புரவலரின்பெயர்(Hostname) என்றால் என்ன?

Hostnames என்பவை மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட கணினியைக் குறிப்பிடுவதற்கான அடையாளச்சீட்டுகளாகும். வலைபின்னல்களில் இணைந்துள்ள கணினிகளின் முகவரிகள் ஏராளமாக உள்ளன, ஆனால் பொதுவாக அவைகளை மனிதர்களால் நினைவில் கொள்வது கடினமாகும்.எடுத்துக்காட்டாக, 192..168.1.4 எனும் முகவரியை கொண்டு வலைபின்னலில் இணைந்துள்ள கணினியை மிகச்சரியான கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும் அதற்கு பதிலாக,  linuxlaptop அல்லதுlinuxlaptop.local என்றவாறு பெயரெனில் வலைபின்னலில் இணைந்துள்ள கணினி எதுவென மிக எளிதாக கண்டுபிடித்திடலாம்.
முகவரிகளும்பெயர்களும்
வலைபின்னலுக்குட்பட்ட அனைத்து கணினிகளுக்கும் (புரவலர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது) தேவையான ஒரு முகவரி – அதனுடன் தொடர்புடைய ஒரு தனிப்பட்ட எண்ஆனது, சரியான தகவல்தொடர்புகளுக்கும் அவற்றுக்கிடையே சரியாக வழிநடத்தவும் அனுமதிக்கிறது. இது இணைய நெறிமுறையின்(IP) முகவரி என்று அழைக்கப்படுகிறது. எண் 54.204.39.132 என்பது இணைய நெறிமுறை பதிப்பு 4 (IPv4)இன்படியான முகவரியாகும். ஆனால்புதிய IPv6 முகவரிகள் மிகவும் நீளமானவைகளாகும், அதாவது இதன்படி முகவரியானது : 2001:0db6:3c4d:0017:0000:0000:2a2f:1a2b. என்றவாறு மிக நீண்டிருக்கும் அடடா! இதை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்குமல்லவா!
கணினிகளுக்கு அடையாளச்சீட்டுகளையும் கொடுக்கலாம். அவை புரவலர்களின் பெயர்கள் என அறியப்படும், இவை எளிதான குறிப்புகளுக்கான நட்புப் பெயர்களாகும். கணினியின் புரவலரின்பெயரை becopperhead என அமைக்கலாம். வலைபின்னலில் அந்த பெயர் தனித்துவமாக இருக்கும் வரை, மற்ற அனைத்து பயனாளர்களும் கணினிகளும் IP முகவரியாக எண்ணுக்கு பதிலாக எழுத்துகளில் copperhead என்றவாறு குறிப்பிடலாம்.
தேவையானால் கணினியின் புரவலரின் பெயரை புதுப்பிக்கலாம்.
தகுதிவாய்ந்த.முழுமையான களப்பெயர்
தொழில்நுட்ப ரீதியாக, புரவலரின்பெயரில் ஒரு களப்பெயர் உள்ளது. களப்பெயர் ஆனது mycompany.com எனில், காலஇடைவெளிகளால் பிரிக்கப்பட்டால், அந்த கணினியின் புரவலரின்பெயர் copperhead.mycompany.com என்றவாறு இருக்கும். இது தகுதியான முழுக்களப் பெயரை ( fully qualified domain name (FQDN)) உருவாக்குகிறது. இது முக்கியமானது, ஏனெனில் IP முகவரியானது FQDN இல் தீர்வுசெய்யப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:www.example.com என்பது தகுதியானமுழுக்களப்பெயராகும்.
பொதுவாகநமக்கான களப்பெயர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது, எனவே புரவலரின் பகுதியை வழங்குவதற்கு நாம் மட்டுமே பொறுப்பாகும்.
பெயரிடுவதற்கானதீர்வு
IP முகவரியை தொடர்புடைய புரவலரின்பெயருக்கு மொழிபெயர்க்கும் செயல்முறைபெயர் தீர்வு எனப்படும். இது நிகழும் முதல் இடம் வளாக புரவலரின் அட்டவணையில் உள்ளது. இந்த அட்டவணையை சேமிக்க Linux ஆனது file/etc/hosts எனும் கட்டளைவரியை பயன்படுத்துகிறது.

cat /etc/hosts
களப்பெயர் அமைப்பு (DNS) எனப்படும் தீர்வினை வழங்குகின்ற படிநிலையும் பரவலாக்கப்பட்ட பிணைய அடிப்படையிலான அமைப்பும் உள்ளது. இந்த நேரத்தில்தான் FQDN மிகவும் முக்கியமானதாக திகழ்கின்றது.

வேடிக்கையான பெயர்கள் 

lowenbrau என்பது அதிக தற்காலிகநினைவகத்தை(RAM) கொண்ட மெய்நிகராக்க சேவையகம் என்பதையும், peroni என்பது SQL தரவுத்தள சேவையகம் என்பதையும், heineken புதிய செயற்களகட்டுப்பாட்டாளர் என்பதையும் நினைவில் கொள்ள முயற்சித்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திடுக, குறிப்பாக வளர்ந்து வரும் நிறுவனத்தில் புதிய ஊழியர்களிடம் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திடுக.

பெயரிடும் மரபுகள்

புரவலர்களின் பெயர்கள் உரிமையாளரின் விருப்பமாகும்,  இருப்பினும், சுற்றுச்சூழலைப் பொறுத்து, நினைவில் கொள்ள எளிதான பெயர்களைப் பயன்படுத்துவது அல்லது புரவலருக்கு விளக்கமளிக்கும் பெயரிடும் மரபு அடிப்படையிலான பெயர்களைப் பயன்படுத்துவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

பயனுள்ளபெயர்கள்

 வேடிக்கையைத் தவிர்த்துவிட்டு,  கணினிகளுக்கு உதவிகரமாக பெயரிட விரும்பினால், அவற்றின் செயல்பாட்டைக் கருத்தில் கொள்ளலாம். உதாரணமாக தரவுத்தள சேவையகங்கள்  database1, database2, database3 ,என்றவாறு பெயர்களை இடலாம். வலை சேவையகங்கள்எனில் webserver1, webserver2 என்றவாறு பெயர்கள் இருக்கலாம்.
நிலைப் பெயர்கள்
பல வாடிக்கையாளர்களுடன் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த அமைப்பின் ஒரு வசதியைஅடையாளம் காண உதவும் நிலைகளில் உள்ள எழுத்துகளின் தொகுப்புகளுடன் சேவையாளர்களின் புரவலர்களை பெயரிடலாம். எடுத்துக்காட்டாக, நிறுவனங்களின் விவகாரத்துறை அமைச்சகம் (Ministry of Corporate Affairs (MCA)) வணிக செயல்முறை மேலாண்மை (Business Process Management (BPM) ) என்றவாறு, பெயரிடும் மரபில் அவற்றின் முதலெழுத்துகளை கொண்ட சுருக்கெழுத்துக்களை வைத்திடுவோம்.
மேலும், பல பெரிய நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசாங்கங்களைப் போலவே, அவை செயல்திறன் அல்லது பேரழிவு மீட்பு நோக்கங்களுக்காக வேறுபட்ட புவியியல் இடங்களில் அமைந்துள்ள பல்வேறு தரவு மையங்களைக் கொண்டிருக்கலாம். அதாவது, வட இந்தியாவில் உள்ள ஒரு தரவு மையம் NID என குறிப்பிடப்படுகிறது, மேலும் தென்னிந்தியாவில் உள்ளவை SID ஆகும். இவ்விரண்டும் வடக்கு தரவு மையம் ,தெற்கு தரவு மையம் ஆகும்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் doibpm1nid அல்லது doibpm1sid போன்ற பெயரில் ஒன்றாக வரும். எனவே, இந்தப் பெயர்கள் பற்றிய விவரம் மற்றவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், இந்தத் திட்டத்தில் பணிபுரியும் ஒருவரால், இந்த பெயர் ஒவ்வொன்றை பற்றியும் அவற்றின் நோக்கம் , இருப்பிடம் ஆகிய விவரங்களைஉடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும், மேலும் இந்த பெயர் தவறாக செயல்படுபவர்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் பயன்பாட்டை தெளிவுபடுத்தவும் உதவக்கூடும். வேறு சொற்களில் கூறுவதானால், உரிமையாளர் பெயரிடலைத் தேர்ந்தெடுக்கலாம், அது அந்நிறுவனத்தில் உள்ள நபர்களுக்கு மட்டுமே புரியும்.
இணைய தரநிலைகள்
பல தரநிலைகள் புரவலர்களின்பெயர்களை நிர்வகிக்கின்றன. இணையப் பொறியியல் பணிக்குழுவால் ( Internet Engineering Task Force(IETF)) பராமரிக்கப்படும் கருத்துக்கான கோரிக்கைகளில் (Requests for Comment (RFC)) இவற்றைக் காணலாம். இப்போதைக்கு, பெயரிடுவதற்கு பின்வருவனவற்றைக் கடைப்பிடித்திடுக:
 1.புரவலரின் பெயர் 1 முதல் 63 வரையிலானASCII எழுத்துகளாக இருக்க வேண்டும்.
2ஒரு FQDN ஆனது அதிகபட்சமாக 253 வரையிலானASCII எழுத்துக் களைக் கொண்டுள்ளது.
3.பெயரில் குறிப்பிடபடும் ஆங்கிலஎழுத்துகளின் பெரிய எழுத்துகள் சிறியஎழுத்துகள் ஆகியவைகளுக்கு இடையே வேறுபாடு கொண்டுள்ளன.
4.அனுமதிக்கப்பட்ட எழுத்துக்கள்: a முதல் z, 0 முதல் 9, - (இடைக்கோடு), , _ (அடிக்கோடு) கொண்டிருக்கவேண்டும்.


பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.