pdftk-java எனும்கட்டளைவரியுடன் PDF கோப்பினை திருத்தி அமைத்திடுக

எளிமையான pdftk-java எனும் கட்டளைவரியுடன் PDFகளை இணைக்கவும், PDFபக்கங்களை அகற்றவும், PDFகளை பிரிக்கவும்,படிவங்களை நிரப்பவும் செய்து பயன்பெறுக. தற்போது தொழில்நுட்ப வெள்ளை அறிக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், RPG புத்தகங்களுக்கு இடையில், ஒவ்வொரு நாளும் நிறைய PDFகளை கையாளவேண்டிய சூழல் உருவாகின்றது.

பொதுவாக தற்போது PDF வடிவமைப்பு மிகவும் பிரபலமானது, ஏனெனில் அதில் PostScript இன் குறிமுறைவரிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த PostScript என்பது நவீன அச்சுப்பொறிகளின் சொந்த இயந்திர மொழியாகும், எனவே வெளியீட்டாளர்கள் ஒரு புத்தகத்தின் எண்ம பதிப்பை PDF ஆக வெளியிடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் எப்படியும் அச்சிடுவதற்கான கோப்பை தயாரிப்பதற்கான நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ளனர். ஆனால் ஒரு PDF ஆனது திருத்தம் செய்யக்கூடிய வடிவமைப்பாக இருக்கக் கூடாது, மேலும் சில தலைகீழ் செயலாக்கம் சாத்தியம் என்றாலும், அது அச்சுப்பொறிக்கு அனுப்பப்படுவதற்கு முன் எண்ம தரவுக்கான கடைசி நிறுத்தமாக இருக்க வேண்டும். அப்படியிருந்தும், சில சமயங்களில் PDF இல் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும், மேலும் அவ்வாறான பணிக்கான கருவிகளில் ஒன்று pdftk-java கட்டளைவரியாகும். லினக்ஸில் pdftk-java ஐ நிறுவுகைசெய்திடுக அதன் பெயர் குறிப்பிடுவது போல, pdftk-java இன் குறிமுறைவரிகள் ஜாவாவில் எழுதப்பட்டுள்ளது, எனவே கணினியில் ஜாவாவை நிறுவுகை செய்திருக்கும் வரை இது அனைத்து முக்கிய இயக்க முறைமைகளிலும் செயல்படுகிறது. Linux பயனாளர்கள்AdoptOpenJDK.net எனும் இணைய தளத்திலிருந்து ஜாவாவை நிறுவுகைசெய்திடலாம். விண்டோ பயனாளர்கள் எனில்OpenJDK இன் Red Hat இன் விண்டோ கட்டமைப்பை நிறுவுகை செய்திடலாம்.

Pdftk-java ஐ நிறுவுகைசெய்தல்: 1.முதலில்pdftk-all.jar வெளியீட்டை அதன் Gitlab களஞ்சியத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதைநம்முடைய கணினியில் உள்ள ~/.local/bin/orsome எனும் அடைவில் சேமித்திடுக.

2. பின்னர் நமக்குப் பிடித்த உரைபதிப்பாளரைத் திறந்து, அதில் பின்வரும் வரியைச் சேர்த்திடுக: alias pdftk='java -jar $HOME/.local/bin/pdftk-all.jar'

3.அதன்பின்னர் நம்முடைய புதிய Bash அமைப்புகளை பின்வரும் கட்டளைவரிமூலம்செயலிற்கு கொண்டுவருக: $source~/.bashrc

கட்டளை தொடரியல் Validpdftk-javacommand இன் அமைப்பு ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறது, ஆனால் வழிமுறையில் உள்ளவற்றில் நிறைய நெகிழ்வுத்தன்மை உள்ளது. தொடரியல் கொஞ்சம் அசாதாரணமானது, ஏனெனில் இது பாரம்பரிய-பாவணை முனைம வய்ப்புகளைப் பயன்படுத்தாது, ஆனால் நடைமுறையில், அதை நினைவில் கொள்வது மிகவும் கடினம் அன்று. இந்த கட்டளைவரிகளின் பொதுவான கட்டமைப்பு பின்வருமாறு

pdftk: கட்டளையை அழைப்பதற்கான மாற்றுப்பெயர்

input file: நாம் மாற்ற விரும்பும் PDFகோப்பு

action: உள்ளீட்டு கோப்பில் நாம் என்ன செய்ய விரும்புகின்றோம்

output: மாற்றியமைக்கப்பட்ட PDF கோப்பை எங்கே சேமிக்க விரும்புகின்றோம் எனக்குறிப்பிடுவது.இது மிகவும் சிக்கலான செயல் பகுதியாகும், எனவே எளிய பணிகளுடன் தொடங்கலாம்.

இரண்டு PDF கோப்புகளை ஒன்றாக இணைத்தல் ஒரு புத்தகத்தின் முகப்பு அட்டையை மற்ற புத்தகங்களை விட Inkscape அல்லது GIMP போன்ற ஒரு தனி பயன்பாட்டில் உருவாக்குவது வழக்கத்திற்கு மாறானது அன்று, இது பொதுவாக Scribus போன்ற தளவமைப்பு பயன்பாட்டில் அல்லது LibreOffice போன்ற அலுவலக தொகுப்பில் செய்யப்படுகிறது. தளவமைப்பு பயன்பாட்டில் இரண்டையும் இணைக்கலாம். Scribus போன்ற ஒரு நல்ல மேசைக்கணினிபயன்பாட்டின் வெளியீட்டாளர் படத்தைக் குறிப்பிடுவதை எளிதாக்குகிறார், இதனால் அட்டை மாறும் போது, அது தானாகவே தளவமைப்பில் புதுப்பிக்கப்படும். இருப்பினும், pdftk-java உடன் PDF க்கு அட்டையை முன்கூட்டியே உருவாக்கவும் முடியும்:

$ pdftk cover.pdf body.pdf \
cat\
output book.pdf

இந்த எடுத்துக்காட்டில், cat என்பது செயல்பாடகும்,இது inconcatenate , Linux cat கட்டளையைப் போலவே, இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட PDF கோப்புகளை ஒரு தரவு ஓடையில் இணைக்கிறது, மேலும் தரவு ஓடையின் வெளியீட்டு தருக்கம் குறிப்பிடும் கோப்புக்கு அனுப்பப்படும். PDF இலிருந்து பக்கங்களை அகற்றவும் PDF இலிருந்து ஒரு பக்கத்தை சரியாக அகற்ற முடியாது, ஆனால் நாம் வைத்திருக்க விரும்பும் பக்கங்களை மட்டுமே கொண்ட புதிய PDF ஐ உருவாக்கலாம்.

$ pdftk book.pdf \
cat1 3-end \
output shorter-book.pdf

இந்த எடுத்துக்காட்டில், புத்தகக் கோப்பின் பக்கம் 1உம் , பக்கம்3 முதல் இறுதி வரை உள்ள அனைத்துப் பக்கங்களும் புதிய கோப்பில் சேமிக்கப்படும். எனவே, நீக்கிய பக்கம் பக்கம் 2 ஆகும். PDF ஐ தனித்தனி கோப்புகளாக பிரிக்கவும் ஒரு PDF கோப்பை பல்வேறு கோப்புகளாகப் பிரிப்பதும் cat ஆனது actionஐப் பயன்படுத்துகிறது, மேலும் இது கொள்கையளவில் பக்கங்களை அகற்றுவதைப் போன்றது. நாம் விரும்பும் பக்கங்களை புதிய கோப்பிற்கு அனுப்புவதன் மூலம் PDFஐப் பிரிக்கலாம்:

$ pdftk book.pdf \
cat1-15\
output part-1.pdf
$ pdftk book.pdf \
cat16-42\
output part-2.pdf

PDFஐ ஒற்றைப் பக்கக் கோப்புகளாகப் பிரிக்க வேண்டும் என்றால், calledburst எனப்படும் சிறப்புச் செயல் உள்ளது:

$ pdftk book.pdf burst
$ls
book.pdf pg_0001.pdf pg_0002.pdf
pg_0003.pdf pg_0004.pdf pg_0005.pdf
[...]

படிவங்களை நிரப்பவும் PDF வடிவமைப்பு பல ஆண்டுகளாக மேம்படுத்த படவில்லை என்று சிலர் வாதிடுவார்கள், மேலும் சில நேரங்களில் PDF கோப்பில் காணப்படும் ஒரு வசதி என்பதுநிரப்பக்கூடிய படிவமாகும். வரி ஆவணங்கள், RPG எழுத்துத் தாள்கள், நேரடியஇணைய வகுப்புகளின் பணிப்புத்தகங்கள் , ஊடாடக்கூடிய பிற PDF கோப்புகளில் இதை காணலாம். GNOME’s Evince,KDE’s Okular போன்ற பெரும்பாலான நவீன PDF பார்வையாளர்கள் PDF படிவங்களை நிரப்ப முடியும், pdftk-java உதவியுடன் PDF படிவத்தையும் நிரப்பலாம். முதலில், the generate_fdfaction ஐப் பயன்படுத்தி படிவத் தரவைப் பிரித்தெடுக்க வேண்டும். இது படிவ உறுப்புகளின் சுட்டிகளைப் பிரித்தெடுத்து அவற்றை உரைக் கோப்பில் வைக்கிறது.

$ pdftk character-sheet.pdf \
generate_fdf \
output chsheet-form.txt

நம்முடைய இலக்கு கோப்பில் (இந்த எடுத்துக்காட்டில், chsheet-form.txt) PDF இல் உள்ள படிவத்தின் தரவு உள்ளது, ஆனால் உரைப் பகுதிகள் மட்டுமே உள்ளன. AtomorGedit போன்ற எந்த நிலையான உரை பதிப்பாளரிலும் நாம் அதைத் திருத்தலாம். PDF ஐ உருவாக்குகின்ற நிறுவனத்தின் பணிப்பாய்வு சில நேரங்களில் போற்றத்தக்கதாகவும் சில சமயங்களில் மோசமான பார்வையிலும், சில படிவங்கள் தெளிவாக முகவரியிடப்பட்டிருப்பதைக் காணலாம், மற்றவை “Checkbox_001” , “Textfield-021” போன்ற இயல்புநிலை பெயர்களைக் கொண்டிருப்பதால், அதனை கடக்க வேண்டியிருக்கும். PDF உடன் உரைக் கோப்பைக் குறிப்பிடுக, ஆனால் படிவங்களை தானாக நிரப்ப உரைநிரலை எழுதினால் அது பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு முகவரிதாளும் a/Titem எனக் குறிக்கப்பட்டுள்ளது, மேலும் பின்வரும் கடட்ளைவரிகளில், உரை உள்ளீட்டிற்கு இடம் (/V எனக் குறிக்கப்பட்டது) வழங்கப்படுகிறது. அதன் முகவரிதாளிற்கான சூழலும் சில தரவு நிரப்பப்பட்ட ஒன்றின் துணுக்கு பின்வருமாறு:

/T (CharacterName 2)
/V (Abaddon)
>>
<<
/T (SlotsTotal 24)
/V ()
>>
<<
/T (Hair)
/V (Brown)
>>
<<
/T (AC)
/V (15)
>>
<<
/T (Background)
/V ()
>>
<<
/T (DEXmod )
/V ()

படிவத் தரவை உள்ளிட்ட பிறகு, உரை உள்ளீட்டை PDF கட்டமைப்புடன் இணைக்கலாம்

$ pdftk character-sheet.pdf \
fill_form chsheet-form.txt \
output completed.pdf

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.