GobLin எனும் அரசு அலுவலகங்களுக்கான இயக்கமுறைமை

GobLin என்பது அரசாங்க (அரசு அலுவலக)பயன்பாட்டிற்கான குனு/லினக்ஸ் (GNU/Linux) இயக்க முறைமையாகும். இதுகுனு/லினக்ஸ்(GNU/Linux) இயக்க முறைமையின் தனிப்பயனாக்கப்பட்ட விநியோகத்தினை கொண்டது, பொது நிர்வாகத்தின் தேவைகளுக்கு ஏற்றது. இது கட்டற்ற மென்பொருள் அடிப்படையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பொது நிர்வாகத்தின் ஒவ்வொரு நிலையையும் உள்ளடக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுஅரசு அலுவலகங்களுக்கு நவீன நிர்வாகத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, மேம்பட்ட மேலாண்மை கருவிகளையும், மென்பொருள் கருவிகளையும் ஒருங்கிணைத்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. இது Devuan GNU/Linux distro என்பதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சொந்த ஏற்புகை வடிவமைப்பாகும், இது தோல்விகளை வெற்றகளாக மாற்றிடுகின்ற திறனுடைய ஒரு வலுவான இயக்க முறைமையாகும்,மேலும் இது இணைய சேவைய கங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, இது கணினிகளின் செயல்பாட்டில் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது அரசு அலுவலகங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது, இது உற்பத்தித்திறன் , நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் பயன்பாட்டு மென்பொருளை ஒருங்கிணைக்கிறது. இது ஒரு திற செயல்திட்டமாக இருப்பதால், இந்த செயல்பாடு அரசாங்கத்தின் எந்த நோக்கத்திற்கும் அல்லது எந்த நிலைக்கும் மாற்றியஇதுDevuan GNU/Linux அடிப்படையிலானது, இது 64-பிட் இயங்குதளமாகும், இது செயலாக்க வேகத்திற்கும், அதிக உற்பத்தித்திறனுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இது ஒரு கட்டணமற்ற உரிமம் கொண்டது. உற்பத்தி அல்லது விநியோக செலவுகள் இல்லாமல், இதனை சுதந்திரத்துடன் நகலெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். . இது பல்வேறு சிறந்த அலுவலக கருவிகளையும் மென்பொருட்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட அலுவலக பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது. நவீன, உள்ளுணர்வுடன்கூடிய ,பயனாளர் நட்புடன்கூடிய இடைமுகத்துடன் அமைந்துள்ளது. இது ஒரு முதிர்ந்த, நிலையான ,பரிசோதிக்கப்பட்ட அமைப்பாகும், இது வன்பொருளின் செயல்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது LibreOffice ஐ இயல்புநிலை அலுவலக தொகுப்பாகப் பயன்படுத்தி, அலுவலக ஆவணங்களுக்கான திறந்த தரநிலையை (ODF: OpenDocument ISO/IEC 26300/06) முழுமையாக மதிக்கிறது. NextCloudசேர்ந்த, மேககணினி-அடிப்படையிலான பணி தளங்களுடன் இணைக்கின்ற வாடிக்கையாளர் வலைபின்னல்கள்,OpenVPN உடன் மெய்நிகர் நிறுவன வலைபின்னல்கள், தனியார் வலைபின்னல்கள்ஆகியவற்றினை ஆதரிக்கின்றது. தீம்பொருள் தாக்குதல்கள், தீங்கிழைக்கும் மென்பொருள் , ransomware ஆகியவற்றை எதிர்க்கும் திறன்மிக்கது. GNU/Linux பாதுகாப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது, பயனாளரின் பணிச்சூழலை இயக்க முறைமை செயல்பாடுகளிலிருந்து பிரிக்கிறதுஇதுGPLv3எனும் உரிமத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.