AcademiX எனும் கல்விக்கான இயக்கமுறைமை

AcademiX GNU / Linux என்பது டெபியனை அடிப்படையாகக் கொண்ட லினக்ஸ் (Stretch / Buster) விநியோகமாகும், இது குறிப்பாக ஆரம்ப பள்ளி முதல் உயர்நிலை, / அல்லது பல்கலைக்கழக நிலைகள் வரை. அனைத்து நிலையிலான கல்வி மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. –
கல்வியில் கணிதம், இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல், புள்ளியியல், மின்னணுவியல், பொழுதுபோக்கு வானொலி, வரைகலை, அலுவலகம், நிரலாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளை நிறுவப் பயன்படுகின்ற ஒரு நிறுவுகை பயன்பாட்டை இந்த அகாடமிக்ஸ் லினக்ஸ் விநியோகமானது கொண்டுள்ளது. இது மெய்நிகர் ஆய்வகங்கள், அத்துடன் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மெய்நிகர் நுண்ணோக்கி ஆகிய வசதிகளை வழங்குகின்றது. இந்த விநியோகத்தால் வழங்கப்படுகின்ற கல்வித் திட்டங்களின் பட்டியலை இயந்திர இயந்திர மனிதர்களின்(Robotics )ஆய்வகங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்கின்றன.
இதில் ஒரு சிறப்புப் பிரிவு ஆசிரியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவர்களின் பயன்பாடு ,இணையத்தின் நேரடி வெளியீடு ஆகிய இரண்டிற்கும் பல்வேறு கட்டுரைகளை , உள்ளடக்கங்களை உருவாக்க அவர்களை அனுமதிக் கிறது. இதில் நிறுவுகைசெய்யப்பட்ட பயன்பாடுகள் 150 க்கும் மேற்பட்ட கல்வி செயல்திட்டங்களை வழங்குகிறது, அவைகளை ஒரேயொரு சொடுக்குதலில் எளிதாக நிறுவுகைசெய்திடலாம்.
இதனுடைய சில பயன்பாடுகள் டெபியனால் உருவாக்கப்பட்டவை, மற்றவை அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவை களாகும். Mate அடிப்படையிலான மேசைக்கணினி சூழல் குறைந்த வள பயன்பாடு, நவீன , உள்ளுணர்வு இடைமுகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நல்ல சமரசத்தை வழங்குகிறது, இதனால் பல்வேறு கல்வி நிறுவனங்களால் இன்னும் பயன்படுத்தப்படுகின்ற பழைய கணினிகளில் சீராக இயங்குகின்ற திறன்கொண்டுள்ளது.
இந்த விநியோகத்தில் வழங்கப்படுகின்ற பெரும்பாலான கல்வி மென்பொருட்கள் GNU GPL அல்லது BSD உரிமங்களின் கீழ் உரிமம் பெற்றவை, எனவே இறுதி பயனாளர்கள் இந்தGNU / Linux Academixஐ பயன்படுத்தி கொள்வதற்கான செலவுகளானவை நிலையான பராமரிப்பு , புதுப்பித்தல் மூலம் மட்டுமே யாகும் . இவ்விநியோகத்தை நேரடி கானொளியாகவோ அல்லது வன்தட்டில் நிறுவுகைசெய்யப்பட்ட ஒரு தனி இயங்குதளமாகவோ பயன்படுத்தலாம். ஒரு பரிசோதனை வசதியாக ஒரு வகுப்பறையில் Academix GNU / Linux ஐப் பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.

இது(GPLv3), (LGPLv3),ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://academixproject.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.