எக்செல்லில் விரிதாளின் பெயரை எவ்வாறு பெறுவது?(எளிதான சூத்திரம்)

நாம் எக்செல் விரிதாள்களுடன் பணிபுரியும் போது, சில சமயங்களில் பணித்தாளின் பெயரைப் பெற வேண்டியிருக்கும். தாளின் பெயரை எப்பொழுதும் கைமுறையாக உள்ளிட முடியும் என்றாலும், தாளின் பெயர் மாற்றப்பட்டால் கைமுறையாக உள்ளிடும்போது புதுப்பிக்கப்படாது. தாளின் பெயரைப் பெற விரும்பினால், பெயரை மாற்றும்போது அது தானாகவே புதுப்பிக்கப்படவேண்டும், இதற்காக ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். . இந்த பயிற்சிகட்டுரையில், ஒரு எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தி எக்செல்லில் தாளின் பெயரை புதுப்பித்தலுடன் எவ்வாறு பெறுவது என்பதைக் காண்போம்.

1. CELLஎனும் செயலலியைப் பயன்படுத்தி விரிதாளின் பெயரைப் பெறுதல் எக்செல்லில் உள்ள CELL எனும் செயலியானது பயன்படுத்தப்படும் கலணைப் பற்றிய தகவல்களை விரைவாகப் பெற அனுமதிக்கிறது. இந்தச் செயலியானது சூத்திரத்தின் விளைவாக கிடைக்கின்ற கோப்பின் முழுபெயரையும் பெற அனுமதிக்கிறது. நம்மிடம் ‘Sales Data’ என்ற பணித்தாளின் பெயருடன் எக்செல் பணிப்புத்தகம் ஒன்றுள்ளது எனக்கொள்க. ‘Sales Data’ இல் உள்ள எந்த கலண்களிலும் பயன்படுத்திடுகின்ற சூத்திரம் பின்வருமாறு.:

=CELL(“filename”)) ,

இந்த சூத்திரத்தைப் பயன்படுத்திடும் போது நமக்கு கிடைத்த கோப்பின் முழு முகவரியையும் நாம் காண முடியும் .ஆனால் நமக்கு குறிப்பிட்ட ஒருதாளின் பெயர் மட்டுமே தேவை, முழு கோப்பு முகவரி அன்று, இந்நிலையில், தாளின் பெயரை மட்டும் பெற, இந்த சூத்திரத்தை வேறு சில சூத்திரங்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும், அதனைகொண்டு தாளின் பெயரை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். கீழே உள்ள சூத்திரம், அந்தத் தாளில் உள்ள எந்தக் கலணிலும், அந்ததாளின் பெயரை மட்டுமே வழங்கும்:

=RIGHT(CELL(“filename”),LEN(CELL(“filename”))-FIND(“]”,CELL(“filename”)))

மேலே உள்ள சூத்திரம் எல்லா காட்சிகளிலும் தாளின் பெயரை மட்டும்நமக்கு வழங்கும். இதனுடைய சிறந்த வசதி என்னவென்றால், தாளின் பெயர் அல்லது கோப்பின் பெயரை மாற்றினால் அது தானாகவே புதுப்பிக்கப்படும்.

பணிப் புத்தகத்தை சேமித்திருந்தால் மட்டுமே CELL எனும்சூத்திரம் செயல்படும் என்பதை நினைவில் கொள்க. இல்லையென்றால், அது காலியாக இருக்கும் (ஏனெனில் பணிப்புத்தகம் இருக்கும் இடத்திற்கான பாதை என்னவென்று தெரியாததால்)

இந்த சூத்திரம் எவ்வாறு செயல்படுகின்றது?

CELL எனும்சூத்திரமானது முழுப் பணிப்புத்தக முகவரியையும் இறுதியில் சதுர அடைப்புக்குறிக்கு (]) பிறகுதான் தாளின் பெயருடன் வழங்குகிறது. இது தாளின் பெயரை வைத்திருப்பதற்கான எப்போதும் பின்பற்றும் ஒரு விதியாகும். இதை அறிந்தால், சதுர அடைப்புக் குறியின் நிலையை நாம் கண்டுபிடித்து, அதன் பிறகுஉள்ள எல்லாவற்றையும் பிரித்தெடுக்கலாம் (பொதுவாக இது தாளின் பெயராக இருக்கும்) , இந்த சூத்திரம் சரியாக என்ன செய்கிறது. இந்த சூத்தரத்தின் FIND எனும்பகுதியானது ‘]’ சதுர அடைப்புக் குறியினைத் தேடி, அதன் நிலையை தருகின்றது (இது சதுர அடைப்புக்குறி காணப்படும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்ற எண்ணாகும்) .எல்லாவற்றையும் பிரித்தெடுக்க RIGHTஎனும் சூத்திரத்தில் சதுர அடைப்புக்குறிக்குப் பிறகு உள்ள சதுர அடைப்புக்குறியின் இந்த நிலையைப் பயன்படுத்திகொள்கிறோம்

CELL எனும் சூத்திரத்தில் உள்ள ஒரு முக்கிய சிக்கல் என்னவென்றால், அது மாறிகொண்டே இருக்கும்.அதாவது Sheet1 இல் பயன்படுத்தியபின்னர் Sheet2 க்குச் சென்றால், Sheet1 இல் உள்ள சூத்திரம் மேம்படுத்தப்பட்டு, Sheet2 எனப் பெயரை காண்பிக்கும் (Sheet1 இல் சூத்திரம் இருந்தாலும்). CELL எனும் சூத்திரம் செயலில் உள்ள தாளில் உள்ள கலணைக் கருத்தில் கொண்டு, பணிப்புத்தகத்தில் எங்கிருந்தாலும் அந்தத் தாளின் பெயரைக் கொடுப்பதால் இது நிகழ்கிறது. செயலில் உள்ள தாளில் CELL எனும் சூத்திரத்தைப் புதுப்பிக்க விரும்பும் போது F9 எனும் செயலிவிசையை அழுத்துவதே ஒரு தீர்வாக இருக்கும். இது மறுகணக்கீட்டை கட்டாயப்படுத்தும் 2.விரிதாளின் பெயரைப் பெறுவதற்கான மாற்று சூத்திரம் (MID எனும் சூத்திரம்) எக்செல்லில் ஒரே செயலை செய்ய பல வழிகள் உள்ளன. இந்த செயலிலும், அதே போல் செயல்படுகின்ற மற்றொரு சூத்திரம் உள்ளது. RIGHT எனும் செயலிக்கு பதிலாக, இது MID எனும் செயலியைப் பயன்படுத்துகிறது. அதற்கான சூத்திரம் கீழே உள்ளவாறு அமைந்திருக்கும்:

=MID(CELL(“filename”),FIND(“]”,CELL(“filename”))+1,255)

இந்த சூத்திரம் RIGHT எனும் செயலியின் சூத்திரத்தைப் போலவே செயல் படுகிறது, முதலில் சதுர அடைப்புக்குறியின் நிலையைக் கண்டறிகிறது (FIND செயலியைப் பயன்படுத்தி). அதன்பின்னர்சதுர அடைப்புக்குறிக்குப் பிறகு உள்ள எல்லாவற்றையும் பிரித்தெடுக்க இது MID செயலியைப் பயன்படுத்துகிறது

3.தாளின் பெயரைப் பெறுதலும் அதில் உரையைச் சேர்த்தலும்

நாம் ஒரு முகப்புத்திரையை உருவாக்குகின்றோம் எனில், பணித்தாளின் பெயரை மட்டும் பெறாமல், அதற்கு முன்னும் பின்னும் ஒரு உரையைச் சேர்க்க வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, நம்மிடம் தாளின் பெயர் 2022 என்றவாறு இருந்தால், இதனுடைய முடிவை ‘Summary of 2022’ (தாளின் பெயர் மட்டும் அன்று) எனப் பெற விரும்பலாம். இதற்காக & எனும் இயக்குபவரைப் பயன்படுத்தி நாம் மேலே பார்த்த சூத்தரத்தில் அதற்கு முன் நமக்குத் தேவையான உரையுடன் இணைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். தாளின் பெயருக்கு முன் ‘Summary’ என்ற உரையைச் சேர்க்கும் சூத்திரம் பின்வருமாறு:

=”Summary of “&RIGHT(CELL(“filename”),LEN(CELL(“filename”))-FIND(“]”,CELL(“filename”))) இதில் சூத்திரத்திற்கு முன் உள்ள உரையை சூத்திரத்தின் முடிவுடன் ஒருங்கிணைக்கிறது. இதில் & என்பதற்குப் பதிலாக CONCAT அல்லது CONCATENATE செயலிகளையும் பயன்படுத்தலாம். இதேபோல், சூத்திரத்திற்குப் பிறகு ஏதேனும் உரையைச் சேர்க்க விரும்பினால், அதே & எனும் தருக்கத்தைப் பயன்படுத்தலாம் (அதாவது, இணைக்க விரும்பும் உரையைத் தொடர்ந்து சூத்திரத்திற்குப் பிறகு & என்பது இருக்க வேண்டும்). இவை எக்செல்லில் தாளின் பெயரைப் பெற நாம் பயன்படுத்தக்கூடிய எளிய இரண்டு சூத்திரங்களாகும்..

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.