டை ஒரு கொள்கலனிற்குள் கொண்டு செல்வது, நம்முடைய பயன்பாடு உண்மையில் எதைச் சார்ந்துள்ளது என்பதை அறிய சிறந்த வாய்ப்பாகும். மிக அவசியமான கணினி கூறுகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் மிகக் குறைவான இயல்புநிலை நிறுவல்களுடன், நம்முடைய பயன்பாடு முதலில் ஒரு கொள்கலனுக்குள் இயங்க வாய்ப்பில்லை. மறுசீரமைப் பதற்கு முன், சார்புகளை அடையாளம் காணவும். மூலக் குறிமுறை வரிகளின் மூலம் grep மூலம் தொடங்கிடுக.$ find ~/Code/myproject -type f \ -iname “.java” \ -exec grep import {} \; நாம் பயன்படுத்தும் மொழி சார்ந்த நூலகங்களை தணிக்கை சார்புகளை மட்டும் அடையாளம் காண இது போதுமானதாக இருக்காது. , எனவே மொழி இயங்குவதற்குத் தேவையான குறைந்த-நிலை நூலகங்கள் உள்ளதா அல்லது எதிர்பார்த்தபடி செயல்பட ஒரு குறிப்பிட்ட தொகுப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம். 2.தரவு சேமிப்பகத்தை மதிப்பிடுக கொள்கலன்கள் நிலையற்றவை, மேலும் ஒன்று செயலிழந்தால் அல்லது இயங்குவதை நிறுத்தினால், கொள்கலனின் அந்த நிகழ்வு என்றென்றும் இல்லாமல் போய்விடும். அந்த கொள்கலணில் தரவுகளைச் சேமித்தால், சேமித்த தரவுகளும் மறைந்து போய்விடும்.நம்முடைய பயன்பாடு ஆனது பயனாளரின் தரவுகளைச் சேமித்தால், எல்லா சேமிப்பகமும் கொள்கலனுக்கு வெளியே நிகழ வேண்டும், நம்முடைய பயன்பாட்டின் ஒரு நிகழ்விற்கு அணுகக்கூடிய சில இடத்தில். எளிமையான பயன்பாட்டு உள்ளமைவு கோப்புகளுக்கு, நம்முடைய கொள்கலனில் உள்ள இடத்திற்கு வரைபடமாக்கப்பட்ட வளாக சேமிப்ப கத்தைப் பயன்படுத்தலாம். நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரி, வலைத்தள தலைப்பு என்பனபோன்றபல எளிய கட்டமைப்பு மதிப்புகளை வழங்குவதற்கு நிர்வாகியானது தேவைப்படும் வலை பயன்பாடுகளுக்கான பொதுவான நுட்பமாகும். எடுத்துகாட்டாக: $ podman run \ –volume /local/data:/storage:Z \ mycontainer இருப்பினும், MariaDB அல்லது PostgreSQL போன்ற தரவுத்தளத்தை பெரிய அளவிலான தரவுகளுக்காக பல கொள்கலன்களில் பகிரப்பட்ட சேமிப்பகமாக உள்ளமைக்கலாம். கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவலுக்கு, ஒரு இரகசியத்தை உள்ளமைக்கலாம். குறிமுறைவரிகளை எவ்வாறு மறுசீரமைக்க வேண்டும் என்பது குறித்து, சேமிப்பக இருப்பிடங் களை அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். புதிய கொள்கலன் சேமிப்பக பதிலிடல்களுக்கு பாதைகளை மாற்றுவது, வெவ்வேறு தரவுத்தள இடங்களுக்கு வாயில்கள் அல்லது கொள்கலன்-குறிப்பிட்ட தகவமைவு களை இணைத்தல் போன்றவற்றை இது குறிக்கலாம். 3.Git repoஐ தயார் செய்க கொள்கலன்கள் பொதுவாக ஒரு Git களஞ்சி யத்திலிருந்து மூலக் குறிமுறைவரிகளை உருவாக்கும்போது அவற்றை இழுக்கின்றன.Gitகளஞ்சியத்தை நிர்வகிப்பதற்கான செயல்திட்டம் நம்மிடம் இருக்க வேண்டும், அது நம்முடைய பயன்பாட்டிற்காக உருவாகி தயாராக இருக்கும் குறிமுறைவரிகளின் நியமன ஆதாரமாக மாறியதும். ஒரு வெளியீடு அல்லது உருவாக்கிடும் கிளையை வைத்திடுக தற்செயலான அங்கீகரிக்கப்படாத பணிகளை நிராகரிக்க Git hookஐ பயன்படுத்திடுக. 4.நம்முடைய உருவாக்க அமைப்பை அறிந்து கொள்க. கொள்கலன் செய்யப்பட்ட பயன்பாடுகளில் பாரம்பரிய வெளியீட்டு சுழற்சிகள் இல்லை. ஒரு கொள்கலன் கட்டப்படும்போது அவை Git இலிருந்து இழுக்கப் படுகின்றன.நம்முடைய. கொள்கலண் கட்டமைப்பின் ஒரு பகுதியாக எந்த எண்ணிக்கையிலான உருவாக்க அமைப்புகளையும் தொடங்கலாம், ஆனால் நம்முடைய build அமைவை முன்பு இருந்ததை விட தானியங்கி முறையில் சரிசெய்வதை இது குறிக்கலாம். நம்முடைய உருவாக்க செயல்முறையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அது முற்றிலும் கவனிக்கப்படாமல் செயல்படுகிறது என்பதில் நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. 5. ஒரு imageஐ உருவாக்கிடுக ஒரு imageஐ உருவாக்குவது ஒரு சிக்கலான பணியாக இருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே உள்ள கொள்கலன் imageகளை அடிப்படையாகப் பயன்படுத்தலாம், அவற்றை எளிய Dockerfile மூலம் மாற்றியமைக்கலாம். மாற்றாக, Buildah ஐப் பயன்படுத்தி புதிதாக நாமே கூட உருவாக்கலாம். ஒரு கொள்கலனை உருவாக்கும் செயல்முறை, ஒரு வகையில், நம்முடைய குறிமுறைவரிகளை உண்மையில் மறுசீரமைப்பது போன்ற மேம்படுத்துதலின் ஒரு பகுதியாகும். இது நம்முடைய பயன்பாட்டைப் பெற்று, தொகுத்து, செயல்படுத்தும் கொள்கலன் உருவாக்கம் ஆகும், எனவே செயல்முறை தானியங்கி வலுவானதாக இருக்க வேண்டும். அதற்காக ஒரு நல்ல imageஐ உருவாக்கிடுக, நம்முடைய பயன்பாட்டிற்கு உறுதியான நம்பகமான அடித்தளத்தை உருவாக்குகிடுக. அதை கொள்கலனில் வைத்திடுக .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.