Youtube இற்கு மாற்றான கானொளி இணையதளங்கள்

1. LBRY என்பது நிறுவனம் அல்லது பிற மூன்றாம் தரப்பைக் காட்டிலும் சந்தையின் பங்கேற்பாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற கட்டணமற்ற முதன் முதலான எண்ணிம சந்தையாகும். இது Mac, Windows, Linux,Android, i Phon ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்படுகின்ற திறன்மிக்கது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும் https://lbry.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .
2.PeerTube என்பது ஒரு பரவலாக்கப்பட்ட, இலவச , திறமூல கானொளி ஒளிபரப்பு சேவைகளுக்கு மாற்றான பயன்பாடாகும். இது இணையத்தில், சுயபுரவலரான மேககணினியில்(Self-Hosted Cloud) செயல்படுகின்ற திறன்கொண்டது.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும் https://joinpeertube.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .

3. DTube என்பது முதன்முதல் Steemit, IPFSpeer-to-peer எனும் வலைபின்னல் ஆகியவற்றின் மேல் கட்டப்பட்ட மறையாக்கம் செய்து -பரவலாக்கப்பட்ட கானொளி தளமாகும். இது கட்டணமற்ற இணையதளமாகும்.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும் https://d.tube/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .
4.StoryFire என்பது Brian Spitz , Jesse Ridgway ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கதைசொல்லல் பயன்பாடாகும். இது கட்டணமற்ற இணையதளமாகும் இதுAndroid, iPhone, iPad ஆகியவற்றில் செயல்படுகின்ற திறன்மிக்கது.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும் https://storyfire.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .
5.vidlii:இந்தத் தளம் பழைய YouTube ஐப் பிரதிபலிக்கிறது .இது 2008 தலைப்பும் 2009 தேடும் பக்கங்களையும் கொண்டுள்ளது. YouTube இன் தனிப்பயனாக்கம் இல்லாமை , சமூகச் சிக்கல்கள் போன்ற  உள்ள பல சிக்கல்களை இது சரி செய்கிறது. நம்முடைய கானொளிகளை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளவும். காட்சிப்படுத்தவும் உதவுகின்றது. இது முன்பு VidBit.FreeWeb என அறியப்பட்டது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும் https://www.vidlii.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

6. Rumble என்பது  நம்முடைய உரிமையை மேலாண்மை செய்யஉதவுகின்ற கானொளி தளமாகும்.  தொழில்முறை, சமூக , வைரல்  ஆகிய அனைத்து கானொளிகளையும் புரவலராக செய்து, விநியோகம் செய்து, பணமாக்கிடலாம்.இது கட்டணமற்ற இணையதளமாகும்.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும்    https://rumble.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க
7.Dailymotion என்பது ஒரு கானொளிபகிர்வு சேவை இணையதளமாகும், இது YouTube ஐ அடுத்து உலகின் மிகப்பெரிய கானொளிஇணையதளமாகும்.இது கட்டணமற்ற  Windows Web Android iPhone Black berry ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்படுகின்ற திறன்மிக்கது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும்    https://www.dailymotion.com/inஎனும் இணையதளமுகவரிக்கு செல்க
8.BitTube என்பது ஒரு புரட்சிகரமான கானொளி இணைய தளமாகும், இதில் வெளியீட்டாளர்கள் விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் உள்ளடக்கத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.இது கட்டணமற்ற இணையதளமாகும்.

 எளிமையானது: BitTube ஒரு கிரிப்டோகரன்சி சூழல் அமைப்பை ஒருங்கிணைக் கிறது, புதிய நாணயங்கள் கானொளிகளைப் பார்க்கும் பயனர்களால் நேரடியாக உருவாக்கப்படுகின்றன. புதியவெளியீட்டின் மூலமான வருவாயின் விநியோகமானது மிகவும் நியாயமாகவும்து, வெளிப்படையாகவும்  அனைவருக்கும் சமமாகவும் கிடைக்கின்றது. மேலும், கானொளிகளை புரவலராக செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் peer-to-peer எனும் விநியோகிக்கப்பட்ட வலைபின்னலை நம்பியுள்ளது. பேச்சு சுதந்திரமும் , தணிக்கையை தவிர்க்கின்ற உரிமையையும் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும்    https://bittube.tv/எனும் இணையதளமுகவரிக்கு செல்க
9.IGTV என்பது வழக்கமான கானொளிஅனுபவத்திலிருந்து வேறுபட்டது. கானொளிகள்  பக்கவாட்டில் கருப்பு பெட்டிகள் இல்லாமல் செங்குத்தாக முழுத்திரையில் இருக்கும், எனவே நம்முடைய கைபேசியை சுழற்ற வேண்டியதில்லை. மேலும் IGTV கானொளிகள் ஒரு நிமிடத்திற்கு மட்டுப்படுத்தப் படவில்லை, அதாவது நமக்குப் பிடித்த உள்ளடக்கத்தை  பார்க்கலாம்.
 முக்கிய வசதி வாய்ப்புகள்
    •  Instagram கணக்கைப் பதிவிறக்கி உள்நுழைந்தவுடன் உடனடியாக கானொளிகளைப் காணத் தொடங்கலாம்.
    • ஏற்கனவே பின்தொடரும் படைப்பாளிகள் ,நாம் விரும்பக்கூடிய மற்றவர்களின் கானொளிகளை காணலாம்.  IGTV அனுபவம்  தனித்துவமானது.
    • கானொளிகளை காணும்போது மற்ற கானொளிகளை உலாவரவும் அல்லது குறிப்பிட்ட படைப்பாளரின் அலைவரிசையைத் தேடிடவும் செய்யலாம்.
    • கானொளிகளில் கருத்து தெரிவிக்கவும் , அவற்றை நேரடியாக நண்பர்களுக்கு அனுப்பவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும்    https://www.instagram.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க
   10. BitChute என்பது peer-to-peer என்பதன்அடிப்படையிலான கானொளி பகிர்வு தளமாகும். பொதுமக்களையும் பேச்சு சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நம்முடைய சொந்த கானொளிகளை உருவாக்கி பதிவேற்றிடலாம் இது கட்டணமற்ற இணையதளமாகும்Chrome,Firefox ஆகிய இணையஉலாவியை ஆதரிக்கின்றது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  கொள்ளவும்    https://www.bitchute.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.